Search This Blog

Saturday, August 21, 2010

PhD positions at the University of Minnesota: Novel topics in wave mechanics of microstructured solids and metamaterials.

Multiple positions are available for graduate research assistants in The Multifunctional Structures and Wave Mechanics Group at the University of Minnesota Twin-Cities. The group, under the direction of Prof. Stefano Gonella(http://www.ce.umn.edu/directory/faculty/gonella), is devoted to the theoretical, computational and experimental investigation of wave phenomena in unconventional structural and material systems, and to the design and implementation of wave-based methodologies for material characterization and damage detection.   
 
Current research topics of interest are:
 
 1)     Modeling and simulation of multifunctional phononic crystals and acoustic metamaterials for vibration control, waveguiding and energy trapping and harvesting. The research aims at identifying and characterizing novel structural architectures featuring unconventional properties, such as negative stiffness, auxeticity, and bandgap behavior, as well as exploring their engineering applications. 
 
2) Development of novel simulation techniques for wave propagation in heterogeneous solids and structures, for dynamic multiscale characterization of heterogeneous materials and enhanced real-time structural health monitoring and damage detection.
 
In support of the theoretical and computational core research, graduate students will have the opportunity to validate their findings experimentally by conducting vibration and wave propagation tests using a state-of-the-art 3D Scanning Laser Doppler Vibrometer (SLDV).
 
The ideal candidate is a highly motivated and creative individual with background in Mechanical, Aerospace or Civil Engineering (or equivalent degree), with strong foundations in structural mechanics and good coding skills. Familiarity with the technical language Matlab is required. Knowledge of other programming languages, such as Fortran or C, or experience with FEM packages like Ansys or Abaqus is an asset.
 
The Multifunctional Structures and Wave Mechanics Group is part of the Department of Civil Engineering and is affiliated with the Mechanics and Physics of Solids and Fluids group and the Geomechanics group, which together boast over fifteen scholars conducting research in the most diverse areas of mechanics. 
 
Applicants must submit a brief cover letter, including a statement of interest in the group’s research, a detailed resume, indicating education, experience and qualifications, and the names and contact information of three references. All applications should be sent via email to Prof. Stefano Gonella at sgonella@umn.edu.

 

நான் மகான் அல்ல - என் விமர்சனம்

சுசீந்திரன் முதல் படமாகிய வெண்ணிலா கபடிக்குழுவிற்கு பிறகு இயக்கி இருக்கும் படம். பையா ஹிட்க்கு அப்புறம் கார்த்திக் நடிக்கும் படம். மகதீரா ஹிட்கு அப்புறம் காஜல் ரி-என்ட்ரி அடிக்கும் தமிழ் படம். யுவனின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். தயா அழகிரி வழங்கும் நான் மகான் அல்ல.

எக்கச்சக்க எதிர்பார்ப்பில் வந்த திரை காவியம்.. நம் எதிர்பார்ப்பை நிறைவேற்றியதா!!!!!

கதை:

தந்தையை கொன்றவனை பலி வாங்கும் கதை.. ஆனால், இக்கதையை சொல்லிய விதம் மிக நன்று. கல்லூரியில் படிக்கும் ஐந்து மாணவர்கள் போதை பழக்கம் மற்றும் அந்த கெட்ட பழகத்தினால் ஏற்படும் காமம் என்ற கொடிய போதை. அதற்காக குப்பத்திற்கு வரும் காதல் ஜோடிகளை கற்பழித்து கொலை செய்வது என சமீபத்தில் சென்னையில் நடக்கும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு மிக அருமையாக திரைக்கதை கொடுத்துள்ளார் இயக்குனர். தன் சக தோழன் மற்றும்  காதலியை பல வந்தமாக கற்பழித்து கொலை செய்து விடுகிறார்கள். அந்த பொன்னை குப்பிட்டு கொண்டு வருவதற்கு அவர்கள் உபயோகபடுத்தியது நாயகனின் தந்தை கால் டாக்ஸி. அந்த கோளின் மிக முக்கிய சாட்சியான அவனின் தந்தையை கொலை செய்கிறார்கள்.. நாயகன் எவ்வாறு அவர்களை கண்டுபிடித்து பலி வாங்குவதே " நான் மகான் அல்ல"

  
கார்த்தி :

படித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் ஜாலியான இளைஞன். அவர் அடிக்கும் சேட்டைகள், நக்கல்கள் தான் முதல் பாதி.. கார்த்திக்கு கேலி, கிண்டல் மிக இயல்பாக வருகிறது. தோழியின் கல்யாணத்தில் காஜல் பார்த்து அவரை கரெக்ட் செய்வதாகட்டும், அந்த யாடத்தில் அவர் வாய்ஸ் மிக அருமை.தன் தந்தை, தாய் மற்றும் தங்கையிடம் அவர் சீண்டி விளையாடுவது மிகவும் ரசிக்கும் படி உள்ளது. காஜல் அப்பாவிடம் போயி பெண் கேட்பது, அவர் ஆளை வைத்து மிரட்ட ஏற்படும் பண்ணும் ரவுடியை பேசியை தன் பக்கம் சாய்ப்பது, கடன் வசூல் செய்யும் இடத்தில் அவர் செய்யும் லூட்டிகள் எல்லாம் அருமை. இதற்க்கு மேல் விவரித்தல் அந்த ரசிப்பு தன்மை குறைந்துவிடும்..

காஜல் :
பெரிதாக வேலை இல்லை.. ஆனால் பார்க்க செம அழகு.. முதல் பாதி இவர் கார்த்திக்கிடம் உல்டாவாக எதிர்பார்த்து ஏமாந்து போவது சூப்பர்.. ஆனால் இடைவேளைக்கு அப்புறம் அம்மணி என்ன ஆனர்கள் என்று தெரிய வில்லை.

ஜெயபிரகாஷ் :

இப்படி ஒரு அப்பா நமக்கு கிடைக்க மட்டார அனா ஏங்க வைக்கிறார்..டாக்ஸி டிரைவராக வரும் இவர்  நச்சென்று செய்திருக்கிறார். காஜல் இவரிடம் பேசும் போது தன் தந்தை பிடிக்கவில்லை, ஜீவாவ ரொம்ப பிடிச்சிருக்கு என்று சொல்லும் போது அதற்க்கு அவர் ஜீவா எத்தன நாள தெரியும், ஜீவா உடன் 22 வருஷம் குடும்பம் நடத்தி அப்புறம் வந்து சொல்லு என கூறும் இடம் நன்று .

அந்த ஐந்து பசங்க:

யாருப்பா இவுங்க.. சும்மா மிரடீட்டாங்க.. கண்ணாலே பேசுவது, காரியத்தை மிக நேர்த்தியாக செய்வது என நிறைவாக செய்துள்ளார்கள்...
க்ளைமாக்ஸ் காட்சியின்  அவர்கள் காட்டும் வெறியும், பழிவாங்கும் உணர்ச்சியும் அதிர வைக்கிறது.

யுவன் :
வா..வா நிலவை பிடிச்சி தரவா, ஒரு மாலை நேரம், இறகைப் போலே.. ஆகிய பாடல்கள் மிக அருமை.. ஆனால் ஒரு மாலை நேரம் படத்தில் இல்லை.. அந்த பாடலில் வரும் ஹம்மிங் அருமை. குறிப்பாக ரிங் டொன செட் பண்ணலாம்.

ஒளிப்பதிவாளர் மதி, எடிட்டர், சண்டைப்பயிற்சி அனல் அரசு, என எல்லோரும் நன்றாக செய்துள்ளனர்..

சுசீந்திரன்

 முதல் படத்தில் இருந்து வித்யாசமான கதையை தேர்ந்தெடுத்து அதில் மசாலாவை தூவி வெற்றி  பெற்றுள்ளார். சீக்கிரம் அழகர்சாமியின் குதிரையை எடுத்து முடிங்க..

எனக்கு  பிடித்த
வசனம் உங்களுக்காக

முடிந்ததை நினைத்து கொண்டு இருந்தால் வாழ்கை சந்தோஷமாக இருக்காது.

காதல் என்பது செடியில் பூக்கும் பூக்கள் அல்ல.. வானத்தில் இருக்கும் நிலவை போல... மேகம் மூடி இருக்கும் போது நிலா காணமல் போன மாதரி தெரியும், ஆனால் மேகம் களையும் போது நிலவு மிக அழகாக் தெரியும்..

நம்மள விட்டு ஒரு விஷயம் தொலைந்து போகும் போது தான் புதுசா ஒரு லைப் பிரகாசமாக நம்மை தேடி வரும் அதான் வாழ்கை.

அந்த விஷயத்திலும் நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும். நம் நல்ல விஷயத்தை எடுத்துக்கலாம்.

எந்த ஒரு விஷயத்திலும் நடக்கும் என்று நம்பினால் அந்த விஷயம் கண்டிப்பாக நடக்கும்.. நம்பிக்கை  தான் வாழ்கை..

எனக்கு என்னமோ இந்த படம் ஒரு சமூக உணர்வ்வு தரும் என நம்புகிறேன்.. காதல் பண்ணுறவன் இனிமேல் எவனாவது இல்ல எவளாவது யாரும் இல்லாத இடத்துக்கு இனிமேல் போவது கொஞ்சம் சந்தேகம் தான்.. நண்பர்களே, சென்னையில் இது போல் நடந்து உள்ளது.. ஆனால் யாரும் புகார் தந்தது இல்லை என கேள்வி பட்டுளேன்.. ஜாக்கிரதை !

தயவு செய்து சிறு குழந்தைகள் உடன் இந்த படத்தை பார்காதீர்கள்

பாணா காத்தாடி - என் விமர்சனம்

முரளியின் பையன் அதர்வா அறிமுகம் ஆகி உள்ள திரைப்படம். விண்ணை தாண்டி வருவாயில் அறிமுகமான சமந்தா நடித்த படம். அறிமுக இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ள படம்.

கதை :

வட சென்னையில் உள்ள அதர்வா மற்றும் பேஷன் டெக்னாலஜி படிக்கும் சமந்தாக்கும் எவ்வாறு காதல் அரும்புகிறது.. அதனல் ஏற்படும் பிரச்சனைகள் என்ன என்பதே  பாணா காத்தாடி..

கொஞ்சம் விரிவாக சொல்லுகிறேன் :


தர்வா காத்தாடி(பட்டம்) விடுவதே தன் வாழ்வில் பெரும்பகுதியாக வைத்து கொண்டு ஊர் சுற்றும் ஒரு கல்லூரி பையன். அவனுக்கு ஊறு துணையாக ( நண்பர்களாக ) கருணாஸ் அன் கோ.. நாயகன் தான் காத்தாடி பிடிக்க போகையில் எதிர்பாராமல் நாயகின் மேல் இடித்து அவளுடைய பென் டிரைவ் ( கடைசி வருட ப்ராஜெக்ட் உள்ளது ) தெரியாமல் நாயகனிடம் வந்து விடுகிறது. இதனால், ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் சில நாட்கள்  கழித்து சமாதனம், அதன் மூலம் இருவருக்கும் காதல் பிறக்கிறது. கொஞ்ச நாட்கள் கழித்து இருவருக்குள் பிரச்சனை ஆரம்பம். இந்த சமயத்தில் ஒரு கொலையை நாயகன் நேரில் பார்ப்பதால், அவனை கொல்ல துடிக்கும்  வில்லன். பின்பு இருவரும் இணைந்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.

அதர்வா :

சென்னை பாஷை பேசுவதற்கு ரொம்ப சிரம படுகிறார். மத்தபடி நடிப்பு ஓர் அளவுக்கு ஓகே..

சமந்தா
:

செம அழகு.. சிரிக்கும் போதும் அல்லும் போதும் நன்றாக நடித்துள்ளார். ஆனால் எனக்கு காதல் கொண்டேன்ல சோனியாவை பார்த்த மாதரி இருக்கு.. சோகத்திலும் அழகான முகம்

பிரசன்னா:
அஞ்சாதே படத்துக்கு அப்புறம் நிறைவான நடிப்பு . கடைசியில் அதர்வாவை காப்பாற்ற அவனுக்கு கத்தியை கொடுக்கும் போதும், கண்களாலேயே நடித்து இருக்கிறார்.

கருணாஸ்:

மனுஷன் முன் பாதியில படத்தை கொண்டு செல்வதே இவர் தான்.. அதுவும் அந்த போலீஸ் ஸ்டேஷன் மற்றும் அப்பா பாக்கெட்ல பணம் எடுக்குற ஜோக் நன்ற உள்ளது.. கடைசியில் உருக்கமாக அப்பாவிடம் பேசும்  இடம் மிக நல்லா இருக்கு..

யுவன் :

இந்த படத்தை பார்க்க வைத்தே யுவனின் இசை தான். மூன்று பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்.. பின்னணி இசை ஓகே ரகம்.

மௌனிகா:

ரொம்ப நாளைக்கு அப்புறம் நடிசிருகாங்க, அவுங்கள பத்தி அவ்ளோவ சொல்ல தேவை இல்ல.. ஆனால், கொஞ்சம் ஓவர் அக்டிங் போல இருக்குது..


படத்தில் எனக்கு பிடித்த வசனம் :

  • "நல்லவங்களுக்குத்தான் அழுகை வரும்"
  • 'சில சமயம்,நமக்கு தேவைப்படுறது நமக்கு கிடைக்காது;ஆனால் நமக்கு கிடைச்சது நமக்கு தேவைப்பட்டதை விட நல்லாவே இருக்கும்'
  • 'என்னைப் பெத்தவங்களும் சரி,என்னைக் கட்டினவரும் சரி, என் பையன் அளவுக்கு என்னை சந்தோஷப்ப்டுத்தினதில்லை'

நாயகி தான் பக்கம் உள்ள நியாயத்தை விளக்க எடுக்கும் குறும் படம்.. cute

முரளி வரும் இடம், மற்றும் அந்த வசனம் அருமை ( மறந்துடுச்சு )!!!!!!


படம் வெற்றி படம் இல்லை என்றாலும், இந்த ஆண்டில் வந்த மற்றுமொரு நல்ல படம் இது


Friday, August 20, 2010

இனிமேல் அஜீத் எனக்குத் தேவை இல்லை! - கௌதம் வாசுதேவ்மேனன்

இன்னும் ஒரு புரமோஷன் வாங்கிய புன்னகை... 'தயாரிப்பாளர்' கௌதம் வாசுதேவ்மேனன் முகத்தில்!

கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒரு மாலையில் 'நடுநிசி நாய்கள்' படப்பிடிப்பில் இருந்தார் கௌதம். 

"'வெப்பம்', 'அழகர்சாமியின்குதிரை'ன்னு கவிதைத் தலைப்புகளோடு தயாரிப்பாளர் அவதாரம். நல்ல சினிமாவுக்கான உங்கள் பங்களிப்பை எதிர்பார்க்கலாமா?"

"நான் சினிமாவுக்கு வரும்போது இதன் பிசினஸ், இதற்குள் புழங்குகிற பணம், இதற்கான ஃபைனான்ஸ் எதுவும் தெரியாது. இப்ப நான் சினிமாவுக்கு வந்து 10 வருஷங்கள் ஆச்சு. வேலை பார்த்த சில தயாரிப்பாளர்களுடன் நல்ல அனுபவங் கள் அமையலை. 'இதைச் செய்தால் இவ்வளவு வரணும்'னு கணக்கில் இருந்தாங்க. சிலர் கதைகூடக் கேட்க மாட்டாங்க. என்னோட தப்பும் கொஞ்சம் இருந்திருக்கலாம். அந்த மாதிரி இனிமேல் படம் பண்ணக் கூடாதுன்னு நினைச்சேன். 


'நடுநிசி நாய்கள்' என் 10-வது படம். என் தயாரிப்பு நிறுவனத்தை லண்டன் ஸ்டாக் மார்க்கெட்டில் பிரைவேட் கம்பெனி யாகப் பதிவு செய்தேன். அஞ்சனான்னு என் அசிஸ்டென்ட், 'வெப்பம்' கதையை அதிரடியாகச் சொன்னாங்க. பக்கா கமர்ஷியல். நகரத்தில் நடக்கிற ஒரு கேவலமான விஷயத்தை வெச்சு, கதையை அவ்வளவு லைவ்வாகக் கொண்டுவந்தாங்க. சுசீந்திரன் 'அழகர்சாமியின் குதிரை'க் கதை சொன்னார். சிரிச்சுச் சிரிச்சு ரசித்தோம். 'வெண்ணிலா கபடிக் குழு'விலேயே என்னைக் கவர்ந்தவர். அவரோட 'நான் மகான் அல்ல' பத்தி இப்பவே நல்ல பேச்சு இருக்கு. இளைய ராஜாதான் மியூஸிக்னு சொன்னார். ரொம்பப் பிடிச்சது. உடனே ஆரம்பிச்சுட்டோம். 'கற்றது தமிழ்' ராம் 'தங்க மீன்கள்'னு ஒரு கதை சொன்னார். அவ்வளவு அழகு. 'யுவன் மியூஸிக்'னு சொன்னார். பிடிச்சது. எனக்கு சசிக்குமார்தான் இப்போ மாடல். அவர் 'சுப்பிரமணியபுரம்'னு ஒரு படத்தை நம்பிக் கையா, நல்ல கதையை மட்டும் நம்பி, எந்த சேனலுக்கும் விற்காமல், நல்ல மியூஸிக் போட்டு தைரியமாகச் செய்து பெரிய வெற்றி கொடுத்தார். ஷங்கர் சார் படங்கள் தயாரிச்ச விதம் நல்லா இருந்தது. எல்லாம் சேர்ந்து நானும் களத்தில் இறங்கிட்டேன்!"

"எப்படி இருக்கும் 'நடுநிசி நாய்கள்'?" 

"இதை முற்றாக ஒரு த்ரில்லர்னு சொல்ல முடியாது. இது ஒருத்தனோட கதை. இப்படிப்பட்டவங்களும் நம்மைச் சுத்தி இருக்காங்கன்னு தெரிஞ்சுக்கலாம். இப்படிப்பட்ட ஆட்களோடு எச்சரிக்கையா இருங்கன்னு சொல்றேன். அழகான லவ் ஸ்டோரி மட்டும்தான் எனக்குத் தெரியும்னு யாரும் சொல்லிடக் கூடாது. எனக்கே ஒரு மாறுதல் தேவைப்பட்டது. பட்ஜெட்டைக் குறைச்சிருக்கேன். பாடல்கள் இல்லை. என் படங்களை ரசிக்கிறவங்களுக்கு இதுவும் நிச்சயம் பிடிக்கும். இங்கிலீஷ் படம் மாதிரி ஒன்றரை மணி நேரம்தான் படம். வீரா, கார்த்திக்னு என்னோட அசிஸ்டென்ட்ஸ் நடிச்சிருக்காங்க. அவங்க என்கிட்டே வரும்போதே நடிப்பிலும் ஆர்வம் இருக்குன்னு சொல்லி வந்தாங்க. நிச்சயம் மாடர்ன் ஆக இருக்கும். பாரதிராஜாவோட 'சிகப்பு ரோஜாக்கள்' பார்த்தோமே, அந்த பாணியில் இருக்கும். சமீரா ரெட்டி படத்தில் பெரிய ரோல் பண்ணி இருக்காங்க. இது பெரிய படம்னு சொல்லி ஏமாத்தாம, பெரிய விலைக்கு விற்காமல் பண்றேன். 16 + மனிதர்களுக்கான படம். நிச்சயம் பெண்கள் பார்க்க வேண்டிய படம். அவங்களுக்கான எச்சரிக்கைதான் 'நடுநிசி நாய்கள்'!"

"'விண்ணைத்தாண்டி வருவாயா' மறுபடியும் இந்தியில் பண்றீங்க? சுவாரஸ்யமான படமாக இருந்தாலும் போர் அடிக்காதா?"

"பிடிக்காத விஷயம்தான். ஆனால், உண்மையைச் சொல்லணும்னா, நான் இந்தியில் ஒரு நல்ல பிரேக் தேடிட்டு இருக்கேன். அபிஷேக் பச்சனை வெச்சு 'காக்க காக்க' பண்ணலாம்னா... சரியா அமையலை. என் பார்ட்னர் எல்ரெட் குமார் எனக்கே தெரி யாமல் மும்பையில் 'விண்ணைத் தாண்டி வருவாயா' ஸ்க்ரீன் பண்ணி இருக்கார். 'இது நிச்சயம் இந்தியில் செய்ய வேண்டிய படம்'னு அனுராக் காஷ்யப், ரமேஷ் சிப்பி எல்லோரும் சொன்னாங்களாம். பெரிய வெளியீடு. நிறைய ஆடியன்ஸ். ரஹ்மான் இதே ஐந்து பாடல்கள் தவிர, இன்னும் இரண்டு பாட்டு போட்டுத் தர்றேன்னு சொல்லி இருக்கார். அதனால், இந்தியில் இறங்கிப் பண்ணலாம்னு இருக்கேன். நிச்சயம் இந்த முயற்சி சுவாரஸ்யமா இருக்கும்னு தோணுது!" 

"சூர்யா, சிம்புவிடம் மிகச் சிறந்த நடிப்பைக் கொண்டுவந்தீங்க. உங்க அனுபவத்தில் இரண்டு பேரில் யார் பெஸ்ட்னு சொல்வீங்க?" 

"இப்பதான் சிம்புவிடம் பழகி இருக்கேன். எனக்கு சிம்பு நடிச்சதில் பிடிச்சது என் படம்தான். விஜய் அவங்க அப்பா சொல்லி முதல் 10 படங்கள் பண்ணி, ஒரு மாஸ் பிடிச்ச மாதிரி... சிம்புவும் செய்தார். இந்தியில் ரமேஷ் சிப்பி நம்ம சிம்புவைப் பார்த்துட்டு, 'யார் இந்தப் பையன்... கடைசியில் மனசுக்குள் போயிடுறான்!'னு கேட்டாராம். ஆனா, சிம்பு என் ரிகர்சலுக்கு சரியா வர மாட்டார். எனக்குக் கோபமா வரும். புரொடியூசர்கிட்டே கத்துவேன். அவர் வந்ததும் 'ஸ்டெப் பாருங்க'ன்னு கோபமாவே சொல்வேன். 'டேக் பிரதர்'னு போயிரு வார்.அநேகமா எல்லாம் ஒரே டேக். அடுத்த டேக்னு எதுவும் இருந்தா... அது கேமரா தப்பாக இருக்கும். 

சூர்யான்னா... எனக்கு ஒரு சக்சஸ் பேக்கேஜ். அஜீத், விஜய், விக்ரமிடம் எல்லாம், 'காக்க காக்க' கதை சொல்லி, 'நல்லா இல்லை', 'போலீஸ் வேண்டாம்', 'செகண்ட் பார்ட் சரியா இல்லை'ன்னு இப் படிப் பலப்பல காரணங்கள் சொல்லி நிராகரிச்ச படம். ஜோ சிபாரிசு பண்ணி எனக்காக நடித்தார் சூர்யா. எனக்கு அது பெரிய ஆடியன்ஸ் தந்தது. 'காக்க காக்க' பார்த்துட்டுதான் கமல் படம் பண்ண வாய்ப்பு கொடுத்தார். 

சூர்யா இன்னிக்கு இருக்கிற நம்பர் ஒன் பொசிஷனுக்கு அவருக்கு அடுத்து சிம்புதான் வருவார். சூர்யாவின் வேகம், ஆர்வம் எல்லாமே இப்ப சிம்புவிடம் பார்க்க முடியுது. எதாவது ஒரு பாயின்ட்டில் அந்த இடத்துக்கு வருவார் சிம்பு. அதற்கான தகுதி அவரிடம் நிறையவே இருக்கு!"

"திரும்பத் திரும்பப் பேசியும் படம் பண்ண முடியாமப் பிரிஞ்சிட்டீங்க. உங்களுக்கும் அஜீத்துக்கும் இடையில் என்னதான் நடக்குது. அஜீத்கிட்ட குழப்பமா... உங்களிடமா?"

"10 வருஷங்களா அஜீத்துடன் பேசிட்டு இருக்கேன். ஒவ்வொரு தடவை சந்திக்கும்போதும், 'நம்மைச் சேரவிடாமல் பண்றாங்க... பிரிச்சுடு றாங்க'ன்னு சொல்வார். இந்தத் தடவை மிஸ் பண்ணவே கூடாதுன்னு சொன்னார். ஜூலையில் பண்ணலாம்னு சொன்னார். ரெடியா இருந்தேன். அப்புறம் டிசம்பர்னு சொன்னார். திடீர்னு போன் பண்ணி, 'வெங்கட்பிரபுவை எனக்குப் பிடிக்கும். அவர் ஐந்து ஹீரோ சப்ஜெக்ட் சொன்னார். அதில் ஒருத்தரா நடிக்கிறேன்'னு சொன்னார். இவ்வளவு பெரிய ஹீரோ ஐந்து ஹீரோவில் ஒருத்தரா ஏன் நடிக்கணும்னு ஆச்சர் யம். ஆனாலும், சரின்னு சொன்னேன். அப்புறம் ஜெமினி மனோகர் பிரசாத்கிட்ட படம் பண்ணலாம்னு கேட்டு இருக்கார். அவங்க என்னைச் சொல்ல, அஜீத் வேண்டாம்னு சொன்னாராம். அப்புறம் இயக்குநர்கள் விஷ்ணுவர்தன், 'மதராசபட்டின்ம்' விஜய் ரெண்டு பேரிட மும் 'எனக்கு ஒரு படம் பண்ணிக் கொடுங்க'ன்னு கேட்டு இருக்கார். இதெல்லாம் நடக்கும்போது, இதற்கிடையில் நான் யாருன்னு யோசிச் சேன். இதை எல்லாம் அவர் என்னிடம் சொல்லி இருக்கலாம். ஏனோ... சொல்லலை. ஆனால், 'கௌதம்கிட்ட போனில் சொல்லிட்டேன்'னு சொல்லி இருக்கார். அது உண்மை இல்லை. இனிமேல் அஜீத்திடம் போய் நிற்கணும்கிற தேவை எனக்கு இல்லை!"


"என்ன இது... திரும்பத் திரும்ப த்ரிஷா, சமீரா ரெட்டின்னு... அவ்வளவு நட்பா.. இல்லை நடிப்பு பிடிச்சதா?"

"நம்ம இண்டஸ்ட்ரியில் இரண்டு படங்கள் சேர்ந்து பண்ணினால், இரண்டு பேருக்கும் ஏதோ விஷயம்னு நினைப்பாங்க. அதுக்காக நான் இந்த இண்டஸ்ட்ரிக்கு வரலை. த்ரிஷாவிடம் ராத்திரி 11 மணிக்கு போன் பண்ணி 'நாளைக்கு காலையில் 9 மணிக்கு வாங்க. ஒரு கதை சொல்றேன்'னு கேட்கலாம். வருவார். 

தமன்னா, அனுஷ்காகிட்ட அது மாதிரி என்னால் பேச முடியாது. சமீராவிடம் நான் டேட்ஸ் கேட்டதும் உடனே வந்தாங்க. எனக்கு வாழ்க்கை உருவாக்கிக் கொடுத்தவர் ஜோதிகா.அவங்களுக்குப் பிறகு எனக்கு ஃப்ரெண்ட்ஸ் மாதிரி இருக்கிறவங்களை வெச்சு நான் படங்கள் பண்றேன். அவ்வளவுதான்!"

"உங்கள் குடும்பத்தைப்பத்திப் பேசவே இல்லையே?"

"என் மனைவி ப்ரீத்திக்கு அதெல்லாம் பிடிக்காது. எனக்கு ப்ரீத்தி நல்ல ஃப்ரெண்ட். எட்டு வயதில் இருந்து பழக்கம். ஒருநாள் திடீர்னு என்னைப் பிடிச்சிருக்குன்னு சொன்னாங்க. எனக்குப் பயங்கர ஷாக். ரெண்டு பேருக்கும் ஒரே வயசு. எங்க காதல் கல்யாணம் ஒரு டிசம்பர் 26-ல் நடந்தது. 

ஆர்யா, துருவா, ஆத்யான்னு மூணு பசங்க. என் அம்மாவும் என் மனைவியும் நல்ல ஃப்ரெண்ட்ஸ். என்னை குறை நிறைகளோடு ஏத்துக்கிற பொண்ணு. பசங்க எல்லாம் எப்பவும் அம்மாசைடுதான். ஆனால்,நான் வீட்டுக்குள் நுழைஞ்சால், அம்மாவைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் என்கூடவே இருப்பாங்க. இந்த சாமர்த்தியம் எப்படிடா வருதுன்னு யோசிப்பேன்!"

" 'ராவணன்' படம் பார்த்தீங்களா?"

"மூணு தடவை பார்த்தேன். தமிழ், இந்தி, தமிழ். இதுதான் வரிசை. எனக்கு ரொம்பப் பிடிச்சது. அதனோட உழைப்பு, அழகு எல்லாமே நல்ல விஷயம். இந்தி 'ராவணன்' பார்த்த பிறகுதான் விக்ரம் எவ்வளவு அருமையான நடிகர்னு புரிஞ்சது. எனக்குச் சில விஷயங்கள் கண்மூடித்தனமாகப் பிடிக்கும். அதில் மணிரத்னமும் ஒண்ணு. அவரை விமர்சனம் செய்ய எனக்கு யோக்கியதை இல்லை!"

நன்றி - விகடன் 

Postdoctoral Positions at the University of Pittsburgh in Cellular Mechanics and Biophysics of Morphogenesis



Postdoctoral Positions are available for highly qualified and motivated candidates to study the physical principles of morphogenesis in the Davidson Laboratory at the University of Pittsburgh in the Department of Bioengineering. The laboratory focuses on studying the molecular-, cellular, and tissue-scale processes that regulate mechanical properties and force-production during morphogenesis. Projects involve a combination of biophysics, cell biology, bioengineering, and embryology.

Candidates will have recently completed a PhD and have strong background in either biophysics, cell and developmental biology, or cell- and tissue- mechanics. Candidates with expertise with biochemistry, quantitative microscopy, microrheology, microfabrication or computer simulation are preferred. The research environment at the University of Pittsburgh includes a dynamic community of bioengineers, developmental biologists, cell- and tissue-level biomechanics, and theoretical biologists. Nearby resources include the John A. Swanson Micro and Nanotechnology Laboratory and the Pittsburgh Supercomputing Center. Contemporary Pittsburgh is a diverse vibrant city undergoing a renaissance led by world class Universities and the University of Pittsburgh Medical Center. The University of Pittsburgh is an Equal Opportunity Employer. Women and minorities are especially encouraged to apply.

Interested applicants should forward their statement of research interests, CV, and a list references to:
Lance Davidson Department of Bioengineering Biomedical Science Tower 3, Room 5059 3501 Fifth Avenue University of Pittsburgh Pittsburgh PA 15260 (email) lad43@pitt.edu (web) http://www.engr.pitt.edu/ldavidson/

Thursday, August 19, 2010

இன்று உலக புகைப்பட தினம்..

Postdoctoral Position Available in the Sottos Group


Applications are sought for a postdoctoral appointment in the research group of Prof. Nancy Sottos in the Department of Materials Science at the University of Illinois Urbana-Champaign. 

Research will focus on in situ characterization of thin film adhesion and inter facial failure of ultra thin films under dynamic loading conditions. The successful candidate will have experience in mechanical behavior of thin films, optical methods, laser interferometry, and wave propagation. 

The ability to work in a highly interdisciplinary environment is essential, as there will be significant interaction with researchers at the Beckman Institute. Information on the activities of the Sottos Group can be found at http://sottosgroup.beckman.illinois.edu/.

The University of Illinois at Urbana-Champaign offers an outstanding environment for postdoctoral research with excellent facilities, a tradition of exciting science, and a commitment to interdisciplinary investigation.


Interested applicants should send a letter of interest, resume, and 1-3 representative publications, and arrange for two letters of recommendation to be sent under separate cover to:

Nancy Sottos, n-sottos@uiuc.edu

Position isavailable for immediate start. Applications will be taken until October2010. The University of Illinoisis an Equal Opportunity Employer.

Wednesday, August 18, 2010

'தேநீர் விருந்து' - சுதந்திர தினக் கொண்டாட்டங்கள்

இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் கோலாகலமாக நடந்து
முடிந் திருக்கின்றன.இந்த விழாவின் ஒரு பகுதியாக நடைபெறும் 'தேநீர் விருந்து' நிகழ்ச்சியும் நடந்து முடிந்தது!

இந்த 'தேநீர் விருந்து'நிகழ்ச்சிகள்,சுதந்திரம் மற்றும் குடியரசு தினத்தில் அரசின் சார்பில் நடத்தப்படுவது வழக்கம்.இந்த தினங்களில் மத்திய அரசில் ஜனாதிபதியும், மாநில அரசுகளில் கவர்னரும் 'தேநீர் விருந்து' நிகழ்ச்சியை நடத்துவார்கள். எப்போது இந்த நடைமுறை அமலுக்கு வந்தது என்பது தெரியவில்லை.மத்திய அரசின் வழிகாட்டுதலில் இந்த விருந்து நிகழ்ச்சிகள்,எல்லா மாநிலங்களிலும் நடைபெற்று வருகின்றன. தமிழகத்திலும் இந்த 'தேநீர் விருந்து' களை கட்ட... 'இது எதற்கு? இதனால் என்ன பயன்? இதற்காக எவ்வளவு செலவு?'

எல்லாம் நம்ம வரி பணம் தான்.முன்று வேலை உண்ண உணவு இல்லாமல், கழிப்பறை வசதி இல்லாமல்,படுக்க இடம் இல்லாமல்,நல்ல குடிநீர் இல்லாமல் எத்தனை பேர் நம்ம தேசத்தில் இருப்பார்கள் என தெரியவில்லை. என்னை பொறுத்த வரை இது மாதரி ஒரு வெங்காயமும் தேவை இல்லை.

மேலே கொடுத்துள்ள படம் நம்ம தமிழ் நாட்டின் செலவு கணக்கு.இது போல அனைத்து மாநிலங்கள் சேர்த்தால் அம்மாடியோ !நாடு தாங்காது..அது போக நம்ம பிரதமர் குடுக்கும் விருந்து தனி ..

நன்றி : விகடன் குழுமம்

வம்சம் - என் விமர்சனம்

பழிக்கி பழி, ஒரு கண்ணுக்கு மற்றொரு கண்ணை புடிங்கினால் மொத்த உலகமும் குருடாவது தான்..இது தான் படத்தின் மைய கரு..


ஒரு  இயக்குனருக்கு முதல் படமே மிக பெரிய  வெற்றிப்படமாக அமைந்து விட்டால்,  இரண்டாவது படம்  மேல் எதிர்பார்ப்பு மேலோங்கி இருக்கும். சில பேர் எதிர்பார்ப்பை நிறைவேற்றி இருப்பர். ஆனால், பல பேர் சறுக்கி விழுவர். பாண்டியராஜன் என்ன ஆனார் என்பதை கடைசியில் சொல்லுகிறேன்.


எந்த ஊரிலும் இல்லாத மாத்ரி அந்த ஊரில் திருவிழா அவ்வளவு விமர்சையாக கொண்டாட படுகிறது. அந்த ஊரில் நடக்கும் அதனை பகை மற்றும் வெறுப்பு ஆகியவைகளை போலீஸ் முலம் மிக குரிய நேரத்தில் சொல்லியது மிகவும் பாராட்டுக்குரியது.திருவிழாவும், அதை வைத்து அங்கு வருடா வருடம் நடக்கும் கொலைகளையும், அப்படி கொலை செய்வதற்கான காரணம். அப்படி செத்தவர்களுக்கு கிடைக்கும் மரியாதை என்று களம் விரிவு அடைகிறது.. திருவிழாவுக்கு போகிறது காட்சி.. இதில் எப்பாடு பட்டாலும் பிற்பாடு கேடதவர் என்ற வம்சா வழியில் வந்த அறிவுநதி பெயர் அறிவிக்கபடுகிறது. அப்போ நம்ம நாடோடிகள் ஜெய பிரகாஷ் " இன்னைக்கு இவன கொல்லுங்கட" சொல்லுகிறார். அப்போ ஓட ஆரம்பிக்கிற படம் இடைவேளை வரை விரைவாக செல்கிறது . 


ஊரில் எல்லா விஷயத்திலும் தான் முதலாவதாக இருக்க வேண்டும் என்பதற்காக நஞ்சுன்டான் மாஓசி வம்சத்தை    சேர்ந்த சீனிகண்ணு, தனக்கு போட்டியாய் இருக்கும் எப்பாடு பட்டாவது பிற்பாடு கெடாதவர் வம்சத்தை  சேர்ந்த கிஷோரை வஞ்சகமாக விஷம் வைத்து கொல்ல, இறந்து போன  கணவன் போல தன் மகனும் ரௌடியாக மாறி இறக்க கூடாதென  அஹிம்சையே போதித்து வளர்க்கிறார் அவன் அம்மா இப்படி நீள்கிறது படத்தின் பிளாஷ் பேக்.


இந்த கதை பேரரசு, ஹரி வகையறாக்களிடம் கிடைத்திருந்தால் ஸ்க்ரீன் முழுக்க ரத்த சிதறல்களாக இருந்திருக்கும் ஆனால் பாண்டிராஜ் இந்த கதைக்கு கொடுத்திருக்கும் வித்தியாசமான  ட்ரீட்மென்ட் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறது. முக்கியமாக  செல்போனை மையமாக வைத்து வரும்  காதல் காட்சிகள் எல்லாம் அருமை ( மடமை ). காதல் காட்சிகளில். “அசினை” அருளும், சுனைனாவும், மாற்றி மாற்றி தூதுவிட்டுக் கொள்ளும் இடங்கள் இளமை. இரண்டாம் பாதி, கொஞ்சம் நீளமான பிளாஷ் பேக்கும், துரதல்களுமாய் சென்றாலும் ஓகே ரகம்.

அருள்நிதி :  நல்ல உயரம்.. விஷால் மாத்ரி ஆக்சன் வருது.. வசன உச்சரிப்பு சரி இல்லை.

சுனைனா : இவர் நடித்ததில் நல்ல படம். அருமையாக நடித்துள்ளார். அதுவும் சாணி கரைத்து அடிக்கும் பொது, மற்றும் தந்தை இறக்கும் பொது நன்றாக நடித்துள்ளார். போன் இல்லமாலேயே, தூரத்தில் இருக்கும் தனது தோழியே  ஒரு   மாதிரி குரல் கொடுத்து கூப்பிடும் காட்சி அட்டகாசம். 

ஜெய ப்ரகாஷ் : மனசில் வன்மத்தை வைத்து கொண்டு, வெளியே புன்னகைக்கும் அவரது நடிப்பு அபாரம். மனுஷன் வாழ்த்திருக்கிறார் அந்த பாத்திரமாக..

பாண்டியராஜ் : துரத்தும் எதிராளிகளிடம் இருந்து தப்பிக்க, அவர்களை திசை திருப்பி வாய்காலில் இறங்க வைத்து, பின், வேலி முள் சுருளை தண்ணீரில்  போட்டு இன்னொரு பக்கத்தை மின்சார கம்பியின் மேல்  போட்டு விடுவதாக  ஹீரோ மிரட்டி தப்பிக்கும் இடத்தில் பாண்டிராஜின் புத்திசாலித்தனம் மிளிர்கிறது. 

இசை:  பாடல்கள் நல்லா இல்லை.. பின்னிணி இசை அருமை..  

படத்தின் பிடிக்காத விஷயம் அந்த கிளைமாக்ஸ் சண்டை.. அப்படியே சண்ட கோழி மாத்ரி.. தவிர்க்க முயற்சி பண்ணி இருக்கலாம்.

படத்தில் எனக்கு  பிடித்த வசனம் உங்களுக்காக இங்கே :

  • கிராமத்தில் வாழ்ந்த வாழ்கை கல்யாணம் மற்றும் சாவில் தான் தெரியும் அந்த மனிதன் எப்படி வாழ்த்தான் என.
  • திருவிழா என்பது சாதி, பேதம் மறந்து ஊரோட கொண்டாட வேண்டியது..
  • மன்னிகிறதும், மறக்கிறது மனித தன்மை..
  • ஒரு ஊர்ல சமுதாயம் சரியில்ல்னே அந்த ஊர் தலைவன், ஆசிரியர் சரி இல்லை என்று அர்த்தம் .
  • அடிக்குறது, வெட்டுறது மற்றும் கொலை பண்ணுவது மட்டும் வன்முறை இல்லை, மிரடுறதும் வன்முறை தான்.
  •  பொறுமையா இருந்த இந்த உலகத்துல பயந்தவன் என்று அர்த்தம். 
முதல் படத்தில் இருந்து வித்தியாசமான கதை சொல்லி,என்னை பொறுத்த வரை பாண்டியராஜன் சறுக்கியே உள்ளார்.


Tuesday, August 17, 2010

Credit Card Accepted as Identity Proof in Indian Trains..


நன்றி - தினகரன்

The Institute of Mechanics-BAS is opening 4 PhD positions

The Institute of Mechanics, Bulgarian Academy of Sciences is opening 4 PhD positions. Deadline for applications: 20.10.2010
Applicants from Bulgaria and
EU-member countries are eligible to apply for a PhD-scholarship for 3
years to do their doctoral study at the Institute of Mechanics-BAS
(IMech).

The opened PhD positions are in the field of: solid mechanics (for 1 PhD student, correspondence form), fluid mechanics (for 1 PhD student, regular form), applied mechanics (for 1 PhD student, regular form), biomechanics (for 1 PhD student, regular form).

Interested students should contact for details about the application procedure the Director of IMech at office@imbm.bas.bg
Acad. G. Bontchev St., bl. 4
1113 Sofia, Bulgaria
Tel.: +359 2 979 64 20
Fax: +359 2 870 74 98

E-mail: office@imbm.bas.bg
http://www.imbm.bas.bg/
 

Monday, August 16, 2010

PhD candidate position is available in microstructure/damage interactions in advanced superalloys at elevated temperatures

One PhD candidate position is available in the Department of Mechanical engineering at the University of Rhode Island. This fully supported position which is to be filled by January 2011, is for thesis research focusing on microstructure/damage interactions in advanced superalloys at elevated temperatures. 

The successful candidate must have a Master degree in areas related to numerical simulation of material behavior using Abaqus platform, has experience in mechanical testing with a strong background in both materials science and mechanics. Experience in computational programming with FORTRAN is highly desired. GRE and TOEFL (if not native English speaker) scores are required. 

Interested candidates should send a detailed resume including a list of publications and names of three references to Professor H. Ghonem / ghonem@egr.uri.edu

Sunday, August 15, 2010

சுதந்திர தின மலர்: சுதந்திரத்தின் சுவாசம்

நாம் நமக்குக் கிடைத்த சுதந்திரத்தை சரியாகப் பயன்படுத்துகிறோமா... இல்லையா... என்பதை காலம் காலமாக பட்டிமன்றம்நடத்தி வருகிறோம். ஆனால் பொது இடங்களில்நாம் நடந்து கொள்ளும் முறைகளோ மாறியிருப்பதாகத் தெரியவில்லை.பலர் சுதந்திரம் என்பதை - எல்லாம் தனக்கு வழங்கப்பட்டு விட்டதாகக் கருதுகிறார்கள். பொது இடங்களில் எச்சில் துப்புபவர்கள், வாகனநெரிசலின் போது, போக்குவரத்து விதிகளைமீறுபவர்கள், அனுமதி இல்லாமல் போஸ்டர் ஒட்டுபவர்கள், கழிவுநீரை பொது இடங்களில் விடுபவர்கள், லஞ்சம் வாங்குபவர்கள், வேலை நேரத்தில் தங்கள் கடமையை செய்யாதவர்கள் என்று,"சுதந்திரத்தைக் கையில்' எடுத்துக் கொண்டவர்கள் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.நாடு வல்லரசாக வேண்டும், பொது இடங்கள் "அமெரிக்கா' போன்று இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள், தங்களுடைய கடமையைமுழுமையாக நிறைவேற்றுகிறோமா என்று ஒருநிமிடம் யோசிக்கலாம்.

சாலைகளில்...: பலர் சரியான தடத்தில்தான் செல்கிறோமா என்பதைக்கூட கவனிப்பதில்லை. உரிய இடத்தில் "யூ டர்ன்' செய்ய பலருக்கு சோம்பேறித்தனம். குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட வேகத்தில் செல்வதில்லை. சிவப்பு எரியும் போதுநிற்பதில்லை. மஞ்சள் விளக்கு எரியும் போதே சென்று விடுவது.பலர் இண்டிகேட்டரை பயன்படுத்துவதே இல்லை. ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட்கள் பயன்படுத்துபவர்களையே "குற்றவாளிகள்' போல் பார்ப்பது. இரவில் முறையாக ஹெட்லைட் பயன்படுத்தாமல் செல்வது, குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுவது என்று சாலைப் பயணத்தை மனவேதனைப்படுத்தும் விஷயங்களாக மாற்றியிருக்கிறோம். அதிலிருந்து மாற வேண்டும்.சாலையில் நடந்து செல்லும் போது கூட, மொபைல் பேசக்கூடாது. அது பெரிய ஆபத்தில் முடியும். அதேபோல் சாலை ஓரங்களில் சிறுநீர் கழித்தல், அசுத்தம் செய்வதுஅப்பகுதியை நோய்க்கிருமிகளின் கிடங்காகமாற்றுவதோடு, அதன் வழியே சென்றுவரும்பயணிகளுக்கு "இலவசமாக' அந்த இடம் நோய்களை வழங்கத் தொடங்கிவிடும்.

நடத்தைகளில்... : காரணமே இல்லாமல் கோபப்படுவோரை பார்த்திருக்கிறோம். சில்லரை கேட்கும் பயணியிடம் பஸ் கண்டக்டர் எரிந்து விழு தல்,  வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் தவறாக நடத்தல், தகவல் கேட்கும் பொதுமக்களிடம் அதிகாரிகள் கோபம் காட்டுவது, நியாயமான தொகையை சொல்லும் பயணியிடம்  ஆட்டோக்காரர்கள் காட்டும் கோபம் என்று எதற்கு கோபப்படுவோரை நாம் சாதாரணமாக பார்க்கலாம். மற்றவர்களுடன் எதற்கெடுத்தாலும் வில்லங்கம் பேசும் பண்பு, சண்டைக்குப் போகும் குணம் மாற  வேண்டும். இன்றும் பலர் ஜாதி, மத வேறுபாடுகளைமனதுக்குள் சுமந்து கொண்டிருக்கிறார்கள்.சமுதாயம் என்பது ஒருவருக்கு ஒருவர் சார்ந்து இருப்பது. மற்றவர்கள் மீது நம்பிக்கை இல்லாத நிலை இப்போது உருவாகி வருகிறது என்றே கூற முடியும். பஸ், ரயில், விமானப் பயணங்கள் சில நேரங்களில் நம்பும்படியாக இல்லை. நாம் நமது நாட்டின் தலைசிறந்த தலைவர்கள் மற்றும் அவர்கள் நடந்த வழி ஆகியவற்றை பின்பற்றி நமது நல் ஒழுக்கங்களை அமைத்துக் கொள்ள வேண்டும். இந்தியாவில் உள்ள இன்னொரு பிரச்னை, வரிசையை தவிர்ப்பது. மேலைநாடுகளில் பொதுவாக, நான்கு பேர் கூடினால் கூட, அவர்களாக வரிசை அமைத்துக் கொள்வார்கள். ஆனால் இங்கு கோயில் திருவிழா அல்லது பஸ் ஸ்டாண்டில் உள்ள கூட்டத்தினருக்கு வரிசை அமைக்க போலீசார்வரவேண்டியிருக்கிறது. மக்கள் தொகை அதிகமுள்ள நம் நாட்டில், வரிசை என்பது மிக முக்கியம். இல்லாவிட்டால்,முதலில் வந்தவர் கடைசியில் கூட அவருக்குரியதை பெற முடியாமல் போய்விடும். வரிசையில் செல்வோருக்கு இடையில் புகுந்துவிடுவது.வரிசையில் தெரிந்தவர் இருந்தால் அவர் தலையில் தனது சுமையைக் கட்டுவது.

மதித்து நடத்தல்... : வயதானோர், பெண்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளை மதித்து நடக்க வேண்டும். அவர்களுக்கு உரிய இருக்கை மற்றும் வரிசையில் இடம் ஆகியவற்றை அளிக்க வேண்டும்.

வர்த்தகத்தில்... : சரியான பொருளுக்கு உரிய விலை நிர்ணயித்துள்ளோமா?. பொருள் தரமானதுதானா? உபயோகிப்பாளரிடம் உரிய முறையில் நடந்து கொள்கிறோமா? விற்பனையாகும் பொருள் சுற்றுச்சூழலுக்கு ஏற்றதுதானா? என்பதை யோசித்துக் கொள்ள வேண்டும்.இந்த நாட்டின் சுதந்திரம் நமக்கு மட்டுமல்ல... எல்லோருக்கும்தான் என்ற உணர்வு ஏற்பட்டால்தான் உண்மையான சுதந்திரத்தின் சுவாசத்தை எல்லோரும் அனுபவிக்கமுடியும்.



நன்றி - தினமலர்


ஞானி ( ஒ பக்கங்கள் )

முற்போக்கு எழுத்தாளர், தமிழகத்தின் மனசாட்சி, பார்ப்பனப் பதர், என்றெல்லாம் விதவிதமாக எனக்கு பலரும் பட்டங்கள் சூட்டுகிறார்கள்.அவை எதையும் நான் பொருட்படுத்துவதில்லை. எனக்குப் பிடித்தமான ஒரு பட்டம் இருக்கிறது. அதை அடைவதுதான் என் ஆசை. கவலை இல்லாத மனிதன் என்ற பட்டத்துக்குத் தகுதியுள்ளவனாகவேண்டும் என்பதே என் வாழ்நாள் விருப்பம். தன் படத்தலைப்பாக அதை வைத்த சந்திரபாபுவுக்கும் அப்படிப்பட்ட ஆசை இருந்திருக்க வேண்டும். இன்றைய சமூகச் சூழலில் கவலை இல்லாத மனிதன் யாரேனும் இருக்கும் சாத்தியம் உண்டா என்று தெரியவில்லை. தமிழ்நாட்டில் இன்று கவலை இல்லாத மனிதன் பட்டத்துக்கு உரியவர் யாராக இருக்கலாம் என்று நிறைய யோசித்துப் பார்த்தேன். ஒருவரும் தேறவில்லை. 90வது வயதை நோக்கி சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இயங்கிக் கொண்டிருக்கும் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியைக் கூட கவலை இல்லாத மனிதர் என்று கருத முடியவில்லை. அவரவர் கவலை அவரவருக்கு.


தனிப்பட்ட கவலைகளைத் தாண்டி கொஞ்சமாவது சமூக விஷயங்களைப் பற்றிக் கவலைப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறதோ என்ற கவலை எனக்குத் தொடர்ந்து இருக்கிறது. அன்றாடச் சொந்தக் கவலைகளுடன் கீழ்வரும் கவலைகளுக்காகவும் குறைந்தது ஓரிரு நிமிடங்களைச் செலவிடும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் சோனியாவின் காங்கிரஸ் ஆட்சியில் எப்படியோ மக்களுக்குக் கிடைத்துவிட்ட ஒரு புரட்சிகரமான அகிம்சை ஆயுதம். இந்தச் சட்டத்தை நீர்க்கச் செய்யவும், அமுக்கவும், செயலற்றதாக்கவும் பல அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் தொடர்ந்து முயற்சித்து வந்தாலும், அதை மீறி இன்னமும் வலுவாகவே இது செயல்பட்டு வருகிறது. சட்டத்தை முடக்க முடியாதபோது அதைப் பயன்படுத்தும் சமூக அக்கறையாளர்களை முடக்க வன்முறையும் மிரட்டலும் பயன்படுத்தப்படுவது நம் கவலைக்குரியது.

சென்ற வாரம் அகமதாபாதில் குஜராத் உயர் நீதி மன்றத்தின் அருகே அமித் ஜெத்வா என்ற தகவல் உரிமைப் போராளி பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார். இவர் கிர் சரணாலயத்தில் சட்ட விரோதமாக நடக்கும் சுரங்கத்தொழில் பற்றி தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கேள்விகள் எழுப்பியவர். கடந்த ஏழு மாதங்களில் இந்தியாவில் மொத்தமாக எட்டு சமூக அக்கறையாளர்கள் இப்படிக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சி நடக்கும் மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் நான்கு பேர். பி.ஜே.பி ஆளும் குஜராத்தில் இருவர். ஆந்திரத்தில் ஒருவர். பீஹாரில் ஒருவர்.

மணல் கொள்ளை, ரேஷன் பொருட்கள் திருட்டு, காண்ட்ராக்ட் ஊழல்கள், அரசு மனை ஒதுக்கீட்டு முறைகேடுகள் போன்றவற்றில் ஈடுபடும் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் இவை பற்றி தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் தோண்டித் துருவிக் கேள்விகள் கேட்போரை கொலை செய்யப்படவேண்டிய பகைவர்களாகக் கருதுகிறார்கள். வட மாநில மாஃபியாக்கள் கொலை செய்கிறார்களென்றால், தென் மாநிலங்களில் இன்னமும் அந்தக் கொடூரம் வரை போகவில்லை. கேள்வி கேட்போரை திசை திருப்புவது, கேள்விகளுக்கு முறையாக பதில் தராமல் இழுக்கடிப்பது, தகவல் சட்ட விதிளுக்கு வேறு விதமாக விளக்கமளித்து ஏமாற்றுவது, பொய் வழக்குகள் போடுவது போன்ற சாம, தான, பேத முறைகளைப் பின்பற்றுகிறார்கள்.

தமிழகத்தில் அண்மையில் மூன்று நிகழ்வுகளைப் பார்க்கலாம்.

ஜெயலலிதா ஆட்சியின் சுடுகாட்டுக் கூரை ஊழலை அம்பலப்படுத்தி நடவடிக்கை எடுத்த நேர்மையான அதிகாரி என்று பெயர் எடுத்திருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி உமாசங்கர் மீதே இப்போதைய அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது. போலி சாதி சான்றிதழ் கொடுத்ததாக அவர் இடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இதற்கு முன்பு அவர் மீது வருவாய்க்கு மீறி சொத்து சேர்த்ததாக எடுத்த நடவடிக்கைக்கு அவர் நீதிமன்றத்தில் தடை பெற்றிருக்கிறார். இதில் விசித்திரம் என்னவென்றால், இதே ஆட்சியில் அவர் விஜிலன்ஸ் கமிஷனாராக இருந்தவர். அவர் மீதே விஜிலன்ஸ் நடவடிக்கை ! கேபிள் டிவி விவகாரத்தில் அரசியல் செல்வாக்குடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தான் பரிந்துரை செய்ததற்காகப் பழி வாங்கப்படுவதாக உமாசங்கர் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். சாதி சான்றிதழைப் பொறுத்த மட்டில் தலித்தான அவர் கிறித்துவரா, இந்துவா என்பதே பிரச்சினை. ஆனால் அதை 20 வருட காலமாக ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்துவரும் அவருக்கு எதிராக இதுவரை ஒருபோதும் சொன்னதில்லை. உமாசங்கருக்கு ஆதரவாக இதர தலித் அதிகாரிகளோ, இதர ஐ.ஏ.எஸ் அதிகாரிகளோ வாயையே திறக்கவில்லை.

பொள்ளாச்சியில் இருந்து பாஸ்கரன் என்ற ஆர்வலர் நீதித்துறையில் அலுவலக உதவியாளரின் பணிகள், கடமைகள் பற்றிய விவரங்களைத் தரும்படி தகவல் சட்டத்தின் கீழ் உயர் நீதிமன்றத்துக்கு விண்ணப்பித்தார். அதற்கு பதில் தரும் முன்பாக அவர் நேரில் தன் அடையாள அட்டையுடன் ஆஜராகவேண்டுமென்று உயர் நீதி மன்ற அதிகாரி பதில் எழுதியிருக்கிறார். தகவல் சட்டத்தின் எந்த விதியிலும் தகவல் கோருபவர் தன் அடையாள அட்டையுடன் ஆஜராகவேண்டுமென்ற விதி கிடையாது. நேரில் போய் கேட்டால் தகவல்கள் சொல்வது கிடையாது என்ற அரசாங்க அதிகாரிகளின் அலட்சியப் போக்கினால்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டமே வந்தது.
 
இன்று வேறு எந்த ஊடகத்தையும் விட மிகுந்த சுதந்திரத்துடன் இயங்கும் ஊடகம் இணையம்தான். அதன் வீச்சும் தாக்கமும் பத்திரிகைகள், தொலைக்காட்சி போன்றவற்றுக்கு நிகராக இன்னமும் இல்லை என்பதும், இருக்கும் சுதந்திரம் சிலரால் வீணடிக்கப்படுகிறது என்பதும்தான் அதன் பலவீனம். அதே சமயம் இணையத்தில் வெளியாகும் பல திடுக்கிடும் தகவல்களை தமிழின் புலனாய்வுப் பத்திரிகைகள் என்று சொல்லிக் கொள்பவற்றில் கூடப் பார்க்கமுடியாது.
சவுக்கு, தமிழக மக்கள் உரிமைக்கழகம் என்ற பெயரில் இயங்கும் இணையதளங்களில் அண்மையில் தமிழக உயர் அதிகாரிகள் சிலர் மீது கடும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த தளங்களில் பயன்படுத்தப்படும் அவதூறான ரசக் குறைவான மொழி நடை எனக்கு உடன்பாடானது அல்ல. அதே சமயம் இவற்றில் முன்வைக்கப்படும் செய்திகள் மட்டும் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவை நம் ஆழ்ந்த கவலைக்கும் அக்கறைக்கும் உரியவை.
 
இரண்டு மூத்த காவல் துறை அதிகாரிகள், முதலமைச்சர் அலுவலகத்தில் பணியாற்றும் உயர் அதிகாரி, பிரபலமான புலனாய்வு பத்திரிகையின் மூத்த பத்திரிகையாளர் ஆகியோருக்கு எதிராக இந்த இணைய தளங்கள் குற்றம் சாட்டியுள்ளன. பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு மனைகள் திருவான்மியூரில் இவர்களில் சிலர் வீட்டுப் பெண்களின் பெயரில் அரசால் விருப்ப ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளதாக ஒளிநகல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

இந்த செய்திகள் இணையத்தில் வெளியான சில நாட்களில் சவுக்கு என்ற பெயரில் எழுதுபவர் என்று கூறப்படும் முன்னாள் காவல் துறை அலுவலர் சங்கர் என்பவர், தெருச்சண்டையில் இன்னொருவரைத் தாக்கியதாக ஒரு புகாரின் கீழ் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடப்பட்டிருக்கிறார். ஏற்கனவே அமைச்சர் பூங்கோதை தனக்கு வேண்டியவருக்காக அரசு அதிகாரி உபாத்யாயாவுடன் தொலைபேசியில் பேசியதன் பதிவை வெளியிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைதாகி தன் அரசுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டவர் இந்த சங்கர்.

இந்த மூன்று நிகழ்வுகளும் அரசாங்க செயல்பாடுகள் பற்றிய அடிப்படைக் கேள்விகளை எழுப்புகின்றன. அரசு நடவடிக்கைகள் பகிரங்கமாகவும் நேர்மையாகவும் இருக்கவேண்டியதன் அவசியத்தைக் காட்டுகின்றன. உமாசங்கர், பாஸ்கரன், சங்கர் போன்றோர் தொடர்பான விஷயங்கள் எழுப்பும் கேள்விகள் நிச்சயம் சங்கடமானவைதான். ஆனால் அவற்றை நேருக்கு நேர் சந்தித்துத் தன் நேர்மையை நிரூபித்துக் கொள்ளவேண்டிய கடமை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்துக்கு இருக்கிறது. இதில் உண்மை என்ன என்பதை பாரபட்சமின்றிக் கண்டறிந்து சொல்லவேண்டிய கடமை பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் தீர்வு நீதிமன்றத்துக்குப் போனால்தான் கிட்டும் என்ற நிலை இருப்பது ஆரோக்கியமானது அல்ல.

இன்னும் சொல்லப் போனால், இவற்றையெல்லாம் தி.மு.க ஆட்சியின் பிரச்சினையாகவோ, கோளாறாகவோ குறுக்கிப் பார்ப்பது கூட ஆபத்தானதுதான். எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், ஊடகங்களும் எப்படி நடதுகொள்ளவேண்டும் என்ற அடிப்படை ஒழுக்கத்துடன் இவை தொடர்புடையவை. நம் சமூகத்தின் அறிஞர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள், விஞ்ஞானிகள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் போன்றோர் இந்த அடிப்படைகள் பற்றிய கவலையை தயவுசெய்து மேற்கொள்ளவேண்டும்
 
இந்த வாரப் பூச்செண்டு:
விபத்து இழப்பீட்டுக்குக் கணக்கிடும்போது ,வீட்டு நிர்வாகம், இதர இல்லப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் பெண்களின் வருமான மதிப்பை கணவர் வருவாயில் மூன்றில் ஒரு பங்கு என்று நிர்ணயித்திருக்கும் அபத்தமான மோட்டார் வாகன சட்டப்பிரிவை திருத்தவேண்டுமென்று உத்தரவிட்டிருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கங்குலி, சிங்வி ஆகியோருக்கு இ.வா.பூ.

இந்த வார வேண்டுகோள்:
ராணி மேரி கல்லூரியில் புதிய கட்டடத்துக்குக் கலைஞர் மாளிகை என்று பெயர் சூட்டி அதைத் திறந்து வைத்திருக்கும் கலைஞர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்கள் பெயர் சூட்டப்படும் கட்டடங்களையேனும் திறந்துவைக்கும் வாய்ப்பைப் பேராசிரியர் அன்பழகனுக்கு அளிக்கும்படி வேண்டுகிறேன்.

இந்த வாரத் திட்டு:
தங்கள் சமபளத்தை மாதம் 16 ஆயிரத்திலிருந்து 80 ஆயிரமாக உயர்த்த நடவடிக்கைகள் எடுத்து வரும் அத்தனை எம்.பிகளுக்கும் அனைத்து வாக்காளர் சார்பாகவும் இ.வா.தி.

--- ஞானி ( ஒ பக்கங்கள் )

Saturday, August 14, 2010

சிறந்த குறுந்தகவல். ( உங்களுக்கு மொக்கையாக தெரிந்தால் நான் பொறுப்பல்ல )

என் கை  பேசிக்கு வந்த சிறந்த(!!!) குறுந்தகவல்..


1) அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?
     ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை....
அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க     கொத்தடிமை....

2) நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி.....
    
காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்....
    
இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத       கேக்குறதா?

3) காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?......
    சீனாவுல தான் பிறந்தது.....
   
ஏனெனில் Anything made in China is NO GUARANTEE & NO WARRANTY.

4) ஒரு முறை நியூட்டன் அவருக்கு 17 வயதில் வகுப்பறையில் படித்துக்    கொண்டிருக்கும் போது ஒரு பாம்பு அவருடைய கால் விரலில் கடித்துவிட்டது. அப்போதும் அவர் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். ஆசிரியர் இது பற்றி கேட்கும்போது, " பாம்பு என் காலில்தான் கடித்தது, என்னுடைய Mind 'ல் அல்ல" என்கிறார். இதைத்தான் நாம் "வெட்டி ஸீன்" போடுவது என்கிறோம்....

5) நபர் - 1: ஹோடேலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை.....
    
நபர் - 2: அய்யய்யோ... அப்புறம் என்ன பண்ணுனீங்க?
    நபர் - 1: அப்புறம் பாக்கெட்'ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்....

6) மூன்று மொக்கைகள்: 
  
a) நைட்'ல கொசு கடிச்சா குட்நைட் வைக்கலாம்.. அதுவே மார்னிங்'ல கடிச்சா குட் மார்னிங் வைக்க முடியுமா?
b) பேப்பர் போடுறவன் பேப்பர்காரன், பால் போடுறவன் பால்காரன், அப்பா பிச்சை போடுறவன் பிச்சைக் காரனா?
c) எல்லா stage'லயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா கோமா stage 'ல டான்ஸ் ஆட முடியுமா?

7) ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க...
    
எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க...
   
என்ன கொடும சார் இது?....

8) காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி...
தூங்கவும் முடியாது... தூரத்தவும் முடியாது....
9) என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி   எலுமிச்சம் பலம் எல்லாம் வைக்க முடியாது... சங்கு ஊதிவிட்டுதான் கெளம்பனும்...
10) நான் ஒன்னு சொல்லுவேன்... எழுந்திருச்சு ஓடக்கூடாது...
     சொல்லட்டுமா?
  பெருமாள் கோவில்'ல சுண்டல் போடுறாங்க...
    ஹே...ஹே.. நில்லுங்க... எங்க ஓடுறீங்க?....

11) True GK Facts:
** அண்டார்டிக்காவில் ஒரு மரம் கூட இல்லை.
** ஹவாய் தீவில் ஒரு பாம்பு கூட இல்லை.
** பிரான்ஸ் நாட்டில் ஒரு கொசு கூட இல்லை.
** என் தெருவில் ஒரு பிகர் கூட இல்லை. என் கவலை இங்கு யாருக்கு புரிகிறது?.....

12) ஜனவரி - 14 க்கும், பிப்ரவரி - 14 க்கும் என்ன வித்தியாசம்?
     ஒரு பொண்ணு பொங்கல் கொடுத்த அது ஜனவரி - 14 !
    அதே பொண்ணு அல்வாக் கொடுத்தா அது பிப்ரவரி - 14 !!

13) மனைவி: ஏங்க... கொஞ்சம் வாங்க... குழந்த அழுவுது...
      
கணவன்: அடி செருப்பால! ... உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம குழந்தைப்    பக்கத்துல போக சொன்னது?

14) உங்ககிட்ட பிடித்ததே இந்த 5 தான்!
     1. சிரிப்பு
     2. அழகு
     
3. நல்ல டைப்
    4. கொழந்த மனசு...
    
5. இதெல்லாம் பொய்'ன்னு தெரிஞ்சும் நம்புற நல்ல மனசுபாவம்....
15) அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?
     மகன்: எங்க ஸ்கூல்'ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.

16) முதல் காதலில் ஜெய்த்தவனுக்கு அதுதான் கடைசி வெற்றி....
     முதல் காதலில் தோற்றவனுக்கு அதுதான் கடைசி தோல்வி....
17) தத்துவம் 2010
    "லாரி"ல கரும்பு ஏத்துனா "காசு"!
    
"கரும்பு"ல லாரிய ஏத்துனா "ஜூசு"!!
    
இதெல்லாம் ஒரு மெசேஜ்'ன்னு படிக்குற நீங்க ஒரு "-------" ஆமாங்க.. அதான்... அதேதான்....
18) அப்பா: நேத்து ராத்திரி பரிச்சைக்கு படித்தேன்னு சொன்ன, ஆனா உன் ரூம்'ல     லைட்டே எரியல?
மகன்: படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா!
19) எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்குமா??? ?
?
?
?
?
?
?
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
நல்லா பார்த்துக்குங்க... எல்லா "நாளும்" ஒரே மாதிரி இருக்கா?...........

20) கஸ்டமர் ... சார் இந்த டிவி என்ன விலை?
சேல்ஸ்மேன்....ஒரு லட்சம் ரூபாய்
கஸ்டம்ர்...அம்மாடியோவ்... அப்படி என்ன  இந்த டிவி உசத்தி...
சேல்ஸ்மேன்.....லேட்டஸ்ட் விஜய்படம் வந்தா அதுவா ஆப் ஆயிடும்...

21) தலைவர் கலைஞர் பேசுகின்றார்...
     கருவரையும் இருட்டு
     கல்லரையும் இருட்டு
     இதை உணர்த்தவே  தமிழகத்தில்
     அடிக்கடிபவர் கட்டு..

Next மீட் பண்றேன்...

Friday, August 13, 2010

கெளதம் மேனன் தயாரிப்புகள்....

கெளதம் மேனன் படங்களில் காதல், பாடல்கள் மற்றும் ஒளிபதிவு மிக அருமையாக இருக்கும். ஆனால், அவர் மேல் பல்வேறு குற்ற சாட்டுகள் அவ்வபோது எழுவது உண்டு. என்னை பொறுத்தவரை திறமை இருப்பவன் கர்வம் கொள்வதில் தப்பு இல்லை. சவால் விட்டு மற்றும் கடின உழைப்பில் முன்னுக்கு வரும் நபர்கள் அது போல் தான் இருப்பார்கள். 

இயக்குனர்  சங்கர் போல் அவரும் படம் தயாரிக்கிறார்.. அதுவும் ஓரே சமயத்தில் மூன்று படங்கள். இப்போ படம் தயாரிப்பது எவளோ கஷ்டம், அதிலும் ஓரே நேரத்தில் மூணு படம். அந்த நம்பிக்கை தான் அவரிடம் பிடித்து இருக்கிறது.

  • நடுநிசி நாய்கள்
  • வெப்பம்
  • அழகர்சாமியின் குதிரை
இதில் நடுநிசி நாய்கள்  நீண்ட இடை வெளிக்கு அப்புறம் வரும் நல்ல மற்றும் தரமான திகில்/ மர்ம படமா இருக்கும் என் நம்பிக்கை உள்ளது. அதுவும் கெளதம் இயக்கத்தில்.. இதில் சமீரா தான் படத்தின் நாயகி.. எனக்கு என்னோமோ சினேகிதி படம் போல் ஒரு திகில் அனுபவம் கிடைக்கும் என்று எதிர்பார்கிறேன். இந்த படத்தில் பாடல்கள் இல்லை என கேள்விபட்டேன். ஆனால், இந்த படம் எந்த அளவிற்கு C சென்டர் அடையும் என்பது கேள்வி குறியே..

 வெப்பம்

முற்றிலும் புதிய நபர்களை வைத்து நமது சென்னையின் மறுபக்கத்தை இந்த திரை  படம்  பார்க்கும் போது அனுபவிப்போம் . தெலுகு ஹீரோ நானி அறிமுகம் ஆகும் படம். கெளதம் உதவி யாளர் இயக்கும் திரைப்படம்..

அழகர்சாமியின் குதிரை

ஒரு நாவலை திரைப்படம் ஆக்கும் போது அது நினைத்த மாதரி எடுக்க முடிவதில்லை.. ஊ.த : அவள் பெயர் தமிழரசி.. அருமையான கதை ஆனால் மொக்க திரைக்கதை. அதை பார்த்தால் பயமாக இருக்கிறது. இந்த படத்தின் நாயகன் நம்ம அப்பு குட்டி. அட மதரச  பட்டினம் திரைபடத்தில் தூங்கி கொண்டே இருப்பானே அவன் தான்.நாயகி சரண்யா. இசை இளையராஜா.. இயக்கம் சுசிந்தரன்..

இவர்
வெண்ணிலா கபடி குழு படம் மூலம் அறிமுகமான இயக்குனர் மற்றும் நான் மகன் இல்லை படம் அடுத்த வெள்ளி வெளியாக போகிறது..

இந்த திரைப்படம்
கனகதுர்கா என்ற நாவலின் அடிப்படையில் உருவாக போகிறது. இதனை எழுதியவர் பாஸ்கர் சக்தி.

ஊரில் இருக்கும் அழகர்சாமியின் வாகனமான உயிரில்லா குதிரை காணாமல் போனதால் நடக்கும் சம்பவங்களே கதை. அதுவும் நம்ம தேனி பக்கம் நடக்கும் கதை. காமெடிக்கு பஞ்சம் இருக்காது.. நான் கேள்விபடது வரை இந்த புத்தகம் 250 ருபாய் மட்டுமே.. தமிழ் நாவல் ஆர்வலர்கள் இதை வாங்கி படித்து கொள்ளவும். மொத்தம் 30 சிறு கதை அடங்கியது.


Thursday, August 12, 2010

வேலை வாய்ப்பு

இந்தியக் கடற்படை :

இந்தியக் கடற்படையின் நிர்வாகப் பிரிவில் (கடல் போர்த் தளவாடங்கள் சோதனைப் பிரிவு) அதிகாரியாகப் பணிபுரிய இன்ஜினீயரிங் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் ஆகிய பாடங்களில் ஏதாவது ஒன்றில் பி.இ., அல்லது பி.டெக்., படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது எலெக்ட்ரானிக்ஸ்/இயற்பியல் பாடங்களில் ஏதாவது ஒன்றில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு கேரளாவின் எழிமலாவில் உள்ள கடற்படைப் பயிற்சி மையத்தில் ஜனவரி 2011 முதல் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியை முடிப்பவர்களுக்கு சப்-லெப்டினன்ட் அந்தஸ்து பணி வழங்கப்படும். விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள்: 21.8.10. விவரங்களுக்கு www.nausena-bharti.nic.in

 
பாபா அணு ஆராய்ச்சி மையப் பணிகள்:

மும்பையில் இயங்கி வரும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பிளான்ட் ஆபரேட்டர், ஆய்வகம், நூலக அறிவியல், கெமிக்கல் பிளான்ட் ஆபரேட்டர் உள்ளிட்ட 15 பிரிவுகளில் உதவித் தொகையுடன் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதப் பாடங்களில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிளஸ் டூ-வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில், சில பணிகளுக்கு பிளஸ் டூ தேர்ச்சியுடன் தொடர்புடைய பாடப் பிரிவில் 2 வருட ஐ.டி.ஐ படிப்பில் தேர்ச்சிபெற்று இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 2 வருட பயிற்சி அளிக்கப்படும். விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி நாள்: 18.8.10. விவரங்களுக்கு www.barc.ernet.in
 
இந்தோ-திபெத்தியன் எல்லை காவல் படையில் காவலர் பணி:

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்தோ-திபெத்தியன் எல்லைக் காவல் படையில் கான்ஸ்டபிள் பணிக்கு 18-ல் இருந்து 23 வயது வரை உள்ள ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி நாள்:22-9-10 உடல் தகுதி மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு நடைபெறும். விவரங்களுக்கு www.itbpolice.nic.in அல்லது www.itbp.gov.in ஆகிய இணையதளங்களைப் பார்க்கவும்.

தேசியப் புலனாய்வு நிறுவனப் பணிகள்:

மத்திய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசியப் புலனாய்வு நிறுவனத்தில் அட்மினிஸ்ட்ரேட்டிவ், செக்ஷன் ஆபீஸர், ஸ்டெனோ, இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி நாள்: 25.8.20. விவரங்களுக்கு www.nia.gov.in

யூகோ வங்கியில் கிளார்க் பணிகள்:

பொதுத் துறை வங்கிகளுள் ஒன்றான யூகோ வங்கியில் காலியாக உள்ள 1,000 கிளார்க் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. குறைந்தது 60 சதவிகித மதிப்பெண்களுடன் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது இளநிலைப் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். ஆன்-லைனில் மட்டுமே 28.8.10-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விவரங்களுக்கு www.ucobank.com
 
மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் டிரைவர் பணி:

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 910 டிரைவர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக மற்றும் இலகுரக வாகனம் ஓட்டுவதற்கான ஓட்டுனர் உரிமம் பெற்று இருப்பவர்கள் 24.8.10-க்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். விவரங்களுக்கு www.cisf.gov.in
 
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காவலர் பணி: 

மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் தென் மாநிலப் பிரிவுகளில் ஆண், பெண் கான்ஸ்டபிள்கள் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். உடல் தகுதித் தேர்வு, எழுத்துத் தேர்வு, மருத்துவ சோதனை ஆகிய மூன்று கட்டங்களில் தேர்வு நடைபெறும். விண்ணப்பங்கள் மாவட்ட அஞ்சலகத்தில் கிடைக்கும். 25.8.10-க்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் விவரங்களுக்கு www.crpf.gov.in அல்லது www.crpfrecruitment.org
  
டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனப் பணிகள்: 

டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் சீனியர் சிஸ்டம் அனலிஸ்ட், நிலைய கட்டுப்பாட்டாளர், கஸ்டமர் ரிலேசன அசிஸ்டென்ட் உட்பட 11 விதப் பணிகளுக்கு 917 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை 23.8.2010க்குள் அனுப்ப வேண்டும். கல்வித் தகுதி, வயது வரம்பு, பணி அனுபவம் உள்ளிட்ட விவரங்களுக்கு www.delhimetrorail.com என்ற இணையத்தைப் பார்க்கவும். 

துணை ராணுவப் படையில் டிரைவர் பணி:

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் துணை ராணுவப் படையின் ஒரு பிரிவான சாஸ்திரா சீமா பாலில் காலியாக உள்ள 524 டிரைவர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10ம் வகுப்பு தேர்ச்சி உடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களுக்கு 31 ஜூலை-6 ஆகஸ்ட் தேதியிட்ட எம்பிளாய்மென்ட் நியூஸ் இதழைப் பார்க்கவும். விண்ணப்பங்களை 30.8.2010ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். 

ஆர்.பி.ஐ.யில் நிர்வாகப் பயிற்சியாளர் பணி:

இந்திய ரிசர்வ் வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள 200 நிர்வாகப் பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஏதாவது ஒரு பாடப்பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒப்பந்த காலம் 3 ஆண்டுகள். எழுத்துத்தேர்வு 24.10.2010 அன்று நடைபெறுகிறது. ஆன் லைனில் விண்ணப்பிக்க 23.8.2010 கடைசி தேதியாகும். பூர்த்திசெய்த விண்ணப்பங்களை தபாலில் அனுப்ப 30.8.2010 கடைசி தேதியாகும். விரிவான விவரங்களுக்கு www.rbi.org.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்

நன்றி : ஆனந்த விகடன்

பிறந்தநாள்..




இன்று என்னுடைய பிறந்தநாள்.. வாழ்த்திய அன்பு உள்ளங்கள் அனைவர்க்கும் என் நன்றிகள்.

கடைசியாக முன்று வருடங்கள் நான் கொண்டாடியதை இல்லை. ஒவ்வரு நாள் என்னுடைய பிறந்தநாள் வரும் பொது எனக்கு ஏன்பிறந்தாய் மகனே பாடல் தான் நினைவுக்கு வருகிறது. என்கிட்ட  என்ன பிரச்சனைனா இது வர பெருசா எந்த ஆணியும் புடுங்கவில்லை. அதான் முக்கிய காரணம். இனிமேலும், எதுவும் செய்வேன் என தோன்றவில்லை. ஆனால் வயது அதிகம் ஆக ஆக பொறுப்புகள் அதிகம் ஆகிறது. பொறுப்புகள் அதிகம் ஆகும் பொது வாழ்க்கையின் மேல் வெறுப்பு, கோபம் வருகிறது. யாரிடமும் பேசாமல் இருந்தால் அந்த பயம் + கோபம் ஏற்படுவதில்லை . மனம் அமைதி ஆகிறது.

நான் என்னுடைய டிப்ளோமா படிப்பு படிக்கும் பொது என்னுடைய வகுப்பு ஆசிரியர் திரு. ஜெயவேல் அவர்கள் அடிக்கடி ஒரு திருக்குறளை  சொல்லி எல்லோரையும் திட்டுவார். அதனை ஒரு பிடிப்பாக எடுத்துக்கொண்டு என்னால் முடிந்த உதவிகளை கைமாறு கருதாமல் செய்து கொண்டு இருக்கிறேன். அந்த குரல்

"தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று"


இதை என்
நண்பர்களிடம்  சொல்லும் பொது சில நபர்கள் , `தோன்றின் புகழொடு தோன்றுக' என்ற குறள் நடைமுறைக்கு ஒத்துவராததாகத் தெரிகிறதே! புகழோடு பிறப்பதற்கு நாம் என்ன அமைச்சர் , இல்லை நடிகர்களின் மக்களா, அல்லது அதிசய பிறவிகளா? பிறக்கும்போதே ஒருவர் எப்படிப் புகழோடு பிறக்கமுடியும்?" மடமடவென்று வினாக்களைத் தொடுத்த நண்பர், நான் என்ன சொல்லப்போகிறேன் என்று என் முகத்தையே பார்த்தார்.

நண்பர் அவருக்கு தோன்றிய கருத்தை சொல்லிவிட்டார். ஆனால், இதில் தோன்றுதல் என்றால் பிறத்தல் என்ற பொருள் மட்டுமன்று, உள்ளத்தில் தோன்றுதல் என்ற பொருளும் உண்டென்பது தெரிகிறது அல்லவா? உதற்னமாக காந்தி அல்லது அன்னை தெரசா முனகல் மனதில் நினைத்து கொள்ளுங்கள்.. அவர்களை நினைத்தவுடன் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?" "அவர்களின் செயற்கருஞ் செயல்கள்"  .

"அதாவது, அவர்களின் புகழ் உங்களுக்குத் தோன்றுகிறது. நல்லது; (Hitlor), கோட்சே போன்றோரை நினைத்தவுடன்" "அதாவது, அவர்களைப் பற்றிய இகழ் உங்கள் உள்ளத்தில் தோன்றுகிறது. இப்படிப் புகழும் இல்லாமல் இகழும் இல்லாமல் இந்த உலகத்தில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து மறைந்தவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்?"" அவர்கள்தாமே உலகத்தில் பெரும்பான்மையினர்."
 
இந்த மூன்று வகையான மக்களைப் பற்றித்தாம் திருவள்ளுவர் இக் குறளில் குறிப்பிட்டிருக்கிறார்." "எப்படி?" 

"தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று அதாவது, பிறர் உள்ளங்களில் தோன்றினால் புகழோடு தோன்றுக. அது முடியாதவர்கள் இகழோடு தோன்றுவதைக் காட்டிலும் இந்த உலகத்தில் பிறந்து வளர்ந்து தான் வாழ்ந்த சுவடே தெரியாமல் மறைந்துபோகும் மக்களைப் போல ஒன்றுமே தோன்றாதிருப்பது நன்று. இப்போது சொல்லுங்கள்.. இந்தக் குறள் நடைமுறைக்கு ஒத்ததுதானே.."

நான் கடவுள் இடம் வைக்கும் கோரிக்கை ஒன்றே ஒன்று.. எனக்கு இந்த பிறவியே கடைசியாக இருக்க வேண்டும்.. மனிதனாய் பிறப்பது விட உயிர் அற்ற ஜடாம இருக்குறதே மேல்!

எழுத்து பிழைகள் இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன்