Search This Blog

Friday, September 10, 2010

விநாயக சதுர்த்தி

விநாயக சதுர்த்திஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக அந்த நாளை விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. எந்த ஒரு பூஜை செய்தாலும் அல்லது நல்லகாரியம் செய்தாலும் கணபதியை வணங்கி விட்டு தான் தொடங்குவார்கள்.

அநேகமாக, எல்லா தெய்வங்களுக்கும் மனித முகம் இருக்க, இவருக்கு மட்டும் ஏன் யானையின் முகம் வந்தது? எல்லாம், சிவபெருமான் நம் மீது கொண்ட கருணையால் தான். 

கஜமுகாசுரன் என்ற அசுரன், பிரம்மாவிடம் ஒரு வரம் பெற்றான். ஆண், பெண் சம்பந்தமில்லாமல் பிறந்த ஒருவனாலேயே தனக்கு அழிவு வரவேண்டும் என்பது அவன் கேட்ட வரம்;  வரம் கிடைத்தது. ஆண், பெண் சம்பந்தமின்றி, உலகில் பிறப்பு சாத்தியம் இல்லை என்பது அவன் போட்ட கணக்கு, நினைத்தபடியே அப்படி யாருமே உலகில் பிறக்கவில்லை. எனவே, அவன் சர்வலோகங்களையும் வளைத்து, தன் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தான். தேவர்களை வதைத்தான். அவர்கள், துன்பம் தாளாமல் தவித்தனர். 

அவர்களது துன்பம் தீர்க்க லோகமாதாவான பார்வதிதேவி முடிவு செய்தாள். தன் மேனியில் பூசியிருந்த மஞ்சளை வழித்தெடுத்து உருண்டையாக்கினாள். உறுப்புகளையும், உயிரையும் கொடுத்தாள். அந்தக் குழந்தைக்கு, “பிள்ளையார்’ என பெயர் சூட்டினாள். அந்தப்பிள்ளை தன் அன்னையின் அந்தப்புர காவலனாக இருந்தான். சிவபெருமான் அங்கு வந்தார். அவர் மனதில் தேவர்கள் படும் துன்பத்தை நினைத்து கருணை உண்டாயிற்று. இதற்காக ஒரு திருவிளையாடல் செய்தார். “என் அந்தப்புரத்தில் இருக்கும் நீ யாரடா?’ எனக் கேட்டு, பிள்ளையாரின் கழுத்தை வெட்டிவிட்டார். 


அதே நேரத்தில், வடக்கு நோக்கி ஒரு யானை படுத்திருந்தது. வடக்கு நோக்கி யார் படுத்தாலும், உலக நலனுக்கு ஆகாது என்பது சாஸ்திரம். அந்த நேரத்தில் பார்வதி வந்தாள். தன் மணாளனைக் கண்டித்தாள். பிள்ளைக்கு மீண்டும் உயிர் வேண்டும் என்றாள். சிவபெருமானும், வடக்கு நோக்கி படுத்து, உலக நலனுக்கு எதிர்விளைவைத் தந்து கொண்டிருந்த யானையின் தலையை வெட்டி, பிள்ளையாருக்கு பொருத்தி, மீண்டும் உயிர் கொடுத்தார். தாய், தந்தை கலப்பின்றி பிறந்த அந்தக் குழந்தை, கஜமுகாசுரனை வென்று தேவர்களைப் பாதுகாத்தான்.

யானைத் தலையை விநாயகருக்கு தேர்ந்தெடுத்ததன் மூலம், பல அறிவுரைகள் மனிதனுக்குத் தரப்படுகின்றன. மனிதனின் வாயும், உதடும் தெளிவாக வெளியே தெரிகிறது. மற்ற மிருகங்களுக்கும் கூட அப்படித்தான். ஆனால், யானையின் வாயை தும்பிக்கை மூடிக் கொண்டிருக்கிறது; அது வெளியே தெரியாது. தேவையின்றி பேசக்கூடாது என்பதும், தேவையற்ற பேச்சு பல பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதும் இதனால் விளக்கப்படுகிறது.

விநாயகருக்கு, “சுமுகர்’ என்ற பெயருண்டு. “சு’ என்றால் மேலான அல்லது “ஆனந்தமான’ என்று பொருள்படும். அவர் ஆனந்தமான முகத்தை உடையவர். யானையைப் பார்த்தால் குழந்தைகள் ஆனந்தமாக இருப்பது போல, பக்தர்களுக்கும் ஆனந்தத்தை தரவேண்டும் என்பதற்காக இந்த முகத்தை சிவபெருமான் அவருக்கு அளித்தார்.

விநாயகர் சதுர்த்தியான இன்று நீங்கள் விநாயகர் முன் அமர்ந்து சொல்ல வேண்டியது இதுவே. இந்த பிரார்த்தனையை சதுர்த்தியன்று மட்டுமின்றி, தினமும் காலையில் நீராடியவுடன் விநாயகர் முன் அமர்ந்து சொன்னால் எந்த தோஷமும் தொலைந்து போகும். உயர்ந்த புகழ் ஏற்படும். நல்ல குழந்தைகள் அமைவார்கள். எதையும் சாதிக்கும் ஆற்றல் கிடைக்கும்.


*கையில் மகிழ்ச்சி பொங்க மோதகம் ஏந்தியிருக்கும் கணபதியே! வணங்குவோருக்கு என்றும் எந்நேரமும் பிறவா வரம் தர காத்திருக்கும் குணநிதியே! பிரகாசமான ஒளிக்கற்றையை உடைய சந்திரனை தலையில் சூடியவனே! உலகத்தைக் காப்பதை விளையாட்டாகச் செய்பவனே! ஒப்பில்லாத உயர்ந்த தயாளகுணமுள்ளவனே! கஜாமுகாசுரனை வென்றவனே! கெட்டதை அழித்து நல்லதைச் செய்து என்னைக் காக்கும் விநாயகனே! உனக்கு என் வணக்கம்.

*இளஞ்சூரியனைப் போல் உள்ளத்தில் ஒளி கொண்டவனே! பாவங்களைக் களைந்து சொர்க்கத்தைத் தருவனே! தேவர்களுக்கெல்லாம் தேவனே! கருணை மிக்கவனே! யானை முகத்தோனே! அளப்பரிய சக்தியால் அளவற்ற செல்வத்தை தருபவனே! எல்லையில்லாத பரம்பொருளே! விநாயகப் பெருமானே! உன் திருவடிகளை சரணடைந்து அருளை வேண்டுகிறேன். உனக்கு என் நமஸ்காரம்.

*உலக மக்களுக்கு நலமும் மங்களமும் தருபவனே! நெஞ்சார வணங்குபவர்களுக்கு மனநிறைவைத் தருபவனே! நாங்கள் செய்யும் குற்றங்களைக் கூட குணமாகக் கொள்பவனே! ஓம் என்ற மந்திர வடிவினனே! நிலையானவனே! கருணாகரனே! சகிப்புத்தன்மை, மகிழ்ச்சி ஆகிய நற்குணங்களை தருபவனே! உலகத்தாரால் புகழ்ந்து போற்றப்படுபவனே! உனக்கு என் நமஸ்காரம்.

*திரிபுரம் எரித்த சிவபெருமானுடைய மூத்த புத்திரனே! எங்கள் துன்பத்தை தீர்த்து வை. தூய்மையான மனதைக் கொடு. உலகம் அழியும் காலத்திலும் உன் பக்தர்களை ஓடோடி வந்து காக்க வருபவனே! உண்மை வெற்றி பெற துணை நிற்பவனே! கன்னத்தில் மதநீர் பொழியும் கஜமுகனே! முதலும் முடிவுமில்லாத பரம்பொருளே! உன் திருவடிகளில் என் தலை வைத்து வணங்குகிறேன். எம்பெருமானே! நீ வாழ்க, வாழ்க!

*பிரகாசமான ஒளியைக் கொண்ட வெள்ளைத் தந்தத்தை உடையவனே! ஒற்றைக் கொம்பனே! காலனுக்கே காலனான சிவபெருமானின் மைந்தனே! ஆதியும் அந்தமும் இல்லாதவனே! கஷ்டங்களை நீக்குபவனே! யோகிகளின் நெஞ்சில் வசிக்கும் ஞானப்பொருளே! யானை முக கணேசா! காலமெல்லாம் உன்னையே நினைத்து, வணங்கி வருகிறேன். வள்ளலே! வல்லப கணபதியே! உன் திருப்பாதங்களில் சரணமடைகிறேன். விநாயகனே! சரணம்..சரணம்...சரணம்.
 

காதலை நிறைவேற்றிய கணபதி: விநாயகர் தன் தம்பி முருகப்பெருமானின் காதலை நிறைவேற்றி திருமணத்தை நடத்தி வைத்தவர். திருமாலின் கண்மலரில் தோன்றிய சுந்தரவல்லி சரவணப் பொய்கையில் நீராடி முருகனையே தன் கணவனாக அடைய வேண்டும் என்று தவம் செய்து வந்தாள். நீ வள்ளிமலையில் பிறந்து என்னை வந்து அடைவாய் என்று அருள்புரிந்தார் முருகன். வள்ளிமலையில் பிறந்து வளர்ந்த வள்ளி மீது முருகன் காதல் கொண்டு விளையாடல் புரிந்தார். வேடன், கிழவன் என பல வடிவத்தில் வந்து இறுதியில் தன் அண்ணன் விநாயகரை யானையாக வரும்படி அழைத்தார். விநாயகர் யானையாக வந்தார். யானையைக் கண்டு அஞ்சிய வள்ளிநாயகி முருகனைத் தஞ்சம் அடைந்தாள். முருகன் வள்ளியை மணந்து அருள்பாலித்தார். ""அக்குறமகளுடன் அச்சிறுமுருகனை அக்கண மணமருள் பெருமாளே'' என்று இந்நிகழ்வினை திருப்புகழில் தெளிவுபடுத்தி இருக்கிறார் அருணகிரிநாதர்.

குழந்தைகளின் கல்வி வளர...: குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் முன்பு, விநாயகப்பெருமான் முன்னால் நின்று இந்த எளிய ஸ்லோகத்தை சொன்னால் விநாயகர் மிகச்சிறந்த கல்வி நலனைத் தருவார்.


""மூஷிக வாஹன மோதகஹஸ்த

சாமரகர்ண விளம்பித சூத்ர


வாமனரூப மஹேஸ்வர புத்ர


விக்ன விநாயக பாத நமஸ்தே!!''



இதை மிக எளிதாக மனப்பாடம் செய்து விடலாம்.


பொருள்: விநாயகப்பெருமானே! மூஞ்சூறை வாகனமாகக் கொண்டவரே! மோதகத்தை விரும்பி உண்பவரே! நீண்ட தும்பிக்கையை உடையவரே! அகன்ற காதுகளைக் கொண்டவரே! குள்ள வடிவமானவரே! சிவனின் மைந்தரே! தடைகளைத் தகர்ப்பவரே! உங்கள் திருப்பாதத்தை வணங்குகிறேன்.


அவ்வை பாடிய அகவல் :
விநாயகருக்குரிய துதிப்பாடல்களில் விநாயகர் அகவல் மிகவும் பிரசித்தமானது. அவ்வையார் பாடிய இந்நூல் எழுந்த வரலாறு சுவையானது. அறிவின் வடிவாக விளங்கிய ஞான மூதாட்டி அவ்வையார். இவர் நாளும் விநாயகரை வழிபாடு செய்யும் இயல்புடையவர். ஒருநாள் சுந்தரர் யானை மீதும், சேரமான்பெருமாள் நாயனார் குதிரை மீது கயிலைக்குச் செல்வதை அறிந்தார். அவர்களுடன் தானும் கயிலை விரைவாகச் செல்ல எண்ணி வேகமாக விநாயகருக்கு பூஜை செய்தார். விநாயகர் அவ்வையார் முன் தோன்றி, "அமைதியாகப் பூஜை செய்வாயாக; அவர்களுக்கு முன்பாக கயிலைப்பதியை அடையச் செய்கிறேன்' என்று அருள்புரிந்தார். விநாயகரின் அருள்மொழி கேட்ட அவ்வையார் அவர் மீது பாடிய பாடலே விநாயகர் அகவல் என்பதாகும். உள்ளம் உருகி, கண்ணீர் பெருகி பரவசத்துடன் நின்ற அவ்வையாரை ஒரு நொடிப் பொழுதினில் தன் துதிக்கையால் கொண்டு சேர்த்தார். நாமும் விநாயகர் அகவல் பாடி ஐங்கரனின் அருள் பெறலாம்.



விநாயகருக்கு படைக்க வேண்டியவை


மோதகம்: இதன் வெளிப்பகுதி வெள்ளையாகவும், உள்ளே மஞ்சள் நிற இனிப்பு பூரணமும் இருக்கிறது. மனதை வெள்ளையாக வைத்துக் கொண்டால், கண்ணுக்குத் தெரியாத இறைவனை அடையலாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் படைக்கப்படுகிறது.


கரும்பு: இனித்தாலும் கடிப்பதற்கு கடினமானது. வாழ்க்கையும் இப்படித்தான். கஷ்டப்பட்டால் இனிமையைக் காணலாம் என்ற தத்துவத்தின் படி படைக்கப்படுகிறது. அவல், பொரி: ஊதினாலே பறக்கக்கூடியவை இப்பொருள்கள். வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற துன்பங்களை ஊதித்தள்ளி விட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.


திருநீற்று தொட்டி விநாயகர் : மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் பொற்றாமரைக் குளத்தின் அருகே வீற்றிருக்கும் விபூதி விநாயகரை, திருநீற்றுப்பிள்ளையார் என்று அழைப்பர். மந்திரமாவது நீறு என்று திருஞானசம்பந்தர் தேவாரத்தில் திருநீற்றின் பெருமையைப் பாடுகிறார். இவ்விநாயகருக்கு என்று அர்ச்சகர்கள் கிடையாது. பொற்றாமரைக்குளத்தில் கை, கால் தூய்மை செய்து, நாமே இவருக்கு நம் கையாலேயே திருநீற்றினை அபிஷேகம் செய்யலாம். தொட்டியில் வீற்றிருக்கும் இவ்விநாயகரின் மீது திருநீற்றினை இட்டு, அவரது பாதம் பணிந்து பூஜிப்பவர்களின் வினைகளைப் போக்கி அருள்கிறார்.


எலியின் மீது யானை: யானை வடிவம் கொண்ட விநாயகர் எப்படி ஒரு எலியின் மீது அமர முடியும் என்ற சந்தேகம் எழுவது இயல்பே. ஒரு பெரிய உருவம் ஒரு சிறிய பிராணியின் மீது ஏறி அமர்கிறது என்று இதற்கு பொருள் கொள்ளக்கூடாது. அணுவுக்கு அணுவாகவும் பெரிதுக்கும் பெரிதானவனுமாக இறைவன் இருக்கிறான் என்பதே இதன் தத்துவம். இறைவனை நம்மால் புரிந்து கொள்ள முடியாது என்பதையும் இது உணர்த்துகிறது. பார்வையில்லாத ஐவர் ஒரு யானையைத் தொட்டுப்பார்த்தனர். ஒருவர் யானையின் வயிற்றைத் தொட்டு, அது சுவர் போல் இருப்பதாகச் சொன்னார். இன்னொருவர் அதன் வாலைத் தொட்டு கயிறு போல் இருக்கிறதென்றார். மற்றொருவர் காலைத் தொட்டு தூண் போல் உள்ளதென்றார். ஒருவர் துதிக்கையைத் தொட்டு உலக்கை போல் இருக்கிறதென்றார். ஒருவர் காதைத் தொட்டு முறம் போல் உள்ளதென்றார். இதில் எதுவுமே உண்மையில்லை. அதுபோல், இறைவனையும் இன்னாரென வரையறுத்துச் சொல்ல முடியாது. அவரது குணநலன்களை அறிந்து கொள்ள முடியாது. எலி மீது யானை ஏறுவதென்பது எப்படி கற்பனைக்கு கூட சாத்தியமில்லையோ, அது போல் இறைவனும் நம் கற்பனைகளையெல்லாம் கடந்தவன் என்பதே இதன் தத்துவம்.

விநாயகர் சதுர்த்தி நன்னாளில், “ஓம் கணேசாய நம’ என்ற மந்திரத்தை, 108 முறை சொல்லி, அருகம்புல் அணிவித்து வழிபட்டால், அவரது நல்லருளைப் பெறலாம்

இங்கே தொகுக்க பட்ட விவரங்கள் நான் பல தொகுப்பு, கட்டுரை ஆராய்ந்து தேவையான தகவல்களை கொடுத்து உள்ளேன்..
நன்றி : விக்கி பீடியா, சஷிகா, சிவா மற்றும் ஸ்ரீமடம் ...

Thursday, September 09, 2010

ஜெயலலிதா வெயிட் பிளான்

கோவையில் கொண்டாட்டம்... திருச்சியில் திணறடிப்பு... என ஆளுங்கட்சியை அச்சுறுத்தி வந்த ஜெயலலிதா, மீண்டும் கொடநாட்டுக்கு ஓய்வெடுக்கப் போய் விட்டார். 17-ம் தேதி மதுரையில் அவர் தி.மு.க-வுடன் மல்லுக்கு நின்றிருக்க வேண்டும். அந்தக் கூட்டம் அநேகமாக அக்டோபர் மாதம் நடக்கலாம். 'மதுரை யில் கூட்டம் நடத்துவதுபற்றி எனக்கு எந்தப் பயமும் இல்லை. யாருடைய மிரட்டலுக்கும் நான் பயப்பட மாட்டேன். மதுரையில் நிச்சயம் கூட்டம் நடக்கும்' என்று சொல்லி இருக்கும் ஜெயலலிதா, அதற்கான தேதியை இன்னமும் உறுதிப்படுத்தவில்லை. அக்டோபர் 17-ம் தேதி அ.தி.மு.க. தொடக்க விழா அன்றுகூட மதுரைக் கூட்டம் இருக்கலாம். 

செப்டம்பர் 18-ம் தேதி, சைதை துரைசாமியின் மகன் திருமண வரவேற்புக்காக சென்னை வர இருக்கும் ஜெயலலிதா, மீண்டும் கொடநாடு சென்றுவிடுவார் என்றும், அடுத்து அக்டோபர் 7-ம் தேதி காமராஜர் அரங்கில் நடக்கும் 'சமூக நீதிப் பாராட்டு விழா'வில் பங்கேற்கத் திரும்பி வரலாம் என்றும் தகவல்கள்.
'அடுத்தது அ.தி.மு.க. ஆட்சிதான். இன்றைய தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப கவுன்ட்-டவுன் ஆரம்பம்' என்று அறைகூவல் விடுத்தவர், அறைக்குள் முடங்கிப்போனது ஆச்சர்யமானதுதான். இதை விசாரிக்கப் புகுந்தால், அரசியலைவிட, அவரது உடல்நிலை குறித்தே அதிகம் சொல்லப்படுகிறது. 'வெயிட்' கூடி வருவது குறித்து கவலைப்பட்ட ஜெ, அதைக் குறைக்கும் முயற்சிக்கான சிகிச்சைக்காகவே கொடநாடு சென்று இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆறு மாதங்களுக்கு முன்பு அதற்கான முயற்சியை கொடநாட்டில் ஜெயலலிதா மேற்கொண் டார். தினமும் உடற்பயிற்சி செய்வதில் தொடங்கி, சாப்பாடு விஷயத்தில் காட்ட வேண்டிய கறார் தன்மை வரை மருத்துவர்கள் கொடுத்த ஆலோச னையை மீறாமல் ஜெயலலிதா பின்பற்றியதால், ஒன்பது கிலோ எடை குறைந்திருக்கிறது. பின்னர், சென்னை திரும்பிய ஜெயலலிதா, போயஸ் கார்ட னுக்குள் சுமார் 35 நிமிடங்கள் தினமும் நடந்திருக் கிறார். எனவே, உடல் எடை கூடாமல் இருந்திருக் கிறது. அந்த நடைப்பயிற்சி நாளுக்கு நாள் குறைந் தது. இதனால், மறுபடி கொஞ்சம் வெயிட் கூடியது.

இதை அவருக்கு திருச்சி பொதுக்கூட்டம் உணர்த்தியது. சுமார் இரண்டு மணி நேரம் நின்று கொண்டே பேசினார். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, அவருக்குக் கால் வலியும் லேசான உடல் சோர்வும் ஏற்பட்டதாம்.

அடுத்த சில நாட்களில் சென்னை இம்பீரியலில் இஃப்தார் நோன்பு திறப்பு விழாவுக்கு, கொஞ்சம் பெரிதாகவே தயாரிக்கப்பட்ட உரையை எடுத்து வந்திருந்தார் ஜெயலலிதா. பொதுவாக, நோன்பு திறப்பு விழாக்களில் போடியம் வைக்கப்படுவது இல்லை. கஞ்சி குடிப்பதற்கு வசதியாக நீளமான மேஜைகள் மட்டுமே இருந்தன. அதன் மீதுவைக்கப் பட்ட மைக்கில் பேச ஆரம்பித்த ஜெயலலிதா, ஒரு கையில் தனது பேச்சுக்கான ஃபைலை வைத்துக்கொண்டார். இன்னொரு கையை மேஜை மீது வைத்து தாங்கி நின்றுகொண்டார். 10 நிமிடங்களுக்கும் மேலாகக் கையை ஊன்றியபடியே பேசிய காட்சி அவரது சிரமத்தை வெளிப்படுத்தியது.

அடுத்ததாக, சில நாட்கள் கழித்து ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சென்றார் ஜெயலலிதா. கோயில் வாசலில் இருந்து உள்ளே அவர் நடந்து செல்ல சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டு இருந்தது. 'இதெல்லாம் எதுக்கு? எடுத்துடுங்க!' என்று மறுத்துவிட்டு, கருங்கல் தரையில் நடக்க ஆரம்பித்தார். மதியம் 3 மணி என்பதால், நல்ல வெயில். கால் சூடு தாங்கா மல் ஒரு சில நொடிகள் மட்டுமே சிவப்புக் கம்பளத்தில் கால்வைத்தவர், பெரும்பாலும் சூட்டைத் தாங்கிக்கொண்டார். 

ஆரியபட்டாள் வாசலுக்கு அடுத்ததாக ஒரு பிராகாரம் இருக்கிறது. அதைத் தாண்டிய பிறகு, அவரால் தொடர்ச்சியாக நடக்க முடியவில்லை. இதை முன்னதாக உணர்ந்ததால், தனது உதவி யாளரிடம் நாற்காலி ஒன்று எடுத்து வர உத்தர விட்டு இருந்தார் ஜெயலலிதா. அந்த நாற்காலியில் சில நொடிகள் உட்கார்ந்தார். மறுபடி நடந்தார். மீண்டும் உட்கார்ந்தார். எழுந்து நடந்தார். இப்படி மூன்று முறை உட்கார்ந்து எழுந்த பிறகே அவரால் நடக்க முடிந்திருக்கிறது. அடுத்தடுத்த பொதுக்கூட்டங்களோடு... அதன்பின் தொடர்ந்து நடத்த வேண்டிய தேர்தல் பிரசாரங்களும் நினைவுக்கு வர, கேரள ஆயுர்வேத முறைப்படி சில சிகிச்சைமுறைகளை இப்போதே மேற்கொள்ளலாம் என யோசிக்கத் துவங்கி விட்டாராம்.

கொழுப்புச் சத்து அதிகம் உள்ள உணவு வகைகளைக் குறைத்தால் மட்டும் போதாது. காய்கறி சூப் வகைகளை அதிகமாக எடுத்துக்கொள்ளலாம் அதற்காக சாப்பாட்டைக் குறைக்கவோ, அல்லது சாப்பிடாமல் இருக்கவோ கூடாது என்று சொல்லப்பட்டுஉள்ளதாம். 

திருச்சி கூட்டத்தில் கலந்துகொண்ட அன்று, மதிய உணவை ஜெயலலிதா சாப்பிடவில்லை. சாப்பி டாமல் இருந்தால் உடல் சோர்வு அதிகமாகி விடும் என்றார்களாம் மருத்துவர்கள்.

அனைத்துக்கும் மேலாக, ஜெயலலிதா சாக்லேட் பிரியை. எடையை அதிகமாக்கியதற்கு இதுவும் ஒரு காரணம் என்கிறார்கள். கொடநாடு செல்வதற்கு நான்கைந்து நாட்களுக்கு முன்பு, சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள பிரபல பல் மருத்துவரைத் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் சந்தித்தாராம் ஜெயலலிதா. 'தொடர்ச்சியாகப் பல்வலி இருந்ததால்தான், இந்தச் சந்திப்பு நடந்தது' என்றும் கூறுகிறார்கள். 

போயஸ் கார்டனை வலம் வரும் சிலர், 'கார்டனுக்குள் உள்ள எலெக்ட்ரிக்கல் சப்ளையை முழுமையாக எடுத்துவிட்டு புதிய சாதனங்கள் பொருத்தும் வேலைகள் ஆரம்பமாகி இருக்கின்றன. நாள்பட்ட வயர், சுவிட்ச் போர்டுகளாக அவை உள்ளன. மேலும், ஏ.சி முழுமையாக மாற்றப்பட உள்ளது. இந்த வேலைகள் நடக்கும்போது அம்மா இங்கு இருக்க முடியாது என்பதால்தான், ஒரு மாத கால அளவுக்கு கொடநாட்டில் தங்க முடிவெடுத்தார்' என்று காரணம் சொல்கிறார்கள்.

எது, எப்படியோ... ஜெயலலிதா கார்டனில் இருந்தாலும், கொடநாடு போனாலும் இப்போதெல்லாம் அது ஸ்பெஷல் நியூஸ் ஆகிவிடுகிறது!

நன்றி : விகடன் குழுமம்

"பீப்ளி-லைவ்" PEEPLI (LIVE) ---- என் விமர்சனம்


'பீப்ளி' என்ற சிறிய கிராமத்தில் கதை தொடங்குகிறது. இங்கு உள்ள நத்தா(Omkar Das Manikpuri), புதியா (Raghuvir Yadav)என்ற இரண்டு விவசாயிகள் கடும் வறுமையில் வாடுகின்றனர். அவர்கள் நிலத்தை பேங்கில்  வைத்து அரசிடம் கடன் வாங்கியுள்ளனர். அந்தக் கடனை அவர்களால் திருப்பிச் செலுத்த முடிய வில்லை. உடனே பேங்கு நிலத்தை ஜப்தி செய்யப் போவதாக சொல்கிறது. நிலத்தை தக்க வைத்துக்கொள்ள நத்தாவும், புதியாவும் போராடுகின்றனர். என்ன செய்தும் அவர்களால் பணம் புரட்ட முடியவில்லை. அந்த நிலையில், தற்கொலை செய்துகொள்ளும் விவசாயி களுக்கு அரசு ஒரு லட்ச ரூபாய் பரிசு அறிவிக்கிறது. இதனை அவர்கள் அந்த ஊரில் இருக்கும்  அரசியல்வாதி மூலம் அறிகிறார்கள். உடனே, யாராவது ஒருவர் தற்கொலை செய்துகொண்டு அந்த லட்ச ரூபாய் பணத்தை வாங்குவது என்றும் இன்னொருவர் அந்தப் பணத்தைக் கொண்டு நிலத்தை தக்க வைத்துக் கொள்வது எனவும் முடிவு செய்கின்றனர். நத்தா தற்கொலை செய்துகொள்ளத் திட்டமிடுகிறார். அவரது திட்டம் வெளியில் கசிந்துவிட... அந்த சிறிய கிராமத்தை நோக்கி டி.வி. மீடியாக்கள் படை எடுக் கின்றன. ஒரு தற்கொலையை 'லைவ்' செய்வதுதான் அவர்களின் திட்டம்! 

நத்தாவின் ஒவ்வொரு நடவடிக்கை யையும் டி.வி. கேமராக்கள் கண்காணிக் கின்றன. டி.வி-காரர்கள் அங்கேயே வேன்களோடு தங்கிவிட, திருவிழா கணக்காக அந்தக் கிராமத்தில் தற்காலிகக் கடைகள் முளைக்கின்றன. 'நீங்கள் ஒரு பரபரப்பான காட்சியைப் பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள். ஒரு தற்கொலையை நேரடி ஒளிபரப்பு செய்வது உலகத்திலேயே இதுதான் முதல் முறை' என்ற ரீதியில் டி.வி. ரிப்போர்ட்டர்கள் மைக்கும் கையுமாக பேசியபடி இருக்கிறார்கள்.

இதற்கிடையே, அரசியல்வாதிகளும், சாதிக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் அந்த பரபரப்பில் தாங்களும் பங்கெடுக்க வேண்டி, நத்தாவை வந்து சந்தித்து டி.வி-க்களுக்குப் பேட்டி அளிக்கின்றனர். சாப்பிட வழியற்ற நத்தாவின் குடும்பத்துக்கு பெரிய டி.வி. ஒன்றைப் பரிசு அளிக்கின்றனர். ஒரு பாறை மறைவில், நத்தா, மலம் கழிப்பதற்காக ஒதுங்குகிறார். அதையும் ஒரு கேமரா படம் எடுக்கிறது. தப்பித்து ஓடும் நத்தா காணாமலே போகிறார். எல்லோரும் அவரைத் தேடுகின்றனர். இறுதியில் பீப்ளி கிராமத்தில் இருந்து டி.வி. வேன்கள் வெளியேறுகின்றன. கேமரா கிராமத்தில் இருந்து பின்னோக்கி நகர்ந்து நகரத்துக்குள் நுழைகிறது. பெரிய கட்டடம் ஒன்றின் கட்டுமான வேலைகள் நடக்கும் இடத்துக்குள் கேமரா போகிறது. அங்கு பரிதாப முகத்துடன் நத்தா கட்டுமானத் தொழிலாளியாக வேலை பார்க்கிறார். 

'1991 முதல் 2001 வரை எட்டு மில்லியன் விவசாயிகள் இந்தியாவில் விவசாயத்தைக் கைவிட்டுள்ளனர்' என்ற குறிப்புடன் படம் முடிவடைகிறது. 
 
உயிரோடு இருக்கும்போது பணத்துக் காக நிலத்தைப் பிடுங்கும் அரசு, செத்தால் லட்ச ரூபாய் பணம் தந்து கடனைக் கழித்துக் கொள்கிறது என்றமுரண்பாடு தான் படத்தின் உயிரோட்டம்! அனுஷா ரிஸ்வி என்ற அறிமுக பெண் இயக்குநரின் படைப்பான 'பீப்ளி லைவ்', விவசாயிகள் தான் இந்த தேசத்தின் உச்சகட்ட பரிதாப ஜீவன்கள் என்பதை நடு மண்டையில் அடித்தாற்போல் சொல்கிறது. அதேசமயம், ஜனரஞ்சக ரசிகர்களையும் மனதில்கொண்டு அரசாங்கத்தை நோக்கியும், ஊடகங்களின் சில போலித்தனங்கள் பற்றியும், சமூகத்தின் சுயநலப் பார்வை பற்றியும் சிரிக்கச் சிரிக்க கிண்டலடித்தபடி நகர்கிறது படம். 'டார்க் ஹியூமர்' என்ற,- அதிகாரத்தை நோக்கிய இந்த கிண்டல் பாணி ஒவ்வொரு ஃபிரேமிலும் வெளிப்படுகிறது. 'நத்தாவின் இந்த நிலைமைக்குக் காரணம், முஸ்லிம் தீவிரவாதிகள்தான்' என்று ஒரு கேரக்டர் அபத்தமாகப் பேசும் வசனம் இதற்கு ஒரு நல்ல உதாரணம். தொலைக்காட்சிகள் டி.ஆர்.பி. ரேட்டிங்குக்காக அடிக்கும் கூத்துகளையும், எல்லாவற்றையும் வெறும் செய்தியாக மட்டுமே, உணர்வற்று விலகி நின்று பார்க்கும் மனநிலையையும் சவட்டி எடுக்கிறார்கள். 

லகான்,' 'ரங் தே பசந்தி,' 'தாரே ஜமீன் பர்,' '3 இடியட்ஸ்' என்று வரிசையாகபொது நோக்குப் பார்வை கொண்ட படங்களில் கலக்கி வரும் அமீர்கான் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். ஆரம்பத்தில் அமீர்கான் இந்த நத்தா கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்ததாம். அதற்குள் இன்னும் பொருத்தமான புதுமுக நடிகர் கிடைத்ததும் அவரையே ஹீரோவாக்கி விட்டாராம். படம் வெளியானதும் அமீர்கான் நாட்டின் முக்கியத் தலைவர்கள் அனைவருக்கும் இந்தப் படத்தைப் போட்டுக்காட்டத் தொடங்கினார்.

படத்தில் எனக்கு பிடித்த சில காட்சிகள் :

நத்தாவின் மகன் தூங்கிக் கொண்டிருக்கிற நத்தாவை எழுப்பிக் கேட்கிறான் "எப்பப்பா செத்துப் போவே?. நான் லேஅதேர் ஆவேன்னு மாமா சொல்லுறாரு , ஆனால் நான் போலீஸ்காரனாவனும்".

"உன்னிடமிருந்து எதையும் எடுத்துக் கொள்ளாமல் அரசாங்கம் எதையும் உனக்குத் தராது தம்பி" என்கிறான் ஒரு அரசியல்வாதி. 

"உயிரோட இருக்கறவங்களுக்கே எந்த உதவியும் செய்யாத அரசாங்கமா, செத்தவங்களுக்கு உதவப் போவுது?" என்று அரசுத் திட்டத்தை ஒரு பாமரன் கிண்டலடிக்கிறான்.

ராணுவத்திற்கான பல கோடி செலவுகளையும் செய்யும் அரசங்கம் மிக ஆதாரமான விவசாயத்தை இப்படியாக புறக்கணிக்கும் போது 'வருங்காலத்தில் நாம் எதை உண்ணப் போகிறோம்' என்கிற கேள்வி பூதாகரக் கவலையுடன் நம் முன்னே நிற்கிறது.
  


Wednesday, September 08, 2010

Postdoctoral positions...

Postdoctoral position at University of Pittsburgh

The Department of Industrial Engineering at the University of Pittsburgh anticipates an opening for a postdoctoral associate starting September 2010. The position’s primary area of research will focus on mechanics of the microforming processes and characterizing the thermomechanics of deformation at micrometer length-scales.
 
The initial appointment is for one year with potential to extend, subject to the availability of funds. A strong background in solid mechanics with expertise in computational crystal plasticity methodologies and finite element modeling of manufacturing processes is preferred. Expertise in analytical electronmicroscopy (TEM, SEM and HRTEM) and mechanical characterization is desirable. 
 
The candidate isexpected to be independent, self-motivated and posses a proven record of high-quality publications. A doctoral degree in mechanical engineering or materials science is preferred. We will be reviewing applications immediately on receipt. Interested candidates should forward their CV, two representativepublications and contact details of at least two references to (electronic submissions are preferred):
 
M. R. Shankar
Assistant Professor
University of Pittsburgh
Department of Industrial Engineering
1034 Benedum Hall,
Pittsburgh, PA 15261, USA
Email: shankarr@engr.pitt.edu

Postdoctoral Fellowship in Ocular Mechanics, Devers Eye Institute, Portland, Oregon 

NIH-FUNDED POSTDOCTORAL FELLOWSHIP IN FINTIE ELEMENT MODELING OF OCULAR TISSUES - TWO YEAR TERM

The Devers Eye Institute Ocular Biomechanics Laboratory is seeking a postdoctoral fellow to construct, analyze, and interpret finite element models of the posterior hemisphere of the eye to characterize the mechanical behavior of the optic nerve head in normal and glaucomatous eyes. The optic nerve head is the site of nerve damage in glaucoma, the second leading cause of blindness in the world, and we hypothesize that intraocular pressure-driven optic nerve head biomechanics is the mechanism of damage. We have several large NIH grants focused on ocular biomechanics in glaucoma and intraocular pressure telemetry, and the successful candidate will join a dynamic team of accomplished biomedical engineers, scientists, and clinicians studying the optic nerve head using experimental, imaging, and computational approaches.

The duties of this position include the further development of finite element models of the posterior pole and optic nerve head at both the continuum and microarchitectural levels, integration of inhomogeneous hyperelastic, anisotropic material properties into the models, analysis of models, interpretation of the results, and manuscript preparation as first author. The incumbent will also have the freedom to develop his/her own ideas and receive support and help in their development from the research team.

A Ph.D. in Mechanical or Biomedical Engineering or a related field is required. Experience with finite element modeling of complex biologic tissues is required. Experience with modeling of trabeculated structures such as bone, as well as a working knowledge of Amira, Amira Developer, and Abaqus is preferred.

To apply, please e-mail a complete curriculum vitae, a representative publication, and the names and contact information of two references to the contact below.

J. Crawford Downs, PhD
Associate Scientist
Research Director, Ocular Biomechanics Laboratory
Devers Eye Institute
Portland, Oregon USA

email: cdowns@deverseye.org

 

Postdoc position at MIT: Thermal and mechanical properties of nanocomposites

A postdoctoral associate position at MIT is available immediately, focused on the analysis and development of multifunctional thermal management structures, by using theoretical and atomistic multiscale modeling and simulation. This project specifically involves calculations of thermal and mechanical properties of graphene based metal- and polymer nanocomposites, with a focus on various aspects such as interfacial transport properties, tunability, mutability and phonon engineering. Additional aspects of the project relate to the general
area of mechanical energy transport in biological materials.

A Ph.D. in materials science, chemistry, physics or a related field is required, and in particular experience with molecular dynamics simulations. The candidate should have very well-developed computational skills, a strong background and interest in atomistic, molecular and multiscale modeling and simulation, preferably experience in the calculation of transport properties and some expertise in first principles calculations (Density Functional Theory). Good written and verbal communication skills and organizational talents are expected.  

Please send a CV, a brief summary of research interests and skills, three representative publications, and the names, affiliations, phone numbers, and email addresses of three references to lamm-search@MIT.EDU.

The research will be carried out at MIT’s Laboratory for Atomistic and Molecular Mechanics.  

Evaluation of candidates will begin immediately and will continue until the opening is filled. This position is available immediately.

For any questions, please contact Markus Buehler (contact information below).

Contact information:
Prof. Markus J. Buehler, Ph.D.
Esther and Harold E. Edgerton Associate Professor
Principal Investigator, Laboratory for Atomistic and Molecular Mechanics
Department of Civil and Environmental Engineering
Massachusetts Institute of Technology
77 Massachusetts Ave. Room 1-235 A&B
Cambridge MA 02139
Phone: 617-452-2750
Fax: 617-324-4014
E-mail: mbuehler@MIT.EDU
Lab website: http://web.mit.edu/mbuehler/www/

 

 
 

டாடா கம்பெனிக்கு யார் வாரிசு?


பொது சொத்தாக இருக்க வேண்டிய அரசியல் இயக்கங்களின் வாரிசுகள் ஒரே குடும்பத்துக்குள் எப்படி போட்டி போடுகிறார்கள், முட்டி மோதுகிறார்கள், என்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். ஆனால், தனி மனித உருவாக்கமான ஒரு மாபெரும் தொழில் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கான வாரிசுத் தேடல், முற்றிலும் தகுதியை மட்டுமே அடிப்படையாகக்கொண்டு நடந்து வருகிற செய்தி, ஓர் ஆச்சர்ய அதிர்ச்சிதான்! 

உப்பு, சோப்பு என்று தொடங்கி... கார், லாரி, பஸ் என ஆயிரக்கணக்கான பொருட்கள் உற்பத்தி செய்யும் 100-க்கும் மேற்பட்ட கம்பெனிகளின் தலைமை நிறுவனம் - டாடா அண்ட் சன்ஸ். 20 ஆண்டுகளாக இதற்கு ரத்தன் டாடா தலைவர். மூன்று லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த  நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து அடுத்த ஆண்டு ரத்தன் டாடா ஓய்வு பெறுவதால், இந்தப் பதவிக்கான வாரிசு தேடும் படலம் இப்போதே ஆரம்பித்துவிட்டது! 

நானோ கார் அறிமுகம், லேண்ட் ரோவர் மற்றும் ஜாக்குவார் கார் கம்பெனிகளை வாங்கியது என்று உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ரத்தன் டாடா தொடர்ந்து சிக்ஸர்களாக அடித்து வருகிறார். இவருக்கு முன்பு இந்தப் பதவியில் இருந்த ஜே.ஆர்.டி.டாடா, 53 ஆண்டுகள்... அதாவது, 86 வயது வரை இந்தப் பதவியில் இருந்தார். ஆனால்... திருமணம், குழந்தை, குடும்பம் என்று எதுவுமே இல்லாமல், 74 வயதிலும் தன் காரைத் தானே ஓட்டிக்கொண்டு அலுவலகம் வரும் ரத்தன் டாடா, '75 வயதுக்கு மேல் ஒருவர் இந்தப் பதவியில் இருப்பது சரி இல்லை...' என்று ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே தீர்க்கமாகச் சிந்தித்து முடிவு எடுத்து, அதை கம்பெனியின் சட்டமாகவே ஆக்கிவிட்டார். 

'சரி, தன் வாரிசு யார் என்பதை அவரே அடையாளம் காட்டுவாரா?' என்றால், அதற்கும் 'நோ' சொல்லிவிட்டார் ரத்தன் டாடா. 'அந்த வேலையை செய்வதற்கு அவரது கம்பெனி, 'ஐந்து நபர் கமிட்டி' ஒன்றை நியமித்து இருக்கிறது. அதுதான் அடுத்த வாரிசைத் தேர்ந்து எடுக்கும். அந்த கமிட்டிக்கு முழு சுதந்திரம். 'நான் ஒருபோதும் இந்த விஷயத்தில் குறுக்கிட மாட்டேன். நீங்கள் யாரை வேண்டுமானாலும் உங்கள் இஷ்டப்படி தேர்ந்து எடுங்கள்' என்று டாடா சொல்லிவிட்டாராம்! ஆனால், ரத்தன் டாடா போகும் இடத்தில் எல்லாம் நிருபர்கள் வளைத்து, வாரிசு பற்றிய கேள்விகளால் துளைத்து வருகின்றனர். ''உங்கள் நிறுவன வாரிசாகக் கட்டாயம் உங்கள் இனத்தைச் சேர்ந்த ஒரு பார்ஸிதான் வருவார் என்கிறார்களே?'' என்று ஒரு பத்திரிகையாளர் கேட்டபோது, அவரின் கண்களைத் தீர்க்கமாகப் பார்த்த ரத்தன், ''பார்ஸியும் வரலாம். பார்ஸி அல்லாதவர்களும் வரலாம். ஏன்... நம் இந்தியாவுக்கு வெளியில் இருந்துகூட வரலாம். எனக்கு அதைப்பற்றி கவலை இல்லை. ஆனால், தலைவர் பதவிக்கான தகுதி இருக்கிறதா என்பது மட்டும்தான் கண்டிப்பான ஒரே அளவுகோல்!'' என்று நச்சென்று பதில் தந்தார். 

டாடா சாம்ராஜ்யத்தின் மொத்த வருமானத்தில் 65 சதவிகிதம், தற்போது வெளிநாடுகளில் இருந்துதான் வருகிறது. எனவே, வெளிநாட்டைச் சேர்ந்த இந்தியர்களான இந்திரா நூயி (பெப்ஸி கம்பெனியின் தலைவரான இவர், சென்னைப் பெண்மணி.) இந்தப் பதவிக்கு வரக்கூடும் என்று ஊடகங்கள் தொடர்ந்து யூகங்கள் வெளியிட்டன. இந்த நிலையில் இந்திரா நூயி, அந்தப் பதவிக்கு வர விரும்பவில்லை என்று கூறி உள்ளார். அதைத் தொடர்ந்து, ''டாடா கம்பெனிக்கு 'டாடா' என்பதை பெயரோடு கொண்டிருக்கும் ஒருவர் வருவதுதான் பொருத்தமாக இருக்கும்'' என்றும் சொல்லும் சிலர், ரத்தன் டாடாவின் உறவினரான நோயல் டாடாவின் பெயரைக் கூறி வருகின்றனர். இன்னொரு புறம், ஃபிரெஞ்ச் கம்பெனியான ரெனோ மற்றும் ஜப்பான் கம்பெனியான நிஸான் ஆகிய இரண்டு கம்பெனிகளுக்கும் தலைவராக இருக்கும் கார்லோஸ் கோஷன் பெயரும் பலமாக அடிபடுகிறது. இது தவிர, பாம்பே டையிங் கம்பெனியின் நுஸ்லி வாடியா, வோடஃபோன் கம்பெனி தலைவராக இருந்த அருண் சரீன் ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளதாம்.

Tuesday, September 07, 2010

மனவலிமை - விவேகானந்தர்

நம் அனைவரிடத்தில் தற்போது மன வலிமை மிக குறைந்து விட்டது.. நம் சக சந்தோசம் மற்றும் துக்கத்தை அனைவரிடமும் பகிர்ந்து கொள்வது இல்லை. எதாவது ஒரு சின்ன கஷ்டம் ஏற்பட்டு விட்டால் நம் மீதே வெறுப்பு ஏற்படிகுறது. வாழ்கையின் விரக்தியின் ஓரத்திற்கே நம் சென்று விடுகிறோம். நான் பொதுவாக கான்பூரில் இருக்கும் போது தினமும் ஆட்டோ க்ராபில் வரும்  ஒவ்வொரு பூக்கள் பாடல் கேட்டு தான் என் பணி ஆரம்பிப்பேன். அதற்கான காரணம் கான்பூரில் தற்போது, மற்றும்( இனிமேல் படிக்க போகும்) நண்பர்கள் நன்றாக அறிவார்கள்.

என் தந்தை என்னை தினமும் எதாவது ஒரு விவேகானந்தர் பொன் மொழி படிக்க சொல்லுவார். நான் படித்து முடித்ததை இதோ உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

* மனிதனுக்குள் இருக்கும் தெய்வீக இயல்பை வெளிப்படுத்துவதற்கான ஒரே வழி துன்பப்படுவோருக்கு உதவுவது ஒன்று தான்.

* மனதை ஒருமுகப்படுத்துவது தான் கல்வியின் அடிப்படை லட்சியமாகும்.

* வெற்றி பெறுவதற்கு விடா முயற்சியும், தளராத மனவுறுதியும் தேவை. நீங்கள் கடவுளின் குழந்தைகள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள்.

* நம்பிக்கை, நம்பிக்கை, நம்மிடத்தில் நம்பிக்கை; கடவுளிடத்தில் நம்பிக்கை கொண்டு வெற்றி நோக்குடை யவர்களாக வாழுங்கள். வெற்றிக்கான ரகசியம் இது தான்.

* தான் என்னும் ஆணவத்தையும், பேராசையையும் அடக்கும் போது பெரும் வெற்றிகளைப் பெறமுடியும். அரும்பெரும் செயல்களைத் தியாகத்தால் மட்டுமே சாதிக்க முடியும்.

* சுயநலம் ஒழுக்கக்கேட்டினை விளைவிக்கும். சுயநலமின்மையோ நல்லொழுக்கத்தைத் தரும்.

* பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்தும் கருத்தே ஆன்மிகம் ஆகும். ஆன்மிக ஈடுபாட்டினால் மட்டுமே மனிதனுக்குள் புதைந்திருக்கும் பரிபூரணத்தன்மை வெளிப்படும்.
 
மதம் என்பது எந்த நிலையிலும் மனிதனுக்கு துணை போக வேண்டும். இல்லாவிட்டால் வாழ்க்கையில் அதற்கு இடம் தர வேண்டிய அவசியமில்லை.

* முதலில் நாம் நம்மிடம் நம்பிக்கை வைத்துக் கொள்ள வேண்டும். அந்த நம்பிக்கை இருந்தால் தான் முன்னேற வழி கிடைக்கும்.

* வாழ்க்கையில் ஏதாவது லட்சியம், கொள்கையில் பிடிப்பு வேண்டும். அந்த கொள்கை வழியில் நடந்தால் நம்முடைய இடர்ப்பாடுகளின் அளவு குறைந்து விடும் அல்லது மட்டுப்பட்டு விடும்.

* ஒரு திட நம்பிக்கையைக் கடைபிடித்து வாழ்க்கையில் சாதனை நிகழ்த்தியவர்களை சரித்திரம் காட்டுகிறது. அதே நம்பிக்கையைச் சற்று விரிவுபடுத்தினால் அது கடவுள் நம்பிக்கையாகி விடும்.

* கடவுள் என்பவர் நம் எல்லோரையும் இணைக்கும் சக்தி. கடவுள் மீது நம்பிக்கை கொள்வது சமூகத்தின் நன்மைக்காகவே. கடவுளை நம்புபவன் உலகத்தை நேசிக்கிறான்.

* கடவுள் கடல் போன்றவர். நாம் கடவுளைத் துணைக்கு அழைத்தால், அந்தக் கடலளவு சக்தியில் ஒரு துளியை மட்டுமே பயன்படுத்துகிறோம். அந்த ஒரு துளியை முழுமையாகப் பயன்படுத்தக்கூட, கடவுள் பற்றிய பூரணநம்பிக்கை இருந்தால் தான் முடியும்.


அன்புடன் 
ராஜா 

Monday, September 06, 2010

ரஜினி (தலைவா) இது தகுமா?

செய்தி : தன் மகள் திருமண விழாவிற்கு வர வேண்டாம் என தன் ரசிகர்களை வேண்டி கொண்ட ரஜினி

விகடனில் வந்த ஓர் ரசிகனின் கடிதம்.
உங்களிடம் நேரில்தான் பேசவே முடியாதே... சில விஷயங்களை மனசைவிட்டு தங்களின் காலடியில் இறக்கிவைக்கவே இந்தக் கடிதம்! தமிழகத்தில் நிறைய அரசியல்வாதிகள் தலைவராக தங்களை முன்னிலைப்படுத்திக் கொண்டாலும், எல்லோரையும் யாரும் இப்படி அன்பொழுக அழைப்பது இல்லை. எந்தக் கட்சியையும் தொடங்காதபோதே, 'தலைவா' என்று உயிர் உருக உங்களை அழைத்த லட்சக்கணக்கான ரசிகர்களில் ஒரு துளி நான். 


நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்களா தலைவரே? நாங்கள் சந்தோஷமாக இல்லை! 'போக்குவரத்து நெரிசல், கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் மகள் திருமணத்துக்கு வரவேண்டாம்' என்று நீங்கள் சொல்லிவிட்டீர்கள். இதே அறிக்கையை உங்கள் படம் ரிலீஸ் ஆகும்போது விடுவீர்களா? அப்போதும் தியேட்டரைச் சுற்றிலும் கூட்டம், போக்குவரத்து நெரிசல், பிதுங்கும் ஜனத்திரள் எல்லாமே இருக்குமே! 

இந்த நேரத்தில், மூத்த மகள் மணவிழா சென்னை பட்டினப்பாக்கம் மேயர் ராமநாதன் ஹாலில் நடந்ததும் ஞாபகம் வருகிறது. கோட்டு சூட்டு போட்டவர்களையும், கார்களில் வந்தவர்களையும் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றீர்கள். ஆனால், நாங்களோ மண்டப வாசலிலேயே சத்யநாராயணா மூலம் கெடுபிடியாக வெளியே தள்ளப்பட்டோம். வெள்ளித் திரையில் உங்களுக்கு கற்பூர ஆரத்தி எடுத்த எங்களின் கண்களில், கண்ணீர்த் திரை அப்போது வழிந்தது நிஜம். உங்களின் ஒவ்வொரு பிறந்த நாளிலும் ஊருக்கே சோறு போட்டவர்கள், 'உள்ளே வராதே' என்று விரட்டி அடிக்கப்பட்டோம்.

அதே மண்டபத்தில் நடிகர் பிரபுவின் மகன் கல்யாணம். திருமணத்துக்கு முதல் நாள் ரசிகர்களை மண்டபத்துக்கு அழைத்து, மணமக்களை அறிமுகப்படுத்தி விருந்து கொடுத்தார். அந்த பாசத்தை உங்களிடம் நாங்கள் எதிர்பார்த்தது தவறா? ரசிகன் கட்டும் தோரணம் வேண்டும்... கட்-அவுட் வேண்டும்... டிக்கெட் காசு வேண்டும்... நாங்கள் மட்டும் வேண்டாமா? பெரிய பெரிய வி.ஐ.பி-க்களோடு எங்களைச் சேர்த்து வைத்து வரவேற்க வேண்டாம்... உங்கள் குடும்பத்தின் இந்த சந்தோஷ நிகழ்ச்சியை முன்னிட்டு எங்களுக்கென்று தனியாக ஓரிரு மணி நேரம் நீங்கள் ஒதுக்கக் கூடாதா? மேடைகளிலும், அறிக்கைகளிலும் உங்களைத் தூற்றி நகையாடியவர்களுக்குக்கூட நேரில் போய் பத்திரிகை வைத்தீர்களே... தூஷித்தவர்களுக்கு விருந்து வைத்து போஷிக்கிறீர்கள்...... உங்களை வாரி அணைத்தவர்களை வாசலுக்கு வெளியே நிறுத்தலாமா?

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் வரும். நீங்கள் திடீரென்று விமான நிலையத்தில் ஸ்டைலாக நின்றுகொண்டு, 'இந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடு' என்று போஸ் கொடுத்துவிட்டுப் பறந்துவிடுவீர்கள். உங்கள் வார்த்தையை உயிராய் சுமந்து ஓடியாடி உழைப்போம். அரசியல்வாதிகள் எங்களைத் தேர்தல் வேலைகளுக்குப் பயன்படுத்திக்கொண்டு, கறிவேப்பிலையாகத் தூக்கி வீசிவிடுவார்கள். ஒரு தடவை தி.மு.க-வை ஆதரிக்கச் சொல்வீர்கள். அடுத்த தரம், ஜெயலலிதா வீட்டில் சிரித்துப் பேசிக்கொண்டு இருக்கும் போட்டோ ரிலீஸ் ஆகும். எது சொன்னால் என்ன... மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்பாக ஆடி, கடைசியில் சொந்தக் காசில் சூடு வைத்துக்கொள்வோம்!
நிதானமாக யோசித்தால், ஒன்று புரிகிறது... நீங்கள் தெளிவினும் தெளிவு. உங்கள் ஒவ்வொரு படம் வரும்போதும், ரசிகர்களின் மனசைக் கரைத்துவிடுவீர்கள். கடந்த முறை 'குசேலன்' படம் ஓடத் திட்டமிட்டு, கரிசனம் காட்டித் திடீரென ராகவேந்திரா மண்டபத்துக்கு அழைத்து, 'என்னையும் ரசிகர்களையும் பிரிக்க முடியாது.' என்று சொல்லி, கோடம் பாக்கத்தையே கொடைக்கானல் ஆக்கினீர்கள்! ஆனால், ஒரு படம் ஓகோவென ஓடினால் நன்றி சொல்ல அழைத்தது உண்டா? வெற்றிச் செய்தி காதில் விழுந்ததுமே இமயமலையில் கால்வைத்து விடுவீர்கள்! 

உங்களை கேவலமாகத் திருமாவளவன் வசை பாடியபோது, கோபமாகி எதிர்த்தோம். விளைவாக, கட்சியினரால் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் இருந்தோம். நீங்கள் ஒரு வார்த்தையாவது 'என்னாச்சு?' என்று கேட்டதில்லை. இன்று வரை பகை நெருப்புபற்றி எரிகிறது எங்களுக்குள். ஆனால், பெரியவர்கள் ஒன்று சேர்ந்துவிட்டீர்கள். திருமாவின் வீடு தேடி, திருமண அழைப்பு தருகிறீர்கள். ஆனால், அன்று எங்களை அடித்தவர்கள், இன்று மறுபடியும் எங்களைப் பார்த்து மிகக் கேவலமாகச் சிரித்தபடி 'எங்க பவர் புரியுதா?' என்று வாய் கூசாமல் கமென்ட் அடிக்கும் போது உயிரோடு போட்டுச் சிதைப்பது போல் இருக்கிறதே தலைவா!

'பாபா' படம் வந்தபோது, வட மாவட்டங்களில் கலவரம் தலைவிரிக்க... பா.ம.க-வினர் அரங்குகளில் படப் பெட்டிகளையே தூக்கினர். தடுத்த எங்களுக்கு அடி, உதை... ரத்தக் கசிவு நின்றாலும், வடுக்கள் இன்னும் உடலில்! இப்போது நீங்களோ அன்புமணி இல்லம் தேடிப் போய் அழைப்புவைத்து அளவளாவுகிறீர்கள்! 'பகையைப் பாராட்டாத பரந்த உள்ளம்' என்றும் 'நாகரிகம் அறிந்த நல்ல மனிதர்' என்ற பெயர்கள் உங்களுக்குக் கிடைக்கலாம்... ஆனால், காயம்பட்ட எங்களை மட்டும் சுத்தமாகப் புறக்கணிக்கும்போது நெஞ்சில் ரத்தக் கண்ணீர் வடிகிறதே!

எங்களைப் பார்த்து வளர்ந்த விஜய காந்த் ரசிகர்கள்கூட கரை வேட்டி கட்டிக்கொண்டு, எங்களை ஏதோ காயலான் கடை பொருள்போல ஏளனமாகப் பார்ப்பதை எப்படித் தாங்கிக்கொள்ள? 

எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக் கொண்டு திரும்பத் திரும்ப உங்கள் பின்னால் இன்னும் எத்தனை நாளைக்கு நாங்கள் ஓடி வர முடியும்? காலம் எல்லாம் தாங்கிக்கொண்டு சும்மா இருக்க எங்களுக்கு 'எந்திர' இதயம் இல்லையே! அது ரத்தமும் சதையினாலும் அல்லவா ஆனது? 

தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள் தலைவா!

இதற்கு இன்று ரஜினி  பதில் அறிக்கையை பத்திரிகைகளுக்கு இன்று அனுப்பி உள்ளார். இதோ அதனின் விவரம் 
 

திருமண விழாவிற்கு வந்த சிறப்பித்த முதல்வர் மற்றும்அனைத்து அமைச்சருக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இதில் திரை பிரபலங்களும் அடங்கும். ரசிகர் நண்பர்களுக்கு அவர்களின் குடும்ப சகிதமாக மன மக்களை அறிமுக படுத்தி விருந்து வைக்கலாம் என எண்ணுகிறேன். அது முடியுமானால், கண்டிப்பாக முயற்சி செய்வேன். இவ்வாறு அந்த அறிக்கை முடிகிறது. 
 
ஒரு வேலை தலைவருக்கு பயம் வந்துடுச்சோ எந்திரன் படம் வெளியிடு அப்போ ரசிகர்கள் ஆப்பு வட்சுடுவங்கோனு... இல்லை, பெரிய குடும்பத்தில் இருந்து யாரும் மிரட்டி இருப்பங்களோ.. சுமார் இருநூறு கோடி போட்டு படத்தை எடுத்தற்காக!!!!!
 
சில நண்பர்கள் சொல்கிறார்கள், இது அவருடைய சொந்த விஷயம்.. இருக்கட்டும்.. ஒரு முடிவு எடுத்தால், அதில் நின்று அதனை நடத்தி கட்ட வேண்டும். அத விட்டுட்டு, சும்மா அன்று ஒரு பேச்சு, இன்று ஒரு பேச்சு... இதே தான் அவர் 1996 இல் இருந்து செய்து கொண்டு உள்ளார்..


Saturday, September 04, 2010

செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர்கள் தினம்


செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர்கள் தினம்.

42 டாக்டர் பட்டம் பெற்ற டாக்டர் ராதகிருஷ்ணண் அவர்களின் பிறந்த நாளைத் தான் ஆசிரியர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. தனது வாழ்வில் ஆசிரியர் பணியை பெருமையாய் கருதியவர், ராதாகிருஷ்ணன். ஆசிரியர் தொழிலுக்கு மரியாதை கொடுத்தவர். பெருமையை கொணர்ந்தவர். ஒரு நல்ல ஆசிரியரால் எவ்வளவு தூரம் பயணப்பட முடியும் என்பதற்கு அவரே நேரடி செயல் விளக்கம். பல ஆசிரியர்கட்கு முன்னுதாரணம்.



மனிதனை மனிதனாக, உருவாக்கும் சிற்பிகள் என்று ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளைச் சொல்வதுண்டு. மனிதனை முதன்மை படுத்த உரமாக இருப்பவர்கள் ஆசிரியர்கள் என்றால் அது மிகையாகாது.ஒவ்வொரு மாணவனுக்கும், ஞானத்தின் சுடரை ஏற்றுகிற பணி ஆசிரியருடையது. அவர்களை நன்றியுடன் நினைவுகூரவும், அவர்களின் பணி தொடர வாழ்த்தவும், ஆசிரியர் தினம். 

'எங்கே நடப்படுகிறாயோ அங்கே மலராகு" என்ற பொன்மொழிக்கு எடுத்துக்காட்டாய் இருப்பவர்கள் ஆசிரியர்கள் தான். தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவர்களை வாழ்க்கை என்றால் என்ன? இதில் மாணவ, மாணவி சமூகத்தின் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு தெளிவை ஆசிரியர்கள் தான் கற்றுக் கொடுக்கின்றனர். குறிக்கோள் இல்லாத வாழ்க்கை முகவரியில்லாத கடிதத்திற்குச் சமம். இது போல் தான் மாணவ சமூகமும் குறிக்கோள், லட்சியம் இல்லாமல் இருந்தால் எதிர்காலம் ஓர்; இருண்ட பாதை என்பதை ஆரம்ப காலத்தில் இருந்தே மாணவ மனதில் நன்கு பதிய வைத்து, அதன் மூலம் கிடைக்கும் வெற்றியை பார்க்கும் பொழுது ஆசிரியர்களின் முகத்தில் ஓர்; மகிழ்ச்சி தோன்றும். தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவனை நல்ல மாணவனாக ஆக்குவதோடு, நல்ல மனிதனாக மாற்றும் பொறுப்பும் ஆசிரியர்களுக்கு இருக்கிறது. பிற பணிகளில் இல்லாதது ஆசிரியர் பணியில் இருக்கிறது. மாதா பிதா குரு தெய்வம் என்று தான் சொல்கிறோம். மாதா பிதா டாக்டர், இன்ஜினியர் என்று நாம் சொல்வது இல்லை. தமிழ்சிறப்பாயிரம் பாடலில் சொன்னது போல் அன்னையும் தந்தையும் ஒரு குழந்தையை உலகிற்கு தருகின்றனர். ஆனால் ஒரு ஆசிரியன் உலகத்தையே குழந்தைகளுக்கு தருகிறான். இந்த உண்மைகள் நிலைத்து நிற்க வேண்டும்.

ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் உழைப்பினை தான் நாம் அதிகம் பாராட்ட வேண்டும். சிறு குழந்தைகளுக்குச் பாடங்களை அடித்தோ, அல்லது மிரட்டியோ கற்றுக் கொடுக்க முடியாது. அப்படிச் சொல்லிக் கொடுத்தாலும் அவர்களுக்கு ஏறாது. குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் பொழுது அசிரியர்கள் குழந்தைகளாகவே மாறிவிட வேண்டும். அப்பொழுது தான் அவர்கள் தங்களின் முழுக்கவனத்தையும் ஆசிரியர்கள் மீது விழும்.  கிராமத்தில் ஆரம்பப் கல்வி படிக்கும் மாணவன் பின் வாழ்வின் எத்தகைய உயர்ந்த நிலைக்குச் சென்றாலும் அப்பள்ளியையும் ஆசிரியர்களையும் மறப்பது இல்லை.

ஒரு சமூகம், அதி உன்னத நிலை அடைந்து இருந்தால், நிச்சயமாக அதன் பின்னால் அற்புதமான ஆசிரியர் சமூகம் இருப்பதாக அர்த்தம். ஒரு சமூகம் தாழ்ந்து போனால், ஆசிரியர் சமூகம், தனக்கான பணியை சரிவர செய்திடவில்லை என அர்த்தம். வேறு எந்த துறையை விடவும் அதிக பொறுப்புகளும், அதிக முக்கியத்துவமும் நிறைந்தது அவர்கள் பயணம். மாணவர்களுக்கு அதிகம் தேவைப்படுவது, என்றென்றுமான ஊக்கமும், தன்னம்பிக்கையும், நன்னெறிகளும் .. இதை சரியாக மலர செய்திட்டால், அங்கே ஆசிரியர் வேலை அதன் முழு நிறைவை எட்டியதாக அர்த்தம். ஒரு மாணவன் ஆசிரியரை அடையும் தருணத்தில், வெறும் மண் கலவையாய் மட்டுமே உள்ளான். அவனை தேவையான வடிவில், சிலையாக வார்ப்பது ஆசிரியனின் பணியாக உள்ளது.

அர்ச்சுணனுக்கு ஒரு துரோணாச்சாரியார் போல், கொள்ளை, கொலை தொழிலைச்செய்து வந்த திருடனை ராமாயணம் என்ற வராலாற்று காவியத்தை படைக்கும் அளவிற்கு வால்மீகி உருவாகக் காரணமான நாரதரைப் போல், விவேகானந்தருக்கு ஒரு ராமகிருஷ்ண பரமஹம்சரைப் போல் ஒவ்வொரு மாணவ, மாணவிகளுக்கும் ஓர் ஆசிரியர்கள் இன்றும் வாழ்வியல் ஆசானாக இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஒரு நாட்டின் எதிர்கால தலைவிதி ஒவ்வொரு வகுப்பறைகளிலும் உருவாக்கப்படுகிறது என்பதை ஆசிரியர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

இது ஒரு கதை. ஒரு கவிதையின் உரை வடிவம். இறைவன் ஆசிரியனை உருவாக்கும் முயற்சியில் முனைந்து இருக்கிறான். அது இடைவிடாத ஆறாவது நாள் வேலை அவருக்கு. அவர் முன்னாள் ஒரு தேவதை தோன்றியது. இந்த வடிவை உருவாக்க ,நீங்கள் தேவைக்கும் அதிகமாக நேரத்தை எடுத்து கொள்கிறீர்கள் என தேவதை இறையிடம் முறையிட்டது. இறைவனை பொறுத்தவரையில், ஆசிரியன், தொழில் நிறைய பொறுப்புகளை உள்ளடக்கியது. அவர் நிறைய இளம் உள்ளங்களை சென்றடைய வேண்டியவர். அந்த நிலையில் இறைவனின் கைகளில் ஒரு செயல் விளக்கம். வேறு என்ன? ஆசிரியர் இந்த கலவையோடு இருக்க வேண்டும் எனும் குறிப்புகள் தான். அதை தேவதையின் கைகளில் கொடுத்த இறைவன், அதை சரிபார்க்க சொன்னார். அவை இப்படி சென்றது..

  • ஆசிரியன், அனைவர்க்கும் மேம்பட்டவராய் இருக்க வேண்டும், இத்துடன் மாணவரின் நிலைக்கு இறங்கி வர கூடியவராய் இருக்க வேண்டும்.
  • அவர் தான் கற்பிப்பதற்கு சம்பந்தம் இல்லாத நூற்று என்பது விஷயங்களை செய்திட கூடியவராய் இருக்க வேண்டும்.
  • முக்கியமான விஷயங்களை தினமும் மாணவ சமூகத்துடன் பகிர்ந்து கொள்ள கூடியவராய், தினமும், சரியான நேரத்தில் இருப்பவராக .
  • தனக்கு செலவிடும் நேரத்தை விட அடுத்தவருக்கு அதிகம் செலவழிக்க வல்லவராய்..
  • என்றென்றும் தவழும் புன்னகையுடன், பிரச்சனையுடன் வலம் வரும் மாணவரையும், பெற்றோரையும் எதிகொள்ள வல்லவராய் ..
  • மற்றவர் தமக்கு துணை நிற்காத தருணத்திலும் தனது பணியை சிறப்புற செய்பவராய், தம் மாணவருக்கு இன்னொறு பெற்றோராய்..
  • மூன்று இணை கைகளை கொண்டவராய் இருக்க வேண்டும்..
ஆறு கரங்கள்.. அது முடியாத காரியம் என வியப்பு மேலிட தேவதை கேட்டது,. என்னை பொறுத்தவரையில்,. கைகளை அமைப்பதில் பிரச்சனை ஏதுமில்லை. பிரச்சனை.. மூன்று இணை கண்களை அமைப்பதில் தான் என்றது இறை .. ஒரு சாதாரண உருவாக்கத்தில், ஆறு கண்களா.. தேவதையால் நம்ப முடியவில்லை.


ஒரு இணை கண்கள், ஒரு மாணவனை அவன் எப்படி இருக்கிறானோ அப்படியே அணுகிட.. அடுத்தவர் குத்தும் முத்திரைகளை ஏற்காத பக்குவம்.. அடுத்த இணை கண்கள், எதையும் காணாமல், அந்த மாணவனை பற்றி அறிந்து கொள்ள வழிவகுப்பதாய். இந்த கண்கள், தலையின் பின்புறம் அமையும். முன்புறம் உள்ள கண்கள், அவர்களை நோக்கி, நான் உன்னை புரிந்து கொண்டேன், உன் மீது மற்ற எவரையும் விட , என்றென்றும் நம்பிக்கை கொண்டுள்ளேன், உன் மேல் பெரும் மதிப்பு கொண்டுள்ளேன் என ஒரு வார்த்தையும் உரைக்காமல் சொல்ல..

அதற்கு தேவதை இது என் வரையில் பெரிய செயல் வடிவம் போல் தோன்றுகிறது. நீங்கள் ஏன் நாளை தொடர கூடாது என்றது. அதற்கு இறை, அது முடியாது. இங்கு நான், என்னை போல் ஒருவரை உருவாக்கும் முயற்சியில் உள்ளேன். அவர்கள் நோயுற்ற தருணத்திலும் தம் பணியில் இருப்பார். தம் இதயத்தில், தம் மாணவர்க்கு என தனி இடம் கொடுத்து இருப்பார். எந்த மாணவரையும் சீர்தூக்கி பார்க்க கூடியவராய், மாணவர்களின் சிக்கல்களை புரிந்து கொள்ள கூடியவராய் இருப்பார்.

தேவதை அந்த உருவை, அந்த சிற்ப்பத்தை, இன்னும் சற்று அருகே சென்று கண்டது. இது மென் இதயம் பெற்ற உரு இல்லையா என ஆச்சர்யத்துடன் கேட்டது ? அதற்கு இறை ஆம், ஆனால் வலிமையானதும் கூட என பதில் சொன்னது. இந்த ஆசிரியன் எவ்வளவு மன திண்மை கொண்டவன் என உன்னால் அனுமானிக்க முடியாது என்றது. இந்த உரு சிந்திக்க வல்லதா? ஆம், நிஜம், அத்துடன், சரியான காரணத்துடன், சமாதானம் கொள்ளவும் மிக்கது. அந்த நிலையில் தேவதை, உருவின், கன்னத்தை தொட்ட நிலையில் ஒரு நீர் துளியை கண்டது.

இறையிடம் திரும்பி இதோ ஒரு நீர்கசிவை விட்டு விட்டீர்கள் என்றது. இது நீர்க்ஜசிவு அல்ல. இது ஒரு கண்ணீர் துளி என்றது இறை. கண்ணீர் துளி? ஏன்? - இது தேவதை.

இறை நிறைய சிந்தனையுடன் சொன்னது.. இது ஆசிரியருக்கு அடிக்கடி வர கூடியதே. இது ஒரு ஆண்டு முழுவதும் மாணவர்களுடன் இருந்து, அவர்களை வழியனுப்பி விட்டு புது மாணவரை வரவேற்கும் தருணத்தில் அரும்பும். ஒரு சில மாணவர்களை சரிவர அணுக முடியாமல் போன வருத்தத்தில் அரும்பும். அந்த மாணவரின் பெற்றோர் கொள்ளும் இறக்க உணர்வில், அவர்கள் மாணவர்கள் சாதிக்கும் சிறு சிறு விஷயங்களில் பெருமையுடன் கண்ணீர் துளிர்க்கும்,என் மாணவர்கள் புதிய சிகரங்களை, மேன்மையை அடையும் தருணங்களில் துளிர்க்கும் ,என இறை முடித்தது.

ஒரு சமயம் அரிஸ்டாட்டில் தம் மாணவருடன் ஆற்றின் கரைக்கு வந்தார். மாணவர்களை கரையில் நிற்க வைத்தவர், நான் ஆற்றின் அக்கறை வரையில் சென்று ஆற்றில் ஏதாவது சுழல்கள் உள்ளதா என பார்த்து வருகிறேன் என்றார். அவர் ஆயத்தம் கொண்ட சமயம், அவரின் ஒரு மாணவர் தண்ணீரில் நீந்தி செல்வதை கண்டார். மறு கரை வரை சென்று திரும்பிய மாணவர், குருவே, சுழல்கள் இல்லை., நாம் தைரியமாய் ஆற்றை கடக்கலாம் என்றார். அந்த நிலையில், அரிஸ்ட்டாட்டில், உன்னை சுழல்கள் எடுத்து சென்றிருந்தால் என்னவாகி இருக்கும் என்றார். அதற்கு அந்த மாணவன், இந்த அலக்சாண்டர் போனால், ஆயிரம் அலேக்சாண்டர்களை உருவாக்கும் வல்லமை உள்ளவர் நீங்கள். ஆனால் ஒரு அரிதான குருவை இழந்தால் நாங்கள் பரிதவித்து போவோம் என்றான். அப்படி ஆசிரியர் மாணவர் உறவு அமைவது நல்ல சமூகத்துக்கு புது சுவாசத்தை கொணரும்.

இந்த நன் நாளில் எனக்கு வகுப்பெடுத்த ராசாத்தி மிஸ், சாந்தி மிஸ், வாசுகி மிஸ், என்னுடைய தாத்தாவும், பத்தாம் வகுப்பு ஆசிர்யருமான பழனிசாமி, ( என்னிடம் உள்ள திறமையை கண்டறிந்தவர் ) தமிழ் அய்யா உயர்.திரு  ராஜா மாணிக்கம் , கணித ஆசிர்யர்  உயர்.திரு சங்கர பாண்டியன்,மற்றும்  டிப்ளமோ ஆசிரியர்கள் திரு. ஜெயவேல், திரு. சரவணன் , திரு. சரவணகுமார் , திரு. முருகன் ,திரு ரமேஷ்குமார், திரு. யோகராஜன் மற்றும் இன்ஜினியரிங் ஆசிரியர்கள் முனைவர்.பாஸ்கர் , திரு. செந்தில்குமார் , முனைவர்.சரவணன், திரு.கண்ணன் மற்றும் முதுநிலை வகுப்பெடுத்த திரு. சரவணகுமார், திரு. கோபால் ரத்னம், திரு. உதய குமார், திருமதி. மனிஷா மற்றும் தென்முஹில் மற்றும் கான்பூரில் முனைவர் கௌதமா மற்றும் முனைவர் அனீஸ், இங்கே பென் ஸ்டேட்லில் முனைவர் தினேஷ்  அனைவருக்கும் என் இனிய  ஆசிரியர் தின வாழ்த்துக்கள்..

இவர்கள் அனைவருக்கும் மேல், என்னை மடியில் மற்றும் பள்ளிக்கு இடுப்பில்  சுமந்து, எழுதவே தெரியாமல் இருந்த என்னக்கு அ, ஆ சொல்லிகொடுத்த என் அம்மா முருகேஸ்வரி , எவளோ குடும்ப கஷ்டம் இருந்தாலும் என்னிடம் சிறு உதவியை எதிர் பார்க்காமல் எல்லாம் பிரச்சனைகளையும் தானே தீர்த்து, என்றும் என்னக்கு பக்க பலமாக இருக்கும் அன்னை ரேவதி மற்றும் நான் விழும் போது எல்லாம் எனக்கு ஆறுதல் சொல்லி, என்னை இவளோ தூரத்திற்கு உயர்த்தி இருக்கும்  என் தந்தை முனைவர். வன்னிய ராஜன் அவர்களையும் இந்த ஆசிர்யர் கணக்கில் சேர்க்க விரும்பிகிறேன் , நல்ல விஷயத்தை சொல்லி கொடுபவர்கள்  எல்லாம் என்னை பொறுத்த வரை ஒரு நல்லா ஆசிரியரே ( அது பெற்றோர் ஆக கூட இருக்கலாம் )!

 மொத்தத்தில் இறந்த பிறகும் மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் வரிசையில் ஆசிரியர்களுக்கு முதல் இடம் உண்டு என்பது ஓர் யாதார்த்த உண்மை.

ஆனால் இன்றோ,

பள்ளியில் இருக்கும் ஆசிரியர் மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சி என்று வருகின்ற செய்திகளால் ஒட்டுமொத்த ஆசிரியர்கள் சமூகத்திற்கே தலை குனிவானது. அதே போல் முன்பு போல் ஆசிரியர்கள் பணியாற்றுவதில்லை. பள்ளியின் வகுப்பறைகளில் சரியாக சொல்லிக் கொடுக்காமல் தன்னிடம் டியூஷன் வந்து படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் சிறப்பாக சொல்லிக் கொடுக்கும் போக்கு தற்பொழுது ஆசிரியர்களிடம் காணப்படுகிறது. ஒரு வழக்கறிஞர் தவறு செய்தால் அவரை பூமியில் இருந்து ஆறடி உயரத்தில் தொங்க விட்டு விடலாம். அதே போல் ஒரு டாக்டர் தவறு செய்கிறார் என்றால் அவரை பூமியில் இருந்து எட்டடி பள்ளத்தில் புதைத்துவிடலாம். ஆனால் ஒரு ஆசிரியர் தவறு செய்தால் எட்டின அளவிற்கு எதிர்கால சந்ததிகள் பாதிக்கப்படுவர் என்று ஒரு கருத்து இருக்கிறது இதனை உணாந்து செயல்பட்டால் ஆசிரியர் பணி சிறக்கும், அதனால் நாடு, சிறக்கும்.

நான் சில புத்தகம், மற்றும் பல விஷயத்தை இணைய தளத்தில் படித்து தான் இவ்வாறு தொகுத்து வழங்க முடிந்தது. இதற்க்கு உதவிய அனைவருக்கும் என் கனிவான நன்றிகள்..

அன்புடன்
ராஜா


Fully funded PhD Student positions & Post Doc Positions

Fully funded PhD Student positions at Utah State University :

There are several  fully funded graduate student openings starting Spring 2011, in the Department of Mechanical and Aerospace Engineering at the Utah State University (http://www.engr.usu.edu/mae/faculty/kubair). The openings are in the broad area of Computational Solid Mechanics. In particular, applicants having demonstrated interest (in terms of completed projects, authorship in journal articles or coursework) in Fracture Mechanics are especially invited. Send me  (kubair@engineering.usu.edu) your detailed resume and sample publications.  

 Valid GRE + TOEFL scores are mandatory. 


PhD position in the area of mechanical design of compliant robots

Department of Robotics Brain and Cognitive Sciences - RBCS (http://www.iit.it/en/rbcs/)
Italian Institute of Technology - IIT, Genoa
Application deadline: Sept. 24th 2010

Project Description:

Conventionally designed robots are made of metal parts, bearings, levers, gears or other components that are assembled with fasteners and screws, to obtain the desired functionality. An alternative approach is to derive this functionality directly from the properties of the materials and to embed components as, for example, with shape deposition manufacturing. CAD and FE simulations are essential tools to design and optimize the details of the robot's shape.

The aim of this PhD research program is to contribute to the transition from traditional robotics (metal & screws) to new, unconventional, compliant and more robust robots made exploring alternative materials. The reference task will be manipulation; the goal of this project is to design a robot hand for the iCub (http://www.robotcub.org) featuring tuned stiffness mechanics, embedded sensorization (proprioceptive and tactile), wiring and tendon driven actuation. Appropriate controllers are also required to match and exploit natural compliance but also to compensate for non-linearity (e.g. backlash). 

Application Requirements:

The ideal candidate would have a background in mechanical engineering or related disciplines, and in particular, skills in finite element analysis/modelling, robotics, and more in general in the use of polymers in mechanical design. Any additional experience in robotics research will be considered as a plus.

Applicants should fill the on-line application form at (http://www.iit.it/en/home.html) under the "PhD School - Life and Human Technologies" Tab no later than the 24th of September 2010.

For issues regarding the on-line application procedure prospective students should contact Ms. Anastasia Bruzzone (anastasia[dot]bruzzone[at]iit [dot]it).

For questions regarding the Ph.D. project please contact Prof. Giorgio Metta (giorgio[dot]metta[at]iit[dot]it) and to Dr. Alberto Parmiggiani (alberto[dot]parmiggiani[at]iit[dot]it).

International applications are encouraged and will receive logistic support with visa issues, relocation, etc. 

About RBCS:

At RBCS top-level neuroscience research and top-level robotics research are merged by sharing fundamental scientific objectives in the field of action execution and interpretation (see RBCS list of publications as well as our international collaborations). The research team at RBCS is composed of neuroscientists, engineers, psychologists, physicists working together to investigate brain functions and realize intelligent machines and advanced prosthesis. RBCS is where technologies for implanted, in-vivo brain machine interface are developed but it is also the place where electro physiological experiments are performed to realize bi-directional direct communication between the brain and artificial systems. RBCS is where studies of how visual, haptic and tactile integration develops in normal as well as sensory-impaired children but it is also the place where the iCub humanoid robot is developed in its mechanical, electronic and software components. 

Two Ph.D. positions are open at the University of Brescia, Italy

The group of Mechanics of Solids and Structures at the  University ofBrescia is seeking two candidates for Ph.D. positions. The appointment is starting on January 1st 2011, application deadline Sept. 15th 2010.

The research topics involve: computational dynamics of solids with reference to ground motion simulation due to seismic input, multiscale computational fracture mechanics and discrete dislocation mechanics.

Interested applicants are welcome to send a resume to
Angelo.Carini@ing.unibs.it or Alberto.Salvadori@ing.unibs.it

Postdoc and PhD Student Positions available in Nano-Mechanics, Multiscale Modeling and Ultrasonic testing

Qualified applicants are welcome to send CV to gzhu@yorku.ca



Friday, September 03, 2010

தி.மு.க. ஆட்சி மீண்டும் வரலாமா? - கலெக்டர்களிடம் கருணாநிதி கேள்வி

.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு ஐந்தாவது முறையாக கலெக்டர்கள் மாநாடு நடந்திருக்கிறது. ஆண்டுதோறும் வழக்கமாக நடக்கும் சம்பிரதாயம் என்றாலும் விரைவில் தேர்தல் வருவதால், இந்த முறை கொஞ்சம் எதிர்பார்ப்பு அதிகம். தொடக்கத்தில் முதல்வர் கருணாநிதி உரையாற்றினார். அதன் பிறகு ஒட்டுமொத்த மாநாட்டை நடத்தியது தலைமைச் செயலாளர் ஸ்ரீபதிதான். முதல்வரின் மனசாட்சியாக இருந்து, அவர் கேட்க நினைத்த கேள்விகளை எல்லாம் ஸ்ரீபதிதான் எழுப்பினார் (போலீஸ் அதிகாரிகள் மாநாட்டிலும் ஸ்ரீபதியே பிரதானம்!).

''நான் தொடங்கிய திட்டமே இப்படியா?''

ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் அலாவுதீன், ''கலைஞர் வீடு வழங்கும்திட்டத்தில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில்தான் வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் எல்லா வீடுகளும் கட்டி முடிக்கப்பட வேண்டும். இதற்கு கலெக்டர்கள் ஒத்துழைக்க வேண்டும். இந்த வீடுகளைக் கட்டும் பணியில் சுயஉதவி குழுவி னரைப் பயன்படுத்த வேண்டும்!'' என்றார். மே மாதத்துக்குள்தேர்தல் அறிவிக்கப்பட்டுவிடும் என்பதால்தான் அப்படி அவர் மூலம் சொல்லப்பட்டதாம். 

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் அசோக்வர்தன் ஷெட்டி பேசும்போது,

''குடிநீருக்காக இருக்கும் திட்டங்களில் முக்கியமானது கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள்தான். ஆனால், இந்தத் திட்டங்கள் தொய்வாக நடக்கிறது. ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் இன்னும் இழுத்துக்கொண்டே போகிறது. தண்ணீரை பம்ப் செய்வதற்கு தேவையான மின்சாரம் இல்லை...'' என்றார். அப்போது குறுக்கிட்ட முதல்வர் கருணாநிதி, ''நான் இந்தத் திட்டத்தை ஆரம்பித்து ஒரு வருடம் ஓடிவிட்டது. இதற்காக தனி டிரான்ஸ்ஃபார்மர்கள் போடப்பட்டும் அதிலும் பெரிய முன்னேற்றம் இல்லையே, ஏன்?'' என்று கேள்வி எழுப்பினார். உடனே அசோக்வர்தன் ஷெட்டி, ''நிறைய பம்பிங் ஸ்டேஷன்கள் இருப்பதால் தொடர்ந்து மின்சாரம் சப்ளை செய்ய முடியவில்லை...'' என்றார். உடனே, ''இதற்காக ஒரு திட்டம் தீட்டி இருக்கிறோம். எவ்வளவு சீக்கிரத்தில் முடிக்க முடியுமோ... அவ்வளவு சீக்கிரத்தில் முடிக்கிறோம்'' என்று சொல்லி இருக்கிறார் மின்சார வாரிய சேர்மன் சி.பி.சிங்.

''கலைஞர் காப்பீடு திட்டத்தில் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்கள், அந்த மருத்துவமனையின் உரிமையாளராக இருக்கவேண்டும் என்று புதிதாக விதிமுறை சேர்த்திருப்பதால் திட்டத்தின் பயன், மக்களுக்குக் கிடைக்காமல் போகும் நிலை... மருத்துவமனையின் உரிமையாளர் எல்லோரும் எல்லா மருத்துவப் பிரிவிலும் சிறப்பு நிபுணராக இருக்க வாய்ப்பில்லை!'' என்று ஒரு பாயின்ட்டை அரசின் கவனத்துக்குக் கொண்டு வந்தார் கோவை கலெக்டர் உமாநாத். இதனை அதிகாரிகள் குறித்துக்கொண்டார்கள்.
'ஒரு ரூபாய்க்கு ஒரு அரிசி!'

ஈரோடு கலெக்டர் சுடலைக் கண்ணண் பேசும்போது ஒரு காமெடி அரங்கேறியது. ''தனியருவனுக்கு உணவில்லை என்றால் ஜெகத்தினை அழித்திடுவோம் என்று சொன்னான் பாரதி. அதற்கு வாய்ப்பே கொடுக்காமல் ஒரு ரூபாய் அரிசியை முதல்வர் கொண்டு வந்து பலரின் பசியைத் தீர்த்திருக்கிறார். ரேஷன் கடை என்றால் ஒரு காலத்தில் அரிசி மட்டுமே போடுவார்கள் என்ற நிலை இருந்தது. இன்று கோதுமை, பருப்பு, பாமாயில், மசாலா பொருட்கள், கிருஷ்ணாயில் என்று ரேஷன் கடைகள் புரவிஷன் ஸ்டோராக மாறி விட்டது. இதற்குக் காரணம் முதல்வர்தான்...'' என்று ஐஸ் வைத்தார். ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்று சொல்வதற்கு பதில், ஒரு ரூபாய்க்கு ஒரு அரிசி என்று அவர் சொல்ல அரங்கத்தில் பலத்த சிரிப்பாம். பிறகு சுதாரித்துக்கொண்டு மாற்றினாராம். ரேஷன் சமாசாரத்தையே தொடர்ந்து அவர் புகழாரமாகச் சொல்லியதைக் கேட்ட ஸ்ரீபதி, ''போதும்... இந்தத் திட்டத்தில் குறைகள் இருந்தால் சொல்லுங்கள்!'' என்று ரூட்டை மாற்றினார்.

குடித்தால்?

காஞ்சிபுரம் கலெக்டர் சந்தோஷ் மிஸ்ரா, ''குடித்து விட்டு வண்டி ஓட்டுபவர்களுக்கு மூவாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கிறோம். இதை 10 ஆயிரமாக உயர்த்த வேண்டும். அதோடு, சிறை தண்டனையும் விதிக்கலாம். பாதிப்பேர் குடித்துவிட்டுத்தான் வண்டி ஓட்டுகிறார்கள். இப்படிப்பட்டவர்களின் டிரைவிங் லைசென்ஸை ரத்து செய்தால், இன்னொரு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் போய் வேறு லைசென்ஸ் எடுத்துக்கொண்டு ஏமாற்றுகிறார்கள். கொல்கத்தாவில் இருப்பதுபோல எல்லா ஆர்.டி.ஓ. அலுவலகங்களையும் கணினியால் இணைக்க வேண்டும்.'' என்றார். அதோடு, ''எங்கள் மாவட்டத்தில் பாம்பு பிடிப்பவர்கள் அதிகமாக உள்ளனர். அவர்கள் பாம்புகளைப் பிடித்து விஷத்தை எடுத்து பாம்புகளைக் காட்டில் விட்டுவிடுகிறார்கள். இந்த விஷம் நச்சு முறிவு மருந்தாக பயன்படுகிறது. அதனால், காஞ்சிபுரத்தில் நச்சு ஆராய்ச்சி மையம் ஒன்றை அமைக்க அரசு முன்வரவேண்டும்!'' என்று கோரிக்கை வைத்தார். ''உடனே இந்த விஷயத்தை அனுப்பி வையுங்கள் மத்திய அரசு மூலம் இதற்கு முயற்சி எடுப்போம்...'' என்று சொன்னார் ஸ்ரீபதி.

''சிவகங்கை மாவட்டத்தில் பாதாள சாக்கடைத் திட்டம் ரொம்ப வருஷமாக பாதாளத்தில் கிடக்கிறது. இதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?'' என்று கேட்டார் ஸ்ரீபதி. ''சிலர் நீதிமன்றம் சென்று தடை வாங்கியதால் தடைபட்டது!'' என்று சொன்னார் மகேஷன் காசிராஜன். ''திட்டம் ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டன. இப்போது இடப் பிரச்னைப்பற்றி சொல்கிறீர்கள்... இன்னும் தாமதம் செய்யாமல் வேலையை சீக்கிரம் முடியுங்கள்'' என்றார் கறாராக. இதே போலத் தான் தஞ்சாவூர் பாதாள சாக்கடைத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது பற்றியும் விவாதம் நடந்தது.

அப்படி யாரும் போராடவில்லை!

பெரம்பலூர் கலெக்டர் விஜயகுமார், ''தேர்வில் அதிக மார்க் எடுக்கும் போட்டியில் மாணவர்கள் ஏட்டுக் கல்வியைத்தான் கற்கிறார்கள். இதற்கு மாற்று ஏற்பாட்டை நாம் செய்ய வேண்டும். பள்ளிக்கூடங்களில் இருக்கும் 'பேஸ்கட் பால்' மைதானத்தின் தரை மண் பகுதியாக இருக்கிறது. நான் கல்லூரியில் படிக்கும்போது பேஸ்கட் பால் பிளேயராக இருந்தேன். அதனால் சொல்கிறேன்... தரைப்பகுதியை சிமென்ட் தளமாக அமைக்க வேண்டும்!'' என்றதைக் கேட்டு எல்லோரும் சிரித்தார்கள். அவரே தொடர்ந்து, ''சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டத்தை பெரம்பலூர் மாவட்டத்தோடு சேர்க்க வேண்டும் என்று மக்கள் போராடி வருகிறார்கள்...'' என்று சொல்லி முடிக்கும் முன்பே அவசரமாகக் குறுக்கிட்டார் அமைச்சர் சேலம் வீரபாண்டி ஆறுமுகம். ''அப்படி யாரும் போராட்டம் எல்லாம் நடத்தவில்லை. சேலத்தில் கிடைக்கும் வசதி பெரம்பலூரில் கிடைத்துவிடுமா?'' என்றார். ''கெங்கவல்லியில் இருந்து சேலம் வருவதற்கு இரண்டு மணி நேரம் ஆகிறது. பெரம்பலூருக்கு ஒரு மணிநேரம்தான். அதனால்தான் மக்கள் கேட்கிறார்கள்!'' என்று பதில் சொன்னார் விஜயகுமார். ''மாவட்டங்களைப் பிரிக்கும் எண்ணம் எல்லாம் அரசுக்கு இல்லை1'' என்று சொல்லி விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஸ்ரீபதி.


ஒயின் ஆராய்ச்சி!

''தேனி மாவட்டத்தில் பன்னீர் திராட்சை அமோகமாக விளைகிறது. ஆனால், வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு தரம் இல்லை. இதனால், ஓயின் தயாரிக்கத் தேவையான அளவுக்கு திராட்சை பயிரிட்டால் ஏற்றுமதி கூடும். வருவாயும் பெருகும்!'' என்று சொல்லிக்கொண்டே போனார் தேனி கலெக்டர் முத்துவீரன். ஒரு கட்டத்தில் ஸ்ரீபதி குறுக்கிட்டு, ''நீங்க சொல்வது ஆராய்ச்சிக் கட்டுரை ரேஞ்சுக்கு இருக்கிறது!'' என்று கமென்ட் அடித்து செக் வைத்தார்.

முதல்வர் கிளப்பிய சந்தேகக் கேள்வி!

'கோரிக்கைகளுடன் சுவையான விவாதங்களுடன் நடந்து முடிந்த மாநாட்டில் சாதித்த விஷயம் என்ன?' என்ற கேள்விகள் எழாமல் இல்லை.

போலீஸ் அதிகாரிகளும் கலெக்டர்களும் சேர்ந்திருந்த அமர்வில்தான் உணர்ச்சிகரமாகப் பேசினார் முதல்வர் கருணாநிதி. ''இது முக்கியமான மாநாடு. காரணம் விரைவில் நாம் தேர்தலை சந்திக்கப் போகிறோம்...'' என்று அவர் பேச ஆரம்பித்தபோதே பலருக்கு விஷயம் புரிந்துவிட்டது. ''தேர்தலில் பிரச்னை கிளப்புவதற்கு சிலர் தயாராக இருப்பார்கள். அவர்களுக்கு நாம் இடம் தந்துவிடக்கூடாது...'' என்று சொன்ன முதல்வர், அடுத்துப் பேசிய பேச்சில் ரொம்பவே பொடி வைத்தார். ''உங்கள் கோரிக்கைகள் எல்லாம் நிறைவேற்றி வைக்கிறேன். நீங்கள் எண்ணிப் பார்த்த இந்த ஆட்சி தொடர வேண்டுமா... வேண்டாமா என்ற முடிவுக்கு வரவேண்டிய பொறுப்பும், கடமையும் உங்களுக்கு இருக்கிறது. ஒரு நல்ல ஆட்சியை, தி.மு.க. ஆட்சி என்று நான் சொல்லமாட்டேன். ஒரு நல்ல ஆட்சி தமிழகத்திலே நடைபெற நீங்களும், நாங்களும் சேர்ந்து பணியாற்றுவோம். அந்தப் பொருளில் உணர்ந்து நீங்கள் செயலாற்ற வேண்டும்!'' என்று முடித்தார் கருணாநிதி.

இந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் தேர்தல் சமயத்தில் தங்கள் மாவட்டங்களில் இருப்பார்கள். தி.மு.க. ஆட்சியை மீண்டும் உருவாக கலெக்டர்கள் துணை புரிய வேண்டும் என்கிற தொனியில் கருணாநிதி பேசியிருக்கிறார். 'அடுத்த ஆட்சி மீண்டும் அமைய உதவுங்கள்' என்று கலெக்டர்கள் மாநாட்டில் கருணாநிதி சொல்லி இருப்பதாக அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு கிளம்பி இருக்கிறது!

ஜூவி

Thursday, September 02, 2010

'நக்சலைட்டுகளை மக்கள் ஆதரிப்பது ஏன்?'

நல்லமலை... இந்தியாவின் ஆறு மாநிலங்களில், 160 மாவட்டங்களில் பரந்து
விரிந்திருக்கும் நக்சல் நெட் வொர்க்கின் மையப் புள்ளி!

ஆந்திராவில் செயல்பட்ட மக்கள் யுத்தக் குழுவும், மத்திய இந்தியாவில் செயல்பட்ட எம்.சி.சி. எனப்படும் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் சென்டரும் 2004-ம் வருடத்தில் 'மாவோயிஸ்ட்டுகள்' என்ற பொதுப் பெயரில் ஒன்றிணைந்தார்கள். அப்போது தங்களின் அரசியல் அஜெண்டாவாக 'ரெட் காரிடர்' என்ற திட்டத்தை அறிவித்தனர். அந்தச் சிவப்புப் பாதையின் ரூட் நல்லமலை டு நேபாள்! 

ஆந்திராவின் ராயலசீமாவில் இருக்கிறது நல்லமலை. இதைச் சுற்றிய 40 கிராமங்கள்தான் நக்சல்களின் பலம். எத்தனை இடர்கள் வந்தபோதும், இந்த மக்கள், அரசாங்கத்தைவிட மாவோயிஸ்ட்டுகளையே அதிகம் நம்புகின்றனர். 'அவர்களுக்கு மாவோயிட்ஸ்டுகள் மிகவும் பிடித்தவர்களாக இருப்பது ஏன்?' 

நல்லமலையில் இருக்கும் ஒரு நபர் கீழ் கண்டவாறு விவரிக்கிறார்


89-வது வருஷம் நல்லமலையில சில இளைஞர்கள் ஒண்ணு சேர்ந்து 'ரேடிகல் ஸ்டூடன்ட் யூனியன்', 'ரேடிகல் யூத் லீக்'னு ரெண்டு குழுக்களை ஆரம்பிச்சாங்க. ரெண்டுக்கும் ரெண்டு தலைவருங்க இருந்தாங்க. ஒருத்தர்... ஆஞ்சநேய பாபு. இன்னொருத்தர்... தொம்மல சின்ன நரசிம்மலு. இந்த ரெண்டு பேரும்தான், முதல்ல அந்த கிராமங்களுக்குள் வந்தவங்க. கிராம மக்களை ஒன்று திரட்டி, கிராம முன்னேற்றத்துக்காக சங்கம் அமைச்சாங்க. 'உழுபவனுக்கு நிலம், வேலைக்கு ஏத்த கூலி, சரிசம வாழ்க்கை' இதுதான் கொள்கை. அங்கு இருக்கும் மக்களுக்கு விவசாயம்தான் தொழில். சில பேர்  காட்டுக்குப் போய் பீடி சுத்த இலைகளைக் கொண்டுவருவார்கள்  . மூங்கில் கட்டைகளையும் கொண்டுவருவார்கள். அவர்களை ஃபாரஸ்ட்காரங்க ரொம்பத் துன்பப்படுத்துவாங்க. அவங்ககிட்ட இருந்து காப்பாத்துனது இந்த இயக்கத்துக்காரங்கதான். 

அதே சமயம்,  'காடுகளை அழிக்கக் கூடாது'ன்னு தனியா வகுப்பும் எடுப்பாங்க. இப்படித்தான் எங்களுக்கும் அவங்களுக்கும் நெருக்கம் உருவாச்சு. கொஞ்ச நாள் கழிச்சு, அவங்க கையில் துப்பாக்கி வந்துச்சு. எங்களுக்குப் பிரச்னைன்னா, எந்த நேரமும் அவங்கதான் வந்து நிப்பாங்க. நாங்க செய்யற சமையலைச் சாப்பிடுவாங்க. எங்களுக்குப் புரியாத அரசியல் எல்லாம் பேசுவாங்க!" 

இன்னோர் இளைஞர் பேசத் தொடங்கினார்... "94-ம் வருஷம் நக்சல்கள் தேர்தலைப் புறக்கணிக்கச் சொன்னாங்க. நல்லமலையைச் சுத்தி உள்ள எல்லாக் கிராமங்களும் தேர்தல் புறக்கணிப்பு முடிவை எடுத்தோம். உடனே, போலீஸ் படை ஊருக்குள் வந்து, எங்களைச் சித்ரவதை பண்ண ஆரம்பிச்சது. சிலரை ஜெயிலுக்குள்ள பிடிச்சுப் போட்டாங்க. இது இயக்கத்துக்காரங்களுக்குக் கோபத்தை உண்டுபண்ணுச்சு. 

நல்லமலை அடிவாரத்தில் பைருலூட்டி பங்களான்னு ஒண்ணு இருந்தது. ஆந்திராவில் எந்த ஆட்சி வந்தாலும் அந்தப் பங்களாவுக்குப் புதுப் பொலிவு கொடுப்பாங்க. அதை இயக்கத்துக்காரங்க குண்டு வெச்சுத் தரை மட்டமாக்கினாங்க. அடுத்த ரெண்டே நாள்ல, இயக்கத் தலைவர் ஆஞ்சநேய பாபுவை போலீஸ் சுட்டுக் கொன்றது. அப்ப இருந்துதான் இந்தப் பகுதிக்கும் நக்சல்களுக்கும் ஒரு நெருக்கமான பிணைப்பு உருவாச்சு" என்றார் அந்த இளைஞர். 

ஆந்திராவின் சூப்பர் ஹிட் திட்டமான இந்திரம்மா வீட்டு வசதித் திட்டத்தை வெலுக்கோடு கிராமத்தினர் மட்டும் சபித்துக்கொண்டு இருந் தார்கள். ஊர்க்காரர் ரங்கையா........

"இந்தப் பக்கத்தில் செயல்படுத்தப்படும் அரசாங்கத் திட்டங்களில் ஊழலே இருக்காது. காரணம், இயக்கத்துக்காரங்க மேல் உள்ள பயம். இப்போ ஒரு வருஷமா அவங்க யாரும் வர்றது இல்லை. உடனே, இந்திரம்மா வீட்டு வசதித் திட்டத்தில் 400 வீடுகள் கட்டினதாக் கணக்குக் காட்டி இரண்டு கோடி ரூபாய் கொள்ளை அடிச்சுட்டாங்க. பேப்பர்காரங்க இதைப்பத்தி எவ்வளவோ எழுதிட்டாங்க. ஒண்ணும் நடக்கலை. இயக்கம் வந்தாத்தான் சரியா வரும். வருவாங்கன் னுதான் நாங்களும் காத்துக்கிடக்கோம்" என்கிறார்.

நல்லமலை கிராம மக்களுக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்குமான இணைப்பைத் துண்டிக்க ஆந்திர அரசு ஓசைப்படாமல் ஒரு காரியம் செய்தது. ஆறு வருடங்களுக்கு முன்பு ஆந்திராவின் கொடூரக் கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்களை ஒன்றுதிரட்டி அவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கி, நல்லமலையின் அடிவாரத்தில் சித்தாபுரத்தில் குடிவைத்தது. இலவச நிலம், பாசன வசதி எல்லாம் வழங்கப்பட்டது. ஆனால், அரசாங்கம் நினைத்தது நடக்கவில்லை. அந்தப் பகுதியில் சாராய ஆறு பெருக்கெடுத்ததுதான் மிச்சம்.

மாவோயிஸ்ட்டுகளை ஆதரிக்கும் 40 கிராமங்களில் வேம்பட்டாவின் நிலை வேறு. அந்தக் கிராமத்தின் இளைஞர்களிடம் பேசினால், 100 கேள்விகள் கேட்டு பிரச்னை இல்லை என்று முடிவுக்கு வந்தவுடன்தான் பேசவே ஆரம்பிக்கிறார்கள். "99-வது வருஷம் எங்க ஊருக்கு வந்த அமைச்சர் பிடா வெங்கல்ரெட்டியை இயக்கத்துக்காரங்க சுட்டுக் கொன்னாங்க. ஊழல் செஞ்சதால், அவருக்குத் தண்டனைன்னு காரணம் சொன்னாங்க. அப்பவே எல்லா கட்சிகளுக்கும் எங்க ஊர் மேல் வெறுப்புதான். செத்துப்போன அமைச்சரோட பி.ஏ-வும் எங்க ஊர்தான். அவர் ரொம்ப நல்லவர். அவரையும் இயக்கத்துக்காரங்க கொன்னுட்டாங்க. இது எங்களுக்குப் பிடிக்கலை. 2005-ம் வருஷம் எங்க ஊர்ல ஒரு பஞ்சாயத்துப் பேச இயக்கத்துக்காரங்க எட்டு பேர் வந்தாங்க. நாங்க எல்லோரும் அவங்களைக் கட்டி வெச்சுட்டோம். பிறகு, ஊருக்கு நடுவில் நெருப்பு மூட்டி எட்டு பேரையும் அதுல போட்டு உயிரோடு எரிச்சுட்டோம். உடனே, எங்க கிராமத்தை ஒரு சாக்காவெச்சு மத்த கிராமங்களையும் தனக்குச் சாதகமா மாத்த அரசாங்கம் பல திட்டங்களைப் போட்டது. பஸ் வராத எங்க ஊர்களுக்கு புதுசு புதுசா பஸ் வந்துச்சு. வானம் பார்த்த எங்க பூமிக்கு தண்ணீர் கொண்டுவர ராஜசேகர ரெட்டி 1,000 கோடியில் திட்டம் போட்டார். இப்படி அரசாங்கத்தோட கையாளா நாங்க மாறுவது இயக்கத்துக்காரங்களுக்குப் பிடிக்கலை. 


எங்களைப் பேச்சுவார்த்தைக்கு காட்டுக்குக் கூப்பிட்டாங்க. 100 பேர் போனோம். அமைச்சரோட பி.ஏ-வை ஏன் கொன்னோம்னு சொன்னாங்க. அவர் செஞ்ச ஊழல்களை ஆதாரத்தோடு எடுத்துவெச்சாங்க. எல்லாம் முடிஞ்சு நாங்க கிளம்பற நேரம் 'எங்க ஆளுங்களை நெருப்புவெச்சுக் கொளுத்தினவங்களை மட்டும் இங்கேயே எங்ககிட்ட விட்டுட்டு மத்தவங்க போகலாம்'னாங்க. நாங்க அதை எதிர்பார்க்கலை. எட்டுப் பேரை மட்டும் பிடிச்சு வெச்சுக்கிட்டாங்க. எதுவும் செய்ய முடியாம ஊருக்கு வந்துட்டோம். அந்த எட்டுப் பேரையும் அன்னிக்கு ராத்திரியே கொன்னுட்டாங்க. உடனே, போலீஸ் காட்டுக்குள் போச்சு. ஆனா, எதுவும் பண்ண முடியலை. அதுக்குப் பிறகு, இயக்கத்துக்காரங்களோட நடமாட்டமும் குறைஞ்சுபோச்சு. ஏதோ ஒரிஸ்ஸா பார்டர்ல பிஸியா இருக்கிறதா சொல்றாங்க" என்றார்கள் அந்த இளைஞர்கள். அவர்களின் பேச்சில் இயக்கத்துக்காரர்கள் மீது கோபம் இருக்கிறதே தவிர, வெறுப்பு இல்லை! 


இப்போது ஏன் இயக்கத்துக்காரர்களின் நடமாட்டம் இல்லை? ஆத்மகூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் அதற்கு விடை சொன்னார். "வேம்பட்டா சம்பவத்துக்குப் பிறகு, இயக்கத்தினர் வெளிப்படையாக ஊருக்குள் வருவது இல்லை. அவர்களுக்குத் தேவையான தகவல்கள், உணவு, இதர பொருட்களை 40 கிராமங்களில் இருக்கும் 10 பேர் கொண்ட குழு கவனித்துக்கொண்டது. இந்த 10 பேர் இயக்கத்தில் இருப்பது அவர்களின் குடும்பங்களுக்கே தெரியாது. இந்த 10 பேரையும் போலீஸ் மோப்பம் பிடித்துவிட்டது. உடனே, இதை இயக்கமும் மோப்பம் பிடித்துவிட்டது. விளைவு, இப்போது இயக்கத்துக்காரர்கள் யாரையும் நம்புவது இல்லை. யாரையும் சந்திப்பது இல்லை. தற்காலிகமாக நல்லமலையில் இருந்து ஒரிஸ்ஸா பக்கம் முகாமிட்டு இருப்பதாகத் தகவல்" என்றார்.

இவ்வளவு விஷயங்களும் வெளிப்படையாக நடந்தபோதிலும், இந்தப் பகுதியில் ஒரு போலீஸ் ஸ்டேஷன்கூட இல்லை. ஆத்மகூரில் ஒரு காவல் நிலையம் இருக்கிறது என்றாலும், அந்த காவல் நிலையமே எக்கச்சக்க காவல் போட்டுதான் இயங்கிக்கொண்டு இருக்கிறது. நல்லமலை மாவோயிஸ்ட்டுகள் விவகாரத்தைக் கையாள்வது 100 கி.மீ. தொலைவில் இருக்கும் நந்தியால் நகர ஓ.எஸ்.டி. (ஆபரேஷன் ஸ்பெஷல் டியூட்டி) போலீஸ்தான். ஆனால், அவர்கள் தகவல் கிடைத்து நல்லமலை வந்து சேரவே குறைந்தது இரண்டு மணி நேரம் ஆகும்.
நல்லமலை வனச்சரகர் வெங்கடசுப்பையாவைச் சந்தித்தேன். "20 வருடங்களுக்குப் பிறகு, இந்த மலை அடிவாரத்தில் இப்போதுதான் வனச்சரகர் அலுவலகம் தைரியமாகத் திறக்கப்பட்டு இருக்கிறது. நான் தினமும் காடுகளுக்குள் நடந்தேதான் போய் வருகிறேன். இயக்கத்தினர் என் கண்களுக்கு அகப்படவில்லை. உள்ளே இருக்கும் பழங் குடியினரைக் கேட்டாலும் அவர் களும் இல்லை என்றுதான் சொல்கிறார்கள். 

பல வருடங்களுக்கு முன்பு நாங்கள் காட்டுக்குள் போனபோது ஒரு சில இயக்கத்தினரைப் பார்த்தோம். 'அடுப்புக்காக மரம் கொண்டுபோகும் ஏழைகளை எதுவும் செய்யாதீர்கள். ஆனால், காடுகளை அழித்துக் காசு பார்க்கும் களவாணிகளை விடாதீர்கள். அவர்களைப் பிடிக்க நாங்களே உங்களோடு வருவோம். ஏழைகளை நீங்கள் துன்புறுத்தினால், நாங்கள் சும்மா இருக்க மாட்டோம்' என்றார்கள். அவர்களை நல்லவர்கள் என்பதா, கெட்டவர்கள் என்பதா?" என்று கேட்டார். 

மக்களுக்கு அரசைவிட, மாவோயிஸ்ட்டுகளை அதிகம் பிடித்துப்போனதற்கான காரணம் என்ன? முழுமையான பதில் கண்டறிய முடியவில்லை. அந்தப் பதிலில்தான் இருக்கிறது இந்தப் பிரச்னைக்கான தீர்வு!

வ குவாட்டர் கட்டிங் - பாடல்கள் விமர்சனம்


தயாநிதி அழகிரி வழங்கும், ஓரம்போ புகழ் புஷ்கர் & காயத்ரி இயக்கம் மற்றும் ஜி வீ பிரகாஷ் இசை அமைப்பில் வ குவாட்டர் கட்டிங். இந்த படத்தின் டீசெர் பார்த்தவுடன் தமிழ் படத்தின் ஞாபகம் அனைவருக்கும் வருவது இயல்பானதே.. மிர்ச்சி சிவாவின் வசன உச்சரிப்பு மற்றும் காமெடிக்க அந்த படத்தை எத்தனை தடவும் பார்க்கலாம்.

 வ குவாட்டர் கட்டிங்- இதுக்கு என்ன அர்த்தம்.. ஒண்ணுமே புரியல.. ஆனால், பார்த்த உடன் மனதில் வித்யாசமான தலைப்பு என தென் படுகிறது.. பார்க்கலாம் எப்படி வருதுன்னு..

மொத்தம் ஐந்து பாடல்கள் மற்றும் மூன்று வசனம் இந்த பாடல் cd உடன்..


 

சார்பு  சார்பு  Ji....
Singers : G.V.பிரகாஷ்  குமார்  and லக்ஷ்மிகாந்த் 
Lyrics : குமாரராஜா
 
உன்னிப்பாக கேட்டல் இந்த பாடலில் எந்த ஒரு சரணம் இல்லாமல் வைக்கு வந்த வார்த்தையை போட்டு பாடி இருப்பார்கள். அதிலும், நடுவில் கலா மாஸ்டர் பெயர் சொல்லி கிண்டல் பண்ணுவது அழகு.
 
Saudi Basha...
Singers : G.V.பிரகாஷ்  குமார்  and  பார்கவி
Lyrics : குமாரராஜா
 
G.V.பிரகாஷ் குரல் நன்றாக உள்ளது . பார்கவி ஏற்ற இறக்கம் உடன் நன்றாக வாயில் குழப்பி ( குலவி ) பாடி இருக்கிறார்.
 
The Quarter Song : Club Mix...
Remix : Dj விஜய்  சாவ்லா 
 
படத்தை promote செய்ய இந்த பாடல் உதவும். எல்லாம் குவாட்டர் வாசம்...
 
Thediyae Thediyae...
Singers : அண்ட்ரியா
Lyricis : குமாரராஜா
 
நல்ல மெலடி.. எண்பதுகளில் வந்த பாடல்களின் தாக்கம் அதிகம். வித்தியாசமான இசை.. தமிழ் வார்த்தையுடன் ஆங்கிலத்தை சேர்த்து பாடி உள்ளார்...

Unnai Kan Thedhudhe...
Singers : G.V.பிரகாஷ்  குமார்  and கானா உலகநாதன் 
Lyricis : குமாரராஜா 
 
கேட்டவுடன் பிடித்த பாடல்.. ஆனால், அத்ரடியான குத்து இசை எதிர்பார்த்து ஏமாந்து போன்னேன்.
 
 
எல்லா பாடலில் வரும் இசை வேறு எங்கையோ கேட்ட மாதரி ஞாபகம்.. ஆனால், பிரகாஷ் நல்ல தான் செய்துள்ளார்.. படத்தை பார்க்கும் பொது தான் அனைவருக்கும் பாடல் பிடிக்கும் என எதிர்பார்கிறேன்.. கண்டிப்பாக மூன்று பாடல் படத்தில் இருந்தால் பெரிய விஷயம். நீரவ் ஷா ஒலிப்பது படத்திற்கு பக்க பலமாக இருக்கும் என நம்புகிறேன்.. குறிப்பாக சென்னை மாநகரின் மறுபக்கத்தை ( இரவை ) கட்ட போகிறார்கள்..
இந்த படத்தின் ப்ரோமோ டீசெர் பார்த்தவுடன் ஏன் நண்பன் சொன்னான், மச்சி எங்கையோ இந்த கதையை பார்த்து இருக்கிறேன், ஒரு நாள் டைம் கொடு சொல்லுறேன்.. அவன் சொன்ன படத்தின் பெயர் ஹெரால்டு அண்டு குமார் கோஸ் டூ வொயிட் கேஸ்ட்ல்' என்பதுதான்.  (ஹாலிவுட்டில்)..
 
என்னை பொறுத்தவரை சொல்ல வந்த கதையை சுவையாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்கிற விதத்தில் தான் படத்தின் வெற்றி உள்ளது..
 

Wednesday, September 01, 2010

கிருஷ்ண ஜெயந்தி



உலகில் தர்மம் குலையும் வேளையில், அதைப் பாதுகாக்க, பகவான் மானிட அவதாரம் எடுத்து வருவார். அந்த வகையில், திருமால் எடுத்த அவதாரமே கிருஷ்ணாவதாரம்.

ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று கிருஷ்ணர் பிறந்தார். 

(இந்த வருடம் (2010) அஷ்டமி திதி 1.9.2010 புதனன்று காலை 6.46க்குத் துவங்கி, 2.9.2010 வியாழனன்று காலை 6.10க்கு முடிகிறது. ரோகிணி நட்சத்திரம் 2.9.2010 வியாழனன்று காலை 10.17க்குத் துவங்கி 3.9.2010 வெள்ளியன்று காலை 9.10க்கு முடிகிறது.

ஜன்மாஷ்டமி, கோகுலாஷ்டமி,  என்று இந்தியர்களால் கொண்டாடப்படும் இப்பண்டிகை .


தமிழகத்தைத் தொடர்ந்து உ.பி.-யில்!--- பரிதாப சாவுகள் எப்போது நிற்கும்?

தடுப்பு மற்றும் சொட்டு மருந்து மரணங்கள் சில மாதங்களுக்கு முன்னால்
தமிழகத்தில் நடந்தன. இப்போது உத்தரப் பிரதேச மாநிலத்தையும் விட்டுவைக்கவில்லை. லக்னோ, அலகாபாத், ஃபதேபூர் மாவட்டங்களில் ஆறு குழந்தைகள் பரிதாப மாக உயிரிழந்துவிட்டன! 

உ.பி-யில் ஒவ்வொரு வருட மழைக் காலத்திலும் குழந்தைகளுக்கு வரும் பல்வேறு வகையான நோய்களைத் தடுக்க, நோய்த் தடுப்பு மற்றும் அம்மைத் தடுப்பு மருந்து போடப்படுகிறது. கடந்த 21-ம் தேதி லக்னோ அருகில் உள்ள மோகன்லால் கன்ச் தாலுக்காவின் கிராமங்களிலும் தடுப்பு மருந்து போடப்பட்டது. பிந்தாவா கிராமத்தில் அரசு மருத்துவப் பணியாளர்கள், இந்திரபால் என்பவரின் 10 மாதக் குழந்தை சாதிலுக்கும் தடுப்பு மருந்து போட... திடீரென காய்ச்சல். அரசு மருத்துவ மையத்துக்குக் கொண்டு செல்வதற்குள், இறந்துவிட்டது. அதேபோல், பத்மின் கேராவில் சுனில் என்பவரின் ஒன்பது மாதப் பெண்குழந்தை ரேகாவுக்குத் தடுப்பு மருந்து போடப்பட்டது. மூன்று மணி நேரத்திலே காய்ச்சலால் துவண்டு உயிர்விட்டது. அடுத்து, ராம்பூர் கடி கிராமத்தில் ஒரு வயது சத்யம்குமாரி, அகமதுபூரில் உள்ள ஒரு வயதுக் குழந்தை ஆகியவையும் இறந்தன.
இதனால் கோபம் கொண்ட பொதுமக்கள் திரண்டு, அரசு மருத்துவ சேவை மையத்தை அடித்து நொறுக்கினர். மருத்துவர்கள், பணியாளர்களுக்கும் தர்ம அடி! இந்த நிலையில், மோகன்லால் கன்ச் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்த உ.பி. அரசு, மருத்துவ விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது. அந்த விசாரணையில், 'பாதுகாத்து வைக்கப்படும் குளிர்நிலை சரியாகப் பராமரிக்கப்படாததால் அம்மைத் தடுப்பு மருந்துகளில் வைரஸ்கள் புகுந்திருக்கலாம்...' என அறிக்கை அளிக்கப்பட... மோகன்லால் கன்ச் அரசு மருத்துவ மையத்தின் மருத்துவர் உட்பட மூன்று பேர் சஸ்பெண்ட் ஆகியுள்ளனர். மேலும், சம்பவ இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட மருந்துகள் மற்றும் சிரிஞ்ச்சுகளை இமாசலப் பிரதேசத்தின் கசௌலி மற்றும் கொல்கத்தாவில் உள்ள மத்திய மருத்துவப் பரிசோதனைக் கூடங்களுக்கு அனுப்பியுள்ளனர்.

இதற்கிடையே, உ.பி-யை ஆளும் மாயாவதிக்கும் அதன் எதிர்க் கட்சியான காங்கிரஸ் கூட்டணி ஆளும் மத்திய அரசுகளுக்கும் இடையே அரசியல் ஆரம்பமாகி விட்டது. மாநில அரசின் செய்தி அறிக்கை, ''நாடு முழுவதும் உள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசுதான் போலியோ, பி.சி.ஜி., வைட்டமின் 'ஏ' போன்ற தடுப்பு மற்றும் சொட்டு மருந்துகளை சப்ளை செய்கிறது. விசாரணைக் குழுவின் முழு அறிக்கை வந்த பின், இவற்றை உ.பி-யில் பயன்படுத்துவதுபற்றி இறுதி முடிவு எடுக்கப்படும்!'' எனக் கூறியுள்ளது. இதற்கு பதில் தரும் வகையில் மருத்துவ நலத் துறையின் மத்தியச் செயலாளர் கே.சுஜாதாராவ், 'சொட்டு மருந்துகளில் எந்தக் குறைபாடுகளும் இல்லை; அதைப் பராமரித்துப் பயன்படுத்தப்பட்டதில்தான் கோளாறு!'' என்று சொல்லி இருக்கிறார். 

முதல் சம்பவத்தின்போதே காரணத்தைக் கண்டுபிடித்துச் சரிசெய்திருந்தால், பிஞ்சுகளை பாதுகாத்து இருக்கலாமே!