மொபைல்
பயன்படுத்தும் பெரும்பாலான இளைஞர்களிடம் இப்போது மிகவும் பிரபலமாக
இருப்பது இலவச ரீசார்ஜ் தரும் அப்ளிகேஷன்கள்தான். அதாவது, சில ஆப்ஸ்களை
டவுன்லோட் செய்தாலே ஆட்டோமேட்டிக்கா ஒரு குறிப்பிட்ட தொகை கைப்பேசியில்
ரீசார்ஜ் ஆகிவிடும்.
அதுமட்டுமில்லாமல் அந்த ஆப்ஸ்களை தனது நண்பர்கள், உறவினர்கள் என பிறருக்கும் அறிமுகம் செய்து வைக்கும் போது, அறிமுகம் செய்து வைப்பவரின் கைப்பேசியில் தொடர்ந்து ரீசார்ஜ் தொகை அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
டவுன்லோட் செய்பவருக்கும் ரீசார்ஜ், டவுன்லோட் செய்யச் சொல்பவருக்கும் ரீசார்ஜ் என ஒரே ஆப்ஸில் இரண்டு பலன்கள் கிடைப்பதால் இளைஞர்கள் மத்தியில் இந்த வகை ஆப்ஸ்கள் மிகவும் பாப்புலராகி வருகின்றன.
ஏன் அந்த ஆப்ஸ் நிறுவனங்கள் டவுன்லோட் செய்பவருக்கும், டவுன்லோட் செய்யச் சொல்பவருக்கும் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்கிறீர்களா, ஒரு அப்ளிகேஷன் பலரால் டவுன்லோட் செய்யப்படும் போது ஆப்ஸ்ஸை தயாரித்து வெளியிட்டவருக்கு வருமானம் அதிகரிக்கும்.
சரி தற்போது இளைஞர்கள் மத்தியில் உலா வரும் இலவச ரீசார்ஜ் தரும் ஆப்ஸ்கள் பற்றி பார்க்கலாம்.
1. எம்சென்ட் (mCent):
இலவச ரீசார்ஜ் தரும் ஆப்ஸ்களில், டவுன்லோடுக்கு அதிக அளவு ரீசார்ஜ் தரும் ஆப் இதுதான். சில சமயங்களில் இந்த அப்ளிகேஷனுக்குள் இருக்கும் ஒரு ஆப்ஸை டவுன்லோட் செய்து, அதை ஏழு நாட்கள் வரை கைப்பேசியில் வைத்திருந்தால், ஐம்பது ரூபாய் வரை ரீசார்ஜ் பெறலாம்.
மேலும் எம்சென்ட் ஆப்ஸை, எஸ்.எம்.எஸ் அல்லது வாட்ஸ்அப் மூலமாக
நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி, அவர்கள் ஏதேனும் ஓர் ஆப்ஸை பதிவிறக்கம்
செய்தால், நமக்கு நாற்பது ரூபாய் ரீசார்ஜ் இலவசம்.
2. லடூ (ladooo):
ஒரு
ஆப்ஸை டவுன்லோட் செய்தால் லடூ-வில் இருபத்தைந்து ரூபாய் வரை இலவச ரீசார்ஜ்
பெறலாம். நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி அவர்கள் ஏதேனும் ஓர் ஆப்ஸை
டவுன்லோட் செய்தால், நாம் முப்பது ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.
லடூ-வில் ஒரு ரூபாயிலிருந்து அப்ளிகேஷன்கள் ஆரம்பமாகின்றன. ஆகையால் சிறிய
அளவு ஆப்ஸ்களை மட்டும் பதிவிறக்கம் செய்வோருக்கு உகந்த ஆப் இதுவே.
டாஸ்க்பக்ஸ் (Taskbucks):
டாஸ்க்பக்ஸ் ஆப், உறுப்பினராக சேர்ந்தாலே ஐந்து ரூபாய் இலவசமாக தருகிறது.
மேலும் இதை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி, அவர்கள் ஏதேனும் ஒரு ஆப்ஸை
பதிவிறக்கம் செய்தால் நமக்கு பதினைந்து ரூபாய் கிடைக்கும். இதைக்கொண்டு
Paytm ஆப்ஸில் ரீசார்ஜ் செய்யலாம் அல்லது பொருட்கள் வாங்கலாம்.
இந்த ஆப்ஸிலும் சில ஆப்ஸ்களை ஒரு வாரம் வரை கைப்பேசியில் வைத்திருந்தால் கூடுதல் ரீசார்ஜ் உண்டு
ஃப்ரீ பைசா (FreePaisa):
இந்த ஆப்ஸில் பதிவிறக்கம் செய்தால், மோஜோக்கள் சேர்கின்றன. பதினாறு மோஜோக்கள் சேர்ந்தால் ஒரு ரூபாய். இந்த ஆப்ஸை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு 200 மோஜோக்கள் சேர்த்தால், நாம் இருபத்தினான்கு ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.
இப்படி பல ஆப்கள் உள்ளன. ப்ளே ஸ்டோரில் ஃப்ரீ ரீசார்ஜ் ஆப்ஸ் என்று தட்டினால் போதும் அனைத்தும் வந்து நிற்கும். ஆனால்... இங்குதான் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.
இந்த ஆப்கள் எல்லாம் நம்பிக்கையானவையா? இலவசம் என்றாலே, ஏதேனும் உள்குத்து இருக்குமா? இவைகளிடமிருந்து எப்படி எச்சரிக்கையாக இருப்பது?
ஃப்ரீ பைசாவில் ஒரு ஆப்ஸுக்கு ஒரு ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை ரீசார்ஜ்
பெறலாம். இதை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி, அவர்கள் ஏதேனும் இரண்டு
ஆப்ஸ்களை பதிவிறக்கம் செய்தால் நமக்கு இருபது ரூபாய்க்கு ரீசார்ஜ்
இலவசமாகக் கிடைக்கும்.
மோஜோ (Mojo):
இந்த ஆப்ஸில் பதிவிறக்கம் செய்தால், மோஜோக்கள் சேர்கின்றன. பதினாறு மோஜோக்கள் சேர்ந்தால் ஒரு ரூபாய். இந்த ஆப்ஸை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு 200 மோஜோக்கள் சேர்த்தால், நாம் இருபத்தினான்கு ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.
இப்படி பல ஆப்கள் உள்ளன. ப்ளே ஸ்டோரில் ஃப்ரீ ரீசார்ஜ் ஆப்ஸ் என்று தட்டினால் போதும் அனைத்தும் வந்து நிற்கும். ஆனால்... இங்குதான் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.
இந்த ஆப்கள் எல்லாம் நம்பிக்கையானவையா? இலவசம் என்றாலே, ஏதேனும் உள்குத்து இருக்குமா? இவைகளிடமிருந்து எப்படி எச்சரிக்கையாக இருப்பது?
“ஃப்ரீ
ரீசார்ஜ் தரும் ஆப்ஸ்களை கையாளும்போது மிகவும் கவனமுடன் இருக்க வேண்டியது
அவசியம். இந்த வகை ஆப்ஸ்களை பயன்படுத்தி ஃப்ளிப்கார்ட், அமேஸான் போன்ற
நம்பகத்தன்மையுள்ள ஆப்ஸ்களை டவுன்லோடு செய்யலாமே தவிர, பெயர் மற்றும் பயன்
தெரியாத ஆப்ஸ்களையெல்லாம் டவுன்லோடு செய்யாமல் இருப்பது நல்லது.
சிறிய அளவிலான ஆப்ஸ்தானே, டவுன்லோடு செய்து விட்டு ஃப்ரீ ரீசார்ஜ் கிடைத்தவுடன் அழித்துவிடலாம் என்று நினைத்து செய்தால் ஆபத்து உங்களுக்கே. ஆரம்பத்தில் இலவசமாக கிடைக்கும் அந்த ஆப்ஸ்களை சில காலத்திற்கு பிறம் பணம் கட்டி பயன்படுத்த வேண்டியதாகிவிடும்.
அல்லது இந்த ஆப்ஸ்களை பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது 'பிளிங்க்' ஆகும் விளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் வைரஸ்கள் ஸ்மார்ட்போன்களுக்குள் நுழைய நேரலாம். பின்னர் தகவல்கள் கூட திருடப்படலாம்.
இந்த வகை ஆப்ஸ்களை நாம் அனைவரும் ஃப்ரீயாக டவுன்லோடு செய்து கொண்டிருக்கிறோம் என்று நினைத்தால் அது முற்றிலும் தவறாகும். ஏனெனில் ஒவ்வொரு அப்ளிகேஷன்களையும் டவுன்லோட் செய்ய நாம் நமது மொபைல் டேட்டாவை செலவு செய்து கொண்டிருக்கிறோம். அதனால் தேவையான ஆப்ஸ்களை மட்டும் அதன் பயன் தெரிந்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்”

தொழில்நுட்ப வல்லுநர் பிரபு கிருஷ்ணா
No comments:
Post a Comment