இந்திய டெஸ்ட் அணியின் எதிர்காலம் குறித்து கிரிக்கெட் நிபுணர்களும் 
ரசிகர்களும் மிகவும் கவலைப்படுகிறார்கள். சச்சின்,  திராவிட், லஷ்மண் ஆடியே
  4-0 
	என்கிற கணக்கில் தோல்வி.  இந்திய அணி, டெஸ்ட் கிரிக்கெட்டில் பின்தங்குவது ஆரோக்கியமானதல்ல. அது 1983
 உலகக்கோப்பையை வென்ற பிறகு, ஒருநாள் கிரிக்கெட்டில் பல மாற்றங்களும் 
வளர்ச்சியும் ஏற்பட்டன. 2007ல், 20-20 உலகக்கோப்பையை வென்றபிறகு 
கிரிக்கெட்டில் அதிகப் பணப்புழக்கம் பரவியது. ஐ.பி.எல். தோன்றி 
கிரிக்கெட்டுக்கு ஏராளமான
 புதிய ரசிகர்கள் கிடைத்தார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் நெ.1 இடத்தில் 
அமர்ந்ததால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இந்தியாவில் அதிகக் கவனம் கிடைத்தது. 
இப்போது 
 ஒரு தொய்வு. 
‘இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் தோற்றதற்கு யாரையும் குறை 
சொல்லமுடியாது,’ என்று ஸ்ரீகாந்த் சொல்லிவிட்டார். ஆனால் பலரும் முதலில் கை
 நீட்டுவது
 ஸ்ரீகாந்தை நோக்கித்தான். எதன் அடிப்படையில் ஷாகீர் கான், ஷேவாக், 
ஆர்.பி.சிங் போன்ற உடல் தகுதியற்ற வீரர்களை அவர் தேர்வு செய்தார்? 
அவரிடமிருந்து பதிலில்லை. 
 இந்திய கிரிக்கெட்டில் இதுபோன்ற தவறுகள் சகஜமாக நடந்து கொண்டிருப்பதால் 
இதோடு எல்லா ஒழுங்கீனங்களும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விடும் என்று 
எதிர்பார்த்துவிட 
 வேண்டாம். ஆனால், இப்படியொரு தோல்விக்குப் பிறகு தோனி எப்படிச் 
செயல்படுவார் என்பதில்தான் ஓர் ஆர்வம் தொக்கி நிற்கிறது. சாட்டையை 
எடுப்பாரா இல்லை அனைத்துக்
 குளறுபடிகளையும் சகஜமாக ஏற்றுக்கொண்டு விடுவாரா என்பதில்தான் இந்திய 
டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் இருக்கிறது. 
கங்குலி ஓய்வு பெற்று இரண்டு வருடங்கள் ஆனபோதும் ஆறாவது இடத்துக்கான ஒரு 
நிலையான பேட்ஸ்மேன் இன்னமும் அமையவில்லை. யுவ்ராஜ், ரைனா, புஜாரா, கோலி 
என்று மாறிமாறி வீரர்கள் வந்துபோய்க் கொண்டிருக்கிறார்கள். இவர்களை விடவும்
 தகுதியான பத்ரிநாத்துக்கு அதிக வாய்ப்புகள் கொடுத்து, இந்நேரம் அணியின் 
நிரந்தர டெஸ்ட்
 பிளேயராக உருவாக்கியிருக்க வேண்டும். அதைவிட்டு, இன்றுவரை அவரைப் போராட 
வைத்துவிட்டார்கள். விஜய், அணியில் நிரந்தரமாக்கப்பட்டு விடுவார் என்று 
 எண்ணுகிற சமயத்தில் அவர் வாய்ப்புகளைக் கோட்டைவிட, இப்போது முகுந்த் 
களத்தில் இறக்கப்பட்டுள்ளார். இளைஞர்களை தைரியமாக நம்பி இந்திய டெஸ்ட் அணி 
 எப்போது களத்தில் இறங்கப்போகிறது? 
இங்கிலாந்தில் டெஸ்ட் கிரிக்கெட் என்றால் ரசிகர்கள் ஆளாய்ப் பறக்கிறார்கள்.
 எல்லா நாளும் மைதானம் நிரம்பி வழிகிறது. மழை
வந்தால்கூட பொறுமையுடன் இருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் கூட்டம் வராத 
மைதானங்களில் டெஸ்ட் மேட்சுகளை நடத்தி அதைப் பாழாக்கிவிட்டார்கள். டெஸ்ட் 
கிரிக்கெட்டுக்குச் சாதகமான மைதானங்களை ஏற்படுத்துவது இந்திய கிரிக்கெட் 
வாரியத்தின் கடமை. சென்னை, மும்பை, தில்லி, கொல்கத்தா, பெங்களூரு, கான்பூர்
 போன்ற 
கிரிக்கெட் நகரங்களில் மட்டும் டெஸ்ட் கிரிக்கெட்டை நடத்த வேண்டும். 
மொஹலி, நாக்பூர், அஹமதாபாத் போன்ற நகரங்களில் டெஸ்ட் கிரிக்கெட் நடத்துவது 
வீண். ஆஸ்திரேலியாவின் பாக்ஸிங் டெஸ்ட்டுக்கு இணையாக ஒரு காலத்தில் 
சென்னையில் தவறாது நடைபெற்ற பொங்கல் டெஸ்ட்டை 1988க்குப் பிறகு அடியோடு 
நிறுத்திவிட்டார்கள். சென்னையில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ரசிகர்கள்  
அதிகமென்றாலும்
 டெஸ்ட் போட்டியை நடத்துவதில் இங்கு ஆர்வம் அதிகமில்லை என்பதுபோலத் 
தெரிகிறது. இப்போது, ஸ்ரீனிவாசன், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகப்
 போகிறார்.
 அவர் முன்நின்று சரிசெய்ய வேண்டிய குறைகள் இவை. 
பி.கு: சாம்பியன்ஸ் லீக் போட்டி செப் 23 முதல் தொடங்குகிறது. ஐ.பி.எல்.லில்
 செய்த டிக்கெட் தொடர்பான தவறுகளை இந்த முறை சரிசெய்திருக்கிறார்கள். 
டிக்கெட்டின்
 விலை ரூ 300-ஆக குறைந்திருக்கிறது. ஒரு டிக்கெட்டில் இரண்டு படங்கள் 
பார்ப்பதுபோல ஒரு டிக்கெட்டுக்கு இரண்டு மேட்சுகள். தற்போதைய நிலைமையில், இந்திய கிரிக்கெட் மீது ரசிகர்களுக்கு நம்பிக்கை 
போய்விட்டது. 4-0 என்கிற தோல்வியை ஜீரணிக்க நாளாகும். இந்த நிலையில் 
சாம்பியன்ஸ் 
லீகுக்கு கூட்டம் எப்படி முண்டியடிக்கப்போகிறது என்கிற பயம் இந்திய 
கிரிக்கெட் வாரியத்துக்கு உண்டு.






No comments:
Post a Comment