நிக்கான் D3300/கேமரா
‘30,000 ரூபாய்க்குள் கிடைக்கும் சூப்பர் பெர்ஃபாமென்ஸ் டிஜிட்டல் SLR கேமரா, நிக்கான் D3300. பவர்ஃபுல் ப்ராசஸர், 24.2 மெகாபிக்ஸல் இமேஜ், 100-12,800 ரேஞ்ச் ISO என டெக்னிக்கலாக செம ஸ்ட்ராங். குறைந்த வெளிச்சத்திலும் சிறப்பான படங்களை எடுக்க முடிவது இதன் பளஸ். கேனான் கேமராக்களுக்குப் போட்டியாக, HD வீடியோவும் எடுக்க முடியும். பேட்டரி சார்ஜ், நீண்ட நேரம் நிற்கிறது. 460 கிராம் மட்டுமே எடைகொண்டது என்பதால், செம லைட் வெயிட். 18-55 கிட் லென்ஸோடு கிடைக்கிறது. இதன் LCD ஸ்க்ரீனைத் திருப்ப முடியாது என்பதோடு, பில்ட் இன் ஆட்டோஃபோகஸ் வசதியும் இல்லை என்பது இதன் மைனஸ்.
சோனி எக்ஸ்பீரியா C4/ஸ்மார்ட் போன்
செல்ஃபி ஸ்பெஷல் ஸ்மார்ட்போன், இந்த சோனி எக்ஸ்பீரியா C4. 5.5 இன்ச் ஃபுல்-HD டிஸ்ப்ளே, Bravia Engine 2 டெக்னாலஜி, 64-பிட் 1.7 GHz ஆக்டா-கோர் மீடியாடெக் ப்ராசஸர், மலி கிராஃபிக்ஸ் ப்ராசஸர் என டெக்னாலஜியில் கில்லியாக இருக்கிறது C4. ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் ஆபரேட்டிங் சிஸ்டத்துடன் 13 மெகா பிக்ஸல் பின்பக்க கேமரா, 5 மெகா பிக்ஸல் முன்பக்க கேமரா, 25 மிமீ வைடு-ஆங்கிள் லென்ஸ் என போட்டோகிராஃபி ஆர்வலர்களையும் ஈர்க்கிறது இந்த சோனி. 2 GB RAM, 16 GB இன்டர்னல் மெமரி உள்ளது. 2600mAH பேட்டரிதான் என்பதால், சார்ஜரை அவசரத்துக்கு எப்போதும் வைத்திருக்க வேண்டியிருக்கும்.
மைக்ரோசாஃப்ட் வாங்கிய Wunderlist/App
தீபாவளி டிக்கெட் புக்கிங் எப்போது ஆரம்பம்; வீட்டில் கேஸ் எப்போது மாற்றினோம்; எத்தனை தண்ணீர் கேன் வாங்கினோம் என்று நினைவு வைத்துக்கொள்ள, காலண்டரில் குறித்து வைத்துக்கொண்டிருந்த காலம் இப்போது இல்லை. ஸ்மார்ட்போன் ஆப்ஸ்-ல் பிளான் செய்வதுதான் இப்போது ட்ரெண்ட். 13 மில்லியன் பயனீட்டாளர்களைக்கொண்ட Wunderlist-தான் திட்டமிடலுக்கு பெஸ்ட் அப்ளிகேஷன். ரிமைண்டர்கள், மளிகை சாமான் லிஸ்ட், நோட்ஸ் என எக்கச்சக்க வேலைகளை ஒரே ஆப்பில் பதிவேற்றி வைக்கலாம். இதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடிவதும் பெரிய ப்ளஸ். மைக்ரோசாஃப்ட் நிறுவனமே இந்த அப்ளிகேஷனை வாங்கிவிட்டது என்றால், இது எவ்வளவு பெரிய சூப்பர்ஹிட் எனப் பார்த்துக்கொள்ளுங்கள்.
ரிலையன்ஸ் ஜியோ 4G/நியூஸ்
ஸ்மார்ட்போன் மார்க்கெட்டுக்குள் அடி எடுத்துவைக்கிறது ரிலையன்ஸ். வரும் டிசம்பர் மாதத்துக்குள் ஜியோ என்ற பெயரில் 4G நெட்வொர்க்குடன் ஸ்மார்ட்போன்களை விற்பனைக்குக் கொண்டுவருகிறது. இந்த போனின் விலை 4,000 ரூபாய்க்குள் இருக்கும் என்று, ஸ்மார்ட்போன் மார்க்கெட்டையே அதிர வைத்திருக்கிறது ரிலையன்ஸ். மேலும், ரிலையன்ஸ் 4G சேவையின் மாதாந்திரக் கட்டணம் 300 - 500 ரூபாய்க்குள்தான் இருக்கும் என்றும் அறிவித்துள்ளது ரிலையன்ஸ். 2017-ம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் 100 சதவிகித நெட்வொர்க் கவரேஜ் இருக்கும் என்கிறது ரிலையன்ஸ்.
மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் P690/ Tab
கேன்வாஸ் டேப் P690 3G டேப்லட்டை 8,999 ரூபாய்க்கு இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது மைக்ரோமேக்ஸ். 1280x800 ரெசல்யூஷன் டேப்லெட்களில் மெகா சைஸ் 8 இன்ச் ஸ்கிரீனைக் கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 4.4.4 கிட்கேட் ஆபரேட்டிங் சிஸ்டம் இருந்தாலும், ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் அப்டேட் விரைவில் வந்துவிடுமாம். 1.3 GHz குவாட்-கோர் இன்டெல் Atom பிராசஸர், 1 GB RAM மெமரி, 8 GB இன்டர்னல் ஸ்டோரேஜ், 5 மெகாபிக்ஸல் ரியர் கேமரா, 2 மெகாபிக்ஸல் முன்பக்க கேமரா என பேஸிக்கான டெக் பேக்கேஜையே கொண்டுள்ளது, இந்த கேன்வாஸ் டேப்.
ராஜா ராமமூர்த்தி

No comments:
Post a Comment