Search This Blog

Tuesday, July 16, 2013

குளிர்பானம் அருந்தும்போது உடலில் உள்ள உறுப்புகள் ஏற்படும் பாதிப்புகள்

ஒரு குளிர்பானத்தைக் குடிப்பதற்காக மலை உச்சியில் இருந்து ஹீரோ குதிப்பார், கட்டடங்களைத் தாண்டுவார், வேகமாக வரும் ரயிலை சர்வ சாதாரணமாக கடப்பார். அனைவரையும் ஈர்க்கிறது இப்படி ஒரு விளம்பரம். ஒரு குளிர்பானம்கூட வாங்க முடியாமலா இப்படி ஓடுகிறார் என்று நினைக்கத் தோன்றாமல், தாகம் எடுத்தால், நேராக கார்பனேட்டட் கோலா பானங்கள் பருகத்தான் செல்கின்றோம். குளிர்பானங்கள் குடிக்காதீர்கள் என்றால், 'நான் 'டயட்’ கூல் டிரிங்தான் குடிக்கிறேன்’ என்று சமாதானப்படுத்திக்கொள்கிறோம்.  சாஃப்ட் டிரிங்ஸ் எனப்படும் குளிர்பானத்தில் என்ன சேர்க்கப்படுகிறது, இதைக் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்று அறிவோம் .

'குளிர்பானம் என்பது அதிக அளவில் சர்க்கரை கலக்கப்பட்ட பானம். இதில் எந்த ஊட்டச்சத்துக்களும் இல்லை. உடல் நலத்துக்கும் கெடுதல். இத்தகைய சோடா, டயட் குளிர்பானங்கள் குடிப்பவர்களுக்கு சர்க்கரை நோய், மாரடைப்பு, எலும்பு அடர்த்தியின்மை என்று ஏராளமான பிரச்னைகள் வரும் வாய்ப்பு அதிகம். சிலர் உடலுக்கு புத்துணர்வு அளித்து ஆரோக்கியம் அளிக்கிறது என்று நினைத்துக்கொண்டு எனர்ஜி டிரிங்ஸ் குடிக்கின்றனர். இதுவும்கூட உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். இளைஞர்களுக்கு அதிக அளவில் கலோரி அளவை அதிகரிப்பதில் 'ஜங்க்’ புட்களைத் தாண்டி எனர்ஜி டிரிங்ஸ் முன்னணியில் இருக்கிறது.'' 

 

குளிர்பானங்களில் அதிக அளவில் சர்க்கரை, கார்பன் டைஆக்ஸைடு, பாஸ்பாரிக் அமிலம், சிட்ரிக் அமிலம், காஃபின், செயற்கை சுவையூட்டிகள், செயற்கை நிறங்கள் உள்ளிட்டவை உள்ளன.

குளிர்பானத்தில் கலக்கப்படும் காஃபினே தொடர்ந்து இந்த பானத்தை அருந்தத் தூண்டுதலாக (அடிக்ஷன்) உள்ளது. 'டயட்’ குளிர்பானத்தில் ஆஸ்பர்டேம் (Aspartame) என்ற வேதிப்பொருள் சர்க்கரைக்குப் பதிலான இனிப்புச் சுவை தருவதற்காகச் சேர்க்கப்படுகிறது. இந்த ரசாயனம் மூளையில் கட்டி, இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துவதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. மேலும் பதற்றம், மன அழுத்தம், சோர்வு, தலைவலி, ஒற்றைத் தலைவலி போன்ற நரம்பியல் தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. தற்போது சில நிறுவனங்கள் ஆஸ்பர்டேமுக்கு பதில் வேறு ரசாயனங்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.

எனவே, குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட பானங்களைக் குடிப்பதற்குப் பதில், நம் பாரம்பரிய உணவுப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றினாலே போதும். நீராகாரம், நீர் மோர் என உடலுக்கு வலு சேர்க்கும் பானங்களைப் பருகலாம். பழச்சாறுகளை சர்க்கரை சேர்க்காமல் அருந்தலாம். பழங்களை கடித்துச் சாப்பிடும்போது, அதன் முழுப் பலனும் கிடைக்கும்.
 
குளிர்பானம் அருந்தும்போது உடலில் உள்ள உறுப்புகள் ஏற்படும் பாதிப்புகள் :
 
உடல் பருமன்
 
அமெரிக்காவில் 20 ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, தினமும் குளிர்பானம் குடித்த 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் உடல் பருமன் மற்றும் அது தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் குளிர்பானம் குடிக்கும் குழந்தைகளில் 60 சதவிகிதம் பேர் ஒன்றரை ஆண்டில் உடல் பருமனால் பாதிக்கப்பட்டனர்.

சர்க்கரை அதிகம் உள்ள பானத்தைக் குடிப்பதால் உடல் பருமன் ஏற்படும். ஆனால், டயட் சோடா குடித்தாலும் எடை கிலோ கணக்கில் உயரும் என்பதுதான் அதிர்ச்சி அளிக்கக்கூடிய உண்மை. குளிர்பானம் குடிக்கும்போது அது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. இந்த அளவுக்கு அதிசயமாக, சர்க்கரையானது கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் சேமித்துவைக்கிறது. இப்படி, படிப்படியாக உடல் எடை அதிகரித்து உடல் பருமன் என்ற நிலை ஏற்படுகிறது. கொழுப்பு உடலில்  படிவதுடன், கல்லீரல் உள்ளிட்ட உள் உறுப்புகளுக்குள்ளும் படிந்து பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது.
 
இதயம் மற்றும் சர்க்கரை நோய்

குளிர்பானம் குடிப்பவர்களுக்கு டைப் 2 சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். இளைஞர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை குளிர்பானம் அருந்தும் பழக்கம் மேலும் அதிகரிக்கிறது. தொடர்ந்து குளிர்பானம் அருந்துபவர்களுக்கு மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு 20 சதவிகிதம் அதிகரிக்கிறது என்கிறது ஆய்வு.


அதிலும் டயட் சோடா அருந்துபவர்களுக்கு 61 சதவிகிதமாக உள்ளது. இவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு 80 சதவிகிதமாக இருக்கிறது. உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோயானது இதய நோய்க்கான வாய்ப்பை மேலும் அதிகரிக்கிறது. இதற்கு முக்கியக் காரணம், குளிர்பானங்களில் சேர்க்கப்படும் ஃபிரக்டோஸ் கார்ன் சிரப். இனிப்புச் சுவைக்காகச் சேர்க்கப்படும் இந்த சிரப்பானது உடலின் வளர்சிதை மாற்றப் பணிகளைப் பாதித்து, இதய நோய்கள் மற்றும் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

பற்கள் / எலும்புகள்

குழந்தைகளின் எலும்பு மற்றும் பல் வளர்ச்சிக்கும், பெரியவர்களுக்கு எலும்பு மற்றும் பல் வலுவாக இருக்கவும் கால்சியம் தேவை. ஒரு நாளைக்கு போதுமான அளவு கால்சியமும் கிடைப்பது இல்லை. இந்த நிலையில் கிடைக்கும் சிறிதளவு கால்சியத்தையும் குளிர்பானங்களில் உள்ள ரசாயனங்கள் வெளியேற்றிவிடுவதால், குழந்தைகளுக்கு வளர்ச்சியில் பாதிப்பு, எலும்பு அடர்த்திக் குறைவு போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.

சர்க்கரை மற்றும் குளிர்பானத்தில் உள்ள அமிலங்கள், பல்லில் உள்ள எனாமலை மிக விரைவாகத் தாக்குகின்றன. இதனால் எளிதில் பற்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். பற்சிதைவானது பல்லின் வேர் வரை செல்லும்போது பல்லின் ஆயுள் குறையும். குளிர்பானங்களில் இருக்கும் பாஸ்பாரிக் அமிலம், எலும்பில் உள்ள கால்சியம் உள்ளிட்ட தாது உப்புக்களைச் சிதைத்து வெளியேற்றும். இதனால், எலும்பின் அடர்த்தியைக் குறைத்து ஆஸ்டியோபொரோசிஸ் வருவதற்கு வழிவகுக்கும்.

சிறுநீரகம்

தினமும் குளிர்பானம் அருந்துவது சிறுநீரகப் பிரச்னை வருவதற்கான வாய்ப்பை இரு மடங்கு அதிகப்படுத்துவதாக ஹார்வர்டு மெடிக்கல் ஸ்கூல் ஆய்வு கூறுகிறது. குளிர்பானத்தில் உள்ள, பாஸ்பாரிக் அமிலத்தை வெளியேற்றும் பணியை சிறுநீரகம் மேற்கொள்கிறது. இது சிறுநீரகத்தில் கல் உருவாகவும், இதர சிறுநீரகப் பிரச்னைகள் உருவாகவும் காரணமாக இருக்கிறது.பெட் பாட்டிலும் பாதிப்புதான்!குளிர்பானங்கள் வரும் பெட் பாட்டில்களில், பிஸ்பினால் ஏ என்ற ரசாயனப்பூச்சு இருக்கும். இது இதய நோயில் தொடங்கி, உடல் பருமன், இனப்பெருக்க மண்டலம் என உடலின் பல்வேறு உறுப்புகளைப் பாதிக்கும். கோலா வகை பானங்களில் நிறத்துக்காக சேர்க்கப்படும் செயற்கை காரமெல், புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது.


 
 
 
 

Monday, July 15, 2013

கல்விக் கடன்

 
வங்கியில் கடன் வாங்கி படிக்க நினைக்கும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை பெருகிவிட்ட காலமிது. இந்த சமயத்தில், கல்விக் கடன் பெறுவதில் உள்ள சிக்கல்கள் என்னென்ன, இதுதொடர்பான ஐ.பி.ஏ. (இந்திய வங்கிகள் கூட்டமைப்பு) நெறிமுறைகள் என்னென்ன என்பதைப் பற்றி பார்ப்பது பொருத்தமான விஷயமாக இருக்கும் அல்லவா?
 
கல்விக் கடனைப் பெறுவதில் உள்ள பொதுவான பிரச்னைகளைப் பார்ப்போம்.  
1. விண்ணப்பத்தைப் பெற அல்லது தர மறுப்பது !

ஒவ்வொரு வங்கியும், கல்விக் கடனுக்கான விண்ணப்பத்தைக் கண்டிப்பாக தரவேண்டும். ஒரு மாணவருக்கு கல்விக் கடன் தரலாமா, வேண்டாமா என்பதை அந்த மாணவரிடமிருந்து விண்ணப்பம் பெற்றபிறகே சொல்லவேண்டும். விண்ணப்பம் வாங்குவதற்கு முன்னதாகவே கடன் கிடையாது என சொல்லி, அவர்களை மரியாதைக் குறைவிற்கு ஆளாக்குவது சரியாகாது. அதேபோல், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வங்கிகள் கட்டாயம் பெறவேண்டும். பெற்றவுடன் விண்ணப்பதாரருக்கு பற்றுச்சீட்டு (Acknowledge) வழங்கவேண்டும் என்பதும் கட்டாயம்.

2. விண்ணப்பத்தைப் பரிசீலிக்க  நீண்டகாலம் பிடிப்பது !

கல்விக் கடனுக்கான விண்ணப்பத்தைப் பெற்றதும் வங்கிகள் 15 நாட்களுக்குள் அதை பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் தகுந்த காரணத்தோடு விண்ணப்பதாரருக்கு தெரியப்படுத்தவேண்டும். அப்படி தெரியப்படுத்தாதபட்சத்தில், வங்கி குறைதீர்க்கும் பிரிவில் மாணவ/மாணவியர் தெரியப்படுத்தலாம். வங்கி குறைதீர்க்கும் பிரிவிலிருந்து முறையான பதில் உரிய காலத்தில் கிடைக்கவில்லை என்றால், ஆர்.பி.ஐ. வங்கி குறைதீர்ப்பாளர் அலுவலகத்தில் முறையிடலாம். 

3. மதிப்பெண்ணைக் காரணம் காட்டி கடன் தர மறுப்பது !

சில வங்கிகள் மதிப்பெண் குறைவாக இருக்கும் காரணத்தால் கல்விக் கடன் தர மறுக்கின்றன. ஐ.பி.ஏ. நெறிமுறைகள்படி, குறைந்தபட்ச மதிப்பெண் என்று எதுவும் கிடையாது. வங்கியானது ஐ.பி.ஏ. நெறிமுறைகளை அப்படியே அமல்படுத்தினால் மதிப்பெண்ணைக் காரணம்காட்டி கடன் தர மறுக்கக்கூடாது.

ஆனால், ஒவ்வொரு வங்கிக்கும் இந்த நெறிமுறைகளில் சில மாற்றங்களைச் செய்ய அதிகாரம் இருக்கிறது. மேனேஜ்மென்ட் கோட்டாவில் (சுயஉதவிக் கல்லூரிகளில்) இடம் கிடைத்த மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்ணைக் காரணம் காட்டி சில வங்கிகள் நிராகரிக்கலாம். அந்தக் கல்லூரிகளின் வளர்ச்சி, கல்லூரிகள் அமைத்துக்கொடுக்கும் வேலை வாய்ப்புகள் போன்ற விஷயங்களில் குறைபாடுகள் இருப்பின் அதையும் காரணம் காட்டலாம்.ஆனால், மெரிட் தகுதியுள்ள மாணவர்கள் சுய உதவிக் கல்லூரியில் இடம் கிடைத்தால், ஐ.பி.ஏ. நெறிமுறைகளுக்கு உட்பட்டவர்களாவர்.
 
. கடன் தர அடமானம் (Security) கேட்பது !
 
ஐ.பி.ஏ. நெறிமுறைகள்படி, கடன் தொகை 4 லட்சம் ரூபாய்க்குள் இருந்தால், எந்த பிணையமும் கேட்கக் கூடாது. 4-7.5 லட்சம் ரூபாய்க்குள் இருந்தால், மூன்றாம் நபர் கேரன்டி வேண்டும். 7.5 லட்சம் ரூபாய்க்கு மேலிருந்தால், ஏதாவது ஒரு சொத்தினை (Tangible Security)சமர்ப்பிக்க வேண்டும்.

5. கடனில் அடங்கும் அங்கங்கள் !

சில வங்கிகள் கல்விக் கடனைக் கணக்கிடும்போது, வெறும் கல்லூரிக் கட்டணத்தை மட்டும் எடுத்துக்கொள்ளும். ஐ.பி.ஏ. நெறிமுறைகள்படி, டியூஷன் ஃபீஸ் தவிர்த்து, தேர்வுக் கட்டணம், ஹாஸ்டல் கட்டணம், புத்தக கட்டணம் ஆகியவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, கடன் தொகையை மதிப்பிடவேண்டும். இப்படி மதிப்பிடத் தவறினால் முன்னமே சொன்னதுபோல முதலில் புகார் தெரிவிக்க வேண்டியது அந்த வங்கியினுடைய குறைதீர்க்கும் பிரிவில்தான்.

6. கடன் தந்தவுடன் திரும்பக் கட்ட சொல்வது !

ஐ.பி.ஏ. நெறிமுறைகள்படி, படிப்பு முடிவடைந்து ஒரு வருடத்திற்குள் அல்லது வேலை கிடைத்து ஆறு மாதத்திற்குள் (எது முதலில் அமைகிறதோ) கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் தொடங்கும். அதற்கு முன் கடனைத் திருப்பித்தர வங்கியானது மாணவர்களை வற்புறுத்தக்கூடாது. ஆனால், வேலை கிடைத்தவுடன் கல்விக் கடனை திரும்பக் கட்டுவது மாணவர்களின் கடமை.

எல்லைகள் இல்லை!

இந்த ஊர்க்காரர்கள் இந்த வங்கியில்தான் கல்விக் கடனை பெறவேண்டும் என்று எந்தவொரு நிபந்தனையும் கிடையாது. உங்கள் வீடு அல்லது அலுவலகம் என அருகாமையில் உள்ள வங்கி கிளைக்குச் செல்லுங்கள். ஓர் இடத்திற்கு ஒரு வங்கி என்பது கல்விக் கடனுக்குக் கிடையாது. ஆகையால், கல்விக் கடன் பெற எந்த வங்கியையும் வேண்டியவர்கள் அணுகலாம்.கல்விக் கடனுக்கான விண்ணப்பத்தை வங்கிக் கிளையிலோ அல்லது வங்கியின் வலைதளத்திலோ பெறலாம். முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைத் தகுந்த ஆவணங்களோடு (கவுன்சலிங் கடிதத்துடன்) வங்கி யிடம் சமர்ப்பிக்கவேண்டும். 

 யாருக்கு கடன்..?

மாணவர்களுக்கு மெரிட் கோட்டாவில் இடம் கிடைத்தால் வங்கி யானது ஐ.பி.ஏ. (I.B.A. - Indian Banks Association) நெறிமுறைகள் அடிப்படை யில் (சில மாற்றங்களோடு) கடன் வழங்க வேண்டும். சுய உதவிக் கல்லூரியில் இடம் கிடைத்த மாணவர்களுக்கு வங்கியின் பரிசீலனைக்குட்பட்டு கடன் வழங்கலாம். விண்ணப்பத்திற்கு முன் அந்த வங்கியின் வலைதளத் தில் கல்விக் கடனுக்கான நெறிமுறைகள் (குறைந்தபட்ச மதிப்பெண், வட்டி விகிதம், பிணையம்) ஆகியவற்றைத் தெளிவாகத் தெரிந்துகொள்வது அவசியம்.  வட்டி விகிதம் ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும். அதனால் குறைவான வட்டி கொண்ட வங்கியை அணுகுவது நல்லது.  

ஐ.பி.ஏ. நெறிமுறைகளில் வங்கிகள் சில மாற்றங்களைச் செய்யமுடியும் என்பதால், எதிர்காலத்தில் வேலை வாய்ப்பு குறைவாக இருக்கும் படிப்புகளுக்கு கல்விக் கடனை கொடுக்க வங்கிகள் தயக்கம் காட்டலாம். வங்கிகள் தரும் கால அவகாசத்திற்கு  முன்பே கடனை அடைக்க  வாய்ப்பு அமையும்பட்சத்தில், காலம் கடத்தாமல் கல்விக் கடனை முடித்து விடுவது நல்லது. மாணவர்களின் வருங்கால வருமான வரவைப் பொறுத்து கடன் வழங்க வங்கிக்கு ஐ.பி.ஏ. நெறிமுறைகள்படி வழிவகை இருக்கிறது என்பதை மனதில் இருத்திக்கொள்வது அவசியம்.

கல்விக் கடனுக்கான வட்டி மானியம் இந்திய அரசால் வழங்கப்படுகிறது. குடும்ப வருமானம் வருடத்திற்கு 4.5 லட்சம் ரூபாய்க்குள் இருக்கு மாயின் அந்த மாணவர் வட்டி மானியம் பெறத் தகுதிகொண்டவர் ஆகிறார். ஆனால், இந்த மானியம் சில படிப்புகளுக்கு மட்டுமே பொருந்தும்.

கல்விக் கடன் என்பது ஒரு மாணவரின் முதல் கடன் என்பதால், அந்தக் கடன் அளவுக்காவது காப்பீட்டுத் தொகை எடுப்பது நல்லது.




 


வருமான வரித் துறை... நோட்டீஸ் வந்தால்?

கடந்த நிதி ஆண்டில் வருமான வரித் தாக்கல் செய்யாத சுமார் 12 லட்சம் பேருக்கு வருமான வரித் துறை சார்பில் அண்மையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஒரு மாதத்துக்கு முன்பு 1.5 லட்சம் பேருக்கு நோட்டீஸ் சென்றிருக்கிறது. இப்படி நோட்டீஸ் வந்தவர்கள் என்ன செய்வது, ஏது செய்வது என்று தெரியாமல் தவித்துப்போய் கிடக்கிறார்கள். வருமான வரித் துறையில் இருந்து நோட்டீஸ் வந்தால் என்ன செய்யவேண்டும்? 
 
'வருமான வரித் துறை ஒருவருக்கு நோட்டீஸ் அனுப்ப பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை சொல்கிறேன்.
 
அதிக பணப் பரிமாற்றம் செய்பவருக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பும்;

30 லட்சம் ரூபாய்க்கு மேல் சொத்து விற்று அல்லது  வாங்கி, வரித் தாக்கல் செய்யாமல் விட்டால் வருமான வரித் துறையிடமிருந்து நோட்டீஸ் வீடு தேடி வரும்.

அதிகமான வரிச் சலுகை பெற விண்ணப்பித்திருந்தால் அல்லது  வட்டி வருமானத்திற்கு வரித் தாக்கல் செய்யாமல் இருந்தாலும் வருமான வரித் துறையின் நோட்டீஸ் ஒருவருக்கு வரும்.

சொத்துக்களை விலைக்கு வாங்கியவர் வரித் தாக்கல் செய்து, அந்த வருமானத்திற்கு சொத்து விற்றவர் வரித் தாக்கல் செய்யாமல் விட்டிருந்தாலும் வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பும்.

தொடர்ந்து பத்து வருடங்களாக வருடா வருடம் வரித் தாக்கலை முறையாகச் செய்தவர், திடீரென்று செய்யாமல்விட்டாலும் வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பும் சொத்துக்களை வாங்கி அதற்கு வரிக் கணக்கு தாக்கல் செய்யாமல் போனாலோ அல்லது குறைவாக காட்டியிருந்தாலோ வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பும்'.

''வங்கி, பத்திரப்பதிவு அலுவலகம் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் போன்ற அமைப்புகளில் இருந்து வருடம் ஒருமுறை ஏ.ஐ.ஆர். (Annual Information Return) விவரங்களை வருமான வரித் துறைக்கு அனுப்ப வேண்டும் என்பது கட்டாயம். கீழ்க்காணும் நடவடிக்கைகள் ஒருவரால் மேற்கொள்ளப்படும் பட்சத்தில், ஏ.ஐ.ஆர். விவரங்கள் பண பரிமாற்றம் நடைபெற்ற இடத்திலிருந்து வருமான வரித் துறைக்கு அனுப்பப்படும்.  

1. 30 லட்சத்திற்கு மேல் அசையா சொத்துகள், வீடு அல்லது நிலம் வாங்கினால் அதற்கான விவரத்தை நீங்கள் வருமான வரித் துறைக்கு தாக்கல் செய்யாமல் போனாலும், பத்திரப் பதிவு அலுவலகத்தில் இருந்து வருமான வரித் துறைக்கு விவரம் சென்றுவிடும்.

2. மொத்தமாக அஞ்சலக டெபாசிட் ஐந்து லட்சத்திற்கு மேல் செய்தால், அஞ்சல் துறையிடமிருந்து வருமான வரித் துறைக்கு தகவல்கள் செல்லும். 3. மியூச்சுவல் ஃபண்டில் இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் மொத்தமாக முதலீடு செய்தால், வங்கி சேமிப்புக் கணக்கில் மொத்தமாக பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் முதலீடு செய்தால் விவரங்கள் உடனே வருமான வரித் துறைக்கு சம்பந்தப்பட்ட துறையினரால் தெரிவிக்கப்படும்''.

'முதலில் செய்யவேண்டிய வேலை, அதில் குறிப்பிடப்பட்டு இருக்கும் தேதிக்குள், அவர்கள் கேட்டிருக்கும் விவரங்களை சமர்ப்பித்து, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு முறையான பதிலை தரவேண்டும். இப்படி செய்யத் தவறும்பட்சத்தில் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். அதனால் அதிக பணப் பரிமாற்றங்கள் மேற்கொள்ளும்போது நாமாகவே வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வது புத்திசாலித்தனம். அப்படி இல்லாமல் வருமான வரித் துறையிடமிருந்து நோட்டீஸ் வந்த பிறகு வரியை செலுத்தும்பட்சத்தில், வரி அதற்கான வட்டி, கால தாமதம் செய்ததற்கு அபராதம் என வரித் தொகைக்கு இணையான அபராதத் தொகையைக் கட்டவேண்டி இருக்கும். சில சமயங்களில் வரித் தொகையைவிட மூன்று மடங்கு அபராதத் தொகை கட்ட நேரலாம். 


 
 

எனது இந்தியா! - எஸ். ராமகிருஷ்ணன்....

குடும்ப அரசியல் நடக்கும் நமது சமகாலச் சூழலில் ஒரு குடும்பமே அரசியலுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு  தியாகிகளாக வாழ்ந்த வரலாறு இன்றுள்ளவர்களுக்கு பிழைக்கத்தெரியாத மனிதர்களாக தோன்றச் செய்யும். ஆனால், அந்தப் பிழைக்கத் தெரியாதவர்கள் நடத்திய போராட்டங்கள்தான் நாம் இன்று சுதந்திரமாக வாழ்வதற்கு அடித்தளம் அமைத்து இருக்கிறது என்பதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. 

கவிக்குயில் சரோஜினி நாயுடுவை அறிந்த பலருக்கும் அவரது தம்பி வீரேந்திரநாத் சட்டோபாத்யாயவை தெரிந்திருக்காது. காரணம் அவர் ஒரு புரட்சியாளர். இந்தியப் பொதுப்புத்தியில் புரட்சியாளர் என்றாலே தீவிரவாதி என்று பதிவாகியிருப்பது பிரிட்டிஷ் செய்த சூழ்ச்சி. அவர்கள்தான் புரட்சியாளர்களை தீவிரவாதிகளாவும் காந்தியவாதிகளை வன்முறையாளர்களாகவும் தங்கள் சுயநலத்துக்காக உருமாற்றினர். ஒருவன் தேசவிரோதி ஆவதும் தேசபக்தன் ஆவதும் ஆள்பவர்கள் யார் என்பதைப் பொறுத்தே அமைகிறது. பிரிட்டிஷ் ஆட்சியில் பகத்சிங் தேசவிரோதி. இன்று, அவர் சிறந்த தேசபக்தர். ஆளும் அதிகார வர்க்கம் தன்னை எதிர்ப்பவர்களை தேச விரோதிகளாக மாற்றுவது காலம்காலமாக நடந்து வரும் ஒரு வன்செயல். இப்படித்தான் வீரேந்திரநாத் சட்டோபாத்யாயவையும் கம்யூனிஸ்ட், புரட்சியாளர், ரஷ்யாவில் இருந்து கொண்டு இந்தியாவை கைப்பற்ற நினைத்த தீவிரவாதி என்று முத்திரை குத்தினர். ஆனால், இன்றைய வரலாறு அவற்றை மாற்றி அமைத்து இந்திய சுதந்திரப் போராட்டத்தில் வீரேந்திர நாத்தின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டியுள்ளது. சாட்டோ என்று நண்பர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட வீரேந்திரநாத் சட்டோபாத்யாய வங்காளத்தைச் சேர்ந்தவர். இவரது அப்பா அகோரிநாத் சட்டோபாத்யாய ஹைதராபாத் நிஜாமின் கல்லூரியில் முதல்வர் பதவி வகித்த காரணத்தால், இவர்கள் குடும்பம் ஹைதராபாத்தில் வசித்தது. முற்போக்குச் சிந்தனை உடைய குடும்பம் என்பதால் இந்திய சுதந்திரத்துக்கான வேட்கை, குடும்பம் முழுவதும் இயல்பாகவே இருந்தது.


கலை, இலக்கியம், எழுத்து என்று நுண்ணர்வு கொண்ட சரோஜினி நாயுடுவும் சாட்டோவும் ஆங்கில வழிக் கல்வியை கற்றனர். சென்னைப் பல்கலைக் கழகத்திலும் கல்கத்தா பல்கலைக் கழகத்திலும் வீரேந்திநாத் கல்வி பயின்றார்.

இவருக்குத் தமிழ், தெலுங்கு, உருது, பெர்சியன், ஹிந்தி, பிரெஞ்சு, ரஷ்யன், டச், ஜெர்மன், ஆங்கிலம் மற்றும் ஸ்காண்டிநேவிய மொழி ஆகியவற்றைப் பேசவும் எழுதவும் நன்றாகத் தெரியும். 1902-ம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார் வீரேந்திரநாத். ஐ.சி.எஸ். தேர்ச்சி பெற வேண்டும் என்பதே அவரது ஆசை. மிடில் டெம்பிள் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார். லண்டனில் இருந்த நாட்களில் சுதந்திரப் போராட்ட மையமாக விளங்கிய ஷியாம்ஜி கிருஷ்ணவர்மாவின் இந்தியா ஹவுசுக்கு அடிக்கடி சென்றுவந்தார். சாவர்க்கர், வ.வே.சு.அய்யர், டி.எஸ்.எஸ்.ராஜன் உள்ளிட்டோர் தங்கியிருந்த எண்: 65, கிராம்வெல் அவின்யூவிலுள்ள 'இந்தியா ஹவுசில் ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் பயிற்சி, நாட்டுப்பற்றைத் தூண்டக்கூடிய இலக்கியங்களை எழுதி வெளியிடுதல் போன்றவற்றில் இணைந்து செயல்படத் தொடங்கினார். இந்த நாட்களில் அவருக்கு ஆதர்சமாக இருந்தவர் சாவர்க்கர். சோஷலிஸ்ட் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் இணைந்து வேலைசெய்தபோது வ.வே.சு. ஐயருடன் அவருக்கு நெருங்கிய நட்பு ஏற்பட்டது. போலீஸ் கெடுபிடியில் இருந்து தப்பி இருவரும் பாரீஸுக்கு சென்று தங்கி இருந்தனர். 1912-ல் மிஸ்.ரெனால்டு என்ற பெண்ணை சாட்டோ திருமணம் செய்து கொண்டார். ஆனால், உலகப்போரின் போது ஏற்பட்ட நெருக்கடியால் ரெனால்டு இங்கிலாந்திலும் சாட்டோ ஜெர்மனியிலும் தனித்து வாழ்ந்தனர். ஜெர்மனியில் தன்னை எவரும் சந்தேகிக்கக் கூடாது என்பதற்காக பல்கலைக்கழக மாணவனாக தன்னைப் பதிவுசெய்து கொண்டார் வீரேந்திரநாத். பிரிட்டனுக்கும் ஜெர்மனிக்கும் இடையே ஏற்பட்ட பகைமை காரணமாக, ஜெர்மனியில் முகாமிட்டிருந்த இந்தியர்கள் அரசாங்கத்தின் உதவியை எதிர்நோக்கினர். அதேபோன்று ஆங்கிலேயரின் ஆட்சியை அகற்ற விரும்பிய இந்தியர்களை ஜெர்மனிக்குச் சாதகமாய்ப் பயன்படுத்திக்கொள்ள எண்ணியது கேய்ஸர் அரசாங்கம்.

முதல் உலகப் போர் நடந்தபோது, பெர்லின் நகரில் இயங்கிய இந்திய விடுதலைக் குழுக்களுடன் ஜெர்மனியின் வெளியுறவுத் துறை நெருங்கிய நட்பு கொண்டிருந்தது. 1915-ல் ஆயுதப்புரட்சி ஒன்றை இந்தியாவில் நடத்திவிட வேண்டும் என்று திட்டமிட்டு அதற்கான ஆயுதங்கள் வாங்குவதற்கும், போராளிகளைத் தயார் செய்வதற்கும் முனைப்புடன் இயங்கி வந்தார் சாட்டோ. இதற்காக, ஆயுதம் ஏந்திப் போராடும் ஆயிரக்கணக்கான வீரர்கள் வங்காளத்தில் தயார் செய்யப்பட்டனர். ஆனால், போதுமான ஆயுதங்கள் கிடைக்காமல் போகவே தாக்குதல் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையில், சாட்டோவை கொல்வதற்காக பிரிட்டிஷ் உளவு நிறுவனத்தின் கூலிப்படைகள் அவரை இடைவிடாமல் துரத்திக்கொண்டிருந்தனர். மூன்றுமுறை துப்பாக்கித் தாக்குதல்களில் உயிர்தப்பிய சாட்டோ ஆயுத உதவி கிடைக்காத காரணத்தால் ஜெர்மனியை  இனியும் நம்பிக் கொண்டிருக்ககூடாது என்று ஸ்டாக்ஹோமில் இந்திய தேசியக் குழு ஒன்றை உருவாக்கினார். சாட்டோவை பிரிட்டிஷ் உளவுப்படை கொலைசெய்ய முயன்ற நிகழ்வை எழுத்தாளர் சாமர்செட்மாம் 'குயிலியா லாஷாரி’ என்ற சிறுகதையில் விரிவாக குறிப்பிட்டு இருக்கிறார். சாமர்செட்மாம் பிரிட்டிஷ் உளவுப்படையில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டாக் ஹோமில் இருந்த பிரிட்டிஷ் தூதரகம் இந்திய தேசியக் குழுவை கண்காணிக்கத் தொடங்கியது. ரஷ்யப் பிரதிநிதிகளை அவர்கள் அடிக்கடி சந்திக்கின்றனர், இதன் விளைவு இந்தியாவுக்குப் பாதகமாக முடியக்கூடும் என்று புலனாய்வுக் குறிப்புகளை அனுப்பி எச்சரிக்கை செய்தது பிரிட்டிஷ் தூதரகம்.

'சர்வதேச சோஷலிஸ்ட் காங்கிரஸ் - இந்தியாவைப் பற்றிய உரைகளும், தீர்மானங்களும்’ என்னும் துண்டறிக்கை ஒன்றை இந்திய தேசியக் குழு அச்சிட்டு வெளியிட்டது. ஸ்டாக் ஹோமில் இருந்தபடியே வீரேந்திரநாத் சட்டோபாத்யாய, பி.டி.ஆச்சார்யா ஆகியோர் ஆற்றிய பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவை. அவர்கள் ரஷ்யன் சோஷலிச ஜனநாயக தொழிலாளர் கட்சியுடன் தொடர்பு கொண்டிருந்தனர். இந்த அமைப்பின் முன்னணி பிரதிநிதியான டிராயனாவ்ஸ்கியுடன் உறவை ஏற்படுத்திக் கொண்டு, இந்தியப் புரட்சிக்கான ஆயத்தப் பணிகளுக்கு உதவி செய்யும்படியாக ரஷ்யாவைக் கேட்டுக் கொண்டனர். அவர்களுக்கு உதவுவதாக ரஷ்யா வாக்குறுதி அளிக்கவே சாட்டோவுக்கு புதிய நம்பிக்கை பிறந்தது. 1915-ம் ஆண்டு டிசம்பர் மாதம், இந்தியாவின் தற்காலிக அரசாங்கம் என்ற பெயரில் காபூலில் ஓர் அரசாங்கத்தை அமைத்த மன்னர் மகேந்திர பிரதாப்பை சந்தித்த சாட்டோ, அவரை ரஷ்யா சென்றுவர கேட்டுக்கொண்டார். அதன்படி 1918-ம் ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் மகேந்திர பிரதாப் பெட்ரோகிராட் நகருக்குச் சென்றார். சோவியத் அரசின் உயர்நிலைப் பிரதிநிதிகள் பலர் மகேந்திர பிரதாபை வரவேற்று விவாதித்தனர். 1919-ல் லெனினைச் சந்தித்த இந்தியப் புரட்சியாளர்களின் சிறப்புத் தூதுக்குழுவுக்கு மகேந்திர பிரதாப் தலைமை வகித்தார்.
முகமது பரக்கத்துல்லா, அப்துல் ராப், பி.டிஆச்சார்யா, தலிப் சிங் கில், இப்ராஹிம் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர். இந்தக் குழுவினர் 1919-ம் ஆண்டு மே மாதத்தில் லெனினைச் சந்தித்து உதவி கேட்டனர். எம்.என். ராயின் விருப்பம் காரணமாக சாட்டோ 1920-ல் மாஸ்கோ சென்றார். அவருடன் ஆக்னஸ் என்ற அமெரிக்கப் பெண் பத்திரிகையாளரும் உடன் சென்றார். இருவரும் எட்டு ஆண்டுகள் இணைந்து வாழ்ந்தனர். புரட்சிகர செயல்பாடுகளில் அதிக ஈடுபாடு கொண்டிருந்த ஆக்னஸ் சமூக பிரச்னைகள் குறித்துப் பத்திரிகைகளில் தொடர் கட்டுரைகள் எழுதிவந்தார். இந்தியாவில் பிறந்தவர் என்பதால் ஆக்னஸுக்கு இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு உதவி செய்வது தனது கடமை என்றே தோன்றியது.

ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்பட்ட சாட்டோ, இந்திய மொழிகளுக்கான பிரிவுத் தலைவராக பணியாற்றினார். இதனால், நேரு ஐரோப்பியாவுக்கு வந்தபோது சாட்டோ உடனிருந்து உதவிகள் செய்தார். 1932 முதல் மாஸ்கோவில் வாழ்ந்த சாட்டோ, கம்யூனிஸ்ட் கட்சியின் நேரடி செயல்பாடுகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார். 1937-ல் அவரை தேசத்துரோகி என அறிவித்த ஸ்டாலின் அரசாங்கம் சுட்டுக் கொல்லுமாறு உத்தரவு பிறப்பித்தது. அவருடன் தேசத் துரோகியாக அறிவிக்கப்பட்ட அறிவாளிகள், எழுத்தாளர்கள் என 184 பேர் கைது செய்யப்பட்டனர். அத்தனை பேரும் ஒரே நாளில் சுட்டுக் கொல்லப்பட்டனர். சாட்டோவை காப்பாற்றும்படி கடைசி நிமிடத்தில் எடுத்த முயற்சிகள் யாவும் தோற்றுப்போயின. வெளிநாடுகளில் வாழ்ந்தபடியே ஒரு புரட்சியாளராக இந்திய சுதந்திரம் குறித்த கனவு கண்ட வீரேந்திரநாத்தின் வாழ்க்கை இந்திய சுதந்திரத்தை காணாமலேயே முடிந்து விட்டது. இந்திய சுதந்திரம் என்பது ஒரு விடுமுறை நாள் என்று மட்டுமே நினைக்கும் இந்த தலைமுறையினர் சுதந்திரத்துக்காக நமது முன்னோர்கள் செய்த உயிர்த் தியாகத்தை மறந்து விட்டனர் என்பது கண்டிக்கப்பட வேண்டியது. குதிராம் போஸ் என்ற 16 வயதுப் பையன் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டான். சிறையில் இருந்தபடியே அவன் ஒரு பாடலை எழுதினான்.

அந்தப் பாடல்...
'விடைகொடு அம்மா!
என் அருமை அம்மா!
நான் மீண்டும் பிறப்பேன்
சித்தியின் வயிற்றில்...
பிறந்தது நான்தான் என்பதையறிய
குழந்தையின் கழுத்தைப் பார்
அதில் சுருக்குக் கயிற்றின்
தடம் இருக்கும்'
குதிராம் போஸ் தூக்கிலிடப்படும் போது, அவரது சித்தி கருவுற்றிருந்தார். ஆகவேதான் மறுபடி பிறப்பேன் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது. போராடுவதற்காக மீண்டும் இந்த மண்ணில் பிறக்க வேண்டும் என்ற வேட்கை தெறிக்கும் கவிதைதான் போராளியின் மனது. இப்படி, தன்னுயிரை இழந்து போராடியவர்களின் தியாகத்தை மறந்து இன்று இந்திய சுதந்திரத்தை மீண்டும் பன்னாட்டு வணிகர்களிடம் அடகு வைத்து வருகிறோம் என்பதுதான் தாங்கமுடியாத ஆதங்கம்.

Thursday, July 11, 2013

தீபா மாலிக் - நம்பிக்கை

மகாராஷ்டிரா மாநிலம் அஹமத் நகரைச் சேர்ந்த தீபா மாலிக் ஒரு பைக் ரேஸர். பைக் ரேஸர் என்பது ஒரு வார்த்தைதான். அதற்குப் பின்னால் தீபா மாலிக் கடந்து வந்த ஒவ்வோர் அடியும் துயரத்தால் நிரம்பியது. அவருக்கு வயது 42. பக்கவாத பாதிப்பால் இடுப்புக்குக் கீழே உடல் இயங்காது. வீல் சேர்தான் முழு வாழ்க்கை என்று ஆகிவிட்ட நிலையில், அந்த நிலையிலிருந்து போராடி, இன்று இந்தியாவின் நம்பர் 1  மாற்றுத் திறனாளி பைக் ரேஸர் ஆகியிருக்கிறார் தீபா. அது மட்டுமல்ல... பாரா ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட முதல் இந்தியத் தடகள வீராங்கனை, நீச்சல் மற்றும் குண்டு, ஈட்டி எறிதல் வீராங்கனை, கார் ரேஸர் என தீபாவுக்குப் பல முகங்கள்... பல திறமைகள்!

தீபா மாலிக்குக்கு ஆறு வயது இருக்கும்போது முதுகெலும்பில் சிறியதாகக் கட்டி வந்திருக்கிறது. அப்போது தீபாவின் பள்ளிப் பருவங்கள் வலியோடும், விளையாட்டோடும் கழிந்திருக்கின்றன. பள்ளி நேரம் முழுவதும் விளையாட்டு, பின் மருத்துவமனை என மாறி மாறி அலைந்திருக்கிறார் தீபா. ஆனாலும் பள்ளி, கல்லூரி விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு சாம்பியன் பட்டம் வென்ற தீபாவின் வாழ்க்கை திசை மாறியது அவரது 29 வயதில். திருமணம் முடித்து இரண்டு மகள்கள் பிறந்த பிறகு, அந்த முதுகெலும்பு கட்டி வீங்கி உடல் இயக்கத்தை முடக்கிப் போட்டிருக்கிறது. சக்கர நாற்காலியில் தீபாவின் வாழ்க்கை முடங்கியது!  


''ஆனால், நான் சோர்ந்துபோகவில்லை. ஒரு பேட்டியில், 'நீங்கள் வேறு என்னவெல்லாம் செய்வீர்கள்?’ என்ற கேள்விக்கு, 'மிக வேகமாக நீச்சல் அடிப்பேன்’ என்று சொன்னேன். சொன்னதோடு ஏதோ ஒரு நம்பிக்கையில் நீச்சல் அடித்தேன். எனக்கே என் மீது நம்பிக்கை வந்த சம்பவம் அது. நீச்சல் மூலமாகவே என் உடல்நிலையைச் சமன் செய்து விளையாட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டேன். வீல்சேரை இயக்கிய அனுபவத்தைக் கொண்டு நான்கு சக்கர பைக்கை இயக்கினேன். இமயமலையின் எலும்பை ஊடுருவும் குளிரில் 1,700 கி.மீ. தூரத்தை எட்டு நாட்களில் கடந்தேன். பாரா ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் வெண்கலம் வென்றேன். 'இப்படி இருந்து எப்படிச் சாதித்தாய்?’ என்று கேட்கிறார்கள். முடியாது என்ற சொல்லுக்குப் பின்னேதான் முடியும் என்கிற சொல் ஒளிந்திருக்கிறது. அதைக் கண்டிபிடித்துவிட்டால், உங்களை யாரும் தடுத்த நிறுத்த முடியாது!'' என்று சிரிக்கிறார். 

விம்பிள்டன்

உலகின் பழமையான டென்னிஸ்  பந்தயத் தொடர் விம்பிள்டன். அதில் இந்த வருடம், தமிழ் சினிமா போலப் புதியவர்கள் ஆச்சர்யங்களையும் அதிரடிகளையும் அரங்கேற்றி இருக்கிறார்கள்.  விம்பிள்டன் தொடரின் கழுகுப் பார்வைத் துளிகள் இங்கே...

 ஆரம்ப அதிரடி!

கடந்த ஆண்டின் சாம்பியன்களான ரோஜர் ஃபெடரர், செரீனா வில்லியம்ஸ் ஆகியோரை ஃபைனலில் எதிர்கொள்வது யார்? நடாலின் ஒரே கிராண்ட் ஸ்லாமின் எட்டு சாம்பியன் பட்டங்கள் சாதனையை ஃபெடரர் சமன் செய்வாரா? செரீனாவின் 34 தொடர் வெற்றிகள், ஃபெடரரின் 36 தொடர் வெற்றிகள் இன்னும் எத்தனை போட்டிகளுக்கு நீளும்? விம்பிள்டனில் முதல் நாள் போட்டிகள் துவங்குவதற்கு முன், சமூக வலைதளங்கள் முதல் சூதாட்ட புக்கிகள் வரை இவைதான் பரபர விவாதம். ஆனால், ரஃபேல் நடால் முதல் சுற்றிலேயே தோற்று அதிர்ச்சி சுனாமியின் முதல் பேரலையைத் தோற்றுவித்தார். போட்டித் தொடரின் மூன்றாவது நாளான ஜூன் 26-ஐ விம்பிள்டன் வரலாற்றில் 'கறுப்பு புதன்’ என்று குறிப்பிடுகின்றனர். அந்த அளவுக்கு அன்றைய தினம் மட்டுமே ரோஜர் ஃபெடரர், மரியா ஷரபோவா, விக்டோரியா அஸ ரென்கா, லெய்டன் ஹுவிட், அனா இவானோவிச், ஜோகோவிச், கரோலின் வோஸ்னியாக்கி என முன்னாள், இன்னாள் டாப் ரேங்கிங் பிளேயர்கள் ஏழு பேர் அதிர்ச்சித் தோல்வி அடைந்தும், காயம் காரண மாகவும் போட்டிகளில் இருந்து விலகி னர். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் டாப் ரேங்கிங் வீரர்களின் மோசமான சாதனையை இந்த விம்பிள்டன் வரலாற்றில் பதிவுசெய்ய, போட்டித் தொடர் முழுக்க இளைஞர்களின் ராக்கெட்டுக்கு இடம் பெயர்ந்தது!


புதியவர்கள் புலிப் பாய்ச்சல்!

பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிக்குள் நுழைந்த நால்வரில், மூவர் முதல்முறையாக அரையிறுதி தொடும் வீராங்கனைகள். போட்டி தொடங்குவதற்கு முன்னரே 'சாம்பியன்’ என்ற அங்கீகாரத்துடன் கலந்துகொண்ட செரீனாவை நான்காவது சுற்றில் நேர் செட்களில் தோற் கடித்த ஜெர்மனியின் செபினா லிசிக்கிதான் இந்த வருட ரன்னர் அப். முதல் சுற்றிலேயே நடாலைத் தோற்கடித்த பெல்ஜிய வீரர் ஸ்டீவ் டார்சிஸ், ரேங்கிங்கில் தன்னைவிட 130 இடங் கள் முன்னே இருக்கும் ஒருவரை வென்றவர் என்ற புதிய சாதனையைத் தன் வசப்படுத் தினார். ஆனால், காயம் காரணமாக அடுத் தடுத்த சுற்றுகளில் விளையாட முடியாமல் டார்சிஸ் விலகிவிட்டது சோகம். இப்படிப் புதிய முகங்களிடம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுகளிலேயே பிரபலங்கள் அடிவாங்கியது இதற்கு முன் எப்போதும் விம்பிள்டனில் அரங்கேறாதது!

இனிய எதிரிகள்!

பெண்கள் ஒற்றையர் விம்பிள்டன் பட்டம் தட்டிய மரியான் பர்டோலிக்கு வயது 28. கடந்த 2007-ம் ஆண்டில் விம்பிள்டன் ஃபைனலில் வீனஸ் வில்லியம்ஸிடம் தோற்ற பர்டோலி, ஆறு ஆண்டு போராட்டத்துக்குப் பின் அதிக வயதில் விம்பிள்டன் பட்டம் வெல்லும் பிளேயர் என்ற பெருமையோடு பட்டம் ஜெயித்திருக்கிறார். இருந்தாலும், பர்டோலி இந்த விம்பிள்டனில் தான் விளையாடிய ஏழு போட்டிகளிலும் தரவரிசை யின் டாப் டென் பிளேயர்கள் எவரையும் எதிர்கொள்ளவில்லை. ஆனால், இறுதிப் போட்டியில் அவர் எதிர்கொண்டது, செரீனா வில்லியம்ஸைத் தோற்கடித்த லிசிக்கியை. இருவரும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் 81 நிமிடங்கள் போராடினார்கள். லிசிக்கி சர்வீஸ் முதல் டிஃபென்ஸ் வரை ஏகப்பட்ட தவறுகள் செய்ய, அதைத் தனக்குச் சாதகமாக்கிக்கொண்டார் பர்டோலி.  

மண்ணின் மைந்தன்!

கடந்த ஆண்டு இதே ஃபைனலில் ரோஜர் ஃபெடரரிடம் தோற்ற ஆண்டி முர்ரே, இந்த முறை சொந்த மண்ணில் நம்பர் 1 வீரர் ஜோக்கோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் தட்டியிருக்கிறார். 77 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து வீரர் ஒருவர் வென்ற விம்பிள்டன் பட்டம் இது. முர்ரே அரை இறுதியில் போலந்து நாட்டைச் சேர்ந்த ஜெர்ஸியுடன் ஆடிய ஆட்டம்தான் இந்த ஆண்டில் அதிக ஆங்கிலேயர்கள் டி.வி- யில் பார்த்த விளையாட்டு என்கிறது பி.பி.சி. கிட்டத்தட்ட 1 கோடியே 32 லட்சம் நேயர்கள் அந்தப் போட்டியைப் பார்த்திருக்கிறார்கள். விம்பிள்டன் பட்டம் வென்ற ஆண்டி முர்ரேவின் படம் ஃபேஸ்புக்கில் அப்டேட் செய்யப்பட்ட ஐந்தே நிமிடத்தில் 17,000 பேர் லைக் செய்திருக்கிறார்கள். டென்னிஸ் உலகில் நடால் - ஃபெடரர் இடையிலான மோதல்தான் ஏக பிரபலம். இனி, அவர்களோடு மோத இன்னொரு ஆள் தயார்! 

Wednesday, July 10, 2013

ஸ்ரீ வாராஹி தாயே சரணம்!

வளுக்கு சதுரங்க சேனா நாயிகா என்றொரு திருநாமம் உண்டு. அதாவது அம்பிகையின் நால்வகைப் படைகளுக்கும் சேனாதிபதியாகத் திகழ்பவள் என்று அர்த்தம். இவளை, தண்டினி என்றும் சொல்வர். சப்த மாதர்களில் ஒருவரான இவள்...ஸ்ரீவாராஹி! சிறந்த வரப்பிரசாதி.

நம் மனத்துள் எண்ணங்கள் தோன்றினால் மட்டும் போதாது. அது காரியமாக, செயலாக மாறவேண்டும் அல்லவா? அப்படி எண்ணத்தைக் காரியமாக மாற்றும் சக்திதான், ஸ்ரீவாராஹி தேவி. ஒட்டுமொத்த பிரபஞ்ச சக்தியைக் குறிப்பவளுக்கு நம் மனத்தை அறிந்துகொள்வதெல்லாம் எம்மாத்திரம்?

ஆடி மாதத்தில் ஸ்ரீவாராஹியை வழிபடுவது சிறப்பு. இந்த மாதத்தில், ஆஷாட நவராத்திரி நாட்களிலும் ஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் ஸ்ரீவாராஹிதேவிக்கு சர்க்கரைப் பொங்கல், உளுந்து சாதம், வடை, தயிர்சாதம் என இவற்றில் ஒன்றைக் கொண்டு நைவேத்தியம் செய்து (பால் சாதம், திலா அன்னம், எள்ளுருண்டை நைவேத்தியமும் செய்யலாம்), மல்லி, முல்லை, நீலசங்கு புஷ்பம், கருந்துளசி, வில்வம், மருக்கொழுந்து, செந்தாமரை, வெண்தாமரை ஆகிய பூக்களால் அர்ச்சித்து வழிபட்டால், சகல ஐஸ்வரியங்களும் பெறலாம்.


ஸ்ரீவாராஹிக்கு உகந்த சிவப்பு, நீலம் மற்றும் பச்சை புடவையைச் சார்த்தி வழிபடுவது, கூடுதல் பலனைத் தரும்.

தமிழகத்தில் சிவாலயங்கள் பலவற்றிலும் சப்தமாதர்களுக்கு சந்நிதிகள் உள்ளன. குறிப்பாக, தஞ்சாவூர் பெரியகோயில் முதலான சில ஆலயங்களில், ஸ்ரீவாராஹி தேவிக்கு தனியே சந்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தேஹி மே சகலான் காமான் வாராஹி ஜகதீஸ்வரி
நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமோ நம:

இது, ஸ்ரீவாராஹியின் மூலமந்திரம். இதனை செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மனம் ஒருமித்து, முடிந்தவரைக்கும் சொல்லி வழிபட்டால், வீட்டில் உள்ள பிரச்னைகள் காணாது போகும். எதிரிகள் தொல்லைகள் நீங்கும். பிரிந்த தம்பதி ஒன்று சேருவர். வாழ்வில் நிம்மதியும் சந்தோஷமும் பொங்க வாழலாம்!

ஸ்ரீவாராஹி தாயே... உன் திருவடி சரணம்!

மகா பெரியவா சொன்ன கதைகள்!

சிலர் இருக்கிறார்கள்; தாங்கள் நினைப்பதுதான் சரியாக இருக்கும் என்று அவர்களாகவே கணக்குப் போட்டு, அதிலிருந்து துளியும் நழுவாது செயல்படுவார்கள். அப்படிப்பட்டவர்கள் எடுக்கும் முடிவுகள் பெரும்பாலும் தவறாகவே இருக்கும்; மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவே இருக்கும்.

எனக்குத் தெரிந்த ஒருத்தர் அடிக்கடி வாயில் வெற்றிலையைக் குதப்பிக்கொண்டே இருப்பார். பேசிக்கொண்டிருக்கும்போதே இடம், பொருள், ஏவல் பார்க்காமல் 'புளிச்'சென்று பக்கத்திலேயே துப்பிவிடுவார். குறிப்பாக, ரயில் நிலைய கட்டடத் தூண்கள் பக்கம் நடந்துபோனால், அவருக்குள் அந்த நேரத்தில் என்னமோ பண்ணும்போல; ஏற்கெனவே போதை வஸ்துக்களை வாயிலே மணிக்கணக்கில் போட்டுக் குதப்பி புளிச்சென்று துப்பி, அங்கே சிவப்பு பெயிண்ட் போன்று கறையைப் பலர் படியவிட்ட இடத்தில்... இவரும் வாயிலே போட்டு மென்ற வெற்றிலையைப் 'புளிச்'சென்று துப்புவார். அவரது இப்படியான செயலை எத்தனையோ முறை நான் சுட்டிக்காட்டித் தடுக்க முயன்று, அதிலே தோற்றுப்போனதுதான் மிச்சம்!

ஒருநாள், அவருக்கு வெற்றிலை மடித்துத் தரும் துரதிருஷ்டம் எனக்கு வாய்த்துவிட்டது. அப்போதுதான் அந்த 'ஐடியா’ என் மூளைக்குள் பளிச்சிட, வெற்றிலையை மடித்து, அதற்குள் பாக்கு வைப்பதற்குப் பதிலாக குட்டியான இரு கருங்கற்களை வைத்துக் கொடுத்துவிட்டேன். அதை வாயிலே போட்டு நறுக்கென்று நண்பர் கடிக்க... படக்கென்று ஒரு சத்தம். பாக்குக்குப் பதிலாக நான் வைத்த கல், ஏற்கெனவே ஆட்டம் கண்டுகொண்டிருந்த அவரது சொத்தைப் பல்லைப் பதம் பார்த்துவிட, அக்கணமே அது கழன்று வந்துவிட்டது.

இந்தச் சம்பவத்தால் நண்பர் என்னை ஒரு மாதிரியாகப் பார்க்க... ''நல்ல விஷயம்தானே நடந்திருக்கு! டாக்டர்கிட்ட போய் பல்லை பிடுங்கணும்னு பல நாளா என்கிட்ட சொல்லிட்டு இருக்கீங்க. இப்போ தானாவே பல் கழன்று வந்திடுச்சு. டாக்டர் செலவு மிச்சம்!'' என்று நான் சொல்லிச் சமாளிக்க, அந்தச் சம்பவத்துக்குப் பிறகு வெற்றிலையை வாயில் போட்டுக் குதப்பும் பழக்கத்தை அறவே விட்டுவிட்டார் நண்பர்.

இப்படித்தான், கடமை மறந்து கண்டபடி ஆட்சி செய்த ஒரு நாட்டின் மன்னனை கவிஞர் ஒருவர் மனம் திருந்த வைத்த வித்தியாசமான கதையை இங்கே அழகாகச் சொல்கிறார் மகா பெரியவா.


'ஷாஹஜின்னு ஒரு ராஜா. அவர் காலத்துல, 'குட்டிக்கவி’ன்னு ஒருத்தர் இருந்தார். பெயர்ல மட்டுமில்ல, வயசுலேயும் அப்ப அவர் குட்டியா- குழந்தையாத்தான் இருந்தார்.

ஷாஹஜிக்கு அப்புறம் அவருடைய பிள்ளை ப்ரதாப ஸிம்ஹன் ராஜாவானான். ராஜ்ய நிர்வாஹத்தைத் திறம்பட நடத்தி வந்த முக்ய அதிகாரிகளான நானாஜி ப்ரபு, சந்தர பானு, ஆனந்தராயர் முதலான பெரியவர்கள் கால க்ரமத்தில் காலமாகிவிட்டார்கள். நல்லவனான ப்ரதாப ஸிம்ஹன் துரதிருஷ்டவசமாக கல்வி, கேள்விகள் இல்லாத சில சில்லறை ஆஸாமிகளின் வசப்பட்டுவிட்டான். அவர்களை ஆலோசகர்களாக வைத்துக்கொண்டு நிர்வாகம் செய்ததில் ஆட்சி சீர்குலைந்து, அவனது சோணாட்டு மக்கள் பலவிதத்தில் கஷ்டப்படும்படி ஆயிற்று.

அப்போதுதான் ராஜாவை தைர்யமாக இடித்துரைக்க வேண்டுமென்று குட்டிகவி ஒரு காவியம் எழுதப் புறப்பட்டார். இப்போது 'குட்டி’யாக இல்லாமல் நல்ல வயஸு வந்தவராகவே அவர் ஆகியிருந்தார். மன்னனை எப்படி வழிக்குக் கொண்டுவருவது என்று யோசித்த குட்டிகவி, இக்காலத்தில் satire என்றும் irony என்றும் சொல்கிறார்களே... மறைமுகமாக, ஹாஸ்ய ரஸத்தோடு குத்திக்காட்டி எழுதுகிறார்களே... அப்படி ஒரு காவியம் எழுதுவது என்று ஆரம்பித்தார். இப்படி எழுதுவதை 'சலோக்தி’ என்பார்கள். வெளியிலே ஒன்றைச் சொல்லி உள்ளே இன்னொன்றை உணர்த்துகிற முறையையும் கையாண்டார். இந்த அணிக்கு 'அந்யாப தேசம்’ என்று பெயர். இக்காலத்திலே கார்ட்டூன் என்று போடுகிறார்கள். அதில் மநுஷர்களையே மிருகங்கள் மாதிரி கூடக் கேலியாகச் சித்திரிக்கிறார்கள். குட்டிகவி வார்த்தையாலேயே கார்ட்டூன் போட்டார்.

அந்த நூல் இப்போதும் இருக்கிறது. நூறு ச்லோகம் கொண்ட அதற்கு 'மஹிஷ சதகம்’ என்று பெயர். எருமையை ஸ்தோத்ரம் பண்ணும் நூறு பாட்டு என்று புரிகிற தோல்லியோ? தலைப்பிலேயே பரிஹாஸமாக இடித்துச் சொல்லுதல்!
'மஹிஷி’ என்று ராணிக்குப் பெயர் இருக்கிறது. 'பட்டமஹிஷி’ என்கிறோம். ஆனால் ராஜாவுக்கு 'மஹிஷன்’ என்று பேரில்லை. 'மஹி’ என்றால் பூமி என்பதை வைத்து 'மஹீசன்’ 'மஹிபதி’ என்றுதான் பெயர்கள் இருக்கின்றன.

குட்டிகவி, மஹிஷ சதகம் பண்ண ஆரம்பித்து விட்டார். அவர் 'சதகம்’ பண்ணத்தான் நினைத்தாரோ அல்லது 'ஸாஹஸ்ரீ’யாக ஆயிரம் ச்லோகம் பண்ண நினைத்தாரோ? கொஞ்சம் கொஞ்சமாக ஸ்லோகம் பண்ணிப் பண்ணி, அவற்றை ராஜாவுக்கே அனுப்பிவைத்தார்.

அதன் ஸப்ஜெக்ட்டைச் சுருக்கமாகச் சொன்னால்... அஸத்தானவர்களைத் தன் பையில் வைத்துக்கொண்டு, அவர்களுக்கு 'ஆமாம் பூசாரி’ போடுகிற ஒரு ராஜாவுக்கு ஸேவகம் செய்து பிழைப்பதைவிட, ஒரு எருமைக்கடாவை வைத்துக் கொண்டு, அதனால் 'உழுதுண்டு வாழ்வதே மேல்’ என்பதுதான்! உழுதுண்டு வாழ்வதற்காக எதை ஏரிலே பூட்டிப் 'பின் செல்கி’றோமோ, அந்த எருமையையே 'தொழுது’ ஸ்துதிப்பதாகத்தான் ஸ்லோகங்கள் செய்தார்.
அதிலே இரண்டே இரண்டின் தாத்பர்யத்தை மட்டும் சொல்கிறேன்.

''மஹா பண்டிதரான ஸ்ரீதரர் தம் வித்யையைக் காசுக்கு விற்கிறார். ஷட்-தர்சனம் கற்ற அம்பு தீக்ஷிதர், சோற்றுக்குத் தாளம் போடுகிறார். ஷட்-தர்சனமாவது... சை! க்யாதி வாய்ந்த குட்டிகவியுங்கூட துஷ்ட தனிகரின் வாசலில் காத்துக் காத்து ஓய்ந்து போய்த் தூங்கி விழுந்துவிட்டார். இத்தனையும் எதனால்? மஹிஷேச்வரனான எருமைக் கடவுளான- உன்னை அநுஸரித்து ஆச்ரயிக்காத துர்பாக் யத்தின் பலன்தான்!'' என்று ஒரு ஸ்லோகம்.

இன்னொன்றில், 'எருமையே! ராப் பகலாக நிலத்தை உழுது உழுது ஏன் கஷ்டப்படுகிறாய்? இப்போது ராஜஸபையில் இருப்பவர்களோடு நீயும் சேர்ந்து ஸுகஜீவனம் பெறலாமே! 'எனக்கு அறிவில்லையே, ஸாமர்த்யமில்லையே!’ என்றெல்லாம் வீணுக்கு அலட்டிக் கொள்ளாதே! தற்போதைய ஸபாக்காரர் களோடு பார்த்தால் உன்னை ப்ருஹஸ்பதி என்றே சொல்லணுமாக்கும்!'' என்கிறார்.

இவர் அனுப்ப அனுப்ப ஸ்லோகங்களைப் பார்த்துக் கொண்டே போன ராஜாவுக்கு - அவனும் உள்ளூர நல்ல ஸ்வபாவமுள்ளவன் என்றேனே... அதனால், மனஸிலே நன்றாகத் தைத்து, தான் பண்ணுகிறது தப்பு என்று உணர்ந்தான்.

ராஜரீக ஹோதாவைப் பார்க்காமல் ப்ரதாப ஸிம்ஹன் குட்டிகவியிடம் போய், தனக்கு நல்லறிவு பிறந்துவிட்டதாகவும், ஞான சூன்யமான ஸ்வய நல கோஷ்டியை நீக்கிவிட்டு, விஷயமறிந்த ஸத்துக் களை ஆலோசகர்களாகப் போட்டுக்கொண்டு ஆட்சி நடத்துவதாகவும் வாக்குக் கொடுத்தான். தேசத்துக்கு உபகாரமாகத் தாம் எடுத்துக்கொண்ட காரியம் பலிதமானதில் குட்டிகவி ஸந்தோஷம் அடைந்தார்.

அதோடு, அவர் தாம் கவனம் செய்து கொண்டிருந்த பரிஹாஸ காவியத்துக்கும் 'ஃபுல் ஸ்டாப்’ போட்டுவிட்டார். அதுவரை ஸரியாக நூறு ஸ்லோகங்கள் ஆகியிருந்ததால் 'மஹிஷ சதகம்’ என்று அதற்குப் பெயர் கொடுத்து வைத்து விட்டார்.

'ராஜாதான் திருந்திவிட்டானே, ஏன் அந்த ச்லோகங்களைக் கிழித்துப் போட்டிருக்கக் கூடாது?’ என்றால், 'ராஜாவையுங்கூட ஒரு கவியானவன் அடக்கி நல்வழிக்குக் கொண்டு வரமுடியும். நாட்டை அடக்கி, ஆள்கிற வனுக்கும் மேலான சக்தியைக் கவி நிஜமாகவே பெற்றவன்’ என்பதற்கு ப்ரத்யக்ஷ நிரூபணமாக இந்தக் காவியம் இருந்து கொண்டிருக்கட்டும் என்றே கிழித்துப் போடாமல் வைத்துவிட்டார். வருங்காலத்தில் ஆட்சிக்கு வருபவர்களுக்கும் ஒரு பாடமாக- எச்சரிக்கையாக இருக்கட்டுமென்று வைத்துவிட்டார்.

ராஜாவும் அந்தச் சுவடிகளை confiscate பண்ணுவது, proscribe பண்ணுவது என்று பறிமுதல், தடை செய்யாததையும் இங்கே சொல்லவேண்டும்.'

ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா?

Tuesday, July 09, 2013

கிருபாநந்தவாரியார் சுவாமிகள்



ருணகிரிநாதரின் சரித்திரத்தில் ஒரு முக்கிய சம்பவம் உண்டு. வில்லிப்புத்தூரார் என்னும் ஸ்ரீவைஷ்ணவர் ஒருவர் தமிழ் வாதுக்கு புலவர்களை அழைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்.

வாதில் தோற்றவர்களின் காதை ஒட்ட அறுத்து, விரட்டி அடித்துவிடுவார். இதனால் பல புலவர்கள் அந்த வட்டாரத்திற்குள்ளும் நுழைய அஞ்சியிருந்தனர். அதை அறிந்த அருணகிரிநாதர் அந்த வழக்கத்தை உடனடியாக நிறுத்தி, புலவர்களைக் காப்பாற்றவேண்டும் என்ற நோக்கம் கொண்டார். ஆகவே வில்லிப்புத்தூராரை நாடிச் சென்றார். அவரையும் வில்லிப்புத்தூரார் வாதுக்கழைத்தார்.

வில்லிப்புத்தூரார் தம்முடைய கையில் நீளமான துரட்டியைப் பிடித்திருப்பார். அதன் ஒரு நுனியில் காதை அறுக்கக்கூடிய பதமான வளைந்த கத்தி இருக்கும். அதை எதிராளியின் காதின் மீது வைத்துக்கொண்டு கேள்விகளைக் கேட்பார். பாடல்களைச் சொல்லச் சொல்வார். ஏதும் வழு இருந்தால் உடனடியாக எட்டினமட்டும் காதை அறுத்துவிடுவார்.
 
அருணகிரியோ ஒரு புது கண்டிஷனைப் போட்டுவிட்டார். அதாவது இருவர் கையிலும் காதறுக்கும் துரட்டி இருக்கவேண்டும். அருணகிரி ஓர் அந்தாதியைப் பாடுவார். அதில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும்வில்லி அர்த்தம் சொல்லிவிட்டால் போதும். அவ்வாறு சொல்லிவிட்டால் வில்லிப்புத்தூரார் வென்றவர் ஆவார். வென்றவர் எட்டினமட்டும் தோற்றவர் காதை அறுத்துவிடலாம். அப்படி வில்லி பொருள் சொல்லவில்லையென்றால் வில்லியின் காதை அருணகிரி அறுக்கலாம். வில்லியும் ஒத்துக்கொண்டார்.
 
வாதத்தை வளர்த்துச் செல்லவிரும்பாத அருணகிரி, ஒரு பாடலைத் தாமே சொல்லி, அதன் பொருளைக் கேட்டார். வில்லிப்புத்தூரார் விதிர்த்துப்போய் அமர்ந்துவிட்டார். ஏனெனில் அந்தப் பாடல் தலையும் புரியவில்லை; காலும் புரியவில்லை.
 
அது ஒரு தகரவர்க்கப் பாடல். முற்றிலும் என்னும் எழுத்தின் வரிசையிலேயே இந்தப் பாடல் முழுமையும் அமைந்திருக்கும். சமஸ்கிருதத்திலும் தெலுங்கிலும் இவ்வகைப்பாடல்கள் உண்டு. ஏகாக்ஷரப் பாடல்என்று சொல்வார்கள். தமிழில் ககரவர்க்கம், தகரவர்க்கம் ஆகியவற்றில் பாடல்கள் உண்டு. காளமேகப்புலவர், அருணகிரிநாதர் முதலியோர் பாடியிருக்கின்றனர்.
 
வில்லிப்புத்தூரார் தம்முடைய தோல்வியை ஒப்புக்கொண்டு, தம் காதை அறுத்துக்கொள்ளுமாறு அருணகிரியிடம் கேட்டுக்கொண்டார். அருணகிரியோ அது தம்முடைய நோக்கமல்ல என்றும் புலவர்களை இவ்வாறு அவமதித்து அவர்களுக்குக் கொடுமை செய்வதை நிறுத்தச் செய்யவேண்டும் என்பதே விருப்பம் என்றும் சொல்லிவிட்டார். வில்லிப்புத்தூரார் அருணகிரியிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு தாம் இனி தமிழை வளர்க்கப் பாடுபடப் போவதாக வாக்குறுதி கொடுத்தார். பின்னாட்களில் அவர் தமிழில் மகாபாரதத்தைப் பாடினார். அந்த நூல் அவருடைய பெயராலேயே வில்லி பாரதம்என்று வழங்குகிறது.
பாடலைப் பார்ப்போம்:
 
திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே
 
இதன் பொருளை திருமுருக கிருபாநந்தவாரியார் சுவாமிகள் இவ்வாறு கொடுக்கிறார்.
திதத்தத் தத்தித்த – “திதத்தத் தத்தித்தஎன்னும் தாளமானங்களை,
திதி திருநடனத்தால் காக்கின்ற
தாதை பரமசிவனும்
தாத பிரமனும்
துத்தி படப்பொறியினையுடையதத்தி பாம்பினுடைய
தா இடத்தையும்
தித நிலைபெற்று
தத்து ததும்புகின்ற
அத்தி சமுத்திரத்தையும் பாயலாகக்கொண்டு
ததி தயிரானது
தித்தித்ததே தித்திக்கின்றதென்று
து உண்ட கண்ணனும்
துதித்து துதி செய்து வணங்குகின்ற
இதத்து பேரின்ப சொரூபியான
ஆதி முதல்வனே!
தத்தத்து தந்தத்தையுடைய
அத்தி அயிராவதம் என்னும் யானையால் வளர்க்கப்பட்ட
தத்தை கிளி போன்ற தெய்வயானைக்கு
தாத தொண்டனே!
தீதே தீமையே
துதை நெருங்கிய
தாது சப்த தாதுக்களால் நிறைந்ததும்
அதத்து மரணத்தோடும்
உதி ஜனனத்தோடும்
தத்தும் பல தத்துக்களோடும்
அத்து இசைவுற்றதுமான
அத்தி எலும்புகளை மூடிய
தித்தி பையாகிய இவ்வுடல்
தீ அக்கினியினால்
தீ தகிக்கப்படுகின்ற
திதி அந்நாளிலே
துதி உன்னைத் துதிக்கும்
தீ புத்தி
தொத்தது உனக்கே அடிமையாகவேண்டும்
இப்பாடல் கந்தர் அந்தாதியின் 54 ஆவது பாடல். இதில் திதத்தத்தத்என்பது நான்கு அடிகளிலும் திருப்பித்திருப்பி வருகிறது. இதனை மடக்குஅல்லது யமகம்என்று சொல்வார்கள்.முதற்பாடலின் கடைச்சொல்லும் அடுத்தபாடலின் முதற்சொல்லும் ஒன்றாக இருக்கும். ஆகவே அக்காப்பிய வகையை அந்தாதிஎன்று சொல்வார்கள்

Sunday, July 07, 2013

பேங்க் எஸ்.எம்.எஸ் அலெர்ட் - 60Rs

ஏ.டி.எம்.மிலிருந்து பணத்தை எடுத்தாலும், ஆன்லைன் மூலம் பணப் பரிவர்த்தனை செய்தாலும், இணையதளம் மூலம் ரயில் டிக்கெட் எடுத்தாலும் அடுத்த நிமிஷமே நம் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். வந்துவிடும். இத்தனைநாளும் பயன்படுத்தி வந்த இந்த சேவைக்கு இனி கட்டணம் உண்டு என்பது அதிர்ச்சியான தகவல். இலவசமாக தந்துவந்த சேவைக்கு ஏன் கட்டணம் என வங்கி வட்டாரங்களில் கேட்டதில் எஸ்.எம்.எஸ். அனுப்புவதற்கான செலவு அதிகரித்ததே காரணம் என்றார்கள்.
 
வங்கிகளிடமிருந்து ஒரு எஸ்.எம்.எஸ்.-க்கு 0.02 பைசா என்று இருந்தது, இப்போது ஒரு எஸ்.எம்.எஸ்.-க்கு 0.25 பைசா வசூலிக்கப்படுகிறதாம். இது தனிநபர்களுக்கு மிகக் குறைந்த தொகையாகத் தெரிந்தாலும், வங்கிகளுக்குப்  பெரிய தொகை. அதாவது, ஒரு நாளைக்கு பல லட்சம் எஸ்.எம்எஸ்.களை  வங்கிகள் அனுப்புகின்றன. இதனால் அதிகம் செலவாகிறது.  
 
சில பொதுத் துறை வங்கி களும், தனியார் வங்கிகளும் சேமிப்புக் கணக்கிற்கு 60 ரூபாயும், நடப்புக் கணக்கிற்கு 100 ரூபாயும் என எஸ்.எம்.எஸ். அலெர்ட்டுக்கான ஆண்டுக் கட்டணமாக வைத்துள்ளன. ஆனால், சில பொதுத் துறை வங்கிகள் இந்த சேவையை இலவசமாகவே தருகின்றன. ஆனால், இது இன்னும் எத்தனை நாளைக்கு என்று தெரியவில்லை.

வருடத்திற்கு 60 ரூபாய் என்பது மாதத்திற்கு 5 ரூபாய். நம் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்படும்போது நமக்கு உடனடியாக எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவது கூடுதல் பாதுகாப்புதான்.
 
 
 

டாக்ஸ் ஃபைலிங்... மாற்றங்களைக் கவனியுங்கள் !

அலுவலகப் பணியாளர்கள் வருமான வரிக் கணக்கு விவரத்தை தாக்கல் செய்ய ஜூலை 31, கடைசி தேதி. கடைசி சில நாளில் அவசரஅவசரமாக வரிக் கணக்கு தாக்கல் செய்யும்போது தவறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனைத் தவிர்க்க அந்த வேலையை இப்போதே செய்து முடித்துவிடுவது நல்லது.

சம்பளத்தில் பிடிக்கப்படும் பி.எஃப்., லைஃப் இன்ஷூரன்ஸ் பிரீமியம், வீட்டுக் கடனுக்கான அசல் மற்றும் வட்டி, பிள்ளைகளின் கல்விச் செலவு உள்ளிட்ட வரிச் சலுகைகளை கழித்ததுபோக மீதி உள்ள வருமானத்துக்கு மட்டும் வரி கட்டவேண்டும். இந்த முதலீடு, செலவு, வரிச் சலுகை பெற்ற விவரத்தை வருமான வரித் துறைக்கு தெரிவிப் பதுதான் வரி கணக்குத் தாக்கல்.

ஒருவரின் வரிக்கு உட்பட்ட வருமானம் 5 லட்சம் ரூபாய்க்குள் இருந்தால் அவர் வரிக் கணக்கு எதுவும் தாக்கல் செய்ய வேண்டிய தில்லை. இவர்களுக்கு, அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களில் வழங்கப்படும் படிவம் 16, வருமான வரிக் கணக்கு படிவமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

இதிலும் சில நிபந்தனைகள் உள்ளன. உதாரணத்துக்கு, ஒருவரின் வரிக்கு உட்பட்ட வருமானம் 5 லட்சம் ரூபாய்க்குள் இருந்து நிதி ஆண்டில் அவருக்கு வங்கிச் சேமிப்புக் கணக்கு மூலம் 10,000 ரூபாய்க்கு மேல் வட்டி வருமானம் கிடைத்திருந்தால் அவர் வரிக் கணக்கு தாக்கல் செய்வது அவசியம். நிதி ஆண்டில் இரண்டு கம்பெனிகளில் பணிபுரிந்தவர்கள், சம்பளம் தவிர இதர வருமானம் உள்ளவர்கள், ரீஃபண்ட் வரவேண்டும் என்றாலும் வரிக் கணக்கு தாக்கல் செய்வது அவசியம்.


சமீபத்திய மாற்றங்கள்!

2012-13-ம் ஆண்டுக்கான வரிக் கணக்கு தாக்கல் முறையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டு வரையில் மொத்த வருமானம் (பிரிவு 80 சலுகை களைக் கழித்தபின்) 10 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ளவர்கள் கட்டாயமாக  இ - ஃபைலிங் என்கிற எலெக்ட்ரானிக் முறையில்தான் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். இது இப்போது, 5 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ளவர்களும் வரிக் கணக்கை கட்டாயமாக இ-ஃபைலிங் முறையில் தாக்கல் செய்யவேண்டும் என்று மாற்றப்பட்டுள்ளது.  

இதற்குமுன் வரிக் கணக்கு படிவத்தில் வங்கியின் எம்.ஐ.சி.ஆர். கோடு எண்ணை குறிப்பிடுவது அவசியம். தற்போது அதற்கு பதிலாக ஐ.எஃப்.எஸ்.சி. கோடு குறிப்பிட வேண்டும். இது உங்களின் வங்கி காசோலையில் குறிப்பிடப்பட்டிருக்கும். அல்லது வங்கியின் வலைதளத்திலிருந்தும் எடுக்கலாம்.

மேலும், உங்கள் வங்கிக் கணக்கின் 11 இலக்க எண்ணையும் கொடுப்பது அவசியம்.
நிதி ஆண்டில் உங்களுக்குக் கிடைக்கும் வரி விலக்கு பெற்ற வருமானம், 5,000 ரூபாயைத் தாண்டும்போது, வரிக் கணக்கு படிவம் ஐ.ஆர்.டி. 2 பயன்படுத்தவேண்டும். வரி விலக்கு பெற்ற வருமானம் என்பதில் டிவிடெண்ட், விவசாய வருமானம், லைஃப் இன்ஷூரன்ஸ் முதிர்வுத் தொகை, பி.பி.எஃப். வட்டி போன்றவை அடங்கும். வெளிநாட்டு வருமானம் இருந்தால் இ-ஃபைலிங் முறையில்தான் வரிக் கணக்கு தாக்கல் செய்யவேண்டும்.

யாருக்கு என்ன படிவம்..!
ஐ.டி.ஆர். 1 (சஹாஜ்)
* சம்பளம் / ஓய்வூதியம்.
* ஒரு வீட்டிலிருந்து வாடகை வருமானம் வருதல்.
* வட்டி வருமானம்.
* வெளிநாட்டில் சொத்து இருக்கக் கூடாது.
வரி விலக்கு பெற்ற வருமானம் நிதி ஆண்டில் 5,000 ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது
மேலேகண்ட விதிமுறைகள் பொருந்தும் பட்சத்தில் ஐ.ஆர்.டி. 1 பயன்படுத்தவேண்டும்.

ஐ.டி.ஆர். 2
சம்பளம் / ஓய்வூதியம்.
ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளிலிருந்து வாடகை வருதல்.
மூலதன ஆதாயம்.
மூலதன இழப்பை அடுத்த ஆண்டுகளுக்கு கொண்டு செல்லுதல்.
வட்டி வருமானம்.
வெளிநாட்டில் சொத்து இருந்தால்..!

ஐ.டி.ஆர். 3
நிறுவனங்களில் பங்குதாரர்களாக இருப்பவர்கள்.
வட்டி வருமானம், சம்பளம், போனஸ், கமிஷன் போன்ற வருமானத்தைக்கொண்டவர்கள்.
ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளிலிருந்து வாடகை வருதல்.
மூலதன இழப்பை அடுத்த ஆண்டுகளுக்கு கொண்டு செல்லுதல்.

ஐ.டி.ஆர். 4
வியாபாரம் அல்லது நிபுணத்துவம் மூலம் வருமானம் வருதல்.
இதர வருமானம் ஏதாவது.
வெளிநாட்டில் சொத்து.
ஐ.டி.ஆர். 4 எஸ் (சுகம்)
ஒப்பந்தக்காரர்கள், சரக்கு போக்குவரத்தில் ஈடுபட்டிருப் பவர்கள் குறிப்பாக, கணக்கு வழக்கு பராமரிக்காமல் லாபத்தில் 8% வரி கட்டி வருபவர்கள்.
வரி விலக்கு பெற்ற வருமானம் நிதி ஆண்டில் 5,000 ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது.
ஊக வணிகம் மூலம் வருமானம் பெற்றிருக்கக் கூடாது.
ஐ.டி.ஆர். க்ஷி V (ITR- V Form)
இது வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான ஆதாரப் படிவம்.
  
வருமான வரி அலுவலகத்தில் நேரில் சென்று வரிக் கணக்கு தாக்கல் செய்யும்போது இந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்துதரவேண்டும். அதில் அலுவலக முத்திரை பதித்து தருவார்கள்.

ஆன்லைனில் இ-ஃபைலிங் முறையில் வரிக் கணக்கு தாக்கல் செய்யும்போது, டிஜிட்டல் கையெழுத்து பயன்படுத்தவில்லை என்றால் இந்தப் படிவத்தை பெங்களூருவில் உள்ள சி.இ.சி. அலுவலகத்துக்கு 120 நாட்களுக்குள் அனுப்பி வைக்கவேண்டும். இது பெங்களூரு அலுவலகத்துக்குச் சென்று சேராதவரையில் நீங்கள் வரிக் கணக்கு தாக்கல் செய்தது கணக்கில் வராது.
- சி.சரவணன்.

 
தற்போது தனிநபர்களைப் பொறுத்தவரையில், ஒருவரின் வரிக்கு உட்பட்ட வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் மதிப்பீடு ஆண்டு (அசெஸ்மென்ட் இயர்) 2013-14-ல் இ-ஃபைலிங் முறையில்தான் வரிக் கணக்கு தாக்கல் செய்யவேண்டும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.

இ-ஃபைலிங் செய்ய களம் இறங்கும்முன், பான் கார்டு, ஃபார்ம் 16 (நிறுவனம் வழங்கியது), ஃபார்ம் 16 ஏ (சம்பளம், ஃபிக்ஸட் டெபாசிட் போன்றவற்றுக்காக டி.டி.எஸ். பிடித்து கட்டப்பட்ட விவரம்), வங்கிக் கணக்குகளின் மொத்த பரிமாற்ற விவரம், மூலதன ஆதாய விவரம், வீட்டு வாடகை வருமானம், வரிச் சலுகைக்கான முதலீடு மற்றும் செலவு விவரங்கள் போன்றவற்றை தயார்படுத்திக்கொள்வது அவசியம்..!

இந்த இ-ஃபைலிங் செய்ய சுமார் 25 நிமிடங்களே ஆகும். தவிர, இ-ஃபைலிங் முறையில் வரிக் கணக்கு தாக்கல் செய்தால் ரீஃபண்ட் விரைவில் கிடைக்கும்.
இ-ஃபைலிங் செய்ய, இந்திய வருமான வரித் துறையின் இணையதளமான https://incometaxindiaefiling.gov.in/- க்கு சென்று பான் எண் மூலம் பதிவு செய்துகொள்ளவேண்டும். ஏற்கெனவே பதிவு செய்தவர்கள் லாகின் செய்து உள்ளே சென்றுவிடலாம். உங்களுக்குப் பொருத்தமான படிவத்தைத் தேர்வு செய்து, வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான சாஃப்ட்வேரை டவுன்லோடு செய்துகொள்ளலாம்.


டவுன்லோடு செய்த படிவத்தில் விவரங்களை சரியாகப் பூர்த்தி செய்து அப்லோடு செய்யவேண்டும். உங்களின் டிஜிட்டல் கையெழுத்தை இ-ஃபைலிங் செய்ததற்கு ஆதாரமாக ஐ.டி.ஆர். V படிவம் தோன்றும். டிஜிட்டல் கையெழுத்து இல்லை என்றால், ஐ.டி.ஆர். V படிவத்தை பிரின்ட் எடுத்து கையெழுத்துப்போட்டு கீழ்க்கண்ட முகவரிக்கு சாதாரண தபால் அல்லது ஸ்பீடு போஸ்ட் மூலம் அக்னாலெஜ்மென்ட் இல்லாமல் இணைத்து அனுப்பவேண்டும்.

Income Tax Department - CPC
Post Bag No.1, Electronic City Post Office,
Bengaluru, Karnataka - 560 100
கட்டணமில்லா தொலைபேசி: 18004252229
கட்டணத் தொலைபேசி: 08022546500

டிஜிட்டல் கையெழுத்து பயன் படுத்தவில்லை என்கிறபட்சத்தில், இதை பெங்களுரூவில் உள்ள சி.இ.சி. அலுவலகத்துக்கு 120 நாட்களுக்குள் அனுப்பி வைக்கவேண்டும். இது பெங்களூரு அலுவலகத்துக்குச் சென்று சேராத வரையில் நீங்கள் வரிக் கணக்கு தாக்கல் செய்தது கணக்கில் வராது.

மேலும், ஆடிட்டர்கள் மூலமும் இ-ஃபைலிங் செய்ய முடியும். இந்த வேலையை செய்துகொடுப்பதற்கு என பல இணையதளங்கள் இருக்கின்றன. அவை கட்டணமாக சுமார் 250 ரூபாயிலிருந்து வாங்குகின்றன.

இவர்களிடம் உங்களின் படிவம் 16 கொடுத்தால் போதும். அவர்கள் உங்கள் சார்பாக இ-ஃபைலிங் செய்து விடுவார்கள். பெங்களூருவில் உள்ள மத்திய பரிசீலனை மையத்துக்கு (சி.பி.சி.) ஐ.டி.ஆர். V கூட அவர்களே  அனுப்பி வைத்துவிடுவார்கள்.

எனது இந்தியா (நாயர் ஸான்!) - எஸ். ராமகிருஷ்ணன்.....

இந்திய சுதந்திரப் போராட்டத்துக்காக வெளிநாடுகளில் ஆதரவு தேடிய முக்கியப் போராளிகளாக இருவரைக் குறிப்பிடுவேன். ஒருவர் ஜப்பானில் வாழ்ந்த நாயர் ஸான். மற்றவர் மாஸ்கோவுக்குச் சென்று இந்திய சுதந்திர எழுச்சிக்கு ஆதரவைப் பெற்ற வீரேந்திரநாத் சட்டோபாத்யாய. ஏ.எம்.நாயர் எனப்படும் ஐயப்பன் பிள்ளை மாதவன் நாயர், கேரளாவைச் சேர்ந்த​வர். ஜப்பானில் உள்ள கியாட்டோ நகரில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மிகப்பிரபலமான இந்திய உணவகம் நடத்தினார் நாயர் ஸான். இவரது பூர்வீகம் திருவனந்தபுரத்தை அடுத்​துள்ள நெய்யாற்றங்கரா.  ஒட்டிசக்கோநாத் வலியத்துவீடு இவரது குடும்பம். நாயர் வம்சத்தைச் சேர்ந்தவர். இவரது அப்பா கும்பகோணத்தைச் சேர்ந்த தமிழ் பிராமணர். நாயர் சாதியைச் சேர்ந்த பெண்ணை இவர் திருமணம் செய்து கொண்டது அந்த நாட்களில் மிகப் பரபரப்பாகப் பேசப்பட்டது. நாயர் ஸானின் அப்பா திருவிதாங்கூர் மன்னர் ஆயில்யம் திருநாள் அழைப்பின் பேரில் திருவனந்தபுரத்துக்கு வந்து பொறியியல் துறையில் பணியாற்றினார். திருவனந்தபுரம் மியூசியம், அருங்காட்சியகம், பொதுநூலகம் போன்றவை நாயர் ஸானின் அப்பா உருவாக்கியவை. நாயர் ஸானின் மூத்த சகோதரர் ஜப்பானின் ஸப்பாரோ பல்கலைக்கழகத்தில் படித்தவர் என்பதால் மாதவனையும் ஜப்பானுக்கு அனுப்பி பொறியியல் படிக்க வைத்தனர். சிறுவயதிலேயே சாதிக் கொடுமைகளுக்கு எதிராகப் பேசிவந்தவர் மாதவன் நாயர்.  1922-ம் ஆண்டு இந்தியாவில் நடந்த முதல் மாணவர் வேலை நிறுத்தம் இவரால்தான் நடத்தப்பட்டது. அன்றைய திவான் ராகவய்யா பள்ளிக் கட்டணங்களை உயர்த்தியதைக் கண்டித்து நடந்த மிகப்பெரிய போராட்டம் அது. இந்தப் போராட்டத்தை அடக்க திவான் அடக்குமுறையை ஏவி விட்டார். போராட்டத்தை வெள்ளைக்காரர்களுக்கு எதிரான கலகம் என்றும் திசைமாற்றி விட்டார்.  இதனால், மாணவர்கள் மீது கடுமையான தடியடி நடத்தப்பட்டது.
 

மாதவன் நாயரை கைது செய்ய போலீஸார் திட்டமிட்டனர். அவரது அண்ணன் ராணுவ மருத்துவராக இருந்த காரணத்தால் அவரது குடியிருப்பில் நாயர் பாதுகாப்பாக ஒளித்து வைக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார். அதிலிருந்து பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரானவர் என்ற முத்திரை மாதவன் மீது குத்தப்பட்டது. போலீஸ் தீவிரமாகத் தேடத் தொடங்கியது. அதன்பிறகு, வைக்கம் சிவன் கோயிலில் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழைய அனுமதி மறுக்கப்படுவதைக் கண்டித்து, மிகப்பெரிய பேராட்டத்தைத் தொடங்கினார் மாதவன் நாயர். ஆனால், போதுமான ஒத்துழைப்பு இல்லாததால் அது வெற்றி பெறவில்லை. சில ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தப் போராட்டம் காந்தி, பெரியார் போன்ற தேசத் தலைவர்களின் முயற்சியால் வெற்றி பெற்றது. அதுபோலவே, நாயர் ரெகுலேஷன் சட்டம் இயற்றப்பட்டதும் கூட்டுக் குடும்பங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டன. அதில் முதல்​குடும்பமாக இருந்தது நாயர் ஸான் குடும்பம். குடும்பச் சொத்துகளைப் பிரிப்பதில் நிறைய பிரச்னைகள் எழுந்தன. மேலும் அவரது அப்பாவுக்கு வேறு ஒரு பெண்ணோடு தொடர்பு ஏற்பட்டு அந்தக் குடும்பம் மிகவும் வீழ்ச்சியடையத் தொடங்கியது. சொத்தைப் பிரிக்கும் போது தங்கள் குடும்பத்​துக்காக உழைத்த இரண்டு புலையர் குடும்பங்​களுக்கும் சொத்தில் பங்கு தரவேண்டும் என்று ஏ.எம்.நாயர் போராடி பங்கு வாங்கிக் கொடுத்து இருக்கிறார். அதோடு, புலையர் நல்வாழ்வு சங்கம் ஆரம்பித்து அவர்களோடு ஒன்றாகப் பழகி அவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டு தீண்டாமை ஒழிப்புக்கு தானே முன்னோடியாக இருந்திருக்கிறார். 1928-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ம் தேதி ஜப்பானில் உள்ள கியாட்டோ பல்கலைக்கழகத்தில் படிப்​பதற்காக இலங்கையில் இருந்து ஸவாமாஜி என்ற கப்பலில் புறப்பட்டார் நாயர்.

ஜப்பானில் மொழி தெரியாமலும் உணவு பிடிக்காமலும் மிகவும் சிரமப்பட்டார். அப்போது, தகூச்சி என்ற பேராசிரியரின் நட்பு கிடைத்தது. அவர், நாயரை தனது மகன் போல மிக அன்பாக நடத்தினார். ஜப்பானிய மொழி கற்றுக் கொடுத்தார்.


ஜப்பான் வந்த போதும் பிரிட்டிஷ் அரசு நாயரை துரத்தியது. ஜப்பானைச் சேர்ந்த ரகசியப் போலீஸார் நாயரைக் கண்காணித்துக் கொண்டே இருந்தனர். ஒரு வருடத்துக்குப் பிறகே போலீஸின் சந்தேகம் தீர்ந்தது. இந்திய சுதந்திர போராட்டத்துக்காக ஜப்பானில் இருந்தபடியே குரல் கொடுக்கத் தொடங்கினார் நாயர். ஜப்பானிய துறவிகள் பலர் நாயருக்கு ஆதரவு அளித்தனர். அப்போது, இந்தியாவில் இருந்து தப்பி ஜப்பானில் ஒளிந்து கொள்ள வந்திருந்த ராஷ்பிஹாரி கோஷின் நட்பு நாயருக்கு கிடைத்தது. இருவரும் இணைபிரியாத நண்பர்கள் ஆனார்கள். ராஷ்பிகாரி கோஷ், வெள்ளைக்காரர்களை எதிர்ப்பதற்காக இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்க வேண்டும் என்று விரும்பினர். அதற்கு முழுஒத்துழைப்பு கொடுத்தார் நாயர். அதோடு, ராஷ்பிகாரி கோஷ் ஒரு ஜப்பானியப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதற்கும் உதவி செய்தார். பொறியியல் முடித்து ஜப்பானிலேயே வேலை செய்யத் தொடங்கினார் நாயர். ஆனால், அவர் மனதில் இந்திய சுதந்திரப் போராட்டம் பற்றிய சிந்தனை இருந்தது. அதனால், ஐ.என்.ஏ-வுக்கு தலைமை ஏற்க, சுபாஷ் சந்திர போஸை வீட்டுகாவலில் இருந்து தப்பிக்க வைத்து சிங்கப்பூர் கொண்டு வருவதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்தார் நாயர்.

1931-ல் ஜப்பானின் கட்டுப்பாட்டுக்குள் மஞ்சூரியா வந்தபோது, அரசாங்க விருந்தாளியாக மஞ்சூரியா​வுக்குச் சென்று அங்கே பணியாற்றினார் நாயர். அங்கிருந்தபடியே இந்திய தேச விடுதலைக்காக இந்தியாவில் உள்ள புரட்சிக் குழுக்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதனால், பிரிட்டிஷ் அரசு நாயரை மிகவும் வெறுக்கத் தொடங்கியதோடு எப்படியாவது கைது செய்துவிட வேண்டும் என்று திட்டமிட்டது. பிரிட்டிஷ் அரசு அபாயகரமான இந்தியர்கள் என்ற பட்டியல் தயாரித்தபோது அந்தப் பட்டியலில் நாயரின் பெயர் இடம் பெற்றிருந்தது. பிரிட்டிஷ் போலீஸ் அவருக்கு மஞ்சுகூ நாயர் என்று பெயரிட்டிருந்தது. இதற்கிடையில், பொருளாதார காரணங்களுக்காக கம்பள வர்த்தகம் செய்யலாம் என்று முடிவு செய்து அதைப்பற்றி தெரிந்து கொள்வதற்காக மங்கோலியாவுக்குள் ரகசியமாகப் புகுந்தார் நாயர். அங்கே, புத்தமதத் துறவியான லாமா போல மாறுவேஷம் போட்டுக்கொண்டு கையில் மணிகளும் நாவில் புத்த ஜெபமுமாக நாயர் மங்கோலியாவில் அலைந்தார். இந்தப் பயணம் மிகவும் கடினமாக இருந்தது. புத்த துறவி போல வேடம் அணிந்து சென்ற போதும் சீனாவில் ஒரு இடத்தில் கொள்ளைக்காரர்களிடம் மாட்டிக் கொண்டார். உள்ளுர் மக்களின் உதவியால் தப்பிப் பிழைத்தார். நீண்ட பாலைவனத்தைக் கடந்த பயணம் உயிர் ஆபத்து நிறைந்ததாக இருந்தது. முடிவில், ஜப்பான் திரும்பியபோது மன்னரே அவரை வரவேற்று விருந்து அளித்து கௌரவப்படுத்தினார்.
1938-ம் ஆண்டு ஜப்பானியப் பெண்ணை திருமணம் செய்து கொண்​டார். இரண்டாம் உலகப் போர் தொடங்கிய போது போர்க்களத்தில் இறங்கினார் நாயர். அதனால், ராணுவ உயர் அதிகாரிகளுடன் மிகுந்த நெருக்கம் ஏற்பட்டது. டோக்கியோவில் குண்டுவீச்சு நடந்த போது அவரது குடும்பம் பாதிக்கப்பட்டது. சிறிய கிராமத்தில் மனைவி மகன்களை ஒளித்து வைத்தார் நாயர். ஹிரோஷிமா நாகசாகி ஆகிய இடங்களில் அணு​குண்டு வீசப்பட்ட போது நாயர் டோக்கியோவில் இருந்தார். அந்தச்​சம்பவம் அவர் மனதை வெகுவாக உலுக்கி விட்டது. இந்திய சுதந்திரத்துக்​கான போராட்டத்தின் ஒரு பகுதியாக 1944-ல் ஐ.என்.ஏ. படை இம்பாலை பிடிக்க திட்டமிட்டபோது அதற்குத் தேவையான அத்தனை உதவியும் செய்தவர் நாயர். ஆனால், அந்தத் திட்டம் தோல்வியடைந்தது. அதன்​பிறகு, சுபாஷ் சந்திர போஸ் எதிர்​பாராத விதமாக மரணம் அடைந்தார். அதுபற்றிய உண்மைகளை கண்டறிய அமைக்கப்பட்ட கமிஷனில் நாயர் பணியாற்றினார். இந்தியா சுதந்திரம் அடையப்போகிறது என்று தெரிந்தவுடன் தனது மனைவி குழந்தைகளுடன் தாயகம் திரும்பி, சுதந்திர இந்தியாவில் தனது புதிய வாழ்க்கையைத் தொடங்கினார் நாயர் ஸான். ஆனால், சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவில் நிகழ்ந்த பிரிவினை அவர் மனதை வெகுவாகப் பாதித்தது. தான் விரும்பிய இந்திய சுதந்திரம் இதுவல்ல என்று அவர் மீண்டும் ஜப்பானுக்கே  சென்று விட்டார். ஜப்பானிய அரசருடன் நெருக்கமாகப் பழகி இந்திய சுதந்திரத்துக்கு உதவிசெய்ய வைத்தது நாயர் ஸானின் தனித்திறமை என்கிறார்கள். பின்னாளில் இவர் ஜப்பானின் முக்கிய இந்தியத் தலைவராக மரியாதையுடன் நடத்தப்பட்டார். சுதந்திரம் அடைந்தபிறகு, இந்தியத் தூதரகம் ஜப்பானில் அமைக்கப்பட்டது. அதோடு, இந்திய ஜப்பானிய நல்லுறவு வளரக் காரணமாக இருந்தார் நாயர். ஆனால், தூதர்களாக வந்தவர்களின் அலட்சியப் போக்கால் மனவருத்தம் அடைந்து தூதரகப் பணிகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு எளிமையான இந்திய உணவகம் ஒன்றை நடத்திக் கொண்டு அரசியலை விட்டு ஒதுங்கி வாழ்ந்திருக்கிறார்.

இந்தியா சுதந்திரம் அடைந்த 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதியன்று நாயர் ஸானின் அப்பா தனது முதிய வயதில், அந்தக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும் என்று வீட்டை விட்டு வெளியே வந்து ஊர்வலத்தில் கலந்து கொண்டார். சுதந்திர விழாவை கொண்டாடி விட்டு வீடு திரும்பிய இரண்டு மணி நேரங்களில் இறந்து விட்டார். இப்படி, இந்தியாவின் மீது பற்று கொண்டதாக இருந்தது நாயர் ஸான் குடும்பம்.

உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்புக்காக எம்.ஜி.ஆர். ஜப்பானுக்குச் சென்றபோது அவரை வரவேற்று தேவையான உதவிகள் அத்தனையும் செய்து​கொடுத்து அவருக்கு இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய நிகழ்விடங்களை காட்டி இருக்கிறார் நாயர் ஸான். சுதந்திரப் போராட்​டத்தில் நாயரின் பங்களிப்பை அறிந்த எம்.ஜி.ஆர். இந்தியாவுக்கு நாயரை அழைத்து வந்து சிறப்பாகக் கௌரவிக்க வேண்டும் என்று திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கைகளில் இறங்கினார். ஆனால், சில தடைகளால் அது நடக்கவில்லை. இந்தியா வரும் போதெல்லாம் கேரளாவுக்கு வந்து தனது உறவினர்களுடன் நாட்களை செலவிட்ட நாயர் ஸான் மதச்சண்டை, இனச்​சண்டை, மொழிச் சண்டைகளில் சுதந்திர இந்தியா பிரிந்து கிடப்பதை கண்டு மிகவும் வருந்தி இருக்கிறார். 1990-ல் நாயர் ஸான் இறந்து விடவே அவரது வாரிசுகள் இன்றும் டோக்கியோவில் அதே உணவகத்தை நடத்தி வருகின்றனர். டோக்கியோவில் உள்ள நாயர் ஸானின் உணவகத்தில் நேதாஜி உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், இந்திய சுதந்திர எழுச்சியின் முக்கிய ஆவணங்கள் யாவும் இன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. நேதாஜியின் நெருங்கிய நண்பர் என்பதால் நேதாஜியின் மரணம் குறித்த விசாரணைக் குழுவில் நாயர் ஸானையும் சேர்த்து இருந்தனர். கடல் கடந்து சென்று சுயலாபங்களை மட்டுமே பெருக்கிக் கொண்ட எத்தனையோ இந்தியர்களுக்கு மத்தியில், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்துக்காக தனது வாழ்க்கையை சமர்ப்பணம் செய்து கொண்ட நாயர் ஸான் போன்றவர்களின் வாழ்க்கை ஒரு முன்னுதாரணம்.

Thursday, July 04, 2013

உலகின் ஏழை ஜனாதிபதி

ஒரு குக்கிராமத்தின் மண் ரோட்டில் வயல்கள், எலுமிச் சைத் தோட்டங்களைத் தாண்டி இருக்கிறது ஒரு சிறு குடிசை. அதன் பின்புறத்தில் விவசாய வேலை பார்க்கும் ஒரு பெரிய வரைக் காட்டி, 'இவர்தான் இந்த நாட்டின் ஜனாதிபதி’ என்றால் எப்படி உணர்வீர்கள்?

'உலகின் ஏழை ஜனாதிபதி’ என்று அழைக்கப்படும், உருகுவே நாட்டு ஜனாதிபதி ஜோஸ் முஜிகாதான் இப்படி வாழ்பவர். இவருக்குச் சொந்தமாக இருப்பது பழைய வோல்ஸ்வோகன் கார் மட்டும்தான். தவிர, தன் மாதச் சம்பளத்தின் 90 சதவிகிதப் பணத்தை ஏழைகளுக்கும் சிறு தொழிலாளர்களுக்கும் கொடுத்து விடுகிறார்.

தன் ஐந்தாவது வயதிலேயே தந்தையை இழந்தவர், சிறு வயதில் வறுமையை விரட்ட சைக்கிளிங் கிளப்புகளில் சேர்ந்து, சைக்கிள் ஓட்டிப் பிழைப்பு நடத்தினார். 'உழைத்தால் மட்டுமே சோறு’ என்ற நிலைமையில் கொஞ்சம் கொஞ்ச மாகத் தேசிய அரசியலில் ஈடுபட்டார். நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கும் வறுமைக்கும் நாட்டை ஆட்சி செய்யும் ராணுவம்தான் காரணம் என்று, வீதிகளில் முழங்கியவர், அதை எதிர்க்கும் 'டுபாமராஸ்’ கெரில்லாப் படையில் இணைந்து, அரசுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்டார். ஒரு தாக்குதலில் ராணுவம் இவரைச் சுட்டுப் பிடித்து, 14 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை தந்தது. 1985-ல் ஜோஸ் விடுதலையானபோது நாடு மக்களாட்சிக்கு மாறியது. மக்களாட்சி சமூகம் புது ரத்தம் பாய்ச்ச... மீண்டும் தீவிர அரசியலில் இயங்க ஆரம்பித்தார். கடந்த 2009-ம் ஆண்டு வரை பல ஆண்டுகள் செனட் உறுப்பினராகவும், விவசாயத் துறை, மீன்வளத் துறை அமைச்சராக வும் இருந்தார்.


ஜோஸின் எளிமை மக்களுக்குப் பிடித்துப்போக, அவரை ஜனாதிபதி ஆக்கினார்கள். அரசு அளித்த ஜனாதிபதி மாளிகையை உதறிவிட்டு, தன்னுடைய சிறிய குடிசையில் வாழ்கிறார். 'நான் ஒன்றும் ஏழை கிடையாது. அளவுக்கு மீறிய பணத்தை வைத்துக்கொண்டு. 'போதாது... போதாது’ என அலைபவர்கள்தான் உண்மையான ஏழைகள்!''- இது ஜோஸின் ஸ்டேட்மென்ட்.

Wednesday, July 03, 2013

எனது இந்தியா (கொடுங்கோல் ஜமீன்தார்கள்!) - எஸ். ராமகிருஷ்ணன்.....

1054-ம் ஆண்டு சோழர் காலக் கல்வெட்டு, வீரபுத்திரன் என்பவனின் மனைவி சேந்தன் உமையாள் என்ற பெண் வரி செலுத்த முடியாமல் தற்கொலை செய்துகொண்டதைக் குறிப்பிடு​கிறது. அவளிடம் வரி வாங்கி வந்த அரசு அதிகாரி 'அரசு ஆணைக்கு’ அவளை உட்படுத்தினான். அதைப் பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில் அவள் நஞ்சு குடித்து இறந்துபோனாள். இதற்குக் காரணமான அரசு அலுவலருக்கு 32 காசுகள் விளக்கு எரிக்க வழங்கும்படி தண்டனை விதிக்கப்பட்டது.

வரி வசூலிக்கும்போது, சுடுசொற்களைப் பயன்​படுத்துவதை 'அரவதண்டம்’ என்று சோழர் காலக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. பிராமணர், வெள்ளாளர் வீடுகளில் அரவதண்ட முறையைப் பயன்படுத்தக் கூடாது என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது. 'கடமைக்காக’ (வரிக்காக) வெள்​ளாளரைச் சிறைப்பிடிக்கக் கூடாது’ என்று ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது. இதனால், ஆதிக்க வகுப்பினரிடம் வரி வாங்குவதில் கடுமை காட்டக் கூடாது என்ற நிலைப்பாடு சோழர் காலத்தில் வழக்கில் இருந்தது புலனாகிறது. ஜமீன்தார் முறை, இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் அறிமுகமானபோதும் வட இந்தியாவில் இருந்த அளவுக்கு தென்னிந்தியாவில் ஜமீன்தார்கள் எண்ணிக்கை அதிகம் இல்லை. அதிகாரத்திலும் ஆடம்பரத்திலும் மோசமான நடத்தையிலும் வட இந்திய ஜமீன்தார்களே முன்னோடிகளாக இருந்தனர்.


விஜயநகரப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் 'நாயக்கர்’ என்ற படைத் தலைவர் தமிழகத்​தில் நியமிக்கப்பட்டார். விஸ்வநாத நாயக்​கர் தனது ஆட்சிக் காலத்தில் பாஞ்சாலங்​குறிச்சி, சிவகங்கை, எட்டயபுரம் உட்பட 72 பாளையங்களை அங்கீகரித்தார். 'பாலாமு’ என்ற தெலுங்குச் சொல்லில் இருந்துதான் பாளையம் என்ற சொல் உருவானது. 'பாலாமு’ என்றால் 'ராணுவ முகாம்’ எனப் பொருள். பேரரசின் அதிகாரத்துக்கு உட்பட்டு செயல்பட்ட பாளையக்காரர்கள் நிலையான ஒரு படையை வைத்திருந்தனர். பாளையங்களில் வரி வசூல் செய்தல், போர்க் காலங்களில் நாயக்கர்களுக்குப் படை உதவியளித்தல் ஆகியவை இவர்களின் முக்கியப் பணி. தமிழகத்தில் இருந்த பாளையங்கள் அளவில் ஒன்றுபோல் இல்லை. சில பாளையங்கள் சிறியதாகவும், சில பெரியதாகவும் இருந்தன. தலைக்கோட்டை யுத்தத்தில் விஜயநகரப் பேரரசு தோற்ற பிறகு, பிஜப்பூர் சுல்தான்களின் ஆட்சி ஏற்பட்டது. அப்போதுதான் சமஸ்தானங்கள் உண்டாக்கப்​பட்டன. புதிய ஸ்தானாதிபதிகள் உருவாகினர். அதன் தொடர்ச்சியாகவே, ஜமீன்தார்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டனர். 1799-ல்​தான் சென்னை மாகாணத்தில் ஜமீன்தார் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. ஜமீன்தார்கள் எல்லோரும் மோசமானவர்கள் என்று வரையறுக்க முடியாது. சிலர் இந்திய சுதந்திரப் போராட்டத்துக்குப் பல்வேறு விதங்களிலும் உதவி செய்திருக்கின்றனர். கலை, சமயம் மற்றும் மொழி வளர்ச்சிக்கு உதவி இருக்கின்றனர். ஆனால், பொதுவாக ஜமீன்தார்களின் ஆடம்பர வாழ்க்கைமுறையையும் அவர்களின் வரி வசூல் செய்யும் கடுமையையும் கருத்தில்கொள்ளும்போது ஜமீன்தார்களில் பலரும் கொடுங்கோலர்களாகவே இருந்திருக்கின்றனர்.

தென்னிந்தியாவில் ஜமீன்தார்கள் படிப்பதற்கு என்றே 'நியூட்டன் கல்லூரி’ ஆங்கிலேய அரசால் நிறுவப்பட்டது. அதை, லண்டன் கல்லூரி என்றும் கூறுவார்கள். மில்டன் இதன் முதல்வராகப் பணியாற்றினார். மதுரை மாவட்டத்தில் நிலவிய ஜமீன்தார் முறை குறித்து ஆய்வுசெய்த வர்கீஸ் ஜெயராஜ் தமது ஆய்வு நூலில், வரி வசூலிக்க ஜமீன்தார்கள் மேற்கொண்ட மோசமான வழிமுறைகளைக் குறிப்பிட்டுள்ளார். அதாவது, ஐந்து தோல் பட்டைகளைக்கொண்ட சாட்டை ஒன்றால் வெறும் உடம்பில் அடிப்பது. இவ்வாறு அடிப்பதால், அது நிரந்தரமான தழும்பை ஏற்படுத்தும். இந்த சவுக்கடிக்குப் பயந்து மக்கள் வரி செலுத்தினர். அதுபோலவே, தங்களின் ஆட்களைக்கொண்டு வீடுகளில் கொள்ளையடிப்பது, பெண்களைத் தூக்கிச் செல்வது, தானியங்களைத் திருடுவது, எதிர்ப்போரை உயிரோடு எரித்துவிடுவது ஆகியவற்றையும் ஜமீன்தார்கள் செய்திருக்கின்றனர். ஜமீன்தார்களுக்கு ஒவ்வொரு கோயிலிலும் முதல் மரியாதை வழங்கப்பட்டது. நில வரி பாக்​கிக்காக குடியானவர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்து ஏலம்விட்டனர். ஜமீன்தாரே ஏலத்தில் பங்குகொள்வார். அவருக்குப் பயந்து வேறு யாரும் ஏலம் கேட்க வர மாட்டார்கள். இதனால் 1,000 ரூபாயிலிருந்து 2,000 ரூபாய் வரை மதிப்புடைய நிலங்களை ஒரணா (ஆறு காசு) அல்லது இரண்டணாவுக்கு ஜமீன்தாரே ஏலத்தில் எடுத்துக்கொள்வார்.
திருவாங்கூர் ஆட்சிப் பகுதியில் வரி கொடாத​வர்கள் காதில் பூட்டுவதற்கென்றே 'இயர்லாக்’ என்ற கருவியை வைத்திருந்தனர். இதை ஒருவனது காதில் பூட்டிவிட்டால், அதன் கனம் தாங்க முடியாமல் காதை இழுத்துத் துன்புறுத்தும். ஒரு கட்டத்தில் பளு தாங்காமல், காது அறுந்துவிடும். இப்படிக் கொடுமைப்படுத்தித்தான் வரி வசூல் செய்திருக்​கின்றனர்.

கிழக்கிந்தியக் கம்பெனியின் பல்வேறு பரிசோத​னைகளுக்கு முதல் களமாக விளங்கியது வங்காளம். ஆகவே, நவாப்புகளின் ஆட்சியில் இருந்து வங்கா​ளத்தை விடுவித்து ஏகபோக உரிமை கொண்டாடிய கம்பெனி, அதே நவாபுகளின் விசுவாசிகளிடம் வரி வசூல் செய்யும் பணியைத் தர விரும்பவில்லை. ஆகவே, ஜமீன்தாரி முறையை அமல்படுத்தியது. இந்த முறை வங்கத்தில் வெற்றிகரமாகச் செயல்படவே, இந்தியா முழுவதும் அது நடைமுறைக்குக் கொண்டு​வரப்பட்டது.

ஜமீன்தார்கள் தங்களை ராஜா, மகாராஜா, வதேரா, தாக்கூர், சர்தார், மாலிக், சௌத்ரி எனப் பல்வேறு விதமாக அழைத்துக்கொண்டனர். இவர்கள், நில வரி வசூல்செய்வதுடன், உள்ளூர் வழக்குகளை விசாரித்து நீதி வழங்கும் உரிமையைப் பெற்றிருந்தனர். எல்லா ஜமீன்தார்களிடமும் குண்டர் படை ஒன்றும் இருந்தது. அதனால், விவசாயிகளைப் பல்வேறு விதமாகக் கொடுமைப்படுத்தினர். ஜமீன்தார்கள் செய்யும் கொடுமைகளை பிரிட்டிஷ் அரசு கண்டுகொள்ளவே இல்லை. ஆகவே, இந்த விசுவாசிகள், இந்தியாவைவிட்டு பிரிட்டிஷ்காரர்கள் போகக் கூடாது என்று ஆதரவு இயக்கம் நடத்தினர். தங்களின் விசுவாசத்தைக் காட்டிக்கொள்ள பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு குடிவிருந்து நடத்தினர். இந்த விசுவாசத்துக்காக ஜமீன்தார்​களுக்கு 'ராவ் பகதூர்’ 'திவான் பகதூர்’ ஆகிய சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.

தார்பங்கா ஜமீன்தார், இந் தியாவிலேயே மிக அதிக வரு வாய் உடையவர். பர்த்வான் ஜமீன்தார், இந்தியாவிலேயே நில வரி வசூல்செய்வதில் முதல் இடம் பெற்றிருந்தார். தார்பங்கா, வட பீகாரில் உள்ளது. அதன் ஜமீன்​தாராக இருந்த மகேஷ் தாக்கூர் தன்னை ஓர் அரசனாகவே கருதி​னார். இவரது ஆளுகையில் 4,495 கிராமங்கள் இருந்தன. தார்பங்கா ஜமீன், 2,400 சதுர மைல் பரப்புடையது. துக்ளக் காலத்திலேயே வடக்கு பீகாரில் தொடர்ந்து குழப்பமும் சண்டை​யும் நீடித்தன. அதைத் தனது இரும்புக் கரம்கொண்டு துக்ளக் ஒடுக்கினார். வடக்கு பீகாரில் மைதிலி பிராமணர்கள் அதிகம் வசித்தனர். அவர்களைப் பயன் படுத்தி நிர்வாகம் செய்யவும், வரிவசூலை முறையாகக் மேற் கொள்ளவும் அக்பர் வழிமுறை ஒன்றை உருவாக்கினார். அதன்படி, பண்டிட் சக்ரவர்த்தி தாக்கூர் என்பவரின் இளைய மகன் மகேஷ் தாக்கூரை, இந்தப் பகுதியின் ஆட்சியாளராக நிய மனம் செய்தார். மகேஷ் தாக்கூரும் அவரது வம்சா வழியினரும் தார்​பங்காவை ஆட்சிசெய்தனர். இவர்கள் மதுபானி அரச குடும்பம் என்றே அழைக்கப்பட்டனர். இவர்கள் மகாராஜா பட்டம் சூடிக்கொள்ள பிரிட்டிஷ் அரசு அனுமதித்தது.

தார்பங்கா ஜமீனில் வரி வசூல் செய்ய 7,500 பேர் நியமிக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் கெடுபிடியாக வசூல் வேட்டை நடத்தினர். தார்பங்கா ஜமீன்தார்கள் மைதிலி பிராமணர்கள் என்ற காரணத்தால், அதீத வைதீக மனப்பாங்கு கொண்டவர்களாக இருந்தனர். இவர்களின் அனுமதி பெற்றே எவரும் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. ஆண்டுக்கு 55 லட்ச ரூபாய் வருமானம் ஈட்டிக்கொண்டு இருந்த இவர்கள், வைரம், வைடூரியம் என வாங்கிக் குவித்ததோடு மற்ற குறுநில மன்னர்களுக்கு கடனுதவி செய்யுமளவு வசதியாகவும் இருந்தனர். 1685-ல் இவர்கள் வரி வசூல் செய்த தொகை ரூ.7,69,287. இது மிகப் பெரிய வருவாய்.

1880-81 ஆண்டுகளில் வங்காளத்தில் 20 ஆயிரம் ஏக்கர்​களுக்கு மேல் வைத்திருந்த ஜமீன்தார்களின் எண்ணிக்கை 500. இவர்கள் மூலம் நில வரியாகப் பெறப்பட்ட தொகை 3,75,41,188. அதாவது, நாலு மில்லியன் பவுண்ட்ஸ்.

தார்பங்கா ஜமீன்தார்​களின் பிள்ளைகள் படிப்பதற்காக லண்டனுக்கு அனுப்பிவைக்கப்​பட்டனர். மேற்கத்தியக் கல்வி​யும் கலாசாரமும் கொண் டவர்களாக வளர்க்கப்பட்ட அவர்கள், பிரிட்டிஷ் அரசின் தீவிர விசுவாசிகளாக செயல் பட்டனர். பின்னாட்களில் இந்திய சுதந்திர எழுச்சி எங்கே தங்களின் அதிகாரத்தைப் பறித்து​விடுமோ என்று அச்சம்​கொண்டு காங்கிரஸ் கட்சியோடு இணைந்து செயல் பட ஆரம்பித்தனர். காங்கிரஸ் மாநாடு நடத்துவதற்கு உதவி செய்தனர். சந்தர்ப்பவாத அரசியலே ஜமீன்தார்களின் பொதுவான வழிமுறையாக இருந்தது.

நேரடி வாரிசுகள்இல்லாமல்​​போன பல ஜமீன்தார்களின் குடும்பங்களில் அடுத்த வாரிசு யார் என்பதற்கு மோதல்களும் வன்முறையும் நடந்தன. இங்கி​லாந்தில் உள்ள ராணியிடம் நியாயம் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டன. இந்த வழக்குகளில் சில இன்னமும் நிலுவையில் இருக்கின்றன. சென்னை மாகாணத்தைப் பொறுத்தவரை, அதன் நிலப்பரப்பில் நான்கில் ஒரு பங்கு, அதாவது 20,945,456 ஏக்கர் நிலம் ஜமீன்தார்களிடம் இருந்தது. 1911-ல் இதன் மூலம் கிடைத்த வருவாய் தொகை, 9,78,3,167 ரூபாய். 1946-ல் ஜமீன்தார் முறையை ஒழிக்க வேண்டும் என்பதற்காக, கமிட்டி அமைக்கப்பட்டது. அந்தக் கமிட்டி, 1948-ல் தனது ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது. 1950-ம் ஆண்டு ஜமீன்தார் முறை ஒழிக்கப்பட்டது. ஆனாலும், அது சார்ந்த வழக்குகள், நிலப் பிரச்னைகள் இன்றும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

Tuesday, July 02, 2013

ஜூலை 7 - ஸ்மைல் பிங்கி

டென்னிஸ் உலகின் சிறப்புமிக்க விம்பிள்டன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், 'பூவா தலையா?’ போடும் அரிய கௌரவத்தைப் பெற்றுள்ளார், 11 வயது இந்தியச் சிறுமி பிங்கி சோன்கர்.

யார் இந்தப் பிங்கி?

உத்தரப்பிரதேசத்தின் மிர்ஸாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிங்கி, அன்னப்பிளவு எனப்படும் உதட்டுப் பிளவு பாதிப்புடன் பிறந்தவர். இதை ஆங்கிலத்தில் க்ளெஃப்ட் லிப் (Cleft lip) என்பர். பிங்கிக்கு அவளது பெற்றோரால் சிகிச்சை அளிக்கும் அளவுக்கு வசதி இல்லை. இந்தத் தகவல், அன்னப்பிளவு சிகிச்சைகளுக்கு உதவும் பிரபல 'ஸ்மைல் ட்ரெயின்’ என்ற தன்னார்வ அமைப்புக்குச் சென்றது. பிங்கியைத் தன் பொறுப்பில் எடுத்துக்கொண்ட நியூயார்க்கைச் சேர்ந்த அந்த அமைப்பு, 2007-ல் பிங்கியின் உதட்டுப் பிளவைச் சீராக்கியது.

இந்த விஷயத்தை அறிந்த மேகன் மைலன் என்ற பிரேஸில் திரைப்பட இயக்குநர், பிங்கியை வைத்து 'ஸ்மைல் பிங்கி’ என்ற 39 நிமிட ஆவணப்படத்தை எடுத்தார். உதட்டில் பிளவு உள்ள நபர்களைக் கண்டவுடன், பக்குவம் இல்லாத சிலர் முகத்தைச் சுளித்துக்கொண்டே பார்ப்பதும், அதனால் சம்பந்தப்பட்டவருக்கு ஏற்படும் மன வருத்தத்தையும் அந்தப் படத்தில் பதிவுசெய்தார்.

அன்னப்பிளவு என்றால் என்ன? அதை எப்படிக் குணப்படுத்துவது? அந்தப் பிரச்னையை நம் சமூகம் எப்படிப் பார்க்க வேண்டும் என்று மிகவும் அற்புதமாகப் பாடம் நடத்திய அந்தப் படத்துக்கு, சிறந்த ஆவணப் படத்துக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது.

இந்த நிலையில், விம்பிள்டனின் அறக்கட்டளைப் பங்குதாரராக, 'ஸ்மைல் ட்ரெயின்’ அமைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஜூலை 7-ம் தேதி நடைபெற உள்ள விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில், 'டாஸ்’ போடும் அரிய  கௌரவ வாய்ப்பு பிங்கிக்குக் கிடைத்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, பிங்கி முதலில் அமெரிக்கா செல்கிறார். நியூயார்க் நகரில் நடைபெறும் விம்பிள்டன் கொண்டாட்டத்தில், முன்னாள் டென்னிஸ் வீராங்கனை மோனிகா செலஸ், டென்னிஸ் வீரர் ஜிம் கூரியர் ஆகியோருடன் பங்கேற்கிறார். பின்னர், தனக்கு வெற்றிகரமாக அறுவைசிகிச்சை செய்த மருத்துவர், சுபோத் குமார் சிங்குடன் லண்டன் புறப்படுகிறார்.

விம்பிள்டன் இறுதிப் போட்டியில் டாஸ் போடும் பிங்கி, ரோஜர் ஃபெடரர், ஆன்டி முர்ரே, நோவாக் ஜோகோவிச் போன்ற முன்னணி வீரர்களையும் சந்திக்கிறார்.

கங்கிராட்ஸ் பிங்கி!

உங்கள் தட்டில் உணவா... விஷமா?

 கோலா குளிர்பானங்களின் மருத்துவ குணங்களை ஆராயும் முன், அவற்றில் உள்ள கலவைப் பொருட்களைத் தெரிந்துகொள்வோம்.
 
கார்பன் டை ஆக்ஸைடு கலந்த சோடா, எல்லா பானங்களுக்கும் பொது. அதற்கு அடுத்து 'அதிக ஃப்ரெக்டோஸ் சோளச்சாறு’  (High Fructose Corn Syrup - HFCS) மூன்றாவதாக ஃபாஸ்போரிக் அமிலம். கேரமல், சிட்ரிக் அமிலம், சோடியம் பென்ஸயோட், வினிகர், புரோமின் கலந்த எண்ணெய், ரெட் 7 இன்னும் பல 'இயற்கை நிறங்களும், கலவைகளும்’ எல்லா பானங்களுக்கும் பொது. கோகோ கோலாவில் கொகெயின் + கேஃபின், பெப்ஸியில் கேஃபின் மட்டும் உண்டு.

இந்தக் கலவைகள் காலத்துக்கு ஏற்ப, அன்றாட சட்ட திருத்தங்களுக்கு ஏற்ப அவ்வப்போது மாற்றப்படுவது உண்டு. கோகோ கோலாவில் இருந்த கொகெயின் தடைபடுத்தப்பட்டதால், பின்னர் நீக்கப்பட்டது. செவன் அப்-ல் இருந்த லித்தியம் மன உற்சாகத்தை தூண்டும் பொருளாக கருதப்பட்டதால், பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டது.

இவை தவிர, பெயர் குறிப்பிடப்படாத சில ரகசிய பொருட்களும் உண்டு. 'கோகோ கோலாவின் ரகசிய ஃபார்முலா அட்லான்டாவில் உள்ள வங்கியின் லாக்கரில் இருக்கிறது. அது இரண்டே பேருக்கு மட்டும்தான் தெரியும்' என்றும் நம்பப்படுகிறது.

இனி, குளிர்பானங்களில் உள்ள ஒவ்வொரு வேதிப்பொருளும் உடல் நலத்தை எப்படி பாதிக்கும் என்பதை பார்ப்போம்.


முதலில், கரியமில வாயு எனப்படும் 'கார்பன் டை ஆக்ஸைடு'. உயிருக்குத் தேவையான ஆக்ஸிஜனுக்கு நேர் எதிரான வாயுதான் இந்த கார்பன் டை ஆக்ஸைடு என்று உங்களுக்குத் தெரியும். இதைத் தண்ணீரில் அழுத்தத்துடன் கரைத்துக் குடித்தால் என்ன நிகழும்? பானத்தின் அமிலத் தன்மை அதிகமாகும். அமிலத் திரவம் வாயில்படும்போது பற்களின் எனாமல் கரையும். வயிற்றுக்குள் போனவுடன் அமிலத்தன்மையினால் புண் உண்டாகலாம். அண்மையில் டெல்லி பல்கலைக்கழகத்தில் ஒரு சாப்பாட்டுப் போட்டி நடைபெற்றது. அதில் ஒரே நேரத்தில் எட்டு பாட்டில் கோலா குடித்த ஒரு மாணவன், உடனே இறந்துவிட்டான். கார்பன் டை ஆக்ஸைடுதான் காரணமாகக் கருதப்பட்டது. ஆண்களின் மலட்டுத்தன்மைக்கும் இது ஒரு காரணமாக இப்போது கருதப்படுகிறது. ஆனாலும் சோடா குடித்தவுடன் காற்று ஏப்பமாக வெளியேறும்போது வயிறு சரியாகிவிட்டதாக ஒரு மன நிறைவும் சுகமும் உண்டாவதுதான் இதை மறுபடியும் குடிக்கத் தூண்டுகிறது!

குளிர்பானங்களின் அடுத்த முக்கிய கலவை 'ஹெச்.எஃப்.சி.எஸ்' எனப்படும் 'அதிக ஃப்ரெக்டோஸ் சோளச்சாறு'. இதைப்பற்றி நீங்கள் சற்று விரிவாகவே தெரிந்துகொள்வது அவசியம். ஆரம்பத்தில் கரும்பில் இருந்து எடுக்கும் சீனிதான் குளிர்பானங்களில் சேர்க்கப்பட்டது. இதன் விலை அதிகமாக இருந்ததாலும், இனிப்புச் சோளம் (Sweet Corn) அதிகமாக விளைந்ததாலும், பின்னர் சீனிக்குப் பதிலாக, 'சோளச்சாறு' உபயோகிக்க ஆரம்பித்தார்கள். கரும்பு விவசாயத்தைவிட, சோள விவசாயம் மலிவானது. அமெரிக்க அரசு இதற்கு நிறைய மானியம் கொடுக்கிறது. இதையெல்லாம்விட இப்போது மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களில் சோளம்தான் மிகவும் முக்கியமானது (மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களைப் பற்றிய மருத்துவ உண்மைகளை பின்னர் விளக்கமாகப் பேசுகிறேன்).

கரும்பு சீனியிலும், சோளச் சாறிலும் இருப்பது சுக்ரோஸ் (Sucrose). சுக்ரோஸ் என்பது, குளூக்கோஸ் + ஃப்ரெக்டோஸ் ஆகியவற்றின் கூட்டு. கரும்புச் சர்க்கரையில் குளூக்கோஸ், ஃப்ரெக்டோஸ் ஒவ்வொன்றும் 50% இருக்கும். மேலும் அவை ஒன்றோடொன்று வேதியல் இணைப்பில் இருக்கும். சோளச்சாறு சர்க்கரையில் ஃப்ரெக்டோஸ் 55 சதவிகிதமும், குளூக்கோஸ் 45 சதவிகிதமும் வேதியல் இணைப்பின்றி, வெறுமனே உதிரியாகக் கலந்திருக்கும்.

குளூக்கோஸைவிட, ஃப்ரெக்டோஸ் பல மடங்கு இனிப்பானது. பழங்களிலும், தேனிலும் முக்கியமாக இருப்பது ஃப்ரெக்டோஸ்தான் (ஆனாலும் பழங்களில் உள்ள அபரிதமான நார்ச்சத்தும், தேனில் உள்ள மற்ற இயற்கைக் கலவைகளும் இந்த ஃப்ரெக்டோஸ் கெடுதல் விளைவிக்காமல் பாதுகாக்கின்றன). கரும்புச் சர்க்கரை வயிற்றில் ஜீரணமாகும்போது குளூக்கோஸ் + ஃப்ரெக்டோஸ் கூட்டு உடைக்கப்பட்டு, பிறகுதான் உறிஞ்சப் படுகிறது. ஆனால், சோளச்சாறில் உள்ள குளூக்கோஸ் + ஃப்ரெக்டோஸ் கூட்டு, உதிரிக்கலவையாக இருப்பதால்... உடனே சிதறி வெகு சீக்கிரம் உறிஞ்சப் பட்டு ரத்தத்தில் கலக்கிறது. ஆகவே, கரும்புச் சர்க்கரையைவிட... சோளச் சர்க்கரை அதிக ஆபத்தானது என்பதில் சந்தேகமில்லை.

இந்த சோளச்சாறு சர்க்கரையை இயற்கையான சர்க்கரையாக ஏற்றுக்கொள்ள முடியாது. சோளச்சாற்றில் பல்வேறு வகையான வேதியியல் முறைகளைப் புகுத்திதான் இந்த சர்க்கரை உருவாகிறது. இதில் பல்வேறு வேதிப்பொருட்கள் கலந்திருக்கின்றன என்பது உண்மை. அதில் பாதரசம் கலந்திருக்கிறது என்பது அதி அதிர்ச்சியான தகவல்.
மலிவானதும், மிகவும் இனிப்பானதும் என்பதால் பல்வேறு உணவுப் பொருட்களில் தற்போது உலகெங்கும் இந்த சோளச்சாறு சர்க்கரை சேர்க்கப்படுகிறது. குளிர்பானங்கள் தவிர, ஜாம், ஐஸ்கிரீம், பேக்கரி பதார்த்தங்கள், பல்வேறு தானிய உணவு வகைகள், ரொட்டிகள் என்று பலவற்றிலும் இது தற்போது முக்கிய அங்கம் வகிக்  கிறது. 1960-ல் ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் 1970-ல் அமெரிக்காவுக்குள் நுழைந்து, அன்று முதல் இன்று வரை உலகம் முழுவதும் உள்ள மக்களின் உணவுப் பழக்கத்தை அடியோடு மாற்றிப் போட்டுவிட்டது இந்த சோளச்சாறு சர்க்கரை.

சமீபகாலங்களில் சோளச்சாறு சர்க்கரை தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் கிளப்பிய சர்ச்சையைத் தொடர்ந்து, சோளம் பதனிடும் அமைப்புகள் கடுமையான எதிர் பிரசார யுத்தத்தில் இறங்கியுள்ளன. ''சோளச் சர்க்கரையும் கரும்புச் சர்க்கரையும் ஒன்றுதான். இனிமேல் 'ஹெச்.எஃப்.சி.எஸ்' (HFCS) என்று சொல்லாமல் 'கரும்புச் சர்க்கரை' என்பது போல, 'சோளச் சர்க்கரை' என்று நாமகரணம் சூட்ட வேண்டும்'' என்று அமெரிக்காவின் மருந்து, உணவு தரக்கட்டுப்பாட்டின் உச்சபட்ச அமைப்பான 'எஃப்.டி.ஏ'-வுக்கு  (FDA)  மனு செய்தனர். ஆனால், அதை அந்த அமைப்பு ஏற்கவில்லை. இதுதான் சந்தர்ப்பம் என்று கரும்புச் சர்க்கரை ஆலை அதிபர்கள் எதிர்பிரசாரம் செய்ய ஆரம்பித்தார்கள். 'கரும்புச் சர்க்கரைதான் உடலுக்கு நல்லது. சோளச்சாறு சர்க்கரை கெடுதல்’ என்ற ரீதியில் அவர்கள் அறிக்கை வெளியிட்டார்கள். இதை எதிர்த்து, அமெரிக்க நீதிமன்றங்களில் சர்க்கரை ஆலைகளுக்கு எதிராக சோளச்சாறு அமைப்புகள் தொடர்ந்த வழக்குகள், தற்போது நிலுவையில்.

இரண்டையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு என்ன தோன்றுகிறது? கரும்புச் சர்க்கரை, சோளச் சர்க்கரை - இரண்டில் எது ரொம்ப கெட்ட சர்க்கரை என்பதுதானே? 'எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி' என்பது போல. 'கரும்புச் சர்க்கரை கெடுதல்' என்றால், 'சோளச் சர்க்கரை மிகவும் கெடுதல்' என்பதுதான் உண்மை.