Search This Blog

Sunday, September 20, 2015

சவால்விடும் ‘ஆப்ஸ்’

உங்க கையில் செல்போன் இருந்தால் போதும். செம ஜாலியான மற்றும் அறிவுக்கு சவால்விடும் ‘ஆப்ஸ்’களை டவுண்லோடு செய்து விளையாடலாம்.  


Dr.Panda’s Ice Cream Truck

ஐஸ்க்ரீம் பிடிக்காத சுட்டிகள் உண்டா? எத்தனை ஃப்ளேவர் வந்தாலும் அத்தனையையும் ஒரு வாய் டேஸ்ட் பார்த்துட்டு, இது போதாதே என நினைப்போம். அப்படியானால், ‘உங்களுக்குப் பிடித்த ஃப்ளேவர்களில் நீங்களே ஐஸ்க்ரீமை உருவாக்குங்க’ என்கிறது, டாக்டர் பாண்டா ஆப்ஸ்.
டாக்டர் பாண்டா, ஒரு தள்ளுவண்டி மூலம் ஐஸ்க்ரீம் விற்பவர். அவரிடம் இருக்கும் பொருட்களைக்கொண்டு, விதவிதமான ஐஸ்க்ரீம்களை நீங்களே உருவாக்கலாம்.

ஐஸ்க்ரீம் மட்டுமல்ல, இன்னும் பலவற்றைக் கற்றுத்தரும்படியான பல அப்ளிகேஷன்ஸ், டாக்டர் பாண்டா ஆப்ஸில் இருக்கிறது.

Toca Lab

வேதியியலில் ஆர்வம் உள்ளவர்களுக்கான அசத்தல் ஆப்ஸ் இது.

தனிம வரிசை அட்டவணையில் உள்ள அனைத்துத் தனிமங்கள் பற்றியும் இதில் அறியலாம். முதலில், ஒரே ஒரு தனிமம் வழங்கப்படும். அதன் மூலம் பல சோதனைகள் செய்யும்போது, உங்களின் ஆய்வு முடிவுகள் வெளியாவது செம த்ரில்லிங்காக இருக்கும். அவற்றை அட்டவணையில் நிரப்பிக் கொண்டே வரலாம். உண்மையான ஆய்வகங்களைப் போல எதுவும் விபத்துக்கள் ஏற்படாது என்பதால், தைரியமாகச் செய்துபார்த்து, உங்கள் வேதியியல் அறிவை வளர்த்துக்கொள்ளலாம்.

Cloud Maker

வானத்தில் உலாவும் மேகங்களில், விதவிதமான உருவங்களைக் கண்டுபிடித்து ரசிப்பது, சுவாரஸ்யமான விளையாட்டு. அப்படி, உங்கள் கற்பனையை வளர்க்கும் அழகு ஆப்ஸ் இது. இதை டவுண்லோடு செய்தால், வானமும் மேகங்களும் காட்சியாக வரும். அந்த மேகங்களை உங்கள் இஷ்டப்படி மாற்றி,  பட்டாம்பூச்சி, பறவை, குதிரை என விதவிதமான  உருவங்களை உருவாக்கலாம். காற்று அடிக்கும் திசை மற்றும் வேகத்தைக்  கட்டுப்படுத்தி, ‘என் வானம்... என் மேகங்கள்’ என மகிழலாம்.

Peekaboo UFO

ஐந்து வயதுக்குக் குறைவாக இருக்கும்  சுட்டிகளின் கவனிப்புத்திறனை வளர்க்கும் விளையாட்டு ஆப்ஸ்.

வேற்றுக் கிரகங்களில் இருந்து வந்திருக்கும் கிரகவாசிகள், நமது சுற்றுப்புறத்தில் ஒளிந்திருப்பார்கள். மரங்கள், பறவைகள், விலங்குகள், கட்டடங்கள் மத்தியில் கலந்திருக்கும் அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். இதன் மூலம், நமது பூமியில் உள்ள உயிரினங்கள் மற்றும் பொருட்களின் வடிவங்கள், எளிதாக மனதில் பதியும்.
- இனியன்

1 comment: