உங்கள் நண்பரை மூன்று இலக்கம் உள்ள தொகை ஒன்றை எழுதிக் கொள்ளச்
சொல்லுங்கள். அதை நீங்கள் பார்க்க வேண்டாம். ஒரே எண்
இரண்டு முறை வராமல் இருக்க வேண்டும். (உதாரணம் 591). அந்த எண்ணை அப்படியே
திருப்பி எழுத வேண்டும். (195). இரண்டு எண்ணில் பெரிய
எண்ணிலிருந்து சிறிய எண்ணைக் கழிக்கச் சொல்லுங்கள். (591-195 = 396).
இதையும் திருப்பி எழுத வேண்டும். (693) இந்த இரண்டு எண்களிலும்
பெரிய எண்ணிலிருந்து சிறிய எண்ணை மறுபடியும் கழிக்கச் சொல்லுங்கள். 693 -
396 = 297. இதையும் திருப்பி எழுத வேண்டும். (792) இப்போது இந்த
இரண்டு தொகைகளையும் கூட்டச் சொல்லுங்கள்.
“விடை 1089 தானே” என்று கேளுங்கள். நண்பர் அசந்து விடுவார். (792+297=1089). இந்த 1089 என்பதுதான் மேஜிக் நம்பர்!
1089 என்பதை முன்கூட்டியே தனியே எழுதிக் கொள்ளுங்கள். உங்கள் நண்பர் எந்த மூன்றிலக்க எண்ணை வேண்டுமானாலும் நினைத்து
மேற்சொன்னவாறு சரியாகச் செய்தால் இறுதி விடை 1089தான்!
ஓணாண்டிக் கவிராயர்
No comments:
Post a Comment