திருத்தணிக்கு அருகில் இருக்கும் சர்வபள்ளி என்னும் கிராமத்தில்,
ராதாகிருஷ்ணன் 1888ஆம் ஆண்டு செப்டம்பர் ஐந்தாம் நாள் பிறந்தார்.
இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத் தலைவரும், இரண்டாவது குடியரசுத்
தலைவருமான ராதாகிருஷ்ணன் மாபெரும் கல்வியாளர். தத்துவ
ஞானியும்கூட. ஆரம்பத்தில் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் ஆசிரியப் பணியில்
சேர்ந்தார். பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில்
பேராசிரியர் ஆனார். தத்துவத்தில் பல ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதி
இருக்கிறார். பல டாக்டர் பட்டங்களைப் பெற்றிருக்கிறார். ஆக்ஸ்ஃபோர்ட்
பல்கலைக் கழகத்தில் இந்து மதத் தத்துவங்கள் பற்றி விரிவுரை ஆற்றி
இருக்கிறார். ஆந்திரப் பல்கலைக்கழகம், பனாரஸ் இந்துமதப்
பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தராகவும் பணியாற்றி இருக்கிறார்.
பின்னர் யுனெஸ்கோவின் தூதுவராகச் செயல்பட்டார்.
பல்கலைக்கழகக் கல்வி ஆணையத் தலைவராகவும் உயர்ந்தார். சோவியத் யூனியன்
தூதராகப் பணி புரிந்தார். 1952ல் இந்தியாவின் முதல்
துணைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1954ல் பாரத ரத்னா
விருது பெற்றார். 1962ல் குடியரசுத் தலைவரானார்.
இவரது பிறந்த நாளை ஆசிரியர் தினமாக இந்தியாவில் கொண்டாடுகின்றனர். காரணம் இவர் ஆரம்பத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்தார்
என்பதுதான். ஆசிரியப் பணியில் சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கு இன்றைய தினம் விருதுகள் வழங்கப்படுகின்றன. ஆசிரியர்கள்
கௌரவிக்கப்படுகிறர்கள்.
No comments:
Post a Comment