Search This Blog

Sunday, July 31, 2011

தங்கம் - பத்து கிராம் 25,000 ரூபாய்! - அதிர்ச்சியான ரிப்போர்ட்


''வரும் தீபாவளிக்குள் பத்து கிராம் தங்கத்தின் விலை இருபத்தைந்தாயிரத்தை தொட்டால் ஆச்சரியமில்லை!''-இப்படி ஒரு தகவல் மார்க்கெட்டில் பரவி பரபரப்பைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. ஏற்கெனவே கடந்த ஏழு மாதங்களில் 10 கிராம் தங்கம் 2,486 ரூபாய் உயர்ந்திருக்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டில் 6,439 ரூபாய் அதிகரித்து, பலரையும் ஏக்கப் பெருமூச்சுவிட வைத்திருக்கிறது. 


இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் முடிய பண்டிகைகளும், கொண்டாட்டங்களும் அடுத்தடுத்து வரும். முதலில் ஓணம், பிறகு தீபாவளி, அதன் பிறகு பொங்கல் என வரிசையாக வரும் பண்டிகை நாட்களின்போது தங்கம் வாங்குவது ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டது. தவிர, ஆகஸ்ட் மாதத்தில் இந்தியா முழுக்கவே நிறைய திருமணங்கள் நடக்கும். நகைநட்டு இல்லாத திருமணங்களா! எனவே, அடுத்த மூன்று மாதங்களில் விலை 25,000 ரூபாயை எட்ட நிறையவே வாய்ப்பிருக்கிறது''

காரணம்

தங்கத்தின் விலை முன்பு மாதிரி ஒரே காரணத்தைக் கொண்டு தீர்மானிக்கப் படுவதாக இல்லை. அன்றைய தினத்தில் உலக அளவில் என்ன நடக்கிறதோ, அதைப் பொறுத்தே  விலையில்  ஏற்றம், இறக்கம் இருக்கிறது. அதனால் இந்த காரணத்திற்காகத்தான் விலை ஏறுகிறது என்று யாராலும் தெளிவாக யூகிக்க முடிவதில்லை.


ஒரு பொருளின் விலை தொடர்ச்சியாக எட்டு ஆண்டுகள் உயராது. ஆனால், தங்கத்தின் விலை கடந்த எட்டு ஆண்டுகளாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த நேரத்தில் டெக்னிக்கலாக ஒரு விலை இறக்கம் வரவேண்டும். ஆனால், அந்த இறக்கம் தற்போது வராததற்குக் காரணம், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரப் பிரச்னைகளே! இந்த நாடுகளில் அரசு பாண்டு பத்திரங்களில் முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளர் களுக்கு அந்தப் பணத்தை திருப்பிக் கொடுக்கும் அளவுக்கு அமெரிக்க அரசிடம் தற்போது பணம் இல்லை. இப்படி ஒரு நிலை அமெரிக்காவில் ஏற்பட்டிருப்பது இதுவே முதல் தடவையாகும். புதிதாகப் பணத்தை அச்சடித்து வெளியிட்டால் டாலரின் மதிப்பு குறையும். அப்படி வெளியிடாவிட்டால் அமெரிக்க பொருளாதாரம் நொடிந்து போகும். அப்படி நொடிந்து போனால் டாலரின் மதிப்பு வீழ்ச்சி அடையும். இதற்குப் பயந்தே பலரும் கையிலிருக்கும் டாலரை விற்று, தங்கத்தை வாங்குகிறார்கள். இதனால்தான் இப்போது தங்கத்தின் விலை ஏறுகிறது. 

பொதுவாக, உலகளவில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் தங்கத்தின் தேவை குறைவாக இருக்கும். இதனால் விலையும் இந்த மாதங்களில் குறைவாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு ஜூலை மாதத்தில்தான் தங்கத்தின் விலை புதிய உச்சத்தைத் தொட்டது! இப்படி புதுப்புது காரணங்களால் விலை உயர்ந்து, முந்தைய  காலங்களில் இருந்த நிலைமையை ஒப்பிட்டுப் பார்க்க முடியாத அளவுக்கு குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

இப்போதைய சூழ்நிலை யில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாட்டு கடன் பிரச்னை சரியாகும் என்றால், தங்கத்தின் விலை குறைய வாய்ப்பிருக்கிறது. ஆனால், இந்த பிரச்னைகள் ஓர் இரவில் சரியாகிவிடும் என்று எதிர்பார்க்க முடியாது. இன்றைய நிலையில் அமெரிக்க பிரச்னைகூட சரியாகிவிட வாய்ப்பு இருக்கிறது. ஆனால், ஐரோப்பிய கடன் பிரச்னை இப்போது தீர வாய்ப்பே இல்லை என்கிறார்கள். அமெரிக்க பிரச்னை சரியாகி டாலரின் மதிப்பு அதிகரித்து, ரூபாய் மதிப்பு குறையுமெனில் தங்கம் விலை குறைய வாய்ப்பி ருக்கிறது. அப்படி குறைந்தால் பத்து கிராம் தங்கத்தின் விலை 21,500 ரூபாய்க்குப் போக வாய்ப்பிருக்கிறது. ஆனால், பொருளாதாரப் பிரச்னை தொடர்ந்து இருந்து, நிலைமை இன்னும் மோசமாகும் பட்சத்தில் விலை அதிகரித்து 24,500 ரூபாய்க்கு மேல் போக வாய்ப்பிருக்கிறது.


ஞானசேகர் 
காம்டிரெண்ட்ஸ் ரிஸ்க் மேனேஜ்மென்ட் சர்வீஸஸ்
மும்பை

Saturday, July 30, 2011

நில மோசடி சில தகவல்கள்..

5 கோடிக்கு 50 லட்சம் தான்!

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே வெங்கடசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிவனாண்டி - பாப்பா தம்பதிகள். இவர்களுக்கு நெடுஞ்சாலையை ஒட்டினாற்போல இருந்த விவசாய நிலத்தை விற்று விடுவது என்று முடிவெடுத்தார்கள். ஐந்து கோடி மதிப்புள்ள அந்த நிலத்துக்கு நான்கு கோடி வரை கேட்டுப் பார்த்தனர் பலர். இந்த நிலையில்தான் மதுரை தி.மு.க. புள்ளியின் ஆட்கள், தம்பதிகளைச் சந்தித்தனர். மரியாதையா நிலத்தை எங்களுக்கு விற்றுவிடு," என்று மிரட்டினர். அந்த வயதான தம்பதிகளுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.

எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் அந்தப் புள்ளியின் ஆட்கள் பயமுறுத்தி வெறும் 50 லட்ச ரூபாய்க்கு நிலத்தை கிரயம் செய்துவிட்டார்கள். பாவம் அந்தத் தம்பதிகள். லோக்கல் போலீஸ், மதுரை என்று அலைந்தும் பலனில்லை. அவங்ககிட்ட ஏன் மோதறீங்க?" என்று ஆளாளுக்குக் கழன்று கொண்டார்கள். ஆட்சி மாறியது. நில அபகரிப்புப் புகார்கள் பெறுகிறது போலீஸ் என்று கேள்விப்பட்ட சிவனாண்டி - பாப்பா தம்பதிகள் மதுரை காவல் துறையில் புகார் கொடுத்தார்கள். புகாரை விசாரித்த காவல்துறை, அழகிரியின் நெருங்கிய தோழர்களான மாவட்டச் செயலாளர்கள் தளபதி, பொட்டு சுரேஷ், எஸ்.ஆர்.கோபி ஆகியோரை, கொத்தாகக் கைது செய்து பாளையங்கோட்டையில் கம்பி எண்ண வைத்திருக்கிறது.

இதே புகாரின் பேரில் மதுரையில் தி.மு.க. பிரமுகர் அட்டாக் பாண்டியும் கைதாகியிருக்கிறார். சேலத்தில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், நாமக்கல்லில் முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. ராமசாமி ஆகியோர் நில அபகரிப்புப் புகார்களில் சிக்கியுள்ளனர். தவிர, தமிழகமெங்கும் சுமார் 2500 புகார்கள் வந்திருக்கின்றன. இதில் 200 புகார்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுவிட்டது.  கீழ் மட்டங்களில் உள்ள தி.மு.க. பிரமுகர்கள் ரியல் எஸ்டேட் பிரமுகர்களோடு சேர்ந்து கொண்டு இந்த நில அபகரிப்புகளில் ஈடுபட்டனர்," என்கிறது காவல் துறை.

தேர்தல் பிரசாரத்துக்கு முன்பே, ஜெயலலிதாவுக்கு இது தொடர்பாகக் கடிதங்கள் வந்தன. விசாரித்த போது தி.மு.க.வினர் மிக பரந்துபட்ட அளவில் அபகரிப்பில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. எனவேதான் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில், ‘கருணாநிதி குடும்பம், மற்றும் முன்னாள் தி.மு.க. அமைச்சர்களின் கூலிப்படையினர், மக்களிடம் அநியாயமாக மிரட்டி பறிக்கப்பட்ட நிலங்கள், சொத்துக்கள் மீட்கப்படும்,’ என்று சொல்லப்பட்டிருந்தது.ஒரு நிலத்தையோ வீட்டையோ அடாவடியாக ஆக்கிரமித்துக் கொள்வது, அடியாட்களைக் கொண்டு காலி செய்து மடக்கிப் போடுவது, போலி ஆவணங்களைத் தயாரித்து உண்மையான உரிமையாளருக்குத் தெரியாமல் உரிமையை மாற்றுவது, தங்களுக்கு வேண்டிய சொத்தை மிரட்டி, அடிமாட்டு விலைக்கு வாங்குவது என நான்குவிதமான குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் மீது புகார் கொடுக்கிறார்கள்.

பெரும்பாலும் மூத்த குடிமக்களும், விதவைகளுமே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்," என்கிறார் சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. ஜார்ஜ்.தி.மு.க. பிரமுகர்கள், காவல் துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்று கேள்விப்பட்டதுமே புகார் கொடுத்தவரோடு பேச்சுவார்த்தை நடத்தி கணக்கை செட்டில் செய்து வழக்கிலிருந்து தப்பிப்பதும் நடக்கிறது. சென்னையை ஒட்டியுள்ள தாம்பரத்தில் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்புக்காக 35 லட்சம் முன்தொகையாகக் கொடுத்தார் ஒரு பெண். ஆனால் பில்டர், குடியிருப்பையும் கொடுக்கவில்லை; பணத்தையும் கொடுக்கவில்லை. அந்தப் பெண் பரங்கிமலை ஐ.ஜி. அலுவலகத்தில் புகார் செய்ய, விஷயத்தைக் கேள்விப்பட்ட அந்த பில்டர், சில மணி நேரத்துக்குள்ளேயே பணத்தை அந்தப் பெண்ணுக்குக் கொடுத்து விட்டார்.இந்த நில அபகரிப்புப் புகார்கள் வண்டி, வண்டியாகக் கிளம்ப, தமிழகமெங்கும் கீழ்மட்ட தி.மு.க. பிரமுகர்கள் மிரண்டு போயிருக்கிறார்கள். 

இதில் மற்றொரு மோசடியும் நடக்கிறது. எங்களிடம் அப்போதிருந்த மார்க்கெட் ரேட்டுக்கு நியாயமாக விற்ற ஒருவர், இப்போது அதன் மதிப்பு ஏறியிருக்கிறது என்று தெரிந்தும், ‘ஏமாற்றிவிட்டார்கள்’ என்று புகார் கொடுக்கிறார்கள். இதைக் கீழ்நிலையில் உள்ள சில காவல் துறை அதிகாரிகளும் தங்களுக்கு ஆதாயம் கிடைக்கும் வகையில் கட்டைப் பஞ்சாயத்தில் இறங்குகிறார்கள்," என்று சொல்கிறார் சென்னை மாநகராட்சி கவுன்ஸிலர் ஒருவர். கொடுக்கப்பட்ட புகார்கள் எல்லாம் வழக்குகளாகப் பதிவு செய்யப்படுவதில்லை. புகார்களை விசாரிக்கிறோம் என்று புறப்படும் அடிமட்ட காவல்துறை அதிகாரிகள் அவர்கள் பங்குக்கு கொஞ்சம் ஆடுகிறார்கள்," என்கின்றனர் தி.மு.க.வினர்.இந்தச் சூழலில் புகார்களைப் பற்றி விசாரிக்க சிறப்பு காவல் பிரிவுகளும் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதி மன்றங்களும் அமைக்க இருக்கிறார்கள். குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏழாண்டு வரை தண்டனையாம்.  

உள்ளாட்சித் தேர்தலுக்குள் கட்சியின் முதுகெலும்பாக உள்ள லோக்கல் பிரமுகர்களை ‘உள்ளே போடும் வகையில் அரசு செயல்படுகிறது,’ என்று புலம்புகிறார்கள் தி.மு.க. பிரமுகர்கள். அதனால்தான் உள்துறைச் செயலாளர், மற்றும் கவர்னரிடம் புகார். தொடர் போராட்டம் என்றெல்லாம் அறிவித்திருக்கிறது தி.மு.க. தான் அபகரித்த சிறுதாவூர் நிலத்தை ஜெ. திருப்பிக் கொடுக்கட்டும்," என்று சொல்கிறார் கருணாநிதி. அபகரிப்புப் புகார்களுக்கு அ.தி.மு.க. வினரும் தப்பவில்லை. அமைச்சர் அக்ரி. கிருஷ்ண மூர்த்தி, எம்.எல்.ஏ. கருப்பையா மீதும் ‘எந்தப் பாரபட்சமும் இல்லாமல் நடவடிக்கை வேண்டும்,’ என்று நடுநிலையாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். 

 

நில அபகரிப்பு வழக்குகளில் சிக்கிக் கொண்ட அழகிரியின் வலது கையான பொட்டு சுரேஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்திருக்கிறது. தொடர்ச்சியாக, மதுரை அட்டாக் பாண்டி, எஸ்.ஆர்.கோபி, சேலம் வீரபாண்டி ஆறுமுகம், அவரது உறவினர் பாரப்பட்டி சுரேஷ் ஆகியோர் தவிர பல மாவட்டங்களில் முக்கிய தி.மு.க. பிரமுகர்களை உள்ளே குண்டாஸில் போட ஏற்பாடு நடக்கிறதாம். நிலம் விவகாரம் என்பது சிவில் மேட்டர் என்றும் அதை கிரிமினலாக மாற்றுவது நீதிமன்றம் முன் நிற்காது என்றும் சொல்கிறது தி.மு.க. தரப்பு. முன்பெல்லாம் மூன்று வழக்குகளுக்கு மேல் ஒருவர் மீது பதிவு செய்தால் குண்டாஸில் போடலாம். இப்போதெல்லாம் ஒரு வழக்கு போடப்பட்டால் கூட குண்டாஸில் போடலாமாம்.

- ப்ரியன் 

 

Friday, July 29, 2011

அறிவியல் - காரணங்கள்

ஒரு நாணயத்தை தண்ணீரில் போட்டவுடன், அது மூழ்கிவிடுகிறது. ஆனால், பிரம்மாண்டமான கப்பல் மட்டும் எப்படி மிதக்கிறது?


 பார்ப்பதற்கு நீரின்மேல் மிதப்பதாகத் தெரிந்தாலும், கப்பல் ஓரளவு நீரில் அமிழ்ந்துதான் இருக்கும். அதாவது, கப்பலின் எடைக்குச் சமமான நீர் இடம்பெயர்ந்திருக்கும். வெளியே சூழ்ந்துள்ள நீரின் அழுத்தம், எடை காரணமாக கப்பல் நீரில் உண்டாக்கும் அழுத்தம் இரண்டும் சமமாக அமைவதாக கப்பல்கள் கட்டப்படுகின்றன. அதாவது, தொட்டியில் குளித்துக் கொண்டிருக்கும்போது, ஆர்க்கிமிடிஸ் கண்டறிந்த தத்துவம்தான் இதன் அடிப்படை.

காசநோயைக் கண்டுபிடித்தவர் யார்?


ராபர்ட் கோக் (Robert Kock) என்பவர்தான்,Tuberclosis bacillus என்னும் நுண்ணுயிரியைக் கண்டறிந்தார். காசநோய் ஏற்படுவதற்குக் காரணம் இந்தக் கிருமிதான். ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த இவர், மருத்துவர் மற்றும் விஞ்ஞானியும்கூட. இவர் 1877ல் பாசில்லஸ் ஆந்த்ராசிஸ், 1882ல் மைக்கோபாக்டீரியம் என்ற காசநோயை உருவாக்கும் நுண்ணுயிர் மற்றும் லைபீரியோ காலரா எனும் நோயை உருவாக்கும் நுண்ணுயிர் ஆகியவற்றைக் கண்டறிந்தவர். அதற்காக இவருக்கு நோபல் பரிசும் வழங்கப்பட்டது.

பார்வையற்றோர் கனவு காண்பது உண்டா?

“பிறவியிலேயே பார்வையற்றவர்கள் கனவு காண்பதில்லை. ஏனென்றால், அவர்களுக்கு எந்தப் பொருளின் வடிவமும் தெரிந்திருக்காது. நிறங்கள், காட்சிகள் பற்றிய பதிவுகள் எதுவுமே அவர்களுக்குள் இருக்காது. அதனால், அவர்கள் கனவு காண்பதில்லை. மாறாக, ஏழு வயதுக்கு மேல் பார்வையில்லாமல் போனவர்கள் கனவு காண்பார்கள். அவர்களுக்குள் வடிவங்கள், நிறங்கள் என்று பலப்பல பதிவுகள் ஏற்பட்டிருக்கும். அதனால், இது சாத்தியம்” என்கிறார் கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தின் சைக்காலஜி பேராசிரியர் வில்லியம் டார்ஹாஃப்.

சிலருக்கு சென்ட் போன்ற வாசனையை நுகர நேரிட்டால், தலைவலிக்கிறது என்கிறார்களே. அது ஏன்?

 அந்த மணம், வாசனை நரம்புகளைத் தூண்டி விரியச் செய்கிறது. அதனால், அருகில் உள்ள ரத்தக் குழாய்களும் அழுத்தத்துக்கு உள்ளாகின்றன. தலை வலி ஏற்படுவதன் காரணம் இதுதான். அந்த இடத்திலிருந்து விலகிப் போய் விட்டால், தலைவலியும் நீங்கிவிடும்.

பிஷப் ஓ என்றொரு பறவை உண்டா?


Bishop's 'o' o எனப்படும் இந்தப் பறவையை Moloka'i 'o' o என்றும் சொல்வார்கள். கழுத்து, வயிறு மற்றும் வால்பகுதிகள் மஞ்சள் தீற்றியது மாதிரி காணப்படும் அரிய பறவை இது. IUCN நிறுவனம் அறிவித்துள்ள அரியவகைப் பறவைகளில் இதுவும் ஒன்று. இன்று படங்களாக, காட்சிப்பொருளாக மட்டுமே காணப்படுகின்றன. 1981ஆம் ஆண்டுக்குப் பின், இந்தப் பறவையைப் பார்த்ததாகப் பதிவில்லை. அதுதான் வருத்தமான விஷயம்!


Thursday, July 28, 2011

அடம் பிடிக்கும் முதல்வர் (அம்மா ), அடங்க மறுத்த முன்னால் முதல்வர் ( தாத்தா)

குழந்தைகள் அடம்பிடிக்கலாம்! அம்மா..?

 டந்த தி.மு.க. ஆட்சியில் சமச்சீர்க் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டபோது,  'ஆசிரியர்-மாணவர் விகிதம், பள்ளிக் கட்டடம், உள்கட்ட மைப்பு வசதிகள் உள்ளிட்ட எல்லாமே சமமாக இருக்க வேண்டும். அப்போதுதான் அது சமச்சீர்க் கல்வி. இதைப் பொதுப் பாடத்திட்டம் என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர, சமச்சீர்க் கல்வி என்று சொல்லக் கூடாது. அனைத்து வசதிகளை யும் அரசு செய்துவிட்டு, முழுமையான சமச்சீர்க் கல்வியை அமல்படுத்த வேண்டும்’ என்று தொடக்கத்தில் கல்வியாளர்கள் குரல் எழுப்பினர். அதன் பின்னர், 'சமச்சீர்க் கல்விக்கான முதல் படி’ என்ற வகையில், இந்தத் திட்டத்துக்குத் தங்கள் ஆதரவை வழங்கினர்.ஆனால், இப்போதைய அ.தி.மு.க. அரசு இந்த முதல் படியையே நிறுத்திவிட்ட காரணத்தால் சமச்சீர்க் கல்விக்கான மற்ற வசதிகளையும் கேட்டு கோரிக்கை வைத்தால், அவையெல்லாம் நிறைவேறும் சாத்தியமே இல்லை என்ற கசக்கும் உண்மை தெளிவா கத் தெரிகிறது. சமச்சீர்க் கல்வியை நிறுத்தி வைக்கும் சட்டத் திருத்தம் முதல் சுப்ரீம் கோர்ட் அப்பீல் வரை தொடர்ச்சியாக அ.தி.மு.க. அரசு மாணவர்களுக்குத் துரோகம் இழைத்தே வந்திருக்கிறது.


ஜெயலலிதாவின் பிடிவாதக் குணம் மாறவே இல்லை என்பதற்குச் சாட்சி இந்த சமச்சீர்க் கல்வி விவகாரம். 'அவர் மாறிவிட்டார்; திருந்திவிட்டார்’ என்று கட்டியம் கூறியவர்களின் முகத்தில் கரியைப் பூசிவிட்டார் ஜெயலலிதா.  டாக்டர் ராமதாஸ், திருமாவளவன், வைகோ, நெடுமாறன், ஜி.ராமகிருஷ்ணன், தா.பாண்டியன், கி.வீரமணி போன்ற தலைவர்களும், இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உட்பட பல அமைப்புகளும் கேட்டுக்கொண்ட பின்னும், மேல்முறையீட்டுக்குச் சென்றது தமிழக அரசு. ஆனால், உச்ச நீதிமன்றமோ தமிழக அரசின் முகத்தில் கரி பூசிவிட்டது. அதே சமயத்தில், தி.மு.க-வினர் மீது நில அபகரிப்பு வழக்குகள் போடப்படுவதற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து ஆர்ப்பாட்டம் அறிவித்த தி.மு.க., மாணவர் நலனில் அக்கறை இருந்தால், தனது ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஒரு நல்ல திட்டத் துக்குச் சமாதி கட்டப்படுவதை எதிர்த்துப் போராட்டம் அறிவித்து இருக்க வேண்டாமா? 

இதுநாள் வரை இது குறித்து ஆசிரியர் சங்கங்கள் காத்து வந்த மௌனத்தைக் கலைத்து, சமச்சீர்க் கல்வியை வலியுறுத்தி யும், முத்துக்குமரன் கமிட்டியின் 109 பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கோரியும் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம் அறிவித்தது. ஆகஸ்ட் 2 வரை புத்தகங்கள் வழங்க காலக்கெடுவை நீட்டித்து இருக்கிறது உச்ச நீதிமன்றம். ஆனால், இன்னமும் ஒரு பள்ளியில்கூட பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டதாகத் தகவல் இல்லை. இது குறித்து ஆசிரியர்களிடம் பேசியபோது, ''புத்தகம் எப்போது வரும் என்று எதுவுமே தெரியவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்கவும்கூட எங்களுக்கு அச்சமாக இருக்கிறது. அரசுக்கு எதிரான ஆள் என்ற முத்திரை விழுந்துவிட்டால், டிரான்ஸ்ஃபர் மாதிரி ஏதாவது நடவடிக்கை எடுக்குமோ அரசு என்கிற பயம் எல்லோருக்கும் இருக்கிறது. சமச்சீர்க் கல்வி பற்றி மாணவர்களிடம் பேசக் கூடாது என்று அரசு சுற்றறிக்கை அனுப்பி இருப்பதால், நீதிமன்ற உத்தரவை மாணவர்களிடமோ மற்றவர்களிடமோ சந்தோஷமாகப் பகிர்ந்து கொள்ளக்கூட முடியவில்லை. ஆசிரியர்கள் மத்தியில் அறிவிக்கப்படாத ஒரு எமர்ஜென்சி காலச் சூழல் நிலவுகிறது. ஆட்சியாளர்களின் விருப்பங்களையும் கொள்கை களையும் பள்ளிக்கூடத்தில் பின்பற்றும் இழிநிலைக்கு தமிழ்நாடு தள்ளப்பட்டு விட்டது'' என்று வேதனைப்பட்டார் ஓர் ஆசிரியர்.

கூடுமானவரையில் புத்தகங்கள் வழங்குவதைக் கால தாமதம் செய்கிறது அரசு. உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி இந்நேரம் அனைத்துப் புத்தகங்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், ஆகஸ்ட் 2 வரை புத்தகங்கள் வழங்க உச்ச நீதிமன்றம் காலக்கெடுவை நீட்டித்து உள்ளது. ஏன் அரசு இன்னும் புத்தகங்கள் வழங்கும் பணியைத் தொடங்கவில்லை?''இணையத்தில் இருந்து சமச்சீர்க் கல்வி புத்தகங்களை முன்பே பதிவிறக்கம் செய்து வைத்து இருக்கிறோம். ஆனாலும், உத்தரவு வரும் வரை பாடம் நடத்த முடியாது என்பதால், குழப்பத்துடன் காத்திருக்கிறோம்'' என்கிறார்கள் சில ஆசிரியர்கள். இதற்கிடையே ஏற்கெனவே அச்சிடக் கொடுத்த பழைய பாடப் புத்தகங்களுக்கான ஆர்டரை அரசு இன்னும் ரத்து செய்யவில்லை. அச்சடிக்கும் வேலைகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன.www.textbooksonline.tn.nic.in என்கிற அரசு இணையதளத்தில் இருந்த சமச்சீர்க் கல்வி நூல்களை இப்போது காணவில்லை. ஏற்கெனவே சமச்சீர்க் கல்வி அமலில் இருக்கும் 1 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கான நூல்களையும் சேர்த்து நீக்கி இருக்கிறது அரசு. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, சமச்சீர்க் கல்விக்கு உச்ச நீதிமன்றத் தின் இறுதித் தீர்ப்பில் தடை வாங்கி விடலாம் என்று அரசு எதிர்பார்க்கிறதோ என்பது ஆசிரியர்களின் அச்சமாக இருக் கிறது. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், ''உடனடியாகப் புத்தகங்களை வழங்காவிட்டால், இது நாள் வரை பொறுமையாக இருந்ததுபோல இனியும் இருக்க மாட்டோம்'' என்று அரசை எச்சரித்து உள்ளது. விருத்தாசலம் அருகே பள்ளி மாணவர்கள் அரசைக் கண்டித்து வகுப்புகளைப் புறக் கணித்துப் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். உச்சகட்டமாக, நீதிமன்ற உத்தரவை அவமதித்த தாக தமிழக அரசுக்கு வக்கீல் நோட்டீஸும் அனுப்பப்பட்டு உள்ளது.

இந்தப் பிரச்னைகள் ஒருபுறம் இருக்க... தமிழக அரசு செய்த இன்னொரு காரியமும் மிகுந்த கண்டனத்துக்கு உரியது. சென்னை உயர் நீதிமன்ற விசாரணையின் போது நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை தவிர, ஒவ்வொரு உறுப்பினரும் தனித் தனியே கொடுத்த கருத்துகளையும் சமர்ப் பிக்க வேண்டும் என்று ஆணை யிட்டது நீதிமன்றம். அதன்படி சமர்ப்பிக்கப்பட்ட தனித் தனி அறிக்கைகளையும், இறுதி அறிக்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தனர் நீதிபதிகள்.'நிபுணர் குழு அறிக்கை, ஒவ்வொரு உறுப்பினரின் கருத்தையும் பிரதிபலிக்க வில்லை. சமச்சீர்ப் பாடத்தில் பல திருத் தங்கள் செய்யப்பட வேண்டும் என்றும், அதைப் படிப்படியாகச் செய்ய வேண்டும் என்றும் நிபுணர் குழுவில் ஒரு சிலர் கூறி உள்ளனர். ஆனாலும், சமச்சீர்க் கல்வியை முற்றிலும் நிராகரிக்க வேண்டும் என்று அவர்கள் ஒட்டுமொத்தமாகக் கருதவில்லை. அதோடு, பழைய 2004-ம் ஆண்டு பாடத் திட்டங்களுக்குச் செல்ல வேண்டும் என்றும் அவர்கள் கூறவில்லை. ஆனால், அறிக் கையோ தமிழக அரசு எடுத்துள்ள நிலையைத் தான் பிரதிபலிக்கிறது. அதுமட்டுமல்ல, வரைவுஅறிக்கை முதல் இறுதி அறிக்கை வரை பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் சபீதாதான் முடிவு எடுத்து உள்ளார். சமச்சீர்க் கல்வித் திட்டம் சிறப்பானது என்றும், அது தேவையானது என்றும் நிபுணர் குழுவின் பெண் உறுப்பினர் ஒருவர் கூறியிருக்கிறார். அவரது முழு கருத்தும் எங்களிடம் தாக்கல் செய்யப்பட்ட இறுதி அறிக்கையில் இடம்பெறவில்லை. சமச்சீர்க் கல்வியின் ஆக்கபூர்வமான விஷயங்களையும் அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர். ஆனால், இவையெல்லாம் இல்லா மல் அரசின் கருத்து மட்டுமே இறுதி அறிக்கையாக வந்திருக்கிறது'' என்று தனது 81 பக்க தீர்ப்பில் கூறியிருக்கிறது நீதிமன்றம்.

ஆக, நிபுணர் குழு, உறுப்பினர்களின் கருத்துகளைப் பிரதிபலிக்காமல், தன் இஷ்டத்துக்கு ஓர் அறிக்கையைத் தயார் செய்திருக்கிறது அரசு. இது மக்களையும் நீதிமன்றத்தையுமேகூட ஏமாற்றும் வேலை. நேர்மையற்ற இந்தச் செயலை நீதிமன்றம் மன்னித்தாலும், மக்கள் மன்றம் மன்னிக்கப் போவது இல்லை!


முடிவுக்கு வராத மு.க. கலாட்டா!


ருணாநிதிக்கு அடுத்த இடம் அண்ணன் அழகிரிக்கா... தம்பி ஸ்டாலினுக்கா என்ற கலாட்டா வுக்கு இன்று வயது 15. கோவையில் கடந்த வாரம் நடந்த பொதுக் குழுவில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்த்தான் தி.மு.க. தொண்டன். ஆனால், மீண்டும் கால் புள்ளி, அரைப் புள்ளிவைத்து வந்த கருணாநிதி, மீண்டும் முக்கால் புள்ளிதான் வைத்தார்!

'ஸ்டாலினை முதல்வர் ஆக்குங்கள். கலைஞர் கட்சித் தலைவராக இருந்து வழி நடத்தட்டும்’ என்று ஸ்டாலின் ஆதரவாளர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாகவே குரல் கொடுத்து வந்தார்கள். 'ஸ்டாலினுக்கு மிக முக்கியமான பொறுப்பு காத்திருக் கிறது’ என்று நெல்லை இளைஞர் அணி மாநாட்டுக்கு முன் வாக்குறுதி கொடுத்தார் கருணாநிதி. பொதுச் செயலாளர் பதவி தனக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் ஸ்டாலின். ஆனால், பேராசிரியர் அன்பழகனைக் காயப்படுத்திய காரணத்தால், ஆற்காடு வீராசாமியிடம் இருந்து பறிக்கப்பட்ட பொருளாளர் பதவிதான் ஸ்டாலின் வசமானது. தம்பிக்கு சாக்லேட் கொடுக்கும்போது எல்லாம் அண்ணனுக்கு மிட்டாய் கொடுக்க வேண்டும் அல்லவா? தென் மண்டலச் செயலாளர் ஆனார் அழகிரி. அவருக்கு மத்திய அமைச்சர் பதவி தரப்பட்டதும், ஸ்டாலினுக்குத் துணை முதல்வர் பதவி தரப்பட்டது. அடுத்து, ஸ்டாலினும் அழகிரியும் அடைய இரண்டே இரண்டு நாற்காலிகள்தான் இருக்கின்றன. அது, கருணாநிதி உட்கார்ந்திருக்கும் தலைவர் பதவி. அன்பழகன் அமர்ந்திருக்கும் பொதுச் செயலாளர் பொறுப்பு. இந்த இரண்டைக் குறிவைத்த மியூஸிக்கல் சேர் விளையாட்டில், ஸ்டாலினும் அழகிரியும் மட்டும் சுற்றி வர... மற்ற நிர்வாகிகள் வேடிக்கை பார்ப்பதற்குப் பெயர்தான் தி.மு.க-வின் செயற் குழு, பொதுக் குழுவாக மாறிப்போனது! 


கோவையிலும் அதேதான்.  வழக்கம்போல, நாற்காலியை கருணாநிதியும் அன்பழகனுமே மடக்கி எடுத்துச் சென்றுவிட்டார் கள்! செயல் தலைவர், துணைத் தலைவர், இணைத் தலைவர் என்ற பெயரில் ஏதாவது ஒரு பதவியை ஸ்டாலினுக்குத் தந்தாக வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தார்கள். ஒரு மாதத்துக்கு முன்னால் நடந்த இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய பலரும் 'தளபதிதான் தலைவராக வேண்டும்’ என்று பேசினார்கள். 'இது எல்லாம் பொதுக் குழுவில் பேச வேண்டிய விஷயம்’ என்று ஸ்டாலின் அப்போது சமாதானம் சொன்னார். அதை கருணாநிதியிடம் போட்டுக் கொடுத்த நல்ல மனிதர் ஒருவர், 'தன்னைத் தலைவராக்கச் சொல்லி பொதுக் குழுவில் பேச ஸ்டாலின் தூண்டிவிட்டார்’ என்று சொல்ல... கருணாநிதிக்கு முகம் சிவக்க ஆரம்பித்தது. 'நீ ஒருத்தன்தான் எனக்கு மனக் கஷ்டம் கொடுக்காதவன் என்று நினைத்தேன். ஆனால், நீயே இப்படிப் பேசலாமா?’ என்று கருணாநிதி கேட்க... ஸ்டாலின் அதற்குச் சமாதானம் சொல்ல... தந்தை, மகன் இடையே 10 நாட்கள் சரியான பேச்சுவார்த்தைகூட இல்லை.'ஸ்டாலினை இப்போதே தலைவராக அறிவித்தால்தான், பின்னால் குழப்பம் இல்லாமல் இருக்கும்’ என்று சிலர் தூண்டி னார்கள். அதனால் செயல் தலைவர் அந்தஸ்துகூட அவருக்குத் தரப்படலாம் என்று இளைஞர் அணி ஆட்கள் சொல்ல ஆரம்பித்தனர். இது மதுரையில் இருந்த அழகிரிக்கு மன வருத்தம் கொடுத்தது. 'பொதுக் குழுவுக்கு நானும் வர மாட்டேன். நீங்களும் போக வேண்டாம்’ என்று அழகிரி உத்தரவு போட்டு இருக்கிறார் என்ற செய்தியைக் கிளப்பியதே மதுரை நிர்வாகிகள்தான். ஸ்டாலினுக்கு மீண்டும் உயர்வு என்பதைத் தாங்கிக்கொள்ள முடியாத இன்னொரு நபர், ராஜாத்தி அம்மாள். மகள் கனிமொழிக்குப் பிடிக்காத ஸ்டாலின் கட்சித் தலைவர் ஆனால், கனிமொழியின் எதிர்காலத்தையே இது கேள்விக் குறியாக்கும் என்று நினைத்தார். இந்த கலாட்டாவில் அழகிரியும் ராஜாத்தி யும் ஒன்றாக, ஸ்டாலினுக்கான நாற்காலி தட்டிப் பறிக்கப்பட்டது.

 'நீங்க பொதுக் குழுவுக்கு வராமல் போனால், ஸ்டாலினுக்கு அதுவே வசதியாகப் போய்விடும்!’ என்று சென்னையில் இருந்து அழகிரிக்கு ஒரு தகவல் சொல்லப்பட்டது. அதன் பிறகே உஷாரான மனிதர், கோவை வந்து இறங்கினார். கனிமொழி கைதானது முதல் டெல்லியிலேயே தங்கிவிட்ட ராஜாத்தி அம்மாளும் கோவை வந்து கருணாநிதியின் நாற்காலிக்குப் பின்னால் இடம் பிடித்தார். ஸ்டாலின் நினைப்பு மொத்தமாகப் பணால் ஆனது.''நான் உனக்கு அப்பாவாக மட்டுமா இருக்கிறேன்? நான் உன்னுடைய கட்சியின் தலைவராக இருக்கிறேன். நீ கட்சியில் உறுப்பினராக இருக்கிறாய். அதனால்தான் மாநகராட்சி மன்றத்திலே உன்னை மேயராக்கி, உனக்கு தங்கச் சங்கிலி அணிவித்து, மேயருக்கு உரிய உடையைப் பூட்டி அழகு பார்த்தேன். இது எனக்குப் புரிகிறது. ஸ்டாலினுக்குப் புரிகிறது. சில நண்பர்களுக்குத்தான் புரியவில்லை!'' என்று கருணாநிதி சமாதானம் சொல்லும்போது, பொதுக் குழுவில் இருந்த ஸ்டாலின் முகம் கடுப்பால் சிவந்தது. பின்னால் உட்கார்ந்து இருந்த ராஜாத்தியே... கவலை மறந்து சிரித்துவிட்டார். ஆனால், இதைப் பார்க்க அழகிரி கோவையில் இல்லை. மதியத்துக்கு மேல் மதுரைக்கு எஸ்கேப் ஆகிவிட்டார்.

''ஸ்டாலினுக்குத் தலைமைப் பதவியை விட்டுத்தர கலைஞர் தயாராக இல்லை. இதை அவரால் வெளிப்படையாகச் சொல்லவும் முடியவில்லை. 'உனக்குக் கொடுத்தால் அழகிரியும் கேட் பான்’ என்று காரணம் சொல்வது; 'உன்னைத் தலைவராக ஆக்கி னால், ராஜாத்திக்குப் பிடிக்காது’ என்று சொல்வது; இப்படிப் பல காரணங்களை அவரே சொல்லித் தட்டிக் கழித்துக்கொண்டு இருக்கிறார். கலைஞர், தனக்குப் பிறகு இன்னார்தான் தலைவர் என்பதை உடனே அறிவித்தாக வேண்டும். இதில்தாமதம் செய்யச் செய்ய... கட்சியின் கட்டுக்கோப்பு சிதைந்துவிடும். இப்போதே கட்சியில் யாரும் யார் பேச்சையும் கேட்பது இல்லை. இது இன்னும் சில மாதங்களுக்குத் தொடர்ந்தால், உள்ளாட்சித் தேர்தலின்போதே பல ஊர்களில் பிரளயம் வெடிக்கும்!'' என்று சொல்லும் முன்னாள் அமைச்சர் ஒருவர்...''ஸ்டாலின் முழுமையான தகுதியை அடைந்துவிட்டார் என்று சொல்லவில்லை. ஆனால், கலைஞருக்கு அடுத்து தலைவர்ஆகும் தகுதி அவருக்கு மட்டும்தான் இருக்கிறது. அதையும் புறக்கணித்தால், தலைமை அற்ற கட்சியாக கழகம் மாறிவிடும்!'' என்றார். ஆனால், இதனை அழகிரி ஆட்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.  'ஸ்டாலினுக்கு செயல் தலைவர் பதவி கொடுத்தால், நீங்கள் கட்சியைவிட்டு விலகுங்கள்!’ என்று அழகிரிக்கு ஆலோசனைகள் சொல்லவும் அவர்கள் தயங்கவில்லை. இந்த சைக்கிள் கேப்பில் கனிமொழிக்கு தலைமைக்கான தகுதி இல்லையா என்று ராஜாத்தி தூண்டுதலுடன் இன்னொரு அணி களத்தில் குதித்து உள்ளது.


''விரைவில் கனிமொழி சிறையில் இருந்து வெளியில் வருவார். கலைஞரின் எழுத்து, பேச்சுத் திறமைகொண்ட வாரிசு இவர் மட்டுமே என்பதை நிரூபிப்பார்.  சிறையில் இருந்தபோது கிடைத்த அனுதாபங்களை மூலதனமாகக்கொண்டு அவரைத் தலைவர் ஆக்கலாம்'' என்கிறார்கள் ராஜாத்தி ஆதரவாளர்கள். நெல்லை மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் பேச்சாளர் வாகை முத்தழகன் இதற்கான ஆரம்பத்தைச் செய்துவிட்டார். சில மாவட்டச் செயலாளர்களின் ஆதரவை இதை நோக்கித் திருப்பும் காரியத்தையும் ராஜாத்தி செய்து வருவதாகச் சொல்கிறார்கள்.உள்கட்சிக் கலவரங்களுக்கும் தலைமைக்கான போட்டிக்கும் மத்தியில் ரத்தம் சிந்திய சம்பவங்கள் தி.மு.க-வில் ஏராளமாக நடந்து உள்ளன. இந்த கடந்த காலத் தவறுகளில் இருந்து ஸ்டாலின், அழகிரி, கனிமொழி ஆகிய மூவரும் எந்தப் பாடத்தையும் படிக்கவில்லை என்பது அவர்களது தவறு அல்ல. அதை சொல்லித் தராத கருணாநிதியின் தவறுதான்!

நன்றி - விகடன் 


Wednesday, July 27, 2011

நான்காவது 'ஜி' ப.சிதம்பரமா? ப.சிதம்பரமா? ப.சிதம்பரமா?

ஸ்பெக்ட்ரம் புயலில் காங்கிரஸ்

தொலைத் தொடர்புத் துறை​யில் இரண்டாம் தலை​முறை,மூன்றாம் தலை​முறை எனப்படும் தொழில்​நுட்பத்தைத்தான் 2ஜி, 3ஜி என்​கிறார்கள். வரும் அக்டோபர் மாதம் 4ஜி தொழில்நுட்பம் அறிமுகமாகிறது.இதை வைத்தே, டெல்லியில் தமிழக அரசியல்​வாதிகளைக் கிண்டல் செய்கிறார்கள். ஏற்கெனவே ராசாஜி, கனிமொழிஜி, தயாநிதிஜி என்று மூன்று 'ஜி’-க்கள் ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கிப் பதவியை இழந்துவிட, விரைவில் நான்காவது 'ஜி’ சிக்குகிறார் என்கிறார்கள். அவர், ப.சிதம்பரம்ஜி.

4ஜி எனப்படும் நான்காம் தலை​முறைத் தொழில்நுட்பத்தில் நான்கு விதமான வசதிகள் இருக்கும்.  என்ன பொருத்த​மோ... ப.சிதம்பரம் மீதும் நான்கு விதமான குற்றச்சாட்டுகள். சிதம்பரம் மீது முதன் முதலில் சந்தேகம் எழுப்பியவர் சுப்ரமணியன் சுவாமி. இதைத் தொடர்ந்து, கடந்த 15-ம் தேதி பி.ஜே.பி. மாநிலங்களவை உறுப்பினர்கள் பிரகாஷ் ஜவடேகர், மாயாசிங் மற்றும் மக்களவை உறுப்பினர் சிவகுமார் உடேசி, பி.ஜே.பி-யின் செயலாளரும் வழக்கறிஞருமான பூபேந்திர யாதவ் ஆகியோர் சி.பி.ஐ. தலைமை அலுவலகம் வந்து, சி.பி.ஐ. இயக்குநர் ஏ.பி.சிங்கிடம் சிதம்பரம் மீதான புகார் மனுவைக் கொடுத்தனர்.

குற்றச்சாட்டு - 1:


2ஜி ஸ்பெக்ட்ரம் சம்பந்தமாக, கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் மாநிலங்கள் அவையில் பதில் கொடுத்தபோது, '2003-ம் ஆண்டு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயிக்கப்படவேண்டும் என்கிற கொள்கை முடிவை அரசு எடுத்து இருந்தது. அதிலும் குறிப்பாக நிதி அமைச்சரும் தொலைத் தொடர்பு அமைச்சகமும் சேர்ந்து முடிவு எடுக்க அறிவுறுத்தப்பட்டது. ஆவணங்களின் அடிப்படையில், ஆரம்பத்தில் நிதி அமைச்சர் தொலைத் தொடர்பு அமைச்சரோடு ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயிக்கப்படுவதில் வேறுபட்டு இருந்ததாக 15.1.2008 அன்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் நிதி அமைச்சரும் தொலைத் தொடர்பு அமைச்சரும் கலந்து பேசியதில் ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயிப்பதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டது என்று 4.7.2008 நடந்த கூட்டத்தில் எனக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது’ என்று பிரதமர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதில் இருந்து ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் செய்ததில்,  தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.ராசாவும் நிதி அமைச்சர் ப.சிதம்பரமும் கலந்து பேசி முடிவு எடுத்துள்ளனர் என்பது தெரிய வருகிறது. 'ராசாவுக்குத் தெரிந்த மாதிரியே சிதம்பரத்துக்கும் எல்லா விவரங்களும் தெரியும்!’ என்று பிரதமரே சொல்கிறார். இரண்டு துறை அமைச்சர்களும் ஒன்றாக உட்கார்ந்துதான் இறுதி முடிவு எடுத்து உள்ளனர். தொலைத் தொ​டர்பு அமைச்​சர் ஆ.ராசா குற்றவாளி என்றால், நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரமும் குற்றவாளிதானே?

குற்றச்சாட்டு - 2 :


டிபி ரியாலிட்டி, யுனி​டெக் போன்றவை டெலிகாம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இல்லை. ஆனால், இவர்கள் ஸ்பெக்ட்ரம் உரிமங்களைப் பெற்றனர். அதோடு, தங்கள் நிறுவனத்தின் பங்குகளை வெளிநாட்டு டெலிகாம் நிறுவனங்களுக்கு விற்றனர். வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் முதலீடு செய்வதற்கும் பங்குகளை வாங்குவதற்கும் நிதி அமைச்சகத்தின் அனுமதி தேவை. இதற்கு இந்த நிறுவனங்கள் விண்ணப்பித்து அனுமதி பெற்றுள்ளனர். இதைப் பரிசீலனை செய்து அனுமதி கொடுத்தது, நிதி அமைச்சகம். ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் செய்ததில் ஒரு ஊழல். இந்த ஊழல் முடிந்து மற்றொரு ஊழலும் தொடர்ந்து உள்ளது. இதுவும் நிதி அமைச்சகத்துக்கு வந்தது. ஸ்வான் மற்றும் யுனிடெக் பங்குகளை பெற்ற வெளிநாட்டு டெலிகாம் நிறுவனங்கள் எஃப்.ஐ.பி.பி-யிடம் அனுமதி பெற்றுள்ளன. இந்த எஃப்.ஐ.பி.பி., நிதி அமைச்சகத்தின் கீழே இருப்பதுதானே? நிதி அமைச்சகம் எப்படி இப்படி அனுமதி கொடுத்தது? ஸ்வான் டெலிகாம் 1,650 கோடிகளுக்குத்தான்தான் ஸ்பெக்ட்ரம் உரிமங்களை வாங்கியது. ஆனால், இந்த நிறுவனம் 50 சதவிகிதப் பங்குகளை மட்டும் விற்றதன் மூலமே 10,000 கோடியை சம்பாதித்து உள்ளது. நிதி அமைச்சகம் அனுமதி இல்லாமல் பங்குகள் திருப்பிவிடுவதற்கு வாய்ப்பு இல்லை. அப்போது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம்தானே  இதற்கு முழுப் பொறுப்பு?

குற்றச்சாட்டு - 3


ஆ.ராசா எழுதிய குறிப்புகளை நாங்கள் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலம் சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து பெற்றோம். பத்திரிகைகளில் இந்த ஊழல் குறித்துச் செய்தியாக வந்த நேரத்தில், நிதி அமைச்சருடன் தான் சந்தித்துப் பேசியதை ஆ.ராசா குறிப்பிடுகிறார். 'பங்குகள் மாறியுள்ளன, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் வியாபார விருத்திக்கும்தான்’ என்று ராசா குறிப்பிடுவதோடு, 'பங்குகள் விற்பனையானதை, ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் விற்பனை செய்யப்பட்டதாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும், கம்பெனி சட்டத்துக்கு உட்பட்டுத்தான் இந்த பங்குகளின் பரிவர்த்தனைகள் நடந்து உள்ளன’ என்று சிதம்பரத்திடம் கூறியதாக ஆ.ராசா குறிப்பு எழுதி இருக்கிறார். அப்படி ஆ.ராசா கூறி இருந்தால், சிதம்பரம் அதை ஏற்றுக்கொண்டாரா?

குற்றச்சாட்டு-  4 :


தொலைபேசி ஒட்டுக்கேட்பில், நீரா ராடியாவும் ராசாவும் பேசிய விவகாரங்கள் வெளியாகின. இதில் ப.சிதம்பரம் பெயரும் வருகிறது. இது குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டாமா?''

இன்னொரு புயல் கண்ணுக்குத் தெரிகிறது!



ஜூனியர் விகடன்

Tuesday, July 26, 2011

கணக்குக் கேட்ட சேரன்! கண் கலங்கிய பாரதிராஜா! - படப்பாளிகள் பாலிடிக்ஸ்


வில்லங்கமான சேரன் விவகாரத்தை ஊதிப் பெரிதாக்கிய அமீர்; சங்கடத்தில் நெளிந்த சமுத்திரக்கனி; உருக்கம் காட்டிய செல்வமணி; மேடையில் பதவியை ராஜினாமா செய்யத் துடித்த பாரதிராஜா;இவர்களைச் சமாதானப்படுத்திய ‘திடீர்’ நாட்டாமை கே.எஸ்.ரவிக்குமார்.இப்படிப் பல பரிமாணங்களைக் காட்டியது தமிழ்ப்பட இயக்குனர் சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா.


வடபழநி கமலா தியேட்டரில் 13 ஜூலை அன்று நடைபெற்ற பதவி ஏற்பு விழா; படைப்பாளிகளுக்குள் இருக்கும் ‘ஈகோ’ யுத்தத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது.பாரதிராஜா மேடையில் அனலில் பட்ட புழுவாய் நெளிந்து கொண்டிருந்தார். செல்வமணியிடம், ஏண்டா என்னை இப்படி வம்பில் மாட்டி விட்டு வேடிக்கை பார்க்கிறே?" எனக் கேட்டபடி இருந்தார்.முதலில் பேசிய செல்வ மணி, சங்க இருப்பு மூன்று கோடியே இருபதாயிரம் என கணக்குக் காட்டியவர். டி-40, இயக்குனர்கள் சங்கம் நடத்திய கலை விழாவில் வருகிறேன் என்று சொல்லி ஏமாற்றிய கமல், மரியாதைக்காக வந்த ரஜினி, மேக்கப் போட்டு மேடையில் மூன்று மணி நேரம் காத்திருந்த ராதா ரவி, கடைசி நேரத்தில் காலை வாரிய சன் டி.வி. என ஒவ்வொன்றாகப் புட்டுப் புட்டு வைக்க, கூட்டம் முழுதும் செல்வ மணிக்கு ஆதரவு தெரிவித்தது. ஒன்றரை மணி நேரம் பேசிய செல்வமணி ‘பிரியாவிடை பெறுகிறேன் பதவி ஏற்பு விழா நடக்கும்’ என்று தேர்தல் அதிகாரி கவிஞர் பிறை சூடனை அழைத்தார்.அதுவரை பதவி ஏற்பு விழா சுமுகமாக நடக்கும் என்றுதான் எல்லோரும் எண்ணிக் கொண்டிருந்தார்கள்.


ஆனால் மேடையேறிய சேரன், மைக்கைப் பிடித்து 2010 டிசம்பர் வரை செல்வமணி கணக்கு கொடுத்துள்ளார். 2011 ஜனவரி முதல் ஜூலை வரை வரவு செலவு கணக்கு கொடுத்தால்தான் பதவி ஏற்பு விழா. அதை இப்போதே இந்த மேடையில் கையெழுத்துப் போட்டுக் கொடுக்க வேண்டும்" என்று கூறியதும் அதை அமீரும், ஜனநாதனும் ஆதரிக்க, செல்வமணியோ என்னை பிளாக்மெயில் செய்கிறார் சேரன்" என்று சொல்ல, ஒரே கூச்சல் குழப்பம். வார்த்தைகள் வெடித்தன. கே.எஸ். ரவிக்குமார் மேடை ஏறி, சேரன் செய்வது நியாயமல்ல" என்று சேரனையும், அமீரையும் ஒரு பிடிபிடிக்க, கூட்டம் கே.எஸ். ரவிக்குமாரை ஆதரித்துக் கரவொலி எழுப்பியது. மொத்தக் கூட்டமும் சேரன் மீது கடுப்படைந்ததால் மூடு- அவுட்டான சேரன் மூலையில் ஓரமாக ஒதுங்கிக் கொண்டார்.


 சேரனுக்கு இது தேவையா? என மொத்தக் கூட்டமும் கேட்பது போல் இருந்தது. தமக்கு எதிராகக் கரவொலி எழுப்பி, கை தட்டியவர்களைப் பார்த்து சேரன், கணக்குக் கேட்பது தவறா?" என்று கேட்டாலும் அவர் பக்கம் ஏனோ அனுதாபம் ஏற்படவில்லை.அதற்குப் பின்னர் பதவி ஏற்கும்போது சேரன், நான் வோட்டுப் போடாமல் தேர்வு செய்யப்பட்டேன், நான் அப்படித்தான் திமிராகத்தான் பேசுவேன். என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது" என்ற தொனியில் பேசியது, நிச்சயமாக அந்தக் கூட்டத்தில் சேரன் எல்லோர் மனத்திலும் ஒரு ‘மகா வில்லன்’ ஆகத்தான் தெரிந்தார். அதற்குப் பின் மைக் பிடித்த பாரதி ராஜா, கண்களிலே கண்ணீர்; குரல் தழுதழுத்தது.‘எனக்கு இது தேவையா?’ என அங்கலாய்ப்போடு, என் இனிய படைப்பாளிகளே, நான் சினிமாவில் உதவி இயக்குனராய் பத்து வருடம், இயக்குனராய் இருபத்தைந்து வருடம் என முப்பத்தைந்து வருடங்கள் கடந்து விட்டேன். மூன்று முதல்வர்களிடம் பழகிவிட்டேன். நான் நினைத்திருந்தால் அரசியலில் சேர்ந்து பெரும் புகழைச் சம்பாதித்திருப்பேன். நான் பதினாறு வயதினிலே, கிழக்கே போகும் ரயில், நிறம் மாறாத பூக்கள் என மூன்று ஹாட்ரிக் படங்கள் கொடுக்கும் வரை சங்கம் எங்கு உள்ளது என்று தெரியாது. அதன்பின்தான் சங்கத்தில் சேர்ந்தேன். ஆனால் இன்று 2020 உறுப்பினர்கள் சேர்ந்து விட்டார்கள். இருப்பு 3 கோடி என்கிறார்கள். அதனால் பெரிய கூச்சல். சரி, இருக்கத்தான் செய்யும்; தாய் உணர்வோடு இதை ஏற்றுக் கொள்கிறேன்.


இப்போதே ராஜினாமா செய்து விடுவேன். எனக்காக வோட்டுப் போட்ட 1300 பேர் வைத்துள்ள மரியாதை என்னை அப்படிச் செய்ய விடாமல் தடுக்கிறது. இந்த மேடையில் சேரன், சமுத்ரக் கனி இருவரும் துணைத் தலைவர்கள், அவர்களிடம் என் பொறுப்பையும் சேர்த்து ஒப்படைக்கிறேன்" எனக் கூறி அமர்ந்தார். சிக்கல் ஏற்பட்டால் என்னிடம் வாருங்கள். நான் தீர்த்து வைக்கிறேன்" என்றார். அதன் பின் பொதுச் செயலாளர் பொறுப்பேற்ற இயக்குனர் அமீர், செல்வமணியை ஒரு பிடி பிடித்தார்.நாங்கள் என்ன சங்கப் பணம் 3 கோடியைக் கொள்ளையடிக்க, குறுக்கு வழியில் வந்துள்ளோமா? ஒன்றரை மணி நேரம் நல்லவர் போல் செல்வமணி பேசி கூட்டத்தின் அனுதாபத்தை வாங்கிக் கொண்டார். நாங்கள் கணக்குக் கேட்பது தவறா?" என்று பேசினாலும் கூட்டம் அவரைத் தொடர்ந்து பேச அனுமதிக்கவில்லை.

கடும் எதிர்ப்புக்குப் பிறகு நன்றி கூறி முடித்துக் கொண்டார்.  மேடையில் வெயில் வாட்டத்தை விட வாடிப்போன வசந்த பாலன், மைனா சந்தோஷத்தை இழந்த பிரபு சாலமன், மங்காத்தா குஷி இல்லாத வெங்கட் பிரபு, ஆர்வம் காட்டாத ஸ்டேன்லி. இப்படி பதவி ஏற்பு விழா ஒரு யுத்த விழாவாகவே காட்சியளித்தது. பார்வையாளர்கள் மத்தியில் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ? என்ற பரபரப்பு கடைசி வரை இருந்தது. 

- சுமதி, கல்கி

Monday, July 25, 2011

சென்ற வார அரசியல் ஒரு பார்வை

2ஜிக்கு ‘நோ’ ஜி


 நாளுக்கு நாள் பரபரப்பை ஏற்றி வரும் 2ஜி அலைக்கற்றை ஊழலை குறித்த திரைப்படத்தை, சௌந்தர்யா இண்டர்நேஷனல் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. ஜான் மனோகர் என்பவர் திரைக்கதையை (உண்மைக் கதையை) எழுதி இயக்குகிறார். இந்த ஊழல் தொடர்பாக கம்பிக்குப் பின்னால் இருக்கும் ராஜா, கனிமொழி, மற்றும் அந்த வரிசையில் சேரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற தயாநிதி மாறன் ஆகியோர் உருவ ஒற்றுமைக்கு ஏற்ப நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. ஆனால் இந்தப் படம் வெளி வந்தால் கட்சியின் பெயர் இன்னமும் டேமேஜ் ஆகும் என தி.மு.க. தலைகள் கருதுகின்றன. எனவே படம் எடுப்பதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் யார் மூலமாவது வழக்கு போட யோசிக்கப்படுகிறது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலில் விசாரணை நடந்துவரும் இந்த சமயத்தில் இது தொடர்பான படம் எடுக்கத் தடை போடவேண்டும் என்று வழக்கு போடப்படுமாம். கட்சிக்குத் ‘தொடர்பில்லாத’ ஒருவர் கூடிய விரைவில் வழக்கு போடலாம்.

பெட்ரோலால் எரியும் வயிறு! 

கடந்த ஒரு வருடத்துக்குள் ஆறு முறைக்கு மேல் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டிருக்கின்றது. கேட்டால் எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தை சரிசெய்ய விலை உயர்வு தவிர்க்க முடியாது என்று சொல்கிறார்கள். உண்மை என்ன? கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோல் தொடர்பான உற்பத்தி செலவுகளையும் சேர்த்து லிட்டர் ஒன்றுக்கு பெட்ரோல் அடக்க விலை 30 ரூபாய்தான். ஆனால் நாம் அழுவது 67 ரூபாய் 41 காசு. கிட்டத்தட்ட 37 ரூபாய் மத்திய, மாநில அரசுகளுக்கு வரியாய் போகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் எண்ணெய் நிறுவனங்களின் லாபம் 1,26,288 கோடியாகும். ஆனால் பொருந்தாக் கணக்கு சொல்லி நஷ்டம் என்கிறார்கள். அரசு கொடுக்கும் மான்யம் 23,000 கோடி. ஆனால் மத்திய மாநில அரசுகளுக்கு வரி வருவாய் கிட்டத்தட்ட ஏழு லட்சம் கோடி. நம்மிடமிருந்து பொய் சொல்லிப் பணத்தைப் பிடுங்கி ‘நாங்கள் நவரத்தினா நிறுவனங்கள்’ என்று டிஸ்கோ ஆடுகின்றன பெட்ரோலிய நிறுவனங்கள். பெட்ரோல் விலை விவகாரத்தில் நம்மை இன்னமும் இளிச்சவாயர்களாக்கி வருகின்றன மத்திய, மாநில அரசுகள்.

காட்சி மாறாதா? 


ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை, அமைச்சர்கள்தான் மாறிக் கொண்டிருக்கின்றனர் என்று தா. பாண்டியன் ஒரு கூட்டத்தில் பேசியது சரிதான்" என்கிறார்கள். தி.மு.க. ஆட்சியில் மணலுக்கு அதிகாரபூர்வமற்ற ஏஜெண்ட் ஆண்டிகோலத்து முருகன் பெயர் கொண்டவர் என்றால் இந்த ஆட்சியில் ஆறுமுகத் தோற்றத்து முருகன்" என்று சொல்லப்படுகிறது. சி.பி.எஸ்.சி.பாடத் திட்டத்தின் படி பள்ளி திறக்க மாநில அரசிடம் தடையில்லாச் சான்றிதழ் வேண்டுமென்றால் கடந்த ஆட்சியில் ஐந்து லட்சம் காணிக்கையாம். விலைவாசி ஏறி விட்டதால் இருபது லட்சமாக அது உயர்த்தப்பட்டு விட்டதாம். சமச்சீர் குளறுபடியைச் சரி செய்ய நேரமில்லை. கல்லாவைத் திறந்து வைத்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று கடுகடுக்கிறார் (உண்மையான) கல்வித் தந்தை ஒருவர்.

எங்களை வெளுத்திடாதீங்க! 

 புதிய தலைமைச் செயலக வளாகத்தில் கடந்த 30,40 வருடங்களாக 30 சலவைக்கார குடும்பங்கள் வசித்து வந்தன. சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அங்கே இருந்த மற்ற குடியிருப்புவாசிகளின் தேவைகளை இவர்கள் நிறைவேற்றி வந்தார்கள். தலைமைச் செயலகம் கட்டும்போது இவர்களது வீடுகளை இடித்தது மட்டுமல்லாது சலவைக்கான தண்ணீர் தொட்டிகளையும் உடைத்துப் போட்டுவிட்டார்கள். இப்போது அங்கே தலைமைச் செயலகம் வரப் போவதில்லை. எனவே எங்களுக்கு அதே இடத்தில் வீடு கட்டித் தரவேண்டும். மீண்டும் சலவைத் தொழில் செய்ய கட்டுமானங்களை உருவாக்க வேண்டும். நாங்கள் வணங்கி வந்த அரச மரப்பிள்ளையார் கோயிலுக்கு 18 லட்சம் கொடுத்து, திருப்பணி செய்ய உத்தர விட்ட முதல்வர் அம்மா, எங்கள் கோரிக்கையையும் பரிவுடன் கவனிக்க வேண்டும்" என்கிறார்கள் சலவைத் தோழர்கள்.

ஆஹா, என்ன அடக்கம்!

தமிழக அமைச்சர்களில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் விஜய் தவிர வேறு யாரும் கூட்டங்களில் வாயைத் திறக்க ரொம்பவே யோசிக்கிறார்கள். எதையாவது பேசி வில்லங்கமாகி அமைச்சர் பொறுப்புக்கு ஆபத்து வந்து விடப் போகிறதோ என்ற பயம்தான். இந்தச் சூழலில் சமீபத்தில் எஸ்.ஆர்.எம்.பல்கலைக் கழகத்தில் உயர் கல்வி தொடர்பான கருத்தரங்கில் சிறப்பு மலரை வெளியிட்ட உயர் கல்வித் துறை அமைச்சர் பழநியப்பன், ஒரு வார்த்தை கூட பேசாமல் போனதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது. 




Sunday, July 24, 2011

ஏலம்... எப்படி எடுக்கணும்?

 
'பொது ஏல அறிவிப்பு’  செய்தித்தாள்களில் இப்படி வரும் விளம்பரங்களை தினம் தினம் பார்த்திருப்பீர்கள். வங்கிகள் ஏலத்திற்கு விடும் பொருட்களை நம்மவர்களில் பலர் வாங்க நினைப்பதே இல்லை. காரணம், அதனால் பெரிதாக லாபம் இருக்காது என்று நினைத்துவிடுவதுதான். ஆனால், விஷயம் தெரிந்த சிலர் ஏலத்திற்கு வரும் சொத்துக்களை மட்டுமே குறி வைத்து வாங்குகிறார்கள்.
 
பொதுவாக வங்கிகள் தாங்கள் கொடுத்த கடன் திரும்ப வராதபோது பிணையாக வைக்கப்பட்ட வீட்டையோ அல்லது நகையையோ ஏலம் விட்டு, தங்களுக்கான கடன் தொகையை எடுத்துக் கொள்ளும். இந்த சொத்துக்களை மார்க்கெட் ரேட்டைவிட குறைவான விலையில், எந்த வில்லங்கமும் இல்லாமல் வாங்கலாம் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.இப்படி ஏலத்துக்கு வரும் சொத்துக்கள் வீடு, தங்க நகைகள் என மதிப்புமிக்கதாக இருப்பதால், அவற்றை ஏலம் எடுக்கும்போது என்னென்ன விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பது பற்றி ஒரு அலசல்
 
வீடு ஏலம்...


வீட்டின் மதிப்பைவிட கடன் தொகை எப்போதுமே குறைவாகத்தான் இருக்கும். கடன் தொகை திரும்ப வந்தால் போதும் என்ற மனநிலையில் தான் வங்கிகள் இருக்கும் என்பதால், பெரிய அளவில் விலையை ஏற்ற மாட்டார்கள்.

சில நேரங்களில் சந்தை மதிப்பைக் கணக்கிட்டு ஏலத் தொகை நிர்ணயிக்கப்படும். சம்பந்தப்பட்ட வங்கிதான் சொத்து மதிப்பீட்டாளராக இருக்கும் என்பதால், அது சொல்லும் சந்தை மதிப்பும் நம்பகமானதாகவே இருக்கும். அதுவும் 1520% வரை விலை குறைவாகவே இருக்கும்.

 'ஃபுல் ஃபர்னிஷ்டு’ வீடுகள் ஏலத்தில் எடுக்கும்போது, சில நேரங்களில் சந்தை மதிப்புக்கும் குறைவாகவே கிடைக்கும்.

எல்லா ஆவணங்களும் வங்கியிடம் இருக்கும் என்பதால், ஏலத்தில் வாங்கும் வீட்டின் அனைத்து ஆவணங்களையும் வங்கியே கொடுத்துவிடும்.

வங்கியிடமிருந்து வாங்குவதால் பொதுவாக எந்த வில்லங்கமும் இல்லாமல்தான் இருக்கும்.

ஏலத்தில் எடுத்த வீட்டை வைத்து, திரும்பவும் வங்கிக் கடன் பெறமுடியும். சில வங்கிகள் ஏலத்தில் வீடு வாங்குவதற்குகூட கடன் வழங்குகின்றன.

ஏலத்தில் வாங்கிய வீட்டைப் பதிவு செய்ய குறிப்பிட்ட வங்கியின் மேலாளரே பத்திரப்பதிவில் கையப்ப மிடுவதால் மோசடிகள் நடக்க வாய்ப்புக் குறைவு.

வெளிப்படையான விலை, வங்கி வழி பணப் பரிமாற்றம் என்பதால் ஏமாற்றப்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்றே சொல்லிவிடலாம்.

மொத்த கடன் தொகையிலிருந்தே ஏல கேட்புத் தொகை தொடங்குவதால் நமக்கு ஏற்ற விலைக்கு வரும்போது வாங்கி விடலாம்.

ஏல முறையில் வாங்கும் போது இடைத்தரகர்கள், கமிஷன் தொந்தரவுகள் இருக்காது என்பது சூப்பர் பிளஸ் பாயின்ட்.


  ஏல முறை!
பொதுவாக தனியார் வங்கிகள் தாங்கள் கையகப் படுத்தும் வீடுகளை நேரடி யாகவே ஏலம் விடுகின்றன. கூட்டுறவு வங்கிகள் எனில் முறையான அரசு அங்கீகாரம் பெற்ற ஏலதாரர்கள் மூலம் ஏலம் விடுகின்றன. வங்கி நிர்ண யித்த தொகையைவிட அதிகமாக அல்லது ஏலம் கேட்கும்போது யார் அதிகமாகக் கேட்கிறார் களோ அவர்களுக்கே வீடு தரப்படும். இது சம்பந்தமாக செய்தித்தாள்களில் அறிவிப்பு வரும்போது ஏலத்தில் கலந்துகொள்ள விரும்புவதாக வங்கியில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.


 தகுதி! 


ஏலத்தில் கலந்து கொள்ள எந்த தகுதி வரம்பும் கிடையாது. யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். 

ஏலத்துக்கு வரும் வீட்டை ஏலம் எடுப்பவர் களுக்கு காண்பிக்கவும் செய்வார்கள்.

ஏல கேட்பில் கலந்துகொள்ள கட்ட வேண்டிய தொகையை, வங்கி வரைவோலை வழியாகத்தான் கட்ட வேண்டும். சில சமயங்களில் இந்த தொகை ஐம்பதாயி ரத்திற்கு மேற்பட்டால் கண்டிப்பாக வங்கிக் கணக்கு இருந்தால்தான் வரைவோலையே கிடைக்கும்.
 
அதிக தொகைக்கு ஏலம் எடுப்பவர்களுக்கு வருமானவரி கணக்கு எண் இருக்க வேண்டும். 
 
 
நகை ஏலம்...

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஏலத்தில் வரும் நகைகளை குறைவான விலையில் வாங்கிவிடலாம் என்பது சிறப்பான விஷயம். ஏலத்தில் நகைகளை வாங்குவது எப்படி, அதற்கான வழிமுறைகள் எப்படியெல்லாம் பின்பற்றப் படுகிறது என்பது குறித்து பார்க்கலாம்...
 
 
அடகுக்கு வரும் நகைகளை உடனே ஏலத்திற்கு விடுவதில்லை. நான்கு முதல் ஐந்து முறையாவது நோட்டீஸ் அனுப்பி, நகை அடகு வைத்திருப்பவர்களிட மிருந்து உரிய பதில் வர வில்லை என்றால் மட்டுமே ஏலம் விடப்படும் என்பதால் இந்த நகைகளுக்கு பிற்காலத்தில் எந்த சிக்கலும் வராது.

நகைகள் ஏலத்திற்கு விடப்படும் அறிவிப்பை நாளிதழ் மூலம் செய்வார்கள்.
அதில் நாள், ஏலம் விடும் இடம், ஏலமுறை குறிப்பிடப் படும். பெரும்பாலும் சம்பந்தப்பட்ட வங்கிகளி லேயே ஏலம் நடைபெறும்.

ஏலத்தில் பங்குபெற விரும்புபவர்கள் ஏலம் நடைபெறுவதற்கு முன்பே குளோஸ்டு கவர் படிவத்தில் தங்களைப் பற்றிய விவரங்களைத் தெரிவித்துவிட வேண்டும்.

நகையை அடகு வைத்தவர் கட்டவேண்டிய அசல், வட்டி மற்றும் அபராதத் தொகை என அனைத்தையும் சேர்த்துதான் ஏலத் தொகை நிர்ணயிக்கப்படும். அன்றைய தினத்தில் தங்கத்தின் விலை என்னவோ, அதைத் தாண்டாத அளவுக்கு இந்த தொகை இருக்கும்.

ஏலம் நடக்கும்போது, நாம் விரும்பும் விலையைக் கேட்கலாம். வங்கிக்கு கட்டுப்படியாகும் விலை கிடைத்து விட்டால் பணத்தை பெற்றுக் கொண்டு நகையைத் தந்துவிடுவார்கள். ஆனால், உடனடியாகக் கிடைக்காது. முதலில் ஏலத் தொகையில் 25% கட்ட வேண்டும்.

ஏலம் நடைபெற்றது பற்றி சம்பந்தப்பட்ட வங்கி அதன் தலைமை அலுவலகத்திற்கு அறிக்கை தாக்கல் செய்து, சரியான முறையில்தான் ஏலம் நடந்தது என ஒப்புதல் அளித்த பிறகே மீதமுள்ள தொகையை (75%) வாங்கிக் கொண்டு நகையைத் தருவார்கள். ஏலத் தொகையை பணமாகவோ அல்லது காசோலையாகவோ செலுத்தலாம். இது வங்கிக்கு வங்கி மாறுபடும்.

நகைக்கு அளிக்கப்பட்ட கடன் தொகை போக, ஏலம் நடத்தியதற்கான செலவுத் தொகையையும் கழித்து பாக்கித் தொகை இருந்தால் அதனை நகை அடகு வைத்த உரிமையாளருக்கு வங்கி சேர்த்துவிடும்.

ஆதாயம்!
 
புதிதாக நகைகள் வாங்கினால் சேதாரம், செய்கூலி போன்றவை செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், ஏலத்தில் நகை வாங்கினால் பண விரயத்தைத் தவிர்க்கலாம். தவிர, இன்றைய மார்க்கெட் விலையைவிட குறைவான விலையில் வாங்கலாம்.

ஏலத்தில் எடுத்த நகைகளில் டிசைன்கள் பிடிக்கவில்லை என்றால், அதை மார்க்கெட் ரேட்டுக்குக் கொடுத்து புதிய நகைகளாக மாற்றிக் கொள்ளலாம்.

அதிக பணத்தைக் கொட்டி கொடுத்தால்தான் அது நல்ல பொருள் என்று நாம் நினைக்கிறோம். ஏலத்திற்கு வரும் பொருளை இளக்காரமாக நினைப்பதை விட்டுவிட்டு, குறைந்த விலையில் அதிக லாபம் தரக்கூடிய சொத்துக்களை வாங்க ஒரு நல் வாய்ப்பாகவே கருதலாம்!

பானுமதி அருணாசலம், நீரை.மகேந்திரன்.

Saturday, July 23, 2011

தொடர்கிறது சமச்சீர் மாயை! ஓ பக்கங்கள், ஞாநி


சமச்சீர் கல்வி என்பது ஒரு கனவு; ஒரு லட்சியம்; ஒரு லட்சியக் கனவு.

கல்வியை வியாபாரமாக நடத்திக் கொண்டிருப்பவர்கள் நிச்சயம் அதை ஏற்கமாட்டார்கள். அந்த வணிகத்துக்குத் துணை போகக்கூடிய அரசியல்வாதிகளும் அதை ஆதரிப்பது போல நடித்து ஏமாற்றுவார்கள். தி.மு.க.வும், அ.இ.அ.தி.மு.க.வும் சமச்சீர் கல்வியை ஏற்கெனவே அரசியலாக்கிச் சிதைத்துவிட்டார்கள். தன் பங்குக்கு இப்போது நீதிமன்றங்களும் குழப்பத்தை அதிகரித்திருக்கின்றன.


மெட்ரிகுலேஷன், ஸ்டேட் போர்ட், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் என்று நான்கு விதமான பாடத் திட்டங்கள் இருப்பதற்குப் பதிலாக ஒரே பொதுப் பாடத்திட்டத்தை எல்லா பள்ளிகளும் பின்பற்ற வேண்டும் என்பது சமச்சீர் கல்வியின் ஓர் அம்சம். அந்த ஓர் அம்சத்தை மட்டும்தான் கருணாநிதியின் அரசு செயல்படுத்த ஆரம்பித்தது. ஜெயலலிதா அரசு நிறுத்திவிட்டது. இப்போது சென்னை உயர்நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பின்படி, ஜெயலலிதா அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்து சமச்சீர் கல்வித்திட்டத்தை ஒழிக்கப் பார்த்தது தவறு. தி.மு.க அரசு தயாரித்து வைத்த பாடப் புத்தகங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுவிட்டது.அத்தோடு நிறுத்திக் கொள்ளாதது ஏன் என்றுதான் எனக்குப் புரியவில்லை. பாடத்திட்டத்தில் நிபுணர்கள் சொல்லும் மாற்றங்கள், சேர்க்கைகள் இருந்தால், அவற்றை மூன்று மாதங்களுக்குள் துணைப் புத்தகங்களாகத் தரும்படி உத்தரவிட்டிருக்கிறது. இது தேவை யற்ற குழப்பம்.


நீதிமன்றம்

பாடப் புத்தகங்கள் தரமற்றவை; அவற்றை மாற்றியமைத்து அடுத்த கல்வியாண்டிலிருந்து புதுப் புத்தகங்களை அறிமுகப்படுத்துவோம் என்றுதான் ஜெயலலிதா அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. மாற்றியமைக்க மூன்று மாதம் போதும் என்கிறது நீதிமன்றம். ஆனால் பாடப் புத்தகங்களை மாற்றியமைக்கும் உரிமை அரசுக்கு உண்டு என்பதை நீதிமன்றம் இந்தத் தீர்ப்பின் மூலம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வேலை செய்ய தனக்கு ஒரு வருடம் தேவை என்று அரசு சொல்லும்போது, இல்லையில்லை மூன்று மாதம் போதும் என்று எப்படி நீதிமன்றம் சொல்லமுடியும் என்று தெரியவில்லை. எத்தனை மாதம் தேவை என்பது நிர்வாக முடிவு. அதைத் தீர்மானிப்பது நீதிமன்ற வரம்புக்கு அப்பாற்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழக அரசு அமைத்த நிபுணர் குழு உறுப்பினர்கள் அதற்குப் பொருத்தமானவர்கள் அல்ல என்று நீதிமன்றம் முன்பு மனுதாரர்கள் சிலர் வாதாடியிருந்தார்கள். அந்த விஷயத்துக்குள் போக விரும்பவில்லை என்று நீதிபதிகள் தீர்ப்பில் சொல்லியிருக்கிறார்கள். 


ஏன் போக விரும்பவில்லை என்று சொல்ல வேண்டாமா? அரசு நியமித்த குழுவே சரியில்லை என்று வாதிடப்படும் போது, நீதிமன்றம் அந்தக் குழு சரியான குழுதான் என்றாவது சொல்ல வேண்டும். அல்லது சரியில்லை என்றாவது சொல்ல வேண்டும். இரண்டுமே சொல்லமாட்டேன் என்பது என்னமாதிரியான தீர்ப்பு என்று புரியவில்லை.ஏன் தயங்குகிறார்கள் என்றும் புரியவில்லை.முந்தைய அரசு உருவாக்கிய பொதுப் பாடத்திட்டம் சரியில்லை என்று புதிய அரசு எந்த ஆய்வும் செய்து முடிவுக்கு வரவில்லை என்றும், அந்தப் பாடத்திட்டம் சமச்சீர் கல்வி பற்றி நான்கு ஆண்டுகள் ஆராய்ந்த பின் எடுத்த முடிவு என்றும் நீதிபதிகள் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.நான்கு ஆண்டுகள் ஆராய்ந்த பின்னர் முத்துக்குமரன் குழு தெரிவித்த பரிந்துரைகள் பொதுப் பாடத்திட்டம் பற்றி மட்டும் அல்ல. அடிப்படை வசதிகள், பயிற்றுவிக்கும் தரம், தேர்வு முறை என்று பல பரிந்துரைகள் முத்துக் குமரனால் வழங்கப்பட்டுள்ளன.நான்காண்டு ஆய்வுக்குப் பின் உருவாக்கிய மீதி பரிந்துரைகளை ஏன் தி.மு.க. அரசோ புதிய அரசோ நிறைவேற்ற முன்வரவில்லை என்று நீதிபதிகள் கேட்கவே இல்லை. கேட்டிருக்க வேண்டும். உத்தரவிட்டிருக்க வேண்டும்.

ஏனென்றால், ஜெயலலிதா அரசு சமச்சீர் கல்வி சட்டத்துக்குக் கொண்டு வந்த சட்டத்திருத்தம் செல்லாது என்று நீதிபதிகள் எந்த அடிப்படையில் சொன்னார்கள் என்று பார்த்தால், இந்திய அரசியல் சாசனத்தில், சம உரிமையை வழங்கும் 14ம் பிரிவுக்கு அது எதிரானது என்றுதான். கல்வி பெறுவதற்கான சம உரிமை என்பது பொதுப் பாடத்திட்டம் மட்டும்தானா? சமச்சீர் கல்வியின் மீதி அம்சங்களையும் உடனே நிறைவேற்ற வேண்டும் என்றல்லவா நீதிமன்றம் உத்தரவிட்டிருக்க வேண்டும் ?பொதுப் பாடத்திட்டம் இந்த ஆண்டே வந்தாலும், இன்னும் சில மாதம் கழித்து வந்தாலும், அது சமச்சீர் கல்வியாக இருக்கப் போவதில்லை என்பதற்கு இரு காரணங்களைப் பார்ப்போம்.

 ஆசிரியரின் தரம்

தனியார் பள்ளிகளில் இருக்கும் ஆசிரியரின் தரமும் அரசுப் பள்ளி ஆசிரியர் தரமும் சமமாக இல்லவே இல்லை. சென்ற பதினைந்து நாட்களில் நான்கு செய்திகள் தமிழ் நாட்டில் வெளியாகியிருக்கின்றன. நான்கும் ஆசிரியர்கள் குடித்துவிட்டு வகுப்புக்கு வருவது, மாணவிகளிடம் தகாத முறையில் நடந்துகொள்வது பற்றியவை. இதில் ஒரு சிலர் தலைமை ஆசிரியர்கள். எல்லா குற்றவாளி ஆசிரியர்களும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்தான். தனியார் பள்ளியில் இப்படிப்பட்ட ஆசிரியர் ஒரு நாள்கூட வேலையில் நீடிக்க முடியாது. விதிவிலக்காக இருக்கக் கூடிய நல்ல தரமான அரசுப் பள்ளி ஆசிரியர்கள் எண்ணிக்கை குறைவுதான். இந்தப் பிரச்னை பற்றி எதுவும் செய்யமுடியாத நிலையில்தான் அரசு இருக்கிறது. சமச்சீர் கல்விக்காகத் தெருவில் இறங்கிப் போராடும் இடதுசாரி கட்சிகள்கூட தங்கள் ஆசிரியர் சங்கங்கள் மூலம் இந்தப் பிரச்னையைத் தீர்க்க எதுவும் செய்வதில்லை.

இரண்டாவது பிரச்னை

தி.மு.க. அரசு தன் கடைசி காலத்தில் கல்வித் துறையில் செய்துவிட்டுப் போன இரண்டாவது குளறுபடி. தனியார் பள்ளிக் கட்டணங்களை நிர்ணயிப்பதற்காக முதலில் நீதிபதி கோவிந்தராஜன் குழுவை நியமித்தது.அவரது பரிந்துரைகளைத் தனியார் பள்ளி முதலாளிகள் எதிர்த்ததும் இன்னொரு குழுவாக நீதிபதி ரவிராஜபாண்டியனை நியமித்தது.இவர் நிர்ணயித்த கட்டணங்களையும் பள்ளி முதலாளிகள் ஏற்கவில்லை.ஆனால் அவை உடனடியாக நடைமுறைக்கு வருவதாகப் புதிய அரசு அறிவித்துவிட்டது. பல ஊர்களில் பெற்றோருக்கும் பள்ளிகளுக்கும் இடையில் கட்டணம் தொடர்பாகக் கடும் சண்டைகள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன.பல பள்ளி நிர்வாகங்கள் இப்போது புது உத்தியை மேற்கொண்டுவிட்டன. அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டும்தான் செலுத்துவோம் என்று பெற்றோர் சொன்னால், அதை வாங்கிக் கொண்டு, இந்தக் காசுக்கு உங்கள் குழந்தைக்கு இவ்வளவுதான் தரமுடியும் என்று பள்ளி செயல் திட்டத்தையே மாற்றி வருகிறார்கள். அதிகக் கட்டணம் கொடுத்தால் வேறு மாதிரி செயல்திட்டம். பல பல்ளிகளில் குறைந்த கட்டணம் செலுத்திய குழந்தைகளுக்கான பள்ளி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு விளையாட்டு, அசெம்ப்ளி பிரேயர், பேச்சுப் போட்டி முதலான போட்டிகள், ஸ்பெஷல் க்ளாஸ் எதுவும் கிடையாது. காலையிலிருந்து மதியம் வரை எல்லாருக்குமாகப் பொதுவாக வகுப்புகள் நடத்திய பின்னர், குறைந்த கட்டண மாணவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, மீதிப்பேருக்கு மட்டும் ஸ்பெஷல் வகுப்புகளைத் தொடர்கிறார்கள்.

இப்படிப்பட்ட கொடுமையை உலகில் வேறெங்கும் பார்க்க முடியாது. ஒரே வகுப்பில் இருக்கும் குழந்தைகளை இரண்டு விதமாகப் பிரித்து நடத்துவது. அரசு, தனியார் பள்ளிகளின் குழந்தைகள் எல்லாருக்கும் சமச்சீர் கல்வி என்று ஒரு பக்கம் கேட்டுக் கொண்டிருக்கும்போது, இப்போது தனியார் பள்ளிகளுக்குள்ளேயே சமமற்ற கல்வி முறை புகுத்தப்பட்டுவிட்டது.  

ஒரே தீர்வுதான்

அரசு நிர்ணயித்த கட்டணங்களைப் பின்பற்றவில்லை என்றால் அந்தப் பள்ளியை ஒன்று இழுத்து மூடவேண்டும். அல்லது அரசே எடுத்துக் கொள்ள வேண்டும். கல்வித் துறையில் தேவைப்படும் சீர்திருத்தங்கள் ஆழமானவை. ஆனால் நடப்பவை எல்லாம் மேம்போக்கானவை. முதலில் எல்லா பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் வருமானவரி விதிக்க வேண்டும். அறக்கட்டளைக்கு வரி விலக்கு உண்டு என்றால், பள்ளி, கல்லூரி கட்டண வருவாய் செலவுகளை அறக்கட்டளையின் இதர நடவடிக்கைகளிலிருந்து பிரித்து வரி விதிக்க வேண்டும். அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணங்களை வசூலித்தால் மட்டுமே வரி விலக்கு தரவேண்டும். 

எதற்கெடுத்தாலும் அமெரிக்காவைப் பார் . அமெரிக்காவைப் பின்பற்று என்று சொல்லும் போக்குப் பெருமளவு அதிகரித்துள்ள இன்றையச் சூழலில், கல்வி விஷயத்தில் அமெரிக்காவைப் பார் என்று நான் சொல்ல விரும்புகிறேன்.

அமெரிக்காவில் மொத்த மாணவர்களில் வெறும் பத்து சதவிகிதம் பேர்தான் தனியார் பள்ளிகளில் படிக்கிறார்கள். மீதி அத்தனை பேரும் அரசுப் பள்ளிகளில்தான் உள்ளனர். தமிழ் நாட்டில் சரிபாதிக்கு மேல் தனியார் பள்ளிகளில் படிக்கிறார்கள். அங்கே 12 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர். இங்கே 34 பேருக்கு ஓர் ஆசிரியர் என்பது அதிகாரபூர்வக் கணக்கு. நடைமுறையில் அறுபதுக்கு ஒருவர்.குடியிருக்கும் பகுதியில் இருக்கும் பள்ளியில்தான் அமெரிக்காவில் படிக்க முடியும். விதிவிலக்காக மட்டுமே வேறு இடத்துக்குச் சென்று படிக்க முடியும். இங்கே மைல் கணக்கில் பயணம் செய்து படிப்பது சகஜமாக இருக்கிறது.அமெரிக்காவில் பாடத் திட்டம் மாவட்ட அளவில் முடிவு செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டமும் அதற்கு உரிய பாடத் திட்டத்தை வகுத்துக் கொள்ளலாம். எல்லாவற்றுக்குமான பொது அம்சங்கள் உண்டு. இங்கே நேர்மாறான முயற்சியில் இருக்கிறோம்.

கல்வியை அரசியலிலிருந்தும் வணி கத்திலிருந்தும் பிரித்தால்தான் அசலான மாற்றம் வரும். அமெரிக்காவில் தெளிவாகப் பிரித்து வைத்திருக்கிறார்கள். இங்கே கல்வியை அரசியலும் வணிகமும் தான் தீர்மானிக்கின்றன. எனவே சமச்சீர் மாயைத் தொடரும்.

இந்த வாரக் கேள்விகள்

முதலமைச்சர் ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கு இருப்பதால் சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிகார பூர்வமான நிகழ்ச்சியில் அவர் நீதிபதிளுடன் கலந்து கொள்ளக்கூடாது என்று சில வழக்கறிஞர்கள் அண்மையில் எதிர்த்தார்கள். தலைமை நீதிபதி ஜெயலலிதாவை வீட்டுக்கு அழைத்து, தேநீர் விருந்து கொடுத்தபோது அவர்கள் ஏன் தலைமை நீதிபதிக்குக் கண்டனம் தெரிவிக்கவில்லை ?


தி.மு.க. ஆட்சியில், கலைஞர் குடும்பப் படமான எந்திரனுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குச் சிறப்புக் காட்சி போட்டுக் காட்டப்பட்டபோது அதற்குச் சென்ற நீதிபதிகளுக்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை ? அப்போது ஓட்டல் தாக்குதல் வழக்கில் புகார் பதிவாகித் தேடப்பட்ட குற்றவாளியாக இருந்த சன் பிக்சர்ஸ் நிர்வாகி சக்சேனாதான் நீதிபதிகளை வரவேற்றார் என்பதை ஏன் அப்போது இதே வழக்கறிஞர்கள் கண்டுகொள்ளவே இல்லை?