டாப் பணக்கார மாடல்!
ஜிசெல் புன்ட்சென் (Gisele bundchen) ... உலகின் டாப் பணக்கார மாடல். பொதுவாக, பிரேசில் பெண்கள் உலக மாடலிங் மேடைக்கு வருவார்கள், போவார்கள் அவ்வளவுதான். ஆனால், இவரின் வருகை, பிரேசில் மாடலிங் உலகில் மாற்றங்களை கொண்டு வந்தது என்றே கூறலாம். 90-களின் துவக்கத்தில் தன் மாடலிங் பயணத்தைத் தொடங்கிய ஜிசெல், 'உலகின் தலை சிறந்த மாடல்’ என்ற இடத்தை சமீப ஆண்டுகளாக யாருக்கும் விட்டுக் கொடுக்கவில்லை. 'உலகின் அதிக சம்பளம் வாங்கும் மாடல்’ என 2014-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட இவரது பெயர், இப்போது வரை வேறொரு பெயரால் மாற்றப்படவில்லை. மாடல் உலக வரலாற்றிலேயே அதிகபட்சமாக 47 மில்லியன் டாலர்களை, சென்ற வருடம் அசால்டாக சம்பாதித்தவர். நடிகை, தயாரிப்பாளர், ஐ.நா அமைப்பின் சுற்றுச்சூழலுக்கான நல்லெண்ணத் தூதர் எனப் பன்முகங்களும் கொண்டவர். மாடர்ன் பெண்ணியம் மற்றும் இயற்கை அழகுக்காக கடந்த ஆண்டின் சிறந்த பெண்ணாக, சேனல் 5 தொலைக்காட்சி நிறுவனம், இந்த 34 வயதுப் பெண்ணைத் தேர்வு செய்திருக்கிறது!
பேனா பெண்!
இ.எல்.ஜேம்ஸ்... உலகின் அதீத மனதைரியப் பெண் என்றே கூறலாம். பெண்களில் 90 சதவிகிதம் பேர் 'செக்ஸ்’ என்ற வார்த்தையைக் கூட உபயோகிக்க யோசிக்கும் உலகில், அதையே தன் நாவலுக்கான கருவாகக்கொண்டு புரட்சி செய்தவர். 2011-ல் வெளியான '50 ஷேட்ஸ் ஆஃப் கிரே’ என்ற இந்த நாவல்தான், இங்கிலாந்து புத்தக வரலாற்றிலேயே விரைவாக விற்றுத் தீர்ந்த நாவல். நம்மூரில், ஆண்கள்கூட இந்தப் புத்தகத்தை படிப்பதை வெளியில் சொல்ல யோசிக்கும் மனப்போக்கு இருக்கும் நிலையில், ஒரு பெண்ணாக அதை எழுதியதுடன், இதுவரை மூன்று பாகங்களை வெளியிட்டுவிட்டார். '50 ஷேட்ஸ் ஆஃப் கிரே’ என்ற பெயரிலேயே இது ஹாலிவுட் படமாகவும் வெளியாகிவிட்டது. சென்ற வருடத்தின் அதிகப் பார்வையாளர்களைக் கொண்ட டிரெய்லர், இப்படத்தினுடையதே! நம்மூரில் படத்துக்கு தடா போட்டுவிட்டார்கள். அந்த அளவுக்கு அந்தரங்கம் சொட்டும் நாவலை எழுதிய இ.எல்.ஜேம்ஸ்க்கு, வயது 51. இரு டீன்ஏஜ் மகன்கள் இருக்கிறார்கள்!
அரச குடும்பத்து அழகி!
கேட் மிடில்டன்... இங்கிலாந்து அரண்மனையின் இளவரசி. மறைந்த இளவரசி டயானாவுக்கு மருமகள். வாழும் இளவரசிகளில் அழகியாகவும், சிறந்தவராகவும் அறியப்படும் கேட், 2001-ல் இளவரசர் வில்லியம் சார்லஸுடன் நட்பு கொண்டார். 2010-ல் திருமண நிச்சயம். 2011-ல் திருமணம். இப்போது இந்த இளம் மம்மியின் கைகளில் ஒன்றரை வயதுக் குட்டி இளவரசன் ஜார்ஜ். பிரிட்டன் மற்றும் அமெரிக்க ஃபேஷன் உலகின் தற்போதைய மாற்றங்களில் பெரும்பங்கு மிடில்டனுடையது. 'கேட் மிடில்டன் எஃபெக்ட்’ என, 2010-க்கு பிறகு ஆரம்பித்த இந்த டிரெண்ட், இப்போது வரை தொடர்கிறது. மிடில்டனின் ஆடை வடிவமைப்பும், அவரின் நாகரிக பாங்கும் பல நாடுகளின் அரச குடும்பப் பெண்களுக்கே ரோல் மாடலாக அமைந்திருக்கின்றன. மேலும் 'மிடில்டன் ஃபேஷன்’ என்ற பெயரில் உருவாகும் ஆடைகள், காஸ்மெட்டிக் அயிட்டங்கள் வருடந்தோறும் குறைந்தபட்சம் ஒரு பில்லியன் அளவில் வரவை அள்ளுகின்றன!
திரைப் படைப்பாளி!

வால்ட்
டிஸ்னியின் அனிமேஷன் இயக்குநர் நாற்காலியில் அமர்ந்த முதல் பெண்...
ஜெனிஃபர் லீ. இந்த அமெரிக்கப் பெண், திரைக்கதை எழுத்தாளர் மற்றும்
இயக்குநர். படிப்பை முடித்துவிட்டு ரேண்டம் ஹவுஸ் நிறுவனத்தில் ஆடியோ
புத்தகம் மற்றும் டி.வி.டி கவர் டிசைன் பிரிவில் வேலை பார்த்தார். வால்ட்
டிஸ்னியின் 'ரெக் இட் ரால்ஃப்’ படத்துக்கு முதன் முறையாக திரைக்கதை
அமைத்தார். பிறகு, வால்ட் டிஸ்னி தயாரிப்பில் 'ஃப்ரோஸன்’ படத்துக்கு கதை,
திரைக்கதை எழுதி, இயக்கினார். சென்ற வருட ஆஸ்கர் விருதுப் பட்டியலில்,
இரண்டு விருதுகளைத் தட்டிய படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 43 வயதாகும்
லீ, தற்போது 'ஃப்ரோஸன் ஃபீவர்’ என்ற தன் குறும்படத்தின் வேலைகளில்
மும்முரமாக இருக்கிறார்!
ஷாலினி நியூட்டன்
No comments:
Post a Comment