அயோத்தி. பெயரை கேட்டாலே ஒரு வித பரபரப்பு ஒரு காலத்தில் ( 1992 ).. தற்பொழுது அதே விதமான பரபரப்பு...
என் தந்தை கூறியது போல, தீர்ப்பு ஹிந்துக்களுக்கு சாதகமா அமையும் என எதிர்பார்கிறேன். நம் சமுதாயம் உணர்வுகளுக்கு மிக அதிக மதிப்பு அளிக்கிறது. சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் அயோத்திய சென்று வந்தேன். மிக சிறிய ஊர். எந்த வித அடிப்படை வசதி இல்லாமல் உள்ள ஊர். இப்படி இருந்தாலும்,கான்பூர் உடன் ஒப்பிட்டு பார்கையில் நகரம் மிக சுத்தமாக உள்ளது. திரும்பிய பக்கம் எல்லாம் சின்ன சின்ன கோவில்கள், எல்லாம் சிதில் அடைந்த நிலையில். மொத்தத்தில் ஒரு ஆன்மிக நகரம்.
நான் யாருனே தெரியாத ஊரில் இரண்டு நிமிட தொலைபேசி பேச்சுக்கு ( என் தந்தையின் ) எனக்கு மற்றும் என் நண்பர்கள் இரண்டு பேருக்கும் சாப்பாடும் போட்டு கோவில்கள் அனைத்தையும் சுற்றி காண்பித்த அனைவரயும் நினைவு கூர்வதில் பெருமை படுகிறேன். அந்த அழகான சரயு நதி ஓரம் நாங்கள் சிறு பிள்ளை போல் கால் நனைத்து விளையாடியது இன்னும் நினைவில் உள்ளது
ராமர் கோவிலுக்கு நாங்கள் சென்ற பொழுது ஒரு சின்ன பேனா கூட கொண்டு போக விடவில்லை. சுமார் முன்னூறு காவலர்கள் பாதுகாப்புக்கு இருந்தார்கள். நான் இது போல ஒரு பாதுகாப்பு மற்றும் சோதனையை இதற்க்கு முன் பார்த்தது இல்லை.ராமர் சிலை வைத்து தான் அங்கு பூஜிக்க படுகிறது. அதற்கான காரணத்தை பற்றி நான் எழுத ஆரம்பித்தால் ஒரு மதத்தை பற்றியே குறை கூறும் வாய்ப்பு அதிகம். அதனால் தவிர்த்து விடுகிறேன்.
இதோ,அயோத்தி குறித்த அலாகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பு 24-ம் தேதி வருவதை ஒட்டி நாடு முழுவதும் பலவித சிந்தனைகள். மையப் புள்ளியான அயோத்தி எப்படித் தயாராகிறது?
அயோத்தி நகரம் அமைந்துள்ள உத்தரப் பிரதேச மாநிலம், உச்சகட்டப் பதற்றத்தில் இருப்பதில் வியப்பு இல்லை. மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து பொதுக் கூட்டம் மற்றும் பேரணி உள்ளிட்ட மக்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக இல்லை என்று சொல்லி போராட்டத்தில் ஈடுபடுவது யாராக இருந் தாலும், அவர்களை ஒடுக்க, அதிக அளவிலான லத்திக் கம்புகளை வாங்கிக் குவித்துள்ளது மாநில அரசு. இதுவரை இல்லாத அளவுக்கு ரூ. 72.5 கோடிக்கு லத்திக் கம்புகளை வாங்கி உள்ளனராம். 50 கோடி ரூபாய் மதிப்புக்கான கம்புகள் மாநிலக் காவல் துறைக்கும், 16 கோடி மதிப்பில் ஹோம் கார்டுக்கும், 6.5 கோடி அளவில் பிராந்திய ரக்ஷா தளக் காவலர்களுக்கும் அளிக்கப்பட்டு உள்ளன. தவிர, காவலர்களுக்குத் தேவையான ஹெல்மெட், முகம் - உடல் கவசங்களும் புதிதாக நிறையவே வாங்கப்பட்டன.
'பாதுகாப்பு ஏற்பாடுகளில் துளிக் கவனக் குறைவும் வந்துவிடக் கூடாது' என்று போலீஸ் அதிகாரிகள் கடுமையாக எச்சரிக்கப்பட்டு உள்ளனர். அயோத்தி, ஃபரிதாபாத் மற்றும் லக்னோவின் பல்வேறு இடங்களில், மத்திய துணை ராணுவப் படை அடையாள அணிவகுப்பு நடத்தியது. மேலும், பல கம்பெனி துணை ராணுவப் படைகளை அனுப்பிவைக்கும்படி, மத்திய அரசிடம் கேட்டுள்ளது உ.பி. அரசு. கிட்டத்தட்ட, 630 கம்பெனி துணை ராணுவப் படைகளைக் கேட்டுள்ளதாம். இதைத் தொடர்ந்து 40 கம்பெனி மத்திய துணை ராணுவப் படையினரும், 12 கம்பெனி 'ராப்பிட் ஆக்ஷன்' படையினரும் வந்துவிட்டனர். மேலும், 23-ம் தேதிக்கு முன்னதாக, 150 கம்பெனி மத்திய துணை ராணுவப் படையினர் அனுப்பிவைக்கப்படுவார்கள் என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.
மக்கள் மத்தியில் சகோதரத்துவத்தை வளர்க்கும் வகையில், விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளிலும் இறங்கிவிட்டது உ.பி. அரசு. 'லக்னோ, அயோத்தி உள்ளிட்ட பகுதிகளில் இரு தரப்பினரும் கலந்தே வாழ்வதால், தீர்ப்பு எப்படி இருந்தாலும் அமைதி காக்க வேண்டும்' என்று இரு தரப்புப் பெரியவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். தீர்ப்பை ஒட்டி சர்வ சமயப் பிரார்த்தனைகள் நடந்துவருகின்றன. இந்தக் கூட்டங்களில் ஒற்றுமை, அமைதியை வலியுறுத்தி அனைத்து சமயப் பெரியவர்களும் பேசி வருகின்றனர். மக்களும் அமைதி வேண்டிப் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நன்றி : விகடன் குழுமம்
No comments:
Post a Comment