கப்பல் கவிழ்ந்தால், எல்லோருக்கும் கஷ்டம்தான். ஆனால்,
ஒரு கப்பலை வெற்றிகரமாக கவிழ்த்ததன் மூலம் தன் திறமையை உலகுக்கு எடுத்துச்
சொன்னவர்தான், ஜேம்ஸ் கேமரூன். இவர் எடுத்த டைட்டானிக் படத்துக்கு 11
ஆஸ்கார் விருது கிடைத்தது. இன்றைக்கும் முன்னணி இயக்குநராக இருக்கும்
கேமரூன், இந்த நிலையை அடைய எதிர்கொண்ட போராட்டங்கள் பலப்பல.
கனடாவில்் 1954ல் பிறந்த கேமரூனுக்கு சிறுவயது முதலே
பள்ளிப் படிப்பில் நாட்டமில்லை. பெற்றோரின் வற்புறுத்தலால் பள்ளிக்குப்
போய் வந்தார். கல்லூரியில் தனக்கு சற்றும் தொடர்பில்லாத இயற்பியல் பாடத்தை
எடுத்தார். முதல் செமஸ்டர் முடியும்போதே கல்லூரியை விட்டு வெளியேறினார்.
பல வேலைகளைத் தேடி அலைந்தார். கடைசியாக, லாரி ஓட்டுநராக
தன் வாழ்வைத் தொடங்கினார். இடையிடையே கதைகளை எழுதினார். அந்தக் கதைகளை
யாரும் சீண்டக்கூட இல்லை. 1977ம் ஆண்டு வெளியான ஸ்டார் வார்ஸ் படத்தைப்
பார்த்தபின் அவருக்கு சினிமா ஆர்வம் தொற்றிக்கொண்டது. பல சினிமா கம்பெனிகளின் கதவைத் தட்டினார். படிப்பு வராத உனக்கு படப்பிடிப்பு வருமா என்று கேட்டு விரட்டினார்கள்.
இனி பேசி பிரயோஜனம் இல்லை. ஒரு படத்தை
எடுத்துக்காட்டுவோம் என்று அறிவியல் புனைகதை ஒன்றை குறும்படமாக எடுத்தார்.
இதன்மூலம் வந்த வருமானத்தில் கேமரா, லென்ஸ் போன்றவற்றை விலைக்கு வாங்கி,
தன் சினிமா எடுக்கும் முயற்சியைத் தொடங்கினார்.
1978ல்
எடுத்த முதல் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் தன் பெயரை பதித்தார்.
அடுத்தடுத்த ஆண்டுகளில் மேலும் சில படவாய்ப்புகள் கிடைக்க, கேமரூனின்
வாழ்க்கையில் வெற்றிக்காற்று வீச ஆரம்பித்தது. ஏலியன், டெர்மினேட்டர் என
வரிசையாக ஒவ்வொரு படமும் வசூல் சாதனையில் முத்திரைப் பதிக்க, 1997ல் இவர்
எடுத்த டைட்டானிக் உச்சகட்ட புகழை கொண்டுவந்து கொட்டியது.
அதன்்பின், அவதார் என்கிற படத்தை மோன்பிக்சர்ஸ் என்கிற
அதிநவீன தொழில்நுட்பத்துடன் எடுத்து, அகில உலகத்தையே ஆச்சர்யப்பட
வைத்தார். இன்றும் புதுப்புது முயற்சிகளைத் தொடர்ந்து செய்துவரும் கேமரூன்,
தோல்வியில் தவிக்கும் அனைவருக்கும் (டைட்)'டானிக்’தான்!
வணக்கம்
ReplyDeleteஎந்தப்பொருளையும் பதர் என்று தட்டிக்கழிக்ககூடாது.
சிறு குச்சும் பல்லுக்குத்த உதவும் என்பார்கள் அதற்கு எடுத்துக்காட்டுத்தான்
ஜேம்ஸ் கேமரூன்.. அருமையாக சொன்னீர்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-