கரு.பழனியப்பன்.. இதற்க்கு முன் பார்த்திபன் கனவு மற்றும் பிரிவோம் சந்திபோம் என இரண்டு நல்ல படங்களை இயக்கியவர்.. இம்முறை இயக்கம் மற்றும் நடிப்பும் சேர்த்து ஒரு படத்தை தந்து உள்ளார். இவரின் படத்தில் வரும் வசனம் மிக ஷார்ப் ஆகா இருக்கும். தற்பொழுது உள்ள நடைமுறைக்கு ஏற்ப இவர் வசனம் பெரும்பாலும் வரும் .
ராம் படத்தில் இருக்கும் நாயகன் போல் இப்படித்தின் ஹீரோ. எதனையும் ஏகதாலமா பார்க்கும் மற்றும் கிண்டல் பண்ணும் மனச்சிதைவு நோய்க்கு உள்ளான நாயகனின் கதையே மந்திர புன்னகை. இவன் இப்படி ஆனதிற்கு கரன் அவன் தாய். காரணத்தை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் .பொறுமை இருந்தால் !!!!! தனக்கென தனி உலகத்தை உருவாக்கி வாழும் தனி மனிதனின் கதையே மந்திர புன்னகை!
கரு .பழனியின் குரலில் கதை தொடங்குகிறது.. இதனை தொடர்து சிதார் முகம் பாடல், அதனை படமாக்கிய விதம் மிக அருமை.
பிடித்த வசனம் படத்தில் இருந்து :
உலகத்தில் கோடி மனிதர்கள் இருகிறார்கள், ஒவ்வருக்கும் சந்தோசம், துக்கம் இருக்கும்.. நமக்குள் இருக்கும் உணர்சிகள் ஒன்றே.. என் இப்படி கேட்ட ஒவ்வரு மனிதனுக்குள்ளும் தனி கதை இருக்கும் ..
பிள்ளை இங்க பெத்தவங்க மனசு நிறைஞ்சா போதும்..
பாக்குற வேலைல என்ன ஆண் (அ) பெண் என்று ..
ஒரு காரியம் முடியும்ன முடியும்னு சொல்லணும், சும்மா இழுத்து அடிக்க கூடாது..
படிக்காதவன் மாடு மேய்ப்பான், படிச்சவன் இங்கே நாய் மேய்கிறான்..
பொறந்த நாள் தான் துன்பம், இறந்த நாளை தான் அனைவரும் சந்தோசமா கொண்டாடுறாங்க ..
எல்லா பிரச்சனைக்கும் கடைசியில் தீர்வு உண்டு..
முடியாதவர்களுக்கு மரணத்தை விட பெரிய சந்தோசம் எதுவும் இல்லை..
நம் செருப்பு தொலைந்தால் தான் அடுத்தவன் காலை பார்போம்..
காரணமே இல்லாம பிடிச்சிருந்தா அது குழந்தைகளைத்தான்..
பார்சலை ஏன் பிரிச்சு பாக்கலை?
பிரிச்சுப்பார்த்துட்டா என்ன இருக்குன்னு தெரிஞ்சிடும்.பிரிக்காம இருந்து என்ன குடுத்திருப்பான்னு ஏங்கறதுல ஒரு சந்தோசம் இருக்கு.
வெளில நாம் எங்காவது போறப்ப கண்ணாடில ஒரு தடவை நம்மை பார்த்துட்டு போகனும்,நம்மையே நமக்கு பிடிச்சாதானே மத்தவ்ங்களுக்கு நம்மளை பிடிக்கும்.
காதலிக்கறவங்களை நிறுத்தி ஏன் காதலிக்கறீங்கனு கேட்டுப்பாருங்க,யாராலும் பதில் சொல்ல முடியாது.அதுதான் காதல்.
ஏன் தாலியை கழட்டி வெச்சுட்டே?தப்பு பண்ணும்போது உறுத்துச்சா?
மேலே கூறிய வசனம் அனைத்தும் சாம்பிள் தான் .. படம் முள்ளுக்க இது போல நெறைய இருக்கு.. எனக்கு பிடித்தது அந்த வசனம் மற்றும்..
மீனாக்ஷி ஒரு நாயகி.. ஒரு ஜடம் போல வந்து போறாங்க.. சந்தானம் சில இடகளில் சிரிக்க வைக்கிறார்.. சொல்லிக்கிற மாதரி வேற எதுவும் இல்லை..
கண்டிப்பா குடும்பத்துடன் உட்கார்ந்து படம் பாக்குறது கொஞ்சம் கஷ்டம் தான்
தங்கள் பார்வையும் அருமையாக உள்ளது.. ஆனால் வெட் வெரிபிக்கேசன் தான் வெறுப்பேற்றுகிறது....
ReplyDeleteஆனால் வெட் வெரிபிக்கேசன் தான் வெறுப்பேற்றுகிறது.... ???? புரிய வில்லை சகா???
ReplyDelete