Search This Blog

Tuesday, November 22, 2011

சமையல் கேஸ் தட்டுப்பாடு...சுலபமாக சமாளிக்கும் சூத்திரங்கள் !

 
'சிலிண்டர் தட்டுப்பாடு'... சமீப நாட்களாக நம் தினசரி பிரச்னையாகி பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. சிலிண்டர் கிடைக்காமலிருப்பது... கிடைப்பதற்கு அநியாயத்துக்கு தாமதம் ஆவது... என்பது போன்ற காரணங்களால், கிச்சன் சுமையும், டென்ஷனும் கூடிப்போக, 'என்னதான் செய்றது..?’ என்று விரக்தியில் இருக்கிறார்கள் மக்கள்.
 
''ஏன் இந்த தட்டுப்பாடு?''  
 
''கேஸ் நிரப்பும் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டது. தொடர்ந்து பெய்த மழையும் ஒரு காரணம்". 
 
தீர்வு :
 
''விலை உயர்வு, தட்டுப்பாடு என்பதற்காக மட்டுமல்ல... ஒரு காலத்தில் இந்த சமையல் கேஸே இல்லாமல் போகப் போகிறது. ஆம்... சமையல் கேஸ், பெட்ரோலியம், டீசல் போன்ற எரிபொருள்கள்... வற்றிப் போகக்கூடிய சக்திகள்தான். சமீப ஆண்டுகளில் இவற்றை அதிக அளவு  மக்கள் பயன்படுத்த ஆரம்பித்திருப்பதால், டிமாண்ட் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. ஒரு கட்டத்தில் எல்லா எரிபொருட்களுக்கும் தட்டுப்பாடு உண்டாகலாம். எரிபொருட்களுக்கான மானியத்தை நிறுத்தும் முயற்சியில் இருக்கிறது மத்திய அரசு. அப்படி வரும்போது ஒரு சிலிண்டர் விலை 700 ரூபாயைத் தாண்டக்கூடும். எனவே, எதிர்வரும் காலத்தில் சமையலுக்கு முழுக்க முழுக்க எல்.பி.ஜி. கேஸை மட்டுமே நம்பியிருக்காமல், மாற்று வழிமுறைகளைத் தேடிக்கொள்வதும் கற்றுக்கொள்வதும் காலத்தின் அவசியம்".
 
 
''உங்கள் வீட்டில் மிச்சப்படும் காய்கறி மற்றும் உணவுக்கழிவிலிருந்தே எரிவாயு உற்பத்தியை செய்துவிட முடியும். அதற்காகவே 'சக்தி சுரபி' எனும் எரிவாயு  இருக்கிறது.இதில் இரண்டு வகைகள் இருக்கின்றன. ஒன்று... இடம் விட்டு, இடம் பெயர்ந்து எடுத்துச் செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட சக்தி சுரபி. இது பிளாஸ்டிக் கலனால் ஆனது. மற்றொன்று நிலையானது. இது சிமென்ட் கட்டுமானத்தால் ஆனது. கழிவுகளை உள்ளே செலுத்தும் குழாய், ஜீரணிப்பான், வாயுகொள்கலன், தண்ணீர் வெளியேறும் பாதை, உரம் வெளியே வரும் பாதை... இத்தனையும் சேர்ந்ததுதான் சக்தி சுரபி. வேண்டாம் என நாம் வீசி எரியும் சமையலறைக் கழிவுகள் மட்டுமே இதற்குத் தீனி. ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கலன் மூலம் ஒரு நாளைக்கு ஒரு கனமீட்டர் வாயுவை உற்பத்தி செய்யலாம். ஒரு நாளைக்கு ஐந்து கிலோ கழிவுகள் (காய்கறி மற்றும் உணவு) தேவைப்படும். இதுவே நான்கு பேர் உள்ள சராசரி குடும்பத்துக்குப் போதுமானதாக இருக்கும். இந்த கலனை நகர்ப்புறத்தில் உள்ளவர்களும் தாராளமாக அமைத்துக் கொள்ள முடியும்.
 
 
மாநகரம் அல்லாத பிற நகரங்கள் மற்றும் கிராமங்களில் கால்நடை வளர்ப்பது சாத்தியமானதுதான். அப்படி வளர்ப்பவர்களுக்கு சாண எரிவாயு கலன் ஒரு வரப்பிரசாதம். வீட்டில் இரண்டு மாடு வளர்ப்பவர்கள்கூட துணிந்து எல்.பி.ஜி. கேஸுக்கு குட்பை சொல்லிவிடலாம். அல்லது அக்கம்பக்கம் யாராவது மாடு வளர்த் தால் கூட சாணத்தை வாங்கிக் கொள்ளலாம். தினமும் 25 கிலோ சாணத்தை கலனுக்குள் செலுத்தினால், ஒரு கன மீட்டர் வாயு உற்பத்தி யாகிவிடும். இது நான்கு பேர் உள்ள சராசரி குடும்பத்துக்கு ஒரு நாளுக்குப் போதுமானதாக இருக்கும். இதற்கு அரசு மானியமும் இருக்கிறது.
 
விறகு அடுப்பு
 
''இதைக் கேட்டதுமே... 'ஐயையோ... விறகு அடுப்பை ஊதி ஊதியே உயிரு போயிடுமே' என்று கலங்க ஆரம்பித்து விடாதீர்கள்.இன்னும் கிராமங்களில் விறகுதான் பிரதான எரிபொருள். அவர்களுக்காகவே டிசைன் செய்யப்பட்ட அடுப்புகள் இவை. 'சிங்கிள் பாட்’ என்றழைக்கப்படும் ஒற்றை அடுப்பு, 'டபுள் பாட்’ எனப்படும் இரட்டை அடுப்பு, 'பயோ கேஸ் ஸ்டவ்’ எனப்படும் வெப்ப எரிவாயு அடுப்பு என மூன்று வகை அடுப்பு உள்ளன. விறகு, நம் பாரம்பரிய அடுப்புகளில் எரியும்போது 7 சதவிகித எரிசக்திதான் கிடைக்கும். அதுவே இந்த வகை அடுப்பு களில் 25 சதவிகித எரிசக்தி கிடைப்பதுபோல் டிசைன் செய்யப்பட்டிருப்பதுடன், புகையும் அதிகம் உண்டாகாமல் இருப்பதால், இதற்கு அதிக வரவேற்பு உண்டு. குறிப்பாக, சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு இது பெரிய அளவில் கைகொடுக்கும்''
 
 நன்றி 
 
- வாசுதேவ், மைய செயலாளர்,
  விவேகானந்தா கேந்திரா 
  கன்னியாகுமரி
 
- பேராசிரியர் டாக்டர் வெங்கடாசலம்
   'பயோ எனர்ஜி’ துறைத் தலைவர்
    தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்  
 
மற்றும்
 
விகடன்   
 

Sunday, November 20, 2011

அர்ஜூன் டெண்டுல்கர் !


அர்ஜுன் டெண்டுல்கர், 1999 செப்டம்பர் 24-ல் பிறந்தார். சச்சின், இந்திய அரசின் சார்பில் தனக்குக் கிடைத்த முதல் பெரிய கௌரவமான அர்ஜூனா விருதின் நினைவாக, தன் மகனுக்கு 'அர்ஜுன்’ என்று பெயர் வைத்தார்.மும்பையில் நான்கு வருடங்களுக்கு முன்பு, பள்ளி மாணவர் களுக்கான தடகளப் போட்டிகள் நடந்தபோது... 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இரண்டாம் இடம் பிடித்தார் அர்ஜுன். முதல் இடம் பிடித்தது... ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான்.
கடந்த ஆண்டு, வங்காள தேசத்துக்கு எதிரான போட்டியில் சச்சின் 44-வது சதத்தை அடித்த அன்று, புனேயில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இருந்தார் அர்ஜுன். அன்றுதான், 13 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார். அதில் எடுத்த ஸ்கோர், பூஜ்ஜியம். எனினும், அடுத்தடுத்த போட்டிகளில் அதிக ரன்களைச் சேர்த்தார்.சச்சினைப் போலவே அர்ஜுனும் ஆல் ரவுண்டர். அப்பாவைத் தவிர, அர்ஜுனுக்கு மிகவும் பிடித்த இன்னொரு கிரிக்கெட்டர், வீரேந்திர சேவாக். சச்சின் பல ஆட்டங்களில் 100-ஐ நெருங்கும்போது, (டென்ஷனில் தொடர்ந்து அவுட் ஆகிக்கொண்டு இருந்தபோது...) 'சேவாக் மாதிரி நீங்களும் சிக்ஸர் அடிச்சு, செஞ்சுரி அடிங்க’ என்பதுதான் சச்சினுக்கு அர்ஜுன் கொடுத்த ஐடியா.

அர்ஜுன் இடது கை ஆட்டக்காரர். ''அர்ஜுன் எங்களுடன் கிரிக்கெட் விளையாடும்போது சச்சின் அங்கிள் வந்தால், உடனடியாக பேட்டிங் ஸ்டைலை மாற்றி, டிஃபென்ஸிவாக ஆட ஆரம்பித்துவிடுவான். சச்சின் அங்கிள் இல்லை என்றால், அதிரடி ஆட்டம்தான். சிக்ஸர், பவுண்டரி எனப் பந்து பறக்கும்'' -இது அர்ஜுனுடன் கிரிக்கெட் ஆடும் நண்பர்கள் சொன்னது.உலகக் கோப்பை கிரிக்கெட் முடிந்ததும், இங்கிலாந்து பயணத்துக்கு மகன் அர்ஜுனையும் அழைத்துச் சென்றிருந்தார் சச்சின். ''இங்கிலாந்து மைதானங்களில் ஆடிப் பழகிவிட்டால், உலகில் எந்த மைதானத்திலும் சிறப்பாக ஆட முடியும்'' என்பதுதான் அர்ஜுனுக்கு சச்சின் கொடுக்கும் அட்வைஸ்.சச்சின், சர்வதேச கிரிக்கெட்டில் 20 ஆண்டுகள் விளையாடியதன் நினைவாக... அவரது மகள் சாரா, சச்சினுக்குத் தான் கைப்பட வரைந்த ஓவியத்தைப் பரிசாக அளித்தாள். அர்ஜுன், தானே கிரீட்டிங் கார்டு ஒன்றை வித்தியாசமாக டிசைன் செய்து, பரிசளித்தார்.  சச்சின், தனது 16 வயதில் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்தார். அர்ஜுனும் அந்த 16-ஐக் குறிவைத்துதான் பயிற்சி பெற்றுவருகிறார் என்கிறார்கள்.

விகடன்

அய்யகோ...2,56,913...


2,56,913.இது, கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை. தொண்டு நிறுவனங்களோ... விவசாயச் சங்கங்களோ... சொல்லும் கணக்கு அல்ல இது. நம்மை ஆண்டு கொண்டிருக்கும் அரசாங்கம் சொல்லும் கணக்கு. அதாவது, தேசிய குற்றவியல் ஆவணங்களில் (National Crime Records Bureau) கூறப்பட்டிருக்கும் கணக்கு. ஆனால், உண்மையான கணக்கு, இதைவிட அதிகம் என்பதே நிதர்சனம்.
அரசாங்கத்தைப் பொறுத்தவரை, தற்கொலை செய்துகொண்ட நபரின் பெயரில் நிலம் இருந்தால் மட்டுமே, அவர் விவசாயி என்று கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறார். ஆனால், இங்கே பரம்பரை பரம்பரையாக தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா அல்லது குடும்ப உறுப்பினர்களின் பெயரிலேயே நிலத்தை வைத்துக் கொண்டிருப்பவர்கள்தான் அதிகம். அத்தகையோரின் தற்கொலையை, 'விவசாயத் தற்கொலைப்' பட்டியலில் அரசு சேர்ப்பதில்லை. இந்தியாவைப் பொறுத்தவரை விவசாயத் தற்கொலைப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது... மகாராஷ்டிர மாநிலம், விதர்பா பகுதிதான். இறந்துபோனவரின் பெயரில் நிலமில்லாததால்.... கணவனையும் இழந்து, இழப்பீடும் கிடைக்காமல், இத்துப்போன சேலையை இழுத்து கட்டிக் கொண்டு, ஒட்டிப்போன ஒரு சாண் வயிற்றுக்காக உழைக்கும் இளம் விதவைகள் பலர் அங்கு உள்ளனர்  .


பி.டி.ரக விதைகளுக்கு எதிராக விதர்பா பகுதியில் பணியாற்றும் தன்னார்வலர்கள், 'அரசாங்கமும்... விஞ்ஞானிகளும் ஆஹா... ஓகோவென ஆராதிக்கும் பி.டி. பருத்திதான், விதர்பாவில் விவசாயிகளின் உயிரைக் குடிக்கக் காரணம்' என்று குற்றம்சாட்டுகிறார்கள்.'நன்றாக விளையும் என்கிற பிரசாரத்தை நம்பி, அதிக விலைகொடுத்து பி.டி.ரக விதைகளை வாங்கி விதைத்துவிட்டு, கடைசியில் வரவுக்கும் செலவுக்கும் கட்டுப்படியாகாத நிலையில், வாங்கியக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல், தற்கொலை செய்துகொள்கிறார்கள்' என்பதுதான் அவர்கள் முன் வைக்கும்வாதம்!இதிலிருந்து நாடு தெரிந்து கொள்ள வேண்டியது... 'உற்பத்திச் செலவு கூடிக்கொண்டே இருப்பது, விவசாயிகளைத் தற்கொலைக்குத் துரத்துகிறது' என்பதைத்தான்.

ஆனால், அதைப் பற்றியெல்லாம் அக்கறை கொள்ளாமல், பன்னாட்டு பெருச்சாளிகளுக்கு, கதவைத் திறந்துவிட்டு, மண்டியிட்டு அவர்களின் கால்களில் விழுந்து கிடப்பதைத்தான் நாட்டுக்கு செய்யும் மிகப்பெரிய சேவையாக தொடர்ந்து கொண்டிருக்கின்றனர் நம் அரசியல்வாதிகள்!இதோ... உரத்தின் விலை 3 மடங்கு கூடிவிட்டது. இது, விவசாயத் தற்கொலைகளை இன்னும்கூட அதிகரிக்கவே செய்யும். தற்போது பல இடங்களில் உரத்தட்டுப்பாடு நிலவுகிறது. ஆனால், இதைப் பற்றிய அக்கறையில்லாமல் அலைந்து கொண்டிருக்கிறார், மத்திய உரத்துறை அமைச்சர் மு.க. அழகிரி.பல்வேறு சிரமங்களுக்கிடையே நடவு செய்த நெல், அறுவடை சமயத்தில் கனமழையால் மூழ்கிக் கிடக்கிறது. காப்பீடு செய்த விவசாயிகள், இழப்பீடு கேட்டால்.. 'பிர்காவில் உள்ள எல்லா நெல் வயல்களும், நீரில் மூழ்கினால்தான் இழப்பீடு’ என்ற வறட்டு விதியைச் சுட்டிக்காட்டுகிறது காப்பீட்டு நிறுவனம்.இயற்கை வளங்களை, இரும்புத் தாதுக்களை, பாறைகளை (கிரானைட்) வெளிநாட்டுக்கு விற்பவர்களுக்கு ஊக்கநிதி கொடுக்கிறது அரசு. ஆனால், ரத்தத்தை வியர்வையாக்கி... இயற்கைச் சீற்றங்களை எதிர்த்து நின்று, கஷ்டப்பட்டு, நஷ்டப்பட்டு விவசாயி உற்பத்தி செய்யும் பொருட்களை ஏற்றுமதி செய்தால், தடை விதிக்கிறது. தண்டனையாக வரியும் விதிக்கிறது.விவசாயிகளுக்கு எதிராக நடைபெறும் அரசு அடக்குமுறைகளைப் பற்றி அரசியல்வாதிகள் வாயே திறப்பதில்லை. காரணம் இன்றைய அரசியல்வாதிகள்தானே... நாளைய அமைச்சர்கள். அவர்களை விடுங்கள், அடக்குமுறைக்கு எதிராக நெருப்பு மூட்ட வேண்டிய மீடியாக்களும்கூட சினிமா, கேடுகெட்ட அரசியல், தனிநபர் புகழ்பாடுவது... என்றே 95% கவனம் செலுத்துகின்றன. நாட்டில் 60% என்கிற அளவில் இருக்கும் விவசாயிகளைப் பற்றி, அவ்வளவாக வாய் திறப்பதில்லை. இதைத்தான் சமீபத்தில் வேதனையுடன் தெரிவித்திருக்கிறார் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு.

நாட்டின் மீது அக்கறை கொண்ட நிஜமான பொருளாதார வல்லுநர்கள், 'பொருளாதாரம் வளர்கிறது என்கிற மாயையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது நம்முடைய அரசும்... முதலாளி வர்க்கமும். இது, நாட்டை மிக மோசமான நிலைக்குக் கொண்டு சென்று விடும். கிரேக்க நாட்டுக்கு நேர்ந்த கதி, இந்தியாவுக்கும் வரும்’ என்று அலறுகிறார்கள்.ஆனால், 'பொருளாதாரப் புலி' என வேஷம் போட்டுக் கொண்டிருப்போரின் காதுகளை, இந்த அலறல் எட்டவே இல்லை.போனது போகட்டும்... அமெரிக்கா, கிரேக்கம், இத்தாலி என்று வரிசையாக பஞ்சப்பாட்டு பாட ஆரம்பித்திருக்கும் நாடுகளின் நிஜ நிலையைக் கண்ட பிறகாவது... வறட்டுக் கௌரவம் பார்க்காமல் உண்மையை ஒப்புக்கொண்டு, உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்த அரசு முன் வரவேண்டும். அன்னிய கம்பெனிகளுக்கு அள்ளிக் கொடுக்கும் சலுகைகளை, உள்ளூர் விவசாயிகளுக்குக் கொடுத்தால்... எதிர்பார்க்கும் உற்பத்தி கொழிக்க ஆரம்பித்துவிடும். இதைச் செய்தால் போதும்... எந்த நாட்டின் பொருளாதாரத் தேக்கமும் இந்தியாவைத் தொட்டுக்கூட பார்க்காது. ஏனென்றால்... நம்மிடம்தான் கோடானு கோடி உழைக்கும் கரங்கள் இருக்கின்றனவே!

சின்னச் சின்ன பிரச்னைகள் - முதலுதவி

பள்ளி செல்லும் வயதில் உள்ள குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படுகிற சின்னச் சின்னப் பிரச்னைகளுக்கு எவ்வாறு முதலுதவி செய்வது என்பது பற்றி  பார்க்கலாம்.
 
காது வலி:
 
குழந்தைகளுக்குக் காய்ச்சல், தடுமம் போன்றவற்றுக்கு அடுத்தபடியாக அதிகமாகத் தொல்லை தருவது, காதுவலி. பல சமயங்களில் காதுவலி தானாகவே சரியாகிவிடும். சிலருக்குக் காதில் சீழ் வடிதல், காது கேளாமை போன்ற பிரச்னைகளும் ஏற்படும். 
 
காரணங்கள்:
 
தடுமம், சளி பிடிக்கும் போது, தொண்டை முழுவதும் புண்ணாகி வீங்கி விடும். அப்போது தொண்டையிலிருந்து காதுக்குச் செல்லும் ‘ஈஸ்டாக் கியன்’ குழாய் அடைபட்டுவிடும். இதன் விளைவாக காதில் காற்றழுத்தம் வேறுபடும். இதை ஈடுசெய்ய காது சவ்வு உள்நோக்கி நகரும். இதனால் காது வலிக்கும்.
 
என்ன முதலுதவி?
 
* தடுமத்தைக் குறைக்கிற மாத்திரைகள் சாப்பிடலாம்.
* மூக்கு அடைப்பதைத் தவிர்க்க வேண்டும். இதற்கு மூக்கடைப்பை நீக்கும் சொட்டு மருந்தை மூக்கில் ஊற்றலாம்.
* ‘டிங்சர் பென்சாயின் ’ மருந்தைப் பயன்படுத்தி நீராவி பிடிக்கலாம்.
* வலி நிவாரணி மாத்திரைகளைச் சாப்பிடலாம்.
* ஆன்டிபயாடிக் மாத்திரைகளைச் சாப்பிடலாம்.
* காது வலி போக்கும் சொட்டு மருந்து ஊற்றலாம்.
* காதில் சீழ் வடிந்தால் அல்லது காது சவ்வில் துவாரம் விழுந்திருந்தால், காதில் சொட்டு மருந்து ஊற்றக்கூடாது.

காதில் அந்நியப் பொருள்கள்:

காதில் குரும்பி சேர்ந்து காது வெளிக் குழலை அடைத்துவிடும். சமயங்களில் அந்தக் குரும்பியில் தண்ணீர் பட்டதும் அதை உறிஞ்சிப் புடைத்துவிடும். அப்போது காது வலிக்கும். இதுபோல், குழந்தைகள் விளையாட்டுத்தனமாக காதில் பலப்பம், மரக்குச்சி, ரப்பர், வேப்பமுத்து போன்றவற்றைப் போட்டுக்கொள்வார்கள். இவையும் காது சவ்வை அழுத்தி வலி ஏற்படுத்தும். காதில் பூச்சி நுழைந்து விட்டாலும் காது வலிக்கும்.

என்ன செய்யலாம்?

* காதில் புகுந்த பொருள் கண்ணுக்குத் தெரிந்தால், தலையைச் சாய்த்துப் பொருளைக் கீழே விழ வைக்கலாம்.
* குரும்பியை வெளியில் எடுப்பதற்குக் குச்சி, ஊக்கு, பட்ஸ் போன்றவற்றால் எடுக்க முயற்சி செய்வது தவறு. அப்படிச் செய்தால் காதில் உள்ள பொருள் இன்னும் உள்ளே போய்விடும்.
* குரும்பி மற்றும் பிற அந்நியப் பொருள்கள் காதில் இருந்தால், மருத்துவரிடம் காண்பித்து உரிய கருவி மூலம் வெளியில் எடுப்பதே நல்லது.
* காதில் பூச்சி புகுந்திருந்தால், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயைக் காதில் ஊற்றலாம். பூச்சி எண்ணெயில் இறந்துவிடும். பிறகு சிறிதளவு தண்ணீரைக் காதில் ஊற்றித் தலையைச் சாய்த்தால், பூச்சி வெளியில் வந்துவிடும்.
* காய்ச்சிய எண்ணெயைக் காதில் ஊற்றக் கூடாது.

கண்ணில் அந்நியப் பொருள்கள்:

தூசு, பூச்சி, உலோகத்துகள்கள் போன்றவை கண்ணில் விழுந்துவிடும். இதனால் கண் வலிக்கும். கண் கூசும். எரியும். கண்ணைத் திறக்கமுடியாத நிலைமையும் ஏற்படுவதுண்டு.

முதலுதவி என்ன?

* பாதிக்கப்பட்ட நபரை நல்ல வெளிச்சம் உள்ள இடத்தில் உட்காரச் சொல்லுங்கள்.
* கண்ணில் புகுந்த பொருள் தென்படுகிறதா என்று பார்க்கவும். கீழ் இமையைக் கீழே நோக்கி இழுங்கள். அவரை மேலே பார்க்கச் சொல்லுங்கள்.
* அடுத்து, மேல் இமையை மேல் நோக்கி இழுங்கள். அவரைக் கீழே பார்க்கச் சொல்லுங்கள்.
* கண்ணுக்குள் பொருள் இருப்பது தெரிந்தால், அந்த நபரை அகலமான பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி, அதற்குள் கண்களை முக்கி, கண்களைத் திறந்து மூடச் சொல்லுங்கள்.
* பாத்திரம் இல்லையென்றால், இப்படியும் செய்யலாம். இமைகளை விலக்கிக்கொண்டு, தண்ணீரைக் கண்ணுக்குள் ஊற்றலாம்.
* இதன் மூலம் மேலோட்டமாக உள்ள வெளிப்பொருள்கள் எளிதில் வெளிவந்துவிடும்.
* விழியில் புகுந்துவிட்ட பொருள்கள் வெளியில் வராது. அதற்கு மருத்துவர் உதவியை நாடுவதே நல்லது.
* இதுபோல் கருவிழியில் உள்ள பொருள்களைத் துவாலையால் துடைத்து எடுக்க முயற்சி செய்யக்கூடாது.
* கண்ணைக் கசக்கக்கூடாது.

மூக்கில் அந்நியப் பொருள்கள்:

குழந்தைகள் மூக்கிலும் சில பொருள்களைப் போட்டுக்கொள்வார்கள். முக்கியமாக சிலேட்டுக்குச்சி, பொத்தான், பயறு, பஞ்சு, பேப்பர், பருத்திக்கொட்டை போன்றவற்றைச் சொல்லலாம்.

என்ன முதலுதவி?

* கண்ணுக்குத் தெரியும் பொருளாக இருந்தால் மூக்கை வலுவாகச் சீந்தச் சொல்லுங்கள். அப்பொருள் வெளியில் வந்துவிடும்.
* சிறிய கிடுக்கி கொண்டும் வெளியில் எடுக்கலாம்.
* முயற்சி தோல்வியடைந்தால், மருத்துவர் உதவியை நாடுவதே நல்லது.
* அந்நியப்பொருள் வெளியேறும் வரை வாய் வழியாக சுவாசிப்பதே நல்லது. மூச்சை உள்ளிழுத்தால் அந்தப் பொருள் இன்னும் உள்ளே சென்றுவிடும்.

தோலில் அந்நியப் பொருள்கள்:

கல், குச்சி, முள், பீங்கான் போன்றவை பாதத்தில் குத்திவிடும். அப்போது என்ன செய்வது?


* சோப் தண்ணீர் விட்டு அந்த இடத்தைக் கழுவுங்கள்.
* நெருப்பில் காட்டப்பட்டு கிருமி நீக்கம் செய்யப்பட்ட ஊசியை மெலிதாகத் தோலில் செருகி, குத்தியுள்ள பொருளை மேல்நோக்கி அகற்றுங்கள்.
* முயற்சி தோல்வியடைந்தால், மருத்துவர் உதவி பெற வேண்டியது அவசியம்.

Friday, November 18, 2011

கிங்ஃபிஷர் விமான கம்பெனி

 
விஜய் மல்லையா இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவர். அவரது கிங்ஃபிஷர் விமான கம்பெனிக்குக் கடந்த வாரம் பெட்ரோல் நிறுவனங்களும், விமான நிலையங்களும் வழங்கிக் கொண்டிருந்த கடன் வசதியை நிறுத்திவிட்டதால் 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு பயணிகள் விமான நிலையங்களில் தவித்தனர். ஏன் இந்த நிலை?
 
விமானப் பயணங்கள் விலையுயர்ந்தது. அது பணக்காரர்கள், கம்பெனி நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் போன்றவர்கள் மட்டுமே அனுபவிக்கக்கூடிய ஆடம்பரம் என்ற நிலையை மாற்றி, 90களின் பிற்பகுதியில் சாதாரண இந்தியனும் மிகக் குறைந்த கட்டணத்தில் பறக்கலாம் என்பதை ஒரு புரட்சியாகவே அறிமுகப்படுத்தியவர் கேப்டன் கோபிநாத். புதிய பொருளாதாரக் கொள்கையின் ஒரு அங்கமாக அறிவிக்கப்பட்ட விமானத் துறையில், தனியார்களின் அனுமதியை மிகத் துணிவுடன் பயன்படுத்தி, தன்னம்பிக்கையுடன் ‘டெக்கான் ஏர் லைன்ஸ்’ என்று ஒரு விமான சர்வீஸைத் தொடங்கி, இந்தத் தேசம் அதுவரை பார்க்காத ஆச்சர்யமான கட்டணங்களை அறிவித்தார். விமான சர்வீஸ்களில் குறைந்த கட்டணச் சேவை என்பதை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர்.பயணங்களில் தரப்படும் சாப்பாடுகளுக்கு ரூ 500 வரை டிக்கெட்டில் சேர்க்கப்படும். விளம்பரங்கள், அச்சிட்ட டிக்கெட்டுகள் போன்ற செலவுகளினாலும் டிக்கெட்டின் விலை அதிகமாகும். இந்த நிலையை மிக புத்திசாலித்தனமாகக் கையாண்டு விளம்பரம், அச்சிட்ட டிக்கெட், விற்பனை அலுவலகம், விமானத்தில் சாப்பாடு போன்ற செலவுகள் இல்லாமல் குறைவான கட்டணத்தை 50% சீட்டுகளுக்கு நிர்ணயித்து, மீதி 50% சீட்டுகளை மிகக் குறைந்த விலையில் 10%க்கும் குறைந்த விலையில் சில டிக்கெட்டுகளை ரூ 500 ரூபாய்க்குக்கூட ஒரு மாதத்துக்கும் முன்னதாகவே ஆன்லைனில் விற்று, காசு பார்த்தது டெக்கான். 
 
 
இந்த வெற்றி பல புதிய நிறுவனங்களை விமானத் துறையில் இறங்க வைத்தது.  7 ஆண்டுகளில் கிங்ஃபிஷர், ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ, ஸகாரா போன்ற 8 புதிய கம்பெனிகள் இதே மாடலைப் பின்பற்றி, சலுகை விலையில் டிக்கெட்டுகளை அறிவிக்கத் தொடங்கியது. இந்திய விமானத் துறையின் ஏகபோக உரிமையாளராக இருந்த இந்தியன் ஏர்லைன்ஸின் பிஸினஸ் 17 சதவிகிதமாகக் குறைந்தது. நாடு முழுவதும் பல சிறிய நகரங்களிலிருந்த விமான நிலையங்கள் கூட பிஸியாயின. நிறைய சாமானிய இந்தியர்கள் பறக்கத் தொடங்கினர். பட்ஜெட் விமானப் பயணம் என்பது மிக சாதாரண விஷயமாயிற்று. மிக வேகமாக வளர்ந்த ஏர்டெக்கான் 8 கேந்திரங்களிலிருந்து இந்தியா முழுவதும் பறந்து இந்தியன் ஏர்லைன்ஸின் இடத்தைப் பிடித்தது. ஆனால், லாபம் அதிகமில்லை. மிகப்பெரிய அளவில் அதிக முதலீடு தேவைப்பட்ட அந்த நேரத்தில் உதவ முன் வந்தவர் விஜய் மல்லையா. பெயரை, சின்னத்தை மாற்றக் கூடாது, சலுகை டிக்கெட்டுகள் தொடரப்பட வேண்டும் என்ற கேப்டன் கோபிநாத்தின் கோரிக்கையை ஏற்று, முதலீடு செய்தது அவரது கிங் ஃபிஷர் நிறுவனம். ஆனால், ஒரு ஆண்டுகளுக்குள்ளாகவே சொன்னதையெல்லாம் மாற்றி, பல விஷயங்களைச் செய்தனர். நிறுவனம் ‘கிங்ஃபிஷர் ரெட்’ ஆயிற்று. விமானங்களில் கிங்ஃபிஷரின் சின்னமான மீன் கொத்தி பொறிக்கப்பட்டது. மெல்ல கட்டணங்களும் சீரமைக்கப்பட்டன. இறுதியில் கடந்த மாதம் மலிவு விலை கட்டண சர்வீஸை இந்த ஆண்டுக்குள்ளாக நிறுத்தப்போகிறாம் என்ற அறிவிப்பை மல்லையா வெளியிட்டிருக்கிறார். சொல்லப்பட்ட காரணம்: குறைந்த கட்டணச் சேவையினால் அளவுக்கு அதிகமான நஷ்டம். இந்திய விமானத்துறையில் இரண்டாவது இடத்திலிருக்கும் கிங்ஃபிஷர், தொடர்ந்து அடுத்த இடத்திலிருக்கும் ஜெட் நிறுவனமும் இப்படி அறிவித்திருக்கிறது. விரைவில் மற்ற நிறுவனங்களும் இம்மாதிரி சர்வீஸ்களை நிறுத்தப் போகும் அறிகுறி. இனி குறைந்த கட்டண விமானப் பயணம், மெல்ல மெல்லப் பழங்கனவாகிவிடப் போகிறது என்பது துறைசார்ந்த பலரின் பரவலான கருத்து. 
 
உண்மை நிலை என்ன?  
 
 
மிக அதிகமாகிக் கொண்டிருக்கும் விமான எரிபொருளின் விலை, பைலட்களின் சம்பளம், விமான நிலையங்களின் வரிகள், அதிகரிக்கும் விளம்பர, நிர்வாகச் செலவுகளால் உலகின் பல விமான சர்வீஸ்கள் நஷ்டத்தில்தான் இயங்குகின்றன என்றாலும் கிங்ஃபிஷர் நிறுவனம் 2005ல் தொடங்கியதிலிருந்தே லாபம் ஈட்டியதில்லை. பெட்ரோல் நிறுவனங்களும், விமான நிலையங்களும் கட்டணங்களை ஒழுங்காகச் செலுத்தாததால் கடன் வசதியை நிறுத்தி விட்டார்கள். பல பைலட்டுகள் ராஜினாமா செய்து விட்டார்கள். எந்த நேரத்திலும் நிறுவனம் மூடப்படலாம் என்ற வதந்தியால் ஷேர்களின் விலை சரிந்து கொண்டேயிருக்கிறது. ஏர் இந்தியாவுக்கு உதவியதுபோல அரசு உதவ வேண்டும் என்கிறார் மல்லையா.வங்கிகள் கடன் கொடுக்க வேண்டுமெனச் சொல்கிறார் விமானத்துறை அமைச்சர் வயலார் ரவி. கொடுத்த கடனுக்கே வட்டி கட்டாத நிறுவனத்துக்கு மீண்டும் அதிக கடன் வழங்கத் தயங்கும் வங்கிகளிடம் இந்த நிறுவனத்தின் 25% பங்குகள் இருக்கின்றன. விமானப் பயணிகளின் வளர்ச்சிவீதம் ஆண்டுக்கு 20%க்குமேல் அதிகரித்துக் கொண்டிருக்கும் இந்தியாவில் இனி பட்ஜெட் சேவையைக் கொடுக்காமல் விமான கம்பெனிகள் இயங்க முடியாது. கிங்ஃபிஷரின் நிலைக்கு அவர்களது நிர்வாக முறைதான் காரணம் என்று சொல்கிறார் ஒரு முன்னாள் விமானத்துறை அதிகாரி. கிங்ஃபிஷர் ரெட் மூடப்போவதான அறிவிப்பு வெளியான நாளிலிருந்து ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் (இதன் பெறும் பங்குகளை வைத்திருப்பவர் கலாநிதி மாறன்) சலுகைக் கட்டணப் பயணங்களின் விளம்பரங்களை அதிகம் வெளியிடுகிறது. புதிய தடங்களையும் அறிவித்துக் கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டே ஐஐஎம் அஹமதாபாத்தின் மார்க்கெட்டிங் துறை மூத்த பேராசிரியர் மைதிஷ் வர்ஜா தன் மாணவர்கள் சிலருடன் சேர்ந்து ‘கிங்ஃபிஷர் ரெட்’ ஏன் வெற்றிகரமாக இயங்கவில்லை என்பதை ஆராய்ந்து அறிக்கையை அந்த நிறுவனத்துக்கே கொடுத்திருக்கிறார். இந்தக் குழு சொல்லியிருக்கும் பல காரணங்களில் முக்கியமான காரணம் கிங் ஃபிஷர், விஜய் மல்லையா என்ற பெயர்களே; ஆடம்பரம், விலை அதிகம் என்ற உணர்வை மக்களிடம் ஏற்படுத்தியிருப்பது. மேலும் ஒரே நிறுவனம் வெவ்வேறு பெயர்களில் இரண்டு விதமான விமான சர்வீஸை நடத்துவது வெற்றிகரமாக இருக்காது. இரண்டு வகையான ஊழியர்கள், ஒரே நிறுவனத்தில் ஒரே மாதிரி வேலைகளைச் செய்ய வேண்டிய நிலை பல பிரச்னைகளை உருவாக்குகிறது என்று சொல்கிறது இவர்களது அறிக்கை. இது சொல்லும் இன்னொரு முக்கியமான விஷயம் சலுகைக் கட்டண விமானங்களுக்கு, சில நாடுகளில் அளிப்பதுபோல, விமான நிலையங்களில் ஒதுக்கப்படும் இடம், கட்டணம், வரிகள் போன்றவற்றில் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு சலுகை தரப் பட வேண்டும். இப்போது எல்லாவகை விமான நிறுவனங்களுக்கும் ஒரே கட்டணம்தான். இது நிர்வாகச் செலவை அதிகரிக்கிறது. விமானப் பயணிகளை அதிகரிக்க அரசும் உதவ வேண்டும் என்ற கருத்து பேசப்படுகிறது. 
 
அரசு செய்தாலும் சரி, ஆராய்ச்சியாளர்கள் சொல்வதைக் கேட்டு விமான கம்பெனிகள் மாறுதல்களைச் செய்தாலும் சரி, குறைந்த கட்டண விமானப் பயணங்கள் வசதி நிறுத்தப்படாமல் தொடரப்பட வேண்டும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பு. 
 
ரமணன் 
 

ரப்பர் - வரலாறு

தாவரங்கள் தங்களிடமிருந்து, வண்ணப்பசை, எண்ணெய், கோந்து, குங்கிலியம், பால் போன்ற பலவிதமான திரவப் பொருள்களை வெளிப்படுத்துகின்றன. அவற்றில் ஒன்றுதான் ரப்பர் பால். ரப்பர் பால் என்பது கோந்து, எண்ணெய், புரோட்டீன், அமிலங்கள், உப்புகள், சர்க்கரை,ஹைட்ரோ கார்பன் முதலியவை கலந்ததுதான். ‘லாடெக்ஸ்’என்னும் ரப்பர் பாலில் 50 அல்லது 60 சதவிகிதம் ஹைட்ரோகார்பனும் ரெஸின் என்னும் பொருளும்தான்.முதன்முதலில் ரப்பரின் உபயோகத்தைத் தென் அமெரிக்கர்கள்தாம் அறிந்திருந்தார்கள். சுமார் 490 ஆண்டுகளுக்கு முன்புதான் ரப்பரைப் பற்றி உலகின் மற்ற பாகங்களுக்கும் தெரிய வந்தது. தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களைத் தேடி அலைந்த ஸ்பானிஷ் மக்கள், தென் அமெரிக்காவின் கிராமங்களைக் கொள்ளையடிக்கச் சென்றபோது, அங்கே சில குழந்தைகள் ஒரு மரத்தின் பட்டையிலிருந்து வழியும் பாலை எடுத்து உருண்டையாக உருட்டி வைத்துக் கொண்டு விளையாடுவதையும் அந்தப் பொருள் பூமியில் விழுந்தால் எம்பிக் குதிப்பதையும் கண்டார்கள்.
தென் அமெரிக்க கிராம மக்கள் அந்த மரத்தைக் ‘கூச்சீ’ என்று குறிப்பிட்டார்கள். கூச்சீ என்றால் ‘கண்ணீர் வடிக்கும் மரம்’ என்பது பொருள். அந்த மரங்கள் உலகில் வேறெங்கும் வளர்வதை அவர்கள் விரும்பவில்லை.1870ல், ஹென்றி விக்ஹாம் என்பவர் மிகுந்த சிரமத்துடன் பிரேஸில் நாட்டிலிருந்து, ரப்பர் மரத்தில் 70,000 விதைகளை ஒருவருக்கும் தெரியாமல் கொண்டு போனார். அவை இங்கிலாந்தில் பயிரிடப்பட்டன. அங்கே சுமார் 2000 ரப்பர் மரக்கன்றுகள் முளைத்தன. அங்கிருந்து ரப்பர் மரக்கன்றுகள் மிக ரகசியமாக 1905ல் இலங்கைக்கும், பிறகு அங்கிருந்து மலேசியாவுக்கும் கொண்டு செல்லப்பட்டன.ரப்பர் பாலுக்கு லாடெக்ஸ் என்று பெயர். ரப்பர் பாலின் நிறம் வெள்ளைதான் என்றாலும், பருவ காலத்துக்குத் தகுந்தாற்போல் அது மஞ்சளாகவும் வெளிர் ஆரஞ்சாகவும், சாம்பல் நிறத்திலும் இருக்கும்!சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பே, தென் அமெரிக்க செவ்விந்தியர்கள், ரப்பர் பாலிலிருந்து செருப்புகளும், கிண்ணங்களும், புட்டிகளும் செய்தார்கள்.ஒரு காலத்தில், இங்கிலாந்தில் சுமார் ஒரு கன செ.மீ. அளவுள்ள ரப்பர் துண்டு 75 அமெரிக்க சென்ட் மதிப்புக்கு விற்கப்பட்டது.1770ல், ஜோஸப் பிரிஸ்ட்லி என்னும் வேதியியல் அறிஞர் இது பென்சில் கோடுகளை அழிப்பதால் ‘ரப்பர்’ என்று முதன்முதலில் பெயரிட்டார்.ரப்பரைப் பயன்படுத்தி ‘மழைக்கோட்டு’ தயாரிக்கலாம் என்பதை ‘சார்லஸ் மாசிண்டோஷ்’ என்னும் ஸ்காட்லாந்துக்காரர் 1823ல் கண்டுபிடித்தார்.
உருகிய நிலையில் ரப்பருடன் கந்தகத்தைச் சேர்த்தால் உறுதியாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என்பதை 1839ல் ‘குட் இயர்’ என்னும் அமெரிக்கர் கண்டுபிடித்தார். அதன் பிறகுதான் ரப்பரின் உபயோகம் அதிகமானது.1896ல்தான் வாகனங்களுக்கான காற்றடைக்கப்பட்ட ரப்பர் டியூப்கள் கண்டுபிடிக்கப்பட்டன.ரப்பர் மரம் 18 முதல் 30 மீட்டர்கள் உயரம் வரை வளரும். 2 முதல் 3 மீட்டர்கள் சுற்றளவு இருக்கும். வளர்ந்து 7வது வருடத்திலிருந்து பலன் தர ஆரம்பிக்கும். அதிலிருந்து சுமார் 50 வருடங்களுக்கு ரப்பர் பால் சேகரிக்கலாம்.ஒரு வருடத்தில் ஒரு மரத்தில் 150 வெட்டு வாய்களை உண்டாக்கலாம். அடி மரத்தின் மேலும் கீழும் சுமார் 35 செ.மீ. விட்டுவிட்டு மற்றப் பகுதிகளில் இந்தக் கீறல்களை உண்டாக்குவார்கள். 10 வருடங்களில் அதன் பட்டை மறுபடியும் வளர்ந்துவிடும். ஒரு கூரிய கத்தியால், சுமார் 1.25 செ.மீ. கனத்துக்கு ரப்பர் மரத்தின் பட்டை அகற்றப்பட்டு அதில் ஓர் உலோகக் கிண்ணம் பொருத்தப்படுகிறது. அதில் பால் வடிகிறது. சேகரிக்கப்பட்ட பால், நீர் நீக்கப்பட்டு உறைய வைக்கப்பட்டுப் பதப்படுத்தப்படுகிறது.
பட்டை நீக்கம் மூன்று விதங்களில் செய்யப்படுகிறது. 
அதிகாலை நேரம்தான் மரத்தைக் கீற ஏற்றது. 3 மணி நேரத்தில் ஒருவர் 200 முதல் 300 மரங்களில் பால் சேகரிப்பார். முதல் 6 வருடங்கள் மரத்தின் ஒரு பக்கம் கீறுவார்கள்; மறு 6 வருடங்கள் அடுத்தப் பக்கம் கீறுவார்கள்.உலக ரப்பர் உற்பத்தியில் தாய்லாந்து, இந்தோனேஷியா, மலேசியா, இந்தியா முதல் நான்கு இடங்களை வகிக்கின்றன.ரப்பர் உற்பத்தியில் கடைசியாக இருப்பது, ரப்பரை உலகத்துக்கு அறிமுகப்படுத்திய ‘லத்தீன் அமெரிக்கா தான்!’.
இந்திய மாநிலங்களில் கிடைக்கும் ரப்பரின் சதவிகிதம்
கேரளா 91%
தமிழ்நாடு 7%
கர்நாடகா 1%
அந்தமான் 0.1%

Thursday, November 17, 2011

சீனாவுடன் இந்தியா போரிட வேண்டுமா, ஏன்?

ந்திய - சீனப் போர் முடிந்து 50 ஆண்டுகள் ஆகும் நிலையில், இந்தியாவின் கடந்த காலத் தோல்விக்கும் எதிர்கால வெற்றிக்கும் நம்முடைய ஆங்கில ஊடகங்கள் 'கண்டுபிடிக்கும்’ காரணங்கள் புல்லரிக்க வைக்கின்றன!''சீன ராணுவத்தினரின் எண்ணிக்கை 22.85 லட்சம்; இந்திய ராணுவத்தினரின் எண்ணிக்கை 13.25 லட்சம். சீனாவிடம் 309 போர்க் கப்பல்களும் 1,200 போர் விமானங் களும் இருக்கின்றன. இந்தியாவிடம் 66 போர்க் கப்பல்களும் 100 போர் விமானங்களும் மட்டுமே இருக்கின்றன. எப்படிப் போதும்?'' என்பதே நம்முடைய  ஊடகங் களின் தலைபோகும் கவலை.சரி, இந்தியா - சீனா இடையே இன்னொரு போர் மூண்டால், அதற்கு இந்தியா எப்படித் தயாராக வேண்டும்? நம்முடைய ஊடகங்கள் முன்வைக்கும் தீர்வுகள் இவை: ''இந்திய ராணுவத்துக்காக அரசு 2.2 லட்சம் கோடியை ஒதுக்க வேண்டும்; குறைந்தபட்சம் 24 ஆயிரம் கோடிக்கு 2,700 பீரங்கி கள், 10 ஆயிரம் கோடிக்குத் தொடர்புக் கருவிகள், 9 ஆயிரம் கோடிக்கு ஏவுகணைகள் வாங்க வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளில் படையில் மேலும் 90 ஆயிரம் வீரர் களைச் சேர்க்க வேண்டும்.''
கடந்த ஒரு மாதமாக இந்தியாவின் இந்த 'இமாலயத் தேவை’ மீண்டும் மீண்டும் செய்தியாகிவருவது அரசுக்கும் ஆயுத வியாபாரிகளுக்கும் வசதியாகி இருக்கிறது. நம்முடைய பாதுகாப்புத் துறை இப்போது 64 ஆயிரம் கோடி திட்டம் ஒன்றை நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி இருக்கிறது. சில நாட்களுக்கு முன் 4 ஆயிரம் கோடிக்கு இஸ்ரேலிய அவாக்ஸ் போர் விமானங்களை வாங்க அனுமதி அளித்திருக்கிறது இந்திய அரசு. இந்திய - சீன ராணுவ வலிமையை ஒப்பிடுபவர்கள், சீன எல்லையோரத்தில் இருக்கும் வியூக முக்கியத்துவம் வாய்ந்த தவாங் சாலை மண் சாலையாக இருப்பதைச் சுட்டிக்காட்டத் தவறுவது இல்லை. ஆனால், இதற்காக கூடுதல் நிதி கேட்டுக் கூச்சல் போடுபவர்கள், ஏற்கெனவே ஆண்டுக்கு லட்சம் கோடி ரூபாய் ராணுவத்துக்காகக் கொடுக்கிறோமே, இதை எல்லாம்விட அதில் என்ன முக்கியச் செலவு செய்கிறீர்கள் என்று கேட்டால் நன்றாக இருக்கும்.இந்தியாவை சீனாவுடன் ஒப்பிட்டு எழுதுவது இந்தியர்களுக்கு சுவாரஸ்யத்தைத் தரலாம். ஆனால், உண்மை நிலவரம் இந்தியர்களால் சகித்துக்கொள்ள முடியாதது!
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் தனிநபர் உற்பத்தி இந்தியாவைக் காட்டிலும் சீனாவில் 4 மடங்கு அதிகம். ஓர் உதாரணம், இந்தியக் குடிமகனின் சராசரி ஆண்டு வருமானம் கடந்த 2009-ல் 3,200 டாலர்கள். சீனா 9 ஆண்டுகளுக்கு முன் எட்டிய அளவு இது.ஒரு சீன விவசாயி சராசரியாக ஒரு ஹெக்டேருக்கு உற்பத்தி செய்யும் தானியத் தின் அளவு 10,500 கிலோ; இந்திய விவசாயி 2,203 கிலோ.கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்துக்காக சீன அரசு செலவிடும் தொகை இந்தியாவைக் காட்டிலும் 4 மடங்கு அதிகம். முத்தடுப்பூசி போடப்படும் குழந்தைகள் எண்ணிக்கை சீனாவில் 97 சதவிகிதம்; இந்தியாவில் 66 சதவிகிதம்.சீனாவில் ஒரு குடிமகனின் சராசரி ஆயுள் 73.5 ஆண்டுகள்; இந்தியாவில் 64.4 ஆண்டுகள். சீனாவில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 94 சதவிகிதம்; இந்தியாவில் 63 சதவிகிதம். உயர்கல்விக்குச் செல்வோரின் எண்ணிக்கை சீனாவில் 25 சதவிகிதம்; இந்தியாவில் 13 சதவிகிதம்.கடந்த 30 ஆண்டுகளில், வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் எண்ணிக்கையை 64 சதவிகிதத்தில் இருந்து 10 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது சீனா. இந்தியா அல்ல; உலகின் எந்த ஒரு நாட்டுடனும் இதை ஒப்பிடவே முடியாது.இந்தப் புள்ளிவிவரங்களால் எல்லாம் எந்த உறுத்தலும் அடையாதவர்களை ராணுவப் புள்ளிவிவரங்கள் மட்டும்எப்படி வருத்துகின்றன? இந்தியா சீனாவுடன் போட்டி போடுவதைவிடக் கற்றுக்கொள்ள முயல்வதே புத்திசாலித்தனம்.
அமெரிக்காவுடன் ஒரு கையைக் குலுக்கிக்கொண்டே இரானுடன் இன்னொரு கையைக் குலுக்க சீனாவால் முடிகிறது. வட கொரியாவை அச்சுறுத்த தென் கொரியாவுக்கு அமெரிக்கக் கப்பல்கள் வந்தால், தயவுதாட்சண்யமின்றி சீனாவால் எச்சரிக்க முடிகிறது. எந்த நாட்டின் மீது நேசப் படைகள் புகுந்தாலும் சீனாவால் கண்டிக்க முடிகிறது. இந்தியாவால் முடிகிறதா?இந்தியாவைச் சுற்றியுள்ள அத்தனை நாடுகளும் சீனாவின் நெருக்கமான கூட்டாளிகள். நமக்கோ மறைமுக எதிரிகள். காரணம், என்ன? நாம் முதலில் வளர்த்தெடுக்க வேண்டியது ராஜதந்திரத் துறையையா, பாதுகாப்புத் துறையையா?இந்தியாவில் விற்பனையாகும் மூன்றில் ஒரு பொருள் சீனாவில் இருந்து இறக்குமதியாவது. இந்திய உற்பத்தித் துறைக்கான 25 சதவிகிதப் பொருட்கள் சீனாவில் இருந்தே இறக்குமதி ஆகின்றன.இந்தியாவுக்கான ஏற்றுமதிப் பொருட்களின் விலையை 10 சதவிகிதம் வரை சீனா இந்த ஆண்டு உயர்த்தியது. இந்தியாவில் விலைவாசி உயர்வு ஏற்பட இதுவும் ஒரு காரணம் என்கிறது பொருளாதாரக் கொள்கை ஆய்வு மைய அறிக்கை. இதையும்கூட மறைமுகத் தாக்குதலாகக் கருதலாம் இல்லையா?
திபெத்தில் இருந்து இந்தியா நோக்கிப் பாயும் நதிகளுக்குக் குறுக்கே பெரிய பெரிய அணைகளைக் கட்டிக்கொண்டு இருக்கிறது சீனா. நீர்ப் பங்கீட்டில் தகராறு வந்தால், நீராதாரத்துக்கு மாற்று ஏற்பாடுகள் என்ன?இந்தியா முதலில் தன் சொந்தக்காலில் நிற்கப் பழக வேண்டும். பிறகு, அதன் கையில் இருக்கும் அரிவாளுக்குச் சாணை தீட்டுகிறவர்கள் தீட்டலாம்!

விகடன் 

Wednesday, November 16, 2011

கூடங்குளம் போராட்டம் - குரு மூர்த்தி பார்வையில்

 
கூடங்குளத்தில் அணுசக்தி ஆலைக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் போராட்டம் தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பாகும் நேரடி நிகழ்ச்சிகளைப் போன்று நமது காட்சி ஊடகங்களில் பல வாரங்களாக காட்டப்பட்டு வருகிறது. கூடங்குளம் அணுசக்தி ஆலையில் தேசம் 13,000 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது. ஆனால் இதை செய்தி பஞ்சத்தால் துடித்துக் கொண்டிருக்கின்ற காட்சி ஊடகங்கள்,  காலை, நண்பகல், மாலை, இரவு காட்சிகளாக தரம் தாழ்த்திவிட்டன.கூடங்குளம் போராட்டம் ஒன்றும் தனித்தன்மை வாய்ந்ததல்ல. அன்னா ஹசாரே நடத்திய உண்ணாவிரததப் போராட்டத்தை நகல் எடுத்ததைப் போன்று கூடங்குளத்தில் நாடகம் அரங்கேற்றப்பட்டு வருகிறது. நிராதரவான கிராமவாசிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விட்டதாகவும் அதற்காக அவர்கள் போராட்டம் நடத்தி வருவதா கவும் ஊடகங்கள் சித்தரிக்கின்றன. திரைக்கதை எழுதியவர்கள், வசனகர்த்தாக் கள், இயக்குனர்கள் இன்னும் திரைக்குப் பின்னால் உள்ள பிற கலைஞர்கள் யார் என்பது ஒன்றும் புரியாத புதிரல்ல. ஆனால் கூடங்குளம் நிகழ்வு ஒன்றும் தனித்தீவு போன்று ஒற்றை நிகழ்வு அல்ல.தொலைதூரத்தில் இருக்கின்ற மேகலாய மாநிலத்தில் உள்ள மேற்கு காஸி மலைக் குன்று பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக என்ன நடைபெற்று வருகி றதோ அதுதான் இப்போது கூடங்குளத்தில் நடைபெற்று வருகிறது.
 
 
மேகலாயாவில் யுரேனியத்தை தோண்டி எடுக்கக்கூடாது என்பதை முதன்மைப்படுத்தி போராட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. மேகலாயா நிகழ்வுக்கும் கூடங்குளம் நிகழ்வுக்கும் திரைக்கதை எழுதியவர்கள், வசன கர்த்தாக்கள், இயக்குனர்கள் இன்னும் திரைக்குப் பின்னால் உள்ள பிற கலைஞர்கள் ஒரே அணியைச் சேர்ந்தவர் கள்தான். அவர்களுக்கு பொதுவான இலக்கு ஒன்று உள்ளது. கூடங்குளம் போராட்டம் அணுசக்திப் பாதையில் இந்தியா எழுச்சிப் பெறுவதை தடுத்து நிறுத்துகிறது. மேகலாயாவில் மேற்கு காஸி மலைக்குன்று பகுதியில் நடத்தப்பட்டு வருகின்ற போராட்டம் இந்தியா அணு ஆயதங்கள் தயாரிப்பதை தடுக்கிறது. இதற்கு பின்னணியில் உள்ள திரைக்கதை எழுதியவர்கள், வசன கர்த்தாக்கள்,இயக்குனர்கள் இன்னும் திரைக்குப் பின்னால் உள்ள பிற கலைஞர்கள் யாவருக்கும் ஒரு பொது இலக்கு உள்ளது. இவர்கள் யார்? இவர்களின் இலக்கு என்ன?அணு சக்தித் தொழில்நுட்பம், இந்தியாவைப் பொறுத்த வரை எந்த அளவில் இருக்கிறது? இந்தியாவுக்கு அணுசக்தியும் தேவைப்படுகிறது.அணு ஆயுதமும் தேவைப்படுகிறது. உலகில் மொத்தம் 22 ஆயிரம் அணுகுண்டுகள் உள்ளன. இவற்றில் 8 ஆயிரம் அணுகுண்டுகள் எதிரிகளைத் தாக்குவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சீனா 240 அணு குண்டுகளை வைத்திருக்கிறது. அவற்றில் பெரும்பாலான வற்றை இந்தியாவைத்  தாக்க தயார் நிலையில் வைத்துள்ளது. பாகிஸ்தான் 80 அணு குண்டுகளை இந்தியாவைத் தாக்க தயார் நிலையில் வைத்துள்ளது. சீனாவும் பாகிஸ்தானும் சேர்ந்து வைத்துள்ளத்தில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகவே அதாவது 100 அணு குண்டுகள் மட்டுமே இந்தியா வசம் உள்ளன.
 
 
இந்தியாவுக்காக உண்மையிலேயே அக்கறைப்படவும் அணுசக்தியை மேம்படுத்தவும் யாருக்கும் சிரத்தை இல்லை. அணு சக்தி மற்றும் அணு ஆயுத மேம்பாடு இந்தியாவுக்கு அவசியம். இதற்கான அணுசக்தி தொழில்நுட்பமும் இன்றியமையாதது என்பதை சரியான முறையில் உணர்ந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். மறுபுறம் நமது அணு பாதுகாப்பு, ராணுவம் சார்ந்த அணு சக்தி, வெளிநாட்டு இறக்குமதியையை பெருமளவு சார்ந்திருக்கிறது. இது கவலைத் தரக்கூடியது, இடர் அளிக்கக் கூடியது. உலக மக்கள் தொகையில் நாம் 6ல் 1 பங்காக இருக்கிறோம். நாம் எண்ணெய், நிலக்கரி, எரிவாயு போன்றவற்றை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோம் என்பது வெட்கக் கேடானது. நாம் ஆண்டுதோறும் நமது எரிசக்தி பொருள்களின் இறக்குமதிக்காக 100 பில்லியன் டாலர் செலவு செய்கிறோம். தற்போது 100 பில்லியன் டன் நிலக்கரியை இறக்குமதி செய்கிறோம். இதற்காக மட்டும் 5 பில்லியன் டாலர் செலவாகிறது. இது 2020ல் 45 பில்லியனாக உயரும், 2050ல் இது 250 பில்லியனாக உயரும்.நாம் இப்போது 1,50,000 மெகாவாட் மின்சக்தியை உற்பத்தி செய்து வருகிறோம். 2030ல் இதை 6 மடங்குக்கும் அதிகமாக அதாவது 9,50,000 மெகாவாட்டாக உயர்த்த வேண்டிய தேவை உள்ளது. நிலக்கரியை இறக்குமதி செய்து கொண்டிருந்தால் இந்த இலக்கை நிறைவேற்ற முடியாது. இதைச் சொல்வதற்கு எந்த தீர்க்கதரிசியும் தேவையில்லை. நீண்டகால கண்ணோட்டத்தில் பார்த்தால் நம் தேவையைப் பூர்த்தி செய்ய உள்நாட்டு எரிசக்தி கட்டாயம் தேவை. இதற்கு அணுசக்தி முதன்மையானது.
 
 
இனி அனல் மின்சாரத்திற்கும், அணு மின்சாரத்திற்கும் இடையே உள்ள இயல்புகள் குறித்து குறிப்பாக சூற்றுச்சூழல் விவகாரம் மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய இடர்கள் ஆகிய கண்ணோட்டத்தில் அலசிப் பார்ப்போம். ஒன்று சாதகமாக இருந்தால் மற்றொன்று சாதகமற்றதாக இருக்கும். 1000 மெகாவாட் அனல் மின் நிலையம் காரணமாக ஆண்டுதோறும் 400 பேர் உயிர் இழக்கிறார்கள். இந்த உயிர் இழப்பு காற்று மாசுபடுதல் வாயிலாகவும் தட்பவெட்ப நிலை மாற்றம் காரணமாகவும் நிகழ்கிறது என வல்லுனர்கள் கூறுகின்றனர்.அணுசக்தி மின்சார உற்பத்தியிலும் சில இடர்பாடுகள் உள்ளன, விபத்துக்களும் நேரிட்டுள்ளன. ஆனால் பல பத்தாண்டுகளுக்கு ஒரு முறைதான், அதாவது 60 ஆண்டுகளில் நான்கு விபத்துக்கள் நேரிட்டுள்ளன.இவற்றில் 66 பேர் நேரடியாக உயிர் இழந்துள்ளனர். சுமார் 4000 பேர் மறைமுக நிகழ்வுகள் காரணமாக உயிர் இழந்துள்ளனர்.அனல் மின்சாரத்தோடு ஒப்பிடும்போது அணு மின்சாரம் குறைந்த இடர்பாடு உடையதுதான்.விமானங்களில் செல்கிறோம், உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சுமார் 1000 பேர்விமான விபத்துகளில் இறக்கிறார்கள் என்று புள்ளி விவரம் தெரிவிக்கிறது. 2007ஆம் ஆண்டு இந்தியாவில் மட்டும் போக்குவரத்து சார்ந்த விபத்துகளால் 1.14 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளார்கள். இப்படியெல்லாம் நடத்து விட்டதே என நிலக்கரி பயன்பாட்டை தடுத்துவிடுவீர்களா? அல்லது விமான போக்குவரத்து வேண்டாம் பேருந்து போக்குவரத்து வேண்டாம் என்று சொல்வீர்களா? இப்படிச் சொன்னால் சிரிக்கமாட்டார்களா?மற்றவற்றுடன் ஒப்பிடும்போது அணு சக்தி மேலானதுதான். குறைந்த இடர்பாடு உடையது. தூய்மையானதும் கூட. இப்படி இருக்கும்போது அணு சக்தி மிகவும் அபாயகரமானது என்று சிலர் முத்திரை குத்துவது ஏன்? இனி, நாம் அணு சக்தியை உற்பத்தி செய்வது குறித்தும், அணு ஆயுதத்தை உற்பத்தி செய்வது குறித்தும் கவனிப்போம்.
 
 
நமது அணுசக்தி திட்டங்களுக்கு யுரேனியம்தான் அடிப்படையாக உள்ளது. நம்மிடம் யுரேனியம் குறைந்த அளவுதான் இருக்கிறது. இது மேகலாயாவில் உள்ள காஸி மலைக்குன்று பகுதியில் பெருமளவு உள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஜார்கண்ட்டில் உள்ள ஜடுகுடாவிலும், ஆந்திராவில் உள்ள தும்மலப்பள்ளியிலும் யுரேனியம் இருக்கிறது. உலகளாவிய யுரேனியம் வர்த்தகம் என்பது அரசியல் சார்ந்தது. இதை என்.எஸ்.ஜி எனப்படும் அணுத் தொழில்நுட்பம் வழங்குகின்ற நாடுகளின் குழுமம் கட்டுப்படுத்துகிறது. என்.எஸ்.ஜி. யால் அங்கீகரிக்கப்பட்ட நாடுகளுக்கு மட்டும்தான் யுரேனியம் கிடைக்கும். இந்த நாடுகளில் உள்ள அணு உலைகளை என்.எஸ்.ஜி கண்காணிக்கும். இந்த நிபந்தனையில் பேரில் மட்டுமே அணுத் தொழில்நுட்பம், இயந்திரங்கள் யுரேனியம் வழங்கப்படும்.இந்தியா, அமெரிக்காவுடன் அணு சக்தி ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. என்.எஸ்.ஜி நாடுகளிலிருந்து யுரேனியத்தை இறக்குமதி செய்து கொள்வதற்காகவே இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் உள்ள 22 அணு உலைகளில் 14 அணு உலைகள் என்.எஸ்.ஜி. நாடுகளின் கண்காணிப்புக்கு உட்பட்டவையாகும். எஞ்சியுள்ள 8 அணு உலைகளில் மட்டுமே அணு ஆயுதங்களை தயாரிக்க முடியும். அணு சக்தி உலைகளுக்காக வெளிநாடுகளிலிருந்து யுரேனியத்தை இந்தியா இறக்குமதி செய்ய முடியும். ஆனால் அது குறுகிய கால தீர்வாகத்தான் இருக்கமுடியும். ஏனெனில் அது மிகுந்த செலவு பிடிக்கக்கூடியது. இந்தியா போன்ற பரந்து விரிந்த நாட்டுக்கு இது மிகுந்த சுமையை அளிக்கக்கூடியது. பெரிய அணுசக்தி ஆலைகளுக்கும் அணுசக்தி பாதுகாப்புக்கும் நாம் வெளிநாட்டு யுரேனியத்தையே நெடுங் காலத்திற்கு நம்பிக் கொண்டிருக்க முடியாது. உள்நாட்டிலேயே எரிபொருள் தேவையை நிறைவு செய்து கொள்ள வேண்டும்.
 
 
அதிர்ஷ்டவசமாக உலகிலேயே மிக அதிக அளவு தோரியம் நம் நாட்டில்தான் உள்ளது. இது யுரேனியத்திற்கு மாற்றாகும். தோரியம் எதிர்காலத்தில் அணு சக்திக்கான முக்கிய இடுபொருளாக அமையக்கூடும். இதற்கான தொழில்நுட்பத்தை நாம் செம்மைப்படுத்தி வருகிறோம். இது நிறைவுபெற்ற பிறகு தோரியத்தைப் பயன்படுத்தி அணுசக்தியை தயாரிக்க முடியும். ஆனால் இந்த தொழில்நுட்பத்தை செம்மைப்படுத்தும் வரை நாம் உள்நாட்டிலேயே கிடைக்கக்கூடிய யுரேனியத்தை தோண்டி எடுக்க வேண்டும். முதலாவதாக வெளிநாட்டு இறக்குமதியைச் சார்ந்திருப்பதை குறைக்கவேண்டும். அணுசக்தி உற்பத்திக்கான இடுபொருளுக்கு வெளிநாட்டையே நம்பிக்கொண்டிருக்கக் கூடாது. அடுத்ததாக 8 அணு சக்தி ஆலைகளை அணு ஆயுதங்கள் உற்பத்திக்கு பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த இரண்டு விவகாரங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவைதான். இப்போது திரையை விலக்கிப் பாருங்கள். அங்கு யார் யாருடைய முகங்கள் பளிச்சிடுகின்றன என்பதைப் பாருங்கள். 20 ஆண்டுகாலமாக நடைபெற்றுவரும் காஸி மலைப்பகுதி போராட்டத்திலும் கூடங்குளம் அணு உலைப் போராட்டத்திலும் ஒரே முகங்கள்தான் பளிச்சிடுகின்றன.
 
 
இந்தியா அணு சக்தி ரீதியாக எழுச்சிப் பெறக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகின்ற தீய சக்திகள்தான் இந்த இரண்டு போராட்டங்களுக்கும் பின்னணியில் உள்ளன. கூடங்குளம் போராட்டத்திற்குப் பின்னால் கத்தோலிக்க சர்ச்தான் உள்ளது என்பது சற்று காலதமதமாகவேனும் வெளிச் சத்துக்கு வந்துவிட்டது. நடு நிலை ஊடகச் செய்திகள், கூடங்குளம் அணு உலை போராட்ட எதிர்ப்பில் முன்னணி வகிக்கும் எஸ்.பி. உதயகுமார், இடிந்தகரை கிராமத்தில் உள்ள கிறிஸ்தவ பாதிரி ஜெய்குமாருடன்தான் தங்கியிருக்கிறார். இந்த கிறிஸ்தவ பாதிரி ஜெய்குமார் போராட்டத்தை முழுமையாக ஆதரிக்கிறார்.கூடங்குளம் பாதிரி ததியூஸ், உவரி புனித அந்தோனியார் சர்ச் பாதிரி எஸ். பீட்டர் ஆகியோரும் போராட்டத்தை ஆதரித்து வருகிறார்கள். இடிந்தகரை உண்ணாவிரதப் போராட்டத்திற்கு இவர்கள் எல்லாம் ஆட்களை அனுப்பிக் கொண்டே இருக்கிறார்கள். அதனால்தான் அந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. திருநெல்வேலி பேராயரும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார் என்பதை பாதிரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இது பாதிரிகளால் நடத்தப்படுகின்ற போராட்டமாகும். உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்கிறவர்களுக்கு போக்குவரத்து வசதி, செலவுக்கு பணம், சாப்பிட பிரியாணி ஆகியவற்றை ஏற்பாடு செய்து கொடுப்பவர்கள் பாதிரிகள்தான். கூடங்குளம் அணு மின்நிலைய அதிகாரிகள் மீது கல்வீச்சு நடைபெற தூண்டுதலாக இருந்தவர்களும் பாதிரிகள்தான். போராட்டக்  களத்திலிருந்து பாதிரிகளை விரட்டியடித்தால் போராட்டம் தானாக முடிவுக்கு வந்துவிடும்.
 
 
மேகாலய மாநிலத்தில் கிறிஸ்தவர்கள்தான் பெரும்பான்மையினராக உள்ளனர். அங்கு இந்திய யுரேனிய படிவில் 6ல் 1 பங்கு உள்ளது. ஆனால் 1990ல் இருந்து 1 கிலோ கிராம் யுரேனியம் கூட தோண்டி எடுக்கப்படவில்லை. ஏனெனில் காஸி மலைக்குன்று பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் 20 ஆண்டுகாலத்திற்கும் மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதை மேகாலயா பாதிரிகள் ஆதரிக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் மாணவர்களை ஏவிவிட்டு போராட்டத்தை நடத்துபவர்களே பாதிரிகள்தான். வன்முறை நிகழ்வுகள், சாலை மறியல்கள், போக்குவரத்துமுடக்கங்கள், பேரணிகள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், அரசு அலுவலகங்களை தீ வைத்துக் கொளுத்துதல், அரசு நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைத்தல் என்றெல்லாம் நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. (http:/wise-uranium.org/upinml.html) போராட்டக் காரர்களுக்காக யாரெல்லாம் பேசுகிறார்கள்? ஷில்லாங் பேராயர் டொமினிக் ஜலா குரல் கொடுக்கிறார். (http://www.cathnewsindia.com/2009/10/29/uranium-mining-arch-bishop-வாண்ட்ஸ் dialogue-2/) போராட்டக்  களத்திலிருந்து பாதிரிகளை அப்புறப்படுத்தினால் போராட்டம் தானாகவே தணிந்துவிடும். 
 
ஜார்கண்டில் உள்ள யுரேனியப் படிவை எடுப்பதற்குக் கூட முட்டுக்கட்டைப் போடத் தொடங்கிவிட்டார்கள். அங்குள்ள வனவாசிகளிடையே சர்ச் ஆதரவு பெற்ற தொண்டு நிறுவனங்கள் தீவிர பிரச்சாரம் செய்துவருகின்றன. ஜார்கண்டில் யுரேனியத்தை தோண்டி எடுக்கக்கூடாது என்று குரல் கொடுத்து வருகின்றனர்.
 
முத்தாய்ப்பு
 
மேகலயாவில் நடைபெற்றுவரும் யுரேனியத்தை தோண்டியெடுக்கக் கூடாது என்ற போராட்டமும் கூடங்குளத்தில் உள்ள அணுசக்தி ஆலையை மூடவேண்டும் என்ற போராட்டமும் ஒன்றோடொன்று தொடர்புடையவைதான்.திரைக்கதை எழுதியவர்கள், வசன கர்த்தாக்கள், இயக்குனர்கள் இன்னும் திரைக்குப் பின்னால் உள்ள பிற கலைஞர்கள் ஒரே நபர்கள்தான். அவர்களுக்கு உலகளாவிய தொடர்பு உள்ளது. பணமும் பல்வேறு இடங்களிலிருந்து வந்து குவிந்து கொண்டிருக்கிறது. அவர்களது ஒரே இலக்கு இந்தியா அணுசக்தி ரீதியாக எழுச்சிபெற அனுமதிக்கக் கூடாது என்பதுதான். இந்தியா அணுசக்தித்  துறையில் எழுச்சிப் பெறுவதை முடக்க வேண்டும் என்பதற்குப் பின்னணியில் அரசியல் மற்றும் பூகோள ரீதியான செயல்திட்டம் உள்ளது. ஆனால் ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை ஏற்படும் என்பதற்கேற்ப அணுசக்தியை முடக்க நினைத்தால் அதற்கு நேர் எதிரான விளைவு ஏற்பட்டே தீரும்.
 
குருமூர்த்தி  
 

 

Tuesday, November 15, 2011

உட்காராதீங்க! - உடல் நலம்

 
நாம் உட்கார ஆசைப்பட்டால் அதுவே நம்மை அழித்துவிடும். உட்காருவதுதான் நம்மைக் கொல்லும் நிஜ கொலையாளி.
 
ஒரே மாதிரி நிலையில் உட்கார்ந்து படிப்பதைக் குறைந்தபட்சம் 30லிருந்து 45 நிமிடத்திற்கு மேல் தவிர்க்கவும்.
 
நடுநடுவே ஏதாவது ஒரு வேலையைச் சாக்காக வைத்துக் கொண்டு எழுந்து நிற்பது, நடப்பது அல்லது கொஞ்சம் தண்ணீர் குடிக்கச் செல்வது என்கிற மாதிரி ஓர் ஐந்து நிமிட இடைவேளை இருக்கட்டும். நம் உடல் உறுப்புகள் உட்காருவதற்காகப் படைக்கப்பட்டவை அல்ல. அதனால் நீங்கள் நடுநடுவில் எழுந்து நின்று நடக்கணும்.
 
வயலில் வேலை செய்பவர்கள், காட்டில் சுற்றி அலைபவர்கள், மற்ற உயிரினங்கள் எல்லாமே கால்களை அதிகமாக உபயோகப்படுத்துகிறார்கள். ஆனால் நாம்?உட்காருவது ஆறு மணிக்கு அதிகமாக இருப்பது உங்கள் ஆயுளை 40 சதவிகிதம் குறைக்கிறது. இந்தப் பழக்கம் நீடிக்குமானால் 15 வருடத்திற்குள்ளாகவே நாம் நோயாளி ஆகிவிடுவோம். 
 
நீங்கள் உட்கார ஆரம்பித்தவுடனே, உங்கள் கால்களின் தசையின் வேலைகள் நிறுத்தப்படுகின்றன.கொழுப்பைக் கரைக்கிற 90 சதவிகிதம் செயலிழக்கிறது. உட்கார்ந்தே இருப்பவர்களுக்கு, இரண்டு மணி நேரம் முடிந்ததும் நல்ல கொலஸ்ட்ரால் 20% கிடைப்பதில்லை.
 
உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு, மற்ற நிற்கிற வேலை பார்ப்பவர்களை விட 2 மடங்கு அதிகமாக இதய சம்பந்தமான தொந்தரவுகள் ஏற்படும்.
 
சதா உட்கார்ந்தே இருந்தால் இன்சுலின் கொஞ்சம் கொஞ்சமாகச் சுரப்பது நின்று நீரிழிவு நோய்க்குப் பிள்ளையார் சுழி போட்டுவிடும். பிறகு என்ன? நிரந்தப் படுக்கைதான்!
 
மூன்று மணிக்கும் அதிகமாக டீ.வி. முன்பு உட்காருபவர்கள் தாங்களே 64%க்கும் அதிகமாக இதய நோயை வெற்றிலைப் பாக்கு வைத்து அழைத்து மரணத்திற்கு அடியெடுத்து வைத்து விடுகிறார்களாம்.  
 
எனவே, எப்போதெல்லாம் முடியுமோ, அந்தச் சமயங்களில் உட்காருவதைத் தவிர்த்து, குனிந்து, நடந்து, குதித்து இளமையோட வாழுங்க!

Sunday, November 13, 2011

ஐஸ்வர்யா ராய்


உலக அழகி ஐஸ்வர்யா ராய் 1973-ம் ஆண்டு நவம்பர் முதல் தேதி கர்நாடக மாநிலம் மங்களூரில் பிறந்தார். இந்தி, ஆங்கிலம், மராத்தி மொழிகள் தெரியும் என்றாலும் ஐஸ்வர்யா ராயின் தாய் மொழி துளு. கர்நாடகாவில் மேற்குக் கரையோரம் உள்ள பகுதிகளில் மக்கள் பேசும் மொழி இது. அவருடைய அப்பா கிருஷ்ண ராய் கப்பலில் அதிகாரியாகப் பணியாற்றினார். அம்மாவின் பெயர் பிருந்தியா. ஐஸ்வர்யா ராய்க்கு ஆதித்யா ராய் அவருடைய அண்ணன். வீட்டில் ஐஸ்வர்யா ராய்க்கு ஐஷு, குல்லு என்ற செல்லப் பெயர்களும் உண்டு.

ஐஸ்வர்யா ராய்க்கு நான்கு வயதாக இருந்தபோது, அவர்கள் குடும்பம் மங்களூரிலிருந்து மும்பைக்கு குடிபெயர்ந்தது. மும்பை சாந்தா குரூசில் இருக்கும் ஆர்ய வித்யா மந்திர் உயர்நிலைப் பள்ளியில் சேர்த்தார்கள். கப்பல் வேலை காரணமாக அவருடைய அப்பா ஆண்டில் சில மாதங்கள் மட்டுமே குடும்பத்துடன் இருப்பார். மற்ற நேரமெல்லாம் கடல் பயணம்தான். எனவே, அப்பா எப்போது கப்பலில் வேலை முடிந்து மும்பைக்குத் திரும்புவார் என்று குழந்தைகள் ஆர்வமாகக் காத்திருப்பார்கள்.  பள்ளிக்கூடத்தில் மிகவும் நன்றாகப் படிக்கிற மாணவிகளில் இவரும் ஒருவர். ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது, ஒவ்வொரு தேர்விலும் இவர்தான் முதல் ரேங்க். ஒரே ஒரு முறை மூன்றாவது ரேங்க் வாங்கினபோது, அன்று முழுவதும் கவலையாக இருந்தார். இறுதிப் பரிட்சையில் மீண்டும் நாம்தான் முதல் ரேங்க் வாங்கவேண்டும் என்ற நோக்கத்தோடு கடுமையாகப் படித்தார். முழு ஆண்டுத் தேர்வு முடிவுகள் வெளியானபோது ஐஸ்வர்யா ராய்க்கு ஒரே சந்தோஷம். காரணம் ஏழாம் வகுப்பின் அத்தனை பிரிவுகளிலும் இருக்கும் மாணவர்களை விட அதிக மார்க் வாங்கியிருந்தார்.ஏழாம் வகுப்பு படிக்கும்போது ஒரு பரத நாட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்க ஐஸ்வர்யா ராய் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு முன்பாக பள்ளிக்கூடத்தில் விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. அதில் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா வேகமாக ஓடும்போது தடுக்கி விழுந்துவிட, கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இரண்டு மாதம் மாவு கட்டு போட்டுவிட, அவரால் நடனம் ஆட முடியாமல் போனது. 

அந்தக் காலத்தில் ஒலிநாடாக்களில் தான் பாட்டு கேட்க வேண்டும். ஐஸ்வர்யா ராயின் அம்மாவுக்குப் பழைய இந்திப் படப்பாடல்கள் பிடிக்கும். அண்ணனுக்கு பாப் இசை பிடிக்கும். ஆனால் ஐஸ் ஹிந்துஸ்தானி, கர்நாடக இசை, கிளாசிகல் நடனம் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டிருந்ததால், இந்திய பரம்பரிய இசையை விரும்பிக் கேட்பார். அவ்வளவாக சினிமாவுக்குப் போனதில்லை. ரேடியோவில் ‘சாயாகீத்’ என்ற நேயர் விருப்பம் மற்றும் தூர்தர்ஷனில் ஞாயிற்றுக் கிழமை சினிமா இரண்டும்தான் ஐஸ்வர்யா ராய்க்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்.  சின்ன வயதில் ஐஸ்வர்யா ராயும், அண்ணன் ஆதித்யாவும் எதற்கெடுத்தாலும் சண்டைபோட்டுக் கொள்வார்கள். ‘அவள் சின்னப் பெண்தானே! விட்டுக் கொடுத்துவிடு’ என்று அம்மா சொன்னால், ‘நான் அவளைவிடப் பெரியவன் இல்லையா? அண்ணனுக்காக அவள் விட்டுத் தரட்டுமே!’ என்று கோபப்படுவார் ஆதித்யா. ‘இப்போது நினைத்துப் பார்த்தால் அந்தச் சண்டைகள் எல்லாம் எத்தனை குழந்தைத்தனமானவையாகத் தோன்றுகின்றன’ என்று சிரிக்கிறார் ஐஸ்வர்யா ராய்.பள்ளி படிப்பை முடித்தவுடன், மும்பையில் உள்ள ஜெய்ஹிந்த் கல்லூரியில் இன்டர்மீடியட் படிப்பை முடித்தார். பள்ளி இறுதித்தேர்வில், ஐஸ்வர்யா வாங்கிய மார்க் 90%. தொடர்ந்து மாதுங்காவில் இருக்கும் டி ஜி ரூபரல் கல்லூரியில் சேர்ந்து படித்தார். ஆரம்பத்தில் விலங்கியல் பாடத்தில் நிறைய ஆர்வம் கொண்டிருந்த அவர், டாக்டருக்குப் படிக்க விரும்பினார். ஆனால், கல்லூரியில் சேர வேண்டிய சமயத்தில் அவரது ஆர்வம் திசை மாறி, ஆர்கிடெக்சர் என்ற கட்டடக் கலை படிப்பின் பக்கம் திரும்பியது. அப்போது ஓய்வு நேரங்களில் மாடலிங் வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன. ஒரு கட்டத்தில், மாடலிங் வாய்ப்புகள் மிகுதியாக வரவே, படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு, முழு நேர மாடலிங்கில் இறங்கினார். 

மாடலிங் துறையில் அவர் காலடி வைத்தபோது அவருக்குப் பதினான்கு வயது இருக்கும். அவர் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். பள்ளிக்கூட மணவ, மாணவிகள் பயன்படுத்தும் கேம்லின் பென்ஸில் விளம்பரம்தான் அவர் தோன்றிய முதல் விளம்பரம். புகைப்படக் கலையில் ஆர்வம் கொண்ட ஐஸ்வர்யா ராயின் ஆசிரியர் ஒருவர், விளையாட்டாகத் தன் சுட்டி மாணவியை சில போட்டோக்கள் எடுத்தார். அந்தப் புகைப்படங்கள் ஒரு ஃபேஷன் பத்திரிகையில் வெளியாயின. அதைப் பார்த்து விட்டுத்தான் ஐஸ்வர்யா ராய்க்கு விளம்பரத்தில் வாய்ப்புக் கிடைத்தது.  




ஹர்கோபிந்த குரானா - நோபல் பரிசு பெற்ற இந்திய விஞ்ஞானி


அமெரிக்காவில் இருக்கின்ற மச்சசுசெட்டஸ்  இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜியில் பயாலாஜி மற்றும் கெமிஸ்ட்ரி பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார். பயோ கெமிஸ்ட்ரியில் முன்னணி ஆராய்ச்சியாளரான இவருக்கு 1968 ஆம் வருடம் மருத்துவத்துறைக்காக நோபல் பரிசு கிடைத்தது. அறிய கண்டுபிடிப்புகளுக்காக மருத்துவத்துறையில் அவ்வருடம் மூன்று பேருக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டது. அதில் இவரும் ஒருவர்.தற்போது பாக் பகுதியில் இருக்கின்ற மேற்கு பஞ்சாபில் உள்ள சிறிய கிராமமான ராய்பூரில் 1922 வருடம் பிறந்தவர். இவரது பெற்றோருக்கு இவர் 5 வதாகப் பிறந்தவர். இவரது தந்தை கிராமத்தின் கணக்குப்பிள்ளை ஆவார். அச்சமயத்தில் இவரது கிராமத்தில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் 100 கும் குறைவு.


பாகிஸ்தானில் இருக்கின்ற முல்தானில் பள்ளிப் படிப்பை முடித்த இவர் 1943 இல் தனது பட்டப்படிப்பையும் 1945 இல் பட்ட மேற் படிப்பையும் கெமிஸ்ட்ரி மற்றும் பயோ-கெமிஸ்ட்ரியில் முடித்துள்ளார். அதைத் தொடர்ந்து இந்திய அரசாங்கம் அவரது மேற்படிப்பிற்காக நிதி உதவி செய்து அவரை இங்கிலாந்தில் இருக்கின்ற லிவெர்பூல் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைத்தது. அங்கு அவர் தனது ஆராய்ச்சிக்காக 1948 வருடம் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். அதன் பிறகு சுவிட்சர்லாந்த் சென்ற அவர் பெடரல் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜியில் மேலும் தனது  ஆராய்ச்சிப் படிப்பினைத் தொடர்ந்தார். அச்சமயத்தில் அங்கே சந்தித்த எஸ்தர் என்கிற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.தனது ஆராய்ச்சியை மேற்கொண்ட குரானா 1952 ஆம் வருடம் அங்கிருந்து கனடா நாட்டில் வான்கூவரில் இருக்கின்ற பிரிட்டிஷ் கொலம்பியா ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றினார். 8 வருடங்கள் ஆராய்ச்சிகளை மேற் கொண்டு வந்த அவர் அங்கிருந்து 1960 ஆம் வருடம் அமெரிக்காவில் இருக்கின்ற விஸ்கான்சின் பல்கலைக் கழகத்திற்கு சென்றார்.


அங்கு அவர் தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து மரபணு சம்பந்தப்பட்ட ஆராச்சியில் ஈடுபட்டு வெற்றி கண்டதற்காக 1968 ஆம் வருடம் அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது.  அதைத் தொடர்ந்து அவர் 1970 ஆம் வருடம் மச்சசுசெட்டஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். தனது இடைவிடாத ஆராய்ச்சியால் பல அறிய கண்டுபிடிப்புகளை உலகிற்கு வழங்கியுள்ள குரானா அவர்கள் 2007 ஆம் வருடம் பணியிலிருந்து ஓய்வு பெரும் வரை அந்த நிறுவனத்திலேயே பணிபுரிந்து வந்துள்ளார்.எண்ணற்ற இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் கொடுத்து அவர்களது ஆராய்ச்சிகளுக்கு வழிகாட்டி வந்துள்ளார். ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தாலும் கூட அவருக்கு பேராசிரியராக இருந்து பல மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருப்பதுதான் மிகவும் பிடித்தமான ஒன்றாகும்.பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் கூட அவரைத்தேடி மாணவர்கள் வந்து கொண்டே இருந்தனர். அவர் மாணவர்கள் மீது அபார நம்பிக்கை கொண்டிருந்தார் மாணவர்களும் அவர் மீது பெரும் மரியாதையும் நம்பிக்கையும் வைத்திருந்தனர்.

தோன்றிப் புகழோடு தோன்றுக என்கிற வள்ளுவரின் வாக்கினுக்கு ஏற்ப வாழ்ந்துவிட்டு சென்றுள்ள பாரதத் தாயின் புதல்வர் ஹர்கோபிந்த குரானாவிற்கு நமது ஆழ்ந்த அஞ்சலியை செலுத்திடுவோம்.89 வயதில் காலமாகியுள்ள  ஹர்கோபிந்த குரானவிற்கு மனைவி மற்றும் மகள் ஜூலியா மகன் தவே ஆகியோர் உள்ளனர்.தனது அயராத ஆராய்ச்சியினால் மனித குலத்திற்கு மாபெரும் தொண்டு செய்துவிட்டுச் சென்றுள்ள குரானாவின் மறைவு பற்றிய செய்திகளைக் நமது ஊடகங்களில் காணமுடியவில்லை.பயங்கரவாதி கள்ளக் கடத்தல்காரன் மாபியா கும்பலின் தலைவன் தாவுத் இப்ராஹீம் மரணப் படுக்கையில் கிடக்கிறான் என்றும் அவன் இறந்த பிறகு அவனது உடல் மும்பைக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்று அவன் தனது விருப்பத்தினை கூறியுள்ளான் என்று செய்திகளை போட்டு வருகின்றனர்.நாட்டில் எத்தனையோ பெண்களுக்கு அன்றாடம் குழந்தை பிறந்து கொண்டேதான் இருக்கின்றது.  ஆனால் ஐஸ்வர்யாராய்க்கு என்ன குழந்தை எப்போது பிறக்கப் போகிறது என்பதிலேயே கடந்த ஒரு வாரகாலமாக பொறுப்பான நமது ஊடகங்கள் கவனம் செலுத்தி வருகின்றன.ஆனால் மனித குலத்திற்கு உண்மையான தொண்டினை செய்து விட்டுச் சென்றுள்ள விஞ்ஞானி ஹர்கோபிந்த குரானாவை மறந்து விட்டனர்.  ஆராய்ச்சியாளர்கள் உள்ளத்தில் என்றென்றும் அவரது நினைவு இருந்துகொண்டே இருக்கும். அவரது ஆன்மா சாந்தி அடைந்திட பிரார்த்தனை செய்திடுவோம்.



 ஹர்கோபிந்த குரானா பெற்றுள்ள நோபல் பரிசு குறித்து விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டு.





Saturday, November 12, 2011

கலாமுக்கு ஒரு பதில் அறிக்கை! - ஓ பக்கங்கள்,ஞாநி

அன்புள்ள டாக்டர் அப்துல் கலாம் அவர்களுக்கு

வணக்கம்.


நான் உங்கள் ரசிகன் அல்ல. விமர்சகன். “நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்” என்று உங்களை சில வாரம் முன்னால் இதே பக்கங்களில் கோரியிருந்தேன். நீங்கள் கேட்கவில்லை. உலகத்தில் விஞ்ஞானி என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் எவரும் செய்யத் துணியாத ஒரு பிரகடனத்தைச் செய்திருக்கிறீர்கள். கூடங்குளம் அணு உலை 100 சதவிகிதம் பாதுகாப்பானது என்று! அணுத் தொழில்நுட்பம் 100 சதவிகிதம் பாதுகாப்பானது என்று எந்த அணு விஞ்ஞானியும் சொல்லமாட்டார். நீங்கள் அணு விஞ்ஞானி இல்லை என்பது எனக்குத் தெரியும். எல்லாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அணு ஆயுத, ராணுவ ஆதரவாளரான நீங்கள் அணு உலைக்கு எதிராகப் பேசுபவர்கள் மீது அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேறு சொல்லியிருக்கிறீர்கள்.உங்கள் விருப்பப்படி உதயகுமாரன் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயத் தயாராக இருக்கிறது. 

அணு உலைகளை ஆதரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களோ நாங்களோ ஒருபோதும் சொல்வதில்லை. ஏனென்றால் நாங்கள் காந்திய வாதிகள். அதுதான் நமக்குள் அடிப்படை வித்தியாசம். நீங்கள் வெளியிட்டிருக்கிற அறிக்கைக் கட்டுரையில் பல முழு உண்மைகளை மறைக்கிறீர்கள். பல அரை உண்மைகளை அள்ளி வீசுகிறீர்கள். ஒவ்வொன்றாகப் பார்த்தால் இடம் போதாது. முடிந்த வரை இங்கே பார்ப்போம்.செர்னோபில் விபத்தில் 57 பேர் மட்டுமே இறந்ததாகச் சொல்லியிருக்கிறீர்கள். அதைவிட அதிகமாக சாலை விபத்தில் பலர் சாவதாக ஓர் அபத்தமான ஒப்பீடு செய்திருக்கிறீர்கள். சாலைவிபத்து ஏற்பட்டால், விமான, ரயில் விபத்து ஏற்பட்டால், சுற்றிலும் 30 கிலோமீட்டர் சுற்றளவுக்கு மனித நடமாட்டமே அடுத்த பல வருடங்களுக்குக் கூடாது என்ற நிலைமை கிடையாது. ஆனால் அணு விபத்து ஏற்பட்டால், அடுத்த தலைமுறை வரை தொடரும். செர்னோபில் விபத்தினால் ஏற்பட்ட கதிரியக்கப் பாதிப்புகளில் இரண்டாயிரம் பேர் வரை செத்திருக்கிறார்கள் என்பதுதானே முழு உண்மை. அதை ஏன் சொல்லாமல் கேன்சர் கேஸ்கள் என்று மழுப்புகிறீர்கள்? 1947லிருந்து 2008 வரை 76 அணு உலை விபத்துகள் உலகில் நடந்திருக்கின்றன. (இதில் 56 விபத்துகள் செர்னோபில்லுக்குப் பிறகு நடந்தவை.) அதாவது ஒவ்வோராண்டும் ஒரு பெரிய விபத்து. அதனால் ஏற்பட்ட உயிர், உடமை, வாழ்க்கைச் சேத நஷ்டங்களின் மதிப்பு மட்டும் வருடத்துக்கு சுமார் 332 மில்லியன் டாலர்கள். எம்.ஐ.டி. என்ற உலகப் புகழ் பெற்ற நிறுவனம் (நீங்கள் படித்த குரோம்பேட்டை எம்.ஐ.டி. அல்ல) 2005லிருந்து 2055க்குள் உலகில் நான்கு பெரும் அணு விபத்துகள் நடக்கும் என்று முன்கூட்டியே கணித்திருந்தது. அதில் ஒன்றுதான் 2011ல் நடந்த புகோஷிமா விபத்து.


விபத்து மட்டுமல்ல. அணு உலைகள் இயங்கும் இடங்களிலெல்லாம் கதிரியக்க ஆபத்து இருக்கத்தான் செய்கிறது. அதை மறுப்பவர் நீங்களும் உங்கள் கும்பலும் மட்டும்தான். அமெரிக்காவின் அணு உலைகள் இயங்கும் 65 இடங்களிலும் ரத்த, மூளைப் புற்று நோய்கள் அதிகரித்திருப்பதை அவர்களுடைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இங்கே கல்பாக்கத்தைச் சுற்றிலும் முறையான ஆய்வை சுதந்திரமான விஞ்ஞானிகள், மருத்துவர்களைக் கொண்டு நடத்த உங்கள் அரசும் அணுசக்தி நிர்வாகமும் ஏன் அனுமதிப்பதில்லை?இந்தியாவில் அணு உலைகளில் விபத்தே நடப்பதில்லை என்று இன்னொரு பொய் சொல்லியிருக்கிறீர்கள். உள்ளே என்ன நடக்கிறது என்பதை வெளியிடாமல் ரகசியமாக அல்லவா அணு சக்தி நிர்வாகம் இதுவரை இருக்கிறது? அதுவேதான் நிர்வாகம், அதுவேதான் கண்காணிக்கும் உயர் அமைப்பு. குற்றவாளியே நீதிபதியாகவும் இருக்கும் வேறு எந்தத் துறையும் இந்தியாவில் இல்லை. ஒரு விபத்து நடந்து அதுபற்றி பத்திரிகைகளில் செய்தி கசிந்து சூழல் ஆர்வலர்கள் குரலெழுப்பிய பின்னர் ஒப்புக்கொள்வதுதான் அணுசக்தித் துறையின் வாடிக்கை. இப்படி கல்பாக்கத்தில் விபத்துகள் நடந்து ஆறு மாதம் கழித்து அவர்கள் ஒப்புக் கொண்ட சில விபத்துகள் இதோ: 1987- எரி பொருள் நிரப்பும்போது ரியாக்டரின் கோர் பகுதி சேதமடைந்தது. 1991- கன நீரின் கதிரியக்கத்தால் ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர். 1999- 42 ஊழியர்களுக்குக் கடும் கதிர்வீச்சு ஏற்பட்டது. 2002 - கதிரியக்கம் உள்ள 100 கிலோ சோடியம் காற்று வெளிச்சூழலில் கலந்தது. 2003 - கடும் கதிர்வீச்சுக்கு 6 ஊழியர்கள் உள்ளானார்கள். ராஜஸ்தான் உலையில் 1991ல் கதிரியக்கம் உள்ள கனநீரைத் தவறாக ஒரு காண்ட்ராக்டர் பெயிண்ட் அடிக்கக் கலந்தார். அதிலேயே பெயிண்டர்கள் முகம் கழுவினார்கள். கர்நாடக கைகா உலையில் 2009ல் கதிரியக்கம் உள்ள டிரிட்டியம் கலந்த நீரைக் குடித்த 55 ஊழியர்கள் பாதிக்கப்பட்டார்கள். கைகா ரியாக்டர் கட்டப்பட்டபோது 1994ல், கதிரியக்கம் வெளியேறாமல் தடுக்கும் வட்ட வடிவ டோம் உடைந்து நொறுங்கி 120 டன் கான்க்ரீட் கீழே விழுந்தது.இந்த விபத்து அணு உலை இயங்கத்தொடங்கிய பிறகு நடந்திருந்தால், குட்டி செர்னோபில்தான். 


அணுசக்தித் துறையின் பொறியாளர்களுக்கும் கட்டட காண்ட்ராக்டர்களுக்கும் இருக்கும் ‘நெருக்கமான உறவினால்’ டிஸைன்களின் தரத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதால் இது ஏற்பட்டது என்று (நிஜமான) அணு விஞ்ஞானியும் அணுசக்தி ஒழுங்கமைப்பு வாரியத்தின் முன்னாள் தலைவருமான ஏ.கோபாலகிருஷ்ணன் சொல்லியிருக்கிறார். அதாவது ஊழல் நடந்திருக்கிறது. இதே போன்ற ஊழல் இந்த வருடம் ஜூலையில் ரஷ்யாவில் நடந்தது. லெனின்கிராடில் அணு உலை கட்டுமானம் நடக்கும்போது தடுப்புக் கவச சுவர் கான்க்ரீட் நொறுங்கி விழுந்தது. இந்த உலை கூடங்குளத்தில் ரஷ்யர்கள் அமைக்கும் உலையின் அடுத்த மாடல். ஊழல் மிகுந்த இந்தியாவில் எப்படி அணு உலை கட்டுமானம் பாதுகாப்பானது என்று நம்பமுடியும்?இந்தியாவில் போதுமான யுரேனியம் இருக்கிறது என்று சொல்லும் நீங்கள் அது என்னவோ இலவம்பஞ்சு போல ஆபத்தில்லாமல் எட்டிப் பறிக்கும் பொருள் போல பேசுகிறீர்கள். யுரேனிய சுரங்க விபத்து, ஆபத்து பற்றி எதையும் உங்கள் கட்டுரையில் சொல்லவில்லை. இந்தியாவில் ஜார்கண்ட் மாநிலத்தில் ஜாதுகோடா யுரேனிய சுரங்கப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில், மலட்டுத்தன்மை, புற்று நோய், பிறவி ஊனம் எல்லாம் தேசிய சராசரியை விட அதிகமாகியிருப்பதை நோபல் பரிசு பெற்ற உலக அமைப்பான அணுப்போருக்கு எதிரான மருத்துவர் அமைப்பின் இந்தியக் கிளையின் ஆய்வு தெரிவித்திருக்கிறது.ஒரு பிரச்னை வருவதற்கு முன்பு அது வராது என்று சொல்வதும் வந்தபிறகு அதை முன்பே கவனித்துவிட்டோம் என்று சொல்வதும்தான் அணுசக்தித் துறையின் வழக்கம். நவம்பர் 1986 கன நீர் அழுத்த அணு உலை பாதுகாப்பு பற்றிய அறிக்கையில் அணுசக்தி நிர்வாகம் சொல்லிற்று- “இந்தியாவில் சுனாமிகள் வருவதில்லை. எனவே புயல்களை மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கிறோம்.” ஆனால் 2004ல் சுனாமி கல்பாக்கத்துக்கு வந்தது. கல்பாக்கம் உலை சுனாமியைக் கணக்கிட்டு வடிவமைக்கப்பட்டதில்லை. தப்பியது அதிர்ஷ்டமே தவிர, நீங்கள் மெச்சும் அணு விஞ்ஞானிகளின் முன்யோசனையான பாதுகாப்பால் அல்ல. மக்கள் சம்மதத்தைப் பெறுவதற்காக 200 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கச் சொல்கிறீர்கள். கல்பாக்கத்தைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு இதையெல்லாம் செய்திருக்கிறீர்களா? இல்லையே? ஏன் இல்லை? அங்கே எதிர்ப்பியக்கம் நடக்கவில்லை. எனவே லஞ்சம் கொடுக்கவில்லை, அல்லவா?


கூடங்குள அணு உலை எதிர்ப்புக்குப் பின்னால் அன்னிய சக்திகள் இருப்பதாக நீங்களும் பூச்சாண்டி காட்டியிருக்கிறீர்கள். உலகப் பொருளாதார ஏகாதிபத்திய சக்திகள் இந்தியா முன்னேறவிடாமல் தடுக்க இப்படிச் செய்வதாகச் சொல்கிறீர்கள். அந்த சக்தி யார்? அமெரிக்காதானே? அது மன்மோகன் அரசுடன் போட்ட 123 ஒப்பந்தத்தின் நோக்கம் இந்தியாவை முன்னேற்றுவதா? அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிடம் அணு உலைகளை வாங்க இந்தியாவை சம்மதிக்கவைத்த திட்டம்தானே அது? அதில் எப்படி இந்தியா முன்னேறும்? விபத்து ஏற்பட்டால் நஷ்டஈட்டை அணு உலை விற்ற கம்பெனி முழுக்க தரமுடியாது. இந்திய அரசே ஏற்கவேண்டும் என்று சொல்லும் ஒப்பந்தம்தானே அது? அதை நீங்கள், ஏன் அய்யா அப்போது குடியரசுத் தலைவராக இருந்தும் எதிர்க்கவில்லை? ஜெர்மனி அணு உலைகளை மூடுகிறது என்று நாங்கள் சுட்டிக்காட்டினால், அதற்குக் காரணம் அதனிடம் யுரேனியம் இல்லை என்றும் ஆனால் இந்தியாவிடம் போதுமான யுரேனியம் இருப்பதால் நமக்கு அணு உலைதான் லாபமானது என்றும் கதை விடுகிறீர்கள். அப்படியானால் ஏன் 123 ஒப்பந்தம் போட்டு நாம் யுரேனியத்தையும், அணு உலை இயந்திரங்களையும் வெளி நாடுகளில் வாங்க வேண்டும் ? ஏன் கூடங்குளத்துக்கு ரஷ்யாவிலிருந்து யுரேனியம் வரவேண்டும்? நம்மிடமே இருக்கிறதே?உங்கள் அசல் நோக்கம் மின்சாரமே அல்ல. அணுகுண்டுதான். மின்சார அணு உலைகளுக்கு வெளிநாட்டு யுரேனியம் வாங்கினால், நம்மிடம் உள்ள யுரேனியத்தை மொத்தமாக அணுகுண்டுகளுக்கு மட்டும் பயன்படுத்தலாம். வெளிநாட்டிலிருந்து வாங்கும் யுரேனியம் உள்ள உலைகள் மட்டும் சர்வதேசக் கண்காணிப்புக்கு உட்படும். நம் அணுகுண்டு உலைகள் கண்காணிப்பில் வராது என்பதுதானே அரசாங்கத்தின் திட்டம், இல்லையா?உங்கள் நீண்ட கட்டுரையில் ஒரே ஒரு விஷயத்தில்தான் ஏறக்குறைய முழு உண்மையைச் சொல்லியிருக்கிறீர்கள். சூரிய சக்தியும் காற்று சக்தியும்தான் முழுமையான தூய்மையான பசுமை சக்திகள். அவற்றுக்கு இந்தியாவில் மாபெரும் வாய்ப்புள்ளது என்பதுதான் அந்த உண்மை. ஆனால் அவற்றை நிலையானதாக நம்பமுடியாது என்று சொல்லி, நல்ல பாலில் பத்து சதவிகிதம் கனநீர் கலந்துவிட்டீர்கள். 


ஜெர்மனி போன்ற நாடுகள் எல்லாம் இப்போதே 20 சதவிகிதம் சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் பெறும்போது, இங்கே ஏன் முடியாது ? உங்கள் விஞ்ஞான அறிவும் கோடானுகோடி ரூபாய்களும் அதற்கல்லவா செலவிடப்படவேண்டும்? சூரியசக்தியிலிருந்து 50 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் இங்கே சாத்தியம். அவ்வளவு ஏன்? இப்போது நாம் தயாரிக்கும் மின்சாரத்தில் 40 சதவிகிதத்தை சுமார் 72 ஆயிரம் மெகாவாட்டை விநியோகிக்கும் போதே இழந்து கொண்டிருக்கிறோம். ஸ்வீடன் நாட்டில் இந்த இழப்பு வெறும் 7 சதவிகிதம்தான். விநியோகத்தில் இழப்பைக் குறைக்க விஞ்ஞானிகள் வேலை செய்தாலே, சுமார் 60 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் நமக்குக் கிடைத்துவிடும். கிராம மேம்பாட்டுக்காக புரா விடுகிறீர்களே. ஏன் ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியனிலும் 10 மெகா வாட், 50 மெகாவாட் அளவில் மாற்று எரி சக்தி மூலம் மின் நிலையம் அமைத்து தன்னிறைவு பெறும் திட்டம் உங்கள் புராவில் இடம் பெறுவதில்லை? ஏன் பிரம்மாண்ட மான ஆபத்தான கோடிக்கணக்கில் விழுங்கும் அணுதிட்டங்களே உங்களுக்கு இனிக்கின்றன? இந்த மாதம் 81-வது வயதில் நுழைந்து விட்டீர்கள். உங்கள் நூற்றாண்டு வரும்போது இந்தியாவில் அணு மின்சாரம் நிச்சயம் மொத்த தேவையில் 10 சதவிகிதத்தைக் கூட பூர்த்தி செய்திராது. ஆனால் கோடிக்கணக்கான ரூபாய்கள் வீணாகியிருக்கும். லட்சக் கணக்கான மக்கள் வாழ்க்கையை நசுக்கியிருக்கும்.

கனவு காணச் சொல்வது உங்கள் வழக்கம். எங்கள் கனவு அமைதியான இயற்கையோடு இயைந்த பசுமை வாழ்க்கை. உங்கள் கனவில் என்ன வருமோ எனக்குத் தெரியாது. ஒரு கோரமான அணு விபத்தை இந்தியாவில் உங்கள் வாழ்நாளில் நீங்கள் பார்க்கும் கொடுமை உங்களுக்குக் கனவிலும் நேராமல் இருக்கட்டும். மின்சாரம்தான் உண்மையான நோக்கம் என்றால் உங்களுக்குப் பிடித்தமான காயத்ரி மந்திரத்தைப் பின்பற்றுவீர்கள். பாரதி வார்த்தையில் அதை நினைவுபடுத்துகிறேன்:  

செங்கதிர் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம். அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக. 


அன்புடன்
ஞாநி