கஷ்டப்பட்டு
சம்பாதித்த பணத்தை ஒருவர் எப்போதும் கையிலும் வைத்துக் கொண்டிருக்க
முடியாது. சட்டைப் பையில் இருக்கும் பணம் எப்போது வேண்டுமானாலும் தொலைந்து
போகலாம். ஆனால், திடீரென பணம் தேவைப்பட்டால்..?
இந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வு என பொருளாதாரத்தில்
முன்னேறிய நாடுகளைச் சேர்ந்த தொழில்நுட்ப அறிஞர்கள் யோசித்தபோது
உருவானதுதான் ஏடிஎம் என்று சொல்லப்படும் ஆட்டோமேட்டிக் டெல்லர் மெஷின்.
இந்த ஏடிஎம் தோன்றிய வரவாறு சுவாரஸ்யமானது.
பட்டனைத் தட்டுவதன் மூலம் சாக்லேட் தரும் இயந்திரம்தான்
பணம் தரும் ஏடிஎம் மெஷினுக்கான அடிப்படை. 1960-களில் பார்க்லேஸ் வங்கி
லண்டனில் முதல்முறையாக இந்த ஏடிஎம் இயந்திரத்தைப் பொருத்தியது. இதன்மூலம்
வங்கிக் காசாளர் அளிக்கும் காசோலையை நகலெடுத்து கொள்ளும் இயந்திரமாக
அறிமுகப்படுத்தியது. பின்னர் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுக்கும்
வசதியையும் அறிமுகம் செய்தது.
பின்னர் வங்கிக் கணக்கில் உள்ள நிலுவைத் தொகை,
கடைசியாகச் செய்த பரிமாற்ற விவரங்கள், சிறு அறிக்கை ஆகியவற்றையும்
அறிந்துகொள்ளும் விதமாக இந்தக் கண்டுபிடிப்பு மாறியது. வங்கிக் கணக்குகள்
கணினிமயமானபின்பு, பிளாஸ்டிக் கார்டுகள் மூலம் பணம் எடுக்கும் வசதிகள்
உருவாக்கப்பட்டன. இதனை ஒருவர் மட்டுமே பயன்படுத்த ரகசிய எண்களும் அறிமுகம்
செய்யப்பட்டு பாதுகாப்பாகப் பரிமாற்றம் செய்யப்பட்டது.
இன்றைக்கு பிளாஸ்டிக் கார்டு என்பது மறைந்து, வெறும்
ரகசிய எண்ணை மட்டுமே பதிந்து, பணத்தை எடுக்கிற அளவுக்கு ஏடிஎம்
தொழில்நுட்பம் மாறியிருக்கிறது. இந்தியாவில் இந்தத் தொழில்நுப்டம்
அறிமுகமான 15 ஆண்டுகளுக்குள் அன்றாட மக்களின் தினசரி வாழ்க்கையில் தவிர்க்க
முடியாத இடத்தைப் பெற்றுவிட்டது ஏடிஎம் இயந்திரம். இன்று ஏடிஎம்மை
பயன்படுத்த கட்டணம் என்றாலும், அதற்காக அதை பயன்படுத்துவதை மக்கள்
குறைத்துக் கொள்ளவில்லை.
இன்று நீங்கள் இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும்,
உங்கள் செலவுக்குப் பணம் எடுத்துக் கொள்ளாமல் வெறும் ஒரு பிளாஸ்டிக் கார்டை
எடுத்துக்கொண்டு சென்றால், உங்களால் எதை வேண்டுமானாலும் வாங்க முடியும்.
இந்த 'எனி டைம் மணி’ மூலம் நமக்குக் கிடைக்கும் சந்தோஷத்துக்கு அளவே இல்லை!
ச.ஸ்ரீராம்
No comments:
Post a Comment