இணையதளத்தில் மட்டுமே கலக்கிக்கொண்டு இருந்த கூகுள், தற்போது மொபைல், டேப்லட் என அனைத்திலும் கால்பதிக்க ஆரம்பித்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் மோட்டோ ஜி (Moto G) என்கிற மொபைல் குறித்து தெரிந்துகொள்ளலாம்.
மோட்டோரோலா நிறுவனத்தை கூகுள் வாங்கியபின் கடந்த ஆண்டு
ஜூன் மாதத்துக்குப் பிறகு இந்தியாவில் எந்த புதிய போனையும் வெளியிடவில்லை
அந்த நிறுவனம். இந்தியாவில் அந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் முடிந்தது
என்று அனைவரும் நினைத்துக்கொண்டிருக்க, வரும் ஜனவரியில் மோட்டோ ஜி என்ற
புதிய போனை இந்தியாவில் வெளியிடுகிறது மோட்டோரோலா.
மோட்டோ ஜி என்ற மொபைலை சமீபத்தில் பிரேசிலில்
வெளியிட்டது கூகுள். நம்மூரில் ஐனவரி முதல் விற்பனைக்கு வரும் என்றாலும்,
இதற்கான புக்கிங்குகள் ஆரம்பித்துவிட்டனவாம். அதற்கு காரணம், அதன் குறைந்த
விலையும் அதில் உள்ள ஆப்ஷன்களும்தான்.
4.5 இஞ்ச் நீளம் கொண்ட தொடுதிரை, இது ஐபோன் Snapdragon
400 SoC with a 1.2 GHz quad-core பிராசஸர் உள்ளது. இந்த பிராசஸர் மிகவும்
வேகமாகச் செயல்படும் பிராசஸர்களில் ஒன்றாகும். டூயல் சிம், ஆண்ட்ராய்டு 4.3
ஜெல்லிபீன் இயங்குதளம், எல்இடி ப்ளாஷ் உடன் 5 எம்பி பின் கேமரா, 1.3 எம்பி
முன் கேமரா, 1நிஙி ரேம், 2070னீகிலீ பேட்டரி, வாட்டர் ரெசிஸ்டன்ட் போன்ற
வசதிகளுடன் வருகிறது.
கூகுளின் வெளியீடு இது என்பதால் இந்த மொபைல்
இந்தியாவில் வெற்றிபெறும் என்று நம்பலாம். இது அனைத்தையும்விட, இதில்
ஆண்ட்ராய்டு கிட்கேட் ஓஎஸ் உடன் வெளிவருகிறது. இந்த மொபைல் 16 ஜிபி-க்கு
இன்டர்நெட் மெமரியும் கொண்டு வெளிவர இருக்கிறது. இதன் விலை தோராயமாக ரூ.12 -
14 ஆயித்துக்குள் இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
No comments:
Post a Comment