நம் நாட்டில்
இ-காமர்ஸின் வளர்ச்சி மின்னல் வேகத்தில் சென்றுகொண்டிருக்கிறது. மென்பொருள்
மற்றும் சேவைகள் குறித்த தேசிய அளவிலான அமைப்பு (The National Association
of Software and Services) இந்தியா வில் இ-காமர்ஸ் தற்போதைய விற்பனையான
30 பில்லியன் டாலரிலிருந்து (இந்திய மதிப்பில் சுமார் 1.90 லட்சம் கோடி
ரூபாய்), 300 பில்லியன் டாலரை (சுமார் 19 லட்சம் கோடி ரூபாய்) இன்னும்
பதினைந்து ஆண்டுகளில் தொட்டுவிடும் எனத் தனது ஆய்வின் மூலம்
கணித்திருக்கிறது. உலகளவில் சீனாவுக்கு அடுத்த படியாக ஆன்லைன் வர்த்தகத்
தில் வேகமாக வளர்ந்துவரும் நாடு நம் இந்தியாதான்.
மின் வணிக நுகர்வோர்களின் எண்ணிக்கை 2013-ம் ஆண்டு இரண்டு கோடிக்கும் குறைவாகவே இருந்தது.
ஆனால், இந்த ஆண்டு ஏறக்குறைய ஆறு கோடியை எட்டக்கூடும் என இது சார்ந்த அமைப்புகள் கூறி வருகின்றன. இதே கால அளவில், மாதம் ஒன்றுக்கு 40 லட்சம் ஆர்டர்களைப் பெற்றுவந்த இந்த நிறுவனங்கள், 1.2 கோடி ஆர்டர் களைப்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
என்ன காரணம்?
இந்த அபரிமிதமான வளர்ச்சிக்கு (ஏறக்குறைய 30%) பலக் காரணங்கள். இந்தியாவில் இன்டர்நெட் உபயோகிப்பவர் களின் எண்ணிக்கை தற்சமயம் 20%. இதில் 10 சதவிகிதம் பேர் ஆன்லைன்மூலம் ஷாப்பிங் செய்கிறார்கள். சீனாவைப் பொறுத்தளவில், இன்டர்நெட் உபயோகிப்போரின் எண்ணிக்கை ஏறக்குறைய 50%. அதில் ஆன்லைனில் பொருட்களை வாங்குபவர்கள் 50%.
இந்தியாவின் ஸ்மார்ட் போன் வளர்ச்சி, மொத்த ஜனத்தொகையில் இளைஞர் களின் எண்ணிக்கை (10 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் சுமார் 35.6 கோடி) ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு முதலீட்டாளர் கள் இந்தத் தொழிலில் பணத்தை வாரியிறைத்துக் கொண்டிருக் கின்றனர்.
எதற்கு வரவேற்பு!
விற்பனை/வருமான ரீதியில் இந்திய மின் வணிகத் துறையைப் பொறுத்தவரை, ‘ஆன்லைன் டிராவல்’தான் (அதாவது, பயணம் சம்பந்தப்பட்ட சேவைகள்) முதலிடம் வகிக்கிறது. அதைத் தொடர்ந்து ரீடெயிலிங் (சில்லறை வணிகம்), நிதி சேவை கள், ஆன்லைன் வரி விளம்பரம் போன்றவை சார்ந்த நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
மின் வணிகம் மூலம் பொருட்களையும், சேவைகளையும் வாங்குவது நாளுக்குநாள் அதிகரித்து வருவதற்கான முக்கியக் காரணம், ஸ்மார்ட் போன்களின் வளர்ச்சி. 2014-ம் ஆண்டு ஆன்லைனில் பொருட் களை வாங்கியவர்களில் மொபைல் போன் செயலி மூலம் வாங்கியவர்களின் எண்ணிக்கை 11%. ஆனால், 2017-ம் ஆண்டு இது 25 சதவிகிதத்தைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குவியும் முதலீடு!
ஸ்நாப்டீல், ஃப்ளிப்கார்ட், அமேஸான் போன்ற நிறுவனங் கள் தனது இணையத்தளத்தின் மூலம் விற்பனை செய்யக்கூடிய பொருட்கள் அனைத்தையும் தள்ளுபடி விலையில் வருடம் முழுவதும் விற்பனை செய்வதன் மூலமும், வேகமாக டெலிவரி செய்வதன் மூலமும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான புதிய நுகர் வோர்களைப் பெற்று வருகின்றன. இந்த வளர்ந்துவரும் நுகர்வோர் களின் எண்ணிக்கையைக் காரணமாகக் காட்டி, நிதி நிறுவனங்களிடமிருந்து மேலும் முதலீட்டை இந்த நிறுவனங்கள் பெற்று வருகின்றன.
கடந்த சில மாதங்களில் பல ஆன்லைன்/மின் வணிக நிறுவனங்கள் பல கோடி ரூபாய்
களை முதலீடாகப் பெற்றிருக் கின்றன. அவற்றில் குறிப்பிடத் தக்கது, அர்பன்
லேடர் (ஃபர்னிச்சர் விற்பனை செய்யும் ஆன்லைன் கடை) ரூ.493 கோடி, ஷாப்க்ளூஸ்
ரூ.746 கோடி, பிக்பாஸ்கெட் ரூ.278 கோடி.
இதுபோல, இந்தியாவின் பெரிய ஆன்லைன் வணிகத் தளங்களான ஃப்ளிப்கார்ட், ஸ்நாப்டீலில் மட்டும் 3 பில்லியன் டாலர்களைப் பன்னாட்டு நிறுவனங்களும், வங்கிகளும் முதலீடு செய்துள்ளன.
ஆன்லைன் வணிகத்தில் டாலர்களைக் கொட்டும் முக்கிய நிறுவனங்கள் ரஷ்யாவைச் சேர்ந்த டிஎஸ்டி குளோபல் (DST Global), அமெரிக்காவைச் சேர்ந்த டைகர் குளோபல் (Tiger Global), ஜப்பானைச் சேர்ந்த சாஃப்ட் பேங்க் (Soft Bank), சீனாவைச் சேர்ந்த அலிபாபா போன்றவை.
இவர்கள் செய்த முதலீட்டுக்கு லாபம் கிடைக்குமா என்பது அடுத்தச் சில ஆண்டுகளில் தெரிந்துவிடும். ஒருவேளை ஜெயிக்கவில்லை எனில், 2018-ல் இவர்கள் இந்தத் துறையிலிருந்து வெளியேறத் தொடங்கிவிடு வார்கள் என்பதே இந்தத் துறையைச் சேர்ந்தவர்களின் அனுமானம்.
இ-காமர்ஸ் இன்னோவேஷன்கள்!
அமேஸான், ஃப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வணிகத்தளங்கள் பின்கோடு அல்லது ஏரியா வாரியாகச் சில சில்லறை வணிகக் கடைகள் அல்லது பெட்ரோல் பங்க்-களைத் தேர்ந்தெடுத்து அங்குப் பொருட்களை டெலிவரி செய்ய, ஆர்டர் செய்தவர்கள் அதன் வழியாக வீட்டுக்கோ அல்லது அலுவலகத்துக்கோ செல்லும்போது எடுத்துக்கொள்ளும் முறையைச் சில நகரங்களில் பரிசோதனை முறையில் செய்யத் தொடங்கி இருக்கின்றன.
பெருநகரங்கள் தவிர்த்து இரண்டாம், மூன்றாம் அடுக்கில் உள்ள சிறுநகரங்களையும், கிராமங்களையும் தங்களது சேவை சென்றடைய 1,54,882 தபால் நிலையங்களை (இதில் கிராமப்புறத்தில் உள்ளவை 89%) கொண்டிருக்கும் ‘இந்திய தபால் துறை’யுடன் கைகோக்க ஆன்லைன் நிறுவனங்கள் போட்டிபோட்டு வருகின்றன. ஸ்நாப்டீல், அமேஸான் போன்றவை ஏற்கெனவே இந்தத் துறையுடன் இணைந்து பணியாற்றி வருகின்றன.2014-15-ம் ஆண்டில் ‘கேஷ் ஆன் டெலிவரி’ முறையின் மூலம் ஆன்லைன் நிறுவனங்களின் சார்பில் பொருட்களை டெலிவரி செய்து தபால்துறை வசூலித்தது சுமார் ரூ.500 கோடி!
பிரபலமான மாடர்ன் ரீடெயில் குழுமங்களும், அடிடாஸ் போன்ற விளையாட்டுப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களும் ஆன்லைன் மூலம் தங்களது பொருட்களை விற்க ஆரம்பித்திருக்கின்றன.
நுகர்வோர்களால் பல காரணங்களினால் திரும்ப அனுப்பப்படும் பொருட்களை அந்தந்த நிறுவனங்களிடமிருந்து (உ-ம் அமேஸான், ஃப்ளிப்கார்ட், மிந்த்ரா போன்றவை) வாங்கி, அந்தப் பொருட்களில் ஏதேனும் குறையிருந்தால், அதைச் சரிசெய்து வாரன்டியுடன், மிகவும் குறைந்த விலையில் விற்பதற்கென்று greendust.com என்கிற இணையதளம் உள்ளது.
மின் வணிக நுகர்வோர்களின் எண்ணிக்கை 2013-ம் ஆண்டு இரண்டு கோடிக்கும் குறைவாகவே இருந்தது.
ஆனால், இந்த ஆண்டு ஏறக்குறைய ஆறு கோடியை எட்டக்கூடும் என இது சார்ந்த அமைப்புகள் கூறி வருகின்றன. இதே கால அளவில், மாதம் ஒன்றுக்கு 40 லட்சம் ஆர்டர்களைப் பெற்றுவந்த இந்த நிறுவனங்கள், 1.2 கோடி ஆர்டர் களைப்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
என்ன காரணம்?
இந்த அபரிமிதமான வளர்ச்சிக்கு (ஏறக்குறைய 30%) பலக் காரணங்கள். இந்தியாவில் இன்டர்நெட் உபயோகிப்பவர் களின் எண்ணிக்கை தற்சமயம் 20%. இதில் 10 சதவிகிதம் பேர் ஆன்லைன்மூலம் ஷாப்பிங் செய்கிறார்கள். சீனாவைப் பொறுத்தளவில், இன்டர்நெட் உபயோகிப்போரின் எண்ணிக்கை ஏறக்குறைய 50%. அதில் ஆன்லைனில் பொருட்களை வாங்குபவர்கள் 50%.
இந்தியாவின் ஸ்மார்ட் போன் வளர்ச்சி, மொத்த ஜனத்தொகையில் இளைஞர் களின் எண்ணிக்கை (10 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் சுமார் 35.6 கோடி) ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு முதலீட்டாளர் கள் இந்தத் தொழிலில் பணத்தை வாரியிறைத்துக் கொண்டிருக் கின்றனர்.
எதற்கு வரவேற்பு!
விற்பனை/வருமான ரீதியில் இந்திய மின் வணிகத் துறையைப் பொறுத்தவரை, ‘ஆன்லைன் டிராவல்’தான் (அதாவது, பயணம் சம்பந்தப்பட்ட சேவைகள்) முதலிடம் வகிக்கிறது. அதைத் தொடர்ந்து ரீடெயிலிங் (சில்லறை வணிகம்), நிதி சேவை கள், ஆன்லைன் வரி விளம்பரம் போன்றவை சார்ந்த நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
மின் வணிகம் மூலம் பொருட்களையும், சேவைகளையும் வாங்குவது நாளுக்குநாள் அதிகரித்து வருவதற்கான முக்கியக் காரணம், ஸ்மார்ட் போன்களின் வளர்ச்சி. 2014-ம் ஆண்டு ஆன்லைனில் பொருட் களை வாங்கியவர்களில் மொபைல் போன் செயலி மூலம் வாங்கியவர்களின் எண்ணிக்கை 11%. ஆனால், 2017-ம் ஆண்டு இது 25 சதவிகிதத்தைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குவியும் முதலீடு!
ஸ்நாப்டீல், ஃப்ளிப்கார்ட், அமேஸான் போன்ற நிறுவனங் கள் தனது இணையத்தளத்தின் மூலம் விற்பனை செய்யக்கூடிய பொருட்கள் அனைத்தையும் தள்ளுபடி விலையில் வருடம் முழுவதும் விற்பனை செய்வதன் மூலமும், வேகமாக டெலிவரி செய்வதன் மூலமும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான புதிய நுகர் வோர்களைப் பெற்று வருகின்றன. இந்த வளர்ந்துவரும் நுகர்வோர் களின் எண்ணிக்கையைக் காரணமாகக் காட்டி, நிதி நிறுவனங்களிடமிருந்து மேலும் முதலீட்டை இந்த நிறுவனங்கள் பெற்று வருகின்றன.
அப்படிக் கிடைக்கும் முதலீட்டைக் கொண்டு
மேலும் தள்ளுபடி அளிக்கத் தங்களுக்குள் போட்டிபோடுகின்றன இந்த இ-காமர்ஸ்
நிறுவனங்கள். இப்படிக் கிடைக்கக்கூடிய நிதி திடீரென ஒருநாள் நின்று
போய்விட்டால் என்னவாகும்? இதனால்தான் ‘காற்றுள்ள போதே தூற்றிக்கொள்’ என்கிற
மாதிரி ஐபிஓ வந்துவிடச் சில நிறுவனங்கள் துடியாய்த் துடிக்கின்றன.
இதுபோல, இந்தியாவின் பெரிய ஆன்லைன் வணிகத் தளங்களான ஃப்ளிப்கார்ட், ஸ்நாப்டீலில் மட்டும் 3 பில்லியன் டாலர்களைப் பன்னாட்டு நிறுவனங்களும், வங்கிகளும் முதலீடு செய்துள்ளன.
ஆன்லைன் வணிகத்தில் டாலர்களைக் கொட்டும் முக்கிய நிறுவனங்கள் ரஷ்யாவைச் சேர்ந்த டிஎஸ்டி குளோபல் (DST Global), அமெரிக்காவைச் சேர்ந்த டைகர் குளோபல் (Tiger Global), ஜப்பானைச் சேர்ந்த சாஃப்ட் பேங்க் (Soft Bank), சீனாவைச் சேர்ந்த அலிபாபா போன்றவை.
இவர்கள் செய்த முதலீட்டுக்கு லாபம் கிடைக்குமா என்பது அடுத்தச் சில ஆண்டுகளில் தெரிந்துவிடும். ஒருவேளை ஜெயிக்கவில்லை எனில், 2018-ல் இவர்கள் இந்தத் துறையிலிருந்து வெளியேறத் தொடங்கிவிடு வார்கள் என்பதே இந்தத் துறையைச் சேர்ந்தவர்களின் அனுமானம்.
இ-காமர்ஸ் இன்னோவேஷன்கள்!
அமேஸான், ஃப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வணிகத்தளங்கள் பின்கோடு அல்லது ஏரியா வாரியாகச் சில சில்லறை வணிகக் கடைகள் அல்லது பெட்ரோல் பங்க்-களைத் தேர்ந்தெடுத்து அங்குப் பொருட்களை டெலிவரி செய்ய, ஆர்டர் செய்தவர்கள் அதன் வழியாக வீட்டுக்கோ அல்லது அலுவலகத்துக்கோ செல்லும்போது எடுத்துக்கொள்ளும் முறையைச் சில நகரங்களில் பரிசோதனை முறையில் செய்யத் தொடங்கி இருக்கின்றன.
பெருநகரங்கள் தவிர்த்து இரண்டாம், மூன்றாம் அடுக்கில் உள்ள சிறுநகரங்களையும், கிராமங்களையும் தங்களது சேவை சென்றடைய 1,54,882 தபால் நிலையங்களை (இதில் கிராமப்புறத்தில் உள்ளவை 89%) கொண்டிருக்கும் ‘இந்திய தபால் துறை’யுடன் கைகோக்க ஆன்லைன் நிறுவனங்கள் போட்டிபோட்டு வருகின்றன. ஸ்நாப்டீல், அமேஸான் போன்றவை ஏற்கெனவே இந்தத் துறையுடன் இணைந்து பணியாற்றி வருகின்றன.2014-15-ம் ஆண்டில் ‘கேஷ் ஆன் டெலிவரி’ முறையின் மூலம் ஆன்லைன் நிறுவனங்களின் சார்பில் பொருட்களை டெலிவரி செய்து தபால்துறை வசூலித்தது சுமார் ரூ.500 கோடி!
பிரபலமான மாடர்ன் ரீடெயில் குழுமங்களும், அடிடாஸ் போன்ற விளையாட்டுப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களும் ஆன்லைன் மூலம் தங்களது பொருட்களை விற்க ஆரம்பித்திருக்கின்றன.
நுகர்வோர்களால் பல காரணங்களினால் திரும்ப அனுப்பப்படும் பொருட்களை அந்தந்த நிறுவனங்களிடமிருந்து (உ-ம் அமேஸான், ஃப்ளிப்கார்ட், மிந்த்ரா போன்றவை) வாங்கி, அந்தப் பொருட்களில் ஏதேனும் குறையிருந்தால், அதைச் சரிசெய்து வாரன்டியுடன், மிகவும் குறைந்த விலையில் விற்பதற்கென்று greendust.com என்கிற இணையதளம் உள்ளது.
சித்தார்த்தன் சுந்தரம்
இ-காமர்ஸ் தளங்களுக்கு நல்ல லாபம் .
ReplyDelete