Tuesday, May 31, 2011

அறிவியல் - விண்வெளி அன்னம்


நிலா இல்லாத வானத்துல அழகு இல்லைதான். ஆனா, வீனஸ் என்னும் வெள்ளி கிரகத்துக்கும், புதன் கிரகத்துக்கும் நிலாவே கிடையாது. பூமிக்கு ஒரு நிலா; செவ்வாய்க்கு இரண்டு; நெப்டியூனுக்கு 13, யுரேனஸ் கிரகத்துக்கு 27; சனிக்கு 30; ஜூபிடர் என்கிற வியாழனுக்கு 63 என்று நிலாக்கள். ‘

அன்னக் கூட்டம்

வானத்தில் அன்னப் பறவையா? விண்வெளியில் வட பகுதியில் அமைந்திருக்கும் நட்சத்திரத் தொகுதி ‘சிக்னஸ்’ (cygnus) எனப்படுகிறது. வடசிலுவை (northern cross) எனவும் குறிப்பிடுகின்றனர். இதில் மொத்தம் 88 நட்சத்திரத் தொகுதிகள் உள்ளன. அதில் ஒன்றுதான் ‘சிக்னஸ்’. கிரேக்க மொழியில் இதற்கு ‘அன்னம்’ எனப் பொருள். இதில் ஒன்பது நட்சத்திரங்கள் உள்ளன. சிக்னஸில் உள்ள மிகப் பிரகாசமான நட்சத்திரம் டெனிப் (Deb Neb). இது சூரியனைவிட சுமார் 60,000 மடங்கு பிரகாசமானதாம். அட, ஆச்சரியமான அன்னப் பறவை!


450 கோடி ஆண்டுகள்

450 கோடி ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருப்பது நம் சூரியன். இதனுடைய மொத்த ஆயுட்காலம் சுமார் 1000 கோடி ஆண்டுகள் என்கிறார்கள். வாயுப் பொருள்களால் ஆன சூரியன், நெருப்புக் கோளம். நிறம், வெள்ளை. ஆனால், பூமியின் மேற்பரப்பிலிருந்து பார்க்கின்றபோது, இது மஞ்சளாகத் தெரிகிறதாம். இதில் ஹைட்ரஜன் 73.46 சதவிகிதம், ஹீலியம் 24.85 சதவிகிதம் உள்ளன. இவை தவிர ஆக்சிஜன், கார்பன், இரும்பு, சல்பர், நியான், நைட்ரஜன், சிலிகான், மக்னீஷியம் போன்ற தனிமங்களும் காணப்படுகின்றன. பூமியிலிருந்து 150 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

இறங்குவது எங்கே?

ஜூபிடர் கோளில் விண்கலன்கள் இறங்கும் வகையிலான தரை போன்ற மேற்பரப்பு இல்லையாம். இது வாயுக்களால் சூழப்பட்டுள்ள கோள். இதைப் பற்றிக் குறிப்பிடுகின்றபோதே ‘பெரிய வாயுப்பந்து’ (gas giant) என்கிறார்கள். இதன் சுற்றுப்புறத்தில் சுமார் 75 சதவிகிதம் ஹைடிரஜன், 24 சதவிகிதம் ஹீலியம் காணப்படுகின்றன. தவிர மீத்தேன், அமோனியம், ஈத்தேன், நீர், ஹைடிரஜன் டியூட்ரைட் போன்றவையும் காணப்படுகின்றன. தமிழில் வியாழன் என அழைக்கப்படும் இந்தக் கோள், சூரியனிலிருந்து 77,28,00,000 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. பூமியைவிட 11 மடங்கு பெரியது. சரி;

முனைவர் ஆசுரா


No comments:

Post a Comment