உடம்பை பலமாக வைத்துக் கொள்வதற்காகவும், மனம் உற்சாகமாக இருப்பதற்காகவும் நீங்கள் யாவரும் விளையாட வேண்டியது அவசியம். நான் சொல்லாமலே, உங்களுக்காகவே விளையாட்டில் இஷ்டமும், ஈடுபாடும் இருக்கத்தான் செய்யும். இங்கேதான் ஜாக்கிரதை தேவை. உங்கள் படிப்புக்குச் சிறிதுகூட இடையூறு இல்லாதபடியும், பிறருக்கு எந்தவிதத்திலும் இம்சை ஏற்படாதபடியும் உங்களுடைய விளையாட்டு ஆசையை அளவுக்குள் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
விளையாட்டு என்றால் மற்றவரை ஜயித்தாக வேண்டும் என்ற ஆர்வமும், விடாமுயற்சியும் ஏற்படவே செய்யும். ஆகையினால் அதில் போட்டியும் தவிர்க்க முடியாத அம்சமாகிவிடுகிறது. அதனால் தவறில்லை. ஆனால் இது காரணமாக, ஜயிக்கிறவர்களிடம் பொறாமை எண்ணம் ஏற்பட இடம் தரக்கூடாது. விளையாட்டுப் போட்டி சண்டையாகவும், விரோதமாகவும் ஆகிவிடக் கூடாது. நம்மை ஜயிக்கிறவனை நமக்கு உதாரணமாகக் கொண்டு சிநேகம் பாராட்ட வேண்டுமேயன்றி விரோதியாகக் கருதலாகாது.
No comments:
Post a Comment