இந்தியாவில் பிறந்து உலகப் புகழ்பெற்ற கணித மேதை சீனிவாச இராமானுஜன் 33
அகவை முடியும் முன்னரே இறந்துவிட்டார். ஆனால் அவரின் கணித அறிவு
இந்தியர்களைத் தொட்டுத்தொடர்கிறது. தென்கொரியாவில் உள்ள சியோல் நகரில்
நடந்த சர்வதேசக் கணித மாநாட்டில் இந்திய வம்சாவளி யைச் சேர்ந்தவர்கள் இளம்
கணிதவியலாளர் விருதை வென்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கணிதத்தில் சாதனை படைத்த அறிஞர் பெருமக்க ளுக்கு அகில உலகக் கணிதக் கழகம் (ஐணணாஞுணூணச்ணாடிணிணச்டூ ச்ணாடஞுட்ச்ணாடிஞிச்டூ க்ணடிணிண ஐக்) பரிசு வழங்கிக் கௌரவித்து வருகிறது. நான்கு ஆண்டுகளுக்கொருமுறை நடை பெறும் சர்வதேசக் கணித மாநாட்டின் தொடக்க விழாவில் நோபல் பரிசுக்கு இணையான ‘பீல்ட்ஸ் பதக்கம்’ (ஊடிஞுடூஞீண் ஞுஞீச்டூ) 1936 முதல் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு சர்வதேசக் கணித மாநாடு ஆகஸ்டு 13 முதல் 21 வரை தென்கொரியாவில் உள்ள சியோல் நகரில் நடந்தது. நாற்பது வய துக்கு உட்பட்ட மிகச்சிறந்த கணிதப் பங்களிப் பைச் செத இளம் கணித வியலாளர்களுக்கு ‘பீல்ட்ஸ் பதக்கம்’ வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ‘பீல்ட்ஸ்’ பதக்கத்தை வென்ற மஞ்சுல் பார்க்கவாவும், ‘நெவன்லினா’ பரிசை வென்ற சுபாஷ் கோட் என்பவரும் இந்திய வம்சாவளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
2010ல் சர்வதேச மாநாடு ஹைதராபாத்தில் நடை பெற்றது. 2018ல் நடைபெற உள்ள அடுத்த சர்வதேச கணித மாநாடு பிரேசிலின் ரியோ-டி-ஜெனிரோ என்னும் நகரில் நடைபெற இருக்கிறது.
உலக மொழியாகிய கணிதத்துக்கு இம்மாநாடு பரிசுகளும் பெருமையும் சேர்க்கின்றன. நம்மவர்களும் அதற்கு முயலவேண்டும் என்பதே நம் அவா! நம்மிடம் இல்லாத ராமானுஜன்களா என்ன?

No comments:
Post a Comment