ஸ்மார்ட் போன்
அல்லது லேப்டாப்களில் உள்ள வீடியோக்களை டிவிகளில் ப்ளே செய்ய HDMI
கேபிள்கள்தான் பெரும்பாலான நேரங்களில் பயன்படுகின்றன. ஆனால், அனைத்து
ஸ்மார்ட் போன்களிலும் HDMI போர்டுகள் இருப்பதில்லை. இந்த சிரமத்தை போக்கவே
‘Streaming’ கருவிகளை பயன்படுத்துகிறோம். வெளிநாட்டில் தயாரான பல்வேறு
‘Streaming’ கருவிகள் இருந்தாலும், போன்/லேப்டாப்பின் ‘Local Storage’
ஃபைல்களை பயன்படுத்துவதில் பல சிரமங்கள் இருந்து வருகின்றன. அந்த சிரமங்களை
இந்திய தயாரிப்பான டீவி 2 கருவி தற்போது சரிசெய்துள்ளது.
டிசைன்!
டீவி 1 கருவிக்கும் டீவி 2 கருவிக்கும் டிசைனில் பல வித்தியாசங்களை காணலாம். டீவி 1 சற்று பருமனாக இருக்கும். ஆனால் டீவி 2, டீவி 1-ன் 70% அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மெல்லியதாகவும் கச்சிதமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ள டீவி 2, கூகுள் நிறுவனத்தின் ‘Chromecast’ கருவியைவிட அளவில் சிறியது என்பது சிறப்பம்சம். பென்-டிரைவ் போல காட்சியளிக்கும் இந்த கருவி உயர் ரக பிளாஸ்டிக்கைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
பயன்பாடு!
டீவி 2 டாங்குளை டிவியின் HDMI போர்டில் இணைத்துக் கொள்ளலாம். இந்த கருவிக்கு தேவையான மின்சாரத்தை அதில் அமைந்துள்ள micro USB போர்டு மூலம் தரவேண்டும். டீவி 2 டாங்குளை டிவியில் இணைத்த பிறகு, டீவி அப்ளிகேஷனை தேவையான கேட்ஜெட்டில் இன்ஸ்டால் செய்ய வேண்டும். பின்பு டீவி 2 மற்றும் கேட்ஜெட்டை ஒரு WiFi நெட்வொர்க்குடன் இணைக்க வேண்டும். ஒரு ஆண்ட்ராய்ட் போனை பயன்படுத்தினால் டீவி 2-வை பயன்படுத்துவது மிக சுலபம்.
சேவைகள்!
டீவி 2-வை ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டு இயங்குதளத்திலும் சுலபமாக பயன்படுத்தலாம். மேலும், லேப்டாப்புடனும் பயன்படுத்தலாம். யூடியூப் வீடியோ, முகநூல் போட்டோக்கள், மியூசிக், வீடியோ, திரைப்படங்கள் டவுன்லோடு ஆகிய அனைத்து சேவைகளையும் டீவி 2 வாடிக்கையாளர்களுக்கு தருகிறது. மேலும், ஒரே டீவி டாங்குலுடன் பல கேட்ஜெட்டுகளை இணைத்து எந்தவித சிரமமுமின்றி பயன்படுத்தலாம்.
டீவி க்ரோம் எக்ஸ்டன்ஷன்! (Teewe Chrome Extension)
டீவி 2-வின் மற்றொரு சிறப்பம்சம் இது. வாடிக்கையாளர்கள் தங்களது கூகுள் க்ரோம் ப்ரௌஸரில் ‘Teewe Chrome Extension’-யை டவுன்லோடு செய்துகொள்ளலாம். இதை பயன்படுத்தி ப்ரௌஸரில் உள்ள அனைத்தையும் ‘Screen Mirror’ என்ற சேவை மூலம் டிவியில் பார்க்கலாம்.
விலை: ஆன்லைனில் விற்கப்படும் இந்த கேட்ஜெட்டின் விலை ரூபாய் 2,399.
பிளஸ்: சேவைகள் டிசைன்.
மைனஸ்: கேம்ஸ் விளையாட பயன்படுத்த முடியாது.

போனில் Wifi direct இருந்தால் router தேவையில்லை என்பது உண்மையா??
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete