பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழணும்’ என்று ஆசீர்வாதம் பண்ணுவது தமிழ் தேச வழக்கு.
வேதத்தில் ஒரு ஸுமங்கலிக்கு என்ன ஆசீர்வாதம் சொல்லியிருக்கிறதென்றால், ‘பகவானே! இவள் பத்துக் குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு அப்புறம்
பதியையும் பதினொராவது குழந்தையாக ‘ட்ரீட்’ பண்ணவை!’ என்று. உள்ளே ரொம்ப அர்த்தம் வைத்து அழகாகச் சொல்லியிருக்கிறது.
தமிழ் வழக்கில் ‘பதினாறும் பெற்று’ என்று இருக்கிறது. ‘ஃபாமிலி ப்ளானிங்’யுகம்! சொன்னாலே உள்ளே தள்ளிவிடுவார்களோ?
என்று பயமாயிருக்கிறது!
ஆனால் ‘பதினாறும் பெற்று’என்பது குழந்தை பெற்றுக் கொள்வதைக் குறிக்கவில்லை என்றும், வாழ்க்கை நல்லவிதமாக இருப்பதற்கு
வேண்டிய பதினாறு விஷயங்களையே குறிக்கின்றனவென்றும் சொல்கிறார்கள்.
‘பெரும் பேறு பெறுவது’ என்று ஒரு Phrase (சொற்றொடர்) இருக்கிறது. ‘பெறப்படுவது’தான் பேறு. பிரஸவ காலத்தைப் பெரும்பேறு என்கிறபோது ரொம்ப பாக்யவஸமான ஒன்று. அத்ருஷ்டவசமான ஒன்று என்ற அர்த்தத்தில் சொல்கிறோம். நாமாக ஒன்றும் பாடுபடாமல் ஈச்வராநுக்ரஹத்தால் பெற்றுக் கொள்வதையே இங்கே ‘பேறு’என்பது. Gifted என்று இதே அர்த்தத்தில் அவர்களும் (மேல்நாட்டினரும்) சொல்கிறார்கள். இம்மாதிரியான பதினாறு பேறுகளைப் பெறுவதில்தான்‘பதினாறும் பெற்று’என்பது.