சில ஆண்டுகளாக போதுமான மழையில்லாத நிலையில், 'இந்த ஆண்டு எப்படி
இருக்குமோ?’ என்கிற கவலைக்குரிய கேள்வி, விவசாயிகளின் தூக்கத்தைக்
கெடுத்துக் கொண்டிருக்கிறது. இக்கேள்விக்கான பதிலாக... இந்த ஆண்டு
தென்மேற்குப் பருவமழை பற்றிய வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், ''தமிழ்நாடு, மழை மறைவு மாநிலமாக
இருந்தாலும்... தென்மேற்குப் பருவமழைக் காலத்தில்தான் (ஜூன்-செப்டம்பர்
வரை) ஓர் ஆண்டில் பெறக்கூடிய மொத்த மழையளவில், 32 சதவிகித அளவு மழையைப்
பெறுகிறது. இந்தப் பருவத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நீலகிரி
மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் அதிக மழை பெறுகின்றன.
மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை
ஒட்டியுள்ள கடல்பகுதியில் மேற்பரப்பு நீரில் வெப்பநிலை மற்றும் தென்மண்டல
காற்றழுத்தக் குறியீடு ஆகியவற்றைக் கொண்டு, ஆஸ்திரேலியா நாட்டில் இருந்து
பெறப்பட்ட 'மழை மனிதன்’ எனும் கணினிக் கட்டமைப்பைப் (Australian Rainman
international V.4.2) பயன்படுத்தி பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில்
நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலமாக... சென்னை, தர்மபுரி, திண்டுக்கல்,
கிருஷ்ணகிரி, மதுரை, சேலம், திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும் வேலூர் ஆகிய
மாவட்டங்களில் வழக்கமாகக் கிடைக்கும் மழையைவிட 10% கூடுதலாகவோ அல்லது
குறைவாகவோதான் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.
அரியலூர், கோயம்புத்தூர், கடலூர், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி,
கரூர், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், நீலகிரி,
திருநெல்வேலி, திருப்பூர், திருவாரூர், திருச்சி, தூத்துக்குடி,
விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் வழக்கமாகக் கிடைக்கும்
சராசரி மழை அளவைக் காட்டிலும், 10% முதல் 20% குறைவாகக் கிடைக்க
வாய்ப்புள்ளது.
நாகப்பட்டினம், ராமநாதபுரம் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் வழக்கமாகப்
பெய்யும் சராசரி மழை அளவைக் காட்டிலும் 20% குறைவாகக் கிடைக்க
வாய்ப்புள்ளது.
வணக்கம்
ReplyDeleteதங்களை அழைத்துள்ளேன் வந்து பாருங்கள் என்னுடைய பக்கம் 10 கேள்விகளுக்கு பதில் சொல்வதுதான்.தங்களின் பதிலுக்காக காத்திருக்கேன்.
http://tamilkkavitaikalcom.blogspot.com/2014/06/blog-post_21.html#comment-form
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-