சில ஆண்டுகள் மொபைல் வர்த்தகத்தில் சத்தமில்லாமல்
இருந்த மோட்டோரோலா நிறுவனம், 2014-ம் ஆண்டில் மோட்டோ இ, மோட்டோ ஜி ரக
பட்ஜெட் ஸ்மார்ட் போன்களை வெளியிட்டது. இதில் மோட்டோ ஜி பலத்த வரவேற்பைப்
பெற, இதன் அடுத்த வெர்சனான ‘மோட்டோ ஜி 2nd ஜென்’ மக்களிடம் பிரபலமானது.
இதிலுள்ள கொரில்லா க்ளாஸ், பின்புறம் மற்றும் பின்புற
கேமராவின் தரம் 1.2GHz குவால்காம் ஸ்நாப்டிராகன் 400’ என்ற மிகச்
சக்திவாய்ந்த பிராசஸர் மற்றும் கிராபிக்ஸ் பிராசஸர், ஆண்ட்ராய்டு 4.4.4
கிட்கேட் மற்றும் இதன் அடுத்த வெர்சன் ஆண்ட்ராய்டு எல், ‘Water Resistant
Coating’ போன்றவை இதன் பிரபலத்துக்கு சாதகமான அம்சங்கள்.
பார்ப்பதற்கு கவர்ச்சியான தோற்றத்துடன் லெனோவோ தனது
யோகா 2 டேப்லெட்டை வெளியிட்டது. மெட்டலால் செய்யப் பட்டிருந்தாலும், சிறிது
பிளாஸ்ட்டிக்கும் இந்த டேப்லெட்டின் வடிவமைப்பில் பயன்
படுத்தப்பட்டிருந்தது ஈர்ப்புக்கு சாதகமாகவே இருந்தது.
டேப்லேட்டை பல ஆங்கிள்களில் பயன்படுத்த உபயோகமாக கிக்
ஸ்டாண்ட் வடிவமைப்பு, ஒரேநேரத்தில் பத்து விரல்களை சென்ஸ் செய்யும் 10
இன்ச் IPS டிஸ்ப்ளே, வேகமாக இயங்கும் குவாட்-கோர் பிராசஸர், கேமராவின்
தரம், 9600 mAh திறன்கொண்ட லித்தியம்-ஐயான் பேட்டரி, f2.2 ‘wide aperture’
லென்ஸ் ஆகியவை இதன் சிறப்பம்சங்கள் மக்களை வாங்கத் தூண்டின.
புத்தகம் படிக்கும் பழக்கம் கொண்டவர்களின் நண்பனாக
வந்திருக்கிறது கிண்டில். மற்ற நிறுவனங்களின் இ-புக் ரீடரைவிட வாடிக்கை
யாளர்களின் முதல் சாய்ஸாக அமைந்தது அமேஸானின் புதிய ‘கிண்டில்’ இ-புக்
ரீடர். இது பழைய கிண்டில் இ-புக் ரீடரைக் காட்டிலும், பல புதிய தொழில்நுட்ப
மாற்றங் களோடு வெளிவந்துள்ளது. கிண்டில் இ-புக் ரீடரின் சிறப்பம்சம், அதன்
‘Ink Diplay’ தொழில் நுட்பம். இந்தத் தொழில்நுட்பம் வாடிக்கையாளர் களுக்கு
புத்தகத்தில் படிக்கக்கூடிய அதே உணர்வைத் தரும். தொடுதிரை வசதியோடு
வெளிவந்த புதிய ‘கிண்டில்’, முழு சூரிய ஒளியிலும் பயன்படுத்தக் கூடிய
‘Glare-Free’ திறன்கொண்டது. இதில் சொல்லின் பொருளை அறிய இன்-பில்டாக
அமைந்துள்ள அகராதி மற்றும் விக்கிபீடியா இருப்பது சிறப்பு.
2014-ம் ஆண்டின் சிறந்த லேப்டாப் எனில், ‘ஆப்பிள் மேக்புக் ஏர்’-ஐ
சொல்லலாம். பார்ப்பதற்கு எளிமையாகவும் கவர்ச்சிகர மாகவும் இருக்கும் இந்த
லேப்டாப், மற்ற லேப்டாப்களைவிட வேகம், பேட்டரி மற்றும் எடையில்
வாடிக்கையாளர்களுக்கு பெஸ்ட் சாய்ஸாக உள்ளது. 2014-ம் ஆண்டு அப்டேட்
செய்யப்பட்ட இந்த லேப்டாப், இன்டெல் 4th ஜென் பிராசஸரைக் கொண்டுள்ளது.
11 இன்ச் மட்டும் 13 இன்ச் ஆகிய இரு மாடல் களில்
கிடைக்கும் இந்த லேப்டாப், 1.4GHz dual-core Intel Core i5 பிராசஸரைக்
கொண்டு செயல்படுகிறது. 4 GB ரேம், 720p FaceTime HD கேமரா மற்றும் dual
மைக்ரோபோன்ஸ் இந்த லேப்டாப்பின் சிறப்பம்சம். 11 இன்ச் மாடல் 9 மணி நேரம்
வரை தாங்கும்.
2014-ம் ஆண்டில் சோனி நிறுவனம் தனது ‘Cybershot RX100
III’ கேமராவை வெளியிட்டது. Wide angle ‘Zeiss Vario-Sonnar’ 24-70mm
F1.8-2.8 லென்ஸ்களைக் கொண்டுள்ள இந்த பாயின்ட் அண்ட் ஷூட் கேமரா 20.1 MP
சென்சாரைக் கொண்டுள்ளது.
சிறப்பான படங்களை எடுக்கக்கூடிய திறன், வேகமான லென்ஸ்
ஆகிய சிறப்பம்சங் களைக் கொண்டுள்ள இந்த கேமரா, கிட்டத்தட்ட DSLR கேமரா
தன்மையைத் தொட்டுவிடுகிறது. பார்ப்பதற்கு ஸ்லிம்மாகவும் சிறிதாகவும்
இருக்கும் இந்த கேமரா கவர்ச்சியாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. வெயிலிலும்
தெளிவாகத் தெரியும் OLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருப்பது இதன் சாதகமான விஷயம்.
2014-ம் ஆண்டுதான் ஸ்மார்ட் வாட்சுகள் பிரபலமாகின. ஆப்பிள், சாம்சங், எல்ஜி
போன்ற நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட் வாட்சுகளை வெளியிட்டாலும் மோட்டோரோலா
நிறுவனத்தின் ‘மோட்டோ 360’ ஸ்மார்ட் வாட்ச், விலை மற்றும் டிசைன்
அடிப்படையில் பெஸ்ட் சாய்ஸாக அமைந்தது. டிசைன், லெதர் ஸ்ட்ராப் ஆகியவை
‘கிளாஸிக்’ லுக்கை தருகிறது. இந்த லெதர் ஸ்ட்ராப்பை மெட்டல்
ஸ்ட்ராப்பாகவும் மாற்றிக்கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பம்சம். வாட்சின்
டயல் OLED தொடுதிரை, வாய்ஸ் மெசேஜுக்காக பயன்படுத்தும் மைக் ஆகியவை இதற்கு
சுவாரஸ்யத்தை வழங்கின. லேப்டாப், ஸ்மார்ட் போன், டேப்லெட், டெஸ்க்டாப்
கம்ப்யூட்டர் என அனைத்தோடும் மோட்டோ 360யை இணைத்துக்கொள்ளலாம்.
2014-ல் ‘போஸ் சவுண்ட்லிங் கலர்’ என்கிற ப்ளூடூத்
ஸ்பீக்கர்தான் மக்களின் முதல் சாய்ஸாக இருந்தது. இதன் விலையும் தரமும்தான்
இதற்கு முக்கியக் காரணம். இந்த ஸ்பீக்கர் 0.57 கிலோ எடையைக் கொண்டது.
மேலும், சிறிதாக இருப்பதனால் இதையும் எதிலும் எளிதாக வைத்துக்கொள்ளலாம்.
எங்கும் எந்த சிரமமும் இல்லாமல் எடுத்துச் செல்லாம். பல
வண்ணங்களில் கிடைக்கும் இந்த ஸ்பீக்கர் எட்டு மணி நேரம் வரை தாங்கும்
பேட்டரியைக் கொண்டு இயங்கு கிறது. இந்த ஸ்பீக்கர் தெளிவான மற்றும் சக்தி
வாய்ந்த ஒலியை வழங்கும் தன்மையை உடையது.
சரியான நெட்வொர்க் சிக்னல் கிடைக்காத போது தகவல்களைப் பரிமாறிக்கொள்ள உதவும் கேட்ஜெட்டாக வந்திருக்கிறது ‘கோடென்னா’ (goTenna). சிற்றலை (Low frequency) மூலம் இயங்கும் இந்தக் கருவி எந்த செல்போன் நெட்வொர்க்கின் உதவியும் இல்லாமல் டெக்ஸ்ட் மெசேஜை அனுப்ப வல்லது. இந்த ‘கோடென்னா’ கருவியை இரண்டு நபர்கள் வைத்திருந்தால், அவர்கள் இருவரும் செல்போன் சிக்னலைப் பயன் படுத்தாமல், தங்களுக்குள் செய்திகளைப் பரிமாறலாம். இதிலுள்ள ஃப்ளாஷ் மெமரி பல்லாயிரக்கணக்கான மெசேஜை சேமிக்க வல்லது. லித்தியம்-ஐயான் பேட்டரி, தண்ணீர் மற்றும் தூசிகள் உள்ளே புகமுடியாத தொழில் நுட்பம், நீண்ட தூரத்திலும் பயன்படுத்தும் வகையிலான அலைவரிசை இதன் சிறப்புகள்.
செ.கிஸோர் பிரசாத் கிரண்.
No comments:
Post a Comment