Search This Blog

Wednesday, July 22, 2015

வருமான வரி கணக்குத் தாக்கல்...

கடந்த 2007-ம் ஆண்டுக்குமுன் வருமான வரி ரிட்டர்ன் படிவம் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் மாற்றப்படும். இப்போதெல்லாம் ஆண்டுதோறும் புதுப் படிவம் என்றாகிவிட்டது. கூடவே, படிவங்களில் கூடுதல் விவரங்களைத் தரச்சொல்வதும் புதிய வாடிக்கையாக மாறியிருக்கிறது. 


கடினமான வருமான வரி கணக்குத் தாக்கலை எளிமையாக்கி மூன்று பக்கத்துக்குள் வரி கணக்குத் தாக்கலை முடித்துவிடலாம் என ஜூன் மாதம் மத்திய அரசு அறிவித்தது. மேலும், வரி கணக்குத் தாக்கல் செய்வதற்கான வழக்கமான கெடு தேதியை ஜூலை 31-லிருந்து ஆகஸ்ட் 31-க்கு நீடித்தது.

வருமான வரி கணக்குத் தாக்கலின்போது குறிப்பிட வேண்டிய விவரங்கள் மற்றும் படிவங்களில் மத்திய அரசு புதிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. முதலில், வரி கணக்குத் தாக்கல் விவரங்களில் கொண்டுவரப்பட்டிருக்கும் விவரங்களைப் பார்ப்போம்.

வெளிநாடு பயண விவரம்!

வரி கணக்குத் தாக்கல் செய்யும்போது வரிதாரரின் வெளிநாட்டுப் பயணம் குறித்த விவரங்கள், வங்கிக் கணக்கு இருப்புத் தொகை போன்ற வற்றைக் குறிப்பிட வேண்டும் என ஏப்ரலில் மத்திய அரசு சொன்னது.

இதற்கு வரிதாரர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியதால், வெளிநாட்டு பயண விவரங்களை வரி கணக்குத் தாக்கல் படிவத்தில் குறிப்பிடத் தேவை இல்லை என மத்திய அரசு ஜூன் மாதத்தில் தெளிவுப்படுத்தியது. இதற்குப் பதிலாக, பாஸ்போர்ட் எண்ணை மட்டும் குறிப்பிட்டால் போதும் என ஜூனில் அறிவித்தது.

வெளிநாட்டில் சொத்து!

வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐகள்) வரி கணக்குத் தாக்கல் படிவத்தில், கடந்த 2011-12-ம் ஆண்டுக்குமுன் வெளிநாட்டில் சொத்து இருந்தால், அதன் விவரத்தைக் குறிப்பிட வேண்டும் என்று இருந்தது. மதிப்பீடு ஆண்டு 2015-16-ல் அந்த வெளிநாட்டு சொத்து மூலம் ஏதாவது வருமானம் வந்தால் மட்டுமே அதுபற்றி வரி கணக்குப் படிவத்தில் குறிப்பிட்டால் போதும் என்று சலுகை அளிக்கப் பட்டிருக்கிறது.

அதே நேரத்தில், இந்தியர்களுக்கு வெளிநாட்டில் சொத்து இருந்தால், அதன் மூலம் வருமானம் வரவில்லை என்றாலும்கூட, வரி கணக்குப் படிவத்தில் குறிப்பிட வேண்டும் எனச் சொல்லப்பட்டிருக்கிறது.

வங்கிக் கணக்கு விவரங்கள்!

ஏப்ரல் மாதத்தில் வெளியிடப் பட்ட வருமான வரிப் படிவத்தில் மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி, (நிதியாண்டு இறுதி) வங்கிக் கணக்குகளில் இருக்கும் தொகையைக் குறிப்பிட வேண்டும் எனச் சொல்லப்பட்டு உள்ளது. இதற்குப் பதிலாக, இப்போது வங்கிக் கணக்கு எண்கள் (சேமிப்பு மற்றும் நடப்புக் கணக்கு எண்), ஐஎஃப்எஸ் கோடு எண்ணை படிவத்தில் குறிப்பிட்டால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இனி, வரி கணக்குத் தாக்கல் படிவங்களில் கொண்டு வரப்பட் டிருக்கும் மாற்றங்களைப் பார்ப்போம்.

வரிக் கணக்குப் படிவங்களில் மாற்றங்கள்!

ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் இருப்பவர்களுக்கு வரி கணக்குத் தாக்கல் செய்வதில், இந்த ஆண்டு சில சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு பிசினஸ் அல்லது நிபுணத்துவ வருமானம் அல்லது மூலதன ஆதாயம் எதுவும் இல்லை என்றால் அவர்கள் புதிதாகக் கொண்டு வரப்பட்டுள்ள ஐடிஆர்2ஏ (ITR2A) படிவத்தைப் பயன்படுத்த வேண்டும். அதில் மூலதன ஆதாயங்கள் (கேப்பிட்டல் கெயின்ஸ்) குறித்து எதுவும் குறிப்பிடத் தேவை இல்லை.

இதுதவிர, ஐடிஆர் 2 (ITR2), ஐடிஆர் 2ஏ (ITR2A) படிவங்களில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இவை மொத்தமே மூன்று பக்கங்களை மட்டுமே கொண்டிருக்கின்றன. இதில் கேட்கப்பட்டிருக்கும் விவரங்கள் வரிதாரர் எளிதாக நிரப்பக்கூடியதாக இருக்கிறது. இதற்குமுன், இந்தப் படிவங்கள் எல்லாம் 14 பக்கங்களைக் கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

 
‘‘ஐடிஆர் (ITR) 1, 2, 2A, 4S, 3, 4, 5, 6, 7 என்ற படிவங்களில்தான் ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வருடம் சில முக்கிய மாற்றத்தோடு, நான்கு ஐடிஆர் 1, 2, 2A மற்றும் 4S படிவங்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

மாத சம்பளம் மட்டுமே இருக்கிறவர்கள் 4 பக்கங்களைக் கொண்ட ஐடிஆர்1 (சஹாஜ்) படிவத்தில் வரி கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும். வணிக வருமானம் கொண்டவர்களுக்கு ஐடிஆர் 4 எஸ் (சுகம்) கொண்டு வரப்பட்டிருக்கிறது.

இந்த ஆண்டு (AY 2015-16) ஏழு பக்கங்கள் கொண்ட ஐஆர்டி-2A புதிய ரிட்டர்ன் படிவத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். இதை வியாபாரம் அல்லது தொழில் இல்லா வருமானம் மற்றும் மூலதன ஆதாயம் (Capital Gains) இல்லாத நபர்கள் மற்றும் வெளிநாட்டு சொத்து இல்லாதவர்கள் பயன்படுத்தலாம்ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் மூலம் வருமானம் மற்றும் லாட்டரி/ரேஸ் வருமானம் உள்ளவர்கள் இந்தப் படிவத்தை பயன்படுத்த வேண்டும்.

ஆதார் (Aadhar) எண் உள்ளவர்கள், அதை ரிட்டர்ன் படிவத்தில் தெரியப்படுத்தலாம். ஆதார் எண் கட்டாயம் அல்ல. விருப்பம் இருந்தால் ஆதார் எண்ணைத் தெரியப்படுத்தலாம் (ITR 1, 2A, 2, 4S)உங்கள் வீட்டின் பெயர் அல்லது கட்டடத்தின் பெயர் அல்லது கிராமத்தின் பெயரை ரிட்டர்ன் படிவத்தில் (ITR 1, 4S) குறிப்பிட வேண்டும்.


வெளிநாட்டுப் பயணம் ஏதாவது மேற்கொள்ளப்பட்டு இருந்தால், பாஸ்போர்ட் எண்ணை ரிட்டர்ன் படிவத்தில் (ITR 2, 2A) குறிப்பிட வேண்டும்.  உங்கள் வங்கிக் கணக்கு எண்ணை கட்டாயம் குறிப்பிட வேண்டும். இது உங்கள் ரீ-ஃபண்ட் எளிதாக (Re-fund) வருவதற்குப் பயனுள்ளதாக இருக்கும்.

ரிட்டர்ன் படிவத்தில் விவசாய வருமான விவரங்களைத் தெரிவிக்கும்போது, இந்த வருடம் கூடுதல் விவரங்களைச் சொல்ல வேண்டும். மொத்த விவசாய வருமானம், விவசாய செலவுகள், நிகர விவசாய வருமானம் மற்றும் கிரகிக்கப்படாத விவசாய இழப்பு ஆகிய (Unabsorbed Agricultural Loss) நான்கையும் தெரிவிக்க வேண்டும்.

ஐடிஆர் 2 படிவத்தைப் பயன்படுத்தினால் வெளிநாட்டு சொத்து உள்ளது என்று அர்த்தம் எனவே, அதன் விவரத்தை சொல்ல வேண்டும். கூடவே வெளிநாட்டு வங்கிக் கணக்குகள், வெளிநாட்டு அமைப்புகளில் நேரடி மற்றும் மறைமுக முதலீடு, வெளிநாட்டு அசையாச் சொத்து, வெளிநாட்டு இதர வருமானங்கள் போன்றவற்றையும் இந்தப் படிவத்தில் குறிப்பிட வேண்டும்''

‘‘2014-15ம் ஆண்டில் அசையாச் சொத்து விற்று இருந்தால், மூலதன ஆதாய தொகையை (Capital Gains) மூலதன ஆதாயக் கணக்கில் (Capital Gains Account Scheme) ஆகஸ்ட் 31, 2015-க்குள் செலுத்த வேண்டும்".

இ-ஃபைலிங்!

ஆன்லைனில் வரி கணக்குத் தாக்கல் செய்வது?

‘‘ரூ.5 லட்சத்துக்குமேல் ஆண்டு வருமானம் கொண்ட அனைவரும் ஆன்லைன் மூலம் எலெக்ட்ரானிக் முறையில் (இ -ஃபைலிங்) கணக்குத் தாக்கல் செய்வதை வருமான வரித் துறை 2013, மே மாதம் கட்டாயம் ஆக்கியது. வெளிநாட்டிலிருந்து வருமானம் வந்திருந்தால், அவரின் வருமானம் எவ்வளவாக இருந்தாலும் இ-ஃபைலிங் முறையில்தான் வரி கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும்.

இ-ஃபைலிங்கை வரிதாரரே நேரடியாக அரசின் இணையதளம் மூலம் செய்யலாம். ஆடிட்டர்கள் அல்லது அதற்கு என தனியார் இணையதளங் களின் உதவியுடன் மேற்கொள்ள லாம்.  இலவசமாக இ-ஃபைலிங் செய்ய, இந்திய வருமான வரித் துறையின் இணையதளமான https://incometaxindiaefiling.gov.in/ செல்ல வேண்டும்.  புதிதாக இ-ஃபைலிங் செய்கிறீர்கள் என்றால் உங்களின் வருமான வரி நிரந்தர கணக்கு எண் (பான்) மூலம் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

ஏற்கெனவே, இ-ஃபைலிங் செய்தவர்கள், யூஸர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு மூலம் உள்ளே செல்லலாம்.  ஒருவருக்கு எந்த வகையில் வருமானம் வந்தது என்பதற்கு ஏற்ப  வருமான வரி (ஐடிஆர்) படிவத்தைத் தேர்வு செய்ய வேண்டும். கூடவே, வரி கணக்கைத் தாக்கல் செய்ய உதவும் சாஃப்ட்வேரை டவுன்லோடு செய்துகொள்ள வேண்டும். டவுன்லோடு செய்த படிவத்தில் வருமானம் மற்றும் முதலீடு, வரி கட்டிய விவரங்களைச் சரியாக பூர்த்தி செய்து அப்லோடு செய்ய வேண்டும்.

இ-ஃபைலிங் செய்ததற்கு ஆதாரமாக உங்களின் டிஜிட்டல் கையெழுத்து இருந்தால், பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு, ஐடிஆர் படிவம் கம்ப்யூட்டர் திரையில் தோன்றும். டிஜிட்டல் கையெழுத்து இல்லை என்றால் ஐடிஆர் V படிவத்தை பிரின்ட் எடுத்து கையெழுத்துப் போட்டு பெங்களூருவில் உள்ள வருமான வரி மத்திய பரிசீலனை மையத்துக்கு (Income Tax Department - CPC) முகவரிக்கு சாதாரண தபால் அல்லது விரைவு தபால்  மூலம் ஒப்புகை அட்டை இல்லாமல் இணைத்து அனுப்ப வேண்டும். அனுப்ப வேண்டிய முகவரி: Income Tax Department - CPC Post Bag No.1, Electronic City Post Office, Bengaluru, Karnataka - 560100

சந்தேகத்துக்கு அழைக்க: 1800 4250 0025, +91-80-2650 0025 டிஜிட்டல் கையெழுத்து உங்களுக்கு இல்லை என்றால் ஐடிஆர் V படிவத்தை பெங்களுரூவில் உள்ள சிபிசி அலுவலகத்துக்கு மூன்று மாதத்துக்குள் (120 நாள்கள்)அனுப்பி வைக்க வேண்டும். நகல் (ஜெராக்ஸ்) அனுப்பக் கூடாது. ஒரிஜினல்தான் அனுப்ப வேண்டும்.

இது பெங்களூரு சிபிசி அலுவலகத்துக்குச் சென்று சேரவில்லை என்றால், நீங்கள் வரி கணக்குத் தாக்கல் செய்யவில்லை என்று அர்த்தம். எனவே, அனுப்பும் முகவரியில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

இ-ஃபைலிங் செய்யும் அளவுக்கு உங்களுக்கு கம்ப்யூட்டர் பரிட்சயம் இல்லை என்றால், ஆடிட்டர்கள் மூலம் இ-ஃபைலிங் செய்ய முடியும். இவர்களைத் தவிர்த்து,  இ-ஃபைலிங் செய்துதர பல வெப்சைட்கள் இருக்கின்றன. அவை கட்டணமாக ரூ.300 தொடங்கி ரூ.1,000 வரை வாங்குகின்றன. இந்தக் கட்டணம் என்பது ஒருவரின் வரிக்கு உட்பட்ட வருமானம், அவரின் இதர வருமானம், மூலதன ஆதாயக் கணக்கு, வீட்டு வாடகை வருமானம் போன்றவற்றைப் பொறுத்துள்ளது.


ஆடிட்டர்கள் மற்றும் இ-ஃபைலிங் செய்துக் கொடுக்கும் நிறுவனங்களிடம் படிவம் 16-ஐ கொடுத்தால், அவர்கள் உங்கள் சார்பாக இ-ஃபைலிங் செய்துவிடுவார்கள். பெங்களூரு வில் உள்ள சிபிசி அலுவலகத்துக்கு அவர்களே ஐடிஆர் V  அனுப்பி வைத்துவிடுவார்கள்.

இந்த இ-ஃபைலிங் செய்ய ஏறக்குறைய 20 நிமிடங்கள் ஆகும். இ-ஃபைலிங் முறையில் வரி கணக்குத் தாக்கல் செய்தால் ரீ-ஃபண்ட் விரைவில் கிடைக் கும்".

‘‘இ-ஃபைலிங் செய்யும்போது இ-வெரிஃபிகேஷன் செய்தால்,  ஐடிஆர் V படிவத்தை பெங்களூருக்கு அனுப்பத் தேவை இல்லை.  இந்த இ-வெரிஃபி கேஷனை வரிதாரர் நெட் பேங்கிங் மூலம் மேற்கொள்ளலாம்.

ஆடிட்டர் இதனை மேற் கொள்ளும்போது, பாதுகாப்புப் பிரச்னைகள் எழ வாய்ப்பு இருக் கிறது. காரணம், வரிதாரர் தன் நெட் பேங்கிங் யூஸர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு தரவேண்டி இருக்கும். நெட்பேங்கிங் வசதி இல்லை என்றால், இ-ஃபைலிங் செய்யும்போது எலெக்ட்ரானிக் வெரிஃபிகேஷன் கோடு (Electronic Verification Code) உருவாக்க வேண்டும்.

இந்த கோடு, வரிதாரரின் பதிவு செய்யப்பட்ட இ-மெயில் ஐடி மற்றும் செல்போனுக்கு அனுப்பப்படும். இது, 72 மணி நேரம் செல்லத்தக்கதாக இருக்கும். அதனைக் கொண்டு இ-வெரிஃபிகேஷன் முடித்துவிட லாம். இந்த இ-வெரிஃபிகேஷனை பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது மூலமும் மேற்கொள்ளலாம். ஆனால், பான் எண் வாங்க தரப்பட்டிருந்த விவரமும், ஆதார் கார்டுக்காகத் தரப்பட்ட விவரங்களுக்கும் சரியாகப் பொருந்தி இருக்க வேண்டும். பல பேருக்கு இதில் சிக்கல் இருக்கிறது.


மேலும், இ-வெரிஃபிகேஷன் என்பது ரூ. 5 லட்சம் வருமானத் துக்கு கீழே உள்ளவர்களுக்கு  இ-மெயில் ஐடி மற்றும் செல்போனுக்கு அனுப்படும் கோடு-ஆக இருக்கிறது. இது சுலபமான நடைமுறையாக இருக்கிறது. அதேநேரத்தில், ரூ. 5 லட்சம் வருமானத்துக்கு மேலே உள்ளவர்களுக்கு நெட் பேங்கிங் அல்லது ஆதார் கார்டு மூலம் மட்டுமே இ-வெரிஃபிகேஷன் செய்ய முடியும் என்று இருக்கிறது.  இதில் நடைமுறைச் சிக்கல்கள் அதிகம் உள்ளன. அனைத்து வரிதாரர்களுக்கும் இ-மெயில் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் இந்த வெரிஃபிகேஷனை மேற்கொண் டால் நன்றாக இருக்கும்”.

வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில், இந்தத் தகவல்களை எல்லாம் மனதில் கொண்டு இப்போதே தயாரானால், எந்தக் கஷ்டமும் இல்லாமல் செய்து முடிக்கலாமே!
சி.சரவணன்


No comments:

Post a Comment