Search This Blog

Sunday, January 06, 2013

செக் : கையெழுத்து மாறினால் மோசடியா ?

 
கை யெழுத்து வித்தியாசத்தி னால் காசோலை திருப்பி அனுப்பப்பட்டால் அது கிரிமினல் குற்றமாகக் கருதப்படும் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் ஓர் அதிரடித் தீர்ப்பை அளித்துள்ளது. இதன் மூலம் காசோலை மோசடிகளுக்கு ஒரு செக் வைக்கப்பட்டுள்ளது. 

எப்படி குற்றமாகும்? 

கடன் வாங்கியவர்கள் பணத்தைத் திரும்பத் தராத நிலையில், செக் தருவதோடு, அதில் கையெழுத்தைக் கொஞ்சம் மாற்றிப்போட்டால் அந்த செக்கை வங்கிகள் திரும்ப அனுப்பிவிடும். இடைப்பட்ட காலத்தில் மீண்டும் பணத்தைப் புரட்டி நிலைமையைச் சமாளித்து விடலாம் என்கிற நோக்கத்தில் வேண்டுமென்றே சிலர் இப்படி செய்து வருகிறார்கள்.

இப்படி செய்வதை ஒரு கிரிமினல் குற்றமாகவே கருத வேண்டும் என்று சொல்லி இருக்கிறது உச்ச நீதிமன்றம். காசோலையில் கையெழுத்துப் போடுபவர்கள் யார் யார், தனித்துப் போடுவார்களா, கூட்டாகப் போடுவார்களா போன்ற நிபந்தனைகளை வங்கி எழுதி வாங்கிக்கொள்கிறது. காசோலை தருபவர்கள் அதன்படியே தரவேண்டும். வேறு ஆட்கள் கையெழுத்துப் போடுவதோ, கூட்டாகக் கையெழுத்து போட வேண்டிய இடத்தில் தனியாகக் கையெழுத்து போடுவதோ கூடாது.காசோலை கொடுத்தபிறகு, கணக்கில் கையெழுத்து போடுபவர்களை மாற்றுவதால் காசோலையில் கண்ட கையெழுத்தும், ஏற்கெனவே வாங்கிய மாதிரிக் கையெழுத்தும் வேறுபட்டிருந்தால் காசோலை ரிட்டர்ன் ஆகிவிடும். இதையும் ஒரு கிரிமினல் குற்றமாகக் கருதவேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
எழுபது வயதைத் தாண்டிய வர்கள் கை நடுக்கம் காரணமாக கையெழுத்து மாறலாம். இது குற்ற நடவடிக்கை ஆகுமா என்று கேள்வி எழுகிறதல்லவா?

இதுபோன்ற நிலைமைகளில் காசோலை ரிட்டர்ன் ஆன 15 நாட்க ளுக்குள், காசோலை தந்தவருக்கு அந்த காசோலை ரிட்டர்ன் ஆகிவிட்டதென்றும், எனவே,15 நாட்களுக்குள் பணத்தைச் திருப்பிச் செலுத்துமாறும் அறிவிப்பு தருவது அவசியம். நல்லெண்ணம் கொண்டவர்கள் இந்த அறிவிப்பைக் கண்டதும் பணத்தைத் தந்துவிட்டாலும், அந்த தேதியில், உங்களது வங்கிக் கணக்கில் காசோலைக்கு ஈடாகப் பணம் இருந்தது என்பதும் நிரூபிக்கப்பட வேண்டும்.

நோக்கம் தவறாக இருந்தால் கையெழுத்து வேறுபாடு என்பதும் கிரிமினல் குற்றமே என்றுதான் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


No comments:

Post a Comment