1993-ல், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (Steven Spielberg)
இயக்கத்தில் வந்த ஹாலிவுட் படம், ஜூராசிக் பார்க். உயிரியல் பாடத்தில்
மட்டுமே கேள்விப்பட்ட டைனோசரை, திரையில் கண் முன் நிறுத்திய படம். பாப்பா
முதல் பாட்டி வரை பார்த்து பிரமித்த படம்.
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் படம் என்றாலே, அதில் குட்டிப்
பசங்க இருப்பாங்க. படத்தில் எத்தனை கேரக்டர்கள் இருந்தாலும் இவங்களுக்கு
முக்கியத்துவம் இருக்கும். ஜூராசிக் பார்க் படத்திலும் ஒரு குட்டிப்
பையனும் பொண்ணும் வருவாங்க. டைனோசர்களிடம் அவங்க மாட்டிக்கிறதும்
தப்பிக்கிறதும் திக்திக் நிமிடங்கள்.
ஜூராசிக் பார்க் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து
இரண்டாம், மூன்றாம் பாகங்களும் வந்து சக்கைப்போடு போட்டுச்சு. தவிர,
டைனோசரை மையமாகவெச்சு, நிறையப் பேர் நிறையப் படங்களை எடுத்தாங்க.
ஜூராசிக் பார்க் படத்தின் நான்காம் பாகம், நவீன
தொழில்நுட்பத்தோடு, ஜூராசிக் வேர்ல்டு (Jurassic World) என்கிற பெயரில்
2015 ஜூனில் வெளிவரப்போகுது. சமீபத்தில் வெளியான இதன் டிரெய்லர், சில
நாட்களிலேயே 4 கோடிக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டிருக்கு. டிரெய்லரே
செம மிரட்டல்.
இந்த ஜூராசிக் வேர்ல்டு கதைதான் என்ன?
ஒரு தீவில், 22 வருடங்களுக்கு முன் டைனோசர்களை
உருவாக்கி, ஜூராசிக் கண்காட்சியை ஆரம்பிச்சாங்க. டைனோசர்களால்
அழிக்கப்பட்ட அந்தக் கண்காட்சியை, இப்போ சரிசெய்றாங்க. ஜெனட்டிக்
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இன்னும் பெரிய பெரிய டைனோசர் மற்றும் ஆதிகால
முதலைகளை உருவாக்கி, பொதுமக்கள் பார்வைக்ககாகத் திறக்கிறாங்க. அதைப்
பார்க்க ஒரு குட்டிப் பையனுக்கு டிக்கெட் கிடைக்குது. அங்கே போனவன் ஒரு
பகுதியில் மாட்டிக்கிறான். அப்புறம் என்ன ஆகுது என்பதுதான் மீதிக் கதை.
இந்தக் கதையை, ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் 13 வருஷங்களாக ரெடி
பண்ணினாராம். ஆனால், இந்தப் படத்தில் இவரது பங்கு, நிர்வாகத்
தயாரிப்பு மட்டுமே. படத்தை இயக்கியவர், கோலின் ட்ரிவோரோ (Colin Trevorrow).குட்டிப்
பையன் கேரக்டரில் நடிப்பது, டை சிம்ப்கின்ஸ் (Ty Simpkins). இதற்கு முன்பு
வந்த பாகங்களில் குட்டிப் பசங்களைச் சுற்றி கதை நகர்ந்த மாதிரி, இந்தப்
படத்திலும் டை சிம்ப்கின்ஸ் கேரக்டரைச் சுற்றிதான் கதை இருக்கும். ஸோ,
இந்தப் படமும் சுட்டிகளை அசரவைக்கும்.
இந்தப் படத்தின் டிரெய்லரைப் பார்க்க https://www.youtube.com/watch?v=RFinNxS5KN4 என்ற தளத்துக்கு வாங்க. மிரட்டக் காத்திருக்கு ஜூராசிக் வேர்ல்டு!
ஷாலினி
No comments:
Post a Comment