சமீப காலமாக
ஹுவாய் நிறுவனம் தனது குறைந்த விலை + அதிகத் தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்
போன்களைத் தயாரிப்பதன் மூலம் தனக்கான இடத்தை ஸ்மார்ட் போன் மார்க்கெட்டில்
பிடித்துள்ளது.
டிசைன்!
ஹுவாய் ஹானர் 6 பிளஸின் டிசைன் ஆப்பிள் ஐபோன் 4 டிசைனுக்கு இணையாக உள்ளது. பின்புறம் முழுவதும் கிளாசைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஓரங்கள் முழுவதும் மெட்டலைக் கொண்டுள்ளது. 7.5 மி.மீ அடர்த்தியுள்ள இந்த ஸ்மார்ட் போனின் எடை 165 கிராம்.
ஸ்டோரேஜ்!
ஹானர் 6 பிளஸ், 32GB இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதியுடன் வருகிறது. மேலும், 128 GB வரை SD கார்டு மூலம் விரிவுபடுத்திக் கொள்ளலாம்.
டிஸ்ப்ளே!
ஹானர் 6 பிளஸ் ஸ்மார்ட் போன் 5.5 இன்ச் IPS LCD டச் ஸ்க்ரீனை கொண்டுள்ளது. 1080 x 1920 pixels 401 ppi கொண்டுள்ள இந்த டிஸ்ப்ளே, சிறப்பான கலர்களைக் காண்பிக்கும் திறனைக் கொண்டுள்ளது. வெளிச்சத்திலும் சிறப்பாகச் செயல்படும் இந்த டிஸ்ப்ளே, பாதுகாப்புக்காக ‘Corning Gorilla Glass 3’-யையும் கொண்டுள்ளது.
இயங்குதளம்!
ஹானர் 6 பிளஸ் ஸ்மார்ட் போன் ஆண்ட்ராய்டின் கிட்-கேட் 4.4.4 இயங்குதளத்தைக் கொண்டு இயங்குகிறது. மேலும், ஹுவாய் நிறுவனத்தின் பிரத்யேகமான ‘EMUI’ டிசைன் மாற்றங்களும் இந்த ஸ்மார்ட் போனில் அடங்கும். முந்தைய EMUI டிசைனைவிட இது கச்சிதமாக இருக்கிறது.
தொழில்நுட்பம்!
ஹானர் 6 பிளஸ் ஸ்மார்ட் போன் Kirin 925 1.3 GHz octa-core SoC சிப் செட்டைக் கொண்டு இயங்குகிறது. இந்த அதிநவீன சிப் செட்டில் நான்கு Cortex A7core 1.3GHz மற்றும் நான்கு Cortex A15core 1.8GHz பிராசஸர்கள் அடங்கும். மேலும், Mali-T628 MP4 என்ற பிரத்யேகமான கிராபிக்ஸ் பிராசஸரும் அடங்கும். இந்த ஸ்மார்ட் போன் 3GB ரேம்மை கொண்டு இயங்குகிறது.
கேமரா!
ஹானர் 6 பிளஸ் ஸ்மார்ட் போன் பின்புறத்தில் இரண்டு 8 MP கேமராக்களை அருகருகில் கொண்டுள்ளது. இந்த இரு கேமராக்களும் ஒன்றாகச் செயல்படக்கூடியவை. இது குறைவான வெளிச்சத்தில் தெளிவான படங்களை எடுக்கும் ஆற்றலை உடையது. இந்த இரு கேமராக்கள் 13 MP படங்களை எடுக்கும் திறனை பெற்றுள்ளன. மேலும், இந்தக் கேமராக்களைக் கொண்டு 1080 P வீடியோக்களை எடுக்கலாம். முன்புறத்தில் உள்ள 8MP கேமராவைக் கொண்டு சிறப்பான செல்ஃபிக்களை எடுக்கலாம்.
பேட்டரி!
ஹானர் 6 பிளஸ் ஸ்மார்ட் போன் 3600mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது மற்ற நிறுவனங்களின் ‘Flag Ship’ ஸ்மார்ட் போன்களின் பேட்டரியைவிட திறன் அதிகம்.
விலை!
டூயல் சிம் 3G வசதியுடன் வரும் இந்த ஸ்மார்ட் போனின் இந்திய விலை ரூபாய் 26,499.
பிளஸ்:
* கேமரா.
* சாஃப்ட்வேர்.
* பேட்டரி.
மைனஸ்:
* விலை.

excellent Camera
ReplyDelete