2015-2016-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் அருண்
ஜெட்லி வருமான வரி வரம்பை உயர்த்தவில்லை என்றாலும், சிற்சில வகையில் வரிச்
சலுகைகளை வழங்கி நடுத்தர வர்க்கத்தினரிடம் சேமிப்பை அதிகரிக்க நடவடிக்கை
எடுத்திருக்கிறார்.
கடந்த ஆண்டு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் அடிப்படை வருமான வரி
வரம்பில் ரூ.50,000, 80சி பிரிவு முதலீட்டில் ரூ.50,000, வீட்டுக் கடன்
திரும்பக் கட்டும் வட்டியில் ரூ.50,000 என மொத்தம் ரூ.1.5 லட்சம்
ரூபாய்க்கு சலுகை களை அறிவித்தார். அந்தவகையில் அடிப்படை வருமான வரம்பு
ரூ.2.5 லட்சத்தி லிருந்து குறைந்தபட்சம் ரூ.3 லட்சமாகவா வது உயர்த்துவார்
என மாதச் சம்பளக் காரர்கள் பெரிதாக எதிர்பார்த்தனர். ஆனால், வருமான வரி
விலக்கு வரம்பு உயர்த்தப்படாதது மாதச் சம்பளதாரர்களுக்குப் பெரும்
ஏமாற்றத்தை அளித்துள்ளது.
வருமான வரிவிலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை என்றாலும், பெண் குழந்தைகள்
சேமிப்புத் திட்ட வருமானத்துக்கு வரிச் சலுகை, போக்குவரத்துப் படிக்கான
சலுகை தொகை இருமடங்காக உயர்வு, புதிய பென்ஷன் திட்டத்தில் கூடுதல் சலுகை,
ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிரீமியச் சலுகை உயர்வு என சில வரிச் சலுகைகளை நிதி
அமைச்சர் அறிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:
பென்ஷன் முதலீட்டுக்கு கூடுதல் சலுகை!
80சிசிசி பிரிவின் கீழ் இன்ஷூரன்ஸ் நிறுவனங் களின் பென்ஷன் திட்டங்
களில் மேற்கொள்ளப்படும் முதலீட்டுக்கு ரூ.50,000 கூடுதலாக வரிச் சலுகை
அளிக்கப்படும். அதாவது, முதலீட்டு வரம்பு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.1.5
லட்சமாக அதிகரிக்கப் பட்டுள்ளது.
இதுதவிர, 80சிசிடி பிரிவின் கீழ் தேசிய பென்ஷன் சிஸ்டம் மூலம்
செய்யப்படும் முதலீட்டில் கூடுதலாக ரூ.50,000-க்கு வரிச் சலுகை அளிக்கப்பட
உள்ளது.
சொத்து வரி நீக்கம்!
ரூ.30 லட்சத்துக்குமேல் நிகர சொத்து மதிப்பு இருந்தால், அதற்கு சொத்து வரி, சொத்து மதிப்பில் 1% வரி வசூலிக்கப்பட்டது.
இதற்கு பதில், ரூ.1 கோடி ரூபாய்க்குமேல் ஆண்டு வருமானம் உள்ள பெரும்
பணக்காரர்களுக்கு (சூப்பர் ரிச்) கூடுதலாக சர்சார்ஜ் 2% விதிக்கப்படுகிறது.
இந்த 2% கூடுதல் சர்சார்ஜ் மூலம் மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ.9000 கோடி
வருமானம் கிடைக்கும்.
குறிப்பு: இந்த 2% சர்சார்ஜ்-ஐ சேர்த்தால் ரூ.1 கோடிக்கு மேல் ஆண்டுக்கு
சம்பாதிக்கும் பெரும் பணக்காரர்கள் மொத்தம் 12% சர்சார்ஜ் கட்ட வேண்டும்.
ரியல் எஸ்டேட்!
* உள்நாட்டில் கறுப்புப் பணப் புழக்கத்தைக் குறைக்க மற்றும்
கட்டுப்படுத்த நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பினாமி பரிமாற்றம்
(தடுப்பு) மசோதா கொண்டு வரப்படும். இதன்மூலம் ரியல் எஸ்டேட் துறையில்
கறுப்புப் பணப் புழக்கம் கட்டுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த பத்து ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் துறை அசூர வேகத்தில் வளரக் காரணம்
கறுப்புப் பணம் இந்தத் துறையில் புகுந்ததுதான். இதனால் மனைகளின் விலை
ஏகத்துக்கும் உயர்ந்ததால், சாதாரண மக்கள் மனை வாங்க முடியவில்லை.
* வெளிநாட்டில் சொத்து இருக்கும் விவரங் களைக் குறிப்பிடவில்லை என்றால்
7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். மேலும், 300% அபராதம்
விதிக்கப்படும்.
* சொத்தை வாங்காமலே ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யும் ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட் மற்றும் இன்ஃப்ரா இன்வென்ஸ்ட்மென்ட்ஸ் டிரஸ்ட்களுக்கு மூலதன ஆதாய வரிச் சலுகை அளிக்கத் திட்டமிடப் பட்டுள்ளது.
* சுதந்திர இந்தியாவின் 75-வது ஆண்டான 2022-ம் ஆண்டுக்குள்
இந்தியாவிலுள்ள அனைவ ருக்கும் வீடு என்ற திட்டத்தை நிறைவேற்ற முயற்சி
எடுக்கப்பட இருக்கிறது.
* பெண் குழந்தைகள் பெயரில் முதலீடு செய்யும் செல்வ மகள் (சுகன்யா
சம்ரிதி) திட்டத்தில் வட்டிக்கும் இந்த பட்ஜெட்டில் வரிச் சலுகை
அளிக்கப்பட்டிருக்கிறது. அந்தவகையில் தற்போது ஆண்டுக்கு 9.1% வட்டி
வருமானம் அளிக்கும் இந்தத் திட்டம், பிஎஃப் மற்றும் பிபிஎஃப்-ஐவிட
கவர்ச்சிகரமானதாக மாறியிருக்கிறது.
வருமான வரி செலுத்துபவர்களைச் சார்ந்துள்ள செயல்பட முடியாத அளவுக்கு
ஊனமுற்றவர்களுக் கான மருத்துவச் செலவில் ரூ.50,000 வரை வருமான வரிச் சலுகை
தற்போது இருக்கிறது. இதில் கூடுதலாக ரூ.25,000 மருத்துவச் செலவுக்கு வரிச்
சலுகை அளிக்கப்படுகிறது.
வருமான வரி கட்டுபவர் ஊனமுற்ற வராக இருந்தால், ரூ.50,000 வரிச் சலுகை இருக்கிறது. இதில் கூடுதலாக ரூ.25,000 மருத்துவச் செலவுக்கு வரிச் சலுகை அளிக்கப்படுகிறது.
ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிரீமியம் (80 டி)!
* மருத்துவ காப்பீடு பிரீமியத்துக்கான வரிச் சலுகை ரூ.15,000-லிருந்து இருந்து ரூ.25,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
* மூத்த குடிமக்களுக்கு இந்தச் சலுகை ரூ.20,000-லிருந்து ரூ.30,000-ஆக உயர்த்தப்படுகிறது. இதன்மூலம் அதிக மருத்துவமனைச் செலவை சமாளிக்க முடியும்.
* ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்காத 80 வயதுக்கு மேற்பட்ட மிகவும் மூத்த குடிமக்களுக்கு ரூ.30,000 வரையிலான மருத்துவச் செலவுக்கு வரிச் சலுகை அளிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment