Search This Blog

Wednesday, December 07, 2011

எனது இந்தியா! - எஸ். ராமகிருஷ்ணன்


டந்த காலம் நிகழ் காலத்திற்குக் கற்றுத்தரும் பாடத்தின் பெயர்தான் வரலாறு. சரித்திரம் என்பது உறைந்துபோன கற்படிவம் இல்லை, அது வாழ்வனுபவங்களின் வழியே நாம் கவனிக்கத் தவறிய உண்மைகளை, மறந்துபோன நினைவுகளை, அறியப்படாமல்போன துயரங்களை நினைவூட்டும் அறிவுத் துறை.அதிகாரம் கைமாறுவதன் சரித்திரத்தை மட்டுமே வாசித்துப் பழகிய நமக்கு, சரித்திரம் என்பது ஒரு பெரும் மானுடப் பிரவாகம் என்பதைப் புரிந்துகொள்வது சற்று சிரமமாகவே இருக்கக்கூடும்.வரலாற்றின் குரலுக்குச் செவிசாய்க்காமல் நிகழ்காலப் பிரச்னைகளைப் புரிந்துகொள்ள முடியாது, வரலாற்றினை ஒரு நதி என உருவகப்படுத்​தினால், ஒரே நதிதான் எல்லாக் காலத்திலும் ஒடிக்​கொண்டு இருக்கிறது, ஆனால், அதில் ஒடும் தண்ணீர் ஒன்றல்ல, தண்ணீர் ஒவ்வொரு பருவ காலத்திலும் அதற்கான விசையோடு வேறுவேறு கதியில் பெருகி ஓடுகிறதுஅப்படி வரலாற்றின் போக்​கானது அரசியல், அதிகாரம், கலாசாரம், சமூக மாற்றம் என்று பல்வேறு காரணிகளால் வேகமெடுப்​பதும் தணிவதுமாகவே இருக்கிறது, எந்த விசை, வரலாற்று இயக்கத்தினை சாத்தியப்படுத்துகிறது, எதன் வழியே வரலாறு தன்னை அடையாளப்​படுத்திக்​கொள்கிறது, அதன் பின் இயங்கிய மனிதர்கள் யார் எவர் என்பதை அறிய முற்படும்போது, சரித்திரத்தை நாம் ஆழமாகப் புரிந்துகொள்ளத் துவங்குகிறோம்.


நீதிக்காகக் காத்திருப்பது பிறரோடு பகிர்ந்துகொள்ள முடியாத துயரம், மன உளைச்சல். இன்று  எளிய மனிதர்களில் இருந்து அரசியல் தலைவர்கள் வரை பலரும் நீதிமன்றத்தில் தங்களுக்கான நீதி கிடைக்குமா என்று காத்துக்கிடக்கிறார்கள்.மனு நீதி, விதுர நீதி, சாணக்கிய நீதி, பதினென் கீழ்க்கணக்கு நீதி நூல்கள் என்று எண்ணிக்கையற்ற நீதி சாஸ்திரங்கள் இந்தியாவில் இருக்கின்றன. ஆனால் நடைமுறை வாழ்வில் இவை தனிமனிதனைப் பாதிக்கவே இல்லை.ஒவ்வொரு நீதிமன்ற வளாகத்திலும் வலியும் மௌனமும் கொண்ட மனிதர்கள் நிற்கிறார்​கள், நீதிதேவதை அவர்களை சலனமற்று பார்த்துக்கொண்டே இருக்கிறாள்.இந்திய வரலாறு எத்தனையோ வழக்குகளைச் சந்தித்திருக்கிறது... சில விசித்திரமானவை; சில புதிரானவை.சுதந்திர இந்தியாவின் முதல் பெரும் நீதி விசாரணை, காந்தி கொலை வழக்கு. வேறு எந்த வழக்கினையும் விட இந்த வழக்கு  முதன்மையானது, காரணம் அஹிம்சையைப் போதித்த காந்தியைக் கொன்றவனை எப்படித் தண்டிக்கப்போகிறார்கள்? அப்படி ஒருவனுக்குத் தண்டனை தருவதை காந்திய வழி ஏற்றுக்கொள்ளுமா? எதற்காக காந்தி கொல்லப்பட்டார்?


சுதந்திர இந்தியாவின் முதல் பெரும் நீதி விசாரணை, காந்தி கொலை வழக்கு. வேறு எந்த வழக்கினையும் விட இந்த வழக்கு  முதன்மையானது, காரணம் அஹிம்சையைப் போதித்த காந்தியைக் கொன்றவனை எப்படித் தண்டிக்கப்போகிறார்கள்? அப்படி ஒருவனுக்குத் தண்டனை தருவதை காந்திய வழி ஏற்றுக்கொள்ளுமா? எதற்காக காந்தி கொல்லப்பட்டார்?1948-ம் வருடம் மே 27-ம் தேதி வழக்கு விசாரணை துவங்கியது. காந்தி கொல்லப்பட்ட இடத்திலேயே கோட்சே கைது செய்யப்பட்டு விட்டான். குற்றத்தை அவன் மறுக்கவும் இல்லை. கைப்பற்றபட்ட துப்பாக்கியில் மீதம் நான்கு குண்டுகள் இருந்தன, மீதி மூன்று காந்தி உடலில் பாய்ந்திருந்தன. ரகுநாத் நாயக் என்ற தோட்டக்காரன் கையில் புல்வெட்டும் கருவியோடு காந்தியின் வலது பக்கம் பத்தடி தள்ளி நின்று இருந்தான். யாரோ ஒருவன் துப்பாக்கியால் காந்தியை சுடுவதைக் கண்டதும் ரகுநாத் நாயக் கோபத்துடன் கோட்சேயை மூன்று முறை புல்வெட்டியால் தாக்கினான்.


1948-ம் வருடம் மே 27-ம் தேதி வழக்கு விசாரணை துவங்கியது. காந்தி கொல்லப்பட்ட இடத்திலேயே கோட்சே கைது செய்யப்பட்டு விட்டான். குற்றத்தை அவன் மறுக்கவும் இல்லை. கைப்பற்றபட்ட துப்பாக்கியில் மீதம் நான்கு குண்டுகள் இருந்தன, மீதி மூன்று காந்தி உடலில் பாய்ந்திருந்தன. ரகுநாத் நாயக் என்ற தோட்டக்காரன் கையில் புல்வெட்டும் கருவியோடு காந்தியின் வலது பக்கம் பத்தடி தள்ளி நின்று இருந்தான். யாரோ ஒருவன் துப்பாக்கியால் காந்தியை சுடுவதைக் கண்டதும் ரகுநாத் நாயக் கோபத்துடன் கோட்சேயை மூன்று முறை புல்வெட்டியால் தாக்கினான்.அப்போது சார்ஜென்ட் தேவராஜ் சிங் ஓடி வந்து கோட்சேயைப் பிடித்துக்கொண்டான். கூட்டம் அவனை அடித்தே கொன்றுவிடக்கூடும் என்று பயந்து அவனைப் பாதுகாப்பாக பிடித்துத் தள்ளிக்கொண்டு போனார். காந்தி சுடப்படுவதை அருகில் இருந்து கண்ட சர்தார் குர்பாசான்சிங் உணர்ச்சிவசப்பட்டு அழுதபடியே நின்றார். கொலை வழக்கின் முதல் குற்றவாளி என்று நாதுராம் கோட்சே அறிவிக்கப்பட்டான். மற்றவர்களைத் தேடும் பணி துவங்கியது. தனிப் படை அமைக்கப்பட்டு, துரிதமாக விசாரணைகள் நடந்தேறின.


 பிப்ரவரி 4-ம் தேதி பிர்லா இல்லத்திற்குச் சென்ற வாடகை காரைக் கண்டுபிடித்து டிரைவர் சுர்ஜித் சிங்கைக் கைது செய்தது போலீஸ். சங்கர் கிருஷ்டய்யா, சாவர்க்கர், நாராயண் ஆப்தே ஆகியோர் கைதானார்கள். ஆப்தே டெல்லியில் உள்ள இந்து மகாசபையின் பின் உள்ள காட்டில் துப்பாக்கி சுட பயிற்சி அளித்த மரத்தை அடையாளம் காட்டினான்.  கோட்சே சுடப் பழகிய வீட்டின் உரிமையாளர்  டாக்டர் பார்ச்சர்  கைது செய்யப்பட்டார்.  ஒன்பது பேரைக் கொலையில் உடந்தையானவர்கள் என்று கைது செய்தார் மும்பையைச் சேர்ந்த போலீஸ் உயர் அதிகாரி நகர்வாலா. எந்த அரசியல் குறுக்கீடும் இல்லாமல் இருந்தால் மட்டுமே, தான் இந்த விசாரணையைச் செய்வேன் என்று நகர்வலா கண்டிப்புடன் கூறியிருந்தார். அப்படியே நடந்தேறியது!காந்தியின் உடலைப் பரிசோதனை செய்த இர்வின் மருத்துவமனை, சிவில் சர்ஜன் லெஃப்ட்டினென்ட் காலோனா தானேஜா, காந்தியின் உடலில் 1/4 x  1/6அளவு ஆழமான முட்டை வடிவத் துளை விழுந்த ஐந்து காயங்கள் இருந்ததைக் குறிப்பிட்டார். அவை, உடலைத் துளைத்த துப்பாக்கிக் குண்டுகளால் உருவானவை என்று உறுதி அளித்தார். காந்தியைச் சுட்ட துப்பாக்கியின் எண் 606824.


வழக்கு விசாரணை நடைபெறுவதற்குத் தேர்வு செய்யப்பட்ட இடம், செங்கோட்டையில் மொகலாய மாமன்னர் ஷாஜகான் நீதி வழங்கிய இடத்தின் ஒரு பகுதி. 100 அடி நீளமும் 23 அடி அகலமும் கொண்டது. முதல் மாடியில் இருந்தது. நீதிமன்றத்தின் ஒரு கோடியில் நீதிபதிக்கான தனிமேடை அமைக்கப்பட்டு இருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆத்மசரண்,  கான்பூரின் மாவட்ட நீதிபதியாகவும் செஷன்ஸ் நீதிபதியாகவும் பணியாற்றியவர்.முதல் நாள் சரியாக காலை 10 மணிக்கு நீதிபதி பக்கவாட்டுக் கதவு வழியாக நீதிமன்றத்தினுள் நுழைந்து தனது இருக்கையில் அமர்ந்தார். குற்றவாளிகள் ஒரே அணியாகக் கூண்டுக்குள் கொண்டுவரப்பட்டனர், நகர்வாலா தனது குற்றப் பத்திரிக்கையைத் தாக்கல் செய்தார். 

ஒன்பது குற்றவாளிகளும் மூன்று வரிசையில் அமர்ந்​திருந்தனர், சாவர்க்கர் மட்டுமே அதில் மிகுந்த சோர்வாகக் காணப்பட்டார். மற்றவர்கள் தங்களுக்குள்ளாக சிரித்துப் பேசிக்கொண்டு இருந்தார்கள்.ஜூன் 24-ம் தேதி விரிவான விசாரணை ஆரம்பமாகி, நவம்பர் 6-ம் தேதி வரை நடைபெற்றது. அரசுத் தரப்பில் 149 சாட்சிகள் விசாரிக்கப்பட்டார்கள். 720 பக்க ஆதாரங்கள் பதிவு செய்யப்பட்டன, வழக்கிற்குத் துணை சேர்க்கும்படியாக 404 ஆவணங்களும், 80 தடயப் பொருட்களும் நீதிமன்றத்தின் முன்வைக்கப்பட்டன. 160 பக்கம் குற்றவாளிகளின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. 297 பக்க எழுத்துபூர்வமான அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. ஏழு புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் வழக்கில் பங்கேற்றனர்.கார்க்கரேக்கு மராத்தியும், சங்கருக்கு தெலுங்கும், மதன்லாலுக்கு இந்தியும் தெரிந்திருந்த காரணத்தால், வழக்கு விசாரணையில் மொழிப் பிரச்னை ஏற்பட்டது. அரசுத் தரப்பில் தலைமை வழக்கறிஞர் சி.கே.தப்தரி வழக்கை நடத்தினார்.எதிர்த் தரப்பில் எல்.பி. போப்பட்கர் முக்கிய வழக்கறிஞராகப் பணியாற்றினார். அவரோடு 15 முக்கிய வழக்கறிஞர்கள் குற்றவாளிகளுக்காக ஆஜர் ஆனார்கள்.கோட்சே தனது அறிக்கையை கோர்ட்டில் வாசித்தான். அது 93 பக்கங்கள்கொண்டது. 35 ஆயிரம் சொற்கள் அதில் இருந்தன. அந்த அறிக்கையில் தன்னை ஒரு வீரப் புருஷனைப் போல அவன் காட்டிக்கொண்டான்.1949-ம் ஆண்டு பிப்ரவரி 10-ம் நாள் வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது, விரிவான 204 பக்கத் தீர்ப்பு அது. அந்தத் தீர்ப்பில் காந்தி போன்ற அஹிம்சாவாதியைக்கூட ஒருவன் கொன்றுவிட்டுத் தண்டனையில் இருந்து தப்பிவிடக் கூடாது என்பதற்காகவே, கோட்சேவுக்கு மரண தண்டனை வழங்கப்படுவதாக நீதிபதி கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.நீதியின் செயல்பாடு, இந்திய சமூகத்தில் அறத்தின் முக்கியத்துவம் என்று நீதியரசர் ஆத்மசரண் முன்னுதாரணமான ஒரு தீர்ப்பை எழுதினார். அந்தத் தீர்ப்பில் இந்தியப் பிரிவினையில் இருந்து எப்படி காந்தியைக் கொல்லும் சதிச் செயல் விதை ஊன்றப்பட்டது என்பதில் துவங்கி, காந்தியைக் கொன்றவர்களின் அரசியல் பின்புலம் வரை அத்தனையும் கவனமாக விவரிக்கப்படுகிறது.


வழக்கு விசாரணையில் அரசு குறுக்கிடவே இல்லை. குற்றவாளிகளுக்கும் முறையான சட்ட உதவிகள் கிடைத்தன. இந்த வழக்கின் மேல் முறையீடு கிழக்கு பஞ்சாப் உயர் நீதிமன்றத்திற்குச் சென்றது. நீதியரசர் ஹர்னாம் சிங் அதை விசாரித்தார். கோட்சே தானே கோர்டில் வாதாட முன்வந்தான். சொந்தச் செலவில் வழக்கறிஞர்களை வைத்துக்கொள்ள முடியாதவர்களுக்கு, அரசே வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்து தந்தது.பஞ்சாப் உயர் நீதிமன்றக் கோடைக் கால விசாரணை சிம்லாவில் நடைபெற்றது. கோர்ட்டிற்குக் கொண்டுவரப்படும் நாதுராம் கோட்சேயைக் காண மக்கள் பெருமளவு திரண்டுவிட்டதால், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.நீதிபதிகள் குழுவில் நீதிபதி பண்டாரி, நீதிபதி அச்சுருராம் நீதிபதி கோஷ்லா ஆகிய மூவர் இடம் பெற்று இருந்தார்கள், அவர்களும் மறுமுறையீட்டினை நிராகரித்து மரண தண்டனையை உறுதி செய்தனர்.தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் நாளின் முந்தைய இரவில் கோட்சே இருந்த சிறை வளாகத்திற்குள் இரண்டு பேர் ரகசியமாக சுவர் ஏறிக் குதித்தனர். அதை, காவலாளி பார்த்துக் கூச்சலிட்டான். அவர்கள் இருவரும் விசாரிக்கப்பட்டபோது, தென்னிந்தியாவில் இருந்து வந்த இரண்டு பத்திரிக்கையாளர்கள் என்பது தெரிய வந்தது. தங்கள் உயிரைப் பணயம்வைத்து அவர்கள் குற்றவாளிகளைப் பேட்டி காண சிறைக்குள் புகுந்த விவரம் தெரிய வந்தது.முடிவில், கோட்சே தூக்கிலிடப்பட்டான். இறந்த உடலை வெளியே கொண்டுசெல்ல அரசு அனுமதிக்கவில்லை. ஆகவே, சிறைக்குள்ளேயே தகனம் செய்யப்பட்டது. கோட்சேவின் சாம்பல், காகர் என்ற சிறிய ஆற்றில் கரைக்கப்பட்டது. காந்தி கொலை வழக்கு அத்தோடு முடிந்து போனது.

இந்த வழக்கு சுட்டும் உண்மைகள்தான் வரலாற்றின் கசப்பான நிஜங்கள். பிரிவினையின் பெயரால் நடைபெற்ற வன்முறைகளுக்கு உண்மையில் யார் காரணம்? காந்தி போன்ற மகானைக் கொல்லும் மனநிலை எப்படி உருவாகிறது? காந்தி கொல்லப்படக்கூடும் என்று முன் உணர்ந்திருந்த உள்துறை அமைச்சகம் ஏன் உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யாமல் போனது? காந்தியை கொன்றது ஒரு முஸ்லீமாகத்தான்  இருக்கக்கூடும் என்ற கசப்பு உணர்வில் நிறைய வன்முறைகள் நடைபெற்றன, அந்த துவேசத்தின் விதை  எப்படி உருவானது? அதுதான் இன்றும் முற்றி வளர்ந்திருக்கிறது இல்லையா?அதே நேரம் நீதி விசாரணைக்குள் எந்த அரசியலும் இருக்கக் கூடாது. சுதந்திரமாக நேர்மையாக அது நடைபெற வேண்டும் என்பதையும் காந்தி விசாரணை முன்உதாரணமாகக் காட்டுகிறது. அது போன்ற அறத்தை ஏன் நாம் இன்று இழந்துவிட்டோம்?

 தொடரும் பயணம்...


விகடன் 

Tuesday, December 06, 2011

காய்ச்சலுக்கு என்ன செய்வது? - முதலுதவி

 
மழைக்காலம் தொடங்கிவிட்டது. இனி, நோய்க்கிருமிகளுக்குக் கொண்டாட்டம்தான். சரியாகப் பராமரிக்கப்படாத தெருக்களும் சாலைகளும் இனி வெள்ளக்காடாகிவிடும். அப்போது சாக்கடை நீர் மழைத் தண்ணீரில் கலந்து விடும். அதுவே குடிநீராக வீட்டுக்கு வந்துசேரும். விளைவு, காய்ச்சல், தலைவலி, வாந்தி, பேதி என்று நோய்கள் தலைதூக்கும். 
 
‘ஃபுளு’ காய்ச்சல்:
 
மழைக்காலத்தில் பலருக்கும் பொதுவாக வரக்கூடியது ‘தடுமக்காய்ச்சல்’ என்று அழைக்கப்படுகிற ‘ஃபுளு’ காய்ச்சல். இது வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது. அசுத்தமான காற்று மூலம் பரவுகிறது. காய்ச்சலுடன் மூக்கு ஒழுகுதல், கண்ணில் நீர் வடிதல், இருமல் போன்ற அறிகுறிகள் இதில் இருக்கும். காய்ச்சல் ஒரு வாரம் நீடிக்கும்.
 
காய்ச்சலைத் தடுக்க 6 யோசனைகள்:
 
1. சுயசுத்தம் பேண வேண்டும்.
2. சுற்றுப்புற சுகாதாரம் காக்க வேண்டும்.
3. சுத்தமான குடிநீர் குடிக்க வேண்டும். அல்லது காய்ச்சி ஆற வைத்த தண்ணீரைக் குடிக்க வேண்டும்.
4. ஈக்கள் மொய்த்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
5. சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுவது முக்கியம்.
6. தடுப்பூசிகளை முறைப்படி போட்டுக்கொள்ள வேண்டும்
 
காய்ச்சலுக்கு முதலுதவி:
 
1. காய்ச்சலைக் குறைக்க ‘பாராசிட்டமால்’ மாத்திரையைச் சாப்பிடலாம்.
2. காய்ச்சல் அதிகமாக இருந்தால், பஞ்சு அல்லது பருத்தியிலான துண்டு ஒன்றை சாதாரணத் தண்ணீரில் நனைத்துப் பிழிந்து கொண்டு நோயாளியின் நெற்றி, மார்பு, வயிறு, அக்குள், தொடை முதலிய இடங்களில் விரிக்க வேண்டும்.
3. துணி உலர்ந்ததும் மீண்டும் அதைத் தண்ணீரில் நனைத்து உடலில் விரிக்க வேண்டும். இப்படிச் செய்தால் அரை மணி நேரத்தில் காய்ச்சல் குறைந்துவிடும்.
4. காய்ச்சலுக்குக் காரணம் தெரிந்து சிகிச்சை பெற வேண்டியது முக்கியம். அதற்கு மருத்துவர் உதவியை நாடுவதே நல்லது.

டெங்கு காய்ச்சல்:

‘டெங்கு’ எனும் வைரஸ் கிருமிகளின் பாதிப்பால் இந்தக் காய்ச்சல் வருகிறது. ‘எய்டஸ் எகிப்தி’ என்னும் கொசுக்கள் இந்தக் காய்ச்சலைப் பரப்புகின்றன. குழந்தைகளுக்கு இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும். காய்ச்சல், தலைவலி, உடல்வலி, மூட்டுவலி, வாந்தி, இருமல், தொண்டை வலி ஆகிய அறிகுறிகள் காணப்படும். பல் ஈறு மற்றும் மூக்கிலிருந்து ரத்தம் கசியும்.

என்ன முதலுதவி?

1. ‘ஃபுளு’ காய்ச்சலுக்குச் சொல்லப்பட்டவை இதற்கும் பொருந்தும்.
2. டெங்குவைத் தடுக்க வேண்டுமென்றால் கொசு கடிப்பதைத் தடுக்க வேண்டும். அதற்கு ‘டை எதில் டாலுவாமைடு’ அல்லது ‘டை எதில் பென்சாமைடு’ எனும் மருந்து உள்ள களிம்பை பகல் மற்றும் இரவில் உடலில் பூசிக் கொண்டால் கொசு கடிக்காது.
3. குழந்தைகளுக்கு உடல் முழுவதும் மூடக்கூடிய முழுக்கை ஆடைகளை அணிவிப்பது நல்லது.
4. கொசுக்கள் பெருகுவதைத் தடுக்க வீட்டிலும் வீட்டைச் சுற்றியும் நீர் தேங்க அனுமதிக்கக் கூடாது.
5. தண்ணீர் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும்.

வயிற்றுப்போக்கு மற்றும் காலரா:  

பாக்டீரியா மற்றும் ரோட்டா வைரஸ் கிருமிகள் மாசடைந்த குடிநீர் மற்றும் உணவு மூலம் நமக்குப் பரவுவதால் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. ஈக்களும் எறும்புகளும் இக்கிருமிகள் நமக்குப் பரவ உதவுகின்றன. நோயாளியின் உடல் இழந்த நீரிழப்பைச் சரிசெய்வதே சிகிச்சையின் முக்கிய நோக்கம்.

இதற்கு என்ன முதலுதவி?

1. சுத்தமான குடிநீரை அடிக்கடி குடிக்க வேண்டும் அல்லது ‘எலெக்ட்ரால்’ பவுடர்களில் ஒன்றைக் குடிக்கலாம்.
2. கொதிக்க வைத்து ஆற வைத்த ஒரு லிட்டர் தண்ணீரில் 20 கிராம் சர்க்கரையையும் 5 கிராம் சமையல் உப்பையும் கலந்துகொள்ளவும்.
3. இதை ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை 50 மிலி அளவு குடிக்க வேண்டும்.
4. இளநீர், எலுமிச்சைப் பழச்சாறு மற்றும் உப்பு சோடா குடிக்கலாம்.

வயிற்றுப்போக்கைத் தடுக்கும் வழிகள்:

1. சாப்பிடும் முன்பும் பின்பும் கைகளை நன்றாக சோப்பு போட்டுக் கழுவ வேண்டும்.
2. தெருக்களில் மலம் கழிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
3. தண்ணீரை லேசாக சூடாக்கிக் குடிப்பது பாதுகாப்பு தராது. குறைந்தது 10 நிமிடம் கொதிக்க வைத்து, ஆற வைத்துக் குடிப்பது நல்லது.
4. குடிநீர் பாத்திரங்களையும் சமைத்த உணவுகளையும் ஈக்கள் மொய்க்காமல் மூடி வைக்க வேண்டும்.
5. காலராவுக்குத் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

சென்னை கண்நோய்:

‘அடினோ வைரஸ்’ கிருமிகளின் தாக்குதலால் இந்த நோய் வருகிறது. மழைக்கால ஆரம்பத்தில் ஆண்டு தோறும் இது தோன்றுவது வழக்கம். அடுத்தவர்களுக்கு மிக எளிதாகப் பரவக்கூடியது. கண் சிவந்து கண்ணீர் வடிதல், கண் எரிச்சல், வலி, வீக்கம் இதன் அறிகுறிகள். இதற்குச் சொட்டு மருந்துகள் உள்ளன. மருத்துவர் யோசனைப்படி கண் சொட்டுமருந்தைத் தேர்வு செய்வது நல்லது. வலிநிவாரணி மாத்திரைகளும் பலன் தரும்.

கண்நோய் - தடுக்கும் வழிகள்:

1. கண்நோய் வந்தவர் வீட்டில் உள்ள மற்றவர்களிடமிருந்து தள்ளியே இருப்பது நல்லது.
2. கண்ணை அடிக்கடி கசக்கக் கூடாது.
3. கைகளை அவ்வப்போது சோப்பு போட்டுக் கழுவ வேண்டும்.
4. நோயுள்ளவர் பயன்படுத்திய கைக்குட்டை, துண்டு, சோப்பு, தலையணை, பற்பசை போன்றவற்றை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது.

தலைவலி:

சாதாரண காய்ச்சலில் இருந்து ஆபத்தான மூளைக்கட்டிகள் வரை தலைவலிக்குப் பல காரணங்கள் உண்டு. குறிப்பாக வைரஸ் காய்ச்சல்கள் எல்லாமே தலைவலியை ஏற்படுத்தும். ‘சைனஸ்’ என்று அழைக்கப்படும் முகக்காற்றறைகளில் அழற்சி ஏற்பட்டால் தலைவலி வரும். ரத்தசோகை, ஊட்டச்சத்துக் குறைபாடு, கண்பார்வைக் குறைபாடு, மூளைக்காய்ச்சல், மூளைக்கட்டி, பல்நோய், காதுநோய், தொண்டை நோய் போன்றவையும் தலைவலியை ஏற்படுத்தும். தலையில் அடிபட்டாலும் தலைவலி வரும். அதிக நேரம் தொலைக் காட்சி பார்ப்பது, கம்ப்யூட்டர் விளையாட்டுகளை விளையாடுவது போன்றவையும் தலைவலிக்குக் காரணமாகலாம். பசி கூட தலைவலியை உண்டாக்கும். குறிப்பாக பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் காலை உணவைச் சாப்பிடாமல் சென்றால் வகுப்பறையில் தலைவலிக்கும்.

தலைவலிக்கு முதலுதவி:

1. பாராசிட்டமால், புரூஃபன் மாத்திரைகளில் ஒன்றைப் பயன்படுத்தி, போதிய ஓய்வெடுத்துக்கொண்டால் சாதாரண தலைவலி சரியாகிவிடும்.
2. தலையைச் சிறிது நேரம் அழுத்திக் கொடுக்கலாம்.
3. இளஞ்சூடான தண்ணீரில் துணியை நனைத்து ஒத்தடம் தரலாம்.
4. வலிநிவாரணி தைலங்களை நெற்றியில் தடவலாம்.
5. ‘டிங்சர் பென்சாயின்‘ சொட்டு மருந்தைப் பயன்படுத்தி நீராவி பிடிக்கலாம்.

டாக்டர் கு.கணேசன்
  
  
 
 
  
   

அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷம்!

இந்த வாக்கியம் உண்மை என்பதை, பலர் தத்தம் வாழ்க்கையில் அனுபவத்தால் உணர்ந்திருப்பர். ஆனால், அளவோடிருந்தால் நஞ்சும் அமிர்தமாகும் என்பதை யாராவது யோசித்திருப்பார்களா?இறைவன் படைப்பில், ‘தேவையில்லை, வேண்டாம், தவிர்க்க வேண்டியவை’ என்று எதுவுமே இல்லை.தேன் ஒரு அருமருந்து. எவ்வளவு தான் ஏற்க முடியும்? அதற்கும் ஒரு அளவு இருக்கிறது இல்லையா?எதுவுமே அளவோடிருந்தால் சந்தோஷம் என்ற சிந்தனையோடு பார்த்ததில் கிடைத்த விடை இதோ உங்கள் கவனத்துக்கு.போட்டி, பொறாமை, கோபம், வெறுப்பு, அவநம்பிக்கை, பொய்யுரைத்தல், இவையெல்லாம் ஒருவனிடம் குடிகொண்டிருந்தால் அவன் கெட்டவன். உண்மைதான்; இதில் கூறப்பட்ட எந்த ஒரு குணமும் இல்லாதவன் கெட்டுப் போவான். அதை உணர்ந்திருப்போமா?
 
எப்படி என்று கேட்கிறீர்களா? மேலே வாசியுங்கள்.
 
போட்டி:
 
வெற்றி இலக்கைத் தொட நம்முடன் யாரும் ஓடத் தயார் இல்லையென்றால், நமக்கு உற்சாகம் உத்வேகம் வருவது எப்படி? போட்டி என்று ஒன்றிருந்தால்தான் நாம் பெற்றது அரியது என்பதை அறிந்து கொள்ள முடியும். போட்டி மனப்பான்மை இல்லாதவன் வெற்றியை அறியாதவன் ஆகிறான்.
 
பொறாமை :

ஒரு வியாதிக்கு பாம்பின் விஷம் மருந்தாகுமாம். அதை அப்படியே கொடுத்தால் விழுங்குவோமா? அதைப் பதப்படுத்தி பக்குவமாக்கி ஒரு துளியிலும் ஆயிரத்தில் ஒரு பங்காக நம் உடம்பில் ஊசி மூலம் ஏற்றும் போது ஏற்றுக் கொள்கிறோம்.அதே போல்தான், வாழ்க்கையில் வெற்றி பெறும் நோக்கம் ஒன்றே குறியாகக் கொண்டு செயல்படும்போது முன்னேற்றப் பாதையில் அடி எடுத்து வைக்க பக்குவமான மனதோடு, ஒரே ஒரு துளி அளவு, வென்றவனைக் கண்டு பொறாமைப்படுங்கள். வெற்றிக்கான ஏணி கண்ணில் தெரியும். அடுத்தவர் வெற்றியைக் கண்டு அவனை வீழ்த்த வேண்டும் என்ற காழ்ப்புணர்ச்சி கலந்த பொறாமைதான் கொடிய விஷம். அது வேண்டாமே!
 
அவநம்பிக்கை :
 
இதுவும் வாழ்க்கையில் நம் நலனுக்குத் தேவையான ஒரு தீயகுணம். யார் மேலும் நம்பிக்கை இல்லாமல் வாழ்வது எவ்வளவு தவறோ அதைவிட அதிக அளவு தவறை, எல்லோர் மேலும், கண் மூடித்தனமான நம்பிக்கை வைப்பதிலும் காணலாம். அடுத்தவர் மீது கொஞ்சம் அவநம்பிக்கையையும் வையுங்கள். எதிராளி உங்களை ஏமாற்ற யோசிப்பான். ஒருவனைத் தவறு செய்யத் தூண்டுவது போலாகிவிடும், நாம் அவர்கள் மேல் வைத்திருக்கும் அபரிமிதமான அர்த்தமற்ற நம்பிக்கை.
 
பொய்யுரைத்தல் :

மெய்தான் பேச வேண்டும் என்று இறைவன் நினைத்திருந்தால் இறைவன் ஏன் பொய்யைப் படைத்தான்? நன்மை விழைந்தால் பொய் சொல்லலாம் தவறில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அடுத்தவர் வாழ்க்கையைக் கெடுக்கும் வண்ணம் பொய் சொல்லக் கூடாது.அளவுக்கு அதிகமான நம் ஆசையை, பேராசையை நிறைவேற்ற பொய்யுரை கூடாது. அடுத்தவர்களுக்கு பாதகமில்லாமல் நமது நலன் பேண சின்னச் சின்ன பொய்கள் தவறில்லை. முள்ளை முள்ளால் எடுப்பது இதுதான்.இதுபோல் ஒவ்வொரு குணங்களும் சரியான விகிதாசாரத்துடன் உபயோகப்படுத்தி வந்தால் நம் நலமும் பாதுகாக்கப்படும். அனைவரிடமும் நாம் கொண்ட நட்பும் பலப்படும்.
 
கோமதி நடராஜன்
 

Monday, December 05, 2011

வாயு - வடிவம் எதற்காக மாற்ற வேண்டும்?

 
நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் எரிவாயுவை LPG என்று குறிப்பிடுகிறோம். இந்த ’காஸ்’ சிலிண்டரில் அடைக்கப்படுவது வாயு என்று நாம் நினைத்தாலும் அது திரவமாக்கப்பட்ட வடிவில்தான் ஸ்டோர் செய்யப்படுகிறது. LPG என்பதன் விரிவாக்கம் ’லிக்விட் பெட்ரோலியம் கேஸ்’ என்பதுதான்.ஒரு விண்கலம் கிளம்பும்போது அதன் எடை சுமார் 2000 டன் இருக்கும். இதில் 710 டன் இருப்பது ஹைட்ரஜனும் ஆக்ஸிஜனும். இந்த இரண்டு வாயுக்களும் அப்படியே எடுத்துச் செல்லப்படுவதில்லை. திரவ வடிவில்தான் எடுத்துச் செல்லப்படுகின்றன. எதற்காக காஸ் சிலிண்டரிலும் விண்கலத்திலும் வாயுவை திரவ வடிவத்துக்கு மாற்றி அடைத்து வைக்கவேண்டும்? இதற்கு விடை தேவை என்றால் திரவம், வாயு ஆகிய இரண்டு நிலைகளுக்கிடையே இருக்கும் ஒரு முக்கிய வித்தியாசத்தை நாம் அறிந்துகொள்ள வேண்டும். 
 
ஒரு வாயு திரவமாக மாறும்போது குறைவான இடத்தையே அடைத்துக் கொள்கிறது. ஆயிரம் மடங்குக்கும் குறைவான இடத்தை அடைத்துக் கொள்ள வாய்ப்பு அதிகம். எனவே காற்றை திரவமாக மாற்றுவதன் மூலம் அதைக் குறைவான இடத்திலேயே வைத்துக்கொள்ள முடியும். நம் காஸ் சிலிண்டரில் திரவமாக மாற்றாமல் வாயுவை அடைக்க வேண்டும் என்றால் அதற்கு ராட்சத சிலிண்டர்தான் தேவைப்படும். அல்லது தினமும் ஒருமுறை சிலிண்டரை மாற்ற வேண்டியிருக்கும்.  
 
* மிகவும் நன்றாக குளிரூட்டப்பட்டு, அதிக அழுத்தமும் அளிக்கப்படும்போது வாயு திரவமாக மாற்றப்படுகிறது.

* ராக்கெட் எஞ்சினில்கூட எரிபொருள் திரவமாகத்தான் சேமிக்கப்படுகிறது. எஞ்சினுக்குள் இந்தத் திரவம் செலுத்தப்படும்போது அங்குள்ள அழுத்தம் மற்றும் வெப்பநிலை காரணமாக திரவம் வாயுவாக மாறுகிறது.

* இந்தத் திரவத்தைச் சேமித்து வைத்திருக்கும் டேங்க்குகள் மிக உறுதியான உலோகத்தில் அமைந்ததாக இருக்க வேண்டும். அப்போதுதான் அதிக வெப்பத்தையும் அழுத்தத்தையும் இவற்றால் தாங்கிக் கொள்ள முடியும். இல்லையென்றால் அந்த டாங்க்கே உருகி திரவத்துடன் கலந்து புதிய ரசாயனப்பொருள்கள் உருவாவதுடன் வேறுவித ஆபத்துகளும் நிகழலாம். 

* சந்திரனில் தண்ணீர் இருக்கிறதா, இல்லையா? 1969-ல் நீல் ஆம்ஸ்ட்ராங் குழு சந்திரனில் காலடி வைத்தபோது அங்கிருந்து கொண்டுவந்த சாம்பிள்களை வைத்து நடத்தப்பட்ட சோதனையின் முடிவாக சந்திரனில் தண்ணீர் இல்லை என்றார்கள். ஆனால் 1990களில் நடைபெற்ற ஆராய்ச்சியில் சந்திரனில் தண்ணீர் இருக்கிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

சென்னை டு பெங்களூரு டிக்கெட் கட்டணம் 1,900 ரூபாய்

 
சென்னையிலிருந்து பெங்களூரு செல்வதற்கு ஒரு தனியார் பஸ் நிறுவனம் கூறிய தொகையைக் கேட்டால் மிரண்டு போவோம் .பெங்களூரு டிக்கெட் கட்டணம் 1,900 ரூபாய். அப்படி என்ன தான் அதில் விசேஷம் என்பதை 'ப்ளூ ஹில்ஸ் லாஜிஸ்டிக்ஸ்’ நிறுவன மேலாளர் பிரசாந்த் குமார் சொல்கிறார்.
 
''அல்ட்ரா ப்ரீயம் ஆக்ஸில் கொண்ட வால்வோ மற்றும் மெர்சிடீஸ் பென்ஸ் சேஸியில்தான் எங்கள் பேருந்துகள் உருவாக்கப்பட்டுள்ளன. 1.8 கோடி ரூபாய் செலவில் டிசைனர் திலீப் சாப்ரியாவின் புனே ஸ்டுடியோவில் ஒவ்வொரு பஸ்ஸையும் உருவாக்கினோம்''. ''ஒரு பேருந்தில் மொத்தம் 21 இருக்கைகள்தான். ஒவ்வொரு இருக்கையையும் 140 டிகிரி வரைக்கும் சாய்த்துக் கொள்ளலாம். அனைத்துமே பட்டன் சிஸ்டம்ஸ்தான். ஒவ்வொரு சீட்டுக்கும் முன்னால் பிளாஸ்மா ஸ்கிரீன் இருக்கின்றன. இதில் டிவிடி ப்ளேயர் மூலம் சினிமாவும் பார்க்கலாம்; டிவி சேனல்களையும் பார்க்கலாம். சேட்டிலைட் கனெக்ஷனும் உண்டு.சென்னையில் இருந்து பெங்களூருவுக்குச் செல்ல அதிகபட்சம் ஆறு மணி நேரம் ஆகும். பயணத்தின்போது பயணிகளுக்கு பேருந்துக்குள்ளேயே உணவு வழங்குகிறோம். விமானத்தில் பணிப் பெண்கள் இருப்பது போல, இங்கேயும் பணிப் பெண்கள் உண்டு. பேருந்தில் இரண்டு மைக்ரோவ் ஓவன் மற்றும் ஃபிரிஜ் இருப்பதால், பயணிகள் கேட்பதைக் கொடுக்க முடியும். பேருந்தில் பாத் ரூம் வசதியும் உண்டு. ஒவ்வொரு இருக்கைக்கு முன்னால் லேப் டாப் வைக்க வசதி செய்யப்பட்டுள்ளது. பேருந்து முழுக்க 'வை-ஃபை’ கனெக்ஷன் இருப்பதால், இன்டர்நெட்டும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
 
 
தற்போது முதல் கட்டமாக சென்னை - பெங்களூருவுக்கு எட்டு பேருந்துகள் இயங்குகின்றன. அடுத்து, 2012-ம் ஆண்டுக்குள் 120 பேருந்துகளாகிவிடும்.டெல்லி, ஜெய்ப்பூர், ஆக்ரா, சண்டிகர், அமிர்தசரஸ், சிம்லா போன்ற இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கும் இயக்கலாம் என்பது திட்டம். அதேபோல் ஒவ்வொரு முக்கிய நகரங்களிலும் எங்கள் பேருந்துகளுக்கு 'லாஞ்ச்’ அமைத்துக் கொண்டு இருக்கிறோம். பெங்களூருவில் ஏற்கெனவே லாஞ்ச் இருக்கிறது. தற்போது, சென்னையில் 50 லட்ச ரூபாய் செலவில் அமைத்து வருகிறோம்'' என்றார். 
 
 
விகடன் 


Sunday, December 04, 2011

இந்திய ரூபாய்க்கு என்ன பிரச்னை?

இந்த நிதியாண்டு இந்தியப் பொருளாதாரத்திற்கு மிகவும் சவாலாக உள்ளது. ஜி.டி.பி. குறைவது,  உற்பத்தி வீழ்ச்சி, பணவீக்கம் அதிகரிப்பது, பங்குச் சந்தை வீழ்ச்சி, ரூபாயின் மதிப்பு வீழ்ந்தது என பல்முனை தாக்குதல்களில் அடிபட்ட புலி போல சுருண்டு கிடக்கிறது இந்தியப் பொருளாதாரம். இவற்றுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் ரூபாயின் மதிப்பு பெரிய அளவில் குறைந்ததுதான். கடந்த சில மாதங்களாக இந்திய ரூபாய் பற்றி தவறான செய்திகளே அடிபடுகிறது. காரணம், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 14.5 சதவிகிதம் வீழ்ந்ததே. 2009 மற்றும் 2010-களில் ஆண்டுக்கு ஐந்து சதவிகிதம் இந்திய ரூபாய் உயர்ந்தது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம்.
2008-ம் ஆண்டு இந்திய ரூபாய் 19 சதவிகிதம் சரிந்தது. இதை எதற்காக சொல்கிறேன் என்றால், ரூபாயின் மதிப்பு வருடா வருடம் உயருவதும், குறைவதும் எப்போதுமே நடக்கிற நிகழ்வுதான். ஏன் டாலரின் மதிப்பு உயருகிறது?. இந்திய ரூபாய் சரிகிறது.? மிகவும் சிம்பிளாக சொன்னால், சப்ளை டிமாண்ட் தியரிதான். டாலர் அதிகமாக வாங்கப்படுகிறது. ரூபாய் அதிகமாக விற்கப்படுகிறது. அதிக எண்ணிக்கையில் விற்பதற்கு தயாராக இருக்கும் பொருள் சரிவை சந்திப்பது இயல்புதான்.ஆனால், டாலர் மட்டும் ஏன் உயருகிறது என்பது எல்லோருக்கும் வரும் கேள்விதான். உலக கரன்சி என்பதால் உலக நடப்புகளை வைத்துதான் டாலர் ஏன் உயருகிறது என்பதை கண்டிபிடிக்க முடியும். அதை கண்டுபிடிக்க முயலுவதைவிட எல்லா கரன்சிகளுக்கு எதிராகவும் மதிப்பிழந்துள்ள ரூபாய்க்கு என்ன பிரச்னை என்கிற கேள்விக்கு பதில் தேடுவோம்.எந்த ஒரு சொத்தும் அடிப்படைக் காரணங்களையும் மீறி உயர்வதைப் போல  சரியவும் செய்கிறது. இது ரூபாய்க்கும் பொருந்தும் அல்லவா? அதாவது, டாலரானது நியாயப்படுத்த முடியாத அளவுக்கு ரூபாய்க்கு எதிராக உயர்ந்துள்ளது. இதற்கு என்ன காரணம் என்பதற்கு ஒவ்வொருவரிடமும் வெவ்வேறு பதில் இருக்கலாம். அதுதான் சந்தையை வழி நடத்துகிறது.
என்னுடைய பார்வையில் ரூபாய் சரிந்தது நியாயமாகதான் படுகிறது. அதற்கான காரணங்களும் இருக்கிறது. முதலாவது, எல்லா கரன்சிகளுக்கு எதிராகவும் ரூபாய் மதிப்பிழந் துள்ளது. தற்போதைய நிலைமையில், விலைவாசி உயர்வின் காரணமாக நம் அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதற்கு அதிக பணம் தேவைப்படுகிறது. பொருளாதார பாஷையில் சொல்ல வேண்டுமென்றால், கடந்த சில ஆண்டுகளாகவே பணவீக்கம் உயர்ந்துக் கொண்டே வருகிறது.சாதாரணமாக எல்லோரும் கரன்சியை அதன் வாங்கும் சக்திக்காக வைத்திருப்பார்கள். ஆனால், பணவீக்கம் மக்களின் வாங்கும் திறனை குறைத்துக் கொண்டே வருகிறது. ஆனால், சில வெளிநாடுகளில் மக்கள் தங்களது நாணயங்களை விற்று அந்நிய நாட்டு கரன்சியை வாங்கி வைத்துக் கொள்வார்கள். அப்படி செய்யும்போது அவர்களின் வாங்கும் திறன் குறையாது. இந்த வசதி இந்தியாவில் இல்லை. அதாவது,  அந்நிய நாட்டு நாணயத்தை ஒருவர் காரணமில்லாமல் அதிகளவில் வைத்திருக்க முடியாது.பணவீக்கம் அதிகரிப்பதினால் மக்களின் வாங்கும் சக்தி குறைகிறது. அப்போது அந்த கரன்சியின் மதிப்பும் குறைகிறது. (உதாரணமாக, ஒரு ரூபாய் சாக்லேட் இரண்டு ரூபாய் ஆகிறது என்றால் அந்த பொருளின் விலை உயர்ந்தது என்று சொல்வதை விட அந்த ரூபாயின் மதிப்பு குறைகிறது என்றுதான் அர்த்தம்!).இந்த பணவீக்கம் நாட்டின் பொருளாதாரத்தை எப்படி சீர் குலைக்கிறது என்று பார்ப்போம். தற்போதைய நிலையில் பொருளின் விலை அதிகமாக இருந்தாலும் மக்கள் தொடர்ந்து வாங்கிக் கொண்டே இருக்கிறார்கள். காரணம், இப்போது வாங்காவிட்டால் அந்த பொருளின் விலை இன்னும் ஏறிவிடுமே என்று நினைப்பதால்தான்! தொடர்ந்து வருமானம் உயர்ந்தால்தான் இது நடக்கும். நமது சம்பள உயர்வு வருடத்துக்கு ஒருமுறை அல்லது இரண்டு வருடத்துக்கு ஒருமுறை என நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆனால், பொருட்களின் விலையோ தொடர்ந்து உயர்ந்து கொண்டே வரும்போது மக்களால் பொருட்களை வாங்க முடியாது. இதனால் பொருட்கள் வாங்குவதை தள்ளிப் போட்டுவிடுகிறார்கள்.
இன்னொரு பக்கம் முதலீட்டு செலவுகள் அதிகரிப்பதால் தொழில் முனைவோர்களும், பிஸினஸ்மேன்களும்  உற்பத்தியைப் பெருக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள். இதன் காரணமாக உற்பத்தி குறைந்து பற்றாக்குறை அதிகரித்து, பணவீக்கம் உயருகிறது. இப்படி பணவீக்கம் அதிகரிக்கும்போது உள்நாட்டு முதலீட்டாளர்களும் சரி, வெளிநாட்டு முதலீட்டாளர்களும் சரி, இந்தியாவில் முதலீடு செய்யத் தயங்குவார்கள். அந்நிய முதலீடு வராத பட்சத்தில் பணத்தின் மதிப்பு குறையும்இன்னொரு பக்கம் ஏற்றுமதியாளர் களின் லாபம் உற்பத்திப் பொருட்களின் விலை ஏற்றத்தால் குறைந்து கொண்டி ருக்கும். சர்வதேச சந்தையின் போட்டி காரணமாகப் பொருளின் விலையை உயர்த்த முடியாது. அதனால் ஏற்றுமதியாளர்கள் தங்களின் லாபம் அதிகரிக்க ரூபாயின் மதிப்பு சரிவதை ஆதரிப்பார்கள்.இன்னொரு கோணத்தில் பார்த்தால், பணவீக்கம் காரணமாக உள்நாட்டு பொருட்களை விட வெளிநாட்டு பொருட்கள் விலை குறைவாக இருப்பதுபோல தோன்றும். அதனால் அதிகளவுக்கு இறக்குமதி செய்வோம். அப்போது வெளிநாட்டு கரன்சியின் தேவை அதிகமாக இருக்கும். இப்படி பணவீக்கம் காரணமாக எல்லா கோணத்திலிருந்தும் ரூபாய் அடி வாங்கி அதன் மதிப்பு சரிவடையும்.இப்படிப்பட்ட சூழ்நிலையில் ரூபாயின் மதிப்பு சரிவடைய ஆரம்பிக்கும்போது அந்நிய கரன்சியில் கடன் வாங்கி இருக்கும் நிறுவனங்கள் கடனின் அசல் தொகை ரூபாயின் மதிப்பில் உயர்வதால் தங்கள் கடனை வேகமாக திருப்ப முயல்வார்கள். இதனால் அந்நிய கரன்சிகளுக்கான டிமாண்ட் எகிறி, ரூபாயின் மதிப்பு மேலும் சரிவடையும். இதனால் நிறுவனங்களின் லாபம் குறைய, அயல்நாட்டுக் கடன்/முதலீட்டின் வரத்து குறையும். இது பொருளாதாரத்தை இன்னும் சிக்கல் நிறைந்ததாக ஆக்கும்.
சரி, இப்போது நம் நாட்டில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். பொதுமக்களுக்கு சில பொருட்களை இலவசமாகவோ அல்லது குறைந்த விலையிலோ மத்திய, மாநில அரசுகள் கொடுத்து வருகிறது. இதனால் உற்பத்தியா ளர்கள் நஷ்டம் அடைகிறார்கள். அவர்களுக்கான இழப்பீட்டை மத்திய, மாநில அரசுகள் தருகின்றன. இந்த பணத்தை மத்திய, மாநில அரசுகள் ஏதாவது ஒரு வகையில் திரும்ப பெற்றுத்தானே ஆகவேண்டும்.இதற்கு அரசாங்கத்துக்கு இரண்டு வழிகள்தான் இருக்க முடியும். முதலாவது, கூடுதலாக வரி விதிப்பதன் மூலம் வருமானத்தைப் பெருக்கலாம். அல்லது ரிசர்வ் வங்கியிடம் சொல்லி அதிக பணத்தை அச்சடித்துக் கொள்ளலாம்.இரண்டுமே நல்ல முடிவல்ல. வரிகளை உயர்த்துவதன் மூலம், மக்கள் தங்களது வருமானத்தை மறைக்கப் பார்ப்பார்கள்; சில பிஸினஸ்மேன்கள் நஷ்ட கணக்கை கூட காண்பிப்பார்கள். இரண்டாவது, கரன்சி அச்சடிப்பதால் மக்களிடையே பணப்புழக்கம் அதிகமாகி இன்னும் அதிகமாகச் செலவு செய்வார்கள். இதனால் பொருட்களின்  விலை மீண்டும் அதிகரிக்கும். அரசு இலவசங்களை கொடுப்பதால் நாட்டின் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கிறது. இதனால் பணவீக்கம் அதிகரிக்க,  ரூபாயின் மதிப்பும் குறையும்.மத்திய அரசு இதெல்லாம் தெரிந்தும் குறுகிய கால நோக்கோடு தேர்தல் வெற்றிகளுக்காக வரி வருமானத்தைவிட அதிகமாகச் செலவு செய்கிறது. இதனால் பட்ஜெட் பற்றாக்குறை அதிகரித்து பொருளாதார சரிவுதான் ஏற்படும்.  
சமீபத்தில் தமிழக அரசாங்கம் போக்குவரத்து, பால் கட்டணங்களை உயர்த்தியது. இதற்கு பல தரப்பினரிட மிருந்தும் கண்டனம் வந்தது. பெரும் பாலான பத்திரிகைகள், அரசியல் கட்சிகள், பல அமைப்புகள் கட்டண உயர்வை கண்டித்து வாபஸ் வாங்கச் சொல்லி வற்புறுத்தின.  கடந்த பத்து வருடங்களாக டிக்கெட் விலையை உயர்த்தாமல் எப்படி ஒரு அரசு நிறுவனம் நடத்த முடியும் என்று தெரியவில்லை. அதே சமயம், அரசாங்கம் வீண்செலவுகளைக் குறைப்பதன் மூலமும், அமைச்சர்கள், அதிகாரிகள் போன்றோர்களை எல்லாவற்றிற்கும் பொறுப்பெடுத்துக் கொள்ளச் செய்வதன் மூலமும் விலை உயர்த்தாமல் சமாளிக்கலாம். ஆனால், நாமோ அமைச்சர்களை பொறுப்பேற்கச் செய்யாமல், இலவசங்களை வாங்கி சந்தோஷப்படுகிறோம்.  அந்நியன் படத்தில் கிளைமேக்ஸில் ஒரு வசனம் வரும். நம்முடைய பிரச்னைகளுக்கெல்லாம் காரணம், தவறு செய்யும் அரசியல்வாதிகளோ,  தவறு செய்யும் அரசு அதிகாரிகளோ, அல்லது தவறு செய்யும் தலைவர்களோ அல்ல. நம் அனைத்து பிரச்னை களுக்கும் நாம்தான் காரணம். ஆனால், நாம் நம்மை தவிர மற்ற அனைவரையும் குற்றவாளி களாக்குகிறோம். இலவசம் என்னும் மாயவலையில் விழுந்து நாம் மட்டும் சீரழியவில்லை. நம்முடைய அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தையும் குட்டிச்சுவராக்குகிறோம். இன்று நாம் அடையும் இலவசங்கள் நம் குழந்தைகள் மற்றும் பேரக் குழந்தைகளின் எதிர்காலத்தையும் அடகு வைத்துதான் பெறுகிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள்.எப்போது நம்முடைய எண்ணங் களை மாற்றப் போகிறோம்.? ரூபாயின் சரிவுக்கு யார் காரணம்..? நாம்தான்! நம் எண்ணங்கள் மாறும்போது இந்திய அரசியல் மாறி இருக்கும். இந்திய ரூபாயின் மதிப்பும் உயர்ந்திருக்கும்.

விகடன் 

Friday, December 02, 2011

பெயிலுக்குப் பின்... - கனிமொழி


193 நாட்களுக்குப் பிறகு கலகலப்பானது புதுதில்லி ஸ்வர்ண ஜெயந்தி வளாகத்திலுள்ள கனிமொழியின் வீடு. வாசலில் கோலம். கையில் ஆரத்தியுடன் நின்ற பெண்மணி. திகார் ஜெயிலிலிருந்து இரவு ஏழரை மணிவாக்கில் கிளம்பிய டொயோட்டா காரில் கணவர் அரவிந்தனுடன் அடுத்த நாற்பதாவது நிமிடத்தில் வந்து இறங்கினார் கனிமொழி. தனிப்பட்ட முறையில் கனிமொழிக்கு ஆரத்தி எடுப்பது போன்ற விஷயங்களில் நம்பிக்கை கிடையாது. ஆனால், எல்லாம் அவர் அம்மா ஏற்பாடு. திருஷ்டி கழிய வேண்டுமாம். பெயில் கிடைக்க, ராஜாத்தி அம்மாள் வேண்டுதலுடன் ஆறு மாத காலத்தில் டஜனுக்கும் மேற்பட்ட கோயில்களுக்கு சென்று வந்திருக்கிறார். மற்ற எல்லோரையும் விட இந்தக் கைதால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர் அவரது தந்தை கருணாநிதிதான். எங்கள் தலைவர் முகத்தில் நீண்ட காலத்துக்குப் பின்னே புன்னகையும், புத்துணர்வும் தெரிகின்றன," என்கிறார் மாநிலங்களவை உறுப்பினர் வசந்தி ஸ்டான்லி.தி.மு.க.வுக்கு இது திருவிழாக் காலம். கைதுகள், உள்ளாட்சி அடி என்று கழகக் கட்டடமே ஆடிக் கொண்டிருக்கும் நிலையில் கனி மொழியின் பெயில், தொண்டர்கள் மத்தியில் புதிய உற்சாகத்தைக் கொண்டு சேர்த்திருக்கிறது.


எத்திராஜ் கல்லூரியில் படிப்பு, ‘ஹிந்து’ வில் பணி, மண வாழ்க்கையில் சொல்லொண்ணா சோகம், பின்னர் அரவிந்தனைக் கைப்பிடித்தது என்று தனிப்பட்ட வாழ்க்கை சுற்றி அடிக்க 2007, ஜூலைதான் திருப்புமுனை. அதற்கு இரண்டு மாதம் முன்புதான் ராசா தொலைத்தொடர்பு அமைச்சராகியிருந்தார். கனிமொழியும் ராஜ்யசபா உறுப்பினராக, 2011 தேர்தல் வரை அவரும் ராசாவும் தி.மு.க. வின் தில்லி முகங்களாக வலம் வந்தனர். கடலூரில் கனிமொழியை முக்கியப்படுத்தி கழக மகளிர் மாநாடு, சங்கமம் நிகழ்ச்சிகள், வேலைவாய்ப்பு முகாம் என்று அரசியல் ஏணியில் ஃபாஸ்ட் ட்ராக்.புதிய தொடர்புகள், புதிய அனுபவங்கள், முடிவில் அலைக்கற்றை ஊழல் சகதியில் சிக்கிக் கொண்டார் கனிமொழி. இப்போது பெயிலில் வெளிவந்த நிலையில் அவருக்கு கட்சியில் ஏற்றம் கெடுக்க வேண்டும் என்று கடுமையாக வற்புறுத்தி வருகிறார் அவரது தாயார். கனிமொழிக்கு முக்கியமான கட்சிப் பதவி கொடுக்க வேண்டும். ஜெயிலுக்குப் போனது, இந்த வழக்கைச் சந்திப்பது எல்லாம் கனிமொழி, தலைவர் குடும்பத்துக்காக செய்யும் தியாகம். தலைவருக்கு அடுத்தபடியாக உள்ள ஸ்டாலின், அழகிரி ஆகியோரைவிட பல விஷயங்களில் கனிமொழியின் கண்ணோட்டம் வித்தியாசமாக இருக்கும். கட்சிக்கு ஓர் இளைய முகம். கருத்துச் சுதந்திரத்தில் முழு நம்பிக்கை அவருக்கு உண்டு. புதிய சிந்தனைகள், புதிய அணுகுமுறை என்று கழகத்துக்கு காலத்துக்கேற்றபடி ஒரு தலைமை எதிர்காலத்தில் வேண்டும். அதற்கு மிகத் தகுதியானவர் கனிமொழியே. எனவே, அவருக்கு இப்போது ஒரு நல்ல பொறுப்பு கொடுத்து முன்னணிக்குக் கொண்டு வர வேண்டும்," என்று சொல்கிறார்கள் கனிமொழியின் தீவிர ஆதரவாளர்கள்.கனிமொழிக்கு பதவியா?" என்று முதலில் ஆர்ப்பாட்டமாகக் குதித்த கலைஞரின் குடும்ப அதிகார மையங்கள் கூட, இப்போது கொஞ்சம் இறங்கி வந்திருப்பதாகத் தகவல். தலைமைக் கழக முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர் போன்ற பதவிகள் கிடைக்கும் என்று வதந்திகள். இருந்தாலும், ராசாத்தி அம்மாள் கனிமொழிக்கு ‘இளைஞர் அணி’ செயலாளர் பொறுப்பு கிடைப்பதையே மிகவும் விரும்புகிறாராம். எந்தப் பதவியாக இருந்தாலும் உடனே கிடைக்காது என்கிறார்கள். கொஞ்சம், கொஞ்சமாக கழகத்தினரைத் தயார்ப்படுத்தி, பொதுக் குழு, செயற்குழு, உயர்மட்டக் குழு என்று கூட்டி அவற்றில் கனிமொழியை முக்கியத்துவப்படுத்தி, பின்னரே பொறுப்பு வழங்கப்படுமாம். ஆனால் அதற்காக நீண்ட காலம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்கிறாராம் ராசாத்தி அம்மாள்.


கனிமொழியைக் கட்சியில் முக்கியத்துவப்படுத்துவதற்கு நூறு சதவிகிதம் கழகப் பிரமுகர்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. கனிமொழிக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் கொஞ்சம் ஓவராக இருக்கிறதோ என்று தோன்றுகிறது. கனிமொழி அரசியல் ரீதியாகச் சிறை செல்லவில்லை. ஊழல் குற்றச் சாட்டில் சென்றிருக்கிறார். எனவே, அவர் வழக்கில் தம்மை விடுவித்துக்கொள்ளும் வரை பதவி கொடுப்பது சரியல்ல; அவருக்கு முக்கியத்துவம் கொடுத்தால் அலைக் கற்றை ஊழல் பற்றி அரசியல் எதிரிகள் தொடர்ந்து பேசவும், தி.மு.க.வைக் கேவலப்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது. எனவே, கனிமொழி முதலில் வழக்கிலிருந்து வெளியே வரட்டும்," என்கிறார் ஸ்டாலினுக்கு மிகவும் வேண்டிய முன்னாள் அமைச்சர் ஒருவர்.இந்தக் கருத்துக்களெல்லாம் ஒரு பக்கம் இருக்க, கனிமொழி என்ன சொல்கிறார்? என் மீது போடப்பட்டது பொய் வழக்கு என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன். நான் எந்தப் பதவியையும் எதிர்பார்க்கவில்லை. சாதாரண கட்சி செயல் வீரராகவே தொடருவதுதான் என் விருப்பம். அப்பாவுக்கு உதவியாக இருப்பேனே தவிர அவருக்கு எந்த விதத்திலும் தொந்தரவாக இருக்க மாட்டேன்," என்று தம் நலன்விரும்பிகளிடம் தொடர்ந்து சொல்லி வந்திருக்கிறார் அவர். பொங்கலுக்கு பிறகு, தமிழகமெங்கும் போய் கூட்டங்கள் பேசப் போகிறாராம். ஆக தை பிறந்தால் கனிமொழிக்கு வழி பிறக்கும் போலிருக்கிறது.


பெயிலுக்கு பின் கழகக் குடும்பத்தில் அமைதியா, சூறாவளியா என்பது அப்போது தெரிந்துவிடும்.

ப்ரியன்

அஸ்வின் !

முதல் டெஸ்ட் தொடரிலேயே மேன் அஃப் தி சீரிஸ், இரண்டு மேன் அஃப் தி மேட்ச் விருதுகள், ஒரு டெஸ்ட் செஞ்சுரி என்று அமர்க்களமாக அஸ்வினின் டெஸ்ட் வாழ்க்கை ஆரம்பித்திருக்கிறது. டி20-யில் மிளிர்கிற பந்து வீச்சாளர்களை அவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அதில் அதிக விக்கெட்டுகளை எடுக்கிற பந்து வீச்சாளரை நம்பி ஏமாறக் கூடாது என்பார்கள். ஆனால், அஸ்வினுக்குப் பெரிய திருப்புமுனை, ஏணி எல்லாம் டி20 மேட்சுகள்தான். எந்த பிட்சாக இருந்தாலும் அதில் அஸ்வினால் விக்கெட்டுகள் எடுக்க முடிகிறது.ரஞ்சி டிராபியில் மூன்று வருடங்கள் தொடர்ந்து ஆடி, அடிப்படைத் தேர்வை பாஸ் செய்து, முதல்முதலாக 2009ல் ஐ.பி. எல். அணியில் இடம்பிடித்தார் அஸ்வின். 2010 ஐ.பி.எல்.லில்தான் முதல் திருப்பு முனை. ஆரம்பத்தில் மோசமாக பந்துவீசி, சில ஆட்டங்களிலேயே அணியிலிருந்து நீக்கப்பட்டார். ஆனால், மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் மீண்டும் தேர்வாகி, 2010 ஐ.பி.எல்.-ஐ சென்னை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தார். அடுத்ததாக, சாம்பியன்ஸ் லீகில் தொடர் நாயகனாகத் தேர்வானார். உடனே, இந்திய அணியில் அஸ்வினுக்கு அதிக வாய்ப்புகள் வரத் தொடங்கின. ஒருநாள் ஆட்டங்களில், அதிக ரன்கள் கொடுக்காமல், தேவையான விக்கெட்டுகள் எடுத்து, கேப்டன் விரும்பும் சமத்துப்பிள்ளையாக இருந்தார். 
ஹர்பஜனின் மோசமான ஃபார்ம், அஸ்வினை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்தியது. முதல் டெஸ்ட் தொடரிலேயே, 22 விக்கெட்டுகள் எடுத்து, ஒரு டெஸ்ட் செஞ்சுரியும் அடித்து மிரட்டிவிட்டார்.  அஸ்வின், பிடெக் முடித்த சாஃப்ட்வேர் இன்ஜினீயர். இளம் வயதில் பேட்ஸ் மேனாகக் கனவு கொண்டிருந்தவரை ஸ்பின் பக்கம் திருப்பியவர், தமிழக முன்னாள் ஸ்பின் பௌலர், சுனில் சுப்ரமணியன். கேரம் பந்துவீச்சு முறை அஸ்வினின் பெரிய பலம். இதேபோல விதவிதமான பந்துவீச்சு வகைகளால் பேட்ஸ்மேன்களுக்குக் கடும் நெருக்கடி கொடுத்து, தம் முத்திரையைப் பதித்துவிட்டார். தொடர்ந்து திறமையுடன் பொறுப்புடன் பந்து வீச வேண்டும். 2011 உலகக் கோப்பையில் அஸ்வின் இரண்டு ஆட்டங்கள்தான் ஆடினார். ஆனால், அந்த உலகக் கோப்பைப் போட்டி யின் ஆரம்பம் முதல் இறுதி வரை இவரைப் பற்றிய பரபரப்பு அதிகம். இறுதி ஆட்டத்தில், நெஹ்ராவுக்குக் காயமானவுடன் அஸ்வின் கட்டாயம் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இலங்கை வீரர்கள் ஸ்பின் ஆடுவதில் வல்லவர்கள் என்பதால் ஸ்ரீசாந்துக்கு அதிர்ஷ்டம். ஆனால், அந்த வருத்தங்களையெல்லாம் கடந்துவந்து சர்வதேச அரங்கில் அற்புதமாக அறிமுகமாகியிருக்கிறார் அஸ்வின். அஸ்வினுக்கு சில பலவீனங்கள் உண்டு. பேட்டிங்கில், கடைசி ஓவரில் இரண்டு முறை சொதப்பியிருக்கிறார். 2010 ஐ.பி. எல்.லில், பஞ்சாப்புடனான ஆட்டத்தின் கடைசி இரண்டு பந்துகளில் ரன் எதுவும் எடுக்காமல் மேட்சை Tie ஆக்கினார். மும்பை டெஸ்டிலும் கூட.ஒன்றுக்கும் மேற்பட்ட திறமைகள் இருக்கிறபோது, அது அணிக்குக் கூடுதல் பலத்தைக் கொடுக்கிறது. தோனியைவிட இதற்கு சரியான உதாரணம் காட்ட முடியாது. கும்ப்ளே, ஹர்பஜனுக்கு அடுத்ததாகப் புதிய அத்தியாயத்துக்குத் தயாராகி இருக்கிறது இந்திய அணி. அதற்காகச் சில வீரர் களை மலைபோல நம்பியிருக்கிறது. அதில், அஸ்வின் பங்கு மிக முக்கியம்.

கனிமொழியே வருக...வருக..., ஓ பக்கங்கள் - ஞாநி


கனிமொழிக்கு மாபெரும் வரவேற்பு தர பலரும் தயாராகிவிட்டார்கள். ஜெயலலிதாவின் அரசியலுக்கு எதிராகப் போராட வலுவான பிம்பம் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் யாரும் இல்லாத நிலையில், கனி மொழியைக் கொண்டு அந்த வெற்றிடத்தை நிரப்பிவிட முடியுமா என்று மீடியா, பத்திரிகைகள், தி.மு.க.வினர் என்று பலரும் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருக்கிறார்கள்.சிறையிலிருந்து பிணையில் விடுதலை ஆகிவரும் கனிமொழிக்கு, விமான நிலையத்தில் தொடங்கி வீதி வீதியாக, ஊர் ஊராகப் பெரும் வரவேற்பு தர தி.மு.க.வினர் ஆயத்தமாகி வருவதாக, செய்திகள் வெளியாகியுள்ளன. நீதிமன்ற விசாரணைக்குச் செல்லவேண்டிய கட்டாயம் இல்லாமல், எந்தெந்தத் தேதிகளில் அவர் சென்னையில் இருப்பார் என்று பட்டியலையும் தி.மு.க. தலைமை நிலையம் வெளியிட்டிருக்கிறது. கனிமொழி சிறைக்குச் சென்றது தந்தையைப் போல மொழிப் போராட்டத்தில் அல்ல. மக்களின் அன்றாடப் பிரச்னைகளுக்கு நீதி கேட்டு நடத்திய போராட்டத்திலும் அல்ல. குறைந்தபட்சம் அண்ணன் ஸ்டாலினைப் போல அடக்குமுறை மிசா சட்டத்தின் கீழ் அடைக்கப்படவும் இல்லை.ஊழலில் ஈடுபட்டு செல்வாக்கை முறைகேடாகப் பயன்படுத்தி, அரசுக்குப் பல கோடி நஷ்டம் ஏற்படுத்தி, தாம் சில கோடி லாபமடைவதற்காகச் சதி செய்து நம்பிக்கை துரோகத்தில் ஈடுபட்டதாக சி.பி.ஐ அவர் மீது குற்றம் சுமத்தியிருக்கும் ஸ்பெக்ட்ரம் வழக்கில்தான் அவர் கைதாகி, சிறையிலிருந்து பிணையில் வெளியே இப்போது வருகிறார். வழக்கு விசாரணை முடிந்து நிரபராதி என்றோ குறைந்தபட்சம் அவர்மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என்றோ விடுதலை செய்யப்பட்டு, சிறையிலிருந்து வெளிவரும்போது கட்சியினர் மாபெரும் வரவேற்பு அளித்தால் நியாயம்.

சுமார் ஆறு மாதமாக பிணை மறுக்கப்பட்டதால் கனிமொழிக்குப் பெரும் அநீதி இழைக்கப்பட்டுவிட்டதைப் போல தி.மு.க. வட்டாரங்கள் சித்திரிக்கின்றன. தி.மு.க. ஆட்சி நடத்திய காலங்கள் உட்பட எல்லா காலங்களிலும் இந்தியாவில் பிணை இல்லாமல் சிறையில் வாடும் விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை அதிர்ச்சியானது. இப்போதும் திஹார் உட்பட எல்லா சிறைகளிலும் சுமார் 80 சதவிகிதம் பேர் விசாரணைக் கைதிகள்தான். அரசியல்வாதிகளுக்கும் தலைவர்களுக்கும் தங்கள் வீட்டில் யாராவது பாதிக்கப்பட்டால் ஒழிய, சிறை சீர்திருத்தங்களில் அக்கறை இல்லை.சுமார் ஒரு லட்சத்து 74 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய ஊழல் வழக்கில் கனிமொழி சுமார் ஆறு மாதங்கள் கழித்து, சிறையிலிருந்து பிணை விடுதலை கிடைக்கிறது. தன் சொந்த கம்பெனியிலேயே 14 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடிகள் செய்ததை, தானே ஒப்புக் கொண்ட சத்யம் கம்ப்யூட்டர் ராமலிங்க ராஜுவுக்கு 32 மாதங்களாக, பிணையில் வெளிவர முடியவில்லை. ஆனால் அதை மீடியா அக்கிரமம் அநீதி என்று வர்ணிக்கவில்லை. இன்றும் சிறைகளில் இருக்கும் சுமார் இரண்டு லட்சம் விசாரணைக் கைதிகள் தாங்கள் தண்டிக்கப்பட்டால் எத்தனை வருடம் சிறையோ அதில் பாதியை ஏற்கெனவே கழித்துவிட்டவர்கள். கனிமொழியாலும் ராசாவாலும் தமிழகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கும் திஹார் சிறையில் ஒரு வருட காலம் இருந்தவன் ஷம்சுதீன் என்ற 19 வயது இளைஞன். உத்தரப் பிரதேசத்திலிருந்து தில்லிக்குப் பிழைக்க வந்து, தெருவோரம் காய்கள் விற்றவன். ஒருவரின் பர்சையும் அதிலிருந்த 200 ரூபாயையும் திருடியதாகக் குற்றம் சாட்டி, போலீஸ் கைது செய்தது. தான் திருடவில்லை என்றும் பர்சே தன்னுடையதுதான் என்றும் ஷம்சுதீன் சொன்னான். திருடாவிட்டாலும் திருடியதாக ஒப்புக் கொண்டிருந்தால் மூன்று மாதம்தான் சிறைத் தண்டனை. தான் குற்றவாளியில்லை என்று சொன்னதால், ஒரு வருடமாக சிறையில் இருக்கிறான். முதல் ஜாமீன் விசாரணையே ஆறு மாதம் கழித்து வந்தது. ‘கடுமையான குற்றம்’ என்பதால் அவனுக்கு பிணை மறுக்கப்பட்டது. மனித உரிமைச் சட்ட அமைப்பான ஒரு தொண்டு நிறுவனத்துக்கு, ஷம்சுதீன் பிரச்னை தெரியவந்தது. கிராமத்தில் இருந்த அப்பா சில நாட்கள் முன்பு இறந்துவிட்டதாக அவனுக்குத் தெரியவந்ததும், வழக்கறிஞர் யோசனைப்படி திருடியதாக ஒப்புக் கொண்டு, ஏற்கெனவே தண்டனையை அனுபவித்துவிட்ட படியால் விடுதலையாகி இருக்கிறான். “இனிமேல் இப்படித் திருடாதே,” என்று நீதிபதி சொன்னதும், ஷம்சுதீன் “நான் திருடவே இல்லையே,” என்று தம் வக்கீலிடம் முணுமுணுத்தான். திஹார் மட்டுமல்ல, எல்லா ஊர் சிறைகளிலும் இருக்கும் ஷம்சுதீன்களுக்கு முணுமுணுப்பதைத் தவிர வேறு வழியில்லை. கனிமொழிக்கு பிணையில் வருவதற்கே வரவேற்பு என்பது தி.மு.க.வில் அதிகாரப் போட்டி அடுத்த சுற்று ஆரம்பம் என்பதன் அடையாளம்தான்.


கலைஞர் கருணாநிதியின் குடும்பங்களுக்குள் நடக்கும் இந்த அதிகாரப் போட்டிதான் இலக்கியவாதி கனிமொழியை அரசியல்வாதி கனிமொழியாக்கி, குற்றவாளி அவதாரத்தில் சிறையில் தள்ளியது. இந்திய அரசியலில் கலைஞர் கருணாநிதியைத் தவிர வேறு எந்தத் தலைவரின் குடும்பப் பிரச்னைகளும் அரசியல் பிரச்னைகளாக மாறிய சரித்திரம் இல்லை. இதனால் இந்திய அரசியல் வரலாற்றிலேயே இது வரை இப்படி நடந்ததில்லை என்ற விசித்திரப் பெருமைகள் கனிமொழிக்குக் கிடைக்கக் காரணம் குடும்ப சிக்கல்கள். எந்தக் கட்சிப் பதவியிலும் ஆட்சிப் பதவியிலும் இல்லாத ஒருவர், அதுவும் அரசியலில் ஐம்பதாண்டுகள் அனுபவமிக்க ஒரு கட்சித் தலைவரின் மகள், பிரம்மாண்டமான ஊழல் குற்றச்சாட்டில் கைதாகி அவரது கட்சியின் கூட்டணி ஆட்சி நடத்தும்போதே சிறைக்கு அனுப்பப்படும் ‘பெருமை’ வேறு யாருக்கும் கிட்டியதில்லை.கனிமொழி பிறந்த சமயத்திலிருந்தே அவருடைய பிரச்னைகளும் தொடங்குகின்றன. சில வருடங்கள் முன்பு கலைஞர் கருணாநிதி தம் கோபாலபுரம் வீட்டை தம் காலத்துக்குப் பிறகு, தம் மனைவி தயாளு அம்மாள் காலத்துக்குப் பிறகு பொது மருத்துவமனையாக்குவதற்கு நன்கொடையாக அளிப்பதாக அறி வித்தார். அப்போது இந்த முடிவுக்கு, தம் மகன்கள் மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், தமிழரசு ஆகியோரும் சம்மதம் தெரிவித்திருப்பதாகச் சொன்னார். எதற்கு அவர்கள் சம்மதம்? வீட்டை அவர்களுக்கு ஏற்கெனவே அவர் கொடுத்துவிட்டார். அதனால்தான். எப்போது கொடுத்தார்? 1968ல்! அப்போது கலைஞருக்கு வயது 44தான். கோபாலபுரம் வீடுதான் அவரது முதல் அசையாச் சொத்து. அதை ஏன் ஒருவர் தன் 44ம் வயதிலேயே மகன்களுக்கு மேட் ஓவர் செய்ய வேண்டும்? காரணம் இன்னொரு துணைவரான ராஜாத்தி அம்மாளின் மூலம் கனிமொழி அந்த ஆண்டு பிறந்ததுதான் என்று அனுமானிக்கலாம்.கணவருடன் தமக்குள்ள இடத்தைப் பங்கு போட இன்னொரு பெண் வந்துவிடும் போது, எந்த மனைவியும் உடனடியாகத் தம் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து அச்சப்படுவதும் அதற்காக நடவடிக்கைகள் எடுப்பதும் இயல்பானது என்பதை நான் நேரடியாகவே அறிவேன். ஏனென்றால் நானும் கனிமொழியைப் போல என் அப்பாவின் துணைவிக்குப் பிறந்த ஒரே குழந்தை. கனிமொழி, கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள், தயாளு அம்மாள், அவரது குழந்தைகள் எல்லாருக்கும் ‘குடும்பத் தலைவரின்’ செயல்கள் ஏற்படுத்தக்கூடிய மன உளைச்சல்களை அவற்றை அனுபவித்திருக்கக்கூடிய இன்னொரு சூழலில் இருந்து வந்த என்னால் நன்றாகவே உணரவும் புரிந்துகொள்ளவும் முடிகிறது.என் நற்பேறு என் அப்பாவின் மனைவி, துணைவி, இருவருக்கும் பிறந்த குழந்தைகள் ஆறு பேர் எல்லாரும் ஒரே வீட்டில் ஒரே கூரையின் கீழ் ஒரே குடும்பமாக வாழ முடிந்தது என்பது தான். என்னுடைய இரு அம்மாக்களுக்கும் என் அப்பாவிடம் பிரச்னைகள் இருந்தனவே ஒழிய மூவரும் அதைத் தங்கள் குழந்தைகள் மீது ஒருபோதும் சுமத்தவே இல்லை. என்னைச் சீராட்டி வளர்த்து நெறிப்படுத்தியதில் இரண்டு அம்மாக்களுக்கும் பங்கு இருக்கிறது. அதே சமயம் இருவருக்கும் இருந்த பாதுகாப்பற்ற உணர்ச்சியை சகோதர, சகோதரிகள் நாங்கள் அனைவரும் அவரவர் தளத்தில் உணர்ந்திருக்கிறோம். தம் மனைவி, துணைவி இருவருக்கும் கணவராக என் அப்பா நீதி செய்யவில்லை என்ற கருத்து எனக்கு உண்டு என்ற போதும், அப்பாவாக அவர் எனக்கு முக்கியமான வழிகாட்டி. 

இந்தப் புள்ளிதான் எனக்கும் கனிமொழிக்குமான பொதுப்புள்ளி. இருவருக்கும் எங்கள் அப்பாக்களே சமூகப் பார்வைக்கான ரோல் மாடல்கள். ஆனால் எனக்கு வாய்த்த கூட்டுக் குடும்பச் சூழல் கனிமொழிக்கு வாய்க்கவில்லை. ஆனால் அவர் ஓர் இளம் பெண்ணாகத் தம் வெற்றிடங்களை, கலை இலக்கியத்தால், பகுத்தறிவுத் தேடலால் நிரப்பிக்கொள்ள முற்பட்டது ஆரோக்கியமான அணுகுமுறை.  தொடர்ந்து கலை இலக்கியத் துறைகளிலேயே ஒரு படைப்பாளியாக மட்டும் கனிமொழி தம் பயணத்தை நடத்தியிருந்தால், இப்போது அவருக்கு ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சி நிச்சயம் வந்திராது. முதலில் கலை இலக்கியத் துறையின் அரசியலில் அவர் இறங்கினார். அடுத்து நேரடி அரசியலில் ஈடுபட்டார். இதற்கான நிர்ப்பந்தங்கள் கருணாநிதியின் இரு குடும்ப அமைப்பினால் உருவானவை. கடைசியாக கலைஞர் டி.வி. என்ற வர்த்தக நிறுவனம் உருவாகும்போதுகூட, கனிமொழி, தயாளு அம்மாள் என்று தம் இரு குடும்பங்களிலிருந்தும் ஒவ்வொருவரை இயக்குனராக்கினார். தொடர்ந்து ஒவ்வொரு கட்டத்திலும் இரு குடும்ப நிர்ப்பந்தங்களை அவரும் சுமந்து வந்திருக்கிறார். ஒருவர் தாமே தமக்கு உருவாக்கிக் கொண்ட சிக்கலின் விளைவுகளை அவரது சுற்றமும் நட்பும் மட்டுமல்ல, அவரும் சந்தித்துத்தான் ஆக வேண்டும் என்பதை என் அப்பாவிடமும் பார்த்திருக்கிறேன்.கனிமொழிக்குள் இருக்கும் இலக்கியவாதியை, கவிஞரை, பகுத்தறிவாளரைச் சந்திக்க அவரது படைப்புகள் உதவும். அவருக்குள் இருக்கும் அரசியல்வாதியை சங்கமம் விழா ஏற்பாடுகளில் சந்திக்கலாம். நீரா ராடியாவுடன் டேப்பில் பதிவாகியிருக்கும் அவருடைய உரையாடல்களில் தரிசிக்கலாம்.நீரா ராடியா உரையாடல்கள் ஒரு பதற்றமும், சூழ்ச்சியும் சுயநலமும் அவசரமும் நிரம்பிய அரசியல்வாதியைக் காட்டுகின்றன. குடும்பச் சிக்கல்களைச் சமாளிக்கவேண்டிய கவலைகள் அதில் பிரதிபலிக்கின்றன. கவிதைகளில் தெரியும் நபர் அதற்கு நேர் மாறானவர். சமூகம் சார்ந்த சிந்தனையும், இன்றைய கசடுகள் நீங்கிய ஒரு நாளை பற்றிய கனவும் ஏக்கமும் நிறைந்த மனிதர் அதில் வெளிப்படுகிறார். இரண்டும் கனிமொழி என்பதுதான் நமக்குச் சிக்கல்.எல்லா மகாத்மாக்களுக்கும் ஒரு கடந்த காலம் உண்டு. எல்லா பாவிகளுக்கும் ஒரு எதிர்காலமும் உண்டு என்பார்கள். கனிமொழி இன்னமும் மகாத்மாவும் அல்ல. பாவியும் அல்ல. முரண்பாடுகளும், ஆசைகளும், திறமையும் உடைய இன்னொரு சமூக மனிதர்.ஆறு மாத சிறைவாசம் ஒருவருக்கு, தமக்குள்ளேயே தம்மைத் தேடிப் பார்ப்பதற்கு நிச்சயம் உதவக்கூடியதுதான். அந்தத் தேடலில், தமக்கு பிறப்பால் நேர்ந்த பலங்கள், பலவீனங்கள் இரண்டையும் அசை போட்டு எடை போட அறிந்திருப்பார் என்றால், அந்த அறிவு, வரும் நாட்களில் அவர் செயல்களில் பிரதிபலிக்கும். திஹாரில் கற்றதும் பெற்றதும் என்ன என்று நமக்கும் தெரியவரும்.தம் குடும்பத்தை மீறி, சிந்திக்கத் தெரிந்தவர்கள்தான் சமூகத்தை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் சென்றவர்கள். ஒரு காமராஜர், ஒரு பெரியார். தம் குடும்பத்தால் தம் அரசியலையே நாசமாக்கிக் கொண்டவர்கள் சமூகத்தையும் பின்னடையவே செய்திருக்கிறார்கள். ஒரு இந்திராகாந்தி. ஒரு கருணாநிதி. கனிமொழியின் தேடல் எந்தத் திசையில் என்று காணும் ஆவலுடன் நானும் அவரை வருக வருக என்று வரவேற்கிறேன்.

இந்த வார சந்தேகம்

ஸ்பெக்ட்ரம் குற்றவாளிகள் பெரும்பாலோர் ஜாமீனுக்காகப் படாத பாடுபட்டு வெளிவரும்போது, ஏன் பிரதான குற்றவாளி ஆ.ராசா மட்டும் அதைக் கோராமலே இருக்கிறார்? வெளியில் வந்தால், தம் உயிருக்கு ஆபத்து என்று அவர் அஞ்சுவதாகச் சொல்லப்படுவது உண்மையா?

இந்த வாரப் பூச்செண்டு

சில்லறை வியாபாரத்தில் வெளிநாட்டு முதலீட்டை மத்திய அரசு தாராளமாக அனுமதித்தாலும் தாங்கள் அனுமதிக்க முடியாது என்று சொல்லியிருக்கும் அத்தனை மாநில அரசுகளுக்கும் இ.வா.பூ.  


5 வித்தியாசங்களைக் கண்டுபிடி!


விடைகளை கமெண்ட்ல தெரிவியுங்கள்..

Thursday, December 01, 2011

விலைபேசப்படும் சில்லறை வியாபாரம் -குருமூர்த்தி


இப்போது வருகிறது, அப்போது வருகிறது என்று “புலிவருது புலி’ பாணியில் பாய்ச்சல் காட்டிக் கொண்டிருந்த சில்லறை விற்பனையில் அன்னிய முதலீடு வந்தேவிட்டது. இந்தியச் சில்லறை வர்த்தகத்திலும் அன்னிய நேரடி முதலீட்டுக்குக் கதவைத் திறந்தாகிவிட்டது.கடந்த சில வாரங்களாகவே இந்தியப் பொருளாதாரம் பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. இந்திய ரூபாயின் மதிப்பில் ஐந்தில் ஒரு பங்கு மேலும் சரிவு, அன்னியச் செலாவணி கையிருப்பு வேகமாகக் குறைவு, அன்னிய நிறுவனத் தொழில் முதலீட்டாளர்களின் முதலீடுகள் இந்தியாவிலிருந்து மீண்டும் வெளியேற ஆரம்பித்தது ஆகியப் பொருளாதார நிகழ்வுகளால் என்ன செய்வது என்று முடிவு எடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் இந்திய அரசால் சரிந்து கொண்டிருக்கும் ரூபாயின் மதிப்பையோ விலைவாசி உயர்வையோ கட்டுப்படுத்த முடியாத நிலையில் பொருளாதார சீர்திருத்தத்தில் அடுத்த கட்டம் என்ற பெயரில் அன்னிய பெருவர்த்தகர்களுக்கு இந்தியச் சந்தையில் புகுந்து விளையாடக் கதவுகளைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது அரசு.உள்நாட்டுப் பெருந்தொழில் நிறுவனங்களும் அயல் நாடுகளின் தொழில் நிறுவனங்களும் கடந்த சில ஆண்டுகளாக இடையறாமல் தூபம் போட்டு வந்த “மிகப்பெரிய பொருளாதாரச் சீர்திருத்த” நடவடிக்கைக்கு மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் தந்துவிட்டது. இந்த சீர்திருத்தத்துக்காக “பாடுபட்ட சக்திகள்” வென்றுவிட்டன. ஆனால், “இந்தியா” தோற்றுவிட்டது என்பதுதான் உண்மை.


பெருநகரங்களின் நலன்தான் இந்த அரசின் முக்கிய குறிக்கோள் என்பதை இந்த நடவடிக்கையும் அம்பலப்படுத்தியிருக்கிறது.இந்திய கிராமப்புறங்கள் குறித்தும் வேளாண்மை குறித்தும் இந்த அரசுக்குப் போதிய அறிவோ, அக்கறையோ இல்லை என்பதையும் இந்த முடிவு உணர்த்துகிறது.சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது என்ற அரசின் முடிவால், இந்த வியாபாரத்தில் நாடு முழுவதும் ஈடுபட்டு வரும் 12 லட்சம் குடும்பங்களின் எதிர்காலம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம். அதே சமயம் கிராமப்புற இந்தியாவில் இப்போது கிடைத்துவரும் உணவுப் பாதுகாப்பையும் இது சேர்த்தே அழித்துவிடும் என்பது பெரும்பாலானவர்களுக்கு இன்னும் தெரியாமலேயே இருக்கிறது.இந்திய சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதன் மூலம், வால்மார்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் கிராமங்களுக்கே சென்று நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து அவர்களுக்கு நியாயவிலை கிடைக்க உதவும் என்பது முதல் வாதம். இதன் மூலம் விவசாயிகள் பணக்காரர்களாகிவிடுவார்கள் என்பது அரசு மற்றும் சில்லறை விற்பனையில் அன்னிய முதலீட்டுக்காகக் குரல் எழுப்புபவர்களின் இன்னொரு வாதம். இப்படிச் சொல்கிறவர்கள் இந்தியாவின் கிராமப்புறங்களைப் பற்றிய புரிதல் இல்லாதவர்கள் என்பதுதான் நிஜம்.பதினோராவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2007-12) வேளாண் பொருள்களைச் சந்தைப்படுத்தவும், அடித்தளக் கட்டமைப்பை உருவாக்கவும், உள்நாட்டு – வெளிநாட்டு வர்த்தகத்தைப் பெருக்கவும் தேவைப்படும் கொள்கைகளை வகுப்பதற்கான மத்திய திட்டக்குழுவின் செயல்திட்டக் குழு நாடாளுமன்றத்துக்கு அறிக்கை தயாரித்து அளித்தது.


அதேசமயம், உணவு, நுகர்வோர் விவகாரம், பொது விநியோகம் ஆகியவற்றுக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நிலைக்குழுவும் அரசுக்கு அறிக்கை அளித்தது. இவ்விரு அறிக்கைகளையும் சேர்த்துப் படித்தால் கிராமப்புற இந்தியா எப்படி இருக்கிறது என்ற உண்மை புலப்படும்.இந்தியாவில் உள்ள விவசாயப் பண்ணைகளையும் வெளிநாடுகளில் உள்ள பண்ணைகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால்தான் உண்மை நிலவரம் புரியும்.இந்தியாவில் சுமார் 588 லட்சம் சிறு, குறு விவசாயக் குடும்பங்கள் உள்ளன. அதாவது 32 கோடிக்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்தியாவில் நிலங்களை நம்பி நேரடியாக வாழ்கின்றனர். சராசரியாக அவர்கள் வைத்திருக்கும் நிலத்தின் அளவு 5 ஸ்டாண்டர்டு ஏக்கர் அல்லது அதற்கும் கீழே.வெளிநாடுகளின் நிலைமை அதுவல்ல. கனடா நாட்டில் சராசரியாக ஒரு விவசாயி வைத்திருப்பது 1,798 ஏக்கர். அமெரிக்காவில் இது 1,089 ஏக்கர், ஆஸ்திரேலியாவில் 17,975 ஏக்கர், பிரான்சில் 274 ஏக்கர், பிரிட்டனில் 432 ஏக்கர்.அமெரிக்க விவசாயி வைத்திருக்கும் நிலத்தின் அளவு, இந்திய விவசாயி வைத்திருக்கும் நிலத்தின் அளவைப் போல 250 மடங்கு அதிகம். ஆஸ்திரேலியாவிலோ இது 4,000 மடங்கு அதிகம்! எனவே அமெரிக்காவிலும் இதர மேற்கத்திய நாடுகளிலும் பண்ணை வீட்டிலிருந்து சூப்பர் மார்க்கெட்டுக்கு வால்மார்ட் நிறுவனம் வாங்கிப்போகும் “”கொள்முதல் பாணி” இந்தியாவுக்கு ஒத்துவராது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.இந்தியாவில் கிராமங்களில் விளையும் உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் போன்றவை எப்படி சந்தைக்கு வருகின்றன, எப்படி கிராமங்களிலேயே வாங்கி உண்ணப்படுகின்றன என்பது தெரியாமல், இந்தியாவில் மேலைநாட்டுக் கொள்முதல் பாணியை அறிமுகப்படுத்த நினைக்கிறார்கள்.வால்மார்ட் போன்ற சூப்பர்மார்க்கெட் நிறுவனங்களை அனுமதித்தால் இடைத்தரகர்கள் ஒழிக்கப்பட்டுவிடுவார்கள் என்ற வாதம் சரியானதல்ல; இடைத் தரகர்கள் மட்டும் அல்ல, சிறு விவசாயிகளும் சேர்த்தே ஒழிக்கப்பட்டுவிடுவார்கள் என்பதுதான் உண்மை. அது மட்டும் அல்ல, வேறு எதையெல்லாம் அந்தக் “கொள்முதல் பாணி’ ஒழிக்கும் என்பதைச் சொன்னால் அதிர்ச்சியாக இருக்கும்.


விவசாய வேலைகள் அனைத்துமே ஒப்பந்த அடிப்படையில் இனி மேற்கொள்ளப்படும். மிகப்பெரிய நிறுவனம்தான் ஆள்களை வேலைக்கு வைத்துக்கொள்ளும் அல்லது நீக்கும். பெரிய நிலப்பரப்பாக நிலங்கள் இணைக்கப்பட்டு இயந்திரங்கள் பெருமளவில் பயன்படுத்தப்படும். பாரம்பரிய விவசாயத் தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள்.நிலங்களை அதிக பரப்பளவில் வைத்திருப்பவர்களால்தான் உற்பத்தியையும் உற்பத்தித் திறனையும் அதிகமாக வழங்க முடியும் என்பது உலக அளவிலான ஆய்வுகளின் முடிவு. ஆனால் இந்தியாவில் அதுவே தலைகீழாக இருக்கிறது.மொத்த சாகுபடிப் பரப்பில் 34% நிலத்தை சிறு, குறு விவசாயிகள்தான் பயிர் செய்கின்றனர். ஆனால், நாட்டின் மொத்த உணவு தானிய உற்பத்தியில் இவர்களுடைய பங்களிப்பு 41% ஆக இருக்கிறது. அவர்களுடைய உற்பத்தித்திறன் மற்றவர்களைவிட 33% அதிகமாக இருக்கிறது.சிறு நிலங்களையெல்லாம் சேர்த்து பெரு நிலப்பரப்புகளாகவும் பெரும் பண்ணைகளாகவும் மாற்றினால் உடனடியாக தேசிய உணவு உற்பத்தியில் 7% குறைந்துவிடும்! உணவு தானியம் மட்டும் அல்ல பால் உற்பத்தியும் அடியோடு பாதிக்கப்படும். கிராமப்புறங்களில் கிடைக்கும் 1,009 லட்சம் டன் பாலில் பெரும்பகுதிக்கு சிறு, குறு விவசாயிகள்தான் காரணம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.கிராமப்புறங்களில் உள்ள மக்கள் தொகையில் பாதியைக் குறைக்காமல் சிறு, குறு விவசாயத்தை ஒழித்துவிட முடியாது. திட்டக்குழு நியமித்த செயல்திட்டக் குழு தனது அறிக்கையின் இறுதியில் இவ்வாறு தெரிவிக்கிறது: “”சிறு, குறு விவசாயிகள் இந்தியாவில் இன்னும் நெடுங்காலத்துக்கு இருக்கப் போவது நிச்சயம்.அதே சமயம் அவர்கள் ஏராளமான சோதனைகளை (அரசின் முடிவுகளால்தான்) சந்திக்கப் போவதும் நிச்சயம்; எனவே சிறு, குறு விவசாயிகளுக்கு என்ன நேரப் போகிறதோ அதைப் பொருத்துத்தான் கிராமப் பொருளாதாரத்தின் எதிர்காலமும் அமையும்”.இதைவிட முக்கியம், சிறு – குறு விவசாயிகள் எதை உற்பத்தி செய்கிறார்கள், எதை உண்கிறார்கள், எதை மற்ற விவசாயத் தொழிலாளர்களுக்குக் கொடுக்கிறார்கள் என்பது. சிறு, குறு விவசாயிகளிடம் வியாபாரிகளுக்கு விற்பதற்காக உபரி உற்பத்தி ஏதும் இல்லை. இந்த நிலையில், வால்மார்ட் வகையறாக்கள் கிராமங்களில் நுழைந்தால், அவர்களுடைய உணவுப் பாதுகாப்பே பாதிக்கப்பட்டு விடும்.


கிராமப்புற இந்தியா குறித்து பெரும்பாலானவர்களுக்குத் தெரியாத உண்மை என்ன என்றால், இந்தியாவில் விளையும் உணவுப் பொருள்களில் 60%-க்கும் மேல் வியாபார ரீதியாக சந்தைக்கு வருவதில்லை, அவை கிராமங்களுக்குள்ளேயே விநியோகிக்கப்பட்டு உண்ணப்படுகிறது என்பது. சிறு விவசாயிகள் இவற்றைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள். தங்களுடைய நுகர்வுக்காகவும் தங்களிடம் உள்ள விவசாயத் தொழிலாளர்களுக்குக் கூலிக்குப் பதில் கொடுப்பதற்காகவும்தான் இதை இப்படிப் பாதுகாக்கிறார்கள்.இது மனிதர்களுக்கு மட்டும் அல்ல, விவசாயிகளின் உற்ற நண்பர்களான கால்நடைகளுக்கும் கூட உணவாகப் பயன்படுகிறது. மிகவும் அவசியப்படும் நேரத்தில் கிராமத்தில் பிறருக்கும் விற்கப்படுகிறது.இந்த 60 சதவீதத்தில் ஒரு சிறு பகுதியையாவது வால்மார்ட் நிறுவனம் கொள்முதல் செய்கிறது என்று வைத்துக் கொண்டாலும்கூட, “”நகர்ப்புற விலை நிர்ணயம்” கிராமங்களிலும் நுழைகிறது என்று பொருள்.நகரில் விற்கும் விலைக்கு கிராமங்களில் உள்ள சிறு, குறு விவசாயிகளும் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களும் வாங்கிச் சாப்பிட முடியுமா?அப்படியொரு நிலை வந்தால் கொங்கணப் பிரதேசத்தில் பரவலாக விளையும் அல்போன்சா ரக மாம்பழங்களுக்கு ஏற்பட்ட நிலையும் கேரளத்தில் மீன்களுக்கு ஏற்பட்ட நிலையும்தான் விவசாயத் தொழிலாளர்களுக்கும் ஏழைகளுக்கும் ஏற்படும்.இப்போதெல்லாம், அல்போன்சா ரக மாம்பழங்களைக் கண்ணால்தான் கொங்கணப் பகுதி மக்கள் பார்க்கின்றனரே தவிர சாப்பிடுவதில்லை. ஏற்றுமதிக்கே அனைத்தையும் கொடுத்துவிட்டு கிடைக்கும் ரூபாயில் நகர்ப்புறங்களிலிருந்து தங்களுக்கு வேண்டியதை வாங்கிக் கொள்கின்றனர்.கேரள மீனவர்கள் மீன்களை அதிக விலைக்கு ஏற்றுமதி செய்துவிட்டு கிடைக்கும் பணத்தில் வெளிநாட்டு மதுரகங்களை வாங்கிச் சாப்பிடுகின்றனர். காரணம், சொந்த ஊரில் யாருக்கும் அந்த மீன் மலிவு விலையில் கிடைப்பதில்லை.சில்லறை விற்பனையில் அன்னிய நேரடி முதலீடு என்பது சிறு, குறு விவசாயிகளின் உணவுப் பாதுகாப்பை இப்படித்தான் ஆபத்தில் ஆழ்த்துகிறது. இந்திய மக்கள்தொகையில் மூன்றில் இரு மடங்கு என்று கருதப்படும் விவசாயத் தொழிலாளர்களுக்கு, அவர்கள் விளைவிக்கும் பொருள்களே கிடைக்காத நிலையும் அதிக விலை கொடுத்துத்தான் சூப்பர் மார்க்கெட்டுகளில் வாங்க வேண்டும் என்ற நிலையும் ஏற்படும்!இது ஒருபுறம் இருக்க எஞ்சிய 40% உணவு தானியங்கள் எப்படி கிராமங்களிலும் பிற பகுதிகளிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றன? எஞ்சியுள்ள 40% உணவு தானியங்களில் சுமார் 35% அளவு, அதாவது பத்து டன்களில் 9 டன் அளவுக்கு தினசரி, வார கிராமச் சந்தைகள், திருவிழாச் சந்தைகள் மூலம்தான் விற்கப்படுகின்றன.


கிராமங்களில் நடைபெறும் சந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 47,000. எஞ்சிய 5% உணவு தானியங்கள் மட்டுமே அரசின் கண்காணிப்பில் செயல்படும் 6,359 மொத்தவிலை மண்டிகளுக்கு விற்பனைக்கு வருகின்றன.இந்த இடத்தில்தான் நாட்டின் உபரி உணவு தானிய உற்பத்தி நவீனச் சந்தை அமைப்பு மூலம் விற்கப்படுகிறது. இந்த உணவு தானியத்தைத்தான் அரசு பொது விநியோகத்துக்காக வாங்கி, பத்திரப்படுத்துகிறது. மொத்த விளைச்சலில் எந்த அளவுக்கு பொதுச் சந்தைக்கு வருகிறது என்று பாருங்கள்.வார, தினச் சந்தைகள் எப்படிச் செயல்படுகின்றன? முக்கால்வாசிச் சந்தைகள் வாரத்தில் ஒரு முறை கூடுகின்றன. ஐந்தில் ஒரு பகுதி வாரத்தில் இருமுறை கூடுகின்றன. இருபதில் ஒரு மடங்கு தினசரி கூடுகின்றன.ஒரு சந்தை, சுமார் 14 கிராமங்களுக்குப் பொருள்களை விற்கிறது. எல்லாச் சந்தைகளும் சேர்ந்து 6.58 லட்சம் இந்தியக் கிராமங்களுக்குத் தேவைப்படும் உணவு தானியங்களையும் இதர வேளாண் பொருள்களையும் விற்கின்றன.மூன்றில் இரு மடங்கு சந்தைகள் கிராமங்களிலிருந்து அதிகபட்சம் 16 கிலோ மீட்டர் தொலைவில் நடக்கின்றன. நாலில் ஒரு பகுதி சந்தைகள் 6 கிலோ மீட்டர் முதல் 15 கிலோ மீட்டர் தொலைவுக்குள் நடைபெறுகின்றன. பத்தில் ஒரு பகுதி சந்தைகள் 5 கிலோமீட்டர் தொலைவுக்குள் நடக்கின்றன.மூன்றில் இரு மடங்குக்கும் மேற்பட்ட மக்கள், சந்தைகளுக்கு நடந்து சென்றே பொருள்களை வாங்குகின்றனர். மூன்றில் ஒரு பங்கு மக்கள் சைக்கிளில் சென்று வாங்குகின்றனர். மற்றவர்கள் மாட்டு வண்டிகளிலும், மோட்டார் பொருத்தப்பட்ட வாகனங்களிலும் வந்து வாங்குகின்றனர்.இந்த சந்தைகளுக்கு வரும் மக்கள் வெறும் சரக்குகளை வாங்கிப் போக மட்டும் வருவதில்லை. சமூக, கலாசார பரிவர்த்தனைகளுக்காகவும் வருகின்றனர். இங்குதான் கொடுக்கல், வாங்கல் பிரச்னைகள் பேசித்தீர்க்கப்படுகின்றன. வாய்க்கால் வரப்பு தகராறுகளும் சுமுகமாக முடிகின்றன. தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் இங்கேயே வரன் பார்ப்பதும் உண்டு. வீடு வாங்குவது, வாகனம் வாங்குவது போன்ற விஷயங்களையும் இங்கேயே பேசி முடிக்கின்றனர்.கால்நடைகளை வாங்குவது விற்பது, அவற்றுக்குத் தேவையான உணவு, மருந்து ஆகியவற்றை வாங்குவது போன்றவற்றுக்கும், உழவுக் கருவிகள் வாங்கவும் இந்த சந்தைகளைத்தான் பயன்படுத்துகின்றனர்.பாத்திரங்களுக்குக் கலாய் பூசுவது, விவசாயக் கருவிகளைப் பழுதுபார்ப்பது, கைப்பிடி போடுவது, சாணை பிடிப்பது என்று எல்லாமே இந்தச் சந்தைகளில்தான்.அடுத்து என்ன பயிர்ச் சாகுபடி செய்யலாம், அதற்குத் தேவைப்படும் பணத்துக்கு என்ன செய்யலாம் என்றுகூட இங்குதான் பேசி முடிவு செய்கின்றனர்.


விவசாயிகள் அடுத்து என்ன செய்ய வேண்டும் அல்லது செய்யக்கூடாது என்று தங்கள் அலுவலகங்களுக்கு வந்து கேட்க வேண்டும் என்று கூறாமல் அரசே இந்த சந்தைகளுக்குச் சென்று விவசாயிகளைச் சந்தித்துத் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்று திட்டக் கமிஷனின் செயல்திட்டக்குழு பரிந்துரை செய்துள்ளது.திட்டக்கமிஷனின் செயல்திட்டக்குழு தங்களைப் போகச் சொன்ன இடத்துக்கு, வால்மார்ட் போன்ற அன்னிய நிறுவனங்கள் போக வேண்டும் என்று எதிர்பார்க்கிறது இந்திய அரசு. கிராமப்புற இந்தியா, மத்திய அரசிடமிருந்து அந்த அளவுக்கு அன்னியப்பட்டுப் போயிருக்கிறது. அரசு அறிவிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை என்ன என்று நாட்டின் விவசாயிகளில் 70 சதவீதம் பேர் இன்னமும் கேள்விப்பட்டதுகூட இல்லை என்று தேசிய சாம்பிள் சர்வே (என்.எஸ்.எஸ்.) அமைப்பு தெரிவிக்கிறது.அப்படி அதைக் கேள்விப்பட்ட 30 சதவீதம் பேரிலும் 81 சதவீதம் பேருக்கு அதை எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்று தெரியவில்லையாம். காரணம், குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது அரசு நடத்தும் கொள்முதல் நிலையங்களில்தான் அமலில் இருக்கிறதே தவிர, விவசாயிகளுக்கு நன்கு பரிச்சயமான சந்தைகளில் அல்ல.எனவேதான், குறைந்தபட்ச ஆதரவு விலை என்றாலே என்னவென்று தெரியாத விவசாயிகள், எதிர்கால சந்தையை எப்படித் தங்கள் நலனுக்கேற்ப பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நாடாளுமன்ற நிலைக்குழு சரியாகவே கேட்டிருக்கிறது.இதற்குப் பதில் சொல்ல முடியாத அரசு, உணவு தானியத்தில் “எதிர்காலத்துக்கான ஊக பேரம் கூடாது” என்று மட்டும் தடை செய்திருக்கிறது, அவ்வளவே. அந்த லட்சணத்தில்தான் இருக்கிறது நமது மத்திய ஆட்சியாளர்களின் இந்திய கிராமங்கள் பற்றிய நுண்ணறிவு. என்ன செய்வது மண்ணின் மணம் தெரியாமல் ஹார்வேர்ட், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகங்களில் படித்துவிட்டு வந்த பொருளாதார நிபுணர்களின் திட்டமிடலின் லட்சணம் அப்படி.


பின்குறிப்பு: சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது என்ற முடிவால் பாரம்பரியமாக சமுதாய மக்களால் நடத்தப்படும் 12 லட்சம் சில்லறைக் கடைகளை ஆபத்தில் ஆழ்த்தியிருக்கிறது மத்திய அரசு; அது மட்டும் அல்ல, கிராமப்புற உணவுப் பாதுகாப்பு வளையத்தையும் ஆபத்தில் சிக்க வைத்திருக்கிறது. 2012-ம் ஆண்டு தொடங்கி எதிர்வரும் காலத்துக்கு ஐக்கிய முன்னணி அரசு இந்த நாட்டுக்கு அளித்திருக்கும் கொடை இதுதான். 

நன்றி தினமணி 


இக்கட்டுரை தினமணி நாளிதழில் நவம்பர் 26 அன்று பிரசுரம் செய்யப்பட்டது.




ஈழம் இன்று - நடுங்கும் ராஜபக்ஷே!

 
ழம்... இந்த நூற்றாண்டின் சொல்லி மாளாத சோகம்!இரண்டரை ஆண்டுகளைக் கடந்த பிறகும், மரண பீதி இன்னும் விலகவில்லை. கடவுளின் வரைபடத்தில்கூட இல்லாத தேசமாகிவிட்டது. சிதைக்கப்பட்ட இடங்களின் சிதிலங்கள் மீது சிமென்ட் பூசி மறைக்கும் காரியங்கள் மட்டும்தான் இந்த 30 மாதங்களில் நடந்துள்ளன. மிச்சம் இருப்பவர்களை உரிமை பெற்றவர் களாக அல்ல... உயிர் உள்ளவர்களாகக்கூட மதிக்க இலங்கை அரசு தயாராக இல்லை என்பதே உலகத்துக்கான சேதி!
 
இன்னமும் முறியாத முள் வேலி!
 
'விடுதலைப் புலிகள் மட்டும் அல்ல... மொத்தத் தமிழர்களும் போராளிகள்தான். அவர்களை வெளியே விடுவது ஆபத்து!’ என்று அனைத்துத் தமிழர்களையும் நடுக் காட்டுக்குள் திறந்தவெளிச் சிறைவைத்து... சுற்றிலும் இரும்பு முள் வேலி அமைத்தார் கள். அதில் சுமார் 3 லட்சம் தமிழர்கள் அடைக்கப்பட்டார்கள். இப்படி ஒரு மனித உரிமை மீறல் உலகத்தில் எங்கும் நடந்தது இல்லை என்று ஐ.நா. சபை உள்ளிட்ட அனைத்து நாடுகளும் திரும்பத் திரும்பச் சொல்லி, ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்குப் பொருளாதாரத் தடை விதிக்கும் சூழ்நிலை வந்த பிறகுதான்... வயதானவர்கள், பெண்கள், குழந்தைகளை வெளியே விட்டார்கள். முள் வேலிக்குள் இருப்பவர்களுக்கும் சரியான சாப்பாடு, குடிக்கத் தண்ணீர்கூடக் கொடுக்காமல்விட்டதில் பலரும் நொந்தே செத்துப்போனார்கள். கையில் பணமும் நகையும் வைத்திருந்தவர்கள், அங்கே இருந்த சிங்கள அதிகாரிகளுக்கு அதைக் கொடுத்து வெளி நாடுகளுக்குத் தப்பித்தார்கள். இப்படிப் பலரும், பல வழிகளில் தப்பியது போக.... இன்னமும் கதிர்காமர் மற்றும் ஆனந்த குமாரசாமி ஆகிய இரண்டு முகாம்கள் இருக்கின்றன. கதிர்காமர் முகாமில் 1,017 குடும்பங்களும் ஆனந்த குமாரசாமி முகாமில் 1,262 குடும்பங்களும் என, மொத்தம் 7,540 பேர் மட்டுமே இருப்பதாகக் கடந்த வாரம் இலங்கை நாடாளுமன்றத்தில் ஒரு தகவல் சொல்லப்பட்டுள்ளது.
 

முகாமைவிட்டு வெளியே வந்து தங்களது சொந்த ஊருக்குச் சென்ற பலருக்கும் அவர்களது வீடு இருந்த சுவடே இல்லை. மரங்கள் உள்ள இடத்தில் டென்ட் போட்டுத் தங்கி இருக்கிறார்கள். அவர்களது சொந்த நிலம் எங்கே என்று கண்டுபிடிக்கவே முடியவில்லை. 'அரசாங்கம் எடுத்துக் கொண்டுவிட்டது. பழைய பத்திரங்கள் செல்லாது!’ என்று சொல்லிவிட்டார்கள். மீன் பிடிக்கக் கடற்கரைக்கும் செல்ல முடியாது. இடிபாடுகள்கொண்ட பழைய கட்டடங்களையும் தெருக்களையும் பார்த்த படியே படுத்துக்கிடக்கின்றன தமிழ்க் குடும்பங்கள். 80 ஆயிரம் விதவைகள், 5,000 உடல் ஊனமுற்றோர் அநாதைகளாக அலைகிறார்கள். எங்கள் குழந்தைகளைக் காணவில்லை என்று குவிந்த புகார்களில் இருந்து 49 குழந்தைகள் மட்டும் மீட்கப்பட்டு உள்ளன. 50 ஆயிரம் வீடுகள் கட்ட இந்தியா கொடுத்த கோடிக்கணக்கான பணத்தைவைத்து இதுவரை 50 வீடுகள்கூடக் கட்டித் தரவில்லை என்கிறார் எம்.பி-யான சீ.யோகேஸ்வரன். 'எங்களை யாரும் கேள்வியே கேட்க முடியாது’ என்பதுதான் ராஜபக்ஷே, தமிழர்களுக்குச் சொல்லும் ஒரு வரிச் செய்தி!

எங்கும் ராணுவமயம்! 
 
''வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ராணுவத்தின் ஆட்சிதான் நடக்கிறது!'' என்று தமிழ் எம்.பி-க்கள் கூட்டமைப்பு சொல்கிறது. அதை உறுதிப்படுத்துவது மாதிரியே திரும்பிய பக்கம் எல்லாம் ராணுவம்... ராணுவம்... ராணுவம் மட்டுமே!''போர் முடிந்துவிட்டதே... அப்புறம் எதற்கு ராணுவத்தினரை இந்த அளவுக்கு நிறுத்திவைத்து இருக்கிறீர்கள்? அவர்களை வாபஸ் வாங்க வேண்டியதுதானே?'' என்று தன்னைச் சந்தித்த இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷேவிடம், ஐக்கிய நாடுகள் அவையின் செயலாளர் பான் கீ மூன் கேட்டார். ''அவர்கள்தான் இப்போது தமிழர்களுக்குச் சேவை செய்கிறார்கள். அரசாங்கத்தின் அனைத்துத் திட்டங்களை யும் அமல்படுத்த அவர்களைத்தான் பயன் படுத்துகிறோம்!'' என்றார் ராஜபக்ஷே. துப்பாக்கியை வைத்துக்கொண்டு சமூக சேவை செய்பவர்களை இலங்கையில்தான் பார்க்க முடியும். வடக்கில் போர் முடிந்து இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன. கிழக்கில் போர் முடிந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், யாழ்ப்பாணத்தில் போர் முடிந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்படிப்பட்ட யாழ்ப்பாணத்திலேயே இன்னும் 44 ஆயிரம் ராணுவ வீரர்கள் இருப்பதாக, அந்த மாவட்டத்து எம்.பி. சொல்கிறார். அதன் மொத்த மக்கள் தொகையே 6 லட்சம்தான்!
 
இலங்கை முழுவதும் ஆறு ராணுவப் படைத்தளங்கள் உள்ளன. அதில் நான்கு, தமிழர் பகுதிகளான யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வன்னி ஆகிய இடங்களில் உள்ளன. ராணுவத்தின் 17 டிவிஷன்கள் அங்கு உள்ளன. சிங்களப் பகுதியில் நான்கு டிவிஷன்கள் மட்டுமே இருக்கின்றன. 'இன்னமும் தமிழ் மக்கள் மத்தியில் பதற்றத்தை உருவாக்குவதற்காகவே இவர்களை நிறுத்திவைத்து இருக்கிறார்கள்!’ என்று தமிழ் எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டுகிறார்கள்!
 
சிங்களமயமாகும் தமிழ் நிலம்!
 
''வடக்கும் கிழக்கும் தமிழர் பெரும்பான்மையாக வாழும் இடம். எனவே, இது தமிழர் தாயகம். இவை இரண்டையும் இணைத்து தமிழ் ஈழம் அமைப்போம்!'' என்பதுதான் தமிழர்கள் இதுநாள் வரை வைத்த கோரிக்கை. வடக்கிலும் கிழக்கிலும் சிங்களவர்களைப் பெரும்பான்மை ஆக்கிவிட்டால்? தமிழர் தாயகம், இணைப்பு, தமிழ் ஈழம் என்ற கோரிக்கையே செல்லாததாக ஆகிவிடும் அல்லவா? ராஜபக்ஷேவின் திட்டம் இதுதான். இப்போது தமிழர் பகுதியில் இதுதான் நடக்கிறது.தமிழர் கையில் இருந்த நிலங்களை வித்தியாசமான தந்திரத்தின் மூலம் பறிக்கிறார்கள். 'ஊர்க் காவல் படைக்கு இடம் வேண்டும்’, 'ராணுவத்துக்கு இடம் வேண்டும்’ என்று சொல்லி, மொத்தமாக அரசாங்கம் எடுத்துக்கொள்கிறதாம். பிறகு, இந்த இடங் கள் ராணுவ வீரர்களுக்குத் தரப்படுகின்றன. அவர்கள் சிங்கள மக்களுக்கு விற்பனை செய்கிறார்கள். பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இந்த மாதிரி கையகப்படுத்தப்பட்டு சிங்களவர்களுக்குத் தாரைவார்க்கப்படுகின்றன. ''புதிய முகாம் அமைத்தல், ராணுவத்துக்கான இடவசதிகள், ராணுவத்தின் தேவைகள் ஆகியவற்றுக்காக காணிகளை எடுப்பது என இடங்கள் பறிக்கப்படுகின்றன. மக்கள் தங்களது சொந்த இடங்களுக்குச் சென்று தங்களது வாழ்க்கையைத் தொடங்க முடியாமல், அவர்களது வாழ்க்கையே ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டது!'' என்கிறார் தமிழ்த் தலைவர்களில் ஒருவரான இரா.சம்பந்தம். இதனால், ஓமந்தை என்ற இடம் 'ஓமந்த’ என்ற சிங்கள உச்சரிப்புடன் சொல்லப்படுகிறது. கொச்சன்குளம் என்ற ஊர் 'கால பொவசெவெள’ என்று மாற்றப்பட்டு விட்டது. தமிழில் எழுதப்பட்ட பலகை கள் அழிக்கப்பட்டு... சிங்களம், ஆங்கிலத் தில் எழுதப்படுகின்றன. கிளிநொச்சியில் பிரதான தெருவுக்கு 'மகிந்த ராஜபக்ஷே மாவத்தை’ என்று சூட்டப்பட்டு உள்ளது. இந்து, கிறிஸ்துவக் கோயில்கள் இடிந்த நிலையில் கிடக்க... புத்த விகாரைகள் புத்துணர்வு பெற்று எழுகின்றன!
 
நடுங்கும் ராஜபக்ஷே!
 
''இலங்கைக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தொடர்ந்து அச்சுறுத்தல் இருக்கிறது. எந்த நாட்டுக்குச் சென்றாலும் என் மீது தாக்குதல் நடப்பதற்கான சூழல் இருக்கிறது. அதனால்தான் ராணுவ பலத்தை நான் அதிகப்படுத்தி வருகிறேன்!'' என்று கொழும்பு கல்லூரி ஒன்றின் பட்டமளிப்பு விழாவில் அதிபர் ராஜபக்ஷே பேசும்போது சொன்னார். இலங்கைப் பகுதியில் அதிக அளவில் விழாக்களில் அவர் பங்கேற்பது இல்லை. பெரும்பாலும் அலரி மாளிகை விழாக்களில் மட்டுமே கலந்துகொள்கிறார். லண்டனுக்கு அவர் சென்றிருந்தபோது புலம்பெயர் ஈழத் தமிழர்கள், அவர் தங்கி இருந்த இடத்தைச் சுற்றி வளைத்தபோது 'எப்படித் தப்பினார்?’ என்று வெளியே தெரியாத அளவுக்கு கொழும்பு வந்து குதித்தார். இதன் பிறகு அவரது வெளிப் பயணங்கள் பலதும் தள்ளிவைக்கப்பட்டன!அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் ராஜபக்ஷே மீது 'போர்க் குற்றவாளி’ என்று குற்றம்சாட்டும்  வழக்குகள் பாய்ந்துவருகின்றன. இதனாலும் பயணங்கள் தள்ளிவைக்கப்படுகின்றன. ராஜபக்ஷேவுக்கு அடுத்த நிலையில் அவரது தம்பி பசில் வருவாரா அல்லது அவரது மகன் நிமல் வருவாரா என்ற உள்வீட்டுக் குழப்பம் இப்போதே தொடங்கிவிட்டது. தனது மகனைக் கொண்டுவர வேண்டும் என்பதில் மகிந்தாவின் மனைவி ஆர்வமாக இருக்கிறார். விடுதலைப் புலிகள் பேரால் கூறப்படும் ஆபத்து ஒரு பக்கம் இருந்தாலும், நிதி நெருக்கடி காரணமாக இலங்கை அதிகப்படியான கடன் சுமைகளில் மூழ்கிவருவதும்... இதனால் பொருட்களின் விலை அதிகமாகி வருவதும் சிங்கள மக்கள் மத்தியில் கடும் கோபத்தை உருவாக்கி உள்ளன. என்ன ஆனாலும் பரவாயில்லை என்று ராணுவத்துக்கு மட்டும் 229.9 மில்லி யன்  ஒதுக்கிவிட்டு உட்கார்ந்துவிட்டார் ராஜபக்ஷே. நாடாளுமன்றத்தில் இந்த பட்ஜெட் மீதான விவாதம் நடந்துகொண்டு இருந்தபோது, பார்வையாளர் மாடத்தில் இருந்து ஒருவர் தண்ணீர் பாக்கெட்டைத் தூக்கிப் போட... வெடிகுண்டு விழுந்ததைப் போல அத்தனை பேரும் பதறிப்போனார் கள். அனைவரையும்விட அதிகமாகப் பதறியவர் ராஜபக்ஷே!
 
கண்துடைப்பு கமிஷன்!   
 
''ராஜபக்ஷே மீது போர்க் குற்ற வழக்கைப் பதிவுசெய்துக் கைது செய்'' என்பதுதான் உலகெங்கும் வாழும் தமிழர்களின் குரல். இதற்கு அவர் சொன்ன பதில், ''இலங்கையில் போர் விதிமீறல் நடந்திருக்கிறதா என்று நாங்களே ஆய்வு நடத்தி, அப்படித் தவறு செய்தவர்களைக் கண்டிப்போம்!'' என்பது. அதாவது, இலங்கை ராணுவத்தினர் செய்த தவறுகளை இலங்கை அரசே விசாரிக்கும் காமெடி இது!'கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு’ என்று இதற்குப் பெயர். 338 பக்கம்கொண்ட இந்தக் குழுவினரின் அறிக்கை ராஜபக்ஷேவிடம் கடந்த 20-ம் தேதி தரப்பட்டது. ''மொத்த சம்பவங்களைப் பூசிமெழுகும் காரியம் இது'' என்று கொழும்பு பத்திரிகையாளர்கள் சொல்கிறார்கள். சிங்கள மொழி பேசியபடியே தமிழ்ப் பெண்களைக் கற்பழிக்கும் காட்சியும்... தமிழ் இளைஞர்களை ராணுவத்தினர் நிர்வாணமாக்கி, கண்ணைக் கட்டி சுட்டுக் கொல்லும் காட்சியும்... சேனல் 4 தொலைக்காட்சியில் ஒளி பரப்பானது. உலகத்துக்கு உண்மையைச் சொன்ன ஒரு சில நிமிடங்கள் அவைதான். அந்தக் காட்சியே பொய்யா னது என்று இந்த அறிக்கை சொல்கிறதாம். ''ராணுவத் துக்கு வேறு வழி இல்லை. பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டும் என்று ராணுவம் நினைத்திருந்தால், தீவிரவாதிகளது கை ஓங்கி இருக்கும்!'' என்று காரணமும் சொல்கிறதாம். அதையும் மீறிச் சில சம்பவங்கள் நடந்திருந்தால், அதற்கு சரத் ஃபொன்சேகாவும் அவரது ஆதரவு ராணுவ அதிகாரிகள் சிலரும்தான் காரணம் என்று கைகாட்டுகிறதாம் இந்த அறிக்கை. நாடாளுமன்றத்தில் இன்னமும் தாக்கல் செய்யப்படாத அந்த அறிக்கையின் சில தகவல்களை சிங்களப் பத்திரிகைகள் வெளியிட ஆரம்பித்து உள்ளன. ''இந்த அறிக்கையை ஏற்க முடியாது!'' என்று சிங்களக் கட்சிகளே சொல்ல ஆரம்பித்துஉள்ளன!
 
எப்படி இருக்கிறார் ஃபொன்சேகா?
 
மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற சரத் ஃபொன்சேகா, கொழும்பு வெலிக்கடைச் சிறையில் இருக்கிறார். அவரது விடுதலைக்காக எடுக்கப்பட்ட அத்தனை முயற்சிகளும் பொய்த்துவிட்டன. தனக்கு விதிக்கப்பட்ட மூன்று ஆண்டுத் தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்தார் ஃபொன்சேகா. யார் இந்தத் தண்டனையைக் கொடுத்தாரோ... அதே நீதிபதிக்குப் பதவி உயர்வைக் கொடுத்து, அந்த அப்பீல் மனுவையும் அவரையே விசாரிக்கச் சொல்லிவிட்டார் ராஜபக்ஷே. பிரிந்த இந்த இரண்டு மாஜி நண்பர்களுக்குள் நடக்கும் அரசியல்தான் இன்றைய இலங்கை அரசியல். ''என் கணவரைக் காப்பாற்றுங்கள்!'' என்று ஃபொன்சேகாவின் மனைவி தான் தினமும் அறிக்கை விடுகிறார். ஃபொன் சேகாவை எப்போது எல்லாம் மருத்துவமனையில் காட்ட வேண்டுமோ... அப்போது எல்லாம் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி, அங்கு அழைத்துச் செல்ல மறுத்துவிடுகிறார்களாம். இந்த நிலையில், ஃபொன்சேகாவின் விடுதலைக்காக சிங்க ளக் கட்சிகளை ஒன்றுதிரட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே குரல் கொடுத்துள்ளார். உடனே, ரணில் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளைச் (ஹோமோ செக்ஸ் மாதிரியான புகார்கள்) சொல்லிக் கேவலப்படுத்தும் காரியங்கள் தொடங்கி இருக்கின்றன. 'ஃபொன்சேகா உயிரோடு வெளியே வர மாட்டார்!’ என்கிற அளவுக்கு அவருக்கு நெருக்கடிகள்ஏற்பட்டு விட்டனவாம்!
 
பேசிப்பார்க்கும் தமிழ் எம்.பி-க்கள்!
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் அணி திரண்டுள்ள தமிழ் எம்.பி-க்கள் மட்டும்தான் ஈழத் தமிழர்களுக்காக அந்த மண்ணில் இருந்தபடி தயங்காமல் பேசுகிறவர்கள். நாடாளுமன்றத்திலும் இவர்கள் பேச்சு நம்பிக்கை தருவதாக உள்ளது. பயன் இருக்கிறதோ இல்லையோ, இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் இருக்கிறார்கள். இதுவரை 13 முறை இவர்கள் பேசி இருக்கிறார்கள். டிசம்பர் மாதம் மட்டும் நான்கு நாட்கள் பேசுவதற்கான தேதி குறிக்கப்பட்டுள்ளது. மீள் குடியமர்வு, புனர்வாழ்வு, வீட்டுவசதி, தொழில்வாய்ப்பு, அத்தியாவசியத் தேவைகள் ஆகிய கோரிக்கைகளை இவர்கள் முன்வைப்பதோடு, அரசியல் தீர்வையும் வலியுறுத்துகிறார்கள். ''நாங்கள் எங்களுக்குத் தேவையானதைச் சொல்லிவிட்டோம். அரசு இதுவரை எந்தப் பதிலும் சொல்லவில்லை!'' என்கிறார் சம்பந்தம்.'இந்தப் பேச்சுவார்த்தையில் நாங்கள் நிதானமாகச் செயல்படுவோம். எமது மக்களுக்கு நாங்கள் துரோகம் செய்ய மாட்டோம். விட்டுக்கொடுக்க முடியாத விடயங்களை விட்டுத்தர மாட்டோம்!'' என்கிறார் சம்பந்தம். இன்னும் எத்தனை சுற்று பேசுவார்கள் எனப் பார்ப்போம்!
 
தமிழர்களின் மௌன எழுச்சி!
 
தமிழர்கள் முதலில் அடி வாங்கியதும், திருப்பி அடிக்க ஆரம்பித்ததும் யாழ்ப்பாணம்தான். எல்லாவற்றுக்கும் ஆரம்பம் அதுதான். இப்போது அங்கும் சில ஒளி மின்னல்கள் கடந்த வாரத்தில் தெரிந்தன. உலகம் முழுவதும் கொண்டாடப்படும் நவம்பர் 27 மாவீரர் நாளுக்கான நிகழ்வாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு சுவரொட்டி ஒட்டப்பட்டதாம்.'சத்திய லட்சிய வேள்வியில் தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களின் சத்திய வழியில் பயணித்து, சுதந்திரத் தமிழீழத்தை வென்றெடுக்க உறுதி பூணுவோம்!’  என்று எழுதப்பட்டதைப் பார்த்து, தமிழ் மாணவர் கள் உணர்ச்சி அடைய... அடுத்த சில நிமிடங்களிலேயே ஆறு பைக்குகளில் முகமூடி அணிந்து (ராணுவத்தினர் என்று சொல்லப்படுகிறது!) வந்தவர்கள் அந்த சுவரொட்டியைக் கிழித்துச் சென்றுவிட்டார்களாம். கானா நகர் மணற்காடு முத்துமாரி அம்பாள் ஆலயத்துக்கும் பண்டத்தரிப்பான் குளம் ஸ்ரீசுந்தரேசன் பெருமாள் கோயிலுக்கும் வந்த கடற்படை வீரர்கள், 'இந்த ஒரு வாரத்துக்கு கோயிலில் மணி அடிக்கக் கூடாது!’ என்று உத்தரவிட்டார்களாம்.
 
மீறி ஒலித்திருக்கிறது 'மாவீரர்’ மணிஓசை!    
 
 
விகடன்