நமக்கு எண்ணி முடியாத ஆசைகள் இருக்கின்றன. ஆனாலும் என்றோ ஒரு நாள் நாம்
ஆசைப்படும் வஸ்துக்கள் நம்மை விட்டுப் பிரிவது அல்லது
நாம் அவற்றைவிட்டுப் பிரிவது சர்வ நிச்சயம். சாவின் மூலம் இந்தப் பிரிவு
ஏற்படாமல், அதற்கு முந்தி நாமாக ஆசைகளை ராஜினாமா செய்து விட்டு
விட்டால், அத்தனைக் கத்தனை ஆனந்தமாக இருக்கலாம். நமக்கு எத்தனை ஆசைகள்
இருக்கின்றனவோ அத்தனை முளைகளை துக்கத்துக்கு
அடித்துக் கொண்டு நம்மைக் கட்டிப் போட்டுக் கொள்கிறோம். ஆசைகளைக் குறைக்கக்
குறைக்க துக்கஹேதுவுங் குறையும். இந்தப் பிறவி முடியுமுன்
நாம் சகல ஆசைகளையும் விட்டுவிட்டால் மறுபடியும் பிறந்து அவஸ்தைப்படவே
வேண்டாம்; அப்படியே பரமாத்மாவில் கரைந்து ஆனந்தமாகி
விடலாம்.
No comments:
Post a Comment