Search This Blog

Saturday, October 10, 2015

ஆங்கிலத்தில் தனி ஒருவன்!


ஹாலிவுட் இயக்குநர் ராபர்ட் செமகிஸ் ஏற்கெனவே ‘ரொமான் ஸிங் தி ஸ்டோன்’, ‘பேக் தி ப்யூச்சர்’ பாகம்-1, 2, 3, ‘ஃபைட்’ போன்ற பல குறிப்பிடத்தகுந்த படங்களை இயக்கியவர். தற்போது அதையெல்லாம் முறியடிக்கும் விதமாக, தற்காலத்தில் நிகழ்த்தப்பட்ட ஒரு சாதனைச் சம்பவத்தை 3டி எபெஃக்ட்டில் உருவாக்கியுள்ள படம் ‘தி வாக்’ (The Walk).

1974ம் ஆண்டு நியுயார்க் நகரில் வேர்ல்ட் டிரேட் சென்டரின் இரட்டை கட்டடங்கள் (Twin Towers) இடையில் 1,350 அடி உயரத்தில் ஒரு கயிற்றைக் கட்டி, ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு, நடந்து சென்றார் பிரென்ச் நாட்டைச் சேர்ந்த பிலிப் பெடிட் (Philippe Petit). அந்த உண்மைச் சம்பவத்தைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

சாதனை நிகழ்த்திய பிலிப் எழுதிய Reach the Clouds புத்தகத்தை அடிப்படையாக வைத்து இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் சிறப்பு. இதில் பிலிப்பாக நடித்துள்ளார் ஜோசப் கோல்டன். பென் கிங்ஸ்லே அவரது குருவாகவும், சேர் லோட் லே போன் அவரது தோழியாகவும் நடித்துள்ளனர். 

ஒரு தனி மனிதனின் தைரியம் மற்றும் விடா முயற்சி என்பதைவிட, குறிப்பிட்ட ஒரு காரியத்தில் ஈடுபடும்போது, தணியாத தாகத்துடன் தனியொருவன் தொடர்ந்து முயன்று வெல்வதுதான் படத்தின் கரு! இது ஆங்கிலத்தில் எடுக்கப்பட்ட தனி ஒருவனின் சாதனைப் படம். முக்கியமாக இளைஞர்கள் பார்க்க வேண்டிய படம்.

-பொன்ஜி

No comments:

Post a Comment