இந்த வாரம் 21-ம்
தேதி முதல் 25-ம் தேதி வரை 5 நாட்கள் வங்கி விடுமுறை ஆகும். ஆயுத பூஜை,
மொஹரம், சனி, ஞாயிறு என தொடர்ந்து 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையாக
இருக்கும். இதனால் வங்கிப் பணப் பரிவர்த்தனை செய்ய முடியாமல் மக்கள்
தவிப்பார்கள் என்கிற செய்தி வாட்ஸ்அப்பில் வேகமாக பரவி வருகிறது.
வங்கிகளின் இந்த தொடர் விடுமுறையைச் சமாளிக்க, பின்பற்ற வேண்டிய 5
விஷயங்கள் இதோ...
2. வங்கிகளுக்கு தொடர் விடுமுறை என்பதால், ஏடிஎம் மையங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால் ஏடிஎம்களில் பணம் தீர்ந்து போக வாய்ப்புண்டு. எனவே, முன்கூட்டியே பணத்தை எடுத்துவைப்பது நல்லது.
3. நீங்கள் மற்றவர்களுக்கு தரவேண்டிய அல்லது வாங்க வேண்டிய காசோலைகள் இந்த தேதிக்குள் இருந்தால், அதனை வாங்குவதையும், தருவதையும் தவிர்த்துவிடுங்கள்.
4. உங்களது இசிஎஸ் (ECS) தேதி இந்த நாட்களுக்குள் இருந்தால், வங்கிகள் உங்கள் கணக்கிலிருந்து பணத்தை எடுக்காது. விடுமுறை முடிந்த மறுநாளே உங்கள் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்படும். அதனை சமாளிக்க போதிய பணத்தை உங்கள் கணக்கில் வைத்திருக் கிறீர்களா என்பதை சரிபார்த்து கொள்ளுங்கள்.
5. வங்கி அல்லாமல் தனியாக பிறரிடம் வாங்கிய கடனுக்கான தொகையையோ அல்லது வட்டியையோ இந்த தேதிகளில் நீங்கள் செலுத்த வேண்டி இருந்தால், அதனை தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
ச.ஸ்ரீராம்
No comments:
Post a Comment