Search This Blog

Saturday, March 30, 2013

எனது இந்தியா (ரஷ்யப் பயணிகளின் இந்தியப் பயணம் !) - எஸ். ரா

யுவான் சுவாங், பாஹியான் ஆகிய சீன யாத்ரீகர்கள் இந்தியாவுக்கு வந்து சென்​றது குறித்த வரலாற்றுக் குறிப்புகள் இருக்கின்றன. இவர்களைப்போலவே, ரஷ்யாவில் இருந்தும் இரண்டு பயணிகள் இந்தியாவுக்கு வந்து, இந்தியா குறித்த தங்களது நினைவுகளை, வரலாற்று உண்மைகளை துல்லியமாகப் பதிவுசெய்தனர். ஆனால், அந்த ரஷ்யப் பயணிகளைப் பற்றி வரலாறு பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஒருவர், அஃபனாசி நிகிதின் என்ற 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வணிகர். இவர், விஜயநகரப் பேரரசு அரசாட்சி செய்த பகுதிக்கு வந்து இந்தியாவைப் பற்றி எழுதியிருக்கிறார். இன்னொ​ருவர், இளவரசர் அலெக்ஸி சோல்டிகோப். இவர், 18-ம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்தவர். திருவிதாங்கூர் அரசர் சுவாதி திருநாளின் நண்ப​ராக வந்து தங்கியிருந்து தென்னிந்தியாவைப் பற்றிய அரிய பல குறிப்புகளையும் சிறப்பான ஓவியங்களையும் பதிவுசெய்தவர். இந்த இரண்டு ரஷ்யப் பயணிகளின் மூலமாக இந்தியா குறித்த சில அபூர்வ செய்திகளை நாம் அறிந்து​கொள்ளலாம்.

அஃபனாசி நிகிதின், மூன்று கடல்களுக்கு அப்பால் ஒரு பயணம் என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகம் அவரது இந்தியப் பயண அனுபவங்களை விவரிக்​கிறது. அஃபனாசி, வோல்கா நதிக்கரையைச் சேர்ந்த தூவார் என்ற பகுதியில் பிறந்தவர். வணிகக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், இந்தியாவைப் பற்றி சிறுவயதிலேயே கேள்விப்பட்டு இருந்தார். இந்தியாவில் தங்கம், வைரம் போன்றவற்றை குறைந்த விலையில் வாங்கலாம் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. இந்தியாவில் அரிய வகைக் குதிரைகள் கிடையாது என்பதால், ரஷ்யாவில் இருந்து குதிரைகளை வாங்கிச் சென்று இந்தியாவில் விற்க திட்டமிட்டார். இதற்காக, அரபு நாடுகளுக்கு இரண்டு கப்பல்களில் சென்றார். அவருடன் வசிலி பபின் என்ற நண்பரும் உடன் சென்றார்.

அஃபனாசி நிகிதின் நினைத்ததுபோல அந்தக் கடல்பயணம் அவ்வளவு எளிதாக அமையவில்லை. தார்த்தாரியர்கள் அவரது கப்பலை மறித்துக் கொள்ளையடித்தனர். அடிமையாகப் பிடித்துச் சென்று கப்பலில் துடுப்பு போடும் கடினமான வேலையைக் கொடுத்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக புயலில் சிக்கிய கப்பல் சேதம் அடைந்தது. அவர்கள் ஆளுக்கு ஒரு பக்கமாக சிதறிவிட்டனர். உயிர்தப்பிய இருவரையும் மீண்டும் பிடித்த கொள்ளையர், அடிமையாக விற்கக் கொண்டுசென்றனர். தான் ஒரு வணிகர் என்று நிரூபணம் செய்து அடிமைச் சந்தையில் இருந்து மீண்ட நிகிதின், தனது பயணத்தை மீண்டும் தொடங்கினார். அரபு நாடுகளுக்குச் சென்று குதிரைகள் மற்றும் பட்டுத் துணிகளை வாங்கிக்கொண்டு, கப்பல் மூலம் 1470-ம் ஆண்டு அலிபாக் நகருக்கு அருகே ரெவேண்டாவிலுள்ள சௌல் துறைமுகத்தை அடைந்தார் நிகிதின். அப்போது, குல்பர்காவையும் பிடா​ரையும் ஆட்சி செய்தவர்கள் பாமினி அரசர்கள். அவர்​களிடம் தனது வணிக நோக்கம் குறித்து தெரிவித்த நிகிதின், பரிசுப் பொருட்களை மன்னர்​களிடம் சமர்ப்பித்தார். பாமினி மன்னர்கள்,  நிகிதினை உபசரித்து வியாபாரத்துக்கான உதவி செய்தனர். வைரம் வாங்குவதற்காக கோல்கொண்டா பகுதிக்குச் சென்றார் நிகிதின். 13-ம் நூற்றாண்டு கோல்கொண்டா கோட்டை, காகதீய அரசர்களால் கட்டப்பட்டது. அதன் பிறகு வந்த குதுப் சாஹி அரசர்கள்தான் இப்போது இருக்கும் கட்டடங்களை எழுப்பினர். காகதீய ஆட்சியில் கொல்லூர் சுரங்கத்திலிருந்தும் பரிதலா பகுதியிலிருந்தும் வைரங்கள் வெட்டி எடுக்கப்பட்டன. அவை, கோல்​கொண்டா நகரில் பட்டை தீட்டப்​பட்டு மெருகேற்றப்பட்டன. அந்தச் சமயத்தில் உலகத்தில் இந்தியா மட்டுமே அரிய வைரச் சுரங்கங்களுக்குப் பிரபலம். கோல்கொண்டா சுரங்கங்களில் மட்டுமே அரிய வைரங்கள் கிடைக்கும் என்பதை ஐரோப்பியர்கள் அறிந்திருந்தனர். வைர வியாபாரத்தின் முக்கியச் சந்தை நகரமாக கோல்கொண்டா கோல்கொண்டா விளங்கியது. பல்வேறு சுரங்கங்களில் இருந்து கொண்டு​வரப்பட்ட வைரக்கற்கள் இங்கு விற்கப்​பட்டன. இந்தக் கோட்டை நகரம் வைர வியாபாரத்துக்குப் பெயர்பெற்று விளங்​கியது.

கோல்கொண்டாவைச் சுற்றியிருந்த பகுதிகளில் இருந்து அற்புதமான வைரங்கள் கிடைத்தன. குதூப் மன்னரான இப்ராஹிம் குலி குதுப்ஷாவாலி, கோல்கொண்டாவைக் கட்டியவர்களில் முக்கியமானவர். குதுப் சாஹி அரசர்கள் கட்டடக் கலையில் மிகச் சிறந்த​வர்கள். மொகலாயர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக கோல்கொண்டாவில் கோட்டையை மீண்டும் எழுப்பினர். கோட்டை முன் வாசல்களின் அருகே ஒரு சிறு கைதட்டல் ஒலி கேட்டால்கூட 300 அடி உயரக் கோட்டை கோபுரத்தின் உச்சியில் கேட்கும் வகையில் ஒரு சிறந்த ஒலியமைப்பை அவர்கள் வடிவமைத்திருந்தனர். இது, இந்தக் கோட்டையின் சிறப்பான அம்சங்களில் ஒன்று. கோட்டையின் காற்றோட்ட அமைப்புகள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டவை. கோடையின் வெப்பத்தில் இருந்து காப்பாற்றிக்கொள்ளும்படியாக காற்றுச் சாளரங்கள் இருந்தன. கோட்டையின் வாயிற்கதவுகளில் கூரிய இரும்பு முனைகள் பொருத்தப்பட்டன. கோட்டையை, யானைகள் சேதப்​படுத்தாமல் பாதுகாப்பதற்காக இந்த ஏற்பாடு. கோல்கொண்டா கோட்டையைச் சுற்றி 11 கி.மீ. நீள வெளிச் சுவர் உள்ளது. கோட்டையின் நுழைவாயிலுக்கு சில அடி​களுக்கு முன்னால் ஒரு பெரிய தடுப்புச் சுவர் உண்டு. தாக்குதல் சமயங்களில் வீரர்களும் யானைகளும் பின்னால் சென்று ஓடிவந்து மோதுவதைத் தடுப்பதற்கு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய அரிய பெருமைகளைக்கொண்ட கோல்​கொண்டா நகருக்கு முதலில் விஜயம் செய்த ஐரோப்பியர் அஃபனாசி நிகிதின் ஆவார்.

கோல்கொண்டாவைப் போலவே, ராய்ச்சூருக்கும் சென்று வியாபாரம் செய்தார் நிகிதின். அவரால் தென்னிந்​தியாவின் கோடைக்காலத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர், நாடோடி போல அலைந்து பல்வேறு விதமான மனிதர்களையும் சந்தை​களையும் பார்த்தார். கோடையின் வெப்பத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் பெரும்பான்மை மக்கள் குறைந்த ஆடை உடுத்தியிருப்பதை கண்டு இந்தியர்கள் கோடைக்காலத்தில் நிர்வாணமாக அலைகிறார்கள் என்று குறிப்பு எழுதியிருக்கிறார் நிகிதின்.

அவரது இன்னொரு வியப்பு, இந்தியர்​களில் பெரும்பான்மையினர் செருப்பு அணிவது இல்லை என்பதே. இந்தியாவில் காலணி அணிவது என்பது அதிகாரத்தின் குறியீடாக உள்ளது. அலங்காரமான காலணிகளை ஏழைகள் அணிய அனுமதி இல்லை. 90 சதவிகித மக்கள் வெறுங்​காலுடன் வெயிலில் நடக்கின்றனர். உடை அணி​வதில் சாதியக் கட்டுப்பாடுகள் இருப்பதாக சொல்லப்படுகின்றன என்று, நிகிதின் குறிப்பிட்டு இருக்கிறார்.

இதுபோலவே, வறுமை நிலையில் ஏராளமான மக்கள் வசிப்பதையும் ஊருக்கு ஒன்றிரண்டு பேர் மட்டும் மிதமிஞ்சிய செல்வத்துடன் ஆடம்பரத்துடன் வசிப்பதையும் தனது பதிவுகளில் சுட்டிக்​காட்டுகிறார். இந்தியர்களுக்கு ஸ்பூன் மற்றும் முள்கத்தி பற்றி தெரி​யாது. அவர்கள் கைகளால்தான் உணவை சாப்பிடு​கிறார்கள். அழகான இளம்​பெண்கள் பயணம் செய்வதற்காக தங்கத்​தில் பல்லக்கு செய்திருக்கிறார்கள். இந்தியாவில் படுக்கைத் துணையாகப் பெண்களைப் பெறுவது எளிதானது. பணம் கொடுத்தால் பெண்கள் எளிதாகக் கிடைக்கின்றனர். பெரும்பான்மை இந்தி​யர்கள் வாரத்தில் ஒருநாள் சாப்பிடுவது இல்லை. பெரியவர்களைப் பார்க்கும்​போது கால்களைத் தொட்டு வணங்குகின்றனர். புனிதமான காரியங்​களின்போது பூமியைத் தொட்டு வணங்​கும் வழக்கம் இருக்கிறது என்றும் நிகிதின் பதிவுசெய்திருக்கிறார். இந்திய யானைகளின் மீது அவருக்கு வசீகரம் ஏற்பட்டது. யானைகளைப் பயன்படுத்தி கடினமான பொருட்களைத் தூக்கிச் செல்வதைப் பற்றியும், யானைகளுக்கு முறை​யாகப் பயிற்சியளித்து போரில் தனிப் படையாகப் பயன்படுத்துவது பற்றியும் நிகிதின் நிறைய எழுதியிருக்​கிறார். யானைகளுக்கு என்று விசேஷமாக உள்ள மருத்துவ முறைகளையும், யானைகளுக்கு பயிற்சி​யளிக்கப் பயன்படுத்தும் முறைகளையும் பதிவு செய்திருக்கிறார். ரஷ்யாவில் குதிரைகள்தான் கம்பீர​மாகக் கருதப்படு​கின்றன. இந்தியாவில் குதிரையைவிட யானையே கம்பீரத்​தின் அடையாளம். இந்தியர்கள் குதிரைகளைவிட காளை மாடுகளையும் எருதுகளையும் போக்குவரத்துப் பணிக்கு அதிகம் பயன்படுத்துகின்றனர். இரண்டு மாடுகள் பூட்டிய மாட்டுவண்டிதான் பிரதானப் போக்குவரத்து வாகனம். இதுபோன்ற வண்டியில் எப்படி பயணம் செய்கின்றனர் என்பதே அதிசயமாக உள்ளது என நிகிதின் வியந்து எழுதிவைத்து இருக்கிறார்.

நிகிதினை வசீகரித்த இன்னோர் அம்சம், திருவிழா மற்றும் ஊர்வலங்​கள். ரஷ்யாவில் நடக்கும் மதம் சார்ந்த ஊர்வலங்களைப் போல இல்லாமல் வண்ணமயமாக, அலங்​காரமும் மிடுக்கு​மாக இந்தியத் திருமணங்​களில் நடக்கும் ஊர்வலங்களும், கோயில் திருவிழா நாட்களில் ஊரே கூடி வீதிவீதியாக ரத ஊர்​வலம் நடத்து​வதையும் வியந்து எழுதியிருக்​கிறார் நிகிதின்.

குறிப்பாக, பிடார் சுல்தான் அரண்​மனையைவிட்டு வெளியே வரும்போது, 10-க்கும் மேற்பட்ட அவரது மனைவிகள், 10,000 பாதுகாப்பு வீரர்கள், 50,000 போர்​வீரர்கள், அலங்கரிக்கப்பட்ட 200 யானைகள், பட்டுத் துணி போர்த்திய 300 குதிரைகள், 100 நடனப் பெண்கள், 100 இசைக்கலைஞர்கள் சுல்தானுடன் அணிவகுத்து வருவார்கள் என்ற வியப்பூட்டும் காட்சியைப் படம் பிடித்துக் காட்டுவதுபோல குறிப்பு எழுதியிருக்கிறார் நிகிதின். இந்திய மக்கள் ஆண்டுக்கு ஒரு குழந்தை பெற்றுக் கொள்கின்றனர். குழந்தைகள் இல்லாத குடும்பமே இல்லை. ஆண் குழந்தை பிறந்தால், அதற்கு தந்தை பெயரிடுகிறார். பெண் குழந்தை பிறந்தால், அதற்கு தாய் பெயர் சூட்டுகிறார். இப்படிப்பட்ட ஒரு விசித்திரமான முறை இந்தியாவில் நடைமுறையில் இருக்கிறது.  

ஒவ்வொரு நாளும் கோயி​லுக்குச் செல்வதற்கு முன், கைகால்​களைத் தண்ணீரால் சுத்தம் செய்து​கொள்கின்றனர். ரஷ்யர்களைப் போலவே இந்தியர்களும் கிழக்குத் திசையை வணங்குகின்றனர். ஆந்தை​யைப் பார்ப்பதை மரணத்தின் அறிகுறியாகக் கருதுகின்றனர். இரவில், ஒரு வீட்டின் மீது ஆந்தை வந்து அமர்ந்தால் அந்த வீட்டில் கட்டாயம் மரணம் சம்பவிக்கும் என்பது இந்தியர்களின் நம்பிக்கை. இதுபோலவே குரங்குகளை யாரும் துன்புறுத்துவது இல்லை. ஏதாவது ஒரு குரங்கு துன்புறுத்தப்பட்டால், அவை காட்டு மிருகங்களை அழைத்து வந்து மக்களை அழித்துவிடும் என்ற பயம் இந்தியர்களிடம் நிலவுகிறது என அவரது பயணக் குறிப்புகள் ஏதோ புனைகதை போலவே விரிகின்றன.

இந்தியாவில் நிகிதினை மதம் மாற்ற முயற்சிகள் நடந்ததாகவும், கிறிஸ்தவரான தான் மதமாற்றத்தை விரும்பவில்லை. ஆனால், கட்டாயப்​படுத்தி தனது பெயரை குவாஜா யூசுப் குரசானி என மாற்றி இஸ்​லாமிய நடைமுறைகளைப் பின்பற்ற​வைத்ததாகவும் குறிப்பிட்டு இருக்கி​றார். பிடார் நகரைப்பற்றிய இவரது குறிப்புகள் மிகவும் துல்லியமான​வை. குறிப்பாக, பிடார் நகரின் குதிரைச் சந்தையில் 20,000 குதிரை​கள் விற்பனைக்கு வந்திருந்தன என்றும், அவற்றில் சிவப்பு மற்றும் கறுப்பு நிறக் குதிரைகள் நல்ல விலைக்கு விற்கப்பட்டதையும் பதிவுசெய்திருக்கிறார். பிடாரின் நுழைவாயிலில் ஆயுதம் ஏந்திய காவலர்கள் நிற்பதையும், அரண்​மனைக்குள் நுழைபவர்கள் யாராக இருந்தாலும் தனது பெயர் மற்றும் முகவரியைப் பதிவுசெய்துகொள்ளும் முறை நடைமுறையில் இருந்தது எனவும், பிடாரின் அரண்மனை பேரழகுகொண்டது எனவும், இந்த நகரில் உள்ள இந்துக்கள் பெரும்​பாலும் காய்கறி உணவையே சாப்பிடு​கின்றனர் எனவும், அசைவம் சாப்பிடு​பவர்கள்கூட மாட்டு இறைச்சியை உண்பதில்லை எனவும் குறிப்பு எழுதி இருக்கிறார்.

Friday, March 29, 2013

ஐ.பி.எல்.! - 6


ஒரே வருடத்தில் எல்லாமே தலைகீழ். சென்ற வருட ஐ.பி.எல்.லின்போது, இந்திய அணி - இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் படுதோல்விகளைச் சந்தித்ததால் யாருக்கும் பெரிய உற்சாகம் இல்லாமல் இருந்தது. இப்போது 4-0 என்று ஆஸ்திரேலிய அணியைத் தோற்கடித்த கொண்டாட்டத்தில், ஐ.பி.எல். ஜோராகக் களைகட்டி இருக்கிறது. இந்த ஒரு வருடத்தில்தான் தோனியை நீக்கிவிட்டு கோலியை கேப்டனாக்கவேண்டும் என்கிற கவாஸ்கரின் விமர்சனம், இப்போது, 2019 உலகக்கோப்பை வரை தோனிதான் இந்திய அணியின் கேப்டனாக நீடிக்க வேண்டும் என்கிற வரை ஒரேடியாக மாறியிருக்கிறது. ஆனால், எந்த விமர்சனத்துக்கும் பதற்றப்படாமல் கஷ்ட நஷ்டங்களைச் சுலபமாகக் கடந்து விடுகிறார் தோனி. இதனால்தான் பல நாட்டு வீரர்கள் ஆடுகிற ஐ.பி.எல். லில்கூட தோனியால் தொடர்ந்து வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள முடிகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள், ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரில் கலக்கி விட்டார்கள். சி.எஸ்.கே.வைச் சேர்ந்த தோனி, அஸ்வின், ஜடேஜா, விஜய் ஆகிய நான்கு பேர்தான் டெஸ்ட் தொடரின் நாயகர்கள் (புஜாரா மட்டும் சி.எஸ்.கே.வில் இல்லை!). இதனால் சி.எஸ்.கே. மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாக எகிறியிருக்கிறது. இந்த வருட ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், வழக்கம் போல தன்னுடைய அணியினரை விட்டுக் கொடுக்காமல் அதேசமயம் சில திறமையான உள்ளூர் மற்றும் சர்வதேச வீரர்களைப் புதிதாகத் தேர்வு செய்திருக்கிறது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் இந்தியா சார்பாக அபாரமாக விளையாடிய பாபா அபரஜீத் மற்றும் க்ரிஸ் மோரிஸ், ஜெஸன் ஹோல்டர் போன்ற வெளிநாட்டு வீரர்களும் சி.எஸ்.கே. வீரர்களாக ஐ.பி.எல். லில் அறிமுகம் ஆகிறார்கள். ஓய்வு பெற்றுவிட்டதால் மைக் ஹஸ்ஸி முழு ஐ.பி.எல்.லிலும் விளையாடுவார். ஆனால், சென்ற ஐ.பி.எல்.லில் சி.எஸ்.கே.வின் புதிய நட்சத்திரமாக உருவாகிய தென் ஆப்பிரிக்காவின் டுபிளஸ்ஸி, காயம் காரணமாக ஏப்ரல் வரை ஐ.பி.எல். பக்கமே வரமாட்டார். கடந்த சில வருடங்களில் சி.எஸ்.கே.வின் பெரிய பலமாக இருந்த டக் பொலிஞ்சர் இப்போது அணியில் இல்லை. புதிதாக நுழைந்திருக்கும் அனுபவமிக்க ஆஸி வீரர் டிர்க் நேனஸ் மீது பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறது சி.எஸ்.கே.

வழக்கமாக ஐ.பி.எல். ஆரம்பித்த பிறகுதான் வரிசையாக சர்ச்சைகள் எழ ஆரம்பிக்கும். இந்தமுறை ஆரம்பிக்கும் முன்பே பெரிய தலைவலி கிளம்பியிருக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைக்கு எதிராகக் கிளம்பி இருக்கும் போராட்டங்கள் ஐ.பி.எல்.லில் விளையாடும் இலங்கை வீரர்கள் பக்கம் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் இலங்கை வீரர்கள் விளையாடக்கூடாது என்று பல கல்லூரி மாணவர்கள் டி.வி.யில் பேட்டியளித்தது மேலும் பரபரப்பைக் கிளப்பி இருக்கிறது. சென்னையில் ஆடும்போது மட்டும் ஐ.பி.எல். அணிகள் இலங்கை வீரர்களை அணியில் சேர்க்காமல் இருக்கலாம் என்று ஆலோசனைகள் கிளம்பினாலும் ஃபைனலுக்கு முந்தைய ப்ளே ஆஃப் ஆட்டம் சென்னையில்தான் நடக்கிறது. இதனால் சென்னையில் ஐ.பி.எல். மேட்சுகள் நடக்காமல் போகவும் அல்லது ஏராளமான பிரச்னைகள் உருவாகவும் சந்தர்ப்பங்கள் உருவாகி இருக்கின்றன. 

ஐ.பி.எல்.லில், சி.எஸ்.கே.வுக்கு நிகராக குழு மனப்பான்மை உள்ள அணி எதுவுமில்லை. இதனால்தான், கடந்த ஐந்து ஐ.பி.எல்.களிலும் அரையிறுதிக்குச் சென்ற ஒரே அணி என்கிற பெருமை சி.எஸ்.கே.வுக்கு உண்டு. இந்த வருடமும் சி.எஸ்.கே., மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் ஆகிய அணிகள்தான் வலுவாக இருக்கின்றன. நாலாவதாக அரையிறுதிக்கு நுழையப் போகிற அணி எது என்கிற கேள்விதான் இப்போது. இன்றைய சி.எஸ்.கே., மும்பை இந்தியன்ஸ் அணி போல 2008ல் பீமபலம் கொண்ட அணியாக இருந்த டெக்கான் சார்ஜர்ஸ், நாளடைவில் மிகவும் தொய்வைச் சந்தித்துவிட்டது. இப்போது சன் ரைஸர்ஸாக மலர்ந்திருக்கும் ஹைதராபாத் அணி, புதிய உத்வேகத்துடன் ஐ.பி.எல்.லில் களம் இறங்குகிறது. சச்சின் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் ஐ.பி.எல்.லில் தொடர்ந்து ஆடுவது அவருடைய ரசிகர்களுக்குக் கொண்டாட்டமாக இருக்கிறது. சச்சினுக்காகவே மும்பை இந்தியன்ஸை ஆதரிப்பவர்கள் நிறைய பேர். சென்ற ஐ.பி.எல்.லை வென்ற கௌதம் கம்பீர் மற்றும் ஷேவாக் ஆகியோர் இந்த ஒரு வருடத்தில் நிறைய ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து விட்டார்கள். தன் பழைய ஃபார்மை இருவரும் நிரூபிக்க இதுவே சரியான தருணம். அதேபோல ஜாகீர் கான், ராபின் உத்தப்பா, தினேஷ் கார்த்திக், யூசுஃப் பதான், ஆர்.பி. சிங், ஸ்ரீசாந்த் போன்றவர்களும் மீண்டும் இந்திய அணிக்குள் நுழைய ஐ.பி.எல்.லைத்தான் நம்பி இருக்கிறார்கள்.ஒவ்வொரு வருட ஐ.பி.எல்.லிலும் ஓர் இந்திய வீரர் தன்னை முன்னிறுத்திக் கொள்வார். முதல் ஐ.பி.எல்.லில் யூசுப் பதான், இரண்டாவதில் நெஹ்ரா, மூன்றாவதில் அஸ்வின், நான்காவதில் ராகுல் சர்மா, ஐந்தாவது ஐ.பி.எல்.லில் ரெஹானே என பல வீரர்கள் இந்திய அணிக்குள் புதிதாக அல்லது மீண்டும் நுழைய பெரிய வாய்ப்பைத் தந்தது, ஐ.பி.எல். இந்த வருடமும் அதே எதிர்பார்ப்புகள் தான். எந்த அணி ஐ.பி.எல்.யை வெல்லப் போகிறது? புதிய நட்சத்திர வீரர் யார்?

Wednesday, March 27, 2013

எனது இந்தியா (அவுரியின் வீழ்ச்சி !) - எஸ். ரா

பறிக்கப்பட்ட அவுரிச் செடியின் இலை​களைப் பதப்படுத்தி பாளங்களாக மாற்றுவதற்காக, ஆங்கிலம் பேசத் தெரிந்த உயர் வகுப்பு இந்தியர்கள் தொழிற்சாலைகளில் பணியில் அமர்த்தப்பட்டனர். நேரடியாக விவசாயப் பணிகளை மேற்பார்வை பார்க்க ஜமேதார் எனப்படும் நபர் நியமிக்கப்பட்டார். முன்ஷி எனப்படுபவர்  தொழிற்சாலைக் கண்காணிப்பாளர். படித்த இந்தியர்களை, ஆங்கிலேயர் தங்களது விசுவாசிகளாக இந்தத் தொழிலில் இணைத்துக்கொண்டனர். 19-ம் நூற்றாண்டில் இரண்டு விதமான முறைகளில் அவுரி உற்பத்தி நடந்தது. ஒன்று, ஜமீன்தார்கள் தங்களுக்கு உரிமையான கிராமங்களில் உள்ள நிலங்களை ஆண்டுக் குத்தகைக்கு வெள்ளைகாரர்களுக்கு அளித்தனர். ஆண்டுக் குத்தகை வருஷத்துக்கு ஐந்து ரூபாயில் இருந்து முப்பது ரூபாய் வரை இருந்தது. மற்றொன்று, நில உரிமையாளர்கள் தங்கள் நிலத்தில் ஐந்தில் மூன்று பகுதியை அவுரி விவசாயம் செய்வதற்கு கட்டாய ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டனர். இப்படி ஒப்பந்தம் செய்யப்பட்டவர்களுக்கு பிரிட்டிஷ் கம்பெனி முன்பணம் தருவது உண்டு.

முன்நிர்ணயிக்கப்பட்ட விலைக்குத்தான் விவசாயி தனது அவுரிச் செடியை விற்க முடியும் என்ற கட்டுப்பாடு காரணமாக, ஏழை விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டனர். ஒரு ஏக்கர் அவுரிக்கு 12 ரூபாய் வழங்கி இருக்கின்றனர். சில இடங்களில் 10 ரூபாய் 7 அணா தரப்பட்டது. இப்படி, ஆயிரக்கணக்கான ஏக்கரில் அவுரி கட்டாயப்படுத்திப் பயிரிடப்பட்டது. பிரிட்டிஷ் வணிகர்கள் அவுரிச் செடியை விவசாயம் செய்வதற்குக் கடன் வழங்க வங்கிகள் முன்வந்தன. குறிப்பாக, ஆக்ரா வங்கி மற்றும் மாஸ்டர்மேன் வங்கி ஆகியவை குறைந்த வட்டியில் கடன் வழங்கின. இந்தக் கடன்தொகையைக்கொண்டு இவர்கள் அவுரி பயிடுவதற்கான நிலக்குத்தகை, விவசாயக் கூலி, ஃபேக்டரி நடத்துவது மற்றும் இதர செலவுகளைக் கவனித்துக்கொண்டனர். இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த 5 முதல் 15 ஆண்டுகள் வரை அவகாசம் தரப்பட்டது.


சந்தையில் விற்பனை செய்வதற்காகக் கொண்டுசெல்லப்பட்ட அவுரிச் செடி, இடைத்தரகர்கள் மூலமே வெளிநாட்டுக் கம்பெனி​களுக்கு விற்கப்பட்டது. இந்தத் தரகு வணிகத்தில் ஈடுபட்டவர்கள் ஜே தாமஸ் அண்ட் கம்பெனி மற்றும் மோரோன் கம்பெனி ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இந்தக் கம்பெனிகளுக்கு இரண்டரை சதவிகிதம் வரை கமிஷன் தரப்பட வேண்டும்.

அதன் பிறகுதான் கப்பலில் ஏற்றி இங்கிலாந்துக்கு அனுப்பிவைக்கப்படும். அங்கும் நேரடியாக யாரும் அவுரியை வாங்க முடியாது. இஙகிலாந்திலும் இடைத்தரகர்கள் இருந்தனர். அவர்கள் இந்தியாவில் இருந்து கப்பலில் வந்து இறங்கும் அவுரிச் செடியை, உள்ளுர் விற்பனையாளர்கள் கொள்முதல் செய்வதற்குத் தரகு செய்தனர். அவர்களின் கமிஷன் தொகை இரண்டு சதவிகிதம். இப்படி, உள்ளூர் மேனேஜர் தொடங்கி இங்கிலாந்து இடைத்தரகர் வரை அத்தனை பேருக்கும் கொள்ளை லாபம் ஈட்டித்தரும் பொருளாக இருந்தது அவுரிச் செடி. ஆகவே, அதன் உற்பத்தியை அதிகரிக்க பிரிட்டிஷ் கம்பெனி பல தந்திரங்களையும் அடக்குமுறைகளையும் மேற்​கொண்டது.


தங்கள் சொந்த உபயோகத்துக்​காகவும் உள்ளூர்ச் சந்தைக்காகவும் பல பயிர்கள் ஒன்றாக விளைந்த இந்திய நிலங்களை, இண்டிகோ போன்ற ஓரினப் பயிர் தோட்டங்களாக மாற்றி, அயல்நாட்டுச் சந்தையில் அதிக லாபம் சம்பாதித்து இந்திய விவசாயத்தின் அடிப்படையையே நிர்மூலம் செய்தது பிரிட்டிஷ் அரசு. சுதந்திரமாக இருந்த விவசாயிகள், பயிர்த் தோட்டத் தொழிலாளிகளாக மாறுவதற்கு நிர்ப்பந்தம் செய்யப்​பட்டனர். வங்காளத்தில் உள்ள விவசாயிகள் அவர்களுடைய நிலத்தின் மூன்று பங்கில் கட்டாயமாக அவுரி பயிரிட்டாக வேண்டும் என்ற சூழ்நிலை நிலவியது. இன்னொரு பக்கம், அதிகாரத் திமிர் பிடித்த சாயத் தோட்ட முதலாளிகள் விவசாயிகளை சாட்டையால் அடித்தும் அவர்களுடைய குடும்பங்​களைப் பட்டினி போட்டும் கொடுமைப்​படுத்தினர். இதனால், ஆத்திரம் அடைந்த விவசாயிகள், அவுரி பயிர் செய்ய மறுத்தனர். இந்தச் சூழலில் 'இண்டிகோ கமிஷன்’ அமைக்கப்பட்டது. அது, பிரிட்டிஷ் வணிகர்களுக்கு மேலும் சாதகமான பல வழிகளை உருவாக்கித்தந்தது. அதன்படி, அவுரி விவசாயம் செய்பவர்களுக்கு புதிய வரிகள் விதிக்கப்பட்டன. வரி செலுத்த முடியாதவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர்.

பிச்சை எடுத்தாவது வாழ்வோம். ஆனால், அவுரிச் செடி பயிர்செய்ய மாட்டோம் என்று சொன்ன விவசாயிகள் ஆயுத முனையில் ஒடுக்கப்பட்டனர். இந்த ஒடுக்கு​முறைக்குத் துணையாக ராணுவமும், தனிப்படையும் ஒன்று சேர்ந்தன. 1910-களில் சம்பரண் மாவட்டத்தில் பஞ்சம் எற்படும் நிலை உருவானது. வரிச் சுமையும் பஞ்சமும் ஒன்று சேர சாயத் தோட்ட முதலாளிகளுக்கு எதிராகக் கலகங்கள் உருவாகின. தீனபந்து மித்ரா என்பவர், அவுரித் தோட்டங்களில் கஷ்டப்படும் விவசாயிகளின் நிலையை விளக்கி 'நீலதர்பன்’ என்ற நாடகத்தை எழுதினார். இந்த நாடகம், 1872-ம் ஆண்டு டிசம்பர் 7-ம் தேதி மேடை ஏற்றப்பட்டது. இது, அரசு எதிர்ப்பு நாடகம் என்று கருதிய பிரிட்டிஷ் அதிகாரிகள் அந்த நாடகத்தைத் தடைசெய்தனர். ஆனால், அந்த நாடகம் ஏற்படுத்திய தாக்கம் அவுரித் தோட்டக் கூலித் தொழிலாளர்கள் மத்தியில் பெரிய கிளர்ச்சியை ஏற்படுத்தியது. விஷ்ணு சரண் தாஸ், திகம்பர் பிஸ்வாஸ் ஆகிய இருவரும் இந்த எழுச்சிக்குத் தலைமை வகித்தனர்.

முர்ஷிதா பாத், பர்த்வான், குல்னா, பபானா என மக்கள் எழுச்சி உருவாகத் தொடங்கியது. சாயத் தோட்ட முதலாளிகளாக இருந்த வெள்ளைக்​​காரர்கள் தாக்கப்பட்டனர். சிலர், குடும்பத்துடன் தப்பி ஓடினர். அவுரி தொழிற்சாலைகளுக்குத் தீ வைக்கப்​பட்டன. பத்துக்கும் மேற்பட்ட ஊர்களில் வெள்ளைக்கார ஏஜென்ட்கள் கொல்லப்பட்டனர். இதன் விளைவாக உருவான கலவரத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியது பிரிட்டிஷ் அரசு. ஆனாலும், அவுரி விவசாயிகளின் பிரச்னை தீரவில்லை. அவுரி உற்பத்தி மீது விதிக்கப்பட்ட வரியைச் செலுத்த முடியாது என்று, மக்கள் தொடர்ந்து குரல் எழுப்பினர். தென் ஆப்பிரிக்காவில் இனவெறிக்கு எதிராகப் போராடிய காந்தி, 1917-ம் ஆண்டு சம்பரான் கலவரம் பற்றிக் கேள்விப்பட்டு நேரடியாகக் களம் இறங்கினார். இந்தப் போராட்டம் குறித்து எழுதியுள்ள ராஜேந்திர பிரசாத், ''எந்தத் தலைவரும் பீகாருக்குள் செல்ல அனுமதிக்கப்படாத சூழலில், காந்தி துணிச்சலாக சம்பரான் மக்களைத் தேடிச் சென்றதும் அந்த மக்களுடன் இணைந்து நின்று வரிகொடா என்ற இயக்கத்தை ஆரம்பித்ததும் மகத்தான செயல். அது, உண்மையான மக்கள் போராட்டம். காந்தி, கிராமம் கிராமமாகச் சென்று மக்களைச் சந்தித்துக் கஷ்டங்களைக் கேட்டறிந்தார். குப்பை படிந்துகிடந்த வீதிகளை, வீடுகளை, காந்தி உள்ளிட்ட சேவா சங்கத்தினர் சுத்தம் செய்தனர். அந்த எளிய செயல் மக்கள் மத்தியில் காந்தியை மகத்தான தலைவராக உயர்த்தியது'' என்கிறார்.

சம்பரணில் ஆசிரமம் ஒன்றை நிறுவிய காந்தி, அந்தப் பகுதி மக்கள் அரசுக்கு வரி கொடுக்காமல் அறவழியில் தங்கள் எதிர்ப்பைக் காட்டுமாறு ஊக்குவித்தார். அதன்படி, மக்களும் வரி கொடுக்க மறுத்தனர். மக்களிடையே கலகத்தைத் தூண்டினார் என்று குற்றம் சாட்டிய பிரிட்டிஷ் அரசு, காந்தியைக் கைதுசெய்து சிறையில் அடைத்தது. ஆனால், வரிகொடாப் போராட்டம் வலுவடைந்த காரணத்தால் அவர் விடுதலைசெய்யப்பட்டார்.

முடிவில், பஞ்ச காலம் முடியும் வரை வரி வசூலும், வரி விகித உயர்வும் நிறுத்திவைக்கப்பட்டன. அவுரி பயிரிடுவோருக்கு உரிய பணம் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த அறவழிப் போராட்டமே காந்தியின் முதல் வெற்றி. 1880-ல் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட செயற்கைச் சாயம் காரணமாக, இண்டிகோ ஏற்றுமதி குறையத் தொடங்கியது. ரசாயனப் பொருட்களைக்கொண்டு தயாரிக்கப்பட்ட சாயத்தின் விலை மிகக் குறைவாக இருந்த காரணத்தால், இயற்கைச் சாயமான அவுரி உற்பத்தி பாதிக்கப்பட்டது. தொடர்ச்சியான விலை வீழ்ச்சி காரணமாக அவுரி உற்பத்தி வெகுவாகக் குறைந்தது. அடுத்த 10 ஆண்டுகளில், பணப்பயிர் என்ற அந்தஸ்தை அவுரிச் செடி முற்றிலும் இழந்தது.

இன்றும் மருந்துப் பொருளாக அவுரி வெளி​நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது என்றாலும், பிரிட்டிஷ் காலத்தில் நடந்ததுபோல லட்சக்கணக்கான டன் ஏற்றுமதி ஆவதில்லை. காந்தியின் முதல் அறப்போருடன் தொடர்புடைய இந்த அவுரி விவசாயிகளின் போராட்டம் காலமாற்றத்தில் கவனம் பெறாமலேயே போய்விட்டது. ஆனால், அன்று தொடங்கிய விவசாய மாற்றம் அதன் உச்சபட்சமாக தனது சொந்த விதைகளை இழந்து ஒட்டு ரகங்கள், வெளிநாட்டு விதைகள், மிதமிஞ்சிய பூச்சி மருந்துகள் என்று இந்திய விவசாயம் அதன் இயல்பான வளமையை இழந்துவிட்டது.

பணப்பயிருக்கான விவசாயம் என்பது முதன்மையானதோடு விளைநிலங்கள் பிளாட்டுகளாக விற்பனையாகும் மோசமான நிலைக்கு இந்திய விவசாயம் தள்ளப்பட்டு இருக்கிறது. இந்த வீழ்ச்சியின் முதற்புள்ளி என்ற அளவில், அவுரி விவசாயம் ஏற்படுத்திய நிகழ்வுகள் வரலாற்றின் எச்சரிக்கை மணியாகும்.

Tuesday, March 26, 2013

உங்கள் சர்க்கரையில் சத்து இருக்கிறதா..?

சர்க்கரை, பல தாவரங்களில் உண்டென்று கூறினேன். அவற்றில் கரும்பு, பனை, தென்னை முக்கியமானவை. பனை, தென்னை மரங்களிலிருந்து இப்போதும் சர்க்கரை உற்பத்தி செய்யப்படுகிறது. என்றாலும், உலக சர்க்கரை வர்த்தகத்தில் பெரும்பகுதியாக இருப்பது கரும்பிலிருந்து கிடைக்கும் சர்க்கரைதான். ஆகவே, இதை முதலில் தெரிந்துகொள்வோம்.

'இதைத் தெரிந்து கொண்டு நமக்கு என்ன ஆகப்போகிறது?'

இன்றைக்கு, சர்க்கரை நோயாளிகள் பட்டியலில் உலக அளவில் நாம் முதலிடம் பிடித்திருப்பதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளத்தான்! ஆம்... சத்துமிக்க பொருளாக விளையும் கரும்பு, 'வெள்ளைச் சர்க்கரை' என்கிற பெயரில் எப்படி நஞ்சாக மாற்றப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளத்தான்!

வயல்களில் விளையும் கரும்பு, சர்க்கரை ஆலைகளுக்குள் போய், சர்க்கரையாக மாறுவதற்கு முன் பல்வேறு கட்டங்களைக் கடக்க வேண்டும். முதலில், கரும்பைத் துண்டுகளாக்கி, அதன் சாறு பிழியப்படுகிறது. இந்தக் கரும்புச் சாற்றில் சுண்ணாம்பு சேர்க்கப்பட்டு கொதிக்க வைக்கப்படுகிறது. பிறகு, இந்தக் கலவை ஆற வைக்கப்படுகிறது. இதில் வரும் சர்க்கரைப் பாளங் களை, திடமான கரும்பு சாற்றில் கலக்கிறார்கள். இதற்கு, 'அஃபினேஷன்' (Affination) என்று பெயர். கரும்புச் சாற்றின் இயல்பான நிறம் பழுப்பு. இந்த நிறம், இத்தகைய செயல்பாடு மூலமாக சற்று மாறுகிறது.


அடுத்த கட்டமாக, கார்பனேஷன் அல்லது ஃபாஸ்படேஷன் என்ற முறைகளில் சுத்தப்படுத்தப்படுகிறது. கார்பனேஷன் முறையில் கால்சியம் ஹைராக்ஸைடு + கார்பன் டை ஆக்ஸைடு கலவை பயன்படுத்தப்படுகிறது. இன்னொரு முறையில் கால்சியம் ஹைட்ராக்ஸைடு + ஃபாஸ்பாரிக் அமிலம் கலவை பயன்படுகிறது. இதன் மூலம் மேலும் சில பொருட்களும் சர்க்கரை சாற்றிலிருந்து நீக்கப்படுகின்றன.

அடுத்த கட்டமாக, 'ஆக்டிவேட்டட் கார்பன்’ என்கிற எலும்புச் சாம்பல் படுகையில் கரும்புச் சாறு செலுத்தப்படுகிறது. இதுவே சர்க்கரையின் பரிசுத்த வெள்ளை நிறத்துக்குக் காரணம் (தற்போது இதற்கு மாற்றாக 'அயன் எக்சேஞ்ச் ரெசின்’ என்கிற படுகையை சில இடங்களில் உபயோகிக்கிறார்கள்). வெள்ளையாக்கப்பட்ட இந்தச் சாறு, மறுபடியும் கொதிக்க வைக்கப்படுகிறது. அதன் பின்னர், அந்தக் கலவை ஆறியபின், அதன் மேல் சிறிது சர்க்கரைத் தூளைத் தூவுகிறார்கள். முடிவு - வெண்மையாக ஜொலிக்கும் வைரத்துகள்கள் போன்ற 'சீனி’ குவியல் கிடைக்கிறது.

இதில், பிழிந்ததுபோக மீதம் இருக்கும் சக்கைக் கலவை 'மொலாஸஸ்' (Molasses)  என்கிற பெயரில் ஒதுக்கப்படுகிறது. இக்கலவையிலும் 30% சுக்ரோஸ், 25% குளுக்கோஸ் மற்றும் ஃபிரக்டோஸ், சிறிது இரும்புத்தாதுக்கள் மிஞ்சி இருக்கின்றன. இக்கலவை பிரவுன் சர்க்கரை செய் வதற்கும், மதுபானம் தயாரிப்பதற்கும், மாற்று எரிபொருள் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப் படுகிறது ('பிரவுன் சுகர்' என்கிற பெயரில் கிடைக்கும் போதைப்பொருளுக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை).

சர்க்கரை ஆலையில் நடைபெறும் இத்தனை வேதியல் முறைகளையும் என்ன பெயர் சொல்லி அழைக்கிறார்கள் தெரியுமா? 'சுத்திகரிப்பு முறைகள்' (Refining Process/Purification) அதாவது, கரும்புச் சாற்றில் கலந்துள்ள மாசுகளையும், அசுத்தங்களையும் (Impurities)  அகற்றுகிறார்களாம்! உண்மையில் அவர்கள் அகற்றுவது முழுக்க முழுக்க நம்முடைய உடலுக்கு நன்மை தரக்கூடிய சத்துக்களைத்தான்! ஆம்... சுத்திகரிக்கும் முன் கரும்புச் சாற்றில் உள்ள சத்துப் பொருட்கள் என்னென்ன என்பது தெரிந்ததால், நீங்கள் அதிர்ந்துதான் போவீர்கள் (பார்க்க பெட்டிச் செய்தி)!

கரும்புச்சாறு மொத்தம் மூன்று முறை கொதிக்க வைக்கப்படுகிறது. இதில் ஆவியாகிப் போகும் சத்துக்கள் பல. அதன்பின் சுண்ணாம்புக் கலவை, கால்சியம் ஹைட்ராக்ஸைடு, கார்பன் டை ஆக்ஸைடு, சல்ஃபர் டை ஆக்ஸைடு, ஃபாஸ்பாரிக் அமிலம் போன்ற வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் பல்வேறு கெடுதல்களுக்குக் காரணமாக அமைவதாகப் பலர் உறுதியாக நம்புகின்றனர்.

கரும்புச் சாற்றிலிருக்கும் அத்தனை சத்துப் பொருட்களும், உடலுக்குத் தேவையான வைட்டமின்களும், கனிமங்களும், நுண் ஊட்டப்பொருட்களும் ஒட்டுமொத்தமாக நீக்கப்பட்டு, 260 கலோரிகள் மட்டுமே கொடுக்கும் வெறும் இனிப்பு மிட்டாயாகத்தான் (Empty calories) சர்க்கரை நம்மிடம் வந்து சேர்கிறது.

இங்கே ஒரு விஷயத்தையும் மறக்காமல் சொல்லியாக வேண்டும். சர்க்கரையின் வெண்மை நிறத்துக்குக் காரணமாக அமைவது - மாடு அல்லது பன்றியின் எலும்புச் சாம்பல்தான். ''நீங்கள் எல்லோரும் இதுவரை, 'சர்க்கரை சைவ உணவு' என்று நினைத்திருந்தால், உங்கள் கருத்தை உடனே மாற்றிக்கொள்ளுங்கள்!'

இந்த வெள்ளைச் சீனியைவிட, மொலாஸஸ் மூலம் தயாரிக்கும் 'பிரவுன் சீனி' சற்று உயர்ந்தது என்று பலரும் முதலில் நினைத்தனர். ஆனால், அது வெறும் கற்பனைதான்.

நட்சத்திர ஹோட்டல்கள் சிலவற்றில் காபி கப்புடன் வெள்ளைச் சீனி, பிரவுன் சீனி, சுகர் ஃபிரீ பொட்டலங்கள் வைக்கப்படும் - உண்மையில் வெள்ளைச் சீனிக்கும் பிரவுன் சீனிக்கும் பெரிய வித்தியாசங்கள் எதுவும் இல்லை என்று ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டு விட்டது. இரண்டுமே கெடுதிதான்

கரும்புச் சாறுக் கலவையைக் கொதிநிலையில் வைத்து, வேதிப் பொருட்கள் எதுவும் சேர்ப்பதற்கு முன் கட்டியாக எடுக்கப்படும் பொருள்தான் கருப்பட்டி. இதையும் 'பிரவுன் சர்க்கரை' என்று சிலர் அழைப்பர். இந்த சர்க்கரை, உண்மையில் உடலுக்கு மிகவும் நல்லது. இதைப் பற்றியும் பின்னர் விளக்குகிறேன்.

அரிசியோடு சற்று ஒப்பிட்டுப் பாருங்கள். அரிசியையும் இப்படித்தானே கெடுத்தோம்? சத்துக்கள் மிகுதியான தவிட்டுப் பகுதியை அறவே நீக்கிவிட்டு, மேலும் மேலும் தீட்டி வெறும் இனிப்புப் பண்டமாக மாற்றினோம் அல்லவா - அதையேதான் சர்க்கரையிலும் செய்திருக்கிறோம். கரும்புச் சாற்றில் இயற்கையாக உள்ள அத்தனை சத்துக்களையும் உறிஞ்சிவிட்டு, சத்தே இல்லாத வெறும் இனிப்பு மிட்டாயாக மாற்றிவிட்டோம். விளைவு? வெள்ளை அரிசி எப்படிச் சர்க்கரை நோய்க்கு மூலகாரணமாக அமைகிறதோ, அதற்குக் கொஞ்சமும் சளைக்காமல் வெள்ளை சர்க்கரையும் அதே வேலையைத்தான் செய்கிறது.

முன்பெல்லாம் உலகளவில் சராசரி மனிதன் ஒரு வருடத்தில் 7 - 10 கிலோ சர்க்கரை மட்டுமே உபயோகித்தான். தற்போது சராசரி ஆண்டு உபயோகம் 25 - 30 கிலோ வரை உயர்ந்துவிட்டது. உலகளவில் சர்க்கரை நோய்த் தாக்கம் தற்போது அதிகமாகி வருவதற்கும் இதற்கும் தொடர்பு உண்டென்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால்... 'அரிசிக்கும் சர்க்கரை நோய்க்கும் நேரடித் தொடர்பு இல்லை' என்று எப்படி இதுவரை டாக்டர்கள் சொல்லி வந்தார்களோ, அதைப்போலவே... 'சீனிக்கும் சர்க்கரை நோய்க்கும் தொடர்பில்லை' என்று பெரும்பாலான டாக்டர்கள் இப்போதும் கூறிவருவதுதான் வேடிக்கை?!

Monday, March 25, 2013

குருவே சரணம்... திருவே சரணம்! - 2


'இந்த ஊர்ல சிவாலயம் எங்கே இருக்கு?'' 

அன்பர் மாலியின் இந்தக் கேள்விக்கு, கூட்டத்தில் எவரிடம் இருந்தும் பதில் இல்லை.

அவர்களில் பழுத்த பழமான ஒரு முதியவர் மட்டும், 'இங்கே ஒரு பெருமாள் கோயில் இருக்கு. அதுபோக, மாரியம்மன் கோயிலும் அய்யனார் கோயிலும் உண்டு. ஊர் எல்லையில் ஒரு பிள்ளையார் கோயில் இருக்கு. அவ்வளவுதான். மத்தபடி இங்கே சிவன் கோயில் எதுவும் இருக்கிறதா தெரியலையே?'' என்றார். 90 வயது மதிக்கத்தக்க அந்தப் பெரியவருக்கே சிவாலயம் குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை என்றால், மற்றவர்களுக்குத் தெரிந்திருக்க வழி இல்லையே!

மகா பெரியவா மறுபடியும் ஏதோ சைகையால் கேட்டார்... 'மேல் கோடியில பெருமாள் கோயில் இருந்தா, கீழ்க் கோடியில சிவன் கோயில் இருந்திருக்கணுமே?''

நிச்சயம் இருந்திருக்கும். ஆனால், தற்போது அங்கே சிவாலயம் இல்லை. முன்னொரு காலத்தில் இருந்ததா என்றால், அதுகுறித்தும் அந்த ஊர்க்காரர்களுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. அனைவரும் மௌனமாக இருந்தார்கள்.


அந்த நேரத்தில் ஓர் இஸ்லாமிய தம்பதி அங்கே வந்த னர். தன்னை லத்தீஃப் பாய் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த இஸ்லாமிய அன்பர், தன் மனைவியின் பெயர் மெகருன்னிசா என்றும் தெரிவித்தார். தாம் கொண்டு வந்திருந்த இரண்டு சீப்பு பேயன் பழங்களை யும், ரோஜாப் பூக்களையும் மகாபெரியவா முன் சமர்ப்பித்தார்.

அவர்களை தலை முதல் பாதம் வரை ஏற இறங்கப் பார்த்தது நடமாடும் தெய்வம். கருணை மிகுந்த அந்தப் பார்வையில் மெய்ம்மறந்து போனார்கள் அந்த இஸ்லாமிய தம்பதியர். ஒருவாறு சுதாரித்துக்கொண்டு, சிலிர்ப்பான அந்தத் தருணத்தில் இருந்து மீண்டு, லத்தீஃப் பாய் பேசத் தொடங்கினார். அற்புதமான ஒரு தகவலை விவரித்தது அவரது பேச்சு.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னால், அங்கே சிவன் கோயில் ஒன்று இருந்திருக்கிறது. காலமாற்றத்தில் கோயில் சிதிலமாகி, மண்ணுக்குள் புதையுண்டு போனது. கோயில் இருந்த இடமும் பலரால் ஆக்கிரமிக்கப்பட்டு, பலப் பல கைகள் மாறி, இப்போது லத்தீஃப் பாயின் வசம் இருக்கிறது.

'எங்க வாப்பா பள்ளிவாசல் நிலங்களைக் கவனிச்சுக் கும்போது, கூடவே கோயில் நிலங்களையும் குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்தாக. ஒரு மரக்கால்கூட குறையாம அளந்து கொடுப்பாக. 'சிவன் சொத்து குலம் நாசம்’னு அவுகளுக்கு இருந்த அதே நேர்மையை யும், நல்ல எண்ணத்தையும், புத்தியையும் எனக் கும் கொடுத்திருக்கான் இறைவன். ஆனாலும் என்ன... எனக்குப் பொறந்த ஒரு பெண் பிள்ளை யும் மன வளர்ச்சி இல்லாம இருந்து, பத்து வருஷத்துக்கு  முன்னாடி இறந்தும் போச்சு.

சரி... நாம அறிந்தோ அறியாமலோ பாவம் செஞ்சிருக்கோம்போல; அதனால்தான் அல்லா நமக்கு இப்படியரு தண்டனையைக் கொடுத் திருக்காருன்னு சமாதானம் பண்ணிக்கிட் டோம். காலமும் அப்படியும் இப்படியுமா ஓடிப் போயிடுச்சு. நேத்திக்கு கொல்லைப்பக்கம் மண்ல வேலை செஞ்சுட்டிருந்தேன். அப்ப... மண்வெட்டி ஏதோ கல்லுல பட்ட மாதிரி 'ணங்’குனு ஓசை கேட்டுச்சு. கவனமா மண்ணை விலக்கிப் பார்த்தால்... பெரிய சிவலிங்கம்! ராத்திரி முழுக்க உறக்கம் வரல்லே சாமி! 'அல்லா... இப்ப என்ன பண்றது!’ன்னு புரியாம, விசனத்தோட உட்கார்ந்திட்டிருந்தோம். விடிஞ்சதும் தான், சாமி இங்கே வந்திருக் கிறதா பக்கத்துல இருந்த ஜனங்க பேசிக்கிட்டாங்க. உடனே இங்கே ஓடி வந்துட்டோம். இதுக்குமேல நான் என்ன செய்யணும்னு சாமி தான் வழி காட்டணும்.

மனசார என் நிலத்தை எழுதித் தர்றேன். இதுக்காக எனக்கு பணம், காசு எதுவும் வேணாம். முன்னே இருந்த மாதிரியே அங்கே சிவன் கோயில் கட்டிக்கலாம். ஊர் ஜனங்களுக்கு அது பயன்பட்டுதுன்னா, அதனால ஊர் ஜனங்க சந்தோஷப்படுவாங்கன்னா, அதுவே அல்லாவையும் சந்தோஷப்படுத்தும்!'' என்று நெகிழ்ச்சியோடு, கண்ணீர் மல்கப் பேசி முடித்தவர், அப்படியே இன்னொரு காரியத்தையும் செய்தார்.

''இந்தாங்க, கோயில் கட்ட எங்களோட காணிக்கையா நூத்தியரு ரூபாய். முதல் வரவா இதை வாங்கிக்குங்க!' என்று வெற்றிலை பாக்குத் தட்டில் வைத்துக் கொடுத்தார். அங்கிருந்த அனைவருக்கும் உடம்பு சிலிர்த்துப் போட்டது.

அதுவரை மௌனமாக எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த மகா பெரியவா, புன்னகையோடு சைகையால் அந்த இஸ்லாமிய அன்பரை ஏதோ கேட்டார். அது அவருக்குப் புரியாமல் போகவே, ஒரு சிலேட்டும் பலப்பமும் கொண்டு வந்து மகாபெரியவாளிடம் தந்தார்கள். அவர் சிலேட்டில் எழுதிக் காண்பித்தார்... 'மார்க்கக் கடமையை முடித்துவிட்டீர்களா?’ என்று.

படித்துப் பார்த்த இஸ்லாமிய அன்பர், ''இன்னும் இல்லே சாமி! அதுக்கான பண வசதியை அல்லா இன்னும் எங்களுக்குக் கொடுக்கலை. எத்தனையோ வருஷம் முயற்சி பண்ணியும் மக்கா- மதீனா போகும் பாக்கியம் இன்னும் வாய்க்கலை'' என்றார் கண்ணீர் மல்க.

உடனே பெரியவா, வைத்தியநாதன் நின்றிருந்த பக்கமாகத் திரும்பினார். ''இத்தனை உசத்தியான மனுஷர் நிலத்தைத் தரேன்கிறார். அவாளுக்கு நாம எந்த ஒத்தாசையும் செய்ய வேண்டாமா?'' என சைகையால் கேட்டார். தொடர்ந்து, என்ன செய்ய வேண்டும் என்பதையும் சைகை யாலேயே உத்தரவு பிறப்பித்தார். பெரியவாளின் விருப்பத்தை அப்படியே கூட்டத்தாரிடம் எடுத்துச் சொன்னார் வைத்தியநாதன்.

அவ்வளவுதான்... ஒட்டுமொத்த ஊரும் சேர்ந்து ஒரே குரலில் ஒப்புக்கொண்டது... ''அவங்க புனித யாத்திரை போய்வர ஆகற செலவு மொத்தமும் நம்மளோடது!''

அதைக் கேட்டு இஸ்லாமிய தம்பதிக்கு மனம்கொள்ளா மகிழ்ச்சி! அவர்களுக்கு மட்டுமில்லாமல், அங்கிருந்த எல்லோருக்குமாக, கை தூக்கி ஆசீர்வாதம் செய்தது மானுட தெய்வம்.

பிறகு, மெள்ள எழுந்த மகாபெரியவா, தூணில் சாத்தியிருந்த தண்டத்தை கையில் எடுத்துக்கொண்டார். அப்படியே நடந்து வந்து பல்லக்கில் ஏறி உட்கார்ந்துகொண்டார். மீண்டும் ஊர்க்காரர்களைப் பார்த்து ஒரு புன்னகை; கரம் உயர்த்தி ஆசீர்வாதம்!

பரிவாரங்கள் பின்தொடர, பல்லக்குப் புறப்பட்டது.

ஊர்வலத்துடன் வந்த அன்பர் மகாலிங்கம் சொன்னார்... 'எனக்கு இப்பத்தான் தெரியுது... மகாபெரியவா ஏன் திடீர்னு இந்த ஊருக்கு வர முடிவு பண்ணினார்னு!''

காரணம் இன்றிக் காரியம் இல்லையே! மகாபெரியவாளின் ஒவ்வொரு அசைவுக்கும் ஒரு காரணம் உண்டு!

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

Sunday, March 24, 2013

அருள்வாக்கு - யௌவன சாகசம்!


நிஜமான மநுஷ்யர்களாக நல்லபடி வளர்ச்சி பெறாமல் தாங்கள் வீணாகப் போய்விடக்கூடாது என்ற கவலை, தாபம், விசாரம் மட்டும் வாலிபர்களுக்கு இருந்து விட்டால் போதும்; பிரியப்பட்டு மூக்கணாங்கயிறு போட்டுக் கொண்டு விடுவார்கள்; மற்றவர்கள் போடுவதற்கும் இஷ்டப்பட்டு விட்டுவிடுவார்கள்.

அவர்களுக்கு இந்தக் கவலையை எப்படி உண்டு பண்ணுவது? பெரியவர்கள்தான் விடாமல் பிரியத்துடனும் பொறுமையுடனும் எடுத்துச் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும். அப்படிச் சொல்லவேண்டுமானால் சொல்பவர்களும் கட்டுப்பாடான வாழ்க்கை நடத்துபவர்களாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களுடைய வாயுபதேசத்துக்கு என்ன மதிப்பு இருக்கும்? அதற்கு யார் காது கொடுப்பார்கள்? அதுவும் generation gap என்று நன்றாகவே ஊறிப்போய்விட்ட இளந்தலைமுறைக்காரர்கள் கேட்பார்களா? அவர்களுக்காகவே gap தெரியாவிட்டாலும் இக்காலச் சிந்தனையாளர்களும், மனோதத்வ ஆராய்ச்சியாளர்களும் நவநாகரிகர்களும் சொல்லிக் கொடுத்தாவது இப்படி ஒரு gap-ஐ தெரிந்து கொண்டு விட்ட இளந்தலைமுறைக்காரர்கள் கேட்பார்களா?

தற்காலத்திலுள்ள பெரும்பாலான பெரியவர்கள் இந்தக் கட்டுப்பாடான வாழ்க்கை நடத்தும் விஷயத்தில் கேள்விக்குரியவர்களாகத்தான் இருப்பதாகத் தோன்றுகிறது. அவர்களுடைய வார்த்தைக்கு என்ன ‘வால்யூ’ இருக்கும்? ஆகையினால் இளம் தலைமுறையினரை உத்தேசித்தாவது வயதான தலைமுறையினர் நன்னெறிகளில், - நல்லொழுக்கங்கள் என்கிறவற்றில் - கட்டுப்பட்டு வாழ ஆரம்பிக்க வேண்டும். அதை அடுத்த தலைமுறையினருக்கும் உரிய முறையில் பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.

இப்படி மற்றபேர்தான் தங்களை நல்வழிக்குக் கொண்டு வர வேண்டும் என்று வாலிபர்கள் விட்டுவிடாமல் தாங்களாகவே நல்வழிப்படுவதுதான் அழகும், கௌரவமும். பெரியவர்கள் இவர்களுக்கு உதாரணம் காட்டுவதற்குப் பதில் இப்போதுள்ள ஸ்திதியில் இவர்களே பெரியவர்களுக்கு உதாரணம் காட்டும்படி தங்களை உசுப்பி எழுப்பிக் கொண்டால் அதுதான் யௌவன சாகசங்களில் ரொம்பவும் விசேஷமான ‘க்ரெடிடபி’ளான சாகசமாக இருக்கும்.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

குருவே சரணம்... திருவே சரணம் -1


'குரு’ என்றால் 'கனமானது’, 'பெரிது’ என்று அர்த்தம். அதாவது, பெருமை உடையவர், மகிமை பொருந்தியவர் என்று அர்த்தம். 'கு’ என்பது இருட்டு; 'ரு’ என்றால் போக்குவது. ரொம்பவும் இருட்டாக இருப்பதை கும்மிருட்டு என்போம். இதில் உள்ள 'கு’ இருட்டைக் குறிப்பதுதான். ஆக, இருட்டைப் போக்கடிப்பவர் என்பதே 'குரு’வுக்கான அர்த்தமாகிறது. ஒரு மஹானை குரு என்று ஒருவன் நாடிப்போய் அவரின் சிஷ்யனாகிவிட்டானேயானால், அவர் அவனுடைய உள் இருட்டைப் போக்கி ஞானம் தந்துவிடுவார்!’

'குரு’ என்ற பதத்துக்கு காஞ்சி மகாபெரியவா தந்த மிக அற்புதமான விளக்கம் இது. இதற்கு மிகச் சிறந்த உதாரணமும் அவரேதான்! தமது திருவடி நிழல் தேடி வந்த எத்தனையோ பக்தர்களுக்கு நிழல் தந்திருக்கிறது அந்தக் கருணாவிருட்சம். அவர்களது வாழ்க்கையில் துன்ப இருள் அகற்றி இன்ப ஒளியேற்றியிருக்கிறது அந்தச் சுடர் விளக்கு. அப்படியான சம்பவங்களும், காஞ்சி மகா பெரியவாளின் அணுக்கத் தொண்டர்களுக்கு மட்டுமே தெரிந்த அருளாடல்களும் ஏராளம் உண்டு.

காஞ்சி காமாட்சியம்மன் கோயில் பிரதான அர்ச்சகரும், மகா பெரியவாளின் அன்புக்கு உரிய அடியார்களில் ஒருவருமான நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரிகள், மகாபெரியவாளின் கருணைப் பிரவாகத்தை இந்த இதழ் முதல் நம்மோடு பகிந்துகொள்கிறார்.


'மகா பெரியவாளிடம் சில வருடங்கள் பாடம் கற்றுக்கொண்டது என் பாக்கியம். அவருடைய ஞானம் ஆழமானது. அவரிடம் படித்த நாட்கள் எனக்கு இன்னமும் நன்றாக நினைவு இருக்கிறது. 'நீதி சதகம்’ எல்லாம் அவர் நேரிடையாக எங்களுக்குச் சொல்லித் தந்ததுதான்.

அவர் ஈஸ்வர அவதாரம். நாங்கள் பரம்பரையாக காமாட்சி அம்மன் கோயிலில் பூஜை செய்து வருகிறோம். பெரியவா என்னைப் பொறுப்பு ஏற்றுக்கொள்ளச் சொன்னது, எனக்குக் கிடைத்த பெரும்பேறு!'' என்று பழைய நினைவுகளில் மூழ்கிய நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரிகள், தொடர்ந்து பேசினார்...

'பெரியவாளுக்குக் கர்னாடக சங்கீதத்தில் மிகுந்த விருப்பம் உண்டு. நல்ல சங்கீதத்தைக் கேட்டால், நேரம் போவது தெரியாமல் ரசித்துக் கேட்பார்' என்றவர், அந்த நாட்களில் பெரியவாளை வந்து சந்தித்த பிரபல சங்கீத வித்வான்கள் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

'தன்னைச் சந்திக்க வருகிற வித்வான்களிடம் அவர்களுக்கே தெரியாத விஷயங்களை எல்லாம் எடுத்துச் சொல்வார் பெரியவா. சில பாடல்களுக்கு அவர் தரும் விளக்கத்தை வித்வான்களே வியந்து கேட்பார்கள்.

திருவையாற்றில் பகுள பஞ்சமி அன்றைக்குத் தியாகராஜரின் சமாதியில் எல்லா வித்வான்களும் கூடி பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடுவார்கள் அல்லவா? அதேபோன்று, காஞ்சிபுரத்திலும் தமிழ் வருடப்பிறப்பு அன்று விடியற்காலையில் ஆரம்பித்து பஞ்ச ரத்ன கீர்த்தனைகளைப் பாடச்
 சொல்லிக் கேட்க வேண்டும் என்று பெரியவாளுக்கு ஆசை. அதற்குக் காரணம் இருந்தது. பெரியவா ஒரு தடவை சென்னைக்கு வந்திருந்தபோது, கோடம்பாக்கத்தில் தத்தாஜி என்பவர் வீட்டில் தங்கியிருந்தார். அப்போதுதான் திருவையாற்றில் தியாகராஜ ஆராதனை உத்ஸவம் நடந்து கொண்டிருந்தது. அதை ரேடியோவிலும் ஒலிபரப்பினர். காஞ்சிபுரத்திலும் அதுபோன்று நடத்தவேண்டும் என்கிற ஆசை அப்போதுதான் பெரியவாளுக்கு உண்டாயிற்று. 
 
செம்மங்குடி சீனிவாச அய்யர் பெரியவாளை தரிசனம் பண்ண அடிக்கடி மடத்துக்கு வருவார். அவரிடம் தன் ஆசையைச் சொன்னார் மகா பெரியவா. பிறகென்ன... செம்மங்குடிக்கு ரொம்ப சந்தோஷம். அவர் உடனே அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், மகாராஜபுரம் விசுவநாத அய்யர் போன்றோரிடம் சொல்லி, அதற்கு ஏற்பாடு செய்து, காஞ்சிபுரத்தில் பிரமாதமாக நடத்தினார். அதை ரேடியோவில் ஒலி பரப்பவும் ஏற்பாடு செய்தார்.

எல்லோரும் பஞ்சரத்ன கிருதிகள் பாடி முடித்ததும், பக்கத்தில் இருந்த மகாராஜபுரம் விசுவநாதய்யரிடம், 'ஆரத்தியின்போது
 நீங்கள் பாடணும்' என்று கேட்டுக் கொண்டார் பெரியவா. விசுவநாதய்யருக் குச் சந்தோஷம் தாளலை! அதுவும், பெரியவா முன்னால் பாடறதுங்கறது எவ்வளவு பெரிய விஷயம்! பக்திப் பரவசத்துடன், 'நி பஜன கான’ பாட்டை அருமையா பாடினார். பெரியவா, கண்கள் மூடி பாடலைக் கேட்டு ரசித்தார். 
 
'உன் பஜனையாகிற சங்கீதத்தில் ஈடுபடுகிறவர்களை இந்த உலகில் நான் எங்கே பார்ப்பேன்? லட்சுமி, சிவன், பிரம்மன், சசிதேவியின் பதியாகிய இந்திரன் முதலானவர்களால் வணங்கப் படுகிறவனே! சகுண- நிர்க்குண உபாசனை களின் உண்மை, பொய்களையும்... சைவம், சாக்தம் முதலான ஆறு சமயங்களின் ரகசியங்களையும், அணிமா முதலான அஷ்டஸித்திகளின் பகட்டையும் நீ விளக்க... நான் மகிழ்ச்சியுடன் அறிந்து கொண்டேன். நல்ல முகம் உடையவனே... உமது பஜனை என்னும் கானத்தில் லயித்து ரசிப்பவர்களை நான் எங்கே காண்பேன்?’ என்பது அந்தப் பாடலுக்கு அர்த்தம். மகா பெரியவாளுக்கும் ரொம்ப சந்தோஷம்! 

ஒருமுறை, என்.சி.வசந்தகோகிலம் என்ற புகழ்பெற்ற பாடகி, மகா பெரியவாளைத் தரிசிக்க வந்திருந்தார். ஒரு கச்சேரிக்குப் போய்ப் பாடிய கையோடு, அங்கிருந்து நேராகக் காஞ்சி புரம் வந்திருந்தார் அவர். கச்சேரி செய்ததற்குக் கிடைத்த ஆயிரம் ரூபாயை அப்படியே பெரியவா முன்னால் வைத்து விட்டு, நமஸ்காரம் செய்தார். ஆயிரம் ரூபாய் என்பது அந்தக் காலத்தில் ரொம்பப் பெரிய தொகை. அவருக்கு ஆசி வழங்கிய பெரியவா அந்தப் பணத்தை என்ன செய்தார் தெரியுமா?

அங்கே பக்கத்து நிலத்தில் உழுது கொண்டிருந்த அத்தனை குடியானவர் களையும் வரச் சொன்னார். ஆயிரம் ரூபாயையும் அவர்களுக்குச் சமமாகப் பிரித்துக் கொடுத்து விட்டார். குடியான வர்களுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி! பணம் கிடைத்தது மட்டுமல்ல... மகா பெரியவாளின் ஆசியோடு கிடைத்த பணம் என்பதே அதற்குக் காரணம்.

இன்னொரு சம்பவம்... மகா பெரியவா இளையாத்தங்குடியில் முகாமிட்டிருந்தார். பக்கத்து ஊரில் அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் தங்கியிருப்பது பெரியவாளுக்குத் தெரிய வந்தது. அவரை, தான் இருக்கும் இடத்துக்கு வருமாறு தகவல் அனுப்பினார் மகா பெரியவா. அவரும் உடனே புறப்பட்டு வந்தார்.

'நீங்கள் ஸ்ரீசுப்ரமண்யாய நமஸ்தே கீர்த்தனையைப் பாடி, நான் கேட்கணும்னு எனக்கு ஒரு சின்ன ஆசை வந்துடுத்து. பாட முடியுமா?’ என்று பெரியவா கேட்டதும், ராமானுஜ அய்யங்கார் கண்ணில் நீர் ததும்பிடுச்சு. எப்பேர்ப்பட்ட பாக்கியம் அவருக்கு?!  

'நான் கொடுத்து வைத்திருக்கிறேன் சுவாமி, பெரியவா முன்னால் பாடுவதற்கு' என்று பணி வுடன் சொல்லிவிட்டு, முத்துசாமி தீட்சிதரின் பிரபலமான
கிருதியான 'ஸ்ரீசுப்ரமண்யாய நமஸ்தே’ பாடலைப் பாடினார். அதை ரசித்துக் கேட்டதுடன், அந்தப் பாட்டுக்கு பெரியவா விசேஷ அர்த்தமும் சொன் னதைக் கேட்டு ராமானுஜ அய்யங்கார் சிலிர்த்துப் போயிட்டார். 'நீங்க ஆயிரம் பத்தாயிரம் பேர் இருக்கிற சபையில் பாடி, கைத்தட்டல் எல்லாம் வாங்கிருப்பீங்க. இங்கே நான் ஒரே ஒருத்தன் உங்கள் பாட்டைக் கேட்டது உங்களுக்கு எப்படியோ இருக்கோ?!' என்று பெரியவா தமாஷாக கேட்க, நெகிழ்ந்து போய்விட்டார் அரியக்குடி.


கோப்ராபோஸ்ட் - கறுப்புப் பண வங்கிகள்...

கோப்ராபோஸ்ட் - யாருக்கும் தெரியாமல் இருந்த இந்த இணையதளம் இன்றைக்கு ஃபைனான்ஸ் மற்றும் பிஸினஸ் வட்டாரத்தில் படுபாப்புலராகிவிட்டது. காரணம், சமீபத்தில் இந்த இணையதளம் வெளியிட்ட ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்தான். வெளிநாட்டு வங்கிகளில் குவிந்துகிடக்கும் கறுப்புப் பணத்தை எப்படி கொண்டுவருவது என எல்லோரும் பேசிக்கொண்டிருக்க, நம்மூரில் இருக்கும் சில வங்கிகளே கறுப்புப் பணத்தைப் பதுக்கி நிர்வாகம் செய்வதற்கான ஆலோசனைகளையும், ஏற்பாடுகளையும் செய்துதருகின்றன என்பதுதான் அந்த அதிர்ச்சி ரிப்போர்ட்.
 
ஐ.சி.ஐ.சி.ஐ., ஆக்ஸிஸ் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி. ஆகிய வங்கிகள் கறுப்புப் பணத்தைப் பதுக்குவதற்கு வழி சொல்லித் தருகிறது. இது ஏதோ ஒரு கிளையில் மட்டுமல்ல, இந்தியா முழுக்க பல இடங்களிலும் நடக்கிறது என்பதை இந்த இணையதளம் வீடியோ ஆதாரத்தோடு (இந்த வீடியோ மட்டுமே 100 மணி நேரத்துக்கு மேல் ஓடுமாம்!) வெளியிட, சம்பந்தப்பட்ட வங்கிகள் மட்டுமின்றி, நிதித் துறை வட்டாரங்களே அரண்டுபோய்க் கிடக்கிறது.வங்கியின் துணையோடு எப்படியெல்லாம் கறுப்புப் பணம் வெள்ளையாக மாற்றப்பட்டு இருக்கிறது என்பதை கோப்ராபோஸ்ட் இணையதளமே சொல்கிறது. 'பொதுவாக, 50,000 ரூபாய்க்கு மேல் வங்கியில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு பான் கார்டு எண் தரவேண்டும். ஆனால், பணமாக முதலீடு செய்யாமல் வேறு பல வழிகளைப் பயன்படுத்தி, பான் கார்டு பிரச்னையிலிருந்து எளிதாகத் தப்பித்திருக்கிறார்கள். உதாரணத்துக்கு, வங்கிக்குக் கொண்டுவரப்படும் பணத்துக்கு இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது, தங்க நகைகளை வாங்குவது, வேறு வங்கியிலோ அல்லது அதே வங்கியிலோ பல டி.டி.களை எடுத்து வங்கிக்கு மாற்றுவது, வேறு வங்கியில் போட்டு அதன்பிறகு மொத்தமாக மாற்றுவது, கே.ஒய்.சி. விதிமுறைகளை மீறுவது, பணம் தந்து மற்றவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தி, அதன்பிறகு மாற்றுவது உள்ளிட்ட பல வேலைகளை இந்த வங்கிகள் செய்துதர முயன்றுள்ளது' என சொல்கிறது கோப்ராபோஸ்ட்.
 
இதுமட்டுமல்லாமல், சாதாரணமாக வங்கிகளுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம்கூட இப்படி ஒரு வழிமுறை இருக்கிறது என்பதைச் சொல்லி பேரம் பேசி இருக்கிறார்கள் இந்த வங்கி அதிகாரிகள் என்கிற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கிறது கோப்ராபோஸ்ட்.


இந்தச் செய்தி வந்தவுடன் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, சில பணியாளர்களை சஸ்பெண்ட் செய்தது. மற்ற வங்கிகளும் சில ஒழுங்குநடவடிக்கைகளை எடுத்தது. மறுபுறம் ரிசர்வ் வங்கியும் விசாரணை நடத்தி வருகிறது.
 

Saturday, March 23, 2013

எனது இந்தியா (இண்டிகோ புரட்சி !) - எஸ். ரா

காலனி ஆதிக்கம் இந்திய மக்களின் அடிப்படைப் பண்புகளில் பலவற்றை மாற்றி அமைத்திருக்கிறது. பல்வேறு வித உணவுப்பயிர்களை விளைவித்துவந்த இந்திய விவசாயிகளை வற்புறுத்தி, பணப்பயிர்​களை பயிரிடவைத்தது பிரிட்டிஷ் அரசு. நீலச் சாயம் எடுப்பதற்காக வங்காளத்தில் பல்லாயிரக்​கணக்கான ஏக்கர் நிலத்தில் அவுரிச் செடியை கட்டாயப்படுத்திப் பயிரிடச் செய்தனர். அதுதான், இந்திய விவசாயம் பணப்பயிரை நோக்கி வைத்த முதல் அடி. அதற்கு முன், விவசாயிகள் எவரும் பணம் கிடைக்கும் என்பதற்காக மட்டும் எந்தப் பயிரையும் விளைவிக்கவில்லை. நிர்ப்பந்தம் காரண​மாக விவசாயம் செய்யவும் இல்லை.  

இந்தியாவில் ஆறு லட்சம் ஏக்கரில் அபினிச் செடிகளை விளையச்செய்து சீனாவுக்கு அனுப்பிக் கொள்ளை லாபம் சம்பாதித்த பிரிட்டிஷ் அரசு, அடுத்த இலக்காகக் களம் இறக்கியது சாயம் தயாரிக்கப் பயன்படும் அவுரிச் செடியைத்தான்! நீலப் போராட்டம் எனும் அவுரி விவசாயப் பிரச்னை இந்தியாவின் காலனிய வரலாற்றில் மிக முக்கியமானது. இண்டிகோ விற்பனையில் கொள்ளை லாபம் அடைந்த பிரிட்டிஷ் வணிகர்கள், பணப்பயிரான அவுரியை மட்டுமே பயிரிடும்படி விவசாயிகளைக் கட்டாயப்படுத்தினர். இதற்காக, ஏழை விவசாயிகளின் நிலம் அபகரிக்கப்பட்டது. சீரான விவசாயமற்ற காரணத்தால் உணவுப் பயிர்​களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு செயற்கைப் பஞ்சம் உருவானது.


இங்கிலாந்தின் லாபத்துக்காக இந்திய விவசாயி​கள் அல்லல்பட்ட இண்டிகோ உற்பத்தி, வரலாற்றில் மறக்க முடியாத ஒரு பாடம். அவுரி எனும் குறுஞ்செடியினம் இந்தியாவில் தென்னாட்டிலும், வங்காளத்திலும் அதிகமாகப் பயிராகும் தாவரம். அவுரிச் செடி சுமார் மூன்று அடி உயரம் வரை வளரும். அதன் இலைகள் ஆவாரம்பூ செடியின் இலையைப் போல இருக்கும். அதன் பூக்கள், வெளிறிய மஞ்சள் நிறமாகவும் காய்கள் முதிர்ச்சி அடையும்போது கறுப்பு நிறமாகவும் இருக்கும். அவுரி​யின் இலை மற்றும் காய்கள் மலச்சிக்கல் நோயைக் குணப்படுத்தும் வல்லமைகொண்டவை. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன், நெல் அறுவடைக்குப் பிறகு அந்த நிலத்தில் அவுரி பயிரிடுவார்கள். மீண்டும் உழவு ஆரம்பிக்கும்போது, அவுரியையும் சேர்த்து உழுவார்கள். அது ஒரு சிறந்த பசுந்தாள் உரம்.

அப்படிப்பட்ட அவுரிச் செடியில் இருந்துதான் நீலச் சாயம் தயாரிக்கப்படுகிறது. பருத்தித் துணிகளுக்கு அடர் நீல வண்ணச் சாயம் ஏற்ற அவுரிச் செடியே அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது. இந்தியாவில் பண்டைக்காலம் தொட்டே இண்டிகோ ஏற்றுமதிப் பொருளாக இருந்திருக்கிறது. கிரேக்கம் மற்றும் ரோம் நகரங்களுக்கு இந்தியாவில் இருந்து இண்டிகோ ஏற்றுமதி செய்யப்பட்டதைப் பற்றிய சரித்திரக் குறிப்புகள் இருக்கின்றன.

நீலச் சாயம் இடப்பட்ட துணிகள், கடற்கரைப் பகுதிகளில் வாழ்பவர்களுக்கு ஏற்றது. குளிர்ச்சி தரக்​கூடியது என்பதுடன் அது பல நாடுகளில் சீருடையாக இருந்தது. நீல நிறத் துணிகளுக்கு பெரும் கிராக்கி இருந்தது. ஜெர்மன், பிரான்ஸ், இத்தாலி, ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் நீல நிறச் சாயமிட்ட துணிகளை அதிக அளவில் இறக்கு​மதி செய்தன. இவர்களுக்கான இண்டிகோ இந்தியா, ஜாவா மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து கிடைத்தன.

அந்தக் காலத்தில் சிவப்பு, கறுப்பு, நீலம் ஆகிய மூன்று நிறங்களே சாயமிடுவதற்குப் பிரதானமாகப் பயன்படுத்தப்பட்டன. அவற்றில், அவுரிச் செடியின் இலையில் இருந்து தயாரிக்கப்படும் நீலச் சாயத்துக்கு பெரும் கிராக்கி இருந்தது. தொழிற்புரட்சி காரணமாக உருவான நெசவு ஆலைகள், துணி உற்பத்தியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தின. இங்கிலாந்தின் தேவையை முழுமையாகப் பூர்த்திசெய்யும் அளவுக்கு இந்தியாவில் அவுரிச் செடி உற்பத்தி செய்யப்படவில்லை. எனவே, அதற்காக நிறைய நிலங்களைக் கையகப்படுத்தி அவுரிச் செடி விவசாயத்தைப் பிரதான தொழிலாக மாற்ற பிரிட்டிஷ் அதிகாரிகள் திட்டமிட்டனர்.

இதற்காக, நான்கு மாவட்டங்களை முதன்மையான களமாக அடையாளம் கண்டனர். பீகார் மாநிலத்தில் முசாபர்பூர், தர்பாங்கா, சம்பரான், சரண் ஆகிய நான்கு மாவட்டங்களில் விளையும் அவுரி​யின் சாயம் மிகவும் உயர்தர சாயமாகக் கருதப்​பட்டது. ஆகவே, இந்த மாவட்டங்களில் உள்ள நிலங்களைக் கையகப்படுத்தி அங்கு சாயத் தோட்டங்களை பிரிட்டிஷ்காரர்களே உருவாக்கினர். அதற்குத் துணையாக உள்ளூர் ஜமீன்தார்களை இழுத்துக்கொண்டனர்.

ஒரு சாயத் தோட்டம் என்பது 1,000 முதல் 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு கொண்டது. நான்கு லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் இந்த மாவட்டங்களில் அவுரி பயிரிடப்பட்டது. இதில், உள்ளூர் விவசாயிகள் ஒன்றரை லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டனர். அதை நிர்வகிக்க 700 பிரிட்டிஷ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் விளைவித்துத் தரும் அவுரி மூலம் கிடைக்கும் லாபம் முழுவதும் 16 பிரிட்டிஷ் வணிகக் கம்பெனிகளுக்கே போய்ச் சேர்ந்தன. எங்கோ இங்கிலாந்தில் உள்ள பிரிட்டிஷ் முதலாளி, கொள்ளை லாபம் சம்பாதிக்க, இந்திய விவசாயிகள் அவுரி விவசாயம் செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர். அவுரி செடி பயிரிட மறுத்த விவசாயிகளின் நிலம் பறிமுதல் செய்யப்பட்டது. சிலரைக் கொடூரமான முறையில் துன்புறுத்திக் கொலை செய்தனர்.
அவுரிச் செடியைப் பயிரிட்டு அதில் இருந்து சாயம் தயாரிப்பது ஏழை விவசாயிகள் என்றாலும், அதை நிர்வாகம் செய்வது பிரிட்டிஷ் அதிகாரிகள்தான். தேயிலைத் தோட்டங்களைப் போலவே, அவுரித் தோட்டங்களும் ஒட்டுமொத்தமாக பிரிட்டிஷ் வணிகர்களின் கைகளில் இருந்தன. ஒரு சாயத் தோட்டத்தின் அதிகாரி மேனேஜர் என்று அழைக்​கப்பட்டார். அவர்தான் தோட்டத்தின் பொறுப்பாளர். அவரே விவசாயத்தை நேரடியாகக் கண்காணிப்பவர். அவருக்குக் கீழே ஏஜென்ட் எனபடும் உதவி அலுவலர் இருப்பார். அவரும் இங்கிலாந்தில் இருந்து வேலைக்காக அழைத்து வரப்பட்ட வெள்ளைக்கார இளைஞராகத்தான் இருந்தார். இருவரும் இணைந்து அவுரிச்செடி விவ​சாயத்​தை மேற்பார்வைசெய்வர்.

இந்தப் பணியில் விவசாயி​களை ஒத்துழைக்கவைக்க, ஜமீன்​தார்களின் ஆதரவு முக்கியத் தேவையாக இருந்தது. அதற்குப் பிரதிஉபகாரமாக இங்கிலாந்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மது, துப்பாக்கி மற்றும் பட்டம், பதவிகள் ஜமீன்தார்களுக்கு வழங்கப்பட்டன. இண்டிகோ மேனேஜர் எப்போதும் ஒரு சர்வாதிகாரிபோல நடந்துகொள்வார். விவசாயிகள், கொத்தடிமைகள்போல நடத்தப்பட்டனர். விவசாயிகளுடன் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், அதைச் சமாளிக்க வேண்டி பிரிட்டிஷ் வணிகர்​கள் 400 பேர் கொண்ட ஒரு குதிரைப் படையும் இருந்தது. அந்தப் படை அவுரித் தோட்டங்களில் ரோந்து சுற்றிக்​கொண்டே இருக்கும். ஏதாவது பிரச்னை என்றால், அதை வன்முறையால் அடக்கி ஒடுக்குவார்கள். பங்களா, 24 வேலை​யாட்கள்,  பல்லக்கு, வேட்டையாடத் துணைக்கு ஆட்கள், கிரிக்கெட் மற்றும் ஹாக்கி விளையாடும் மைதானம் ஆகிய வசதிகள் மேனேஜருக்கு செய்து தரப்பட்டு இருந்தது. மேனேஜர்களில் சிலரே குடும்பத்துடன் சாயத் தோட்ட பங்களாவில் தங்கி இருந்தனர். மற்றவர்கள், தனியாக வசித்தனர். சிலர், இந்தியப் பெண்களில் சிலரை ஆசைநாயகியாக வைத்துக்கொண்டிருந்தனர்.

டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில், அறுவடை செய்துவைத்திருந்த அவுரிச் செடி இலைகள் விற்பனைக்காக கல்கத்தா கொண்டுசெல்லப்பட்டன. அதுதான் மையச் சந்தை. இந்தியாவின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் அங்கு விற்பனைக்கு வரும் அவுரிச் செடியை வாங்குவதற்காக இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வணிகர்கள் கல்கத்தாவில் குவிந்து இருப்பார்கள். உற்பத்திச் செலவைவிட, 200 மடங்கு லாபம் சம்பாதித்து தரும் பொருளாக அவுரிச் செடி விளங்கியது. பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில்  நிலத்தை ஆழமாக உழுது அவுரி விதைப்​பார்கள். இதற்கான விதைகள் வெளி மாவட்டங்களில் இருந்து விலைக்கு வாங்கப்படும்.

மே மற்றும் ஜூன் மாதங்களில் அவுரி வளர்ச்சி அடையும். முதல் அறுப்பு ஜூன் மாதமும் அடுத்த இரண்டு அறுப்புகள் அடுத்த மாதங்களிலும் நடக்கும். இப்படிச் சேகரிக்கப்பட்ட அவுரியை மூட்டையாகக் கட்டி மாட்டு வண்டிகளிலும் படகிலும் ஃபேக்டரிக்குக் கொண்டுசெல்வார்கள். அங்கே அது பதப்படுத்தப்பட்டு கெட்டிப் பாளங்களாக மாற்றப்பட்டு கல்கத்தாவுக்கு அனுப்பிவைக்கப்படும். சாயத் தோட்ட ஏஜென்ட் எனப்படும் துணை மேலாளர் பதவிக்காக இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்த ரெயிட் என்பவர், நினைவுக் குறிப்பு நூல் ஒன்று எழுதியிருக்கிறார். அதில், ''சாயத் தோட்ட ஏஜென்ட் என்பது கௌரவமான பதவி. இந்த வேலையைச் சிறப்பாக செய்து, மேனேஜர் பதவியை அடைந்துவிட்டால் கொழுத்த பணம் எனக்குக் கிடைக்கும். அதை வைத்து இங்கிலாந்தில் பெரிய தொழிற்சாலையை என்னால் தொடங்க முடியும்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

அவுரித் தோட்டங்களின் முக்கியப் பிரச்னை ஆட்கள் தட்டுப்பாடுதான். ஆகவே, கிராமவாசிகள் வேறு எந்த வேலையும் செய்ய அனுமதிக்கப்படவில்லை. அவுரி விவசாயத்தில் வேலைசெய்யக் கட்டாயப்படுத்தப்பட்டனர். 10 வயது சிறுவன் முதல் 80 வயது முதியவர் வரை, அனைவருக்குமே கட்டாய வேலை வழங்கப்பட்டது. கிழக்கிந்தியக் கம்பெனிக்குப் போட்டியாக டச்சு வணிகர்களும் இண்டிகோ விற்பனையில் ஈடுபட்ட​தால், அவர்கள் விவசாயிகளை விலைக்கு வாங்க முயன்றனர். இந்த வணிகச் சண்டையில் பலியானது ஏழை விவசாயிகள்தான்.

'காலச்சுவடு’ இதழில் வெளியான 'பசுமைப் புரட்சியின் கதை’ என்ற கட்டுரையில் ஆய்வாளர் சங்கீதா ஸ்ரீராம், ''1750-களில் இங்கிலாந்து ஆலை​களில் டன் கணக்கில் உற்பத்தியான பருத்தித் துணிகளுக்காக இண்டிகோ சாயம் அதிக அளவுகளில் தேவைப்பட்டது. அதுவரை, இண்டிகோ வழங்கி வந்த அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அரசியல் காரணங்களால் தனது ஏற்றுமதியைக் குறைத்துக்கொண்ட பிறகு, இந்தியாவில் அவுரி விளைவிப்பது அவசியமானது. வங்காள விவசாயிகள்​தான் மீண்டும் கையில் சிக்கினர்.

உணவுப் பயிருக்குப் பதிலாக இண்டிகோவைப் பயிர்​செய்யப் பலவந்தமாக வற்புறுத்தி, அபினிக் கதையைப் போலவே விவசாயிகளின் மீது பல கொடுமைகளை இழைத்துத் தங்கள் சொந்த லாபத்துக்காக அவுரி விளைச்சலைப் பெருக்கிக்​கொண்டனர். 19-ம் நூற்றாண்டில், இண்டிகோ உற்பத்தியில் உலகிலேயே மிகப் பெரிய மாநிலம் வங்காளம்தான் என்ற அளவுக்கு இந்தப் பயிர் அங்கு பயிரிடப்பட்டது. வங்காளத்தில் உள்ள ஃபரித்பூர் மாவட்ட நீதிபதி​யான இ.டி லதூர், 1848-ல், 'இங்கிலாந்தில் வந்து இறங்கும் ஒவ்வொரு இண்டிகோ பெட்டியின் மீதும் மனித ரத்தக் கறை படிந்து இருக்கிறது. பல விவசாயிகளின் உடல்​களில் ஈட்டிகள் பாய்ச்சப்பட்டு இருக்கின்றன. பலர் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்​கின்றனர். இவ்வாறு இண்டிகோ வியாபாரம் செய்​வது, ரத்தம் சிந்தவைக்கும் கொடூரமான முறை என்றே நான் கருதுகிறேன்'' என்கிறார். நிலைமை மிகவும் மோச​மானதும் 1868-ம் ஆண்டு இண்டிகோ கலவரங்கள் வெடித்தன. அதே சமயம், 1880-ல், ரசாயன நீலச் சாயம் உற்பத்தி செய்யும் முறை கண்டறியப்பட்டது. பிறகு, இண்டிகோவின் தேவை சரிந்தது. அதை நம்பியிருந்த விவசாயிகளின் வாழ்வாதாரங்களும் கூடவே சரிந்தன. 1895-96ல் வங்காளத்தில் 16 லட்சம் ஏக்கர் நிலத்தில் பயிராகிய இண்டிகோ, 1905-06-ல் 5 லட்சம் ஏக்கராக குறைந்தது. அவுரித் தோட்டத் தொழிலாளிகள் பலர் வறுமையில் வாடிச் செத்தனர்'' என்கிறார் சங்கீதா ஸ்ரீராம்.

Friday, March 22, 2013

ஷிகர்தவன் - இளம் சூறாவளி!

ஐ.பி.எல். எல்லாம் ஆரம்பிக்காத நேரமது. நவ நாகரிக இளைஞராக கைகளில் டாட்டூ குத்திக் கொண்டு, லேசாக முறுக்கிவிட்ட மீசையுடன் சிங்கம் போல உறுமிச் செல்லக்கூடிய 1000 சிசி Suzuki Hayabusa பைக்கில் பயிற்சிக்கு வந்தார் தில்லி அணி வீரரான ஷிகர்தவன். முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர், பைக்கைப் பார்த்து வாயைப் பிளந்து, தவனிடம் விசாரிக்கிறார். பைக் என்ன விலை?" 25 லட்சம் சார்." இதற்கு ஏன் பைக் வாங்கினா? மெர்சிடஸ் காரே வாங்கியிருக்கலாமே?" அடுத்ததா அதையும் வாங்குவேன் சார்!" 

இதுதான் ஷிகர் தவன். முதல் டெஸ்ட் ஆடுகிற ஒரு வீரரின் வயிற்றுக்குள் எத்தனை பட்டாம் பூச்சிகள் பறக்கும்! மொஹலியில் ஷிகர் தவன் அடித்த செஞ்சுரியைப் பார்த்த யாருக்குமே இது அவருடைய முதல் டெஸ்ட் என்கிற எண்ணம் தோன்றியிருக்காது. செஞ்சுரி அடிக்கும்வரை எந்தப் பந்தையும் உயர அடிக்காமல் அதேசமயம் கடகடவென ரன்களைக் குவித்த ஸ்டைலைக் கண்டு கிரிக்கெட் நிபுணர்கள், முன்னாள் ஆட்டக்காரர்கள் எல்லோரும் மிரண்டு போனார்கள்.  இது நம்பவே முடியாத ஆட்டம் என்று வர்ணித்தார் ராகுல் டிராவிட். ‘இளம் சூறாவளி ஒன்று ஆஸ் திரேலியாவை துவம்சம் செyதுவிட்டது’ என்று தவனின் ஆட்டத்தை வர்ணித்தன ஆஸ்திரேலிய பத்திரிகைகள். ஷேவாக்குக்கு மாற்று வேறு யாருமில்லை, நான்தான் என்று அந்த ஒரு ஆட்டத்திலேயே நிரூபித்துவிட்டார் தவன். 20, 25 வயதுக்குள் சச்சின், தோனியின் தோளை உரசியபடி சர்வதேச கிரிக்கெட்டில் இளைஞர்கள் அறிமுகமாகிற காலமிது. தவனின் கெட்ட நேரம், அவரால் 27 வயதில்தான் இந்திய டெஸ்ட் பிளேயராக முடிந்தது. 2004ல் நடந்த U19 உலகக்கோப்பையில், தவன்தான் போட்டியின் சிறந்த வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தவனுக்கு அடுத்ததாக அதிக ரன்கள் குவித்த அலிஸ்டர் குக், இன்றுவரை 88 டெஸ்டுகள் ஆடி, 24 செஞ்சுரிகள் அடித்து சச்சினின் சாதனைகளை விரட்டும் மகா சாதனையாளராகி விட்டார். அதே U19 உலகக்கோப்பையில், இந்திய அணியில் இடம்பெற்ற சுரேஷ் ரைனா, ராபின் உத்தப்பா, ஆர்.பி. சிங், திணேஷ் கார்த்திக் ஆகியோரும் ஏராளமான சர்வதேச மேட்சுகள் ஆடிவிட்டார்கள். உலகக்கோப்பை முடிந்த கையோடு அந்த வருட ரஞ்சிப் போட்டியிலும் ஷிகர் தவன் அதிக ரன்கள் அடித்திருந்தார். துரதிருஷ்டம், அந்த இளம் வயதில் தவனின் திறமையை யாராலும் உணரமுடியவில்லை. 2010ல் இந்திய ஒருநாள் அணியில் இடம் கிடைத்தது. ஆனால், ஆடிய 5 ஆட்டங்களில் தோல்வியையே சந்தித்தார் தவன். 

9 வருடங்கள் ரஞ்சியில் தொடர்ந்து ரன்கள் குவித்த போதும் டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கவில்லை. இவரை விடவும் இளையவர்களான கோலி, புஜாரா ஆகியோர் இந்திய டெஸ்ட் அணியில் முக்கிய வீரர்களானார்கள். ஆனால், ஐ.பி.எல்.-லில் ஆடிய பிறகுதான் கிரிக்கெட் ரசிகர்களிடம் தவனுக்கு முறையான அறிமுகம் கிடைத்தது. ‘தொடர்ந்து சிறப்பாக ஆடியும் வாய்ப்புகள் கிடைக்காததால் மிகவும் துவண்டு போனார் தவன். முயற்சிக்குப் பலனே இல்லாமல் போனால் என்னதான் செய்வது என்று வருந்திய காலங்களும் உண்டு. ஒரே ஒரு தங்கமான வாய்ப்புக்குக் காத்திருந்தார். கிடைத்தவுடன் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்’ என்று மகிழ்கிறார் தவனின் பயிற்சியாளரான தரக் சின்ஹா.  இப்போது, தவன் ஒரே நாளில் நட்சத்திரமாகி விட்டார். விஜயும் தொடர்ந்து செஞ்சுரிகள் அடித்து வருகிறார். இந்திய அணிக்கு அடுத்த ஷேவாக் - கம்பீர் கிடைத்து விட்டார்கள் என ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். தவனின் பதில் என்ன? ‘ஷேவாக்கும் கம்பீரும் இந்திய அணிக்காக நிறைய சாதித்திருக்கிறார்கள். நானும் முரளி விஜயும் அவர்களுடைய சாதனையை ஒரே நாளில் தொட்டுவிட முடியாது,’ என்கிறார். டிராவிட், லஷ்மண், ஷேவாக், கங்குலி, ஹர்பஜன் சிங், கும்பிளே போன்ற ஜாம்பவான்கள் இல்லாத இந்திய டெஸ்ட் அணியை இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னால் நினைத்துக் கூடப் பார்த்திருக்க முடியாது. ஆனால் இன்று கோலி, புஜாரா, தவன், விஜய், அஸ்வின், ஓஜா என ஒரு புதிய இளைஞர் பட்டாளம் துணிச்சலுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை முன்னுக்குக் கொண்டு செல்கிறது. அடுத்ததாக மிக முக்கியமான தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து டூர்கள் இருக்கின்றன. அந்த அமிலச் சோதனையைத் தாண்டுவதில்தான் இவர்களுடைய எதிர்காலம் அடங்கி இருக்கிறது.

ஓ பக்கங்கள் - பதினாறு வயதினிலே... - ஞாநி


தில்லிப் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்முறையில் கொல்லப்பட்ட நிகழ்ச்சிக்குக் கொதித்தெழுந்து, இனி பாலியல் வல்லுறவுக்கு மரணதண்டனைதான் கொடுக்கவேண்டுமென்று ஆவேசப்பட்டவர்கள் முதல், தொடர்ந்து ஒரு மாத காலம் தில்லி நிகழ்ச்சியைப் பற்றியே இடைவிடாத விவாதம் நடத்திய தொலைக்காட்சிகள் வரை, இந்த வாரம் அரசு நிறைவேற்றி இருக்கும் சட்டத்தை அதே துடிப்புடன் கண்டுகொள்ளவே இல்லை.

மக்களவையில் சோனியா, ராகுல் காந்தி உட்பட வோட்டெடுப்பின்போது இருக்கக்கூட இல்லை. மொத்தமிருந்தவர்கள் 196 பேர்தான். அதிலும் சிலர் கருத்து சொன்ன போது பிரச்னையின் தீவிரத்தை விட்டுவிட்டு மோசமான நகைச்சுவைகளை வேறு உதிர்த்திருக்கிறார்கள். பெண்களைத் தொடர்ந்து பின்பற்றி வந்து தன்னைக் கவனிக்கச் செய்யும் விதத்தில் தொல்லை கொடுக்கும் ஸ்டாக்கிங்கில் ஈடுபடுவதைக் குற்றமாக இந்தச் சட்டம் சொல்வதை ஷரத் யாதவ் கிண்டலடிக்கிறார். அப்படி செய்யாமல் எப்படி காதலிப்பது? நாம் எல்லாரும் சின்ன வயதில் அப்படி செய்தவர்கள்தானே," என்கிறார்.

கட்டாய உடலுறவு குற்றம் செய்வோருக்கு 20 வருடங்களும் அல்லது வாழ்நாள் முழுவதும் கூட சிறைத் தண்டனை விதிக்க சட்டம் வகை செய்திருக்கிறது. இதே குற்றத்தைத் திரும்பத் திரும்பச் செய்தால் மரணதண்டனையும் வழங்கலாம் என்று சொல்கிறது. முதல் குற்றம் செய்து 20 வருடம் தண்டிக்கப்பட்ட ஒருவர் அதன்பின் வெளியே வந்து திரும்ப இதே குற்றம் செய்து பிடிபட்டு மரண தண்டனைக்குரியவராகும் வாய்ப்பு குறைவு என்பதால், பலரும் ஆவேசமாகக் கோரியது போல வல்லுறவு குற்றத்துக்கு ஒரேயடியாக மரண தண்டனை விதிக்கப்படவில்லை என்றே ஆறுதல் அடையலாம். வல்லுறவு பெண்ணின் மரணத்தில் முடிந்தாலோ, வாழ்நாள் முழுவதும் இனி அந்தப் பெண் முழுக்க செயலற்ற நிலையில் இருக்கும் நிலை ஏற்பட்டாலோ அதையும் மரணத்துக்குச் சமமாகக் கருதி கொலைக் குற்றமாகக் கொண்டு மரணதண்டனை வரை வழங்க வகை செய்யப்பட்டிருக்கிறது.

கட்டாய உடலுறவு என்பது என்ன என்று இதற்கு முன் இருந்த வரையறை முதல்முறையாக விரிவு படுத்தப்பட்டுள்ளது. பெண்ணுறுப்பில் பலவந்தமாக ஆணுறுப்பு நுழைக்கப்படுவது மட்டுமே இதுவரை ரேப் என்று கருதப்பட்டது. உடலின் எந்தப் பகுதியில் அவ்வாறு செய்தாலும் செய்ய வைக்கப்பட்டாலும் ரேப் என்று இப்போது விரிவாக வரையறுக்கப்பட்டிருக்கிறது.

முதல்முறையாக பெண் மீது ஆசிட்வீச்சு முதலிய தாக்குதல் நடத்தி அவரைச் சிதைப்போருக்கு, குறைந்தது பத்து வருட சிறைத் தண்டனை என்று ஆக்கப்பட்டிருக்கிறது. வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டோ, ஆசிட் தாக்குதலுக்கு ஆளாகியோ சிகிச்சைக்கு வருவோருக்கு சிகிச்சை தர மறுத்தால் ஓராண்டு சிறைவாசம். பொது இடத்திலோ தனி இடத்திலோ பெண்ணின் உடைகளைக் களைந்து அவமதிக்கும் குற்றத்துக்கு மூன்றிலிருந்து ஏழாண்டு சிறைத் தண்டனை. பெண்ணின் சம்மதத்துடனே அவளுடன் எடுத்துக் கொண்ட அந்தரங்கப் படங்களைக் கூட அவள் சம்மதம் இல்லாமல் இன்னொருவருக்குக் காட்டுவதும் குற்றமாக்கப்பட்டிருக்கிறது.

இவையெல்லாம் பொதுவாக எதிர்பார்க்கப்பட்ட மாற்றங்கள்தான். ஆனால் தில்லி நிகழ்ச்சி எழுப்பிய ஒரு கேள்விக்கு சட்டப்பூர்வமான தீர்வு இந்தச் சட்டத்திலும் இல்லை. பாலியல் வன்முறையில் ஈடுபட்ட ஒரு குற்றவாளி 18 வயது நிரம்பாத மைனராக இருந்தால், அவரை இதர குற்றவாளிகள் போல தண்டிக்க முடியாது. இளங்குற்றவாளிகளுக்கான சீர்திருத்த விடுதிக்கே அனுப்ப முடியும். குற்றவாளியின் வயது 15 என்றால் அவர் அங்கே மூன்று வருடங்கள் இருந்தபின் விடுதலையாகி விடுவார். அதே குற்றத்தில் ஈடுபட்ட அவருடன் இருந்த சக குற்றவாளிகள் 18 வயதைக் கடந்த மேஜர்களாக இருந்தால் அவர்களெல்லாரும் 20 வருடச் சிறையை அனுபவிப்பார்கள். இந்த முரண்பாட்டை எப்படித் தீர்ப்பது என்ற விவாதம் தில்லி சம்பவத்தில் ஒரு குற்றவாளியின் வயது மைனர் வயது என்பதால் எழுப்பப்பட்டது. இதற்கு இன்னும் தீர்வு வரவில்லை.நம் உடனடி விவாதத்துக்கும் தொடர்ந்து மேலும் பல சட்டப்பூர்வமான மாற்றங்கள் தேவை என்று குரலெழுப்பவும் வேண்டிய வேறொரு முக்கியமான சட்டத்திருத்தம் இப்போது வந்திருக்கிறது.

ஆண்-பெண் இருவரும் தாமே விரும்பி உடலுறவு கொள்வதற்குக் குறைந்தபட்ச வயது எது என்ற வரையறைதான் அது. பல வருடங்களாக இந்தியாவில் இது 16 வயது என்றே இருந்து வருகிறது என்பதே பலரும் அறியாத ஆச்சர்யமான செய்தியாக இருக்கலாம். திருமணம் செய்வதற்கான வயது பெண்ணுக்கு 18 என்றும் ஆணுக்கு 21 என்றும் இருக்கிறது. ஆனால் உடலுறவுக்கான பரஸ்பர சம்மத வயது 16 ஆகவே இருக்கிறது. இதுதான் உலகத்தின் பெரும்பாலான நாடுகளிலும் இருக்கும் வயது விதியாகும்.

ஆனால் கடந்த பிப்ரவரியில் இந்திய அரசு கொண்டு வந்த அவசரச் சட்டத்தில் இது 18 என்று மாற்றப்பட்டது. இப்போதைய சட்டத்தில் மறுபடியும் இதை 16 என்று ஆக்க அரசு விரும்பியது. ஆனால் பல கட்சிகள், அமைப்புகள் எதிர்த்தன. எனவே இந்த உடலுறவுக்கான பரஸ்பர சம்மத வயது 18 ஆகவே புதிய சட்டத்திலும் வைக்கப்பட்டுவிட்டது.

இது தொடர்பான சில விசித்திர நிலைமைகளைப் பார்க்கலாம். இந்த வயது விதி 16 என்று இருந்தவரை ஆண், பெண் இருவருமே திருமணமாகாமலே உறவு கொள்ளலாம் என்பதே நிலைமை. இப்போது பெண்ணின் திருமண வயதும் உடலுறவு விருப்ப வயதும் ஒன்றாகிவிட்டன. ஆனால் ஆண் மட்டும் திருமணத்துக்கான தகுதி வயது 21 என்பதால் திருமணம் செய்யாமலே மூன்றாண்டுகள் முன்பிலிருந்தே 18 லேயே விருப்ப உடலுறவு வைத்துக் கொள்ளலாம்! ஆனால் 18ல் திருமணம் செய்ய முடியாது.

உண்மையில் சமூக யதார்த்தம் என்பது என்ன? இதைப் பற்றி விவாதிக்க சில நண்பர்கள் இந்த வாரம் கூடிப் பேசினோம். இதில் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பெண்கள் - இளைஞர்கள் சார்ந்த உடல், மன நலத்துறைகளில் பணிபுரிந்த அனுபவம் உடையவர்கள், கல்வியாளர்கள் என்று பலதரப்பட்டவர்கள் இருந்தனர். எல்லாரும் சுட்டிக் காட்டிய முக்கியமான செய்தி என்பது, சட்டம் என்னவாக இருந்தாலும், பரஸ்பர சம்மதத்துடன் இளைஞர்கள் உடலுறவில் ஈடுபடுவது 15 வயதிலிருந்தே பரவலாக நடைபெறுகிறது என்பதுதான். சிறுமிகள் பூப்பெதும் வயது சராசரியாக 11 என்றாகிவிட்ட நிலையிலும், மீடியா, சினிமா ஆகியவற்றின் காமம் சார்ந்த தாக்கம் இளம் மனங்கள் மீது மிகக் கடுமையாக உள்ள நிலையிலும், உடலுறவுக்கான வேட்கையும் வாய்ப்பும் சாத்தியமும் 13,14 வயதிலேயே தொடங்கிவிடுகின்றன. 

இப்போது பரஸ்பர சம்மத வயதை 18 என்று வைத்திருப்பதால், கணிசமான இளைஞர்கள் சட்டப்படி குற்றவாளிகளாகிவிடுவார்கள். இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் எடுக்கப்பட்ட வெவ்வேறு ஆய்வுகளில், முதல் செக்ஸ் அனுபவம் என்பது 14 வயதிலேயே ஏற்பட்டுவிட்டதாக சுமார் 20 சத விகிதம் இளைஞர்கள் தெரிவித்திருக்கிறார்கள். 16,17 வயது என்பது ப்ளஸ் டூ முடிக்கும் பருவம். இந்த வயதில் பரஸ்பர செக்ஸ் அனுபவம் உடையவர்கள் சதவிகிதம் இன்னும் சற்றே அதிகமாக இருக்கலாம். சதவிகித அளவில் இதெல்லாம் குறைவென்றே தோன்றினாலும், மொத்த இளைஞர்களின் எண்ணிக்கையில் இந்த சதவிகிதமே லட்சோப லட்சங்களாகும்.

அவர்களை எல்லாம் 18 என்ற வயது விதி குற்றவாளிகளாக ஆக்குகிறது. பல காலமாக 16 என்றே இருந்த சட்ட சம்மத வயதை இப்போது அரசு 18 என்று மாற்றியது ஏன்? இது 18 ஆகத்தான் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துபவர்கள் பெரும்பாலும், திருமணத்தையும் செக்ஸையும் பிரிக்கக்கூடாது என்று கருதும் அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளுமேயாகும். அதாவது திருமணம் செய்யாமல் செக்சில் ஈடுபடுவது தவறு என்ற பார்வைதான் காரணம். அந்தத் ‘தவறை’க் கூட ஆண்கள் செய்யலாம். பெண்கள் செய்யக்கூடாது என்பதே இப்போதைய சட்ட விதி காட்டும் பார்வையாக இருக்கிறது.

ஆனால் நடைமுறையில் இந்த 18 வயது என்ற சட்டவிதி கணிசமானவர்களால் மீறப்பட்டுக் கொண்டேதான் இருக்கும். இந்தியாவில் எப்படி திருமணத்துக்கான தகுதி வயது விதி கணிசமான மக்களால் எப்போதுமே மீறப்பட்டு வருகிறதோ அதே நிலைதான் இதிலும்.  திருமணம் செய்து குடும்பம் நடத்த மன முதிர்ச்சியும் பொறுப்புணர்ச்சியும் தேவைப்படுவதாக எல்லாருமே கருதுகிறார்கள். பெண்ணுக்கு 18 வயதிலும் ஆணுக்கு 21வயதிலும் அது வந்துவிடுவதாக சட்டம் நம்புகிறது. உண்மையில் இருவருக்கும் அது முப்பது வயதுக்கு முன்னால் வருவதாக யதார்த்தத்தில் இல்லை. விதிவிலக்காக ஒரு சிலரே 25 வயதில் அப்படி இருக்கிறார்கள். மன முதிர்ச்சியும் பொறுப்புணர்ச்சியும் இருந்தால்தான் செக்சில் ஈடுபட வேண்டும் என்றே நான் கருதுகிறேன். ஆனால் அதற்கான உடல் தேவையை 30 வயது வரை தள்ளிப் போடச் சொல்வது சாத்தியமானதோ யதார்த்தமானதோ அல்ல. இந்த விஷயத்தின் அடிப்படையான சிக்கல் என்னவென்றால், இதில் எல்லாருக்கும் பொதுவான தீர்வு என்று ஒன்றைச் சட்டத்தால் ஏற்படுத்திவிட முடியாது. அவரவருக்கான தீர்வை அவரவர்கள்தான் உருவாக்கிக் கொள்ள முடியும்.அதற்குத் தேவைப்படும் கல்வி எல்லோருக்கும் தரப்படுவதை மட்டுமே அரசும் அமைப்பும் சமூகமும் செய்ய முடியும். 11,12 வயதிலிருந்து உடலிலும் மனத்திலும் மாற்றங்கள் வரத் தொடங்கும் போது அதைப் புரிந்து கொள்ள முறையான வழிகள் இன்று எதுவும் நம் சிறுவர்களுக்கும் சிறுமியர்களுக்கும் இல்லை. மீடியாவும் நண்பர்களும் தரும் அரைகுறை ஆலோசனைகளே உள்ளன. எனவே ஆறாம் வகுப்பிலிருந்து கட்டாயமான நலக் கல்வி தனிப்பாடமாக வருடம் முழுவதும் நடத்தப்பட வேண்டும் என்பதே எங்கள் நண்பர்கள் விவாதத்தின் ஒருமித்த ஒற்றைக் கருத்தாக இருந்தது. நலக்கல்வி என்றால் தன் உடலைப் புரிந்து கொள்வது, உள்ளத்தைப் புரிந்து கொள்வது இரண்டுமாகும். ஒவ்வொரு வகுப்பிலும் அந்தந்த வயதுக்கேற்ப இந்தக் கல்வி படிப்படியாகச் செய்யப்பட வேண்டும்.

ஏனென்றால், இத்தனை வருட காலமாக அரசு உடலுறவுக்கான பரஸ்பர சம்மத வயதை 16 என்று வைத்திருந்ததை இப்போது செயற்கையாக 18 என்று நிச்சயம் சட்டமீறல் செய்யப்படக்கூடிய ஒரு விதியாக மாற்றியிருக்கிறது. ஆனால் உடலைப் பற்றியோ உறவைப் பற்றியோ எந்தக் கல்வியும் தன் குழந்தைகளுக்குத் தராமல் விட்டுவிட்ட அவலம்தான் இருந்து வந்திருக்கிறது. இனி அது உதவாது. விழித்துக் கொண்டு மாற்றங்களுக்கான கல்வியை நாம் செய்யத் தொடங்காவிட்டால், வரும் நூற்றாண்டுகளில் இளைஞர்களின் தேசம் என்ற பெயர் தாங்கப் போகும் இந்தியா பலவீனமான இளைஞர்களின் விடுதியாகி விடும்.

Thursday, March 21, 2013

மார்ச் 20 - உலக சிட்டுக்குருவிகள் தினம் !

மேல் பகுதியில் சாம்பல் நிறமாகவும் அடிப் பகுதியில் வெண்மை நிறமாகவும் இருக்கும். கழுத்தில்  கருமையான திட்டுக்களோடு, பார்க்க அழகாக இருக்கும்.’
 
இன்னும் கொஞ்சம் நாளில் சிட்டுக்குருவிகளைப் பற்றி இப்படி விவரிக்கத்தான் முடியும். பார்க்க முடியாது. ஆம், சிட்டுக்குருவிகள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன. இந்த சிட்டுக்குருவிகள்பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 20-ம் தேதியை 'உலக சிட்டுக்குருவிகள் தினம்' என்று அனுசரித்துவருகிறார்கள்.

அழிந்த சேதி தெரியுமா?

செல்போன் கோபுரங்களின் கதிர்வீச்சினால் சிட்டுக்குருவிகள் நகரங்களில் அடியோடு மறைந்துவிட்டன. நகரங்களின் கட்டட அமைப்பும் இவை கூடு கட்டுவதற்கு ஏற்றதாக இல்லை. தவிர, சிட்டுக்குருவிகளுக்கான தானியங்கள் நகரங்களின் தெருக்களில் கிடைப்பது இல்லை. கிராமங்களிலும் நிலைமை மோசம்தான். ரசாயன உரங்களைப் பயன்படுத்தி விவசாயம் செய்வதால்,  அந்த உரங்களின் வேதியியல் நச்சுப் பொருட்களைத் தாங்கிக்கொள்ள முடியாமல் வெட்டுக்கிளிகளும் பூச்சிகளும் அழிந்தன. அந்தப் பூச்சிகளை உண்டுவந்த சிட்டுக்குருவிகளுக்கும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டு மடிந்துவிட்டன. நீர், நிலம், காற்று மாசுபடுதல், காடுகள் அழிக்கப்படுதல் போன்றவற்றாலும் சிட்டுக்குருவிகள் நம்மைவிட்டுப் பிரிந்துவிட்டன.

ஏன் காப்பாற்ற வேண்டும்?

எல்லா உயிரினங்களும் சுற்றுச்சூழலின் உணவுச் சங்கிலியில் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. இந்தச் சங்கிலியில்  ஓர் உயிரினம் அழியும்போது, அந்தச் சங்கிலியின் மொத்த அமைப்பும் சிதைக்கப்படும். கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டை அச்சுறுத்திய டெங்கு காய்ச்சலுக்கும் சிட்டுக்குருவிகளின் அழிவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. எப்படித் தெரியுமா?

சிட்டுக்குருவிகள், கொசுக்களின் முட்டைகளை விரும்பி உண்ணும். அவை இல்லாததால், கொசுக்கள் பெருகி நோயைப் பரப்பிவருகின்றன. எனவே, சிட்டுக்குருவிகளைக் காப்பாற்ற வேண்டியது அவசியம். ரசாயன உரங்களைத் தவிர்த்தல், நீர், காற்று மாசுபாட்டைத் தடுத்தல், மரங்களைக் காத்தல் போன்ற செயல்களால், சிட்டுக்குருவி இனங்களை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும். டெல்லி அரசு சிட்டுக்குருவியை மாநிலப் பறவையாக அறிவித்து உள்ளது. இந்திய அஞ்சல் துறையும் சிறப்புத் தபால் உறையை வெளியிட்டு உள்ளது. நாமும் நம்மால் ஆன முயற்சிகளைச் செய்யலாம்.

நம் பகுதியில் சிட்டுக்குருவிகள் தென்பட்டால், அவற்றுக்குத் தூய்மையான நீர், உலர் தானியங்களை வைக்கலாம். வீட்டின் மொட்டைமாடியில் ஓர் இடத்தில் அட்டைப் பெட்டியை வைத்து, அதில் சிறிய துவாரம் இடுங்கள். உள்ளே கொஞ்சம் வைக்கோல் துண்டுகளையும் அரிசி, தானிய வகைகளையும் வையுங்கள். சிட்டுக்குருவிகள் கூடு கட்டத் தேவையான தேங்காய் நார்கள், பயன்படுத்தாத துடைப்பக் குச்சிகள், வைக்கோல் போன்றவற்றையும்  வைக்கலாம். வீட்டுக்கு அருகில் செம்பருத்தி, மல்லிகை, முல்லை போன்ற செடிகள் இருந்தால், உங்கள் வீட்டில் விரைவில் சிட்டுக்குருவிகள் குடியேறிவிடும்.

இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் சிட்டுக்குருவி களின் இனிய கீச் கீச் குரலை மீண்டும் நம்மால் கேட்க முடியும்.

Sunday, March 17, 2013

சாவேஸ் - ஒரு சகாப்தத்தின் முடிவு!


தம் வாழ்நாள் முழுவதும் அமெரிக்காவையும், கடைசி இரு ஆண்டுகளில் புற்றுநோயையும் எதிர்த்துப் போராடிய ஹியூகோ சாவேஸ் மார்ச் 5ம் தேதி அதிகாலை மரணமடைந்தார். மிடுக்கான ராணுவ உடையில் உள்ள சாவேஸின் உடலைக் காண அயல் நாட்டுப் பிரதம மந்திரிகளும் அதிபர்களும் இளவரசர்களும் வரிசை வரிசையாகத் திரண்டு வந்திருந்தனர். வெனிசூலாவின் தலைநகரம் காரகாஸில், ‘சாவேஸ் உங்களை நேசிக்கிறோம்’ என்று எழுதப்பட்ட பதாகையை உயர்த்தியபடி சாமானியர்கள் ஊர்வலம் சென்றனர். கட்டுப்படுத்தமுடியாமல் பலர் வெடித்து அழுது கொண்டு இருந்தனர்.வெனிசூலாவின் வரலாற்றைத் திருத்தி எழுதிய சாவேஸைப் புதைக்க வெனிசூலாவுக்கு மனமில்லை. எனவே, ஹோசிமினையும் லெனினையும் மாவோவையும் போல் அவரையும் கண்ணாடிப் பெட்டிக்குள் பாடம் செய்து வைக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இறுதிவரை சாவேஸ் எங்களுடன் இருக்கவேண்டும் என்பதால் இந்த ஏற்பாடு" என்கிறார் துணை அதிபர் நிகோலஸ் மதுரோ. சாவேஸின் மரணச் செய்தியை கண்கள் கலங்கியபடி அறிவித்தவர் இவரே. மக்கள், சாவேஸை இனி எப்போது வேண்டுமானாலும் தரிசிக்கலாம்" என்கிறார் இவர். தற்போது தாற்காலிகமாக அதிபர் பொறுப்பை ஏற்றிருக்கும் நிகோலஸ் மதுரோவிடம்தான் சாவேஸ் சிகிச்சைக்கு முன்பு பொறுப்புகளை ஒப்படைத்திருந்தார்.

தமக்கு புற்றுநோய் உள்ளதை ஜூன் 2011ல் முதல் முறையாக சாவேஸ் அறிவித்தார். அவருடைய அரசியல் ஆசானும் தோழருமான ஃபிடல் காஸ்ட்ரோவின் கியூபாவில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, சரியாகி விட்டதாகக் கடந்த ஆண்டு சாவேஸ் அறிவித்தார். கூடவே, ஒன்பது மணி நேரம் தொடர்ச்சியாக உரையாற்றி தம் உற்சாகத்தையும் துடிப்பையும் வெளிப்படுத்தினார். கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்தலில் மக்கள் நம்பிக்கையுடன் சாவேஸுக்கு வாக்களித்து அவரை மீண்டும் பதவியில் அமர வைத்தனர். மக்களின் நம்பிக்கையை சாவேஸ் பொய்யாக்கியது இதுவே முதல் மற்றும் கடைசி முறை.மற்றபடி, ஒரு வாழ்நாளில் சாதிக்க முடியாத பலவற்றை சாவேஸ் தமது 14 ஆண்டுகால ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றி இருக்கிறார். சில உதாரணங்கள்: கிட்டத்தட்ட பத்து லட்சம் ஏழைக் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி, எழுத்தறிவின்மை கிட்டத்தட்ட முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது. வீடற்ற ஏழைகளுக்கு இருபது லட்சம் வீடுகள் கட்டப்படும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை 1,20,000 பேருக்கு வீடு கிடைத்துள்ளது. குடிசைகளிலும் சேரிகளிலும் வாழ்வோரின் எண்ணிக்கை முன்பிருந்ததைக் காட்டிலும் 70 சதவிகிதம் குறைந்துள்ளது. வேலையில்லாப் பிரச்னை, வறுமை, குழந்தைகள் இறப்பு எண்ணிக்கை ஆகியவை கணிசமாகக் குறைந்துள்ளன.

மருத்துவத்துக்கு கியூபர்களின் உதவியைப் பெற்றுக் கொண்டார் சாவேஸ். 14,000 கியூப மருத்துவர்கள் வெனிசூலாவின் கிராமப்புறப் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 11,000 மருத்துவமனைகள் அமைக்கப்பட்டன. மருத்துவத்துக்கான பட்ஜெட் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டது. லட்சக்கணக்கான வெனிசூலா ஏழைகள் முதல் முறையாக நவீன மருத்துவ வசதிகள் பெற்றனர்.  மூன்றாம் உலக வறுமை நாடாக இருந்த வெனிசூலா, பொருளாதார சுதந்திரம் அடைந்தது. எண்ணெய் உள்ளிட்ட வளங்கள் தேசியமயமாக்கப்பட்டன. அவற்றின் பலன்களை மக்கள் நேரடியாக அனுபவித்தனர். சோஷலிசக் கொள்கைகளை உரக்க அறிவித்து மக்களின் பேரன்பையும் மதிப்பையும் பெற்றுக் கொண்டார் சாவேஸ். இவற்றையெல்லாம் அவர் வோட்டுக்காகத்தான் செய்தார் என்னும் குற்றச்சாட்டை மறுக்கிறார் வரலாற்றாசிரியர் தாரிக் அலி. மேற்கத்திய உலகம் இப்படியொரு தவறான கருத்தாக்கத்தைக் கொண்டிருக்கிறது. வோட்டுதான் முக்கியம் என்று நினைத்திருந்தால் பெரும் பணக்காரர்களுக்குச் சாதகமாக அவர் நடந்து கொண்டிருக்க வேண்டும். அமெரிக்காவுடன் நட்புடன் இருந்திருக்க வேண்டும். அமெரிக்க நிறுவனங்களை வரவேற்று இருக்க வேண்டும். சாவேஸ் அப்படி செய்யவில்லை" என்கிறார் தாரிக். நேர்மாறாக, ஜார்ஜ் புஷ்ஷை சாத்தான் என்று ஐ.நா. சபையில் வைத்து அழைக்கும் அளவுக்கு அமெரிக்காவின் மேலாதிக்கத்தை சாவேஸ் எதிர்த்திருக்கிறார். சாவேஸின் நோக்கம் ஒன்றுதான். அமெரிக்க வல்லரசின் ஆதிக்கத்தைக் குறைந்த பட்சம் லத்தீன் அமெரிக்காவிலும் முடிந்தவரை உலகம் முழுவதிலும் இருந்து அகற்றவேண்டும். தமது அரசியல் எதிரியை அதிகபட்ச சீற்றத்துடனும் பலத்துடனும் அவர் கையாண்டார். அதனாலேயே ஏராளமான எதிரிகளையும் எதிர்ப் பிரசாரங்களையும் அவர் சம்பாதித்துக் கொண்டார்.ஃபிடல் காஸ்ட்ரோவுக்கும் ஹியூகோ சாவேஸுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. கியூபாவில் நிலவுவது மக்கள் விரோத அரசு, எப்பாடுபட்டாவது அதைத் தூக்கியெறிந்தே தீரவேண்டும் என்று காஸ்ட்ரோ முடிவு செய்தார். அதே முடிவுக்குத் தான் சாவேஸும் வந்து சேர்ந்தார். காஸ்ட்ரோவைப் போலவே சாவேஸும் ஆயுதப் பேராட்டத்தைக் கையில் எடுத்தார். இருவரும் அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்ட பிறகு இருவருமே தங்கள் தேசத்தின் விடுதலைக்காகத் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டனர். மக்களை வழிநடத்த காஸ்ட்ரோவும் சாவேஸும் கையாண்ட சித்தாந்தமும் ஒன்றுதான். சோஷலிசம். 2002ல் சாவேஸுக்கு எதிரான ஆட்சிக் கலைப்பு அமெரிக்க ஆதரவுடன் நிகழ்த்தப்பட்ட போது, பெரும் அளவிலான பெண்கள் வீதிகளில் திரண்டு வந்து சாவேஸை ஆதரித்தார்கள். சாவேஸ், பெண்கள் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். ‘பெண்களின் பங்களிப்பு இல்லாமல் எந்தவொரு புரட்சியும் வெற்றி பெறமுடியாது.’ எனவேதான், வீட்டில் குடும்பத்தைக் கவனித்துக் கொள்ளும் பெண்களின் உழைப்பையும் பங்களிப்பையும் அங்கீகரித்து வயதான காலத்தில் அவர்களுக்கு ஓய்வூதியம் அளிப்பதற்கான வழிமுறைகளைச் செய்தார் சாவேஸ். 

தமது கடைசி தேர்தலில் ஹியூகோ சாவேஸ் பிரசாரம் செய்யவில்லை. வோட்டுக் கேட்கவில்லை. ஒருமுறைகூட மக்களை அவர் சந்திக்கவும் இல்லை. இருந்தபோதும் இதுவரை இல்லாத பெரும் வெற்றியை மக்கள் அவருக்கு ஈட்டிக் கொடுத்ததற்கு ஒரு காரணம்தான் இருக்கமுடியும். ஹியூகோ சாவேஸின் வெற்றி என்பது உண்மையில் தமது வெற்றியே என்பதை மக்கள் நன்கு உணர்ந்திருந்தனர். சாவேஸின் மரணம் என்பது ஒரு சகாப்தத்தின் முடிவு என்பதையும் அவர்கள் இப்போது உணர்கிறார்கள்.

மருதன்

அருள்வாக்கு - மனஸ்!


நீ எத்தனையோ நினைக்கிறாய், எழுதுகிறாய், தெரிந்து கொள்கிறாய், எக்ஸ்பீரியன்ஸ் பண்ணுகிறாய். ஆனால், இதை எல்லாம் செய்யும் உன் மனஸ் என்னவென்று உனக்குப் புலப்படுகிறதோ? அதை நிறுத்தி வைத்து இன்னவென்று தன்னைத்தானே பார்த்து அறிந்து கொள்ளும்படி பண்ண முடிகிறதோ?

இந்த நிமிஷம் நல்லதாய்த் தெரிகிற மனஸ் அடுத்த நிமிஷம் மஹா கெட்டதாய் விடுகிறது. இந்த செகண்ட் சந்தோஷமாயிருக்கும் மனஸ் அடுத்த செகண்ட் துக்கம் கொண்டாடுகிறது. இந்த க்ஷணம் ஏதோ கொஞ்சம் சாந்தமாயிருக்கிற மாதிரி தோன்றுகிற இந்த மனஸு அடுத்த க்ஷணம் அப்படியிருக்குமா என்று தெரியவில்லை. இந்த மனஸ் என்பது என்ன? புரியவே இல்லை. ‘இதனால்தான் ஜீவனுக்கு எல்லா அனுபவமும் ஏற்படுகின்றன. இது வேலை செய்யாமல் தூங்கிப் போனால் அல்லது மூர்ச்சை போட்டு விழுந்துவிட்டால் எந்த அநுபவமுமேயில்லை’ என்பதால் இதுவேதான் நாம் என்று தோன்றுகிறது.

தூக்கத்தின்போது, மூர்ச்சையின்போது உனக்கு எந்த அநுபவமும் இல்லை என்பது சரி. நாமிருக்கிறோம் என்பது உனக்குத் தெரியத்தான் இல்லை. ஆனால், நீ அப்போது நிஜமாகவே இல்லாமல் போய்விட்டாயா, என்ன? அப்படியானால், தூக்கத்துக்கு அப்புறம் எப்படி முழித்துக் கொண்டாய்? தூக்கம் கலைந்து எழுந்த அப்புறம் அப்படி ஜடமாகக் கிடந்ததற்கும் சேர்த்து வைத்து எப்படிக் காரியம் செய்ய ஆரம்பித்தாய்?

மூர்ச்சையைப் பற்றியும் இப்படியே யோசித்துப் பார். தூக்கத்துக்கும், மூர்ச்சை போடுவதற்கும் முந்தி நீயாக இருந்த ஆஸாமியேதான் தூக்கம் கலைந்த பிற்பாடும், மூர்ச்சை தெளிந்த பிற்பாடும் நீயாக இருப்பது என்பதும் தெரிகிறதோல்லியோ? அப்போது உனக்கிருந்த அபிப்ராயங்கள், அநுபவங்கள், உறவுமுறைகள் எல்லாம் இப்போதும் தொடர்ந்து வருகின்றன அல்லவா? அந்த உடம்பேதானே இப்போதும் உன் உடம்பாயிருக்கிறது? இதெல்லாவற்றுக்கும் மேலாகத் தூங்குகிறபோதும், மூர்ச்சை போட்டுக் கிடந்தபோதும் உன் உயிர் இருக்கத்தானே செய்தது? ரத்த ஓட்டம், தேகத்தில் உஷ்ணம், சுவாசம் எல்லாம் இருக்கத்தானே செய்தன?

அதனால் மனஸ் இல்லாதபோது நீ இருக்கத்தான் இருந்தாய். அதாவது ‘நான் நான்’ என்று மனஸ் உள்ள போதுதான் நாம் இருப்பதை நம்மால் தெரிந்து சொல்லிக் கொள்ள முடிகிறதென்றாலும் மனஸ் இல்லாத போதும்கூட நாம் இருந்து கொண்டுதானிருக்கிறோம்.
ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

ஓ பக்கங்கள் - பரதேசியின் ஒய்யாரக் கொண்டைகளுக்குள்ளே! ஞாநி


திரைப்பட இயக்குனர் பாலாவுக்கு முதலில் என் நன்றி. நடிப்பு சொல்லிக் கொடுக்கிறேன் என்று முரட்டுத்தனமாக தான் அடித்துக் காட்டி, நடித்துக் காட்டி வேலை வாங்குவதைப் பகிரங்கமாக வீடியோ எடுத்து வெளியிட்டிருக்கிறார். தம் புதிய படத்துக்குக் கவனம் ஈர்ப்பதற்காக இந்த வேலையை அவர் செய்திருந்தாலும், இது தமிழ் சினிமா துறையில் காலம் காலமாக இருந்துவரும் சில கேவலங்களைப் பொது விவாதத்துக்குக் கொண்டு வர எனக்கு உதவி இருக்கிறது.பாலா, நடித்துக் காட்டுகிறேன் என்று சொல்லிக் கொண்டு நடிகர்களைக் குச்சியாலும் கையாலும் காலாலும் அடித்திருப்பது நிச்சயம் அவருடைய மனப்பிறழ்வைக் காட்டுகிறது. அவருக்குச் சிகிச்சை தேவைப்படுகிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. தம்மன வக்கிரங்களை ஒரு கலைஞன் கலையாக வடித்து அவற்றிலிருந்து விடுதலை பெற முயற்சிப்பது பொதுவாக நடப்பதுதான் என்றாலும் அந்த முயற்சி இதர மனிதர்களை வதைப்பதாக இருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது.

தமிழ் சினிமாவில்தான் இந்த நடித்துக் காட்டுவது என்ற விசித்திர கேவலம் இருந்து வருகிறது. உலகின் மிகப்பெரிய திரைப்பட மேதைகள் யாருக்கும் நடித்துக் காட்டும் வழக்கம் கிடையாது. சிறந்த நடிகர்கள் யாரும் தமக்கு இயக்குனர் நடித்துக் காட்டுவதை ஒருபோதும் விரும்பமாட்டார்கள்.  நடிகரிடமிருந்து தமக்குத் தேவைப்படுவது என்ன என்பதை ஒரு இயக்குனர் நடிகருக்குச் சொல்லிப் புரிய வைப்பது மட்டுமே தேவை. இயக்குனர் என்ன விரும்புகிறார் என்பதைப் புரிந்து கொண்ட நடிகர், தாம் அதை இயக்குனருக்கு நடித்துக் காட்டியே உணர்த்த வேண்டும். தம் பாத்திரத்தைப் பற்றிச் சிந்தித்துத் தீர்மானித்ததை தம் உடல் மொழியால் வெளிப்படுத்தவும் தெரிந்தவரே நடிகர். இயக்குனர் நடித்துக் காட்டியதை அப்படியே மிமிக்ரி செய்பவர் சிந்திக்க இயலாத ஒரு கருவி மட்டுமே.தங்கள் நடிகர்கள் அப்படி இருப்பதையே பல இயக்குனர்கள் விரும்புகிறார்கள். இயக்குனர் நடித்துக் காட்டுவார், அதை நாம் திரும்பச் செய்தால் போதும் என்ற மனநிலை நடிகர்களிடமும் தமிழ்ச் சூழலிலும் ஆழமாக வேரூன்றிவிட்டது. என்னிடம் பரீக்ஷா நாடகங்களில் நடிக்க வரும் இளைஞர்களில் பலர் சினிமா ஆசையில் நடிக்க வந்திருப்பவர்கள். (கூத்துப்பட்டறையில் நடித்த ஒரு சிலர் சினிமாவில் பிரபலம் ஆகிவிட்டதால் நாடகத்துக்கு ஏற்பட்ட அவலங்களில் இது ஒன்று. நாடகம் மீது எந்தக் காதலும் இல்லாமல் சினிமாவுக்குச் செல்ல இது ஓர் உத்தி என்று கருதும் கும்பல், அவர்களுக்குப் பயிற்சி தருகிறோம் என்று வசூல் செய்யும் நாடகக்காரர்கள் எண்ணிக்கை எல்லாம் அதிகமாகிவிட்டது.) இந்த இளைஞர்களில் பலர் தங்களுக்கு நடிக்க வராதபோது, இயக்குனரான என்னை நடித்துக் காட்டச் சொல்கிறார்கள். இது சிந்திக்க முடியாத நடிகரின் பலவீனம் மட்டுமல்ல, இயக்குனரையும் பலவீனப்படுத்துவதாகும்.ஆனால் தமிழ் சினிமாவில் இயக்குனர் நடித்துக் காட்டுவது என்பது பதிந்து விட்டதற்குக் காரணம், நடிகனாகவும் ஹீரோவாகவும் ஆகவேண்டும் என்ற ஆசையில் சினிமாவுக்கு வந்து அது முடியாமல் போய் இயக்குனரானவர்கள் பலர் இருப்பதுதான். இயக்குனராக பிரபலமானதும் மறுபடியும் தங்கள் ஒரிஜினல் ஆசைக்கு அவர்களில் பலர் திரும்ப முயற்சிக்கிறார்கள்.

இந்த நடித்துக் காட்டுவதாவது அபத்தம். ஆனால் அசலாக தத்ரூபமாக இருக்க வேண்டும் என்று வதைப்பது, கொடூரம். பல வருடங்கள் முன்பு ஒரு சினிமா நடிகர் நாடகத்தில் ஒரு பாத்திரத்தில் நடிப்பதற்காக மொட்டை அடித்துக் கொண்டதைப் பலரும் பாராட்டிய போது எழுத்தாளர் ஜெயகாந்தன் கேட்டார்: இதே நடிகர் இதற்கு முன்னால் முஸ்லிம் தளபதி வேடத்தில் நடித்தாரே, அதற்காக சுன்னத் செய்து கொண்டாரா என்று. நடிப்பு என்பது அசலாக மாறுவதல்ல. அசலை உணர்த்துவது. அடிக்கிற காட்சியில் அடிப்பது போல இருக்க வேண்டுமே தவிர அடிக்க முடியாது. பாலா படங்களில் கொலைக் காட்சிகளும் பாலியல் வன்புணர்ச்சிக் காட்சிகளும் வந்தால் அவற்றையெல்லாம் அவர் தம் நடிகர்களுக்கு எப்படிச் சொல்லிக் கொடுப்பார் என்று கற்பனை செய்யவே கதிகலங்குகிறது.பாலா போன்ற மனவக்கிரம் உடையவர்கள் இப்படி நடந்து கொள்வதை விட எனக்கு அதிக கவலை தருவது, அவர் படங்களில் நடிக்கும் நடிகர்களும் இதர உதவியாளர்களும் இதையெல்லாம் ஏன் எதிர்க்காமல் சகித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதுதான். அறிவு ஜீவிகள் என்று அறியப்பட்டிருக்கும் பேராசிரியர் நிஜ நாடக இயக்க மு.ராமசாமி, கவிஞர் விக்ரமாதித்யன், எழுத்தாளர்கள் ஜெயமோகன், நாஞ்சில் நாடன், எஸ்.ராம கிருஷ்ணன் போன்றோர் பாலாவின் படங்களில் வேலை செய்திருக்கிறார்கள். நிச்சயம் பாலாவின் வக்கிரமான நடைமுறைகள் அவர்களுக்குத் தெரியாமல் இருக்க முடியாது. இப்படிச் செய்வது தவறு என்று அவர்களெல்லாம் பாலாவுக்கு எடுத்துச் சொல்லியிருக்க வேண்டாமா? என்னிடம் கேட்ட விஷயம் தவிர வேறு எதிலும் நான் தலையிடுவதில்லை என்ற சாக்கு உதவாது. படைப்பாளிகள், அறிவுஜீவிகள் தாம் தொடர்புள்ள இடத்தில் தமக்கு உடன்பாடில்லாத விஷயங்கள் நடந்தால் நிச்சயம் அதுபற்றிய தங்கள் அதிருப்தியைப் பதிவு செய்வதுதான் நேர்மை. ஆனால் தமிழ் சினிமா சூழல் எல்லாரையும் அடிமை மனநிலையில் மட்டுமே இயங்கும்படி நிர்பந்திக்கிறது. அதற்குள்ளே நுழையும் சுதந்திர மனமும் சிந்தனையும் உடையவர்களைக் கூட அந்த அடிமைச் சூழல் போலிகளாக இருக்கச் சொல்கிறது.பாலாவுக்கு பல காலம் முன்பே பாலசந்தரும் பாரதிராஜாவும் நடிகர்களை அடித்த கதைகள் உண்டு. அப்படி அடிப்பதையெல்லாம் பெருமையாகவும் ‘மோதிரக் கையால் குட்டு’ என்றும் அசட்டுத்தனமாகக் கொண்டாடும் அடிமைப் புத்திதான் அடிபட்டவர்களுக்கு இருந்து வந்திருக்கிறது. இயக்குனர்கள் மட்டுமல்ல, ஒளிப்பதிவாளர்கள் முதல், நடன இயக்குனர்கள், எடிட்டர்கள் வரை தங்கள் உதவியாளர்களைக் கொத்தடிமைகளாக நடத்துவதை வேறு எந்த அறிவுசார்ந்த துறையிலும் பார்க்கவே முடியாது.த்திரிகை அலுவலகத்தில் ஓர் உதவி ஆசிரியர் கட்டுரையில் தவறு செய்துவிட்டால், அவரை எந்த ஆசிரியரும் அடித்ததாக வரலாறே கிடையாது. ஆனால் சினிமாவில் உதவி இயக்குனருக்கு அடி விழும். ஸ்டோரி டிஸ்கஷனில் நல்ல சீன் சொல்லவில்லை என்பதற்காக, அறை வாசலில் மணிக்கணக்கில் உதவி இயக்குனரை கால் கடுக்க நிறுத்தி வைத்து தண்டிப்பது சகஜம். கெட்ட வார்த்தை வசவுகள் மிகச் சாதாரணம். ஒரு தொழிற்சாலையிலோ ஆலையிலோ ஒரு தொழிலாளியை இந்த வசவில் ஒரு வசவைச் சொல்லித் திட்டினால் கூட, நிச்சயம் அத்தனை பேரும் வேலைநிறுத்தம் செய்வார்கள். இங்கே யாரும் கண்டுகொள்ளவே மாட்டார்கள். ‘சினிமாவுல இதெல்லாம் சகஜமப்பா’ என்ற அடிமை மனநிலைதான் ஆதிக்கம் செலுத்துகிறது. 
 
மிக வலிமையான தொழிற்சங்கங்கள் இருந்த துறை சினிமா என்ற போதும் இந்தக் கேவலங்களுக்கு எதிராக எந்தத் தொழிற்சங்க நடவடிக்கையும் கிடையாது. கொத்தடிமை மாதிரி வேலை வாங்கிக் கொண்டு சம்பளத்தையும் சரியாகக் கொடுக்காமல் ஏமாற்றும் சூழலில், உதவியாளர்களுக்குச் சம்பளத்தை வாங்கிக் கொடுப்பதே மிகப்பெரிய தொழிற்சங்கப் பணியாகக் கருதப்படுகிறது. உதவி இயக்குனர்கள், உதவி ஒளிப்பதிவாளர்கள் போன்றோருக்கெல்லாம் தனி சங்கமே இல்லை. யார் இவர்களை வதைக்கிறார்களோ அவர்களுடன் சேர்ந்தே ஒரே சங்கத்தில் இருக்க வேண்டிய நிலையில், யாரிடம் போய் புகார் செய்ய முடியும்?

சினிமாவில் இந்த அடிமை நிலைமை இருப்பதற்குக் காரணம் பணம், புகழ் ஆசைகள்தான்.

இன்று நசுக்கப்படும் ஒவ்வொரு சின்ன நடிகனும், உதவி இயக்குனரும் நாளை தான் மேலே வந்து புகழையும் பணத்தையும் அடைந்து விட்டால், தம் வாழ்க்கையே அடியோடு மாறிவிடும் என்ற கனவிலேயே இன்றைய அடிமைச்சுமையை சகித்துக் கொள்கிறார்கள். மேலே வந்ததும் அதே கஷ்டங்களை அடுத்து வருபவர்களும் அனுபவிக்கக் கூடாது என்ற அக்கறையும் பரிவும் இருக்காது.

கடந்த பத்தாண்டுகளில் தமிழ் சினிமாவுக்குள் ஏராளமான இளைஞர்கள் நுழைந்திருக்கிறார்கள். இந்த வருகையால் சினிமாவின் உருவம் மாறியிருக்கிறது. தொழில்நுட்பம் மெருகேறியிருக்கிறது. ஆனால் பழைய அடிமைமுறை தொழில் நடைமுறைகள் மாறவில்லை. போலித்தனம் எனப்படும் ஹிப்பாக்ரசியே கோலோச்சுகிறது. இந்த ஹிப்பாக்ரசிதான் தமிழ் சினிமாவின் தாரக மந்திரம். பர்தா அணியும் பழக்கம் சரியா தப்பா என்ற ‘நீயா நானா’ விவாதம் ஒளிபரப்பப்படக் கூடாது என்று சில இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் வெற்றிகரமாகத் தடுக்கின்றன. அப்படி தடுக்க உதவியவர் இயக்குனர் அமீர் என்று அமைப்பைச் சேர்ந்த மார்க்க ‘அறிஞர்’ பி.ஜே. பகிரங்கமாகச் சொல்லுகிறார். என் வீட்டுப் பெண்கள் சினிமாவும் டி.வி.யும் பார்க்கமாட்டார்கள் என்று எனக்கு அளித்த வெப் டி.வி. பேட்டியில் அமீர் சொன்னார். ஆனால் ‘கன்னித்தீவு பொண்ணா? கட்டெறும்பு கண்ணா’ என்று குத்தாட்டம் போட அவர் தயங்குவதே இல்லை. அமீர் மட்டுமல்ல, விரல் விட்டு எண்ணி விடக்கூடிய ஒரு சிலரைத் தவிர அத்தனை தமிழ் சினிமாக்காரர்களும் அதே போன்றவர்கள்தான். இந்த ஹிப்பாக்ரசிதான் தமிழ் சினிமா. அதன் இன்னொரு எவிடென்ஸ்தான் பாலாவின் ப்ரொமோ வீடியோ. கொத்தடிமைகளாக தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நடத்தப்பட்ட வரலாற்றைப் பற்றிய படம் பரதேசி! தமிழ் சினிமா அடிமைகளைப் பற்றி யார் எப்போது படம் எடுப்பார்கள்!?

திருச்செந்தூர்.

வங்கக்கடலின் தாலாட்டில், நாளும் வந்து குவியும் பக்தர்களின் அத்தனைக் குறைகளையும் போக்கும் அற்புதத் திருத்தலம் திருச்செந்தூர். முருகப்பெருமானின் இரண்டாவது படைவீடு. சூரபத்மனின் சம்ஹாரம் நிகழ்ந்த அற்புத க்ஷேத்திரம். சூரசம்ஹாரம் நிகழ்ந்த பிறகு, சிவபூஜை செய்ய விரும்பினார் முருகப்பெருமான். அவரது விருப்பப்படி, தேவசிற்பி விஸ்வகர்மா ஒரு கோயிலை உருவாக்கினார். அதுதான், இன்றைய பிரமாண்ட திருச்செந்தூர் திருத்தலம். செந்தூர் முருகன் கடற்கரை ஆண்டியாக இருப்பதாக ஐதீகம். அதனால் இங்கே அவருக்கு அருகில் வள்ளி, தெய்வானையைப் பார்க்க முடியாது. அவர்கள் இங்கே தனித்தனி சந்நிதிகளில் அருள்கிறார்கள். 
 
செந்தூர் சிறப்புகள்... 
  இலைவிபூதி: திருச்செந்தூர் கோயிலின் புகழ்பெற்ற பிரசாதம் இது. பன்னீர் இலையில் விபூதியை மடித்துத் தருவதால் அப்படியரு பெயர். இந்த இலை விபூதியை உண்டுதான் ஆதிசங்கரர் தனக்கு ஏற்பட்ட நோயைப் போக்கிக்கொண்டதாகச் சொல்வர்.


நாழிக்கிணறு: இங்குள்ள தீர்த்தங்களில் மிக முக்கியமானது. சண்முகவிலாசத்துக்கு எதிரே 24 அடி ஆழத்தில், ஒரு சதுர அடி பரப்பில் அமைந்துள்ள இந்தக் கிணற்றில் சுரக்கும் நீர் மிகவும் சுவையானது. சூரசம்ஹாரத்தின்போது தமது படைவீரர்களின் தாகம் தணிக்க முருகப்பெருமானே உருவாக்கிய கிணறு இது என்கிறார்கள்.

வள்ளிக்குகை: தேவேந்திரன் மகள் தெய்வானையை முருகப்பெருமான் மணந்துகொண்டதால் கோபம் கொண்ட வள்ளி இங்கே ஒளிந்துகொண்டதாகச் சொல்வர். கடற்கரையை ஒட்டியுள்ள சந்தனமலையில் அமைந்துள்ளது இந்தக் குகை.


அதிசய ராஜகோபுரம்!

9 நிலைகளும், 137 அடி உயரமும் கொண்ட திருச்செந்தூர் ராஜகோபுரம் கட்டும் பணியை மேற்கொண்டவர் தேசிகமூர்த்தி சுவாமிகள். இந்தக் கோபுரம் கட்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்குக் கூலியாக விபூதியைப் பொட்டலமாக மடித்துக் கொடுத்தார் சுவாமிகள். இங்குள்ள தூண்டுகை விநாயகர் கோயில் அருகே விபூதி பொட்டலத்தை அவர்கள் பிரித்துப் பார்த்தபோது, அது அவர்களுக்கு ஏற்ற கூலிப் பணமாக மாறியதாக வரலாறு. மேலும், ராஜகோபுரம் கட்டும் பணிக்கு வள்ளல் சீதக்காதி ஒரு மூட்டை உப்பு கொடுக்க, அது தங்கக்காசுகளாக மாறியதாகவும் கூறுவர். கிழக்கில் இருப்பதற்கு மாறாக மேற்கில் இருக்கும் காரணத்தால் எப்போதும் மூடியே கிடக்கும் இந்தக் கோபுரம், கந்தசஷ்டி விழாவில் இடம்பெறும் முருகப்பெருமானின் திருக்கல்யாணம் அன்று நள்ளிரவில் ஒருநாள் மட்டுமே திறக்கப்படும்.