இன்றைய
உலகில் டேப்லெட்களின் பங்களிப்பு ஏராளம். ஆபீஸ் டாக்குமென்ட்ஸ் எடிட்டிங்,
நெட் ப்ரவுஸிங், இ-புக் வாசிப்பு என டேப்லெட்டின் உபயோகம் நாளுக்குநாள்
அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
சமீபத்தில் ஹெச்.பி நிறுவனம் தனது புதிய டேப்லெட்டான,
‘ஹெச்.பி 10 பிளஸ்’ டேப்லெட்டை (HP 10 PLUS Tablet) அமெரிக்காவில்
வெளியிட்டுள்ளது. இந்தியாவில் ரூ.17,000 விலையில் விற்பனைக்கு
வெளியிடப்போவதாக ஹெச்.பி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரூ.18,500-க்கு விற்பனையாகும் சாம்சங் கேலக்ஸி டேப் 3
டேப்லெட் ஆண்ட்ராய்டு 4.1 ஜெல்லி-பீன் இயங்குதளத்தைக் கொண்டு இயங்கும்போது
இந்த டேப்லெட், ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்-கேட் புதிய இயங்கு தளத்தைக் கொண்டு
இயங்குவது இதற்குச் சாதகமான விஷயம்.
10.1 இன்ச் HD தொடுதிரையைக் கொண்டுள்ள ஹெச்.பி 10 பிளஸ்
டேப்லெட், 1 GHz குவாட்-கோர் கோர்டெக்ஸ் A7 பிராசஸர் மற்றும் 2GB DDR3L
ரேம்மைக் கொண்டு இயங்குகிறது. ஆனால், 7 இன்ச் தொடுதிரையைக் கொண்டுள்ள
சாம்சங் கேலக்ஸி டேப் 3 டேப்லெட், 1.2 GHz டுயல் - கோர் பிராசஸர் மற்றும்
1GB ரேம்மைக் கொண்டுதான் இயங்குகிறது.
5 மெகா பிக்ஸல் பின்புற கேமரா மற்றும் 2 மெகா பிக்ஸல் -
கேமராவைப் பெற்றுள்ள இந்த டேப்லெட், 16 GB இன்டர்னல் மெமரி யோடு வருகிறது.
இதை SD கார்டு மூலம் 32 GB வரை விரிவுபடுத்திக் கொள்ளலாம். இதன் மொத்த எடை
662 கிராம் மட்டுமே. ஆனால் 3 மெகா பிக்ஸல் பின்புற கேமரா மற்றும் 1.3
மெகா பிக்ஸல் கேமராவைப் பெற்றுள்ள சாம்சங் கேலக்ஸி டேப் 3 டேப்லெட், 8 GB
இன்டர்னல் மெமரியோடு தான் வருகிறது. இதையும் SD கார்டு மூலம் 32 GB வரை
விரிவுபடுத்திக் கொள்ளலாம். Wi-Fi 802.11 b/g/n, GPS, ப்ளூ-டூத் 4.0
மற்றும் மைக்ரோ USB ஆகிய வசதிகளோடு 7700 mAh சக்தி வாய்ந்த பேட்டரியைக்
கொண்டிருப்பதும் சாதகமான விஷயமே!
செ.கிஸோர் பிரசாத் கிரண்
No comments:
Post a Comment