இந்திய ஸ்மார்ட்
போன் மார்க்கெட்டில் தனக்கெனப் பிரத்யேகமான இடத்தைப் பிடித்துள்ள
மைக்ரோமேக்ஸ் நிறுவனம், சமீபத்தில் ஸ்மார்ட் டிவி தயாரிப்பிலும்
இறங்கியுள்ளது. மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தற்போது தனது புதிய தயாரிப்பான 4K
டிவியை வெளியிட்டுள்ளது.
டிசைன்!
மைக்ரோமேக்ஸ் 4K டிவி கவர்ச்சிகரமான டிசைனைக் கொண்டுள்ளது. இந்த டிவி முழுவதும் பிரீமியம் பொருட்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் ஓரங்கள் கோல்டு ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இதனால் இதன் தோற்றம் மேலும் அழகு பெறுகிறது. இந்த டிவியின் இரண்டு ஸ்டாண்டுகள் பயன்படுத்த சற்று கஷ்டமாகவே இருக்கிறது.
டிஸ்ப்ளே!
இந்த டிவி 49 இன்ச் 4K 3840x2160 டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இரண்டு HDMI போர்டு, ஒரு Ethernet, VGA, RCA போர்டுகள், SD கார்டு ஸ்லாட், மூன்று USB போர்டுகள் ஆகியவை இந்த டிவியில் அடங்கும். 720p மற்றும் 1080p வீடியோக்கள் சிறப்பாக இந்த டிவியில் இயங்குகிறது. HD சேனல்களும் இந்த டிஸ்ப்ளேவில் கச்சிதமாகக் காட்சியளிக்கிறது.
தொழில்நுட்பம்!
மைக்ரோமேக்ஸ் 4k டிவி இன்டர்நெட்டுடன் இணைத்துக் கொள்ளலாம். இதற்காக Ethernet போர்டு ஒன்று டிவியில் உள்ளது. மேலும், WiFi மூலமும் இணைத்துக் கொள்ளலாம். இந்த டிவி dual-core CPU கொண்டு இயங்குகிறது. 1GB ரேமும் இதில் அடங்கும். 2.5 GB இன்டர்னல் மெமரியை கொண்டுள்ள இந்த டிவி, 32GB வரை SD கார்டு மூலம் விரிவுபடுத்திக் கொள்ளலாம்.
இயங்குதளம்!
மைக்ரோமேக்ஸ் 4k டிவி ஆண்ட்ராய்ட் 4.4 கிட்-கேட் இயங்குதளத்தைக் கொண்டு இயங்குகிறது. பல தேவையான ஆப்ஸ்கள் இந்த டிவியில் அடங்கும். அதைத் தவிர, மற்ற ஆப்ஸ்களை ‘Google Play Store’யிலிருந்து டவுன்லோடு செய்துகொள்ளலாம். இந்த டிவியை ரிமோட்டால் மட்டுமன்றி, ஸ்மார்ட் போன்/டேப்லெட் ஆகியவற்றாலும் இயக்கலாம். USB அல்லது செட்-ஆப் பாக்ஸ் பயன்படுத்தும்போது இந்த டிவி சற்று மெதுவாகச் செயல்படுகிறது.
ரிமோட்!
மைக்ரோமேக்ஸ் 4K டிவி எளிமையான RF ரிமோட்டைக் கொண்டு இயங்குகிறது. ஒரு பட்டனை பிரஸ் செய்தால், ஸ்க்ரீனில் மவுஸ் கர்ஸர் ஒன்று தோன்றும். இதை ‘motion control’ மூலம் இயக்கலாம். மேலும், இந்த ரிமோட்டில் மைக்ரோபோன் ஒன்று இருக்கிறது. இதை skype கால்களுக்குப் பயன்படுத்தலாம்.
விலை!
சுமாரான ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ள இந்த மைக்ரோமேக்ஸ் 4K டிவியின் இந்திய விலை 49,990 ரூபாய்.
பிளஸ்: டிசைன், டிஸ்ப்ளே, இயங்குதளம், விலை.
மைனஸ்: மெதுவான start-up டைம், ஸ்டாண்ட்
செ.கிஸோர் பிரசாத் கிரண்

No comments:
Post a Comment