இந்தியக் கடற்படை :
இந்தியக் கடற்படையின் நிர்வாகப் பிரிவில் (கடல் போர்த் தளவாடங்கள் சோதனைப் பிரிவு) அதிகாரியாகப் பணிபுரிய இன்ஜினீயரிங் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் ஆகிய பாடங்களில் ஏதாவது ஒன்றில் பி.இ., அல்லது பி.டெக்., படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது எலெக்ட்ரானிக்ஸ்/இயற்பியல் பாடங்களில் ஏதாவது ஒன்றில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு கேரளாவின் எழிமலாவில் உள்ள கடற்படைப் பயிற்சி மையத்தில் ஜனவரி 2011 முதல் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியை முடிப்பவர்களுக்கு சப்-லெப்டினன்ட் அந்தஸ்து பணி வழங்கப்படும். விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள்: 21.8.10. விவரங்களுக்கு www.nausena-bharti.nic.in
பாபா அணு ஆராய்ச்சி மையப் பணிகள்:
மும்பையில் இயங்கி வரும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பிளான்ட் ஆபரேட்டர், ஆய்வகம், நூலக அறிவியல், கெமிக்கல் பிளான்ட் ஆபரேட்டர் உள்ளிட்ட 15 பிரிவுகளில் உதவித் தொகையுடன் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதப் பாடங்களில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிளஸ் டூ-வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில், சில பணிகளுக்கு பிளஸ் டூ தேர்ச்சியுடன் தொடர்புடைய பாடப் பிரிவில் 2 வருட ஐ.டி.ஐ படிப்பில் தேர்ச்சிபெற்று இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 2 வருட பயிற்சி அளிக்கப்படும். விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி நாள்: 18.8.10. விவரங்களுக்கு www.barc.ernet.in
இந்தோ-திபெத்தியன் எல்லை காவல் படையில் காவலர் பணி:
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்தோ-திபெத்தியன் எல்லைக் காவல் படையில் கான்ஸ்டபிள் பணிக்கு 18-ல் இருந்து 23 வயது வரை உள்ள ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி நாள்:22-9-10 உடல் தகுதி மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு நடைபெறும். விவரங்களுக்கு www.itbpolice.nic.in அல்லது www.itbp.gov.in ஆகிய இணையதளங்களைப் பார்க்கவும்.
தேசியப் புலனாய்வு நிறுவனப் பணிகள்:
மத்திய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசியப் புலனாய்வு நிறுவனத்தில் அட்மினிஸ்ட்ரேட்டிவ், செக்ஷன் ஆபீஸர், ஸ்டெனோ, இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி நாள்: 25.8.20. விவரங்களுக்கு www.nia.gov.in
யூகோ வங்கியில் கிளார்க் பணிகள்:
பொதுத் துறை வங்கிகளுள் ஒன்றான யூகோ வங்கியில் காலியாக உள்ள 1,000 கிளார்க் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. குறைந்தது 60 சதவிகித மதிப்பெண்களுடன் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது இளநிலைப் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். ஆன்-லைனில் மட்டுமே 28.8.10-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விவரங்களுக்கு www.ucobank.com
மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் டிரைவர் பணி:
மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 910 டிரைவர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக மற்றும் இலகுரக வாகனம் ஓட்டுவதற்கான ஓட்டுனர் உரிமம் பெற்று இருப்பவர்கள் 24.8.10-க்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். விவரங்களுக்கு www.cisf.gov.in
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காவலர் பணி:
மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் தென் மாநிலப் பிரிவுகளில் ஆண், பெண் கான்ஸ்டபிள்கள் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். உடல் தகுதித் தேர்வு, எழுத்துத் தேர்வு, மருத்துவ சோதனை ஆகிய மூன்று கட்டங்களில் தேர்வு நடைபெறும். விண்ணப்பங்கள் மாவட்ட அஞ்சலகத்தில் கிடைக்கும். 25.8.10-க்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் விவரங்களுக்கு www.crpf.gov.in அல்லது www.crpfrecruitment.org
டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனப் பணிகள்:
டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் சீனியர் சிஸ்டம் அனலிஸ்ட், நிலைய கட்டுப்பாட்டாளர், கஸ்டமர் ரிலேசன அசிஸ்டென்ட் உட்பட 11 விதப் பணிகளுக்கு 917 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை 23.8.2010க்குள் அனுப்ப வேண்டும். கல்வித் தகுதி, வயது வரம்பு, பணி அனுபவம் உள்ளிட்ட விவரங்களுக்கு www.delhimetrorail.com என்ற இணையத்தைப் பார்க்கவும்.
துணை ராணுவப் படையில் டிரைவர் பணி:
மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் துணை ராணுவப் படையின் ஒரு பிரிவான சாஸ்திரா சீமா பாலில் காலியாக உள்ள 524 டிரைவர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10ம் வகுப்பு தேர்ச்சி உடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களுக்கு 31 ஜூலை-6 ஆகஸ்ட் தேதியிட்ட எம்பிளாய்மென்ட் நியூஸ் இதழைப் பார்க்கவும். விண்ணப்பங்களை 30.8.2010ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
ஆர்.பி.ஐ.யில் நிர்வாகப் பயிற்சியாளர் பணி:
இந்திய ரிசர்வ் வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள 200 நிர்வாகப் பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஏதாவது ஒரு பாடப்பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒப்பந்த காலம் 3 ஆண்டுகள். எழுத்துத்தேர்வு 24.10.2010 அன்று நடைபெறுகிறது. ஆன் லைனில் விண்ணப்பிக்க 23.8.2010 கடைசி தேதியாகும். பூர்த்திசெய்த விண்ணப்பங்களை தபாலில் அனுப்ப 30.8.2010 கடைசி தேதியாகும். விரிவான விவரங்களுக்கு www.rbi.org.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்
நன்றி : ஆனந்த விகடன்
No comments:
Post a Comment