இப்போது முடியரசு ஸாத்யமில்லை. ஈஸ்ட் இன்டியா கம்பெனி கொஞ்சம் கொஞ்சமாகப் பிடித்து அப்புறம் ப்ரிட் டிஷ் ராஜாங்கத்துக்கு தேசம் கை
மாறின காலங்களில் இந்தத் தேசம் முழுவதற்கும் ஒரு ராஜா இருக்கவில்லை. பிற்பாடு ஸ்வதேச ஸம்ஸ் தானங்கள் என்று பெயர் பெற்ற ஏராளமான
ராஜ்யங்களே அப்போது இருந் தன. நமக்கு ஸ்வதந்த்ரம் வந்தபோது இவற்றில் ஏதோ கொஞ்சம் ஸ்வயா திக்யம் பெற்றிருந்தவற்றைத்தான் ஸ்வதேச
ஸம்ஸ்தானம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம். என்பார்கள்.
Native state இப்படி ஐந்நூற்றுக்கு மேல் இருக்கின்றனவென்றால்,
இம்மாதிரி கொஞ்சம் ராஜ்யாதிகாரம் கூடக்கொடுக்காமல் ப்ரிட்டிஷ்காரர்கள்
முழுங்கியேவிட்ட சின்னச் சின்ன ராஜ்யங்கள் எத்தனையோ இருந்திருக்கும்.
ஏகப்பட்ட ராஜாக்களின் ஆளுகையில் இருந்த தேசம் அப்புறம்
வெள்ளைக்கார, ‘கிங் எம்பர’ரிடம் போயிற்று. அதிகாரமில்லாமல் figure-head
என்று ராஜாவாக இருப்பவர் அவர். அந்த ஹிஸ்டரி இப்போது
வேண்டாம். சொல்ல வந்தது, இப்போது அந்த ஒரே ராஜாவிடமிருந்து தேசம் நமக்குத்
திரும்பி வருகிற போது இது முழுதையும் ஒப்பிப்பதற்கு
பாரம்பர்ய ரைட் உள்ளவராக ஒரு ராஜகுடும்ப வாரிசும் இல்லை. ஆனபடியால், மற்ற
காரணங்கள் ஒரு பக்கம் இருக்க, இப்போது தேசம் பூராவையும்
ஏதோ ஒரு ராஜ வம்சம் வாங்கிக் கொள்வதற்கில்லாமல் ஜனங்கள் தான் வாங்கிக்கொள்ள
வேண்டும்.
குடியரசுதான் இங்கே வரமுடியும். வெள்ளைக்காரர்களோடு ராஜா யாரும் சண்டை போட்டு தேசத்தைத் திரும்பவும் ஜயிக்கவில்லை. ஜனங்களே
தான் கூடிய மட்டும் அஹிம்ஸை மார்க்கம் என்று சொல்லக்கூடிய முறையில் ஓரளவு ஸாத்விக யுத்தம் செய்து ராஜ்யத்தைத் திரும்பப்
பெற்றிருக்கிறார்கள். அதனால் ஜனங்களே இதை ஆண்டுக்கொள்ள உரிமை பெற்றவர்களாக இருக்கிறார்கள். இதைத்தான் குடியரசு என்பது.
No comments:
Post a Comment