வடிவமைப்பு:
மைக்ரோசாஃப்ட் லூமியா 535 ஸ்மார்ட் போன்
முந்தைய நோக்கியா லூமியாவின் எளிமையான மற்றும் கலர்ஃபுல்லான டிசைனையே
பின்பற்றியுள்ளது. பச்சை, ஆரஞ்சு, கறுப்பு, வெள்ளை மற்றும் ஸியான் ஆகிய
ஐந்து வண்ணங்களில் வருகிறது. இதன் பின்புறப் பகுதியை எளிதில்
மாற்றிக்கொள்ளலாம். எனவே, வாடிக்கையாளர்கள் தங்களின் விருப்பத்திற்கேற்ப
பின்புறத்தின் நிறத்தை மாற்றிக்கொள்ளலாம். இந்த ஐந்து நிறங்களில் ஆரஞ்சு
மற்றும் பச்சை நிறம் ‘கிளாஸி’ தன்மை உடையது. கறுப்பு, வெள்ளை மற்றும்
ஸியான் நிறங்கள் ‘மேட்’ தன்மை உடையது.
டிஸ்ப்ளே:
மைக்ரோசாஃப்ட் லூமியா 535 அகலமான 5 இன்ச் 540*960 IPS LCD டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. 220 ppi கொண்டுள்ள இந்த ‘Capacitive’ டிஸ்ப்ளே 16M கலர் திறனை கொண்டுள்ளது. மேலும், மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முழு வெளிச்சத்திலும் இந்த டிஸ்ப்ளே துள்ளியமாகச் செயல்படும் என்று உறுதியளித்துள்ளது. மேலும், இந்த டிஸ்ப்ளே ‘Corning Gorilla Glass 3’ என்ற பாதுகாப்பு டிஸ்ப்ளே கிளாசையும் கொண்டுள்ளது.

ஓ.எஸ்:
மைக்ரோசாஃப்ட் லூமியா 535 ஸ்மார்ட் போன், விண்டோஸ் 8.1 ஓ.எஸ்சை கொண்டு இயங்குகிறது. பார்ப்பதற்குக் கவர்ச்சியாகவும் பயன்படுத்துவதற்கு எளிமையாகவும் இருக்கும் இந்த விண்டோஸ் 8.1 ஓ.எஸ் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல அனுபவத்தைத் தரும் என்று எதிர்பார்க்கலாம்.

பிராசஸர்:
மைக்ரோசாஃப்ட் லூமியா 535 சக்திவாய்ந்த Qualcomm Snapdragon 200 பிராசஸரை கொண்டு இயங்குகிறது. இந்த Qualcomm Snapdragon 200 பிராசஸர், ‘Quad-core’ பிராசஸராகும். 1.2 GHzஇல் இயங்கக்கூடும் இந்த பிராசஸரோடு பிரத்யேகமான ‘Adreno 302’ என்ற கிராபிக்ஸ் பிராசஸரும் அடங்கும். 1GB ரேமோடு வரும் இந்த ஸ்மார்ட் போன், 8GB இன்டெர்னல் மெமரியை கொண்டுள்ளது. மேலும் இதனை 128GB வரை SD கார்ட் மூலம் விரிவுபடுத்தலாம். தவிர மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 15GB ‘One Drive’ cloud storageயை வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக இந்த ஸ்மார்ட் போனுடன் அளிக்கிறது.

கேமரா:
மைக்ரோசாஃப்ட் லூமியா 535 ஸ்மார்ட் போன் 5MP முன்புறம் மற்றும் பின்புற கேமராவை கொண்டுள்ளது. இந்த 5MP முன்புற கேமரா ‘செல்ஃபி’ பிரியர்களுக்கு ஏற்றதாக அமையும். மேலும் இந்த முன்புற கேமரா ‘wide angle’ லென்ஸை உடையதால் குரூப் ‘செல்ஃபிஸ்’களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பின்புற கேமராவுடன் ஒரு LED பிளாஷ் லைட்டும் அமைந்துள்ளது. கேமராவின் செயல்பாடும் வேகத்ைத முந்தைய லூமியா ஸ்மார்ட் போன்களைவிட மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உயர்த்தியுள்ளது.
பேட்டரி:
1905mAh Li-ion பேட்டரியை கொண்டுள்ள மைக்ரோசாஃப்ட் லூமியா 535, கிட்டதட்ட 336 மணி நேரம் ‘standby time’யை உடையது. மேலும் இந்த ஸ்மார்ட் போன் 11மணி நேரம் 2G நெட்வொர்க்கிலும் 13 மணி நேரம் 3G நெட்வொர்க்கிலும் உழைக்கும் என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உறுதியளித்துள்ளது. இசை பிரியர்கள் இந்த ஸ்மார்ட் போனில் 78 மணி நேரம் வரை தொடர்ந்து இசையைக் கேட்டு மகிழலாம் என்பது கூடுதல் சிறப்பம்சம்.

செ.கிஸோர் பிரசாத் கிரண்
No comments:
Post a Comment