சுந்தர் சி, இவருடைய இயக்கத்தின் கீழ் வந்த அனைத்து படங்களிலும் காமெடி மிக அற்புதமா மகா இருக்கும்.. பெரிய லிஸ்டே சொல்லாம்.. கிட்ட தட்ட ஐந்து வருடங்களுக்குப் பிறகு சுந்தர் சி இயக்கியுள்ள படம் நகரம். சுந்தர் சி முதல் முதலாக நாயகனாக நடித்து வெளிவந்த படம் தலைநகரம்.அதற்க்கு அப்புறம் அவர் நடித்த பிற இயகுனர் இயக்கத்தின் படங்கள் அனைத்து படங்களையும் காலங்கள் அறியும்.. ( அட்டர் பிளாப் ).
கதை :
கத்தி எடுத்தவன் கத்தியாலதான் சாவான்!இது தான் படத்தின் கதை சுருக்கம்.. ஏற்கெனவே அவர் நடித்த தலைநகரம் படத்தின் இன்னொரு வடிவம்தான் இந்தப் படம்.
கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் ரவுடி கேட் செல்வத்தின் (சுந்தர் சி) ப்ளாஷ்பேக்காக விரிகிறது கதை.அவரே அவர் கதையை சொல்ல சொல்ல காட்சிகள் பின்னோக்கி போகிறது. சுந்தர் சி ஒரு ரவுடி. ஒரு குற்றத்துக்காக 5 வருட தண்டனையுடன் சிறைக்குப் போகும் சுந்தர் சி , தனது பழைய நண்பனும் உள்ளூர் இன்ஸ்பெக்டருமான போஸ் வெங்கட் உதவியோடு விடுதலையாகிறான்.
ரவுடியாக வாழ்ந்தவன், சிறைக்குப் போய் திருந்தி நல்லவனாக வாழ முயற்சிக்கிறான். ஹைதராபாதுக்கு வருமாறு அவனது பழைய முதலாளி பாய் அழைக்கிறார்.ஆனால் சூழ்நிலை அவனை விடாமல் குற்றவாளியாகவே வைத்திருக்கப் பார்க்கிறது. குறிப்பாக போஸ் வெங்கட் தனது சட்டவிரோத காரியங்களுக்கு செல்வத்தை கருவியாக்குகிறான்.
அப்போதுதான் அனுயா உடன் அறிமுகம் ஏற்பட்டு, இருவருக்கும் காதலாகிறது.
இதற்கிடையே, சுந்தர் சி பழைய முதலாளி பாய்க்கும் நண்பனுக்கும் ஒரு கடத்தலில் பகை முற்றுகிறது. நண்பனை காக்க செல்வம் முனைகிறபோதுதான் நண்பனின் உண்மை யான முகம் சுந்தர் சிக்கு தெரிகிறது... அவர் என்ன செய்தற் மற்றும் அவர் நினைத்த வலக்கை அமைத்து கொண்டர என்பதே நகரம் படம்.
சுந்தர் சி , நிற்கிறார். நடக்கிறார். ஓடுகிறார். மூச்சிரைக்கிறார். ஆனால் முகத்தில் ஒரு மி.மீட்டர் எக்ஸ்பிரஷன் கூட இல்லை.
வடிவேலு.படத்தின் ஹைலைட் இவர்தான். லாஜிக் பார்க்காமல் அவர் செய்யும் சேட்டைகளை ரசிக்கலாம். ஸ்டைல் பாண்டியாக மனிதர் கலக்கியிருக்கிறார். அதே காலனியில் எதிர்வீட்டில் குடியிருந்து கொண்டு இவர் விடும் காதல் அம்புகள் ( இதற்க்கு ஒரு பிளாஷ் பேக் ), நாயகியின் வீட்டு ஆன்ட்டனாவை கரெக்ட் பண்ண போகிற காட்சிகளில் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி போகிறது.
படம் முழுக்க தலைநகரம் படத்தின் சாயல் தெரிந்தாலும் விறுவிறுப்பான திரைக்கதை படத்தின் மிகப்பெரிய பலம்.
ஆனால் படம் முழுக்க செயற்கை தனம் நிறைய இருக்கு. சில நேரகளில் போர் அடிக்குது.இன்னும் நல்லா எடிட்டிங் பண்ணி இருக்கலாம்.
நகரம் - பார்க்கலாம் ஒரு முறை ...




எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுப்புட்டு வரட்டுமா...
ReplyDeleteதங்களின் பார்வை வித்தியாசமாக இருக்கிறது வாழ்த்துக்கள்..
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
http://mathisutha.blogspot.com/
நன்றி சுதா
ReplyDelete