இந்தத் தேசத்தின் உசந்த ஸமுதாயம், மேலெழ வெளியிலே பார்க்கிறதற்கு மட்டும்
ஒருமைப்பாட்டு கோஷம் என்ற ஒரு ‘ஷோ’ வோடு, உள்ளுக்குள்ளே பிரிந்து,
பிரிந்து, பிரிந்து வீணாய்ப் போய்க் கொண்டிருக்கிறது. ரொம்பவும் துக்கமும்
வெட்கமும் படும்படியான ஸ்திதி, பொது எதிரி ஒருத்தன்கிட்டே விரோதத்தில்தான்
நமக்கு ஒன்று சேரத் தெரிந்ததே தவிர நமக்குள்ளே பரஸ்பர ப்ரேமையில் ஒன்று
சேரத் தெரியவில்லை!அப்போது வெளிப்பார்வைக்காவது ஸாத்விகமாகச் சண்டை நடந்த மாதிரி இல்லாமல்,
இப்போது வெளியிலேயும் அஸுர யுத்தமாகவே நடந்து, யதுகுலம் மாதிரி நம்மை நாமே
நிர்மூலம்
பண்ணிக் கொள்வதில்தான் இது போய் முடியுமோ என்று பயப்படுகிற ஸ்திதி
ஏற்பட்டிருக்கிறது.
இந்த அபாயத்தை இப்போதுள்ள அநேகக் கட்சிகளுடைய, வர்க்கங்களுடைய தலைமை
ஸ்தானத்திலிருப்பவர்கள் தெரிந்து கொண்ட ப்ரக்ஞையே இல்லாமல்
போக்கொண்டிருப்பதுதான் ரொம்பவும்
விசாரம் தருவதாக இருக்கிறது. தர்மம் என்று ஒன்று இருக்கிறது... ஜனங்களுக்கு
இருக்க வேண்டிய அநேக நல்லொழுக்கங்கள் சொன்னேனே, அவை எல்லாமும் அதோடு
இன்னும்
பலவும் சேர்ந்துதான் தர்மம், தர்மம் என்கிறது. இந்தப் பாரத தேச
கலாசாரத்துக்கு லோகத்திலேயே வேறே எந்தப் பெரிய ‘ஸிவிலிஸேஷ’னுக்கும் இல்லாத
தீர்க்காயுஸைக் கொடுத்து யுகாந்தரங்களாக ரட்சித்துக் கொண்டு
வந்திருக்கிறது அந்த தர்ம சக்திதான். அப்படி ஒன்று இருக்கிறது என்று
தப்பித் தவறியாவது தற்காலத்தில் தலைவர்கள் என்று இருக்கிறவர்கள் தங்கள்
தங்கள் கட்சிக்காரர்களுக்குச்
சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. எலெக்ஷனில் ஜயிப்பது ஒன்றைத் தவிர வேறே
ஒரு லட்சியத்தையும் கட்சிக்காரர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதில்லை என்ற
துர்தசை ஏற்பட்டிருக்கிறது. ஜயிப்பதுதான் குறி
என்கிறபோது Hook or crook, எதுவானாலும் ஸரீ என்று அதர்மத்துக்கும்
கட்சிக்காரர்களைத் தூண்டிக் கொடுக்கிற வரைக்கும் போய்விடுகிறது. தலைவர்கள்
என்கப்பட்டவர்களும் ஸமுதாயத்தை அநேக மெஜாரிட்டி
மைனாரிட்டிகளாக Divide பண்ணி, மெஜாரிட்டியைத் திருப்தி பண்ணுவதற்காக தர்மா
தர்மத்தைப் பற்றி அவ்வளவாகக் கவலைப்படாமல் எதுவேண்டுமானாலும் பண்ணி
எலெக்ஷன் வெற்றிக்கே பாடுபடுவதாகத்தான்
பொதுப்படையாகப் பார்க்கிறபோது தெரிகிறது.
ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
No comments:
Post a Comment