Search This Blog

Tuesday, October 20, 2015

‘‘தெறிக்க விடலாமா?’’ ‘வேதாளம்’


தீபாவளி ரேஸில் களமிறங்கும் படங்களில் அஜித்தின் 56வது படமான ‘வேதாளம்’ பல முக்கியத்துவங்களைக் கொண்டுள்ளது. இதோ டிரெய்லர்....

* அஜித் ‘வேதாளம்’ படத்தை ஒப்புக்கொண்ட பிறகு வேறு எதைப் பற்றியும் சிந்திக்கவில்லையாம். அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்து படம் வெளியே வந்த பிறகுதான் அடுத்ததைப் பற்றிச் சிந்திப்பாராம்.

* பல பெயர்களுக்குப்பின் தேர்ந்தெடுத்த ‘வேதாளம்’ என்ற பெயரும் நெகடிவ்வாக உள்ளதே என அஜித் காதுக்குப் போக ‘இனி மாற்ற முடியாது. வேண்டும் என்றால் சப்-டைட்டில் வைத்துக் கொள்ளுங்கள்’ என்றாராம் தல.
* படத்தில் அஜித்தின் இரண்டு கெட்-அப்பில் ஒன்று மொட்டைத் தலையுடனும் இன்னொன்று யூத் தாம். மொட்டைத் தலை அஜித் ஃபோர்ஷன் கொல்கத்தாவில் படமாக்கப்பட்டது.

* ‘வேதாளம்’ படத்துக்காக 20 ரௌடிகளுடன் அஜித் மோதும் இறுதிக்கட்ட சண்டைக் காட்சி சாலிகிராமம் மோகன்-செந்தில் ஸ்டூடியோவில் முடிந்ததும் ஒவ்வொருவரிடமும் அடிபட்டதா என்று அக்கறையோடு விசாரித்து எல்லோரையும் நெகிழவைத்தார் அஜித்.

* சென்னை மருத்துவமனையில் வில்லன் ‘ராகுல் தேவ்’வுடன் மோதும் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது.

* பின்னி மில்லில் ஒரு சண்டைக் காட்சி 10 நாட்களும் அஜித், லட்சுமி மேனன், சூரி காம்பினேஷனில் ஒரு காட்சியும் படமாக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் ஒரு சண்டைக் காட்சி 15 நாட்களும், சென்னை சாலிகிராமத்தில் செட் போட்டு ஒரு சண்டைக் காட்சி ஒரு வாரமும் எடுக்கப்பட்டது. படம் ஃபுல் ஆக்ஷன்.

* அஜித் தங்கையாக வரும் லட்சுமிமேனனை எதிரிகள் கடத்த அஜித் எப்படி மீட்கிறார் என்பது த்ரில்லர் காட்சியாக இருக்குமாம். அப்போது மெயின் வில்லன்களாக கபிர்துகன் சிங், ராகுல்தேவ் அஜித்துடன் மோதும் சண்டைக் காட்சிகள் அனல்பறக்குமாம்.

* அஜித் சமீபகாலப் படங்களான ‘பில்லா-2’, ‘மங்காத்தா’, ‘ஆரம்பம்’, ‘வீரம்’ போன்ற படங்களில் தங்கை சென்டிமென்ட் காட்சிகளில் நடித்ததில்லை. எனவே இப்படத்தில் ஆக்ஷன் அதிகம் என்பதால் சில காட்சிகளில் கண்கலங்கி நடித்தாராம். தாய்மார்களை அதிகம் கவரும் படம் இது.

* ‘வீரம்’ படத்தில் நடிக்கும்போதே ‘வேதாளம்’ படத்தின் கதையைச் சொல்லி ஓ.கே. வாங்கி விட்டாராம் இயக்குநர் சிவா.

* ‘வேதாளம்’ ஷூட்டிங்கின்போது மேக்-அப், காஸ்ட்யூம் எல்லாம் கலைத்துவிட்டு 15 நிமிடங்களுக்கு முன்னரே இயக்குநர் சிவாவுடன் அடுத்த சீன் பற்றி விவாதிப்பாராம் தல.

* இத்தாலி, ஸ்பெயின் போன்ற வெளிநாடுகளில் ஸ்ருதி ஹாசனோடு டூயட் பாடி வந்துள்ளார் தல. ஸ்ருதிஹாசனுக்கு வழக்கறிஞர் வேடம். கதையோடு ஒட்டிய காமெடியை அஜித் விரும்புவார். அதனால் சூரி கால் டாக்ஸி டிரைவராக அஜித்துடன் படம் முழுக்க வருகிறார். தம்பி ராமய்யா ஒரு வித்தியாசமான வாய் பேச முடியாத வேடத்தில் நடித்துள்ளார். ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ‘லொள்ளு சபா’ சுவாமிநாதன், பாலா என காமெடி பட்டாளமும் நடித்துள்ளனர்.

* அனிருத் அஜித்துக்காக தீம் மியூசிக் போட்டுள்ளார். இது இளைஞர்களின் வரவேற்பைப் பெறுமாம்.

* ஷூட்டிங்கின்போது ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் இருவரின் நடிப்பையும் பார்த்து என்கரேஜ் செய்து பாராட்டியுள்ளார் தல.

* இத்தாலியில் மிலன் நகரில் ஷூட்டிங் நடந்தபோது காய்ச்சலால் அவதிப்பட்ட ஸ்ருதிஹாசனுக்கு அஜித், வேளா வேளைக்கு மருந்து, மாத்திரை தந்து உதவியதில் நெகிழ்ந்து போனாராம் ஸ்ருதி.

* இதனால் படப்பிடிப்பு தாமதம் ஏற்பட்டபோது, ‘யாரைப் பற்றியும் ஏதும் பேசி மற்றவர் மனம் புண்படும் படி பேச வேண்டாம்’ என்று படப் பிடிப்பு குழுவினருக்கு உத்தரவிட்டாராம் அஜித்.

* சமீபத்தில் ‘வேதாளம்’ டீசர் வெளியாக, சமூக வலைத்தளங்களில் செம அதிரடி. ‘தெறிக்க விடலாமா’ என்று தல பேசும் வசனம்தான் செம ஹாட், செம ஷார்ப்.

* லட்சுமி மேனன் தீபாவளி அன்று கேரளாவில் தன் பள்ளித் தோழிகளுக்கு ‘வேதாளம்’ படம் பார்க்க டிக்கெட்டும், ட்ரீட்டும் தருவதாகச் சொல்லியுள்ளாராம்.

* இதற்கிடையில் 25 ஏழைக் குழந்தைகளின் கண் மருத்துவத்துக்கு ஒரு தொகையை உதவியாகத் தந்துவிட்டு ‘வெளியே தெரிய வேண்டாம்’ என் கண்டிஷன் போட்டுள்ளார் அஜித். அதான் தல.

No comments:

Post a Comment