இன்று நாம் ஓர்
ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குச் செல்ல வேண்டும் என்றால், யாரிடமும்
வழிகேட்பதே இல்லை. நம்மிடம் உள்ள செல்போனில் மேப் ஆப்ஸ்களுக்குள் புகுந்து,
நாம் செல்லும் இடத்தைக் குறிப்பிட்டால், நாம் செல்ல வேண்டிய வீட்டு வாசல்
வரை வழிகாட்டிவிடு கின்றன.
இந்த நவீன ஆப்ஸ்கள் கண்டுபிடிப் பதற்கு முன்பே மனிதர்கள் தங்கள் பயணங்களைச் சரியாக மேற்கொண்டார் கள் என்றால், அதற்குக் காரணம் காம்பஸ் எனும் திசைகாட்டிதான்.
கி.மு இரண்டாம் நூற்றாண்டில் சீனாவில் காந்த ஊசிகளைப் பயன்படுத்தி வழிகளைக் கண்டறிந்துள்ளனர். இந்தியாவில், நான்காம் நூற்றாண்டில் சுற்றுலாப் பயணிகள் பயணிக்க இந்தத் திசைகாட்டி பயன்படுத்தப்பட்டுள்ளது. காந்தம் வடக்கு, தெற்காகத் திசை காட்டும். அதற்குப் பக்கவாட்டில் கிழக்கு, மேற்கு திசைகளைக் கணித்து அது காட்டும் கோணத்தில் பயணித்துச் சரியான இலக்கை பயணிகள் அடைந்துள்ளனர்.
இந்தியர்கள் ஐரோப்பா வரை சென்று போரிட்டதற்கும், வாஸ்கோடகாமா இந்தியா வந்ததற்கும்கூட இந்தத் திசைகாட்டிதான் முக்கியக் காரணம். பெரிய நாடுகளையும், இயற்கை வளங் களையும் கண்டறிய இந்தத் திசைகாட்டி தான் பயன்பட்டது. பின்னர் காலப்போக்கில் இந்தக் காந்த ஊசி திசைகாட்டிகள் சூரியசக்தியில் இயங்கும் வகையிலும், ரேடியோ கதிர்களைக் கொண்டும் இயங்கும் விதத்திலும் மாறின.
தொழில்நுட்ப வளர்ச்சியில், இணையத்தில் புகுந்த உலகம் இந்தப் பழைமையான கருவியைப் பயன்படுத் துவது குறைந்தது. அதனால் இந்தக் கருவி கணினி செல்போனுக்குள் நுழைந்து இணையத்தோடு இணைந்த திசைகாட்டி மேப் ஆப்ஸ்களாக மாறியது.
இன்றைக்கு சென்னையில் இருந்து கொண்டு டெல்லிக்குச் செல்ல வேண்டும் எனில், எவ்வளவு கி.மீ பயணிக்க வேண்டும், இடையே எத்தனை ஊர்களைக் கடந்து செல்ல வேண்டும், விமானம், ரயில், கார் ஏன் நடந்துசென்றால் எத்தனை மணி நேரத்தில் செல்லலாம் என்று கணித்துச் சொல்லிவிடுகின்றன இந்த நவீன திசைகாட்டிகள். வாழ்க்கை யில் இக்கட்டான சூழலில் யாராவது வழிகாட்டுவார்களா என்பதுபோல் வழிதெரியாமல் இருக்கும் பலருக்கு இந்தத் திசைகாட்டி எனும் கண்டுபிடிப்பு தான் வழிகாட்டியாக உள்ளது.

ச.ஸ்ரீராம்
No comments:
Post a Comment