தெய்வத்தின் குரலிலிருந்து நமக்கு எடுத்துதந்தவர் அன்பர் திரு வரகூர் நாராயணன் எனும் பக்தர் : பரமாச்சாரியாரின் பரம பக்தர் .
அம்பாளை
 குழந்தையா தியானம் பண்ணர்து ரொம்ப செளகர்யமான விஷயம் தெரியுமோ! நன்னா அழகா
 வகிடுஎடுத்த கூந்தல், சந்திரன் மாதிரியான வெண்மையான நெற்றி, அழகான 
கருப்புவானவில் மாதிரியான புருவங்கள்,புருவமத்தில அழகான ஒரு குங்கும 
பொட்டு,குட்டி வெள்ளை ரோஜாபூ உள்ளே ஆடும் கருவண்டுகள் மாதிரி ரெண்டு 
கண்விழி, அதுக்கு வரப்பு கட்டி விட்ட மாதிரி மை,அழகான குழி விழும் ரெண்டு 
குட்டி கன்னம்,பண்ணி வெச்ச மாதிரி அழகான குட்டி மூக்கும் ரெண்டு காதும், 
அந்த காதுல குட்டி குட்டியா ரெண்டு தங்க ஜிமிக்கி,குறு நகை செய்யும் குட்டி
 வாய்..... இந்த மாதிரி ரூபத்துல அம்பாளை மனசுல நினைச்சு பாருங்கோ! அதுக்கு
 அப்புறம் நாம வேற யாரையும் சுந்தரியாவே நினைக்க மாட்டோம். 
பாலா திரிபுரசுந்தரி 
லலிதா ஸஹஸ்ரனாமத்தோட ஆரம்ப தியான 
ச்லோகத்துல அம்பாளை பாத்து சிந்தூராருண விக்ரஹாம்னு வர்ணிக்க ஆரம்பிச்சு 
இருப்பா. ஓவியம் தீட்டரோது அந்த ஓவியர்களோட கற்பனையானது கடல் அளவுக்கு 
பரந்து விரிய ஆரம்பிச்சுடும். அந்த சமயம் அவாளுக்கு நேரடி வர்ணங்களான 
சிகப்பு,பச்சை,மஞ்சள் மாதிரியான நிறங்களோட அவா கற்பனை கட்டுப்பட்டு 
நிற்காமல் ரெண்டு மூனு வர்ணங்களை கலந்து வர்ணஜாலம் காட்ட ஆரம்பிச்சுடுவா. 
அதே மாதிரி அம்பாளோட ரூபலாவண்யத்தை சொல்லும் போது நன்னா நிறமா இருந்தானு 
சொல்லாமல் குங்கும சிகப்பையும் சூரிய சிகப்பையும் கலந்த மாதிரி 
இருந்தாளே!னு ஆரம்பம் ஆகும். ஏதுடா இது? சூரிய சிகப்புனு சொன்னதுக்கு 
அப்புறமும் நமக்கு சந்தேகம் குறைய மாட்டேங்கர்து. கடைசி வரைக்கும் 
சந்தேகப்படர்துலையும் கேள்வி கேக்கர்துலையுமே நம்ம ஜென்மாவை கழிச்சுட்டு 
சமத்தாட்டமா நிக்கர்துல நமக்கு நிகர் நாம தான். மாத்தி மாத்தி கேள்வி 
கேட்டாக்க மேதாவிலாஸம் ஜாஸ்தி ஆகுமே தவிர ஆத்மானுபவம் ஒரு போதும் வாய்க்கப்
 போகர்து இல்லை. ஒவ்வொரு சமயத்துலையும் சூரியனோட நிறம் மாறுபடும். 
சிவப்பு,இளஞ்சிவப்பு,மஞ்சள்,வெளிர் மஞ்சள் மறுபடியும் ரத்த சிவப்பு. இதுல 
எந்த நிறம்னு நமக்கு புரியர்துக்கு அபிராமி பட்டர் “உதிக்கின்ற 
செங்கதிர்”னு பளிச்னு சொல்லி இருப்பார். உதயகால சூரியனுக்கு அருணன்னு தான் 
பேர். பட்டரும் இதே மாதிரி தான் ஆரம்பிப்பார். உதிக்கின்ற செங்கதிர் 
உச்சித்திலகம்...னு அது போகும். அபிராமி பட்டர்தான் சங்கரரா வந்தாரோ?னு 
நினைக்கும் படியா செளந்தர்யலஹரி & லலிதா ஸஹஸ்ரனாமத்தோட வியாக்கியானம் 
அபிராமி அந்தாதில பல இடத்துலையும் நாம ரசிக்க முடியர்து. 
பிரம்மாண்ட புராணத்தில் லலிதோபாக்கியானம் பிரிவுல ஸ்தோத்ர 
கண்டத்திலேந்து வரர்து தான் இந்த அழகான லலிதா ஸஹஸ்ரனாமம். லீலா வினோதங்கள் 
நிறைந்தவள் லலிதா, லீலை யாரு ஜாஸ்தியா பண்ணுவா? குழந்தைகள் தானே. லலிதாவோட 
நாம விஷேஷம் பாத்தாலும் கொஞ்சி விளையாடுபவள்னு அர்த்தம் வருது, இன்னொரு 
வகைல பார்த்தால் 'எப்போதும் சந்தோஷத்தை தருபவள்'னு வருது. கொஞ்சி விளையாடக்
 கூடிய பெண் குழந்தை எப்போதும் மனசுக்கு சந்தோஷத்தை தரத்தானே செய்யும்!! :)
 குழந்தேள் என்ன அவ்வளவு சுலபத்துல எல்லார்கிட்டையும் கொஞ்சி விளையாடுமா 
என்ன? யார் கிட்ட அதுக்கு மனசு லயிக்கர்தோ அவா கூடத்தானே களிக்கும். 
அதுனாலதான் இதை பாராயணம் பண்ணரோது அம்பாளை குழந்தையா நினைச்சு அவளோட 
விளையாடர மாதிரியான நிஷ்கபடமான மனசோட பாராயணம் பண்ணனும்!னு ஒரு விதி 
உண்டு. 
பொதுவா சுந்தரினா ரூபவதினு அர்த்தம் வரும். ஆனா வெறும் ரூபலாவண்யம் 
எத்தனை நாளைக்கு நமக்கு சந்தோஷத்தை தரும். அப்படியே வச்சுண்டாலும் நிறையா 
பேர் பாக்கர்துக்கு லக்ஷணமாதான் இருக்கா, ஆனா குணம் இருக்கமாட்டேங்கர்தே! 
அப்ப எதை வச்சு தான் சுந்தரினு முடிவு பண்ணர்து?னு நமக்கு குழப்பமா 
இருக்கும். சில சமயங்கள்ல குழப்பமும் நல்லது தான். அப்பதானே நல்லதா பாத்து 
எடுத்துக்க முடியும். அப்ப யாரை தான் சுந்தரினு சொல்லர்து? யாரு 
ரூபவதியாவும் குணவதியாவும் இருக்காளோ அவா தான் சுந்தரி. ரெண்டும் 
சேர்ந்தாப்ல இருக்கும் ஆள் கிட்டர்து ரொம்ப கஷ்டமாச்சேனு அசடாட்டமா நாம 
முழிக்கவே வேண்டாம்.. 
அம்பாளுக்கு திரிபுர சுந்தரினு ஒரு பெயர் ரொம்பவும் ப்ரபல்யம். மூனு 
லோகத்துலையும் அவளே சிறந்த அழகி!னு அதுக்கு அர்த்தம். ரூபலாவண்யத்துல 
மட்டும் இல்லை குணத்துலையும் அவளே அழகி. சாக்தர்களுக்கு இவள் சரியான 
திருட்டு சுந்தரி! முதல்ல நல்ல பிள்ளையாட்டமா மனசுக்குள்ள வந்து 
ஒளிஞ்சுப்பா, அதுக்கு அப்புறம் மெதுமெதுவா சகலத்துலையும் வியாபிக்க 
ஆரம்பிச்சுடுவள். கடைசில அந்த சாதகன் லோகத்தோட கண்களுக்கு பித்து 
பிடிச்சவன் மாதிரி இருப்பான். வாஸ்தவத்துல பித்தனோட பித்துதான் அவனை 
பிடிச்சுருக்கு..:)தாயுள்ளத்தோட நம்மோட மனசை முழுசா திருடிண்டு போகர்தால 
இவள் சரியான திருட்டு சுந்தரி! :)      
விளையாடி முடிச்சதுக்கு அப்புறம் சாளவாய் வடியும் 
குட்டி வாயால் தரும் எச்சில் முத்தம் போல, அன்பர் என்பவர்கே கனம்தரும் 
பூங்குழலாள் அபிராமி கடைகண்களே. அம்பாளை ஆராதனை பண்ணர்துக்கு ஒருத்தனுக்கு 
வாய்ப்பு கிட்டர்துனாக்க அது அம்பாளே மனசு வெச்சு குடுக்கும் ஒரு 
பொக்கிஷம்.  இதை ஒரு நல்ல வாய்ப்பா கருதி அம்பாளை 
நிஷ்கபடமான பக்தியோட ஆராதனை பண்ணி அபிராமி பட்டரும் 
சங்கரரும் சொன்ன எல்லா சம்பத்தையும் அம்பாளோட பிரஸாதமா நாம் பெறுவோமாக..   

No comments:
Post a Comment