பி.சி.சி.ஐ.யின் தலைவர் ஸ்ரீனிவாசன்; தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த். இதனால் சென்னைக்கு அதிக லாபங்கள் என்றுதான் எல்லோரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மை நிலவரம் என்ன? கடைசியாக, 2008 டிசம்பரில் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு டெஸ்ட் மேட்ச் சென்னையில் நடந்தது. அதோடு அவ்வளவுதான். இன்று வரை சென்னையில் ஒரு டெஸ்ட் மேட்ச்கூட நடக்கவில்லை. பாரம்பரிய கிரிக்கெட் நகரமான சென்னைக்கு இப்படியொரு புறக்கணிப்பு! அடுத்த வருடம் ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்கிறது. நான்கு டெஸ்ட் மேட்சுகள் ஆடவிருக்கிறது. அதிலொன்று, அதிசயமாக சேப்பாக்கத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி அல்லது மார்ச்சில் டெஸ்ட்மேட்ச் நடைபெறும். (இந்த ஆகஸ்ட்டில், நியூசிலாந்துக்கு எதிராக ஒரு டி20 மேட்சும் சென்னையில் நடக்கவுள்ளது.) சென்னையில் எப்போது டெஸ்ட் மேட்ச் நடந்தாலும் அது ஏதாவதொரு விதத்தில் வரலாற்றில் இடம்பிடிக்கும். அந்த வரலாற்று அனுபவத்தைப் பெற இன்னும் ஒரு வருடம் காத்திருங்கள்.
இந்திய கிரிக்கெட் வீரர்களில் இப்போது அதிக விளம்பர நிறுவனங்களுடன்
ஒப்பந்தம் போட்டு, அதிகமாக சம்பாதிப்பவர் தோனி. அடுத்த இடத்தில் சச்சின்.
சச்சினுக்கு
விளம்பரங்களால் வருடத்துக்கு 40 கோடி ரூபாய் கிடைக்கிறது. ஒரு
விளம்பரத்தில் நடிக்க ஐந்தரை கோடி ரூபா சம்பளம். சச்சின், 100வது
செஞ்சுரியை அடித்தபிறகு புதிய விளம்பர
நிறுவனங்கள் எதுவும் சச்சினை அணுகவில்லை. இதனால் சச்சினின் மௌசு
குறைந்துவிட்டதா? தொடர்ந்து பலரும் ஓய்வு பெறச் சொல்வதால் சச்சின் விரைவில்
ஓய்வு பெற்றுவிடுவாரா
என்று பயப்படுபவர்களுக்கு ஒரு தகவல்.‘எனக்கு எப்போது தோன்றுகிறதோ அப்போது
தான் ஓய்வு பெறுவேன்’ என்று சமீபத்தில் அறிவித்திருக்கிறார் சச்சின்.
நல்லவேளை, சச்சின்
ஆஸ்திரேலியாவில் பிறக்கவில்லை. இரண்டு ஒருநாள் உலகக் கோப்பையைப் பெற்றுத்
தந்த ரிக்கி பாண்டிங்கை அந்நாடு சி.பி. முத்தரப்புப் போட்டியின் பாதியிலேயே
தூக்கியது.
திறமையை விடவும் பங்களிப்புக்கே ஆஸ்திரேலியாவில் மதிப்பு அதிகம். ஆனால்,
இந்தியாவில் சச்சினுக்கு அந்தளவுக்கு நெருக்கடியில்லை. சச்சினின் ஓய்வை
விளம்பரங்கள் முடிவு
செய்வதாக இருந்தால் சச்சின் 2014 ல்தான் ஓய்வு பெறுவார் என்கிறார்கள்
விமர்சகர்கள். இப்போது டெண்டுல்கர் வசமுள்ள 17 விளம்பர நிறுவனங்களுடனான
ஒப்பந்தம் 2014 வரை
நீடிக்கிறது. இதனால்தான் டெண்டுல்கர் தம் ஓய்வு அறிவிப்பைத் தாமதப்படுத்தி
வருகிறார் என்றொரு பேச்சு அடிபடுகிறது. எனவே, 2014வரை சச்சின் ஆட்டத்தை
ரசிப்பதில் ஆபத்து
எதுவும் நிகழாது என்று நம்பலாம்.
சச்சின், உங்களுடைய 100 சதங்கள் சாதனை யாரால் முறியடிக்கப்படும் என்று
நினைக்கிறீர்கள் என்கிற கேள்வி சச்சினிடம் கேட்கப்பட்டது. அதற்கு சச்சின்
அளித்த பதில் -
‘என் சாதனையை விராட்கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் முறியடிக்க வாய்ப்புள்ளது.
இந்தியர்களால் எனது சாதனை முறியடிக்கப்பட்டால் நான் கவலைப்பட மாட்டேன்.’
- கோலியின் பெயரை சச்சின் சொன்னதில் ஆச்சர்யமில்லை. இதுவரை 12 சர்வதேச
செஞ்சுரிகள் அடித்திருக்கிறார் கோலி. ஆனால், ரோஹித் சர்மாவின் சாதனை என்ன?
அவரின்
பெயரை முன்வைக்க ஏதாவது அடிப்படைக் காரணங்கள் உண்டா என்றால் இல்லை
என்றுதான் சொல்லமுடியும். இதுவரை 80 ஒருநாள் ஆட்டங்கள் ஆடி 2 செஞ்சுரிகள்
மட்டுமே
அடித்திருக்கிறார் ரோஹித். இவர் எப்படி சச்சினின் சாதனையைத் தாண்டப்
போகிறார்? ஊர் பாசத்தில் (ரோஹித்தும் மும்பைக்காரர்தான்) சச்சின் அவருக்கு
ஆதரவு தெரிவிக்கிறார்
என்பதைத் தவிர அதில் வேறொரு நியாயமும் இருப்பதாகத் தெரியவில்லை.
No comments:
Post a Comment