பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில், லூமியாவுக்கு என ஒரு தனி ரசிகர் வட்டம்
உருவாகிறது. ஸ்மார்ட்போன் மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமாக விண்டோஸ் ஆபரேட்டிங்
சிஸ்டம் பக்கம் சாய்வதை மைக்ரோசாஃப்ட் உணர்ந்திருப்பதை, இதன் விலைகளை
வைத்தே புரிந்துகொள்ளலாம். லூமியா 532 டூயல் சிம் போன் - 6,499
ரூபாய்க்கும், லூமியா 435 போன் - 5,999 ரூபாய்க்கும் விற்பனைக்கு
வந்துள்ளன. லூமியா 532 போனில் 4 இன்ச் ஸ்க்ரீன், 5 மெகா பிக்ஸல் பின்பக்க
கேமரா, 0.3 மெகா பிக்ஸல் முன்பக்க கேமரா, 800x480 ரெசல்யூஷன் டிஸ்ப்ளே, 1
GB RAM மெமரி, 8 GB ஸ்டோரேஜுடன், 1.2GHz டூயல்-கோர் குவால்காம்
ஸ்நாப்டிராகன் 200 புராசஸர் கொண்டுள்ளது. விண்டோஸ் போன் 8.1 ஆபரேட்டிங்
சிஸ்டம், லூமியா டெனிம் அப்டேட்டுடன் போனின் உயிராக இயங்குகிறது. லூமியா
435 போனில், டூயல் சிம் மாடலை மட்டுமே இங்கு விற்பனைக்குக்
கொண்டுவந்திருக்கிறது மைக்ரோசாஃப்ட். 532 போன் போலவே, லூமியா டெனிம்
அப்டேட்டுடன் விற்பனையாகிறது 435. இரண்டு போன்களின் மெமரி வசதி ஒன்றுதான்.
இதில் 2 மெகா பிக்ஸல் பின்பக்க கேமராதான் உள்ளது. இதுதான் இந்த இரண்டு
போன்களுக்கும் உள்ள பெரிய வித்தியாசம். மேலும், இதில் லூமியா செல்ஃபி
அப்ளிகேஷன் உண்டு. 532 மாடலில் இது இல்லை.
இந்தியாவில் internet.org
‘அனைவருக்கும் இன்டர்நெட்’ என்ற நோக்கத்துடன் இயங்கும் இன்டெர்நெட்.ஆர்க் அமைப்பு, ரிலையன்ஸ் உதவியுடன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. ஃபேஸ்புக் ஆரம்பித்துவைத்த internet.org அமைப்பும், ரிலையன்ஸ் நிறுவனமும் இணைந்து இந்தச் சேவையை ரிலையன்ஸ் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் கொடுக்க ஆரம்பித்துள்ளன. இதன் மூலம் ஃபேஸ்புக், ட்விட்டர், தேடுதல் தளமான பிங் உள்பட 40 வலைதளங்களை இலவசமாக ப்ரவுஸ் செய்ய முடியும்.
மைக்ரோசாஃப்ட்

No comments:
Post a Comment