நன்றாகத் தூங்குவது எப்படி என்ற ஒரு ஆங்கில புத்தகம் வந்துள்ளது. கால 
மாற்றத்தால் தற்போது நடுத்தரவர்க்கத்தினர் உடல் மற்றும் மனம் சார்ந்த 
பல்வேறு சுமைகளுக்கு ஆளாகின்றனர். இதனால் 
இயல்பான வாழ்க்கையை மறந்து செயற்கையான வாழ்வில் புகவேண்டிய கட்டாயத்துக்கு 
ஆளாகின்றனர். இந்தச் சூழலில் நடுத்தர வர்க்கம் இழந்து விட்ட  நல்ல 
தூக்கத்தைப் பற்றிப் பேசுவதுதான் ‘ஹவ் டு ஹேவ் சவுண்டு ஸ்லீப் தி நேச்சுரல்
 வே’ என்ற 
தலைப்பிலான ஆங்கிலப் புத்தகம்.
இயல்பான ஆழ்ந்த தூக்க மின்மை, குறட்டைத் தொந்தரவு, கெட்ட கனவுகள், 
தூக்கத்தில் நடப்பது, சரியான தூக்கமின்மை போன்றவற்றுக்குத் தீர்வுகள் இதில்
 முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக பிராணாயாமம், 
வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளுதல், தூக்கப் பிரச்னையைக் கண்டறிய வந்துள்ள
 நவீன முறைகள் ஆகியவை குறிப்பிடத் தக்கவை. கன்னிமாரா நூலகத்தில் இதை 
வாசித்துப் பயனடையலாம். 

 
 
இன்றைய நிலைமைக்கு அதிகம் தேவைப்படும் புத்தகம்...
ReplyDeleteவாழ்த்துக்கள்... நன்றி...
அப்படிச் சொல்லுங்க...! இது என் தளத்தில் !