கொடைக்கானல் பகுதிகளில் காணப்படும் குறிஞ்சிப் பூ, பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும். அதுபோல, Phyllos- tachys bambusoides என்னும் மூங்கில் வகை, 120 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் பூக்குமாம்.
உலகின் மிகச்சிறிய பசு, இங்கிலாந்தில் ‘மார்டின் ரைடகர்’ என்பவர் வீட்டில் வளர்கிறது. ‘டெக்ஸ்டா’ இனத்தைச் சேர்ந்த இந்தப் பசுவின் உயரம் 84 செ.மீ.தான். கின்னஸிலும் இடம் பெற்றுள்ளது இந்தப் பசு.
‘மூடன், மட்டி, மடையன்...’ ஆகிய சீடர்களைக் கொண்ட பரமார்த்த குரு கதை, அனைவருக்கும் தெரியும். இதை எழுதியவர் - இத்தாலியில் இருந்து வந்து, தமிழ் பயின்ற வீரமாமுனிவர்.
ஜப்பான் நாட்டில் குழந்தைகளுக்கு இரண்டு கைகளாலும் எழுதுவதற்கு பயிற்சி கொடுக்கிறார்கள்.
சுவையான பழங்களைத் தரும் மரம் என்றாலும், இலந்தை மரத்தில் பறவைகள் எதுவும் கூடு கட்டுவதில்லை.
திருப்பாவை, திருவெம்பாவை ஆகிய துதிகளை தமிழ்நாட்டில் மட்டும் பாடுவதில்லை. தாய்லாந்து நாட்டில் மன்னர் முடிசூடும் போதும் பாடுகிறார்கள்.
உலகின் முதலாவது சுரங்க ரயில் பாதை, 1863ஆம் ஆண்டு லண்டனில் அமைந்தது. இந்தியாவில் - 1984ஆம் ஆண்டு கல்கத்தாவில் அமைந்தது.
உலகம் முழுவதும் 3000 மொழிகள் பேசப்படுகின்றன. என்றாலும் 31 மொழிகள்தான் ஐந்துகோடிக்கும் மேற்பட்ட மக்களால் பேசப்படுவதாக தெரிவிக்கிறது ஓர் ஆராய்ச்சி.
கேள்விக்குறியை இப்போது நாம் வாக்கியங்களில் பயன்படுத்துகிறோம். முதன்முதலாக இலத்தீன் மொழியில்தான் இது பயன்படுத்தப்பட்டது.
பசுமைப்புரட்சி என்றால் விவசாயப் பெருக்கம்: வெண்மைப்புரட்சி என்றால், பால் உற்பத்தி; மஞ்சள் புரட்சி என்றால் எண்ணெய் வித்துக்களில் உற்பத்தி; நீலப்புரட்சி என்றால், மின் உற்பத்தி. இளஞ்சிவப்பு புரட்சி என்றால் என்ன தெரியுமா? மருத்து வகை உற்பத்திப் பெருக்கம்!
உலகின் அதிக எடை கொண்ட பெரிய மரம், கலிஃபோர்னியாவில் உள்ள ‘ஜெனரல் ஷெர்மன்’ என்ற மரம் என்கிறார்கள். ஒரே நேரத்தில் 2.5 லட்சம் பேர், இதன் நிழலில் இருக்கலாம் என்றால், அதன் பிரம்மாண்டம் எப்படியிருக்கும்?!
//சுவையான பழங்களைத் தரும் மரம் என்றாலும், இலந்தை மரத்தில் பறவைகள் எதுவும் கூடு கட்டுவதில்லை.
ReplyDelete//
ஆச்சரியமான தகவலாக இருக்கு பாஸ்