சமீபத்தில் மோட்டோரோலா, மோட்டோ ஜி மற்றும் மோட்டோ எக்ஸ்
(இந்த இரண்டுமே 2nd Gen) ஆகிய இரு ஸ்மார்ட் போன்களை வெளியிட்டது. இது
தவிர, ‘ஹின்ட்’ என்ற ‘Wireless Earbud’ கருவியையும் வெளியிட்டுள்ளது.
பார்ப்பதற்கு சிறியதாகவும் கவர்ச்சிகரமா கவும் தோன்றும்
இந்த ‘ஹின்ட்’, ப்ளூ-டூத் மூலம் செயல்படுகிறது. இதை ஸ்மார்ட் போன்
ப்ளூ-டூத்-வுடன் இணைத்துவிடலாம். இணைத்தபின் தொலைபேசி அழைப்பு களைப்
பெறுவது, குறுந்தகவல் அனுப்புவது, மின் அஞ்சல் அனுப்புவது, அலாரம் செட்
செய்வது, கூகுள் மேப்பில் வழிகளைக் கேட்டறிவது போன்ற அனைத்து செயல்களையும்
ஸ்மார்ட் போனைத் தொடாமலே, இருந்த இடத்தில் இருந்தபடி நம் வேலைகளை செய்து
கொண்டே அனைத்து செயல் களையும் இதன் மூலம் செய்ய லாம்.
ஒரு நபரிடம் உரையாடுவது போல் ஹின்ட் கருவிக்குத்
தெரிந்த கமான்ட்களைக் கொண்டு தேவையான செயல் களை உச்சரிப்பதன் மூலமே
செய்துவிடலாம். இதற்கு 150 அடி சுற்றுவட்டாரத்தில் உங்கள் ஸ்மார்ட் போன்
இருந்தால் போதும். 100 மணி நேரம் ஸ்டாண்ட்-பை டைமுடன் வரும் இந்த ‘ஹின்ட்’
ஒரு சார்ஜர் கேஸோடு வருகிறது. இதைப் பயன்படுத்தாத நேரத்தில் இந்த சார்ஜர்
கேஸில் பொருத்தி சார்ஜ் செய்து கொள்ளலாம். சுமார் 10 மணி நேரம் இந்த சார்ஜ்
இருக்கும்.
கிஸோர் பிரசாத் கிரண்
No comments:
Post a Comment